.
அங்கு மம்முட்டி ,மோகன்லால் ,சீமா, சோபனா நடித்த 1985 ல் வெளிவந்த "அனுபந்தம்" என்ற படம் போய் கொண்டிருந்தது. நான் பார்த்ததில் இருந்து, மம்மூட்டியும் சீமாவும் காதலித்திருப்பார்கள் ஆனால் விதிவசமாக சீமா மற்றொருவருக்கு மனைவி ஆகிவிடுவாள். ஆனால் தற்போது தனது 7 வயது மகனுடன் மம்மூட்டி ஆசிரியராக வேலை பார்க்கும் ஊருக்கு விதவையாக தஞ்சம் புகுந்திருப்பார். காதலியை 7 வயதுடைய மகனுடன் விதவையாக கண்டவுடன் நொந்து போன மம்மூட்டி ஒரு பள்ளி துவங்க உதவுவார். மேலும் அவளை தன்னுடைய மனைவியாக திருமணம் செய்ய தயாராக இருப்பதாக கூறுவார். நம்பிக்கயற்றிருந்த சீமாவுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் வர துவங்குகின்றது. அவளும் மறுமணம் செய்யலாம் என இருக்கும் போது தன்னுடைய 7 வயதில் மகனின் அனுமதியை பெற விரும்புகின்றார். மகனோ மாஸ்டராக ஏற்று கொண்டாலும் அம்மாவின் கணவராக ஏற்று கொள்ள முன் வரவில்லை. காதலனுக்கோ பெரும் ஏமாற்றமாக போய்விட்டது அச்சிறுவனை தன் பக்கம் கொண்டு வர இயலாது என எண்ணி மனம் உடைந்து சீமாவிடம் விடைபெறுகின்றார்.
மகனின் விருப்பம் இல்லாது இன்னொருவரின் மனைவியாக அம்மா என்ற இடத்தில் இருக்கும் சீமாவுக்கு மனம் வரவில்லை. மனசை கல்லாக்கி கொண்டு காதலருக்குமான உறவை துறக்க முடிவெடுக்கின்றார்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் மோகன்லால் ஒரு வங்கி மேலாளராக பணிபுரிகின்றார். அவருடைய மனைவிக்கும் அவருக்கும் ஒத்து போக இயலாமல் வாழ்க்கை ஓடுகின்றது. சீமாவின் 7 வயது மகனால் பள்ளியில் நடந்த ஒரு விபத்தில் அவர்களுடைய 4 வயது மகன் இறந்து விடுகின்றான். வாழ்க்கையில் நடந்த இழப்பால் மீண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் மேலும் அவர்கள் நல்ல மனமொத்த தம்பதிகளாக வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். ஆனால் சோபாவின் மகன் தான்தான் பக்கத்து வீட்டு பையனின் மரணத்திற்க்கு காரணம் ஆகி விட்டோம் என மன உளச்சலால் பாதிக்கப்படைகின்றான். மம்மூட்டி அவனுக்கு தைரியம் கொடுத்து பழைய நிலைக்கு மீட்டு கொண்டு வருகிறார். மம்மூட்டி விடைபெறும் நேரம் வரும் போது அக்குழந்தை என்னை விட்டு போக வேண்டாம் என கெஞ்சி அழுது , அப்பாவாக ஏற்று கொண்டு தனது அம்மாவிடம் கூட்டி வருகின்றான்.
படத்தின் சிறப்பை ஒரு ஒருவர் மற்றவர்களை மன்னிக்க முன் வருகின்றனர், ஒருவருடைய விருப்பத்தை மற்றவர்கள் மதிக்கின்றார்கள் சிறப்பாக 7 வயது குழந்தையின் உணர்வை அம்மா மதிக்கின்றாள், காதலியின் சூழலை வேதனையோடு என்றாலும் காதலனும் ஏற்று கொள்கின்றார். இவ்வாறாக அழகான மனித உறவுகளை அழகாக சொல்லியிருந்தார்கள். பெரியவர்களுடைய விருப்பம், வாழ்க்கை எல்லாம் குழந்தகளின் விருப்பம்,வாழ்வை பொறுத்து அமைகின்றது என சிறப்பாக காண முடிகின்றது.
அடுத்த நாள், கருப்பு வெள்ளை படமான "ஃபார்யமாரை சூஷிக்குக"-(மனைவிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்) என தமிழில் அர்த்தம் கொள்ளும் படம். பழைய மலையாளம் 'நித்திய நாயகர்':ever green hero என பேர் கொண்ட ப்ரேம் நசீருடன் கனவு கன்னி ஷீலா, உம்மர், பாசி,சங்கராடி போன்றோர் நடித்த படம். மனைவியுடன் உள்ள கசப்பான உறவுகளால் புதிய உறவை தேடிய ஒரு பாடகனின் முடிவை பற்றியுள்ள படமாக இருந்தது. தற்போதுள்ள சூப்பர் ஸ்டார்கள் ஸ்கீர்னிலும் சாதாரண மனிதனை பிரதிபலிக்க விரும்பாது எல்லா சமயங்களிலும் புனிதர்களாகவும் நல்லவர்களாகவுமே இருக்க விரும்புவதை போல் அல்லாது உண்மையான சில பலவீனமான மனிதர்களாக வாழ்ந்து தங்கள் நடிப்பு திறமையை நிருபித்துள்ளனர். கதை விரு விருப்பாக சென்றது. எவ்விடத்திலும் முடிவு எவ்விதமாக இருக்கும் என நாம் கண்டுகொள்ளா விதம் ஒரு வித பரபரப்புடன் சென்றது.
ஷீல ஒரு டாக்டரின் காதல் மனைவியாக பணக்கார குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்றார். அவருடைய கணவர் 6 மாத காலம் சிறப்பு படிப்புக்கு என வெளிநாடு செல்ல நேரிடுகின்றது. அப்போது பிரபல பாடகர் பிரேம் நசீரின் அறிமுகம் கிடைக்கின்றது. பாடகருடைய மனைவியோ உண்மையான அன்பிருந்தும் செயலில் அன்பை வெளிப்படுத்தாது கண்டிப்புள்ள மனைவியாக கணவரே சந்தேகித்து நச்சரித்து கொண்டே இருக்கின்றார். பாடகருக்கு டாக்டரின் மனைவியின் பாசவும் பரிவுவும் கண்டு அவரை தன் சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என வேட்கையால், காமம் கொண்டு நோக்க ஆரம்பிக்கின்றார். டாக்டரின் மனைவியும் பாசம் என்பதையும் தாண்டி பாடகருக்காக எதையும் துறக்க துணிகின்றாள். இருவரும் மணவிலக்கு பெற்று சட்டப்படி கணவன் மனைவியாக வேண்டும் என முடிவு எடுக்கின்றனர். ஆனால் திருமண விடுதலை பற்றி அறிந்த பாடகரின் மனைவி தற்கொலை செய்து கொள்கின்றார். பாடகர் மனைவியை கொலை செய்திருப்பாரோ என எண்ணி கலக்கம் கொண்டு பாடகருடன் செல்ல பயப்படுகின்றாள் டாக்டரின் மனைவி. வெளிநாடு திரும்பிய டாக்டர், மனைவி மற்றொருவனிடம் கள்ள காதல் கொண்டாள் என்று அறிந்தவுடன் அவனுடனே சென்று விடு என வீட்டை விட்டு துரத்தி விடுகின்றார். பாடகரின் வீட்டிற்க்கு செல்கின்றார் நாயகி! பாடகரோ நான் அழைத்த போது நீ வரவில்லை இனி உண்னை தேவையில்லை என கூறி நடு வழியில் விட்டு விட்டு ஒரு லாட்ஜில் தங்கி இருக்கின்றான். நடு வழியில் மாட்டி கொண்ட அவளை ஒரு கும்பல் கெடுத்து விடுகின்றது. மனம் நொறுங்கிய டாக்டரின் மனைவி பாடகனை குத்தி கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு செல்கின்றாள்.
இயக்குனர் மனிதனின் தவறிய புதிய உறவுகளுக்கான ஆசைகள், தற்போது இருக்கும் உன்னதமான உறவுகளை எவ்விதம் அழிக்கின்றது என்பதையும், மனிதர்களுடைய உறவுகள் வரம்பை தாண்டும் போது உறவில் நேசவும் பாசவும் போய் கசப்பும் வெறுப்பும் எவ்வளவு விரைவாக வருகின்றது என அழகாக சித்திரிகரித்துள்ளார். மேலும் பாடகரின் மனைவி கொஞ்சம் தன் கணவரை புரிந்து நடந்திருந்தால் பாடகரும் வழி தப்பியிருக்க மாடார். அதே போல் டாக்டர் கொஞ்சம் மனதை விசாலப்படுத்தி மனைவியை மன்னித்து ஏற்று கொண்டிருந்தால் அவள் ஜெயிலுக்கும் சென்றிருக்க மாட்டாள். படத்தில் தலைப்பு போலவே பெண்களை பல இடங்களில் புண்படுத்தும் உரையாடல் வைத்திருப்பது மறுக்க இயலாது. ஒரு இடத்தில் டாக்டர் தன் அப்பாவிடம் இப்படி கதைப்பார், பெண்களையும் கலைஞனுகளையும் நம்ப கூடாது , நீங்கதான் அவளுக்கு தேவையற்றவர்களை எல்லாம் அறிமுக படுத்தி வழி தவறி செல்ல காரணமாகி விட்டீர்கள் என . அப்பெண் பாடகரிடம் மட்டும் தான் ஏமாந்துள்ளாள்!
எது எப்படியோ ஷீலாவின் தனி திறமையான நடிப்பை காண முடிந்தது. இந்த மாதிரியுள்ள மோசமான கதாபத்திரங்களையும் தங்கள் நடிப்பால் வாழ்ந்து காட்டிய கதாநாயக நாயகிகளை பாராட்டாது இருக்க இயலாது. தன்னுடைய வாழ்க்கையில் வரும் துண்பங்கள், சோகங்களுக்கு தாங்களை காரணமாகின்றனர். ஆகயால் அவர்களிடன் பரிவு கொள்ள முடியாவிட்டாலும் மனத்திரையில் மறையாது இருக்கின்றனர்.
வால் செய்தி: ஷீல மலையாள திரையுலகில் கனவு கன்னியாக வலம் வந்தவர். மலையாளத்தில் செம்மீன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவர். 133 படங்களுக்கு மேல் பிரேம் நசீருடம் கதாநாயகியாக நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். ஒரு மகனுடன் மகிழ்ச்சியாக சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மகன் திரை உலகுக்கு வந்தாலும் பிராகசித்தது போல் தெரிய வில்லை. ஷீலா தற்போது மலையாளம் சின்ன திரை நிகழ்ச்சிகளில் தீர்ப்பாளராக வலம் வருவதை காண முடிகின்றது. இப்போழுதும் ஷீல ரொம்ப அழகாக உள்ளார்!!!
Arumai jesephine!Arumaijaaka Vaazhkaijil Ezhu sikkalkal Athan mudivukal anru pala.........
ReplyDeleteAzhakaakavum Surukkamaakavum Thanthiirkal Nanri Manathukku Santhosamaaka irukkirathu 3 padankal parka mudintha maathiri Nanri.
மலையாளப்படங்கள் நல்லவற்றைத் தேடிப்பிடித்துப் பார்ப்பேன், அந்த வகையில் நல்ல அறிமுகங்கள் கொடுத்திருக்கின்றீர்கள், மிக்க நன்றி
ReplyDeleteGREAT..!!!
ReplyDeleteமிகவும் நன்றாயிருக்கிறது. நமக்கு அப்படி இப்படித்தான் மலையாளம் புரியும். மலையாளப் படங்கள் பார்ப்பது குறைவு. ஆனால் மலையாளப்பாட்டுகள் புரியா விட்டாலும் கேட்க இனிக்கும்.
ReplyDeleteஅனுபந்தம் பற்றியயது நன்றாக உள்ளது.
ReplyDeleteகேரள பண்பாடு ,வாழ்க்கைமுறை பற்றி நிறைய
எழுதுங்கள் .
கருத்துக்களை ஆழப்படுத்துங்கள்.