13 Apr 2020

யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்! புத்தக விமர்சனம்


சமீபத்தில் ஆர்வத்துடன் வாங்கின புத்தகம் இது. சில புத்தகங்கள் புதிய தகவலை புதிய அறிவத் தர உதவும். ஆனால் இப்புத்தகம் வாசித்த பின்பு புத்தக உள்ளடக்கத்தை  விட எதனால் இப்புத்த்கம் எழுதியிருக்க கூடும் . இதன் பின்புலன் பற்றி தான் ஆராய தோன்றியது.

புத்தக எழுதியவர் எஸ் செண்பகப்பெருமாள். ஓய்வு பெற்ற ஆசிரியர்...  சமூகநல்லிணக்கத்தை பேணும் விதம் பணியாற்றுவதாகவும், இந்திய ஆன்மீகத்தை குறித்து பேசி வருவதாகவும், இறையியல் கல்லூரியில் பைபிள் வகுப்பு எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பதிப்பாசிரியர் கிழக்குப்பதிப்பகம். வாழ்த்துரை வழங்கியுள்ளவர் அருட் திரு ஜோயேல் செல்லத்துரை, தனியார்ச் சபைபிஷப். வாழ்த்துரை எழுதிய மதத்தலைப்வரும் எழுத்தாளரும் சேர்ந்து விவிலியம் கற்றுள்ளார்கள். ஆய்வு நூல் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த புத்தகத்தின் உள்ளடக்கம். கிறிஸ்தவத்தின் வரலாறு, கிறிஸ்தவம் உருவான இஸ்ராயேல் நாட்டின் அரசியல், யூதர்கள் வரலாறு, ஆட்சி செய்த மன்னர்கள், அவர்களின் வாழ்வியல், கத்தோலிக்கம் மற்றும் ப்ரொட்டஸ்டன்டு பைபிளில் உள்ள வேறுபாடு, கிறிஸ்துவின் வளர்ப்பு, மரணம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.


முதலாம் நூற்றாண்டு காலத்தில் யூதக் கிறிஸ்தவம், பவுல் கிறுஸ்தவம், குணாஸ்டிசிச என மூன்று பிரிவுகள் இருந்தது. பின்பு இது கத்தோலிக்கம் என்ற ஏகோபித்த சபையின் கீழ் செயல்பட்டது. இதற்குள் 20 க்கு மேற்பட்ட சுயாட்சி சபைகள் உள்ளன்.
1517 ல் மார்ட்டின் லூதர் என்ற பாதிரியாரின் மாறுபட்ட கொள்கை புரோட்டஸ்டண்ட் என்று புது கொள்கை கொண்ட கிறிஸ்தவம் வளர கத்தோலிக்கம் புரஸ்டண்ட என இரண்டாயிற்று. இதில் 19 பிரிவுகள் உள்ளன். தமிழகத்தில் சி. எஸ்.ஐ பிரதான மதப்பிரிவாகும்.


பெந்தேகோஸ்து மதத்தில் மட்டும் 80 க்கு மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன்.
இந்துக்களுக்கு வேதாந்தம் என்பது போல கிறிஸ்தவ் எல்லா பிரிவு சபைகளுக்கும் பைபிள் எனும் ஒரே நூலை அடிப்படையாக கொண்டது.
பழைய ஏற்பாட்டு நூல்கள் எபிரேய் மொழியில் (ஹீப்ரூ) எழுதப்பட்டு , அலெக்சாண்டருக்கு பின் கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. புதிய ஏற்பாட்டு நூல் ஹீப்ரு  மற்றும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. ரோமானியர்கள் ஆட்சியில் லத்தீன் மொழிக்கு மொழிபெயர்க்கப்படுகின்றன.1324 ல் இங்கிலாந்தை சேர்ந்த ஜான்வைக்க்ளிப் ல்த்தின் மொழ்ஹியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயற்க்கின்றார்.


போகப்போக கிறிஸ்து ஜாதி வெறியர், பெண்களுக்கு அதிகாரம் கொடுக்க வில்லை, கிறிஸ்து யூதர்களை மட்டுமே நல் வழிப்படுத்தினார். பவுல் என்ற ரோம் யூதர் தான் கிறிஸ்தவத்தை யூத மக்களில் இருந்தும் புறம் மக்களுக்கு ( யூத மக்களல்லாதவர்க்கு ) கொண்டு சேர்த்தார் இதில் கிறிஸ்துவின் நேரடி சீடர்களுக்கும் பவுலுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.

கடைசி பகுதியில் அல்லேலூயா கிறிஸ்தவர்களை பற்றி குறிப்பிட்டுள்ளார். அல்லேலூயா கிறிஸ்தவம் கிறிஸ்தவத்தின் பாணி அல்ல என்பதும் கிறிஸ்து சிலுவையில் கொல்லப்பட்ட பின்பே பரிசுத்த ஆவி என்ற கருத்தாக்கம் உருவாகியதாக கூறுகிறார்.



பவுலுக்கும், பேருதுவிற்கும் இருந்த கருத்து வேற்றிமை விவிலியத்தில் அவதானிக்கலாம். முதல் நான்கு சுவிசேஷங்கள் கிறிஸ்துவின் அறிவுரை கிறிஸ்து கூறின கதைகள் உவமைகள் அடங்கினது. அடுத்த சில புத்தகங்கள் கிறிஸ்துவின் இறப்பிற்கு பின்பு உலகம் முழுக்க சிதறி ஓடின கிறிஸ்துவின் நேரடி சீடர்களால், மற்றும் பவுலால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது.

புத்தக ஆசிரியர் சொல்ல வந்த கருத்தில் தெளிவு இல்லை. இவர் பவுல் பேதுரு இருவரின் முரண்கள் பற்றி எழுதினாரா அதிலும் தெளிவில்லை. புதிய ஏற்பாடு  விவிலிய நாயகன் யேசுவை பற்றியும் பெரிய மதிப்பில்லை.
சுயசார்பான சபை நடத்தும் பிஷப்பின் ஆதரவுடன் எழுதியதால் கட்டமைப்புக்குள் இருக்கும் கத்தோலிக்க மற்றும்  புரொட்டஸ்டன்ற சபைகளை எதிர்க்க வேண்டும். 

யகோவா சாட்சிகள் என்ற இன்னொரு கும்பல் உண்டு. அவர்கள் யேசுவையே மறுதலித்து ய்கோவா தான்  கடவுள் ஒருவரே தேவன் என்பார்கள். அப்படியெனில் அதையாவது ஊன்றி எழுதி இருக்க வேண்டும்.  ஒருவித சிறுபிள்ளைத்தன குறிப்புகளை நிகழ்வுகளை வைத்து எழுதியுள்ளார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு இணங்க, கிறிஸ்து பெண் சீடர்களை நிறுவில்லை என்கிறார். புது ஏற்பாடு விவிலியத்தை வாசித்தால் கிறிஸ்விற்கு பல பெண் சீடர்கள் இருந்ததை அறியலாம். வேசி என்ற பெண்ணிடம் பேசுவது ஒரு பெண்ணை யூத சட்டத்தில் தண்டிக்கும்   தயார் ஆன போது உங்களில் தவறு இல்லாதவன் முதல் கல் எறியுங்கள் என தடை செய்வார். மேரி, மார்த்தாவை சந்திக்க சென்றிருப்பார். மத்லேன் மரியாள் கூட உருகி கேட்டிருப்பார் நீங்கள் போய் விட்டால் நான் என்ன செய்வது. இதை எல்லாம் இந்த புத்தக ஆசிரியர் மறந்து விட்டார். கிறிஸ்து உயிர்த்த போது அவர் கல்லறையில் போய் அவரை தேடுவதும் அவர் இல்லை என கண்டடைவதும் மத்லேனா மரியாள் என்ற பெண் மணி தான். இதை கேள்வி எழுப்பியிருப்பார். எப்படி ஒரு வேசிய பெண்மணிக்கு கிறிஸ்துவின் உயிர்ப்பை தெரிவிக்கலாம் என்று.

அட்டையை பார்த்து, பதிப்பகம் நோக்கி இது போன்ற புத்தகங்களை வாங்கக்கூடாது என்ற புரிதல் இருந்திருக்க வேண்டும். 

ஒரு மதத்தை பற்றி எழுதுகையில் ஒரு ஆன்மீகப்பார்வை இல்லாது விதண்டாவாதம் பேசும் புத்தகம்.
கடவுள் என்ற கதாப்பாத்திரங்களை அவதானிக்குகையில் அதில் சில உயர்ந்த உருவகம் நோக்கம் இருக்க வேண்டும். எதுவும் அற்று ஏதோ சில தருவுகளை வைத்து பவுலின் கிறிஸ்தவம் என்ற தலைப்பில்  கருத்தாக்கம் அற்ற புத்தகம்.

12 Apr 2020

Trance phobia

மானியா, போஃபியா இந்த இரு விடயங்களுமே மிகவும் ஆபத்தானது.

சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் 'ட்ரான்ஸ்'. இந்த படத்தை முன்நிறுத்தி so called  தமிழக முற்போக்கு சமூக செயல்பாட்டாளர்கள் இப்படம் கிறிஸ்தவத்தை / சிறுபான்மையினரை தாக்குகிறது கண்டிக்க  வேண்டும் என்ற கூற்றுடன் கிளம்பியுள்ளார்கள்.

மிஷ்கின் சைக்கோ திரைப்படத்தில் ஒரு கன்யாஸ்தீரியை அவமதித்து ஒரு கதாப்பாத்திரம் வடிவமைத்திருந்தனர். சூப்பர் டீலக்ஸில் பொறுப்பற்ற ஒரு அல்லேலூய்யா குடும்பத்தலைவன் கதாப்பாத்திரம் இருந்தது.. அப்போது சிறுபான்மை பரிவு எங்கு போனது?.

பைபிளை வாசிக்கும் கிறிஸ்துவின் போதனைகளை நம்பும்  கிறிஸ்தவர்களுக்கு தெரியும் அல்லேலூய்யா கூட்டங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும்  தொடர்பே இல்லை என்று.

 கிறிஸ்து பணம் வாங்கி கொண்டு, எங்கும் யாருக்கும் அற்புதங்கள் நிகழ்த்தவுமில்லை, ஜெபிக்கிறேன் என்ற பெயரில்  கதறவோ, ஆடவோ  இல்லை. அவருடைய பல அறிவுரைகள் அவர் பின்பற்றிய யூதமதத்தை விமர்சிப்பதாகவே இருந்தது.
கிறிஸ்து விமர்சித்தது அன்றைய மத குருக்களை, அவர்கள் மக்கள் மேல் சுமத்திய  ஆசாரங்களை தான்.

அவர் ஆலயத்தில் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்தவர்களை தன்னுடைய இடுப்பில்  கட்டியிருந்த கச்சையால் அடித்து விரட்டியிருப்பார். முதல் போராளி கிறிஸ்து தான். மனித நேயமற்ற யூத சட்டங்களை மறுதலித்தவர்.

 Davinci code, Temptation of Jesu போன்ற படங்களை எடுத்தவர்கள் கிறிஸ்தவ நாடுகளில்  உள்ள கிறிஸ்வர்கள் தான். அங்கு யாரும் திரைப்படம் கிறிஸ்துவை அவமதித்தது என கொடிபிடிக்கவில்லை.  கிறிஸ்தவம் ஒவ்வொரு காலையளவிலும் சுயபரிசோதனை செய்து பழமையை விலக்கி புதுமைக்குள் கடக்கும் முற்போக்கு வாழ்க்கை முறை.

ட்ரான்ஸ் படத்தை  இயக்கியிருப்பது இஸ்லாமியர் நடித்திருப்பவர் இஸ்லாமியர், படத்தின் கதையை எழுதியவர் ஒரு கிறிஸ்தவர்.

இதே போன்று ஒரு இஸ்லாத்தை விமர்சிக்கும்  படத்தை கிறிஸ்தவரோ அல்லது இந்துவோ எடுத்திருந்தால் வெளியிட இயன்றிருக்குமா?ஒரு இஸ்லாமியரே எடுக்க இயலுமா? அவ்வகையில் கிறிஸ்தவத்திற்குள் இருக்கும் விமர்சனத்தை ஏற்று கொள்ளும் பாங்கை  பாராட்ட
 வேண்டியுள்ளது.

ட்ரான்ஸ்ப்படம் கிறிஸ்தவத்திலுள்ள ஒருவகை பிரார்த்தனை முறையை மற்றும் மக்களிடம்  இருந்து காணிக்கை என்ற பெயரில் நடத்தும் கொள்ளையை விமர்சிக்கிறது.


30 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து புகுந்த அல்லேலூயா கிறிஸ்தவத்தை யாரும் கேள்வி கேட்க இயலாது. காரணம் அதன் வழிபாட்டு முறை. முதல் நிலையிலே சிந்தனை சக்தியை மழுக்கி ஒரு  சட்டத்திற்குள் அடக்கி விடுவார்கள். அதற்கு அவர்கள் பைபிளிலுள்ள சில பகுதிகளை மட்டுமே பயண்படுத்துவார்கள். புது பெயர் கொடுப்பார்கள், தேவனிடம் பேச புது  மொழி கற்றுக்கொடுப்பார்கள். பைபிளிலுள்ள பல புத்தகங்களை வாசிக்கவே மாட்டார்கள். அவர்கள் மனிதர்கள்  பூமியில் வாழாது  பரலோக வாழ்ககைக்கு தயாரப்படுத்தி கொண்டு இருக்கும் அடிப்படைவாத நம்பிக்கை கொண்டோர்.

பல பல கட்டுப்பாடுகளை உடல் , உடை , சிந்தனை, கட்டுக்கதைகள் புகுத்தி, மனிதனின் கேள்வி கேட்கும் சுய சிந்தனையை மட்டுப்படுத்தி மனிதர்களை முடமாக்கி விடுவார்கள்.

இத் திரைப்படம் ஊடாக கேள்வி எழுப்புகிறான் ஒரு கலைஞன். மக்களை சிந்திக்க தூண்டுகிறான் கலைஞன். கலையில் பங்கும் அது தானே.

கிறிஸ்தவர்கள், இது போன்ற விமர்சன படங்களை எங்க மதத்தை குறைத்து எடுத்தாய் என வழக்காட மாட்டார்கள்.  கிறிஸ்தவர்கள் கல்வியறிவு சமூகத்துடனுள்ள உறவாடல் குறுகிய சிந்தனைக்குள் தங்களை நிறுத்தாது விசாலமாக சிந்திக்க தகுந்தவர்கள்.

அல்லேலூய்யா கும்பல் கிறிஸ்தவத்தை, மனிதத்தை வளர்க்கவில்லை மனிதனின் நோய் நொடிகள், மனச் சோர்வை வைத்து பணம் திரட்டும் கும்பல். இந்த கும்பலை பற்றி அரசிற்கும் எந்த அக்கறையும் இல்லை. அரசும் மதமாற்றம் என்ற குற்றச்சாட்டை கூறி   கிறிஸ்தவர்களை  ஒதுக்கவே பார்க்கிறது.

 பணம் திரட்டும் அல்லேலூய்யா  கும்பலுடன் சேர்ந்து பெரும் வியாபார உறவு தான் பேணுகிறது.  அல்லேலூயா கிறிஸ்தவத்தால் கிறிஸ்தவர்கள் மத்தியிலுள்ள rational thinking, logical thoughts மழுங்கி வருகிறது.
கிறிஸ்தவ வாழ்க்கையின் தன்மையே மாறி வருகிறது. பல அல்லேலூய்யா கும்பல் கிறிஸ்த குடும்பத்தின் அடிப்படை மகிழ்ச்சியை உடைத்து வருகிறது.

பல பெண்கள் குடும்பத்தில் கணவர் குழந்தை குட்டியுடன் இருப்பதை விட, அல்லேலூய்யா கூட்டத்தில் பங்கு பெற்று கணவரையே என் 'சகோதரனாக' பாவித்து பரிசுத்தமாக வாழ்கிறேன் என்று கூறிக்கொண்டு குடும்பங்களின் வேராக இருக்க வேண்டிய பெண்கள் குடும்ப அடித்தளத்தையே உடைத்து கொண்டு இருக்கின்றனர்

கிறிஸ்தவ வீட்டு குழந்தைகள் கலை , இசை கற்பதை விடுத்து 18 மணி நேரவும் அல்லோலூயா பாடல்கள் , அல்லேலூயா நாடகங்கள் , அல்லேலூயா உரைகளை  கேட்டு கொண்டு இருக்கும் சூழலில் தான்  தள்ளப்பட்டுள்ளனர்..

அல்லேலூயா கூட்டங்கள் கிறிஸ்தவ பெண்களுடைய வாழ்வியல்,  சிந்தனைகளிலும் பல பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.

வெள்ளைச் சேலை கட்டுதல், நெற்றியில் பொட்டு வைக்காது இருப்பது போன்ற வழக்கங்களை புகுத்தி இந்திய பெண்கள் என்ற அடையாளத்தை விலக்கி பர்தா இட்ட இஸ்லாமிய பெண்களை போன்று பொது வெளியில் இருந்து பிரித்து விடுகின்றனர்.

ட்ரான்ஸ் திரைப்படத்தில் நுணுக்கமாக, சரியாக ஆராய்ச்சி செய்து சிறப்பாக எடுத்துள்ளனர்.

சிறுபான்மையினர் உரிமை எங்கும் பறி போகவில்லை. யாராக இருந்தால் என்ன முதலில் இந்தியர்கள், தமிழர்கள், மலையாளிகள் அப்புறம் தான் அல்லேலூயா கிறிஸ்தவர்கள். அதனால் சமூக ஆர்வலர்கள் என்று சொல்ல கூடியவர்கள் இஸ்லாமியர்களை ஆதிரிக்கிறோம் என்ற பெயரில் அவர்களுக்கு செய்யும் துரோகத்தை கிறிஸ்தவர்களுக்கும் செய்ய வேண்டாம்.

அல்லேலூயா கூட்டத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கிறிஸ்தவர்கள் அல்லேலூயா கூட்டத்தில் சேர்ந்து பரலோக ராஜியம் போக துணியாமல் இந்திய ஆட்சி மன்றத்தில், உலக ஆட்சி மன்றத்திற்கு நடை போட வேண்டும். உங்கள் வருமானத்திலுள்ள 10 சதவீதம் பணத்தை உங்கள் குடும்பத்திலுள்ள ஏழைகளுக்கு , உங்கள் ஊரிலுள்ள ஏழைகளுக்கு கொடுத்து விட்டு ஜெபக்கூடத்தில் காணிக்க இடாது இருந்து பாருங்கள்  இந்த அறிவுரை அல்லேலூயா  கூட்டம் துண்டைக்காணோம் துணியை காணாம் என ஓடிவிடும்.

இந்த அல்லேலூயா கும்பல் இவர்கள் சுய லாபத்திற்காக‌ குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை .

இவர்களுக்கு உதவும் தமிழக முற்போக்கு போராளிகள்  கிறிஸ்தவர்களுக்கு உதவவில்லை, உங்கள் சிறுபான்மை அரசியலை வளர்க்கிறீர்கள். கிறிஸ்தவம் வேறு அல்லேலூயா கிறிஸ்தவம்  வேறு என்ற அடிப்படை அறிவையாவது வளர்த்து கொள்ளுங்கள்.

Mania:(mental illness by great excitement )Phobia: (an extreme or irrational fear of or aversion to something).

9 Apr 2020

திரைப்படம் மகரமஞ்சு.வாழ்க்கை சரித மலையாளத்திரைப்படம்


நவீன இந்திய ஓவியத்தின் பிதாமகன் ஆவார் ராஜா ரவிவர்மா.  திருவனந்தபுர ராஜகுடும்பத்தில் பிறந்திருந்தாலும் பல சிக்கல்களை கடந்து தான் வெளிநாட்டினரிடம் இருந்து ஓவியக்கலையிலுள்ள  சில இரோப்பிய நுணுக்கங்களையும் கற்றிருப்பார்.
கடவுள்களையும் ராஜபரம்பரை பெண்களை மட்டும் வரைந்த இடத்தில் சாதாரண பெண்களையும் இந்திய இலக்கியத்திலுள்ள பல இலக்கிய கதாப்பாத்திரங்களையும், இன்றும் நாம் வருடாந்திர கலண்டருகளில் காணும் பெண் தெய்வங்கள் போன்றோரையும் வரைந்தது ராஜா ரவிவர்மா தான். சித்திரகலையை வெறும் கலையாக நிறுத்தாது அதை ஒரு வியாபாரமாக மாற்றியதுடன்   1850  முதலேயே இந்தியாவில் ஓவியக்கல்லூரிகள் ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்டுவிட்ட போதிலும் ஒரு முறை சாரா கல்வியாகவே ஓவியம் கற்றுக் கொள்கிறார் ரவிவர்மா. 1873ல் மதராஸில் நடந்த ஒரு கண்காட்சியில் கவர்னரின் பரிசைப் பெறுகிறார். 1888 பரோடாவைச் சார்ந்த அரசர் சாயாஜி ராவ் புராணங்களைச் சார்ந்த பதினான்கு ஓவியங்களை வரைவதற்காக ரவி வர்மாவை பரோடாவிற்கு அழைக்கிறார். சாயாஜிராவ் மேற்குலுகின், மேற்கத்திய நாகரீகத்தின் ஒரு மிகப் பெரிய ரசிகர். அவரது அருங்காட்சியகம் அவரால் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பறவைகள், இசைக் கருவிகள் தவிற, டர்னர் போன்றவர்களின் இம்ப்ர்ஷனிச ஓவியங்களையும் சிற்பங்களையும் கொண்டதுஜெர்மனியிலிருந்து இவர் கற்றுத் தேர்ந்த ஓலியோகிராஃப் என்னும் முறை அச்சு இயந்திரங்களைக் கொண்டு ஒன்றே போல பற்பல தைலவண்ண அச்சுப் பிரதிகளை எளியோரும் வாங்கி மகிழுமாறு படைப்பதற்கு உதவியது


பெயருடன் ராஜா என்று இருப்பதால் ராஜபோக வாழ்க்கை, நேரம் போகாது படம் வரைந்து கொண்டிருப்பார் என்று நினைத்தால் பெரும் தவறாகி விடும். பெண்களை நிர்வாணமாக வரைந்தார் என உள்ளூர் மக்களிடம், உறவினர்களிடம்  எதிர்ப்பை சந்திக்கிறார். தனது சொந்த நாடு கேரளம் விட்டு மும்பையில் குடிபுகிர வேண்டிய கட்டாயம், எதிரிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராட்ட வாழ்க்கையைத்தான் தொடர்கிறார். மனைவியிடம் அன்பாக இருந்தாலும் தனது தொழில் வளர்ச்சி முன்னிட்டு  வருடத்திற்கு ஒரு முறை சந்திக்கும் வாழ்க்கையை பேணுகிறார். மிருகங்களையும் பறவைகளையும், மனிதர்களிடவும் இரக்கமாக நடந்து கொள்ளும் இரக்க மனமுடையவர். ஒரு சுதந்திரமான வாழ்க்கையை பேண விரும்புகிறவர்.


இத்துடன் இவர் படங்களில் வரும் மாடல் பெண்களுக்கும் இவருக்குமான உறவுகள் நெருடலாக தொடர்கிறது.  அடிமட்ட பெண்களில் இருந்து ராஜபரம்பரை பெண்கள் வரை தன் வரைதலின் வெற்றிக்காக  சில உறவுகளை பேணுகிறார். தன்னுடைய மாடலாக வரக்கூடிய ஒவ்வொரு பெண்ணையும் தன்பால் மயக்கம் கொள்ளச்செய்து அனுபவத் திளைப்பில், உணர்வுள்ள கலைரசனையான படங்களை வரைந்து தள்ளிகொண்டிருப்பார். இவருடைய வரைகலை ஊடாக  உலகம் முழுக்க இந்திய அழகு பெண்களுடைய படங்கள் பயணித்து கொண்டிருந்தது.

அவருடைய ஓவியங்கள் மாதிரியே பயண்படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போனது. ஒரு க்யான்வாசை முடித்து அடுத்த படத்தின் வரைதலுக்கு போவது போன்று ஒரு பெண்ணை கடந்து இன்னொரு பெண்ணுக்குள் எந்த நெருடலும் இல்லாது பயணித்து கொண்டிருக்கும் மனநிலை கொண்ட ராஜா ரவி வர்மாவை சொந்த நாட்டில் தன்னுடைய படத்திற்கு மாடலான பெண்ணின் மரணம் மிகவும் வாட்டுகிறது. இந்த சம்பவமே சொந்த நாட்டில் இருந்து இவரை குடிபெயர வைக்கிறது.

பரோடாவில் ஒரு காட்டுவாசிப்பெண்ணை சந்தித்திருப்பார். எப்போதும் போல மாடலாக வந்தவள் ராஜா ரவி வர்மாவை பிரிய மனமில்லாது ராஜா ரவி வர்மாவின் குழந்தையை பெற்று வளர்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்.  மற்றுபெண்களை இவர் கீழ்ப்படுத்தினது போல இவளுடைய ஆளுமையில் ராஜாரவி வர்மா வீழ்ந்து விடுவார்.. பிற்பாடு தன்னுடைய கலைப்படைப்பை கூட தொடர இயலாத வண்ணம் அப்பெண் மேல் உறவு மையல் கொண்டிருப்பார்.   ரவி வர்மாவின் எல்லா செயல்களுக்கும் மவுன சாட்சியாக, ரவாவர்மாவை கருதலாக  கவனித்து கொண்டு அவருடைய தம்பி  உடன் இருப்பார். பிற்பாடு அந்த பெண் வர்மாவை சந்திப்பதும் ஊர்வசி படத்தை வரைந்து முடிப்பதும் அப்பெண் நாடகீயமாக வர்மாவை விட்டு பிரிந்து போவதுடன் கதை முடிகிறது


பெண்கள் சில ஆண்களில் தன்னை மறந்து மயங்கி கிடப்பதும், ஆண்கள் தங்கள் பெயருக்கும் புகழுக்கும் பணத்திற்காகவும் பெண்களை ஒரு பொருளாக  பயண்படுத்துவதும்,கொடுக்க வேண்டியதை கொடுத்து, சாறியோ, பணமோ வசதிகளோ காதல் மொழிகளோ எதையேனும் கொடுத்து கொண்டு கடந்து போகும் மனநிலையை காணலாம்


சொந்த ஊரில் குழந்தைகளுடன் இருக்கும் மனைவி நான் உங்களுடன் வந்து வசிக்கிறேன் என்றால் வேண்டாம் சொந்த ஊரிலே இரு அங்கு வந்தால் காளியாகிடுவாய் என்று மறுக்கும் ரவி வர்மா ஒரு கட்டத்தில் நான் ஊரில் வந்து உன் அரவணைப்பில் வசிக்க வேண்டும் என்று சொல்லுமளவிற்கு மனைவியிடம் இணக்கமாகவும் இருப்பார்.

நாம் ஓவியங்களாக காணும் ஒவ்வொரு கலைப்படைப்பின் பின்னால், இரத்தவும் சதையுமாக இருக்கும் மனிதர்களின் உணர்வும், சோகங்களும், காதலும், கண்ணீரும் ஒளிந்து கிடப்பதை காணலாம்.
இத்திரைப்படம் கேரளா அரசின் மிகச்சிறந்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஒரு உலகத்தரமான கலைஞனை பற்றி கவித்துவமாக எடுக்கப்பட்ட திரைப்படம். படம் எடுத்த  இடங்கள் அவ்வளவு இயற்கை வளங்கள் கொண்ட கேரளா பகுதிகள், அரண்மனை, என காட்சி அழகியல் உணரலாம்.
படத்தின் வேகம் நம்மை சோதிக்கும் அளவிற்கு மெதுவாக நகர்கிறது. ஒளிபதிவு மது அம்பாட். ராஜா ரவி வர்மாவாகவும் நடித்திருப்பது சந்தோஷ் சிவன் என்ற புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்.  சில இடங்கள் நடிக்க தெரியாது விழிபிதுங்கி நடப்பது போல் உள்ளது. நல்ல ஒரு நடிகர் நடித்திருந்தால் இப்படம் இனியும் நிறைவாக பேசப்பட்டிருக்கும்.
2011 ல் வெளிவந்த வாழ்க்கை வரலாறு படங்களில் ஒன்று.  லெனின் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இசை ரமேஷ் நாராயணன். பின்னணி இசை அருமை. பழம்பெரு நடிகை ராதாவின் மகள் கார்த்திகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்போதைய முன்னனி நாயகி நித்தியா மேனோன் அறிமுக நாயகியாக களம் இறங்கிய படம் இது.