9 Jan 2026

ஒரு சங்கீர்த்தனம் போல

 

ஒரு சங்கீர்த்தனம் போல

The Gambler எனப் புகழ்பெற்றதாக மாறிய படைப்பின் கைப்பிரதியை ஒப்படைக்க தஸ்தயேவ்ஸ்கிக்குக் கணக்கிட்ட சில நாட்களே மீதமிருந்த காலகட்டத்தில். காலக்கெடுத்தைக் கடக்க முடியாவிட்டால், அவரது பதிப்பாளர் ஸ்டெல்லோவ்ஸ்கி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பார் என்ற அச்சம் அவரை வாட்டுகிறது. அந்த மனஅழுத்தத்தில், எழுதுவதற்கே அவர் போராடுகிறார். அக்டோபர் 15ஆம் தேதி, குறுக்கெழுத்து (ஸ்டெனோகிராபி) உதவிக்கு ஒரு ஆள் உதவி தேவை என நண்பருக்கு தஸ்தயேவ்ஸ்கி வேண்டுகிறார். நண்பரான பேராசிரியர் அவரது சிறந்த மாணவியான அன்னா கிரிகோர்யேவ்னா ஸ்னிட்கினா என்ற இளம் பெண்ணை பரிந்துரைக்கிறார்.

இருபது வயதான அன்னா, உயர்நிலைப் பள்ளி முடித்த உடனே தன் உழைப்பின் மூலம் பொருளாதார சுயநிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்கெழுத்தைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெற்றிருந்தவள்.

சமீபத்தில் மறைந்த அவளது தந்தையின் மிக விருப்பமான எழுத்தாளர் ஆவார் தஸ்தயேவ்ஸ்கி; அவருடைய கதைகளை வாசித்தபடியே அவள் வளர்ந்தவள் . அவரை நேரில் சந்திப்பதோடு மட்டுமல்லாமல், அவரது பணியில் உதவப் போகிறேன் என்ற எண்ணமே அவளை மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது. இந்த வாய்ப்பு கிடைத்ததும் அவள் பேரானந்தமடைந்து அடுத்த நாளே எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் வீட்டை அடைகிறார்.
,

அடுத்த இருபத்தி ஐந்து நாட்களுக்குப் , அன்னா தினமும் மதியம் பன்னிரண்டு மணிக்கு தஸ்தயேவ்ஸ்கியின் வீட்டிற்கு வந்து மாலை நான்கு மணி வரை தட்டாச்சு செய்து கொடுக்கிறாள். அவர்களின் தேநீர் மற்றும் சிறிய உரையாடல்களுக்கான இடைவெளிகளுடன் வேலை தொடர்கிறது .

அவளது வேலையிலுள்ள ஈடுபாடு, எடுத்த வேலையை முடிக்கும் அவளுடைய தீவிரமான முயற்சி, அவளின் புரிதல் கொண்ட ஆழமான அன்பால், அவரின் மேலுள்ள புரிதலால் தஸ்தயேவ்ஸ்கியின் மிக இருண்ட மனநிலைகளையும் அகற்றி, பிடிவாதமான எண்ணங்களில் இருந்து தன்னை விடுவிப்பதை உணரும் போது அவர் மனமார அவளை மதிக்க ஆரம்பித்திருந்தார்.
அவளோ, அவரது கனிவு, அவளுக்குக் காட்டிய மரியாதை, பாராட்டின நட்பால் ஈர்க்கப்பட்டு ஆகியவற்றால் மனம் நெகிழ்ந்து போகிறாள்.

ஆனால் அவர்கள் இருவரும் ஆழமான இந்த பரஸ்பர அன்பும் மதிப்பும், எதிர்காலத்தில் புகழ்பெறும் ஒரு மகத்தான காதலின் விதையாக மாறப்போகிறது என்பதை, அப்போது இருவரும் உணர்ந்திருக்கவில்லை.


“ஒருவரை நாம் ஏன் நேசிக்கிறோம்?
‘யாரையாவது அல்லது எதையாவது நேசிக்க வேண்டும் என்பது , வாழ்க்கைக்கு அவசியமா?’
“ஆன்மீகத் தனிமையின் துயரத்தை மறக்கவே நாம் நேசிக்கிறோம்.”
“ஆன்மீகத் தனிமையா?”
“ஆம். ஆன்மீகத் தனிமை. அது தரும் துயரத்தை அதனால் உருவாகும் வலியை தாங்கக்கூடிய வலிமை தருகிறது என்பதால் தான் நாம் நேசிக்கிறோம். அந்த வலியைத் தாங்கவே மனிதர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

மனிதர்கள் எப்போதும் தோல்வியிலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறவர்கள்.

ஆன்மீகத் தனிமையில் இருந்து தான் துன்பம், இன்பம் இரண்டும் தோன்றுகிறதா?”
“ஆம். துன்பம், இன்பம் இரண்டுமே ஆன்மீகத் தனிமையிலிருந்து தான் தோன்றுகின்றன. இன்பம் என்பது துன்பத்தின் மற்றொரு வடிவம் மட்டுமே. அவை பிரிக்க முடியாதவை. அதுதான் உண்மை.”
அப்படியானால், ஆன்மீகத் தனிமை தான் படைப்பை இயக்குகிறதா?
. தொடக்கத்தில், கடவுள் பூமியைப் பார்த்தபோது அது வெறுமையாகவும் உருவமற்றதாகவும் இருந்தது. அவர் தனக்குள்ளும் அதே வெறுமையை உணர்ந்தார். அந்த உள்ளார்ந்த வெற்றிடத்தைத்தான் நாம் ஆன்மீகத் தனிமை என்கிறோம்.
கடவுள் ஏன் வானத்தையும், பூமியையும், ஒளியையும், நீரையும், மனிதர்களையும், பிற உயிரினங்களையும் படைத்தார்?
ஆன்மீகத் தனிமையின் காரணமாகத்தான்அதைப் போக்குவதற்காக தான்.”
மனிதர்கள் அந்தத் தனிமையை மறக்க பல வழிகளில் முயன்றார்கள்.
சிலர் பிரார்த்தனை மூலம் தேடினார்கள்.
சிலர் சேவையின் மூலம்.
சிலர் கலை மூலம்.
சிலர் காதல் மூலம்.
சிலர் அறிவின் மூலம்.
ஆனால் இவற்றில் எதுவுமே அதை உண்மையாக அழிக்கவில்லை. ஆன்மீகத் தனிமை ஒருபோதும் மறைவதில்லை. அது வடிவத்தை மட்டுமே மாற்றிக்கொள்கிறது.
மதம் அதை விளக்க முயன்றது.
தத்துவம் அதை விவரிக்க முயன்றது.
அறிவியல் அதை அளவிட முயன்றது.
கலை அதை வெளிப்படுத்த முயன்றது.
ஆயினும் எதனாலும் அதை அழிக்க முடியவில்லை.
அந்தத் தனிமை மனித ஆன்மாவின் ஆழத்தில் மறைந்தே இருக்கிறது.
படைப்பே அந்தத் தனிமையிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு முயற்சிதான்.

வாழ்க்கை என்பது அதை மறப்பதற்கான ஒரு முடிவற்ற போராட்டம். அதனால்தான் காதல், போர், கலை, நம்பிக்கை, மற்றும் கடவுள் கூட ஒரே மூலத்திலிருந்து பிறக்கிறார்கள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பிறகு, அன்னா கேட்டாள்
“அப்படியானால், கடவுளும் துன்பப்படுகிறாரா?”
“இல்லை, அவர் துன்பப்படுவதில்லை. ஆனால் தான் தனியாக இருக்கக்கூடாது என்பதற்காக, துன்பப்படக்கூடிய உயிரினங்களை அவர் படைத்தார்.”
“அப்படியானால் இந்த பிரபஞ்சம் முழுவதும் கடவுளின் தனிமையின் நீட்சி தானா?”
“ஆம். நாம் அவருடைய தனிமையில் இருந்து பிறந்தவர்கள். அந்தத் தனிமையில் இருந்துதான் துக்கமும் மகிழ்ச்சியும் எழுகின்றன.
படைப்பு என்று நாம் அழைப்பது அந்தத் தனிமையின் எதிரொலியைத் தவிர வேறில்லை.”


அதற்குள் அவர்கள் மடாலயத்திற்கு அருகில் வந்து சேர்ந்தார்கள்.
அன்னா உள்ளே சென்று பிரார்த்தனை செய்தார். தஸ்தயேவ்ஸ்கி (Dostoevsky) வெளியே ஓரிடத்தில், ஒரு ஆலமரத்தின் அடியில் காத்து நின்றார்.
பலிபீடத்திற்கு அருகில் வந்து நின்று பிரார்த்தனை செய்ய அன்னா அவரை அழைத்தார்.
தஸ்தயேவ்ஸ்கி அதைத் தவிர்த்து விட்டார்.

பிரார்த்தனை முடிந்து வெளியே வந்தபோது அன்னா கேட்டார்:
“ஏன் பிரார்த்தனை செய்ய வரவில்லை?”

தஸ்தயேவ்ஸ்கி கூறினார்: பிரார்த்தனை செய்யும்போது அவர் தனியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு கூட்டுப் பிரார்த்தனையில் எனக்கு எந்த ஒரு மன ஒருமைப்பாடும் கிடைக்காது.
அப்படி கூட்டமாக தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்யும் பழக்கமும் எனக்கு இல்லை. பிரார்த்தனை எல்லாம் சொந்த இதயத்திற்குள் தான் இருக்கிறது.
அல்லது தேவாலயத்திற்குச் செல்லும்போது அங்கே யாரும், பாதிரியார் கூட இருக்கக்கூடாது. . கடவுளுக்கும் தனக்கும் இடையில் மற்றொருவரின் இருப்பு சிரமத்தை உண்டாக்கும். நான் அப்படி முறையாக தேவாலயத்திற்குச் செல்லவோ பிரார்த்தனை செய்யவோ மாட்டேன்.”
“அப்போ, முன்பு ஒரு நாள் புனித மாதாவின் தேவாலயத்திற்குப் போனதாகச் சொன்னீர்களே?”
“அப்போது அப்படித் தோன்றியது. அங்கே அவ்வளவு அழகான ஒரு சிற்பம் இருக்கிறது. அதைப் பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாளைய ஆசையாக இருந்தது.”
“இல்லை, பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாததாலோ?”
சொந்த இதயம் தான் முக்கியம். தேவாலயத்தில் பிசாசை ஆட்சி செய்ய விடுபவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்வதால் என்ன பயன்?
கடவுளுக்கு இந்த ஏமாற்றுவேலை புரியாது என்று நினைக்கிறார்களா? இதையெல்லாம் சொன்னாலும், ஒரு தத்துவம் என்ற நிலையில் எனக்கு பிரார்த்தனை பிடிக்கும்.

நவம்பர் 10ஆம் தேதி அன்னாவின் உதவியுடன், தஸ்தயேவ்ஸ்கி வெறும் இருபத்தாறு நாட்களில் ஒரு முழு நாவலை அவர் முடித்திருந்தார். அவர் அன்னாவின் கையைப் பிடித்து குலுக்கி, முன்பே கூறியிருந்தது போல 50 ரூபிள்களை வழங்கி, மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.

அடுத்த நாள், தஸ்தயேவ்ஸ்கியின் நாற்பத்தைந்தாவது பிறந்தநாள். நாவலை பதிப்பகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். இந்த இரட்டை நிகழ்வையும் கொண்டாடும் விதமாக ஒரு உணவகத்தில் சிறப்பு விருந்து அளிக்க அவர் தீர்மானித்தார். அன்னாவையும் அழைத்தார். அவள் இதற்கு முன்பு ஒருபோதும் உணவகத்தில் உணவருந்தியதில்லை; அதனால் மிகுந்த பதற்றத்தில் செல்லாமல் திரும்பி விடலாமென்று கூட நினைத்தாள். ஆனால் இறுதியில் சென்றாள் அந்த மாலை முழுவதும் தஸ்தயேவ்ஸ்கி அவள்மீது அன்பும் மரியாதையும் பொழிந்தார்.
ஆனால் அந்தப் பெரும் சாதனையின் கொண்டாட்டம் முடிய துவங்கும் போது , அன்னாவுடன் கொண்டிருந்த அந்த இணைப்பு தான் தனது வாழ்க்கையின் ஒளியாக மாறிவிட்டதை அவர் திடீரென உணர்ந்தார்; இனி அவளை ஒருபோதும் பார்க்க முடியாமல் போகுமோ என்ற எண்ணம் அவரை ஆழமாக வேதனைப்படுத்தியது. அன்னாவுக்கும் அதேபோல், வழக்கமான உற்சாகம் மறைந்து, சொல்ல முடியாத ஒரு வெறுமை மனதை அழுத்த, அவள் சோகமும் ஆனந்தமற்றவளுமாக மாறினாள்.
கடைசியில் 20 வயதான அன்னாவும் 45 வயதான தஸ்தயேவ்ஸ்கிyஉம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். தோல்வியில் துவண்டு போயிருந்த தஸ்தயேவ்ஸ்கி அடுத்த 7 வருடங்களில் சூதாட்டம் என்ற பிடியில் இருந்து விலகி எழுத்தில் தன் கவனத்தை செலுத்தி வெற்றியாளராக மாறுகிறார். அவருடைய மரணம் வரை அவர்கள் காதல் வாழ்க்கை நான்கு குழந்தைகளுடன் ஜொலித்தது .

ஒரு எழுத்து என்பது வாசகர்களுக்கு தரும் உணர்வு அதுவே இந்த நாவலின் பலம் வெற்றி.. அதன் பின்னர் தஸ்தயேவ்ஸ்கி மற்றும் அன்னா இடையே உருவாகும் நெருங்கிய உறவையே இந்த நூல் மையமாகக் கொண்டு விரிகிறது. அவர்களுடைய உறவைப் பற்றித் தெரிந்துள்ள வரலாற்றுத் தகவல்களுக்கு மேலாக, அந்த பிணைப்பின் ஆழத்தையும் மனித உணர்வுகளையும் இந்நூல் மேலும் செறிவூட்டிக் காட்டுகிறது.எங்கும் மிகயும் இல்லை. எல்லாம் இயல்பாக ஒரு அருவி போல, ஒரு நீர்சாலில் அருகில் இருந்து பூக்கும் பூக்களை போல நமது இதயத்தையும் பூரிப்படைய செய்கிறார் எழுத்தாளர்.

அன்பு என்பதின் எல்லா பொருளும் அடங்கிய அன்பு என்பது சகிப்பது , மதிப்பது, புரிந்து கொள்வது எதையும் எதிர்பார்க்காதது, முக்கியமாக ஒரு மனிதனை வெற்றிக்கு இட்டு செல்வது ஒருவனின் இருள் கொண்ட உலகில் இருந்து நம்பிக்கையின் வாழ்க்கைக்கு முக்கியமாக பொறுப்பாக வாழ்க்கையை அணுகும் மந்திரம் என இக்காதல் கதை செல்கிறது. ஒரு இடத்தில் கூட உன்னை காதலிக்கிறேன் நேசிக்கிறேன் என ஒரு உரையாடல்கள் இல்லை என்றாலும் ஒரு இசை போல ஒரு இதமான தென்றல் போல ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் தழுவி சென்ற விவிலியத்தில் உள்ள கடவுளை போற்றி பாடும் சங்கீதம் போல கதை முடிகிறது.

பெரும்படவம் ஸ்ரீதரனின் இந்த நாவல் 1993ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவல், மலையாள வெளியீட்டு உலகில் சாதனைகளை முறியடித்தது. 2 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, 100க்கும் மேற்பட்ட பதிப்புகளை எட்டியது. வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது என்ற கருத்தை இது முற்றிலும் தவறானது என்று நிரூபித்தது.
தமிழ் மற்றும் மலையாள மொழியில்
“ஒரு சங்கீர்த்தனம் போல” என்ற தலைப்பில் வந்தது. அதன் பொருள் “ஒரு புனிதப் பாடல் போல” அல்லது “ஒரு கீதம் போன்றது” என்பதாகும்..
இந்த நாவல் ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, அரபி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பும் பல புத்தக விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது;
இந்த நாவல் ஒரு பண்பாட்டுச் சாகசமாக மாறியது. மலையாள வாசகர்களை ரஷ்ய இலக்கியத்துடனும், இணைத்ததும் அல்லாமல் அன்பு மற்றும் ஏற்றுக்கொள்ளல் போன்ற பாரம்பரிய கருப்பொருள்களுடனும் இணைத்த ஒரு முக்கியமான படைப்பாக இது விளங்கியது.
பெரும்படவம் ஸ்ரீதரன் (பிறப்பு: 12 பிப்ரவரி 1938) கேரளாவைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் கேரள சாகித்ய அக்காதமியின் முன்னாள் தலைவர். பல நாவல்கள் மற்றும் குறுநாவல்களை எழுதியுள்ளார்.
அவரது மிகவும் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான “ஒரு சங்கீர்த்தனம் போல” (1993) என்ற படைப்புக்காக, 1996ஆம் ஆண்டுக்கான வயலார் விருது பெற்றது.
அஷ்டபதி என்ற நாவலுக்காக கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்றுள்ளார்.
மேலும், 2006ஆம் ஆண்டு நாராயணம் என்ற நாவலுக்காக மலையாளத்தூர் விருது வழங்கப்பட்டது.

4 Jan 2026

உலக பெண் தெய்வங்களுடன் யேசுவின் தாய் மரியாள்


உலகிலுள்ள அனைத்து பெண் தெய்வங்களும் கூடினர்.  இம்முறை அமெரிக்கரான போப் லியோ கருத்தின் மேல்  பெரும் விவாதம் ஆரம்பித்து இருந்தனர்.  யார் இந்த போப் எனக் கேட்டாள்  கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன  பெண் தெய்வமான ஹிமிகோ (Himiko).  


 உலகின் பெரிய மதமான கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவான கத்தோலிக்கரின் தலைவர் என்றாள்,பேரரசியான ஜிங்கூ(Empress Jingū). 


அப்போ பல பிரிவுகள் இருக்கிறதா என வினவினாள்.   உலகின் மகா தாயும் பூமியின் கிரேக்க உருவகமாகவும் இருந்த கயா(Gaia) என்ற பெண் கடவுள்.


ஆம், ஆம்,,, அது பெரிய கதை. கிறிஸ்தவம் வளர்ந்தது  மரியாளின்   ஏழு கவலைகள் ஊடாகவும் தான் என்றாள்  திருமணத்தின்தாய்மைபிரசவத்தின் பாதுகாவலருமான   எகிப்தில் பெண் கடவுளான  ஐசிஸ் (Isis).

 மரியாவின் ஏழு துக்கங்கள்(Seven Sorrows of Mary) 

மகன் பிறப்பது அதுவும் கடவுள் மகனாக பிறப்பது பெருமை தானே . அதில்  என்ன ஏழு கவலைகள் இருக்கிறது என    மெக்சிக்கோவின்  பூமித்தாயாக இருப்பவளும் பாம்புகளைப் பட்டாடையாக அணிந்தவளுமான  கோட்லிகுவே (Coatlicue)  கேட்டாள்.

மரியாவின் ஏழு துக்கங்கள் (Seven Sorrows of Mary) பற்றி பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தனர்.



  • சிமியோனின் தீர்க்கதரிசனம் வழியாக  தன் மகனுக்கு வரும்  துயரத்தை முன்னதாகவே அறிந்த(லூக்கா 2:25–35)மரியாள், தான் அத்தகைய சூழலில் ஒரு தாய் ஆகவே அச்சம் கொண்டாள்.  மகன் பிறக்கபோவதை, மகிழ்ச்சிக்கு பதிலாக பல அச்சங்களுடன் அணுக வேண்டி வந்த தாய்,  ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளின் கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்ற நிலையில் ஏற்று கொள்வதை தவிற அவளுக்கு வழியேதும் இருக்கவில்லை. பிற்பாடு ஜோசப் அவளை  ஏற்றுக்கொண்டு கருணையாக நடத்தப்பட்டாலும் எத்தனை பழி பேச்சுக்கு உள்ளானாள் என நினைத்து பொறுமிய மரியாவின் கையை பற்றிக் கொண்டு ஆறுதல் பகிர்ந்து கொண்டு நின்றனர்  இந்திய பெண் தெய்வங்களான  துர்கா , சரஸ்வதி , லக்‌ஷ்மி. 
  • குழந்தை இயேசுவை ஹேரோதேஸிடம் இருந்து காப்பாற்ற  மரியாள் யோசேப்புடன் எகிப்துக்கு தஞ்சம் அடைந்ததை (மத்தேயு 2:13–15) நினைவுப்படுத்தினாள்  யூத மதத்தின் ஒரே கடவுளான யஹ்வே (Yahweh) வின் துணைவியான  அஷேரா (Asherah).   


  • தனது பதின்மவயது மகனை ஆலயத்தில் மூன்று நாட்கள்   இழந்து  துயருற்ற  (லூக்கா 2:41–50) அந்நாளை நினைத்து  துக்கத்தில்   விம்மின மரியாவை ஆறுதல்படுத்தினாள்   வானம் உடைந்தபோது அதை மீண்டும் சரிசெய்தவளாக சொல்லப்படும் சீனாவின் பெண் தெய்வமான நூவா (Nüwa) .  
  •  சிலுவையைச் சுமந்தபடி  வேதனையும் அவமானங்களாலும் நிறைந்தபடி தன் மகன் சென்றபோது மரியாள்  சந்தித்ததை(லூக்கா 23:27–31) நினைத்த போது  துக்கத்தை அடக்க இயலவில்லை. கவலையால் துவண்ட மரியாவை கரம் பற்றி அணைத்து ஆறுதல் சொல்லாள் சீனாவின் கருணையின் உருவமான  குவான்யின்(Guanyin). 

 

  • துயரிலும்  கொடும் துயரான  தன் மகன் சிலுவையில் துன்பப்பட்டு மரணமடைந்ததை காணும் துயரத்தை அனுபவித்தவள்(யோவான் 19:25–30)மரியாள் என்றாள்  சித்தார்த்த கௌதமர் புத்தமதத்தின் “அன்னை” யான பெண் புத்த பிக்குணி சமூகத்தின் நிறுவனர்  பிரஜாபதி கௌதமி. 

 

  • சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட தனது மகன் இயேசுவின் உடலை மரியாள் தன் கரங்களில் பெற்று தன் கரங்களில் தாங்கிக்கொண்டதை(லூக்கா 23:50–54)  நினைத்து கண் கலங்கிய போது மாதாவின் கைகளை பரிவுடன் பற்றி கொண்டாள் சக்தியின் உக்கரத்தில் தனது  எதிராளிகளிடம்  ஆயுதங்களை பாவிக்க தெரிந்த இந்தியாவின் வலிமையான பெண் தெய்வமான துர்க்கை.

 

  • எல்லா துக்கங்களுக்கும் அதி மூர்த்தமாக தன் மகனின் உடல் கல்லறையில் வைக்கப்பட்டதை மரியாள் மனம் துடித்தபடி கண்டாள். தனது மகன் சிலுவையில் அறைந்து படுகொலை செய்யப்பட்ட  அன்று மரியாள் உடைந்தே போயிருந்தார். தனது மகனை   மதவாதிகள் பல நாள் தேடிப் பிடித்து அரசிடம் கொடுத்து விட்டனர் என அறிந்தது முதல் அவள் உள்ளம் உறைந்து போயிருந்தது.  

யேசுவை அன்று மாலையே விசாரணை,  அடுத்த நாள் சிலுவையில் அறைய கொண்டு போயினர்.  மகன் உடன் இருந்த நண்பர்கள் எல்லோரும் ஓடிப்போயினர் என அறிந்து இருந்தாள். தன் மகன் இறந்த பின் மகனின் பெயரால் ஒரு இயக்கம் துவங்கிய அன்று தானும் சில பெண்களும் அங்கிருந்தோம். பின்பு ஒரு பணிக்கும் தங்களை அழைப்பது இல்லை. என்பதை மட்டுமல்ல  அப்படியே பெண்கள் அனைவரையும் ஓரம்கட்டி விட்டிருந்தனர்  என்பதையும்  நினைத்து பார்த்தாள்  மரியாள்

 

ஆனால் இன்றைய பரப்புரை : உலகை இரட்சிக்க மாதாவின் பங்கு இல்லையாம், மாதாவிடம்  இனி பிரார்த்திக்க வேண்டாமாம் வேண்டுமென்றால் மாதாவின் வழி காட்டுதலை மட்டும் நாடிக்கொள்ளலாமாம். மாதா வெறும் தாய்,  கடவுள் யேசுவின் தாய் மட்டும் தானாம். யேசுவின் தாய் என்பதால் யேசுவின் நண்பர்கள் சீடர்களின் தாயும் ஆகிறார்.

 


இதை யார் சொன்னது, ஆண்கள் தானே?   அவர்கள் அப்படி தான் சொல்வார்கள் என்றாள்    மெசப்பொட்டேமியா நாகரிகத்தின்(கிமு5- 3ஆம் நூற்றாண்டு) சுமேர் மக்களின்   சமூக நீதி மற்றும் தீர்க்கதரிசனத்தின் தெய்வமான    நன்ஷே (Nanshe).

 

பல நூற்றாண்டுகளாக ஆண் குருமார்கள், ஆசான்கள் சொல்லி வந்த கதைகளை கேட்டு வந்த பெண்கள்  எப்படி பொறுமையாக இருக்கின்றனர். என கொந்தளித்துக் கொண்டு இருந்தனர் பெண் தெய்வங்கள்.  பெண்கள் எப்படி சிந்திக்க வேண்டும், எப்படிச்  மனதைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பது யாரோ ஒரு ஆணாக இருப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.  ஆயிரக்கணக்கான தத்துவ நூல்கள், சொற்கள், மொழி, அனைத்தும்  ஆண்களிடம் மனத்திலிருந்து இருந்து வந்தவை அதனால் மறுபேச்சு கூடாது என்று  பெண்கள் வாய்க்கு பூட்டு போட்டு விடுகின்றனர். 

 

இதை கேட்டுக் கொண்டு இருந்தமேற்கு ஆப்பிரிக்கா யொரூபா மதத்தின்  ஒரே பெண் தெய்வமான  ஓஷூனே;  அறிவின் மூலவும் வழிகாட்டிகளாகவும் தனித்த இடம் பிடித்துள்ள நாம் எங்கு  நிற்கிறோம் என்று பாருங்கள் என்று ஆக்கோரஷமாக கூறினாள்!; 


இந்தக் குழப்பத்தின் மத்தியில் தொடர்ந்து அலைந்துஇச்சிதைவில் ஏதாவது புதிதாகப் பெற முடியும் என்று நினைக்கிறீர்களா என்று இந்தியாவில் இருந்து வந்த அறிவின் உருவகம் ஆன சரஸ்வதி தேவியர் ஒரு எதிர் கேள்வி கேட்டாள்  

 

நாம் தேவிகள் நீண்ட காலமாகக் காத்திருக்கிறோம்.  நாம் தான் எல்லா கடவுள் உருவாகும்  நேரத்திற்கு முன்னரே இங்கே இருந்தோம் என்றாள். கடலின் தெய்வமான  மாசு(Mazu).   

 

பண்டைய மரபுகளில் படி உண்மையின் மூலம் அல்லது ஆரம்பம்   அது நடனம்.  தேவி தான் நடனம், நடனமே தேவி  என்றாள் தாமரையில் வீற்று இருக்கும் லக்‌ஷ்மி. 

பெண்கள் இன்று அனுபவிக்கும் புறக்கணிப்பு, சுரண்டல், புறம்தள்ளப்படுதல் என்ற இந்த இருளான இடமே நமது தொடக்கம்.  ஏனெனில் இருள் என்பது தேவிகளின்  உறவிடம் என எண்ணுகின்றனர்ஆனால்  நாம் ஆழங்களில் வாழ்கிறோம், அறியப்படாது  வாழ்கிறோம் என்றாள்ஆதிகால குழப்பத்தின் பெண் தெய்வம் ஆன நின்காசி (Ninkasi) . 

இந்த இருளில் இருந்து நம்மை விடுவித்து நாம் நடனமாடலாம் என்றாள் ஆப்பிரிக்க தேவிகளில் ஒருத்தி ஓஷூன் (Oshun) ........நாம் ஏன் அந்த இருளில் தேவியாக மாறக்கூடாது?  ஏன் அந்த தெய்வீகத்தைக் கைப்பற்றக்கூடாது என்றாள் . 

அது ஒரு உணர்ச்சியான அனுபவம், ஒரு தத்துவம் அல்லஒரு கருத்து அல்ல, அது உடலின் உணர்வுதெய்வீக இருப்பு, தேவிகள்  உடலின் உணர்வாகவே இருக்கிறார்கள். என்றாள். கொரியாவின்    கருணையின் தேவியாக குவான்-ஈஉம் (Gwan-eum)

இடைவிடாத தேடலின் அடையாளமாக ஒரு தீப்பந்தத்துடன் காணப்படும் டெமீட்டர் ; பெண்களின்  தெய்வீகத்தைக் கைப்பற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது.  தெய்வத்தின் மூலத்தைதெய்வீக பிறப்பின் பெண் தன்மையையும் மீண்டும் அறிய வேண்டிய நேரம். அதனால் நான் உனக்கு சொல்வது எந்த கதவையும் தட்டாமல், நாம் தெய்வமாகவும், புனிதமாகவும், சுதந்திரமாகவும், சக்தியுடையவராகவும் மாறுவோம் என்றாள்.  

எமது பலனை அனுவவித்து விட்டு எம்  சமுதாயத்தால் தள்ளப்பட்ட ஒருவளாக நான் இங்கு நிற்கிறேன் என்றாள் யேசுவின் தாய் மரியா... ஆனால் இதனிடையில் மரியாவின் நினைவு 16 ஆம் நூற்றாண்டு  மிஷனறிகள் காலம் நோக்கி நகர்ந்தது.  

மரியாவை தெய்வீக பெண்ணுருவாக  உருவாக்கின  மிஷனரிகள்: 

தென்னிந்திய பண்பாட்டு சூழலில் தெய்வமாக காணப்படும் தாய் மரியாள்

ரோமன் கத்தோலிக்க மதத்தில் தாய் மரியாளை தெய்வமாகக் கருதுவது பேகன் மதங்களில் (pagan origin) இருந்து வந்த  கருத்தாக்கமாக பார்க்கப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பேகன் வழிபாட்டு கூறுகளை நேரடியாக ஏற்காத கொள்கைகளும் விதிகளும் இருந்தன. இருப்பினும்கிறித்துவம் உலகெங்கும் பரவியபோது, பல்வேறு சமூக, பண்பாட்டு கருத்தியல்  திருச்சபையின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தன. அதற்கேற்ப  வெவ்வேறு காலங்களில் புதிய பண்பாடுகளுடன் ஒன்றிணைவதற்காக மிஷனரிகள் பல்வேறு முறைகள் பின்பற்றினர்.

 

தாய் மரியாள் யேசுவின் தாய் என ம்ட்டுமே கிறித்தவத்தின் பெரும்பாலான பிரிவுகளிலும் அறியப்படுகிறார். ஆனால் Eastern, Oriental Orthodox, Anglican, Lutheran, மற்றும் Roman Catholic திருச்சபைகள் மட்டுமே அவளை “தெய்வத்தின் தாய்” (Theotokos) என அங்கீகரித்திருந்தன. பைபிளிள் தாய் மரியாளைப் பற்றிச் சிறிதளவே குறிப்பிடினாலும்உலகம் முழுவதும் மக்கள் அவளை யேசுவின் தாயாக நேசத்துடன்பக்தியுடன் வணங்குகிறார்கள். குறிப்பாக கத்தோலிக்கர்கள் அவளை அசல் பாவமின்றி பிறந்த ஒரே பெண் என்றும்யேசுவின் பிறப்பிற்குப் பிறகும் கன்னியாகவே இருந்தார் என்றும் நம்புகிறார்கள். தெய்வத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான மத்தியஸ்தராக அவளின் பங்கு மரியாளை அனைத்து பரிசுத்தர்களையும் மீறிய இடத்தில் நிறுத்தியது. இருப்பினும் கிறித்தவத்தின் தொடக்க காலத்திலிருந்தே அவளுக்கு உயர்ந்த நிலை அளிக்கப்பட்டிருந்தாலும், அது தெய்வத்தோடு சமமான நிலை அல்ல.

 ஆண்மையை பிரதிபலிகும் கிறித்துவம்

 தெய்வத்தை ஆண் வடிவில் காட்சிப்படுத்துகிற மதம் தான் கிறித்துவம்.கிறிஸ்தவம் தெய்வத்திற்குப் கொடுக்கப்பட்டுள்ள பண்புகள் ஆண்மையை பிரதிபலிக்கின்றன. திரித்துவம் (Father, Son, Holy Spirit) என்ற மறைபொருள் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.  

 

அந்த தந்தை தான் தனது மகளைக் அல்லமகனை உலகிற்குக் கொடுக்கிறார்அந்த மகன் மனிதனாகப் பிறக்கும் போது ஆணாகவே பிறக்கிறார், ஆணாக பிறந்தவனை கடவுள் என அழைக்கின்றனர்.

இதனால், தாய் மரியாள் கிறித்துவத்தில் பெண் தெய்வமாகக் கருதப்படவில்லை,  ஆனால் மதத்தையும் பல தெய்வ வழிபாட்டை கொண்ட இந்துக்களின் இந்தியா போன்ற இடங்களில், மரியாளின் பெண் தெய்வத்தின் உருவம் கிறிஸ்தவம் வேகமாக பரவிய வரலாறுடனும் இணைந்துள்ளது.


இந்தியாவில் கிறித்தவமும் மரியாள் வழிபாடும்

இந்தியாவில்   கிறித்தவ மக்களில் பெரும்பான்மையினரும் ரோமன் கத்தோலிக்கர்களே. இவர்கள் மூன்று பிரிவுகளாக  Syro-Malabar, Syro-Malankara, மற்றும் Latin (Roman Catholic) எனப் பிரிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40% கத்தோலிக்கர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வசித்து வருகின்றனர்.

போர்த்துகீசிய மிஷனரிகள் இந்தியாவிற்கு வந்தபோது, அவர்கள் பெரும்பாலும் கடற்கரையோர மக்களை மதமாற்றம் செய்தனர். அவர்களின் பழைய மத வழிபாடுகளை முழுவதும் அழிக்க முடியாது என்பதை உணர்ந்து, அவர்கள் வழிபாடுகளை புதிய கிறித்தவத்தின் கூறுகளாக இணைத்தனர்.  மிஷனரிகள்,  மக்களின் வழிபாட்டு மரபுகளை மாற்றாமல், அவற்றின் வழியே தாய் மரியாளை உள்ளூர் மத உளவியலுடன் இணைத்தனர்.

வேளாங்கண்ணி: புராணமும் பண்பாட்டும் இணைந்த தெய்வம்

வேளாங்கண்ணி” என்ற சொல் தமிழில் “வெள்ளை கன்னி” (White Virgin) என்று பொருள். இங்கு போர்த்துகீசிய மிஷனரிகள் “ஆரோக்கிய மாதா” (Healing Mary) என்ற பெயரில் ஆலயத்தை அமைத்தனர்.

வரலாறு கூறுவதாவது, கடலில் புயலால் சிக்கிய மிஷனரிகள் தாய் மரியாளின் உதவியை வேண்டினர்; அதிசயமாக அவர்கள் கரையோரம் உயிருடன் சேர்ந்தனர். நன்றிக்காக அவர்கள் சிறிய ஆலயம் கட்டினர். இத்தகைய கதை வடிவங்கள், தாய் மரியாளை உள்ளூர் தெய்வங்களோடு இணைக்க மிஷனரிகள் எடுத்த பண்பாட்டுத் தந்திரம் அல்லது மதத்தை பரப்பும் வழி முறையாகும்.

இந்து மதத்தில் “சுயம்பு தெய்வம்” என்ற கருத்து போலவே, மரியாள் வெளிப்பட்டதாகக் கூறும் கதைகள் உருவாக்கப்பட்டன. பால், தண்ணீர், தாய் மற்றும் குழந்தை போன்ற சின்னங்கள் இந்து தெய்வக் கதைகளோடு ஒற்றுமை பெற்றன. இதனால் வெள்ளை / தூய்மை என்ற எதிர்மறை சின்னங்கள் (white/red, pure/impure) மூலம் மரியாளின் உயர்வை நிறுவினர்.

மரியம்மனும் மரியாளும்: தெய்வத்தின் ஒருமை

மாரியம்மன் மற்றும் மரியாள் ஆகிய இருவருக்குமான ஒற்றுமை இயல்பானது அல்ல; அது பண்பாட்டு  தெய்வத்தை ஒரு வெள்ளை, கருணையுள்ள உலகமாதா உருவாக மாற்றும் திட்டமிட்ட முயற்சி ஆகும்மரியாள் நோய்களை குணமாக்கும் தாயாகமாரியம்மன் கோபமடைந்தால் நோய் கொடுக்கும் தெய்வமாகஇதன் மூலம் கிறித்தவ மதத்தின் கருத்தியல் ஆதிக்கம் வெளிப்படுத்தியது.


மிஷனரிகளின் திருவிழாக்களும் பண்பாட்டுச் சேர்க்கையும்

போர்த்துகீசிய மிஷனரிகள் இந்துமதத் திருவிழாக்களின் வடிவை கடைபிடித்தனர். வேளாங்கண்ணி போன்ற இடங்களில் அவர்கள் “தேர்திருவிழா” (Car Festival / Tēr Bavaṉi) நடத்தியனர். இது இந்துக் கோயில்களின் தேரோட்டங்களின் மாதிரி அமைந்தது. இந்த முறையில்பக்தியும் வழிபாட்டு தூய்மையும் கொண்ட இந்திய மதப் பின்னணியில், கிறித்தவம் இயல்பாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறும் பரவியது.

 

தென்னிந்தியாவில்  சக்தியாக மரியாள் 

மரியாளை சக்தியாக (Śakti) காணும் வழிபாடுதீய ஆவிகளைத் துரத்தும் சடங்குகள் ஆகியவைகத்தோலிக்க மரபில் தடைசெய்யப்பட்டிருந்தாலும்இன்று கூட தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி மாதா மற்றும் கடலோர கோயில்களில் பகுதிகளில் காணப்படுகிறது. கயிறு விற்பது சுர்ருபங்கள், புனித எண்ணை தண்ணீர் என்ற பெயரில் வியாபரமும் பக்தியும் கலந்து செயல்படுகிறது. 

ஒன்றிணைவும் பண்பாட்டு சகித்தன்மையும்

இரண்டாம் வத்திக்கான் பேரவை (Second Vatican Council) பேசுவதற்கு முன்பேதென்னிந்தியாவின் சமூக-அரசியல் சூழல், மதங்களின் இணைநிலை வாழ்வை ஏற்றுக்கொள்வதைத் தொடங்கியது.

முதலில் திருச்சபை வெளிநாட்டு வழிபாடுகளை நிராகரித்திருந்தாலும்,  பின்னர் உள்நாட்டு “மரபை” (inculturation), “உட்கொள்ளுவது” (accommodation) ஆகிய கருத்துகளை ஏற்றுக்கொண்டது.  இதனால்தாய் மரியாள் “தெய்வமாகவும்”குடும்ப தெய்வமாகவும்தனிப்பட்ட நம்பிக்கைகளில் இணைந்து வாழ்கிறதை காணலாம். 

தற்போதைய போப்பின் அழுத்தமான யேசுவின் தாயை பற்றிய கருத்தாக்கம்  

  1. கடவுளின் கட்டளையை  அனுசரித்த மிகவும் அனுசரணையுள்ள ஒரு பெண்மையாக
  2. கடவுளின் கட்டளைக்கு கேள்வி கேட்காத அடிமையாக மட்டுமே பிரதினித்துவப் படுத்துகின்றனர்  
கடவுளின் தாயாக பார்த்த இடத்தில் இருந்து யேசுவின் வெறும் தாயாக யேசுவின் தாய் என்பதால் யேசுவை நம்புகிறவர்களின் தாயாக மட்டுமே பார்க்க பரிந்துரைக்கின்றனர்.  அதீத சக்தியின் உருவகமான பெண் தெய்வத்தை வெறும் தாய் என்று தரம் தாழ்த்துவது  கிறிஸ்தவ ஆண்கள் மன நிலையில் என்ன மாற்றத்தை கொண்டு வரும் என்பதையே நான் உற்று பார்க்கிறேன்.

சட்டம், ஒழுங்கு, நீதி ஆகியவற்றின் குறியீட்டு  தெய்வமான தெமிஸ் (Themis) கையில்  வாளையும் “உண்மையின் இறகையும்” (Feather of Truth) சூடினவள் எல்லாம் கவனித்துக் கொண்டு நின்றிருந்தாள்.