18 Jan 2013

மாதவிடாய்!-ஆவணப்படம்



ஆவணப்படம் என்பது கற்பனை கலராது உண்மை நிகழ்வுகளை பதிவு செய்வதாகும்.  மாத விடாய் என்ற ஆவணப்படம் டிச: எட்டாம் நாள் 2012ல் வெளியாகியுள்ளது.  .  கீதா இளங்கோவன் இயக்கத்தில் உருவான இப்படம் அவருடைய  இரண்டு வருட உழைப்பின் பலன் என அறிகின்றோம்.  இந்த ஆவணப்படம் களஞ்சியம் பெண்கள் சுய உதவி இயக்கத்தின் தலைவியும், `ஸ்த்ரீ சக்தி' புரஸ்கார் விருது பெற்றவருமான திருமிகு சின்னப்பிள்ளை வெளியிட, எழுத்தாளர் திரு மாலன் முதல் குறுந்தட்டை பெற்றுக் கொண்டுள்ளார். இப்படம் ஊடாக  மாத விடாய் பற்றிய பல உண்மைகளை, சமூகசீர்கேடுகளை, அவலங்களை சாடியுள்ளனர்.

இப்படத்தில்  எழுத்தாளரும் கல்வியாளருமான  வா.கீதா, முனைவர் எஸ். சுபா, கிராம விரிவாக்க இயக்குனர் ரேவதி, பெண்ணிய செயற்பாட்டர் லூசி சேவியர், திலகவதி ஐபிஎஸ், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே. பால பாரதி, முனைவர் மார்கரட் சாந்தி போன்றோர் தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.


இதில் இடம் பெரும் நாட்டுப்புறப் பாடல் இந்த ஆவணப்படத்தில் கதைச்சுருக்கத்தை அழகாக அடிகோடிட்டு காட்டியுள்ளது.  தீட்டும், சடங்கும் வேண்டாம், கெட்ட பண்பாட்டு பழக்கங்களும் வேண்டாம் …. தாய்பால் போல் விலக்கு ரத்தத்தையும் கருத வேண்டும், கற்ப பையை புரிந்து கொண்டால் அடிமை வாழ்க்கை இல்லை என வலியுறுத்துகின்றது. இந்த கவிதையின் ஆசிரியை எங்கள் பலகலைகழக முன்னாள் மாணவி சோலை செல்வன் என்று அறிவது  மிகவும் பெருமையே.

மதுரை பக்கம், மாதவிலக்கு நாட்களில் பெண்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கழிவறை வசதி இல்லாத,  சுகாதாரம் அற்ற வீடுகளில் தங்க வைப்பதுடன் மாதவிடாய் காலங்களில் வெளியாகும் இரத்த பொட்டலங்களை மரத்தில் தொங்கவிடும் மூட வழக்கத்தை விவரிப்பதுடன் படம் துவங்குகின்றது.   மாத விடாய் என்பதை பெண்களுக்கு சந்தோஷமான நிகழ்வாக இருப்பது இல்லை.  இதை ஒரு தீட்டாக, அசிங்கமாக, அவமானமக பார்க்கின்றனர். இதனால் தங்கள் ஆளுமை சிதறடிக்கபாடுகின்றது என்று பெண் ஆவலர்கள் கருத்துக்கள் தெவிக்கின்றனர்.


  அசுத்தம் என்ற கருத்தே இதன் கொடிய அரசியல் என சொல்லிய ஒரு பேராசிரியர், மாதவிலக்கு என்ற நிகழ்வை கொண்டாடும்  சமூக பண்பாட்டில் ஒதுக்கி வைக்கப்படும் பழக்கவும் சேர்ந்தே உள்ளது என்பதை நாம் அறிந்து இதன் அறிவியலான காரண காரியங்களுடன் அறிவு புகட்ட வேண்டும்,  என எடுத்துரைக்கின்றார்.

எல்லா மத வழக்கத்திலும் இந்த நாட்களை தீட்டாக பார்ப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் ஆசாம் மாநிலத்தில் இந்த ரத்தத்தை வழிபடுவதாகவும் எடுத்து சொல்கின்றனர்.   விலக்கு நாட்கள் வரும் இரத்தம் மருத்துவ உலகில் உபயோகப்படுத்துகின்றனர் என்ற தகவலையும் தருகின்றனர்.  கர்ப பையின் செயலாக்கம் பற்றி ஒரு சிறிய விளக்கம் இப்படவும் கண்டு தெளிவு  பெறலாம்.  

ஒரு தெருவோரம் வியாபாரம் நோக்கும் குறவ பெண் முதல் வயல்வெளியில் வேலை செய்யும் பெண்கள், சுகாதாரத்துறையில் பணிபுரியும் பெண்கள், காவல்துறை, பொறியாளர்கள், பெண் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்களாக பணிபுரியும் பெண்கள் என பெண்களாக பிறந்த எல்லா பெண்களுக்கும் பொதுவான ஆனால் கணக்கில் எடுக்காத பிரச்சினையாக உள்ளது மாதவிலக்கு நாட்கள் தள்ளிவைப்பு என்பது. இதில் மாற்று திறனாளிகள் பிரச்சினை மிகவும் கவலையளிக்கின்றது.  மூளை வளர்ச்சியற்ற குழைந்தைகளுக்கு அவர்கள் பாதுகாப்பு கருதி கர்ப பையை நீக்கி விடுவதாகவும் சொல்கின்றது ஆவணப்படம்.

ஒரு பிரச்சினையை ஆராய்வது மட்டுமல்ல அதற்க்கு தீர்வு சொல்வதும் ஆவணப்படங்களின் பொறுப்பாக வருகின்றது. அவ்வகையில் சில சமூக தீர்வுகளும் பரிந்துரைத்துள்ளது இப்படம்.
1.    பள்ளி குழந்தைகளுக்கு இலவச நாப்கின் கொடுப்பதை எடுத்து கூறியுள்ளனர். இரண்டு ரூபாய் காயின் செலுத்தினால் ஒரு நாப்கின் பெறும் கருவி பொருத்துவது வழியாக இப்பிரச்சினைக்க்கு தீர்வு உண்டு என சொல்லியுள்ளனர். 60 ஆண்டு அரசியல் சாதனையாக குறிப்பிடப்படும் இந்த சாதனை எல்லா அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும்  சென்றடைந்ததா என்ற தகவல் இல்லை. பல பள்ளிகளில் கழிவறை இல்லை இருப்பதும் சுத்தமாக பராமரிப்பது இல்லை, தனியார் பள்ளிகளில் கூட கழிவறை சுத்தம் பேணுவது அரிதே என்பது நாம் அறிந்ததே. ஏன் நிகழ்கால பல்கலைகழகங்களில் கூட கழிவறையை சுத்தமாக பராபரிப்பது இல்லை. ஒரு ஆசிரியை வாயிலாக பள்ளி ஆசிரியைகள் தாங்கள் பயண்படுத்திய நாப்கினை கழிவறையிலும் கழிவறை மூலையிலும் எறிந்து சொல்வதை கேட்கும் போது கல்வி கற்ற பெண்களும் பொறுபற்றே உள்ளனர் என்பதை அறிகின்றோம். அதே வேளையில் தகுந்த வசதிகள் பெண்களுக்கு பணிநோக்கும் இடங்களில் கிடைப்பது இல்லை; பெண்கள் திட்டமிட்டு இப்படி சுகாதாரக் கேடாக நடக்க வேண்டும் என எண்ணுவதில்லை என கல்லூரி பேராசிரியை சொல்வதையும் காது கொடுக்க வேண்டியுள்ளது. 

2.    பொது கழிவறை, பொது மருத்துவ மனை கழிவறை பற்றி விவரிக்கின்றார். கட்டமைப்பே பெண்களும் பயண்படுத்த தக்க விதம் கட்ட வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.  இதில் சட்ட மன்றத்தில் கூட பெண்களுக்கு தகுந்த விதமான கழிவறை கட்டப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

3.    பெண்கள் நட்பு கழிவறை- Girl Friendly Toilet: அதாவது ஒரு பெண்கள் கழிவறை என்றால் அதற்கான கட்டமைப்பு மிகவும் அவசியம் என அறிவுறுத்துகின்றது இந்தாஆவணப்படம்.  பெண்கள் கழிவறைக்கு அருகிலே விலக்கு நாட்களில் பயண்படுத்தும் நாப்கினை அப்புறப்படுத்த கான்கிரிட்டில் அல்லது மின் கருவியிலான இடம்,  சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்காத விதம் எரிக்கும் தொழிநுட்ப கருவிகள், சுத்தப்படுத்த தண்ணீர் கைகழுவ சோப் என்பதும் சேர்த்து பரிந்துரைக்கின்றனர்.  சில நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் தற்போதே பயண்படுத்தும் போதும் பல இளம் மாணவிகள் கழிவறை வசதி இல்லாததால் சுள்ளி காட்டுக்கே போய் வருவதாக  குறிப்பிடுகின்றனர்.

4.    நாப்கின் பயண்படுத்தலின் தேவையை இங்கே குறிப்பிடும் வேளையில் கிராமப்புறங்களில் பயண்படுத்தும் துணிகள் மற்றும் நாப்கின் பயண்படுத்துவதால் வரும் தீமையும் விளக்குகின்றனர்.    ஆவணப்படத்தில் ஒரு பகுதியில் கிராமப்புற மாணவிகளுக்கு பயண்படுத்தும் துணியை செய்ய பயிற்சி அளிக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது. ஒரு நாள் 50 மிலி இருந்து 300 மிலி வெளியேரும் குருதிக்கு மூன்று முதல் ஐந்து நாப்கினுகள் தேவை என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஆவணப்படம் வழியாக பெண்கள் தேவையை புரிந்து கொள்ளாத அரசு மட்டுமல்ல மாத விலைக்கை பற்றி சரியான புரிதல் இல்லாத மூடபழக்கங்களும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக தான் உள்ளது. ஆனால் மூன்று நாட்களுக்கு ஒரு நாள் குளிக்கும் நாப்கினே பயண்படுத்தாத பெண்ணின் நேர்முகவும் காணும் போது பெண்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுக்க வேண்டியுள்ளதையும் காணவேண்டியுள்ளது.
பெண்கள் ஆரோக்கிய நிலையில் கருதல் கொள்ள வேண்டும் என்பதும் வரும் சமுதாய வளர்ச்சிக்கு ஆரோக்கியமாக தலைமுறைக்கு தேவை என்பதை அழுத்தமாக சொல்லும் இப்படம் ஆண்களும் பெண்களை பரிவாக நோக்க கூறியுள்ளனர்.

இந்த ஆவணப்படத்தில் காணும் குறை என்பது சமூகத்தில் மாதவிலக்கை பற்றி இருக்கும் மூடபழக்க வழக்கத்தை அழுத்தமாக  கூறிய இப்படம், பெண்கள் தங்கள் உடலை சிறப்பாக; பெண் உறுப்பை சுத்தம் சுகாதாரமாக வைக்க வேண்டிய அவசியம் இன்னும் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும்.   அதே போன்று பழைய காலத்தில் பயண்படுத்தும் பருத்தி துணியிலான நாப்கின் அவசியவும் உணர்த்த வேண்டும். ஒரு நாளைக்கு 5 என்ற கணக்கில் 3 நாட்களுக்கு 15 நாப்கின் இன்று சந்தையில் பெற 65 ரூபாய்க்கு மேல் செலவாகும்.  எல்லா நாப்கினும் சுகாதாரமானதோ பாதுகாப்பானதோ அல்ல. ஆவணப்படத்தில் செய்து காட்டும் தடிமனான துணியிலான நாப்கின் முறை தவறானது ஆகும். இது குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்த காரணமாகும். மேலும் சுகாதாரமான வசதிகளை அரசு செய்து கொடுப்பது போன்றே மக்களுக்கும் தங்களை சுகாதாரமாக பேண கடமை உண்டு. இதற்கும் தேவையான தகவல்கள் ஆவணப்படம் ஊடாக பெற்றிருந்தால் முழுமை பெற்றிருக்கும். இலவச நாப்கின் எனபது 60 ஆண்டு ஆட்சி சாதனையாக கருதுவதும் இகழ்ச்சியாக தான் உள்ளது. ஒரு நாப்கினுக்கு கூட அரசை கெஞ்சும் சூழலுக்கு நம் பெண்கள் வீழ்ந்து விட்டனரா ?



பழைய பண்பாட்டை வெறுக்கவும் அடியோடு ஒழிக்கவும் நினைக்கும் போது அதில் இருந்து நாம் பெறும் சில நல்லவைகளையும் எடுத்துரைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  பெண்களுக்கு சத்தான, தேவையான உணவு எடுத்து கொள்ளும் அவசியம், பயண்படுத்திய நாப்கினை பாதையோரம் துக்கி எறிவதால் விளையும் சுகாதாரக்கேடு பற்றியும் சொல்ல வேண்டியிருந்தது. துணை பேராசிரியர் பிரேமா கடைகளின் நாப்கினை பேப்பரில் பொதிந்து கறுப்பு பையில் தருவதை கேள்வி எழுப்பியுள்ளார். அது விற்பனையாளரின் மரியாதையை பொறுத்தது என எடுத்து கொண்டாலும்; வீட்டில் வாடிய முகத்துடன் இருக்கும் அம்மாவிடம் மகன் என்னாச்சு என்ற கேட்டால் அம்மாவும்; "இன்று மாதவிடாய் அதுவே சோர்வாக இருக்கின்றேன்" என்று சொல்ல எத்தனை அம்மாக்களுக்கு துணிவு வரும் என்று கேட்க தோன்றுகின்றது. 


எது எதையோ படமாக எடுக்கும் இந்த காட்சி ஊடக உலகில்; பலர் வெட்கப்படும் கவனத்தில் கொள்ளாத ஆனால் பிகவும் அவசியம் அறிந்திருக்கவேண்டிய  மாதவிடாய் பற்றி இயக்கி தயாரித்த கீதா இளங்கோவனுக்கு நம் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.  மேலும் பல ஆக்கபூர்வமான சமூக கருத்துள்ள படங்களுடன் தோழியை மீண்டும் சந்திக்கலாம் என்று வாழ்த்து கூறி விடைபெறும் போது , இந்த ஆவணப்படத்தினை  மிகவும் கருதலுடன் அனுப்பி தந்து பதிவாக வெளியிட பரிந்துரைத்த  பாசமிகு மதிபிற்குரிய ஸ்ரீவில்லிபுத்தூர் இரத்தின வேல் ஐயாவுக்கு என் நன்றி வணக்கங்கள். ஆவணப்படம் இலவசமாக பெற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி geetaiis@gmail.com .

7 comments:

  1. அருமையான விழிப்புணர்ச்சி தகவல்.

    என்னைப் பொருத்தவரையில் இந்தப் படத்தை பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாகப் பார்க்க வேண்டும்.

    கிராமங்களின் துாரமானப் பெண்ணைத் தனியே அமர வைத்தாலும் அவளுக்கு அவ்விடத்திலிருந்தே செய்யச் சொல்லி அதிக வேலை கொடுப்பார்களாம். பாட்டி சொன்னது.

    அந்த நேரத்தில் ஏற்கனவே ஏதோ ஒரு டென்சனுடனும் வலியுடனும் இருக்கும் பெண்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. மாதவிடாய்!-ஆவணப்படம் பற்றிய அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி & வாழ்த்துகள் J P Josephine Baba

    ReplyDelete
  3. இந்த ஆவணப்படம். பெண்களுக்கு சத்தான தேவையான உணவு எடுத்து கொள்ளும் அவசியம், பயண்படுத்திய நாப்கினை பாதையோரம் துக்கி எறிவதால் விளையும் சுகாதாரக்கேடு பற்றியும் சொல்ல வேண்டியிருந்தது. //

    உண்மை நீங்கள் சொல்வது.
    உங்கள் கருத்துக்கள் நல்ல விழிப்புணர்வை தரும்.

    முன்பு பெரியோர்கள் மாதவிடாய் காலத்தில் பயன் படுத்திய துணியை வெளியே வீசினால் அவற்றில் பாம்பு போன்றவை ஏறி போனால் தோஷ்ம் என்று பயமுறுத்தி வைத்து இருந்தனர்.சுத்தமாய் துவைத்து பயன் படுத்த கற்றுக் கொடுத்தனர். துணி பழையது ஆனவுடன் அதை எரித்து விடுவர். சுகாதாரத்திற்காக அவ்வாறு செய்தனர்.அது இப்போது இல்லை. நாப்கின்களை கணட இடத்தில் போட்டு செல்வது போல் தான் இருக்கிறது. பொது இடங்களில் கழிவரை வசதி , இல்லை.பள்ளிகளில் கழிவரை இல்லை. அதை முதலில் சரி செய்தால் நல்லது. பருத்தி துணி பயன் படுத்தும் குழந்தைகள் அவற்றை எப்படி சுகாதரமாய் பரமரிக்க வேண்டும் என்பதையும் எடுத்து சொல்லவேண்டும்.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. மாதவிலக்கு என்ற நிகழ்வை கொண்டாடும் இந்த சமூக பண்பாட்டில் ஒதுக்கி வைக்கப்படும் பழக்கவும் சேர்ந்தே உள்ளது என்பதை நாம் அறிந்து இதன் அறிவியலான காரண காரியங்களுடன் அறிவு புகட்ட வேண்டும், என எடுத்துரைக்கின்றனர்.

    என் தாய் மாமாவும், என் அப்பாவும் எங்கள் குடும்பத்தில் புரட்சி செய்தவர்கள். தனியாக இருப்பதை தவிர்த்தவர்கள். தாய் மாமா டாக்டர் என்பதால் என் பாட்டியிடம் சொல்லி அவர்களை தனியாக வைப்பதை தவிர்த்தார். என் அப்பா என் அம்மாவை அது இயற்கை இந்த சமயத்தில் ஓய்வு தேவை என்று அப்படி சொல்லி இருப்பார்கள் குளித்து விட்டு ஓய்வு எடுத்துக் கொள் என்று வரம் கொடுத்த கடவுள்.
    அதனால் நாங்களும் எந்த கஷ்டமும் அனுபவிக்க வில்லை.

    ReplyDelete
  5. Kumaraguruparan Ramakrishnan · Works at Bank of MaharashtraJanuary 19, 2013 9:29 am


    நல்ல பதிவு...இரு முறையும் இப்படத்தைப் பார்க்க இயலாது உடல்நலக் குறைவு...நெல்லையிலிருந்து ( ! )சிறப்பான பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. மிக நல்லதொரு அவசியமான பகிர்வு.

    அனைவரின் பார்வைக்கும் சென்று சேர வேண்டும். என் பள்ளிப் பருவ நாட்களிலும் இது போன்ற நிகழ்ச்சசிகளை பார்த்திருக்கிறேன். மாத விடாய் என்று வரும் எனத்தெரியாமல் பள்ளிக்கு வந்து அவதியுற்ற சக தோழிகளின் நிலையை உடன் இருந்து அனுபவித்தும் இருக்கிறேன். சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இன்றைய நவீன உலகிலும் இது தேவையான ஒன்றுதான். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

    ReplyDelete