19 Nov 2011

நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!



ஒவ்வொரு 9 நொடிப் பொழுதிற்கும் ஒரு பெண் துண்புறுத்தப்படுகின்றாள்.   உலக பெண் தரவும் சொல்லும் செய்தி   தினம் 3 ல் ஒரு பெண் கணவனால் அல்லது தன் காதலனால் கொல்லப்படுகின்றனர்.  ஐரோப்பியா நாடுகளிலும்   4 ல் ஒரு பெண் பாதிக்கப்படுகின்றார். ஆப்பிரிக்கா நாடுகளில் தான் பெண்கள் மிகவும் மோசமான நிலையில் நடத்தப்படுகின்றனர்.  பாகிஸ்தானில் 90% என்பது இந்தியாவில் 70%  பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிகின்றது.  பிலிப்பைன் மற்றும் பராக்குவே நாட்டில் மட்டுமே 10 % குறைவான பெண்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிந்துள்ளது. 

ஒவ்வொரு 6 மணி நேரத்தில் ஒரு இளம் பெண் எரித்து அல்லது அடித்து அல்லது தற்கொலை செய்து கொல்லப்படும் அளவிற்கு பெண்கள் மேல் கொள்ளும் வன்முறை இந்தியாவில் பெருகி பலுகி உள்ளது.  இந்த சூழலில் தான் இந்தியாவில் ‘குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம்’   இந்திய அரசால் இயற்றப்பட்டது.   சட்டத்தால் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அரசில் நோக்கம்!  ஆனால் உண்மை நிலவரம் என்ன என்றால் பல குடும்பங்கள் அழிந்துள்ளது என்று மட்டுமல்ல பெண்கள் வாழ்க்கையும் ஆண்கள் குடும்பவும் அழிக்கப்பட்டுள்ளது என்பதே ஆகும்.

 மை நேஷன்(My Nation) போன்ற அமைப்புகள் இப்போது  ஆண்கள் சார்பாக போர் கொடி பிடித்துள்ளது.  பெண்கள் வடிக்கும் கண்ணீரை கண்டு சட்டம் இயற்றிய இந்திய அரசு, ஆண்களின் வாழும் உரிமையை கண்டு கொள்ளவில்லை என்பதாகும் அவர்களின் குற்றச்சாட்டு! ஆண்களின் கூற்றுப்படி  பொருளாதாரம் 32%,  உளவியல்(22%),  பாலியல்(19.8) என  பல  வழிகளில் பெண்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர், துன்புறுத்துகின்றனர் என்பதாகும்.  திருமணமான ஆண்களின் நிலை இன்னும் கொடியதாகவே உள்ளது.   ஒவ்வொரு 8 நொடிகளிலும் ஒரு ஆண் மரணத்தின் பிடியில் சிக்க வைக்கப்படுகின்றார்.  திருமணமான பெண்களை (28%) விட ஆண்களே(52%)  தற்கொலைக்கு இலக்காகுன்றனர் என்பதும் நடுங்க வைக்கும்  உண்மை ஆகும்!  இச் சட்டத்தின் பாதகங்களை கணக்கிலெடுத்து மறு பரிசீலனை செய்ய ஆண்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.  மேலும் இந்த சட்டம் இயற்றும் முன் அரசு தேவையான ஆய்வு மேற் கொள்ளாததும் பெரும் குறையாகவே உள்ளது.  ஓட்டுக்கு என குடும்பம் என்ற கோயில்களை உடைத்து சமூகத்தை ஒரு சாக்கடையாக மாற்ற மட்டுமே இது போன்ற சட்டங்கள் உதவும் என்ற கருத்தும் மேல் ஓங்கி நிற்கின்றது.

இந்திய சமூக பார்வையில் ஆண்கள் தங்கள் துயரை வெளியில் சொல்வதோ, அழுவதோ ஆண்மைக்கு இழுக்காக கருதுவதால், தங்கள் மனக்குறைகளை பகிரவும், சிக்கல்களை தீர்க்கவும் வழியில்லாது தவிக்குகின்றனர்.   கடந்த 2001-2005 காலையளவில் 1 மிலியனுக்கு அதிகமான ஆண்கள் வேலை இழந்ததும்  பல பிரச்னைகளுக்கு வழி வகுக்குத்துள்ளது.  பெண்களால்; ஆண்கள் மிகவும் கீழ்த் தரமாக திட்டு வாங்குவதும், நேரத்திற்கு உணவூ கிடைக்காதும், படுக்கை அறையில் புரக்கணிக்கப்பட்டும், தங்கள் குழந்தைகளை கணவர்களுக்கு எதிராக திருப்பி விடுவது மட்டுமல்லாது கணவனின் பெற்றோர்களையும் அனாதை விடுதி அல்லது நடுத் தெருவில் கொண்டு விடுவது வழியாக துன்புறுத்துகின்றனர் என்று சமூக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.  கேவலமான வார்த்தையால் கணவர்களை திட்டுவதில் முன் நிற்பது இந்திய பெண்கள் தானாம்!

இந்தியாவில், இந்த சட்டத்தின் கீழ் பதியப்பட்ட முதல் கேஸ் நெல்லையை சேர்ந்த ஜோசப்- மேரி என்ற தம்பதிகளுடையது என்பதே இன்னும் கூடுதலான தகவல்.  மேரி என்ற ஒரு அரசு பள்ளி ஆசிரியை அரசு அலுவலகத்தில் பியூனாக வேலை செய்து வரும் கணவர் ஜோசப், தன்னை கம்பு-குடையால் அடித்தார் என்று கேஸ் பதியப் பட்டது.  வேலை இழந்து, கோர்ட்டு- கேஸ் தொல்லையால் உழன்று ஒரு நிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்டதுடன் கேஸ் முடிந்துள்ளது!!  சமூக நிலையில் ‘குடும்பம்’ என்ற அமைப்புக்கு பெரிய இடம் கொடுக்கும் தமிழ் சமூகம், மேலும் அன்பை பற்றி உலகுக்கு சொல்லிய யேசுநாதரின் பெற்றோர் பெயர் கொண்ட கிருஸ்தவ தம்பதிகள் என்பதும் இன்னும் வருந்த தக்க செய்தி ஆகும்.

குடும்பத்தில் சண்டை வருவது தவிற்க இயலாத விடயம் ஆகி விட்டது.  இரு வேறுபட்ட சமூக சூழலில் இருந்து வந்த இரு நபர்கள், சங்கமித்து ஒரு குடும்பமாக மாறும் போது பல முரண்கள் எழுவது சகஜமே.  ஆனால் அதை கையாள தெரிந்துருப்பது என்பதே அறிவுள்ள மனிதனின்  சிறப்பு.   

சமரசம், தீர்வு காணல் என்பதில் ஆண் பெண் சம அளவு  பங்கு உண்டு என்றிருந்தால் கூட பெண்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது.  உறவுகள் என்பது மனங்கள் சம்பந்தமானது இதில் சட்டம் கொண்டு இயக்கப்படும் மனம் வளமான வாழ்வுக்கு உதவாது.  வழக்காளர்களுக்கு வழக்குகளை கொடுக்கலாம் அவர்களுக்கு வாழ்வு கொடுக்கலாம் ஆனால் தம்பதிகளுக்கு மனக் கசப்பு அதிகரிக்குமே தவிற சுமூகமான வாழ்க்கைக்கு உதவுவது இல்லை. தன் குடும்பத்தை போலிஸிடம் காட்டி கொடுத்த பெண்ணை /ஆணை பின்பு அந்த குடும்பம் மனதால் ஏற்று கொள்வது அரிதான விடயமே.  ஆனால் இதை புரியாது பல பெண்கள் சிறு சண்டைக்கு கூட போலிஸ் உதவி நாடுவது தங்கள் குடும்ப மாண்பை கெடுக்க மட்டுமே உதவும்.

சமூக கட்டமைப்பில் ஆக்கபூர்வமான செயல் ஆக்கத்திற்க்கு பெரிதும் பங்காற்ற வேண்டிய ஊடகம் கூட தன் வருமானம்- விளம்பரம் நோக்கு கொண்டு பல நிகழ்ச்சிகளில் கணவர்-மனைவி உறவை கொச்சைப்படுத்தும்படியான நிகழ்ச்சி நடத்துகின்றனர். நாலு சுவருக்குள், தங்கள் குடும்பத்திற்க்குள் சமரசம் செய்து கொள்ள வேண்டிய பிரச்சனையை கோபி நாத் போன்றவர்களிடம் பகிர்ந்து குரங்கிடம் கிடைத்த பூமாலையாக கணவர் மனைவி உறவை திரித்து காட்டுகின்றனர். அதே போல் பல சீரியல்கள்; கற்று கொடுப்பதே எப்படி அழுவது, கொடூரமாக முகத்தை வைத்து கொண்டு திட்டுவது, கண்ணை உருட்டி பயமுறுத்துவது, வஞ்சமாக திட்டமிடுவது போன்றவை ஆகும். சினிமா, பத்திரிக்கை போன்றவற்றிலும் வரும் காமடிகள்  பலதும் கணவன் மனைவி உறவு அலங்கோலமாக சித்தரிகரிப்பதாகவே உள்ளது. இதனால் குடும்பம் உன்னதமான கணவர்-மனைவி உறவு சார்ந்து மனதில் ஒரு கேலியான கீழ்த்தரமான எண்ண அலைகள் பதியப்படுகின்றது.  இதில் சினிமா, சீரியலில் காண்பது போன்று கற்பனைக்கு இடம் இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும்.  திருமணம் என்பது  உடல் சார்ந்த உறவு என்பதை விட மனம் சார்ந்த உறவு என்று புரிதல் வரும் போது அலுப்பு மாறி வாழ்க்கையுடன் ஒன்றிப்பு வந்து விடுகின்றது.

மேலும் பிரச்சனை கையாள ஆண்களை விட பெண்களிடமே ஆற்றல், வலிமை உள்ளது.  இதில் படிப்பு,  திறமை என்பதை விட பெண்ணின் நேக்கு போக்கான பண்பே கை கொடுக்கும். இன்றைய படித்த பெண்கள் மூளையை விட நாவுக்கே அதிகம் வேலை கொடுக்கின்றனர்.  கணவன் வீட்டில் புகுந்த பெண்கள் தங்கள் உரிமையை பற்றி பேசும் அளவுக்கு கடமையை பற்றி எண்ணுவதில்லை.  

முதல் ஒரு வருடம் தான் சார்ந்திருக்க வேண்டிய குடும்பத்தை ஆழமாக அவதானிப்பதை விடுத்து முதல் ஒரு வருடத்திற்க்குள் அந்த வீட்டிலுள்ள அனைவரிடவும் சண்டை பிடித்து ஒதுங்கி விடுகின்றார்கள்.  ஒரு சமூகத்தின் மூக்கனாம் கயிறு பெண்ணிடமே உள்ளது. அச் சமூகத்தை ஆக்கத்திற்க்கும் அழிவுக்கும் கொண்டு செல்வது தன்னால் மட்டுமே என்று புரிந்து கொள்ளும் போது அச்சமூகம் சிக்கலில் இருந்து விடுபடுகின்றது.

தந்தையாகவும், கணவராகவும், மகனாகவும் பல அவதாரங்களில் நம் உயிரோடு கலந்திருக்கும் ஆண்களில் பாதுகாப்பு  நம் கையில் தான் உள்ளது என்பதை உணர்ந்து ஆண்கள் மாண்பை காப்போம் நம் அழகிய உலகை மீட்போம்!!!


இன்று நவம்-19 ஆண்கள் தினம்.  அனைத்து  ஆண் உறவுகள், தோழர்கள், ஆண் நண்பர்கள், ஆண் ஆசிரியர்கள் அனைவருக்கும்  என் இதயம் கனிந்த ஆண்கள் தின வாழ்த்துக்கள்!

17 comments:

  1. அடடே, ஆண்களூக்கு குரல் கொடுக்க ஒரு பெண்!!!!!

    ReplyDelete
  2. Srikandarajah கங்கைமகன் · Jaffna uni, colobmo uni, annaamalai uni

    வணக்கம்; பாபா. நீங்கள் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. அமரிக்காவில் பெண்கள் கொடுக்கும் பல சிக்கல்களால் சொந்த கணவன்மார் 60 வீதமானவர்கள் தனிக்கட்டிலிலும் தனி அறையிலும் படுப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. அதனால் வேறுவிதமான வன்முறை அதிகரிக்கிறது என்றும் அது மேலும் கூறுகிறது. அமரிக்காவில் பதிவாகும் கற்பழிப்பு வழக்குகளில் 16 வீதமானவை கணவன் மனைவியைப் பாலியல் பலாத்தாகரம் செய்ததாகப் பதியப்பட்டுள்ளது. அமரிக்காவில் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் ஆண்களை அடக்கி வைத்திருக்கிறது. கணவன் மனைவியை அடித்துவிட்டால் அவள் புகார் செய்யுமிடத்து கணவனுக்கு 3 மாத கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. திருமதி கில்லரி கிளிங்டன் திரு கிளிங்டனை உறவில் புறக்கணித்ததால் தான் கிளிங்டன் மொனிக்காவுடன் உறவு வைத்திருந்ததாக நீதிமன்றில் பதிவாகி உள்ளது. இப்படி வெளியில் பதிவிற்குவராத எத்தனையோ விடையங்களில் ஆண்கள் கடினப்படுகின்றார்கள். பிள்ளைகளைக் கணவனுக்கு எதிராகத் திருப்பிவிடுகின்றார்கள் என்பது முற்றிலும் சரியானது. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் சுவிசில் வாழ்கிறார்கள். கணவன் இறந்துவிட்டார். தன் பிள்ளைகளைச் சிரியுங்கள் தொல்லை தீர்ந்தது என்று மனைவி சொல்கிக் கொடுத்தாராம். கணவன் இறந்ததற்கு பிள்ளைகளைக்கூட அனுப்பவில்லை. இப்படிப் பல கொடுமைகளை நான் ஒரு மொழிபெயர்ப்பாளராக இருந்து பார்த்திருக்கிறேன். கணவன் மாருக்கு அடித்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். கத்தியால் குத்திய பெண்களைப் பார்த்திருக்கிறேன். இரவில் வேலைவிட்டு கணவன் எதிர்பாராத விதமாக ஒரு அரைமணிததியாலம் தாமதமாக வந்தால்கதவு திறக்காமல் இருக்கும் குடும்பத்தலைவிகளை நான் அறிந்திருக்கிறேன். வாழ்து;துக்கள

    ReplyDelete
  3. Subi Narendran · Good Shepherd Convent Kotehena
    புள்ளி விபரங்களோடு தரவுகளைத் தந்திருக்கிறீர்கள்.ஆண்களுக்கு இவ்வளவு பாதிப்பு இருக்கென்று உங்கள் கட்டுரையில் இருந்து அறிகிறேன். பெண்களுக்காக குரல் கொடுப்பதோடு ஆண்களுக்கும் சேர்த்து தருகிறீர்கள். மிகவும் நல்லது.''ஆண்கள் மாண்பை காப்போம் நம் அழகிய உலகை மீட்போம்!''.நன்றி Jos my little sis. உங்கள் குரல் எப்பொழுதும் ஒலிக்கட்டும்.

    ReplyDelete
  4. விஷ்வா செல்வா · X
    அநீதி செய்பவனை காட்டிலும் மவுனமாக அதற்கு துணை போவது கொடுமையான செயல்..அதனால் அநீதிகளுக்கு எதிராக போராடுவோம்...

    ReplyDelete
  5. ஒரு vitthiyaasamaana payanulla பதிவு

    ReplyDelete
  6. Venkadesan Neelakrishnan · Subscribed · Works at TUV-SUD SOUTH ASIA
    //சமரசம், தீர்வு காணல் என்பதில் ஆண் பெண் சம அளவு பங்கு உண்டு என்றிருந்தால் கூட பெண்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. உறவுகள் என்பது மனங்கள் சம்பந்தமானது இதில் சட்டம் கொண்டு இயக்கப்படும் மனம் வளமான வாழ்வுக்கு உதவாது//.

    நிச்சயமாக... இருவருக்குமிடையில் ஒரு நல்ல புரிதல் ஏற்படுத்திக் கொள்ளவே முனைய வேண்டும். சிறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் நீதிமன்றங்களை நாடுவது குறைய வேண்டும்...

    நன்றி...

    ReplyDelete
  7. John Durai

    ஆண்கள் மாண்பை காப்போம் நம் அழகிய உலகை மீட்போம்!!!// அருமை ஜோஸ்..

    ReplyDelete
  8. Venkat Trantorian

    நீங்களாவது நினைத்துப் பார்க்கிறீர்களே. மிக்க நன்றி தோழி !

    ReplyDelete
  9. Ravi Lenin Stanley
    எந்த தினமானாலும் சரி கொண்டாட்டம் என்று வந்து விட்டால் திறக்கப்படுவது எங்கள் பர்ஸ் தான், ம்ம்......

    ReplyDelete
  10. ///பெண்களால்; ஆண்கள் மிகவும் கீழ்த் தரமாக திட்டு வாங்குவதும், நேரத்திற்க்கு உணவு கிடைக்காதும் படுக்கை அறையில் புறக்கணிக்கப்பட்டும், தங்கள் குழந்தைகளை கணவர்களுக்கு எதிராக திருப்பி விடுவது மட்டுமல்லாது கணவனின் பெற்றோர்களையும் அனாதை ஆசிரமம் அல்லது நடுத் தெருவில் கொண்டு விடுவது வழியாக துன்புறுத்துகின்றனர் என்று சமூக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. கேவலமான வார்த்தையால் கணவர்களை திட்டுவதில் முன் நிற்ப்பது இந்திய பெண்கள் தானாம்! ///
    இலங்கைத் தமிழ்ப் பெண்களையும் இணைக்கலாம்.. மற்றது ஆண்களிற்கு வேட்டையாடும் இயல்பும் , பெண்களிற்கு சிந்திக்கின்ற , பேசுகின்ற திறன் கூடுதலாக உள்ளதாக பெரியார் இயக்கத்தில் பேசும் டாக்டர் ஷர்மிளா குறிப்பிடுகிறார். அது உண்மை தான் .. ஆண்கள் தவறு விடுகிறார்கள் தான் அதை மறுப்பதற்கில்லை, ஆனால் பெண்களும் ஆண்களைத் தவறுவிட வைக்கிறார்கள் தூண்டுகிறார்கள்..வன்முறையானாக்குகிறார்கள் …கங்கைமகன் பல உதாரணங்கள் தந்துள்ளார் .. ஒரு பெண்விடுதலையை விரும்பிய-பெண்விடுதலைக்காக நாடகம் எழுதிய ஒரு ஆண் கூட தனது மனைவியின் கொடுமை தாங்காது மனிவிக்கெதிராக வன்முறை பாவித்து எனக்குத் தெரிந்த கதை , அது போல் பல கதைகள் உள்ளன…
    பெண்கள் விரும்பினால் அந்தக் குடுமபத்தை உண்மையான சொர்க்கமாக்கலாம் ..அல்லது அது தான் உண்மையான் நரகம் ..
    உங்களது ஆக்கங்கள் எல்லாம் சிறப்பே..மேலும் மேலும் சிறந்து கொண்டே செல்கிறது…இவை பத்திரிகைகளில் வரும் பொழுது மேலும் பலர் வாசிப்பர்கள் …தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை ..பாராட்டுக்கள் ..
    இந்த ஆக்கத்திற்கு ஆண்களின் பாராட்ட்டுக்கள் மேலும் கிடைக்கும் ..பெண்கள் நிச்சயமாக் வாசிக்கப் பட வேண்டியதே.ஒரு வரியில் அற்புத்ம் அபாரம் உண்மை....

    ReplyDelete
  11. வணக்கம் பாபா, ஆண்களுக்கும் பிரச்சனைகளும் சிக்கல்களும் உள்ளன என்பதை ஒரு பெண்ணான நீங்களே ஆணித்தரமாக குறிப்பிட்டு பதிவிட்டதற்கு முதலில் நன்றிகள். உண்மையிலேயே எத்தனையோ ஆண்கள் எங்கே தங்களது ஆண் எனும் கம்பீரமான பிம்பம் உடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தமது குறைகளையும் தமக்குள்ள சிக்கல்களையும் வெளியே சொல்லமுடியாமல் மனதுக்குள் அடக்கி வைத்திருந்து மிகப்பெரும் மன அழுத்தம் போன்ற உளவியல்ரீதியான நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

    ReplyDelete
  12. வணக்கம்! கங்கைமகனும், பத்மநாதனும் கூறிய கருத்துக்களுடன் நானும் உடன்படுகிறேன்.

    எந்த வடுவும் ஆறிப்போகலாம் நாவினால் சுட்ட வடுவைத் தவிர்த்து.
    இது இருபாலாருக்கம் பொருந்தும்.

    நன்றி.

    ReplyDelete
  13. Ponnambalam Kalidoss Ashok · Sourashtra college,madurai. Dr.Ambdekar's govt law college,chennai
    worthy article with valid points & statistics..time to think seriously..one of the best write-up , I have read recently..our society really needs this sort of article towards society on equal gender with harmony..keep it up..

    ReplyDelete
  14. மேற்கத்திய சூழல் நீங்கள் சொல்வதாக இருக்கக் கூடும். ஆனால் இந்திய சமூகம் இன்னும் ஆண்களின் பிடியில்தான் உள்ளது. ஒரு பக்கம் பெண்களைத் தேவி தரிசனமாக்கி பூசிப்பது போன்று நடித்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பு மிகக் குறைவே. இன்றைய உலகமயமாக்கல் இந்தியத் தம்பதியை சிறு சிறு சச்சரவுக்கும் பலிகடா ஆக்குகிறது. சரியான வேலையின்மை, விலைவாசி உயர்வு,-பேருந்து, பால், கேஸ் , மின்கட்டணம் என்று மேலும் மேலும் உயரும் விலைவாசி இல்லற இன்பத்தைச் சிதைக்கிறது. பெண்களும் பணிக்குச் செல்லும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.-பணியில் இருப்பது பெண்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும் என்பது உண்மைதான். பெண்ணடிமைத்தனம் பண்ணுவது பல நடுத்தர வர்க்க ஆண்களுக்கு பெரிய விஷயமாகவே தெரிவதில்லை.. சமமாகி விட்டபின் உரிமைக்குப் போராடுவார்கள் என்ற பயம் வந்துள்ளது. திருமணம் என்ற நிறுவனத்துக்குக் கூட அதிர்வலைகள் ஏற்படும் அளவுக்கு ஆட்டம் கண்டுள்ளது. இல்லறம் என்றுமே இன்பமாக இருந்ததில்லை என்ற நிலைதான் பலருக்கும்.சமூக, உளவியல் ரீதியான பிரச்சினைகள் நிலைத்திருக்கும்போது இல்லற இன்பம் கூட எந்திரத் தனமாகி விடும். போதாதற்கு தொலைக் காட்சித் தொடர்களும், ஊடகங்களும் பரப்பி வரும் கள்ளக் காதல் நிகழ்வுகள் அதிக அளவு ஆக்கிரமிப்புச் செய்வதே அதிகம். பெண்கள் வாசிப்புப் பழக்கம் இல்லாத அளவுக்கு அவர்களை சமையல் கட்டுக்குள்ளும், ஆன்மீகத்துக்குள்ளும் தள்ளி விட்ட ஆண்களுக்கு என்ன தினம் வேண்டிக் கிடக்குது?...ஒரு நல்ல விஷயம். பெண்களை எதிர்த்து நாக்கூசும் அளவு தரம் தாழ்ந்த நகைச்சுவை ஜோக்குகள் பத்திரிகைகளில் வருவது குறைந்துள்ளது .ஆனால் இரவு பத்து மணிக்கு மேல் தொலைகாட்சி சேனல்களின் அதிர்ஷ்டக்கல், தேவி பூசிக்கப் பட்ட மோதிரம் டாலர் என்று பயங்கரப் பித்தலாட்டங்கள் அதிகரித்துள்ளது. சாமியார்களின் பித்தலாட்டங்கள் தொடர்கின்றன.படித்தவர்களே பைத்தியக்காரர்களாக இருக்கின்றனர். சங்கராச்சரியாரும் புட்டபர்த்தியும் டாப் டன்னிலிருந்து இறக்கப் பட்டுள்ளனர் என்பது நல்ல செய்தி.

    ReplyDelete
  15. நீங்களாவது நினைத்துப் பார்க்கிறீர்களே. மிக்க நன்றி தோழி !நன்றி...

    ReplyDelete
  16. தன் குடும்பத்துக்காக தனது ஆசா பாசங்கள் விருப்பு வெறுப்புக்களைத் துறந்து ஓடாய் உழைக்கும் அத்தனை அப்பாவி ஆண் இன்னமும் ஒரு தந்தையாய், சகோதரனாய், கணவனாய், நண்பனாய், மகனாய் இருக்கத் தான் செய்கின்றார்கள். சொல்லப்போனால் பல பெண்கள் வெற்றிகளை ஈட்டி வருவதில் இத்தகையோரின் பங்கு நிரம்பியுள்ளது. இன்றும் பாலியல் வன்முறைக்கு எதிராகவும், பெண் விடுதலை, சமத்துவத்துக்கு ஆதரவாயும் பல ஆண்கள் போராடுகின்றனர்.

    ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே நிலவும் சமூக இடைவெளி குறையவேண்டும் என்கிறார் பெரியார். சட்டத்தின், சமூகத்தின் பார்வையில் ஆண், பெண் சமத்துவமாக நடத்தப்பட தன்னியல்பில் வளர்ச்சி பெறவும், சமூகத்தில் பங்காற்றவும் வழி செய்ய வேண்டும்.

    ReplyDelete