திருநென்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகதொடர்பியல் துறை தலைவர் மற்றும் மதிப்பிற்க்குரிய பேராசிரியர் முனைவர் பே.கோவிந்த ராஜு அவர்கள் வழி காட்டுதலில் ஈழ வலைப்பதிவுகளை பற்றி ஓர் ஆய்வு என்னால் மேற்கொள்ள பட்டது. வாய் மொழி தேற்வு (vivavoce) முடிந்த நிலையில் எனது ஆய்வு முடிவுகளை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆயத்தமாக இருக்கின்றேன். உங்கள் கருத்துக்கள் அறியவும் ஆவலுடன் உள்ளேன்.
நாலாவது ஈழபோர் சூழலில் வெகுசன ஊடகங்களால் செய்திகள் இருட்டடிக்கபட்ட போது ஈழ வலைப்பூக்கள்(வலைப்பதிவுகள்) ஈழ மக்களின் கலந்துரையாடல், மற்றும் ஈழ மக்கள் என அடையாளம் கொள்வதற்க்கும் , தங்கள் கருத்துக்களை பரிமாறி கொள்ளுவதற்க்கும் ஆக்க பூர்வமான ஒரு பங்கு அளித்துள்ளது என கண்டு பிடிக்க பட்டுள்ளது.
வலைப்பதிவுகள்(Weblogs)
வலைப்பதிவுகள் என்பது இணையதளத்தின் ஒரு பகுதியான நவீன ஊடகம் ஆகும். இவை நம் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை எழுத்து படம், படக்காட்சிகள், மூலம் பகிர்ந்து கொள்ள உதவுகின்றது. ஆண்டனி மே பீல்டு (Antony Mayfield, What is Social Media?) சமூக ஊடகம் என்றால் என்ன ? என்ற தனது புத்தகத்தில் வலைப்பூக்கள் என்பது ஊடகத்தின் மற்றொரு உருவம் என குறிப்பிட்டுள்ளார். வலைப்பூக்கள் பயன்படுத்துவோரை விரைவில் இணைப்பதும் ஒன்றுகொன்று தொடர்புபடுத்துவதும், படைப்பாளிகளால் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை எளிதில் வெளியிட தகுந்தாகவும் இருக்கின்றது என ஹேறிங்,ஸ்கேடிப், போனஸ், நைட்;2005. (Herring,Schedt, Bonus&Write 2005) கூறியுள்ளார். சேத் காடின்(Seth Godin) என்ற புத்தக ஆசிரியர் தனது புத்தகத்தில் தனி மனிதனின் ஆழ்ந்த மற்றும் தீவிரமான கருத்துக்களை இணையதளம் வழியே பலநபர்களிடம் குறுகிய நேரத்துக்குள் சென்றுசேர்க்க முடிகின்றது என்பதால் வலைப்பதிவுகளை ஒரு திரும்புமுனை என்று குறிப்பிட்டுள்ளார்.
வலைப்பதிவு 1991 ஆண்டு அமெரிக்கர்களால் அறிமுகப்படுத்த பட்டிருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் 2000 ஆண்டு அறிமுகமான ஓர் இணைய ஊடக கருவி ஆகும். 1999 ல் வெறும் 23 வலைப்பதிவுகள் ஆக துவங்கிய வலைப்பதிவுகள் தற்போது 133 மிலியன் வலைப்பதிவுகள் கொண்டதாக மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. 66 உலகநாடுகளை சேர்ந்தவர்கள் வலைப்பதிவர்களாக உள்ளனர். ஒரு கணிணியும் இணைய வசதியும் உள்ள யாராலும் வலைப்பதிவராகலாம் என்பதே இதன் சிறப்பு.
வலைப்பதிவுகள் அதன் உள்ளடக்கம், எழுதுபவர்களின் சிறப்பு சார்ந்து பலவிதமாக வகைப்படுத்தலாம். இருப்பினும் ரெபேக்கா பிளட்டு என்ற ஆராய்ச்சியாளரின் கருத்துப் படி தனி நபர்அல்லது நாட்குறிப்பேடு(personal journal) , தேற்தெடுக்க (filter)பட்ட வகை, புத்தக வகை(note book) என வகைப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார். நாட்குறிப்பேடு வகையில் வலைப்பதிவரின் தன் நிலை விளக்கங்கள் அவருடைய எண்ணம்,கருத்துக்கள் சார்ந்ததாக இருக்கும் போது தேற்தெடுக்க (filter)பட்ட வகையில் தான் சாராத மிகவும் சமூகம் சார்ந்த அல்லது ஆழமான சில கோட்பாடுகள், கருத்துக்கள் உள்பட்ட சில குறிப்பிட்ட நோக்கங்கள் கொண்ட பதிவுகளாக இருக்கும். ஆனால் மேல் கூறிய இரண்டுவகையும் கலந்த வகை வலைப்பதிவுகளே புத்தக வகையில் அடங்குவது.
வலைப்பதிவுகள் சிறப்பு
அரசியல், முதலீடு, விளம்பரம், ஊடக நெறி என அச்சுறுத்தல் அற்று மக்களுக்கு தரமான செய்திகளை கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாது பின்னூட்டம்(comment) வழி பொது விவாதம், கலந்துரையாடலுக்கும் வழி செய்கின்றது வலைப்பதிவுகள்.
ஆராய்ச்சியின் நோக்கம்
இன்றுள்ள ஊடகச்சூழலில் உண்மையான செய்தி வெகுசன ஊடகம் வழி பெறுவது என்பது இயலாத காரியம் என வரும்போது சாதாரண மக்களால் எழுதப்ப்டும் வலைப்பதிவின் சிறப்பை உற்று நோக்குவதே இவ் ஆராய்ச்சியின் நோக்கம் ஆகும். பொதுவாக ஊடகம் என்பது மக்களின் எண்ணம், கலாச்சாரம், வாழ்க்கை , அரசியல் போன்றவயை பிரதிபலிப்பவையாக இருப்பினும் போர் மற்றும் இக்கட்டான சூழலில் அதிகார வர்கத்தின் ஊது குழலாகவே நிலை கொள்கின்றது. ஊடகத்தின் தரம் ஒரு தலையான விறுப்பு வெறுப்பு போன்றவையால்
மூழ்கடிக்கபடுகின்றது.
மூழ்கடிக்கபடுகின்றது.
ஸ்ரீ லங்கா 1948-ல் ஆங்கிலயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல் தமிழ் இன மக்கள் பெரும் வாரியான சிங்கள அரசால் பல சட்டதிருத்தங்களால் ( அரசியல் மொழி சட்டம், குடியுரிமை சட்டம்) வேலை வாய்ப்பு, கல்லூரி அனுமதி என பல விதமாக பாகுபடுத்தபட்டு ஒடுக்க பட்டனர். 1977 கலவரம், 1983 ல் கருப்பு ஜூலை எனும் இனகலவரம் போன்றவற்றால் 10 லட்சத்திற்க்கும் மேற் பட்ட மக்கள் தங்கள் உடமைகளை இழந்து 16 உலக நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 26 வருடங்களில் 1 லட்சம் மக்கள் கலவரம் போர் போன்றவற்றால் மாண்டுபோயுள்ளனர். தமிழர்களுக்கு என ஒரு நாடு இருந்தால் ஒழிய தன்மானத்துடன் வாழ இயலாது என முடிவெடுத்து ஆரம்பிக்க பட்ட ஈழம் என்ற தேசம் ஸ்ரீ லங்கா வின் வட கிழக்கில் பிரபாகரன் தலைமையில் ஆட்சி நடந்தது என புகழ் மிக்க பெண் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் கூறியுள்ளார். நோம் சாம்ஸ்கி போன்ற அமெரிக்கா சமூகவியாளர்களும் ஒத்து போக இயலாத வித்தியாச சமூக கலாச்சார அமைப்பை கொண்ட இரு இனங்கள் இரு நாடாக இருப்பதே சிறந்தது என கூறியுள்ளனர்.
4 வது ஈழப்போர் 2006 ஆண்டு தொடங்கபட்டது. ஆனால் 2005 ஆண்டு துவங்கியே ஆளும் வர்கத்தால் பத்திரிக்கை சுதந்திரத்திற்க்கு தடை விதிக்க பட்டது. மீறும் பத்திரிக்கையாளர்களை அரசின் அடியாட்களால் கொல்லபட்டனர் அல்லது விரட்டி அடிக்க பட்டனர். பல வேளைகளிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளே தரபட்டது. Reporters without borders index ன் கூற்றுப்படி ஸ்ரீ லங்காவின் தரவரிசை 173 நாடுகளின் வரிசையில் 165 வது இடத்தில் நிலைகொள்கின்றது. களப்பணியில் உலக பத்திரிக்கையாளர்களையோ மனித நேய பணியாளர்களை கூட அனுமதிக்காது, 4 வது ஈழப் போர் இலங்கை அரசால் நடத்த பட்டது. இத்தருணத்தில் தனிநபர்களால் கைய்யாளப்படும் ஈழ வலைப்பதிவுகளின் சிறப்பு மேல் ஓங்குகின்றது. 23 உலகநாடுகளுடைய சிறப்பாக இந்தியா, சீன போன்ற நாடுகளின் துணையுடன் போர் புரிந்து ஈழ நாட்டை வென்றதாக இலங்கை அரசு எக்காளம் இட்டபோதும் ஈழ மண்ணின் மக்களின் கருத்து அவர்களின் ஆசை கனவுகள் எவ்வாறு மறைக்க பட்டது என ஈழ வலைப்பதிவுகள் வழியே நாம் அறிய இயலும்.
ஈழ வலைப்பதிவுகள்
தமிழ் வலைப்பூக்களில் ஈழம் சார்ந்த வலைப்பூக்கள் முக்கிய பங்கு பெருகின்றது. இன பிரச்சனையால் உலகெங்கிலுமுள்ள பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களை ஒன்றிணைக்கவும், ஒரே இனம் என அடையாளப்படுத்திக்கொள்வதற்க்கும் தங்களுக்குள் கலந்துரையாடுவதற்க்கும், தங்கள் அனுபவங்கள், கனவுகள் மற்றும் கருத்துக்களை பரிமாறி கொள்ளுவதற்க்கும், தகுந்த தளமாக வலைப்பூக்களை பயன்படுத்துகின்றனர் . தமிழ் சசி என்ற இந்திய தமிழர், இக்கட்டான சூழலின் வலைப்பூக்கள் கருத்துக்கள் மற்றும் ஈழ செய்திகள் பரிமாறிகொள்வதற்க்கு நம்பகதன்மையான மாற்று ஊடகமாக இருந்தது என கூறுகின்றார். தமிழக ஊடகங்களால் அரசியல் காரணங்கள் கொண்டு ஈழ செய்திகள் தர மறுக்கபட்ட போது தமிழ்மணம் போன்ற வலைபதிவு திரட்டிகள் வழியாக உண்மை செய்திகள் மக்களிடம் வந்து சேர்ந்தது . தமிழ்மணம் வலைப்பூ அரங்கத்தில் 6929 வலைப்பூக்கள் உள்ளன. ஈழம் சார்ந்த வலைப்பூக்கள் 400 க்கு மேல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவ் ஆராய்ச்சிக்கு தமிழ்மணம் வலைப்பூ அரங்கத்திலுள்ள வெகுசனங்களால் கவரபட்ட ஈழ செய்திகள் கொண்ட தனி நபர் சார்ந்த 5 வலைப்பதிவுகள், மற்றும் 1குழு வலைப்பதிவு எடுக்கபட்டுள்ளது. ஏப்ரல் 2008 துவங்கி ஏப்ரல் 2010 எழுதபட்ட தேற்தெடுக்கபட்ட வலைப்பூக்களை மாதிரிகளாக (cases) கணக்கில் கொண்டு உள்ளடக்க பிரிந்தாய்வு முறையில்(content analysis) பண்பார்ந்த, மற்றும் அளவு சார்ந்த மதிப்பீடுகளை கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளபட்டுள்ளது. செய்தி பெற மாற்று ஊடகமான வலைப்பதிவு வழியே பெறப்பட்ட செய்தியின் தேவை, சிறப்பு, வலைப்பதிவரின் வாழ்க்கை வரலாறு(profile), வலைப்பதிவின் கட்டமைப்பு, வலைப்பூவின் உள்ளடக்கம் இவை சமூகசூழலுக்கு தகுந்து எவ்வாறு உருமாறுகின்றது என்பதும் மேலும் இலங்கை போர் சூழலில் மக்கள் மத்தியில் ஈழச் செய்தி பெற வலைப்பதிவுகளின் தாக்கம் எவ்வாறு இருந்தது என ஆராயபட்டுள்ளது.
முன் நிகழ்ந்த ஆராய்ச்சிகள்(Review of Literatures)
வலைப்பதிவுகளை பற்றியுள்ள பல ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகள் ஆராயபட்டிருந்தாலும் பாலிஷ் மொழி வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் சார்ந்து ஆராயபட்ட டிராமலின் (Trammel)கட்டுரை, கே ஜாண்சனின் (Kay Johnson) அரசியல் வலைப்பதிவுகளின் நம்பக தன்மை பற்றியுள்ள கட்டுரை, சூசன் ஹேரிங்கின்(Susan Herrings) வலைப்பதிவுகளின் உள்ளடக்கம், ச்ஷீமிடிட்ன் (Schmidt.J) பகுந்தாய்வு முறையில் வலைப்பதிவுகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட கட்டுரைகள் இவ் ஆராய்ச்சிக்கு பின்புலனாக எடுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை கோட்ப்பாடு.(Theoretic Perspective.)பயன்பாடு மற்றும் மனமகிழ்ச்சி கோட்பாடு: (பிளாமர் மற்றும் காட்ஜ்;1974. (Uses & Gratification Theory: Blumler & Katz 1974)
ஊடகத்தை தங்கள் மனமகிழ்ச்சிகாக எவ்வாறு பயன்படுத்துகின்றனர் ஊடகத்தை பயன்படுத்த தூண்டும் காரணிகள் ஏது ஊடகத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏது என்று அறிவதை இந்த கோட்பாட்டின் அடிப்படை ஆகும். மக்கள் ஊடகத்தை பயன்படுத்துவது; குறிப்பட்ட இலக்கு உள்ளடக்கம் மற்றும் திருப்தியை சார்ந்து அமைகின்றது என கண்டுள்ளனர்.
ஆராய்ச்சி 6 கேள்விகளும் அதன் விடை பெறுவதுமாக செல்கின்றது .
ஈழ வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் கட்டமைப்பு என்ன?
ஈழ ப்பதிவர்கள் பெறும் மன மகிழ்ச்சி மற்றும் திருப்தி யாவை?
ஈழ வலைப்பதிவர்களை பற்றி ஓர் ஆய்வு, ஈழப்பதிவுகள் ஈழ மக்களின் தொடர்பாடலுக்கு உதவியதா? மேலும்
தொடர்பாடலுக்கு வலைப்பதிவுகள் சிறந்த கருவியா?
ஈழப்போர் வேளைகளிலும் அதன் பின்பும் வலைப்பதிவுகளில் உள்ளடம் பண்பு மாறியுள்ளதா?
ஈழ போர் வேளையில் வெகுசன ஊடகங்கள் மவுனித்த போது அரசியல் மற்றும் செய்தி பெற வலைப்பதிவுகளீன் பங்கு யாவை ?
என அறியும் எண்ணத்துடன் இவ் ஆராய்ச்சி மேற்கொள்ள பட்டுள்ளது.
மாதிரிகள் தேற்வு செய்ய குறிகோள் உடைய சில நுட்பங்கள்(Purposive Sampling Method) வழி காட்டி பேராசிரியரின் துணை கொண்டு கைய்யாண்டுள்ளேன்.
வலைப்பதிவுகள் 2008 ஏப்ரல்-2010 ஏப்ரல் காலளவில் எழுதபட்டதாக இருக்க வேண்டும், தற்போதும் தொடர்ந்து எழுத படுதல் வேண்டும். சமூக அரசியல் கலாச்சாரம் அடங்கிய ஈழப் பதிவுகள் ஆக இருக்க வேண்டும். வலைப்பதிவர்களே கைய்யாளும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். வலைப்பதிவர் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவு வைத்திருப்பார் என்றால் அதிகம் பதிவுகள் உள்ள வலைப்பதிவாக எடுத்து கொள்ளுதல். மேலும் வலைப்பதிவு அறிஞ்சர்கள் ரெபேக்கா பிளட், ஹேரிங்,ஷீடிட் கருதும் அமைப்பு கொண்ட வலைப்பதிவுகளாக இருக்க வேண்டும். இவ்வாறாக பெறபட்ட மாதிரிகள் 517 பதிவுகள் கொண்ட 6 வலைப்பதிவுகள் இவ் ஆராய்ச்சிக்கு பயண்படுத்த பட்டுள்ளது.
வலைப்பதிவுகள் 2008 ஏப்ரல்-2010 ஏப்ரல் காலளவில் எழுதபட்டதாக இருக்க வேண்டும், தற்போதும் தொடர்ந்து எழுத படுதல் வேண்டும். சமூக அரசியல் கலாச்சாரம் அடங்கிய ஈழப் பதிவுகள் ஆக இருக்க வேண்டும். வலைப்பதிவர்களே கைய்யாளும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். வலைப்பதிவர் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவு வைத்திருப்பார் என்றால் அதிகம் பதிவுகள் உள்ள வலைப்பதிவாக எடுத்து கொள்ளுதல். மேலும் வலைப்பதிவு அறிஞ்சர்கள் ரெபேக்கா பிளட், ஹேரிங்,ஷீடிட் கருதும் அமைப்பு கொண்ட வலைப்பதிவுகளாக இருக்க வேண்டும். இவ்வாறாக பெறபட்ட மாதிரிகள் 517 பதிவுகள் கொண்ட 6 வலைப்பதிவுகள் இவ் ஆராய்ச்சிக்கு பயண்படுத்த பட்டுள்ளது.
ஆராய்ச்சி முடிவு
1.ஈழ வலைப்பதிவுகளின் உள்ளடக்கம்
ஈழ வலைப்பதிவுகள் பொதுவாக புத்தக வகை(note book) என வகைப்படுத்தலாம். ஈழ மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் எண்ணம் மட்டுமல்லாது ஈழ அரசியல் வெளிநாடுகளில் வசிப்பதால் அயல் நாட்டு மக்களின் சிறப்பு, காணும் திரைப்படம் என அவர்கள் வாழ்க்கையோடு பின்னியிணைந்த எல்லாவற்றையும் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
தனி நபர்களின் வலைப்பதிவுகளை பற்றி எடுத்து கொண்டால் ஈழத்தை பற்றியுள்ள அவர்களின் கருத்தும் எண்ணவுமே முன் நிற்கின்றது. ஆனால் குழு வலைப்பதிவை எடுத்து கொண்டால் அவர்களின் கலாசாரம், வாழ்க்கை சார்ந்த வலைப்பதிவுகள் பிரதானமாக வருகின்றது.
2.ஈழ வலைப்பதிவுகளின் கட்டமைப்பு
ஈழ வலைப்பதிவுகள் வெறும் எழுத்து மட்டுமல்லாது புகைப்படங்கள், காணொளிகள், ஒலி நாடாக்கள், ஓவியங்கள், நிலப்படம், இணைப்புக்கள் என முழுவீச்சில் தொடர்பாடலை பேணுகின்றது.
ஈழ வலைப்பதிவர்களின் மன மகிழ்ச்சி மற்றும் திருப்தி கலந்துரையாடல் சார்ந்தும் வலைப்பதிவை மாற்று ஊடகமாக காண்பதே ஆகும். கலந்துரையாடலுக்கென வலைப்பதிவு கருவிகளை முழுவதுமாக பயண்படுத்தி மிக வேகமான கருந்துரையாடல், தொடர்பாடல் கொள்கின்றனர்.
வலைப்பதிவர்களின் சரித்திரம்(profile) பரிசோதித்தால் 78 சதவீதம் பேர் வயது வெளியிட விரும்பவில்லை, தொழில் போன்றவயும் 55 சதவீதம் பேர் வெளியிடவில்லை. இருப்பினும் பெரும் வாரியான வலைப்பதிவர்கள் இளஞ்ராகவும் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆகவும் உள்ளனர். 72% பேர் ஆண் வலைப்பதிவர்களே, வலைபதிவர்களில் 28% பேர் ஸ்ரீ லங்கா விலும் 15% பேர் கானடா, 5% பேர் ஆஸ்திரேலியாவிலும் குடியிருக்கின்றனர். தங்களது புகைப்படங்களை 17% பேர் மட்டுமே பயண்படுத்துகின்றனர். பெரும் வாரியானோர் சுவரோவியத்தையே பயண்படுத்துகின்றனர்.
வலைப்பதிவுகளின் உருமாற்றத்தை பற்றி எண்ணும் போது பொதுவாக ஒரு கருத்தாக்கம் கொள்ளல் ஆகாது. குழு வலைப்பதிவு 'ஈழத்து முற்றம்' போரின் கடைசி நாட்களில் உருவாக்க பட்டதே. ஈழம் என்ற தேசத்தை அழித்தாலும் அவர்களுடைய கலாச்சாரம், வாழ்வை அழியா வண்ணம் இணையத்தில் பதிய வேண்டும் என்ற நோக்குடனும் ஈழ மக்கள் ஒருவருக்கொருவர் உரைவாடி கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் கானா பிரபா அவர்களின் தலைமையில் 32 பேரால் தொடங்க பட்டது.
தனி நபர்கள் வலைப்பதிவை எடுத்து கொண்டால் கானடா நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பெண் வலைப்பதிவர் தமிழ் நதி ஈழ தேசத்தின் மேலுள்ள உளைவியல் மற்றும் அரசியல் அதிகாரத்தையும் ஆயுதப்போராட்டத்தின் அவசியத்தை தனது எழுத்து மூலமாக வலியுறுத்தி வந்துள்ளார். இந்திய அரசிடம் தங்களது சகோதர உணர்வை நினைவுப்படுத்தும் படியாகவே அவரின் எழுத்து அமைந்தது. ஆனால் மே 2009 க்கு பின்பு அவரின் எழுத்து இன்னும் ஒரு படி அதிகமான ஈழ தாக்கத்தை கொண்டு இருந்தது. இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியல் கொள்கையை முற்றும் சவால் விடும் அளவுக்கு அவர் எழுத்து உருமாறியது. இப்போது ஈழம் என தேசம் அழிக்க பட்டாலும் மலரும் என்ற உணர்வுடன் எழுதிகொண்டிருக்கின்றார்
ஆஸ்த்ரேலியா வானொலியில் பகுதி நேர நிகழ்ச்சி
தயாரிப்பாளராக இருக்கும் கானா பிராபாவின் எழுத்துக்கள் பெரிய
மாற்றம் என காணாவிடிலும் ஈழ தேசம் என்ற கொள்கை, தேவையை
எடுத்து கூறும் விதமாக பல பதிவுகள் வந்தன. இருப்பினும்
ஈழ மக்களின் கலாச்சாரம் வாழ்க்கை, மக்கள்,
ஈழப் போராளிகள் என போரால் அழிக்க
பட்ட பல பொக்கிஷங்களை வலைப்பதிவுகளால்
பதிந்து கொள்ளவே விரும்புகின்றார்.
தயாரிப்பாளராக இருக்கும் கானா பிராபாவின் எழுத்துக்கள் பெரிய
மாற்றம் என காணாவிடிலும் ஈழ தேசம் என்ற கொள்கை, தேவையை
எடுத்து கூறும் விதமாக பல பதிவுகள் வந்தன. இருப்பினும்
ஈழ மக்களின் கலாச்சாரம் வாழ்க்கை, மக்கள்,
ஈழப் போராளிகள் என போரால் அழிக்க
பட்ட பல பொக்கிஷங்களை வலைப்பதிவுகளால்
பதிந்து கொள்ளவே விரும்புகின்றார்.
அமெரிக்கா நியூ-ஜெர்ஸீயை சேர்ந்த இந்திய தமிழரான தமிழ் சசி மே 2009 முன்பு அவருடைய வலைப்பதிவுகள் ஈழம் சார்ந்தே இருந்தது, ஈழப்போர் பின்பு மிகவும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்க பட்ட நபர் இவரே. வலைப்பதிவு எழுதுவதயே தவிர்த்த தமிழ் சசி பின்பு ஏப்ரல் 2010 துவங்கியே எழுத ஆரம்பிக்கின்றார். பின்பு ஈழ செய்திகளை விட மற்று அரசியல் செய்தி எழுதவே விரும்புகின்றார்.
தீபச் செல்வன் தனக்குரிய கவிதை எழுத்துக்களால் அங்குள்ள நிலவரத்தை அப்படியே பதிவு செய்து கொண்டுவருகின்றார். அவருடைய பார்வை என்பதைவிட அங்குள்ள மக்களுடைய உணர்வுகள், ஆதங்கம், கவலைகள் பகிர்ந்து கொள்ளும் விதமாகவே அவருடைய வலைப்பதிவுகள் உள்ளது. போருக்கு பின்பு தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்பதே குறிப்பிடதக்க மாற்றம்.
எம்.ரிஷான் ஷெரிஃப் ஈழபோருக்கு பின்பு ஈழ செய்திகளை பல பகிர்ந்து கொண்டு வருகின்றார். அவர் பத்திரிக்கையாளர் என்பதால் அவருடைய கருத்தை நுட்பமாக எழுத்தால் பகிர்ந்து வருகின்றார். அவருடைய எழுத்து கலந்துரையாடல் என்ற இலக்கை நோக்கியே உள்ளது.
ஈழ போர் 3 கட்டமாக முன்னேறி மே 18 2009 முடிவு பெற்றதாக இலங்கை அரசால் அறிவிக்க பட்டது. 7000 பொதுமக்கள் கொல்லபட்டதாகவும் 2 65,300 மக்கள் முள்கம்பிக்குள் முடக்க பட்டதாகவும் கணக்கிடபட்டுள்ளது.தமிழர்களின் பகுதிக்குள் செல்லும் போது ஒரு அலைபேசிக்கூட எடுத்து செல்ல இயலாது என உலகலாவிய சேவை நிறுவன உறுப்பினர் கூறியுள்ளார். பத்திரிக்கையாளர்கள் மிக சாதுரியமாக அடையாளம் காணபட்டு தடுத்து வைக்க படுகின்றனர். அனுமதி பெரும் பத்திரிக்கையாளர்களும் ராணுவ வாகனத்தில் மக்களை சந்திக்க இடம் நல்குகின்றனர். ஊடகத்தினர் பெறுவதும் அரசின் மக்கள் தொடர்பு செய்தி மட்டுமே. மேலும் வெகுசன ஊடகவும் களச்செய்தியல்லாது மற்று இணைய செய்திகள், அல்லது வலைப்பதிவுகளில் இருந்து பெறும் செய்தியே தனது செய்தி போல் தருகின்றனர். பத்திரிக்கைக்கு பத்திரிக்கை மாறு பட்ட கருத்து கொண்ட செய்தியாகவே உள்ளது. இத்தருணத்தில் லாப இச்சையற்று தங்கள் கருத்தை பகிர வேண்டும் அல்லது தங்கள் மன பாரத்தை இறக்கி வைக்கும் தளமாகவும் கண்டுள்ளனர். வலைப்பதிவுகள் ஊடாக பெறப்படும் செய்தி உண்மைதன்மை வெகுசன பத்திரிக்கையை விட நாம் கண்டு உணர இயலும்.
முடிவுரை
இவ் ஆராய்ச்சி சரித்திர முக்கியம் வாய்ந்த காலயளவில்(4 வது ஈழ ப்போர் நடைபெற்ற போதும் முடிந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில்) சமர்ப்பிக்க பட்டுள்ளது.ஆராய்ச்சி தொடங்கபட்டபோது குழு வலைப்பதிவில் 32 என்றது தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது. தமிழர்கள் ஸ்ரீலங்கா அரசு ராணுவத்தால் அராஜகமாக அடக்கபட்டு ஆட்சிஐ கைபற்றிய போதும் ஐக்கிய நாட்டு சபையில் முறையிட்டும் நீதி கிடைக்க ரஷியா சீனா போன்றா நாடுகளால் தாமதிக்கபடும் போது வலைப்பதிவுகள் மட்டுமே இயல்பான கவலைகளையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் உபாதியாக நிலை கொள்கின்றது. வெகுசன ஊடகங்களால் கொண்டு வர இயலாத மற்றும் மழுங்கலடிக்க பட்ட செய்திகள் வலைப்பதிவு வழியே பெற முடிகின்றது. இந்த ஆராய்ச்சியில் பின்புலன் மொழி சார்ந்த ஒரு குழுவே அதாவது ஈழ தமிழர்கள், அவர்களின் தாய் மொழி –தமிழ் ஒரு மிக முக்கியமான பொருளாக பார்க்க பட்டுள்ளது. தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழ தமிழர்கள் மத்தியில் நடைபெறும் தொடர்பாடல் ஆராய்ச்சிக்கு மைய கருத்தாக உள்ளது
.
.
மாதிரிகளை தேற்வு செய்வதில் ஒரு பெரும் கருதல் வேண்டியிருந்தது. தமிழ்மணம் திரட்டி எடுக்கும் வலைப்பதிவுகள் என கட்டுக்குள் கொண்டுவரபட்டுள்ளது.வலைப்பதிவுகளை பற்றியுள்ள நம்பகதன்மை சார்ந்தும், வலைப்பதிவர்கள் அடையும் மன மகிழ்ச்சியின் வேறுபாடையும் வரும் ஆராய்ச்சியில் பின் தொடரலாம்.
photoes from blogs .
photoes from blogs .
வாழ்த்துகள்!
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.
ReplyDeleteஉணர்வுப்பூர்வமான பயனுள்ள பதிவு
ReplyDeleteGreat...!!!
ReplyDeleteதங்கள் ஆய்வு வலைபதிவுகளுக்கு சிறந்த கவுரவத்தை தரும். தமிழ்வலைபதிவர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteதங்கள் ஆய்வு வலைபதிவுகளுக்கு சிறந்த கவுரவத்தை தரும். உணர்வுப்பூர்வமான பதிவு.
ReplyDeleteநல்ல ஆய்வு.
ReplyDeleteஆயினும் போருக்கு அப்பாலான மக்களின் தினசரி வாழ்வு, பெண்ணியம், சாதீயம், கவிதை, சிறுகதைகள், மருத்துவம் பற்றிய பதிவுகளையும் கணக்கில் எடுத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
nalla muyarchi,nalla akkam,vallthukkal.
ReplyDeleteGood analysis on eelam blogs. Continue this on Our national issues too.
ReplyDeleteஉங்கள் ஆய்வு மேலும் தொடர எனது வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான பயனுள்ள ஆராய்ச்சி. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... விடுதலை வேட்கையை வலைபூக்கள் மூலம் வெளிப்படுத்தும் அன்பர்களுக்கு உங்களது ஆய்வு கட்டுரை ஒரு வரபிரசாதம்...இரண்டு வேண்டுகோள்கள்...Purposive sampling method compromises the validity of your findings. If you do a systematic review (SR) of the same topic, it will become a major social science publication. Secondly, you may consider repeating proof reading and correcting தமிழ் spell errors. வல்லின "ற்" ஒற்றுக்குப்பின் மெய்யெழுத்துக்கள் வருதல் தமிழுக்கு பொருத்தமல்ல. "பயன்" எனும்சொல் "பயண்" என்று அச்சாகி உள்ளது திருத்தப்பட வேண்டியது.
ReplyDelete//7000 பொதுமக்கள் கொல்லபட்டதாகவும்// உத்தியோகபூர்வமாக 35000 என்று இப்போது கணக்கிடப்பட்டுள்ளது. ஆயினும் சராசரியாக 70000ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது மனித உரிமையாளர்களின் கருத்து
ReplyDeleteஇன்னும் கூட இப்போதுள்ள சூழ்நிலையில் விரிவான ஆய்வு செய்யலாமே?
ReplyDeleteமுடிந்தால் என் வலைதளத்தை ஒரு முறை உள் நுழைந்து பாருங்க.
உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
சிறந்த ஆய்வு.பாராட்டுக்கள்!!!
ReplyDeleteVery Very important Re cortical in our Tamil Peoples life. Thanks you mam our meaningful research work.
ReplyDeleteBy Nellai Nesan