2 Feb 2025

அருமைநாயகம் சட்டம்பிள்ளை(1823-1918)

 

நாசரேத்தை அடுத்த பிரகாசபுரம் மூக்குப்பேறியை சேர்ந்தவர் அருமை நாயகம் சட்டம்பிள்ளை. அருமைநாயகம், சட்டம்பிள்ளை அல்லது சுத்தம்பிள்ளை எனப் பிரபலமாக அறியப்பட்டவர், ஒரு மதச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான கிறிஸ்தவ இந்து தேவாலயத்தை நிறுவியவர். இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக மேற்கத்திய மிஷனரிகளின் ஆதிக்கத்தை நிராகரித்தவர். ஒரு மதச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான இந்து -கிறிஸ்தவ தேவாலயத்தை நிறுவி வங்காள மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாகக் கொண்டு மேற்கத்திய ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமயமாக்கப்பட்ட தேவாலயங்களுக்கு எதிராக போராட துணிந்தார்.  இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக மேற்கத்திய மிஷனரிகளின் ஆதிக்கத்தை நிராகரித்தவர்.

 

1642 ஆம் ஆண்டில் கொற்கையை அடுத்த வெள்ளக்கோயில் என்ற ஊரில் குடிபடைகளுடன் பெரும் நிலக்கிழாராக வாழ்ந்து வந்தவர்கள். திருமலைநாயக்கரின் பிரதிநிதியாக திருநெல்வேலியின் கவர்னராக நியமிக்கப்பட்ட வடமலையப்ப பிள்ளையின் நடவடிக்கைகள் காரணமாகத் தமது நிலங்களைக் கொற்கைக் காணியாளரான, நற்குடி வேளாளர்களிடம் விற்றுவிட்டுக் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ராஜாவின் கோயில் என்ற ஊரில் குடியேறினர்.  18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாசரேத் நகரம் உருவாக்கப்பட்டபின், அவ்வூரை ஒட்டி அமைந்துள்ள பிரகாசபுரம் மூக்குப்பேரியில் குடியேறினர்

 

 சாயர்புரத்திலிருந்த எஸ்.பி.ஜி. (Society for the Propagation of the Gospel)யைச் சேர்ந்த செமினரியில்  இறையியல் கற்று போதகர் (Catechist) தேர்வில் முதலிடம் பெற்றவர். சம்ஸ்கிருதம், ஹீப்ரு, லத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளும் கற்றுத்  தேர்ந்தவர் ஆக இருந்தார்.

 

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கள் மிஷன் நிறுவனங்களை நிறுவத் தொடங்கினர். முதலில் முதலூரில், அதைத் தொடர்ந்து பெத்லஹேம் மற்றும் நாசரேத் ஊரில் 1803ல் நிறுவினர். அக்கால அளவில் 5000 க்கும் அதிகமான நாடார் இன மக்கள் கிறித்தவர்களாக மாறினர்.

 

சாயபுரத்தைச் சேர்ந்த  உள்ளூர் மத போதகரான, பள்ளர் இனத்தை சேர்ந்தவர் டேவிட் . இவர் நாடார் இனமக்களை இளப்ப ஜாதி என்று அழைத்தார் என்ற ஒரு பிரச்சினை உருவானது.  கோபம் கொண்ட நாடார் மக்கள், ஹக்ஸ்டேபில்() வெள்ளைக்கார மிஷினரியிடம் முறையிட்டனர். டேவிட் மன்னிப்புகோரி பின் வேலையில் தொடர்ந்தார். பள்ளியின் கண்காணிப்பாளராக இருந்த சட்டம் பிள்ளையோ டேவிடை பள்ளியில் இருந்து வெளியேற்ற முயன்றார். அதை கேமரெரர் அனுமதிக்கவில்லை. இதனால் கேமரெராருக்கும் சட்டம் பிள்ளைக்கும் ஒரு பிணக்கு உருவானது. இந்நிலையில்  அருமைநாயகத்திற்கு முடிவான பெண்ணை  மணமுடிக்க கேமரெரர் அனுமதிக்கவில்லை.  தனக்கு நிச்சயமாயிருந்த பெண்ணை தானே இறைவழிபாடு செய்து 1850 ல் திருமணம் செய்து கொண்டார் போதகராக இருந்த சட்டம்பிள்ளை. இந்த நிலையில் மிஷினரிகளால்  பணிநீக்கம் செய்யப்பட்டார் அருமைநாயகம்.

 

மறுபடியும் போதகராக வேலையில் சேரும் முயற்சியாக மேலதிகாரிகளான வெள்ளைக்கார மிஷினரிகள் அனுமதி பெறும்  எண்ணத்துடன் அருமைநாயகம் நாடார் என்கிற சட்டம்பிள்ளை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது கால்டுவெல் வெளியிட்ட கையெழுத்து பிரதியான ”தின்னவெல்லி ஷானர்கள்: மதம் மற்றும் அவர்களின் தார்மீக நிலை மற்றும் பண்புகள் பற்றிய ஒரு எழுத்து” என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. புத்தகத்தின் உள்ளடக்கத்தை கண்டு கொதித்து போனார். நாசரேத்துக்கு திரும்பி வந்த சட்டம்பிள்ளை, சில நண்பர்களையும் இணைத்து ஆங்கிலத்திலுள்ள கால்டுவெல்லின் கையெழுத்து பிரதியை தமிழில் மொழியாக்கம் செய்து தமிழகம், இந்தியா, மற்றும் மலேசியா பர்மாவில் இருந்த முக்கியமான நாடார்களுக்கு அனுப்பினார்.

 

ஐரோப்பாவின்  வாழ்ந்த  கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மக்களிடையே இந்திய மக்கள் கொடிய காட்டுமிராண்டி நிலையில் வாழ்கிறார்கள் என்பது போன்ற மிகையான தோற்றத்தினை உருவாக்கும் நோக்கிலும், இத்தகைய காட்டுமிராண்டி மக்களிடையே கல்வியறிவையும் ஒழுக்கத்தையும் பரப்புகிற உன்னதமான தியாகம் செறிந்த பணியினைப் பாதிரிமார்களாகிய தாங்கள் மேற்கொண்டிருப்பது போன்ற ஒரு மாயையைத் தோற்றுவிக்கிற வகையிலும் எழுதிப் பணம் வசூலிக்க ஏதுவாகவே அவதூறு நிறைந்த இந்நூலினைக் கால்டுவெல் எழுதியுள்ளார் எனச் சட்டாம்பிள்ளை  உரிய ஆதாரத்துடன் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

 

இவரும் சில ஆதரவாளர்களும் சேர்ந்து பிரகாசபுரத்தில் தங்களுக்கு தனி ஆலயம் நிறுவினர். இந்நிலையில் கேமெரெரர் 20 வருடம் நாசரேத்தில் சேவை செய்த  இவர் தஞ்சாவூருக்கு 1858 ல் மாற்றப்பட்டார்.

 

கால்டுவெல்லின் தின்னவெல்லி ஷானர்கள் என்ற நூலைத் தமிழாக்கம் செய்து அச்சிட்டு, ஆங்கிலம் அறியாத தமிழக நாடார்கள் மற்றும் பர்மா, சிலோன் நாடார் சமூகத்தவர் மத்தியிலும் பரப்பினார். கால்டுவெல் பரப்பும் அவதூறுகளுக்கு பதில் உரைக்க 40 புத்தகங்கள், சில கைப்பிரதிகளும் வெளியிட்டார்.

 

கால்டுவெல்லில் எழுத்தால் அவமதிப்பிற்கு உள்ளான நாடார் இன மக்கள் குரலாக தமிழ் பாதிரியாக இருந்த மார்டின் வின்ஃபிரட் என்பவர் ’சான்றோர் குல மரபு’ என்ற புத்தகத்தை 1871 ல் எழுதினார். அவருடைய தந்தை வின்பிரட் 1875 ல் ’சான்றோர் குல மரபு கட்டளை’ என்ற இன்னொரு புத்தகத்தை எழுதினார். சாமுவேல் சர்குணனார் என்பவர் ’திராவிட சத்திரியா’ என்ற கையெழுத்து பிரதியை 1880 ல் எழுதினார். சர்குணனார் கையெழுத்து பிரதிக்கு பதில் இலங்கையை சேர்ந்த செந்திநாத ஐயரிடம் இருந்து ’சாணார்கள் சத்திரியர்கள் அல்ல’ என்ற தலைப்புடன் ஒரு புத்தகம் வந்தது.   சாணார்களுக்கு இடுப்பில் வேஸ்டி கட்ட கூட தெரியாது, கால்டுவெல்லால் தான் முன்னேறினர் என்று எழுதி இருந்தார். ”செந்திநாத ஐயருக்கு செருப்படி” என்ற பதில் கையெழுத்து பிரதியை வினியோகித்த குற்றத்திற்காக சர்குணனார் கைது செய்யப்பட்டார். ஞானமுத்து நாடார் மற்றும் விஜய் துரைசாமி கிராமணி போன்றோர் நாடார்கள் சத்திரியர்கள் என்பதற்கான சான்றுகளுடன் 1919துவங்கி 1020 வரை மாதாந்திர பத்திரிக்கைகள்  வெளியிட்டனர்

 

கால்டுவெல் ஸ்காட்லான்டு சென்றதும் அவர் திருநெல்வேலிக்கு திரும்பி வராது இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல புகார்கள் ஐரோப்பிய தலைமையான பிஷப் சென்றர்பரிக்கு அனுப்பினர் சட்டம்பிள்ளை குழுவினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் கிளாட்ஸ்டோனுக்கும் அனுப்பினர். ஆனால் பிரதமரான தன்னால் உள் நாட்டு பிரச்சினையில் தலையிட இயலாது என்று கூறி ஒதுங்கி கொண்டார்.

இந்து-கிறிஸ்துவ தேவாலயம்

1857 இல் சட்டம்பிள்ளையால் சட்டம்பிள்ளை 1857 இல் திருநெல்வேலி மாவட்டம் பிரகாசபுரத்தில் மிஷனரி அதிகாரத்தைத் தகர்க்க இந்து-கிறிஸ்தவ மதத்தை நம்பிக்கையாகக் கொண்ட தனது புதிய தேவாலயமான இந்து-கிறிஸ்தவ இந்து தேவாலயத்தை நிறுவினார். "இந்து" என்ற வார்த்தையை மதத்தை விட புவியியல் என்று விளக்கினார். ஒரே கலாச்சார சூழலில் வாழும் பொருளில் தனது ஆலயத்தை துவங்கினார். இந்தியாவில் மதம் மாறிய கிறித்தவர்கள் தங்கள் உள்ளார்ந்த சமூக, சமய மற்றும் கலாச்சார வகைகளைப் பயன்படுத்தி கிறிஸ்தவத்தை விளக்கவும் வெளிப்படுத்தவும் தொடங்கினர்.

 இந்து கலாச்சார நடைமுறைகள் யூத கலாச்சார நடைமுறைகளை ஒத்ததாக சட்டம்பிள்ளை கூறினார். அவர் இயக்கம் சில இந்து கலாச்சார நடைமுறைகளை பின்பற்றச் செய்தது. தேவாலயத்தின் சடங்குகளில்." இந்த தேவாலயத்தில் "பெண்களுக்குக் காரணமான சடங்கு அசுத்தங்கள்" போன்ற பழைய ஏற்பாட்டு சடங்கு நடைமுறைகள் நடைமுறையில் உள்ளன, ஏனெனில் இந்த வகையான நடைமுறைகள் இந்து மத சடங்குகளில் காணப்படுகின்றன.

 


1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான எழுச்சி ஏற்கனவே வட இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருந்தது. சட்டம்பிள்ளை தனது தேவாலயங்களில் மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக இரு மடங்கு உத்தியைப் பயன்படுத்தி கிளர்ச்சி செய்தார். கிறிஸ்துவை ஐரோப்பிய தேவாலயத்திலிருந்து பிரித்து, பூர்வீக மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை கிறித்துவத்திற்கு இடமளித்து, மேற்கத்திய மிஷனரிகளின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதில் வெற்றி பெற்றார். பிரிட்டிஷ் ராஜ் ஆதரவுடன் புதிய ஏற்பாட்டை நோக்கி நகரும் மேற்கத்திய மிஷனரிகளுக்கு எதிரான மாற்று மருந்தாக புதிய ஏற்பாட்டை விட பழைய ஏற்பாட்டை ஆதரிக்கும் எபிரேய வேதங்களையும் யூத பழக்கவழக்கங்களையும் அவர் திருச்சபையில் கையகப்படுத்தினார்.

 

இந்து கலாச்சார நடைமுறைகள் யூத கலாச்சார நடைமுறைகளை ஒத்ததாக இருக்கிறது என்ற கருத்துக் கொண்டவர் சட்டம்பிள்ளை. அவரது அணுகுமுறையும் "இந்து கலாச்சாரம்” என்று கருதப்படும் இந்திய கலாச்சாரங்களை" அவரது நாட்டு சபை வழிப்பாடில் இணைத்துக்கொள்ள வைத்தது. உள்நாட்டு கலாச்சார பழக்கவழக்கங்கள் மிகவும் வரவேற்கப்பட்டன. ஐரோப்பிய பழக்கவழக்கங்கள் என்று தோன்றிய அனைத்தையும் நிராகரித்தனர், மேலும் அவர்களின் தேவாலயம் மற்றும் மத சேவைகளை உள்நாட்டு வழிகளில் ஏற்பாடு செய்தனர். சாஷ்டாங்கம், தியானம், சாம்பிராணி பயன்படுத்துதல், தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்யும் போது கைகளை மடக்குதல், வைனுக்கு பதிலாக புளிக்காத திராட்சை சாறு பயன்படுத்துதல் மற்றும் தரையின் உட்கார்ந்து திருச்சபையின் சடங்குகள் செய்வதை கிறிஸ்தவ ஆராதனையில் நடைமுறைப்படுத்தினார். பழைய ஏற்பாட்டு சடங்குகளான இந்து மத சடங்குகளில் இருப்பது போன்ற "பெண்கள் சார்ந்த  சடங்கு அசுத்த நடைமுறைகளும் இந்த தேவாலயத்தில் பின்பற்றுகின்றனர். ஆங்கிலிகன் தேவாலயத்தில் மணிகளைப் பயன்படுத்துவது போலல்லாமல், தேவாலய கோபுரத்திலிருந்து ஒரு எக்காள சத்தம் விசுவாசிகளை வழிபாட்டிற்கு அழைக்க பயன்படுத்துகின்றனர். மேலும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் கைகளையும் கால்களையும் கழுவுகிறார்கள், பொதுவாக வழிபாடு சனிக்கிழமை நாட்களில் நடைபெறும். இந்த தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை வேலை செய்ய மாட்டார்கள். சனிக்கிழமைக்கான உணவு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முன் செய்யப்படுகிறது. பழைய ஏற்பாட்டு நாட்களில் பின்பற்றப்பட்ட பண்டிகை நாட்களைக் கொண்டாட யூத நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றனர்.

 

 

கான்ஸ்டன்டைன் மற்றும் தியோடோரஸ் போன்ற ரோமானிய மன்னர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, புனித திருச்சபையின் சட்டங்களில் திருமணம் தொடர்பான அவர்களின் சொந்த ஒழுக்கக்கேடான விதிகளை அறிமுகப்படுத்தினர்; அதை, உண்மையான பாதையில் இருந்து விலகிய ஐரோப்பியர்கள் பின்பற்றினர்  என்றும் சட்டம்பிள்ளை எழுதினார்.

 

எபிரேய பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள சட்டங்களை ஏற்க வேண்டும் என்று சட்டம்பிள்ளை பிரசங்கித்தார். சத்தம்பிள்ளையின் கூற்றுப்படி, ஆங்கிலிக்கன் சபை என்பது ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் பல தார்மீக குறைபாடுகள் மற்றும் மீறல்களில் ஒன்றாகும். ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் கிறிஸ்தவத்தின் அசல் வடிவத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட சிதைவுகளைச் சரிசெய்ய  சட்டம்பிள்ளை முயன்றார்.

 வை. ஞானமுத்து நாடார் திருநெல்வேலி நீதிமன்றத்தில் பணி செய்த ஒரு தமிழ் கிறிஸ்தவ எழுத்தர். பழங்கால மற்றும் நாடார் இனத்தின் பிரதிநிதி ஆக இருந்தார். பிரிட்டிஷ் அரசு கால்டுவெல்லைத் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் புண்படுத்தும் புத்தகத்தை அகற்ற வேண்டும் என்று கோரினார். 1880 மற்றும் 1885 க்கு இடையில் மதம் பரப்ப கிராமங்களுக்குச் சென்ற பிஷப்புகளுக்கு இடையூறு விளைவித்தார். மிஷினரிகளின் சாதி பற்றிய அவதூறான அறிக்கைகளை திரும்பப் பெறக் கோரி, SPG மிஷனரிகளுக்கு எதிராக ஞானமுத்து தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். ஞானமுத்து தொடர்ந்து ஐரோப்பிய மிஷினரிகளுக்கு எதிராக எழுதினார்.

 

ஐரோப்பிய மிஷனரிகள் தங்கள் மதம் மாறியவர்களை அவர்கள் உணர்வு நிலையை புரிந்து கொள்ளாது மரியாதை இல்லாது நடத்துகின்றனர். ஆனால் பரலோக ராஜ்யத்திற்கு சமமான உரிமைகோரல்களைக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்வது போல் நடிக்கின்றனர்.

 


மேற்கத்திய திருச்சபைக்கு எதிராக கிளர்ச்சி செய்த படித்த நாடார்கள் அடங்கிய சட்டம்பிள்ளை இயக்கம், கால்டுவெல்லுக்கு எதிராக ”தின்னவேலி ஷானர்கள் “ என்ற புத்தகத்தை நீக்கக் கோரி போராட்டம் நடத்தினர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கால்டுவெல்லின் ஷானர்களின் சித்தரிப்புக்கு எதிரான, அவர்களின் கூற்றுகளை நிரூபிக்க நாடார்கள் தொடர்ச்சியான வாதங்களை முன்வைத்தனர், தெரு முனையில் சொற்பொழிவு செய்து, துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டனர், மேலும் 1880 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னை மாகாணத்தில் உள்ள பிரிட்டிஷ் ராஜாவிடம் அதிகாரப்பூர்வ மனுவை தாக்கல் செய்தனர். கேவலமான Tinnevelly Shanars வெளியீட்டை திரும்பப் பெறவும் மற்றும் ராபர்ட் கால்டுவெல்லை கண்டிக்கவும் பரிந்துரைத்தனர்.இதன் விளைவாக பிப்ரவரி 1880 ஆம் ஆண்டு CMS பதிவில் அச்சிடப்பட்ட ஒரு கடிதத்தில், குறிப்பாக ஷனர்கள் "இந்துக்கள் அல்ல" என்ற அவரது மதிப்பீட்டை அறிக்கைகளை ஓரளவு திரும்பப் பெற்றதாகத் தெரிகிறது.

 

1881ஆம் ஆண்டில் கால்டுவெல்லின் History of Tennevelli என்ற நூல் சென்னை அரசினர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்நூலிலும் நாடார் குலத்தவர் பற்றிய அவருடைய கருத்து எந்த மாற்றமுமின்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாகச் சான்றோர் சமூகத்தவர்கள் கால்டுவெல்லுக்குக் கொலை மிரட்டல்கள் விடுத்தனர்.

 

 அந்த ஆண்டிலேயே அவர் திருநெல்வெலிப் பகுதியில் நிம்மதியாக வாழ முடியாத நிலை தோன்றியதால் கோடைக்கானலில் குடியேற நேர்ந்தது. 1891ஆம் ஆண்டில் கோடைக்கானலிலேயே மரணமடைந்த பிறகுதான் அவரது உயிரற்ற உடல் இடையன்குடிக்குத் திரும்ப நேர்ந்தது

 

மேலும் வங்காள மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாகக் கொண்டு மேற்கத்திய ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமயப்படுத்தப்பட்ட தேவாலயங்களுக்கு எதிராகப் போராட வழிவகுத்தது மட்டுமல்ல அன்று முதலே கிறிஸ்தவத்தின் இந்தியமயமாக்கல் என்பது ஆரம்பமானது.  

 

செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தின் துவக்கம்

இந்திய சூழலில், சமூக, கலாச்சார மற்றும் மத ரீதியாக தென்னிந்தியாவில் முதல் செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தை நிறுவுவதற்கு மறைமுகமாக பொறுப்பானவராகவும் சட்டம்பிள்ளை இருந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.  

1893 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் பாராளுமன்றத்தில் செவன்த் டே அட்வென்டிஸ்ட் பிரதிநிதி ஆற்றிய சொற்பொழிவு அடங்கிய சிறு புத்தகத்தின் நகலைப் பெற்றார். அதன்வழி பல்வேறு மதங்களில் உள்ள உண்மைகள் மற்றும் பொதுவான தன்மைகளை வெளிக் கொணர்ந்தார். ஏழாவது நாளை ஓய்வுநாளாகக் கடைப்பிடிப்பது யூதர்கள் மட்டுமே என்று நம்பிய சட்டாம்பிள்ளை, ஓய்வுநாளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் நியூயார்க்கு மிச்சிகனில் உள்ள பேட்டில் க்ரீக்கில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ்ட் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். பதிலாக F. M. Woolcox என்பவர் ஒரு சில புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை பதில் அனுப்பினார்.

 

1906 இல், ஜே.எஸ். மினசோட்டாவைச் சேர்ந்த ஜேம்ஸ் தென்னிந்தியாவில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதன்படி, அவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பெங்களூருக்கு அட்வென்டிஸ்ட் மிஷனரியாக அனுப்பப்பட்டார்.  1908 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் ஜி.எஃப். ஏனோக் மற்றும் ஜே.எல். ஷாவுடன் சேர்ந்து ரயிலில் திருநெல்வேலிக்கு வருகை தந்தனர், மாட்டு வண்டியில் நாசரேத்தை அடைந்தவர்களை சட்டம்பிள்ளையின்  இந்து ஏக இரட்சகர் தேவாலயத்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அற்புதமான சடங்குகளுடன் வரவேற்றனர். அவர்கள் ஒரு உள்ளூர் பள்ளியில் பத்து நாட்கள் தங்க வைக்கப்பட்டனர், ஜூலை 2, 1908 அன்று, ஜேம்ஸ் பெங்களூரை விட்டு வெளியேறி நாசரேத்தில்  தங்க முடிவு செய்ததால், தேவாலயம்; ஜேம்ஸுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது.

 

தென்னிந்தியாவில் செவன்த்-டே அட்வென்டிஸ்ட்களின் முதல் தேவாலயம் 50 உறுப்பினர்களுடன் 30 ஜனவரி 1915 அன்று பிரகாசபுரத்தில் முறையாக துவங்கப்பட்டது, இருப்பினும், அது உண்மையில் 1908 ஆம் ஆண்டிலேயே ஜேம்ஸ் மற்றும் சி.ஜி. லோரி தலைமையில் சமய வழிபாட்டுடன் செயல்பட்டது.  பின்னர், பிரகாசபுரத்தில் ஜேம்ஸ் மெமோரியல் பள்ளி என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தையும் தொடங்கியது அட்வென்டிஸ்ட் சர்ச்.

 

28 Nov 2024

கிறிஸ்தவக்‌ கம்பர்‌ எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை

 
தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு என்னும் சிற்றூரில் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் பிறந்தவர் கிருஷ்ணபிள்ளை.

தந்தையார் சங்கர நாராயண பிள்ளை; தாயார் தெய்வநாயகி அம்மையார். ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கல்வியறிவும் மிக்கவர்கள். வைணவ சமயத்தினர். கிருஷ்ண பிள்ளையின் தந்தை கம்பராமாயணத்தைத் தொடர் சொற்பொழிவாக விளக்கியுரைக்கும் திறம் பெற்றவர். .
கிருஷ்ண பிள்ளையின் பதினாறாவது வயதில் தந்தை மறைந்தார். அதன் பின் 1845-ல்‌ பாளையங்கோட்டை வந்து வள்ளல் வெங்கு முதலியார் என்பவரது வீட்டிலிருந்த தமிழ்ச்சுவடிகளைப் பயின்றார். இக்காலத்தில்‌ தமிழ்ப்‌ புலமை மிகுதியும்‌ பெற்றார்‌. திருப்பாற்கடனாத கவிராயரிடம்‌ கல்வி பயின்றார்‌.
சாயர்புரத்தில் ஜி.யு. போப் கல்லூரி தொடங்கி நடத்தி வந்தார். போப் ஓய்வுக்கு சில காலம் இங்கிலாந்து சென்றபோது, அக்கல்லூரிக்கு தமிழ் ஆசிரியர் ஒருவரை கால்டுவெல் தேடிக் கொண்டிருந்தார். அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவரான இருபத்தைந்து வயது கிருஷ்ண பிள்ளை தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் திறமை கொண்டிருந்ததால் கால்டுவெல் அவரையே 1853ல் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார்.
1858, ஏப்ரல்‌ 18ஆம்‌ நான்‌ தமது முப்பதாம்‌ வயதில் மயிலாப்பூரில்‌ உள்ள “தூய தாமசு திருச்சபை” யில்‌ திருமுழுக்குப்‌ பெற்றார்‌. இது முதல்‌ ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை என்று அழைக்கப்பட்டார்‌. கிருஷ்ணபிள்ளை சமுதாய மேம்பாடு கருதியோ பொருள்‌ சம்பாதித்தல்‌ கருதியோ கிறிஸ்தவராகவில்லை என்றும் கிறிஸ்து பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றிக் கொள்ள வேண்டும்‌ என்ற எண்ணத்‌தினால்‌ கிறிஸ்தவர் ஆனதாக குறிப்பிட்டு உள்ளார். சென்னையில்‌ ஞானஸ்தானம் பெற்ற பின்னர்‌ கிருஷ்ணபிள்ளை பாளையங்கோட்டை திரும்பினார்‌. குடும்பத்தினரும்‌ கிறிஸ்தவராயினர்‌. இவருடைய தம்பி முத்தையா பிள்ளை இவருக்கு முன்னதாகவே கிறிஸ்தவராகியிருந்தார்.
1864-1875 வரையில்‌ சாயர்புரம்‌ கல்விச்சாலையில்‌
மீண்டும்‌ கிருஷ்ணபிள்ளை பணியாற்றினார்‌ .
1865-ல்‌ வேத மாணிக்க நாடார்‌ இயற்றிய 'வேதப்பொருள்‌ அம்மானை” என்னும்‌ நூலைப்‌ பதிப்பித்தார்‌,
1886-ல்‌ திருவனந்தபுரம்‌ மகாராசர்‌ கல்‌லூரியில்‌ தலைமைத்‌ தமிழ்ப்‌ பேராசிரியரானார்‌. இக்‌ காலத்தில்‌ மனோன்மணியம்‌ பேராசிரியர்‌ சுந்தரம்‌ பிள்ளை இங்கு தத்துவப்‌ பேராசிரியராய்‌ விளங்கினார்‌. சுந்தரம்‌ பின்னை மனோன்‌ மணியம்‌ இயற்றி வந்த இதே காலத்தில்‌ கிருஷ்ணபிள்ளையும்‌ இரட்சணிய யாத்திரிகம்‌ இயற்றிவந்தார்‌ என்பது குறிக்கத்தக்‌கது.
இவர் காலத்தில் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆகிய தமிழ் அறிஞர்கள் வாழ்ந்தனர்.
பெரும்பாலும் ஆசிரியராக பணியாற்றிய கிருஷ்ணபிள்ளை குற்றாலம் அருகே ஒரு காப்பித் தோட்டத்தை உருவாக்கி நடத்தினார். 1890ஆம்‌ ஆண்டின்‌ தொடக்கத்தில்‌திருவனந்தபுரத்தை விட்டு விட்டு குலசேகரன் பட்டினம் வந்து உப்பளத் தொழிலில் ஈடுபட்டார். ஓராண்டு நடத்தியும் அது லாபகரமாக இல்லாமையால் கைவிட்டார்
1892-1900 வரையில்‌ (வாழ்‌ நான்‌ இறுதி வரை) கிறிஸ்தவ இலக்கியச்‌ சங்கத்தின்‌ ஆசிரியராய்த்‌ தொண்டாற்றினார்‌. இக்‌காலத்தில்‌ இவருடைய நூல்கள்‌ பலவும்‌ வெளிவந்தன.
தமிழ்க் கிறித்துவத் தொண்டர்களும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஆவார்.
கிருஷ்ண பிள்ளை எழுதிய நூல்கள்
செய்யுள் நூல்கள்
போற்றித் திருஅகவல் 1884
இரட்சணிய யாத்திரீகம் 1894
இரட்சணிய மனோகரம் 1899
உரைநடை நூல்கள்
இலக்கண சூடாமணி 1883
நான் கிறிஸ்துவைக் கண்ட வரலாறு 1893
இரட்சணிய சமய நிர்ணயம் 1898
தொகுப்பு நூல்கள்
காவிய தர்ம சங்கிரகம்
கிடைக்காத நூல்கள்
இரட்சணிய குறள்
இரட்சணிய பாலபோதனை
பதிப்பித்தவை
வேதப்பொருள் அம்மானை. வேதமாணிக்கம் நாடார் 1860
பரதகண்ட புராதனம் - கால்டுவெல் 1865
இயற்றிய நூல்கள்‌
உரைநடை: “இலக்கண சூடாமணி: (1888);
“பாளையங்கோட்டை எச்‌.ஏ. சிருஷ்ணபிள்ளை கிறிஸ்தவனான வரலாறு: தன்‌ வரலாறு (1893): “
இரட்சணிய சமய நிர்ணயம்‌: (1898).
செய்யூன்‌: 'போற்றித்‌ திருஅகவல்‌: (1884); “
இரட்சணிய யாத்திரிகம்‌” (1894); '
இரட்சணிய மனோகரம்‌: (1899).
கிட்டாத நூல்கள்‌: 'இரட்சணியக்‌ குறள்‌,” “இரட்சணிய பால போதனை.
தமிழகக் கிறிஸ்தவ இலக்கியத்தில் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம் வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணிக்கு அடுத்தபடியாக முக்கியமான நூலாக கருதப்படுகிறது.
கிறிஸ்தவ இலக்கிய சங்கம் பதிப்பித்துள்ள கீர்த்தனை பாடல்கள் தொகுப்பின் எச். ஏ. கிருஷ்ணபிள்ளை எழுதிய ‘சத்தாய் நிஷ்களமாய்’ என்று தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. இது ‘பொன்னார் மேனியனே’ என்று தொடங்கும் சுந்தரரின் தேவாரப்பாடல் போன்றே ஒலிக்கும்.

இதைத் தொடர்ந்து கடவுள் துதி, கிறிஸ்துவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல், மனித வாழ்வின் எல்லா சூழ்நிலைகள், திருநாட்கள் குறித்த பாடல்களை கொண்டு கடைசியில் இந்திய நாட்டிற்கான வேண்டுதலோடு முடிகிறது.
கிறிஸ்தவக்‌ கம்பர்‌ என அறியப்பட்ட கிருஷ்ணபிள்ளை. கவிஞரின்‌ வாழ்க்கை வரலாற்றினை முதன் முதல்‌ ஓரளவு விரிவாக எழுதிய பெருமை மால்‌ கடம்பவனம்‌ அவர்களையே சாரும்‌.
கிருஷ்ண பிள்ளையின் மாணவியாகவும் திறனாய்வாளராகவும் விளங்கிய ஏமி கார்மிக்கேல் அவரது பக்தி உணர்வு கவிதையாக உருக்கொண்ட விதம் குறித்து இவ்விதம் கூறுகிறார்:
"சிந்தனைகளைத் தொடர்ந்து சிந்தனைகளும் சொற்களைத் தொடர்ந்து சொற்களும், இதுவரை சொல்லாத செய்திகளைச் சொல்ல ஆர்வம் கொண்டு ஓடி வருவது போல வந்தன… சூரியனைப் போல ஒளிவிடும் எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட வானம் திடீரென்று அவருக்கு மேல் திறப்பது போன்று அவை வந்தன."
1853ல் சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியர்.
1876ல் பாளையங்கோட்டை சபை திருத்தொண்டர் கழகக் கல்லூரியில் தமிழாசிரியரானார்.
1886ல் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அக்கல்லூரியில் தத்துவத் துறையில் வேலை செய்த மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளையின் நண்பரானார்.
1890 வரை அங்கே பணியாற்றினார்.
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை சென்னையில் பீட்டர் பெர்சிவல் நடத்தி வந்த தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராக பணியாற்றினார்
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை தனது 73-ஆவது வயதில் பிப்ரவரி 3, 1900 அன்று மறைந்தார்.

தரங்கம்பாடியை சேர்ந்த என். சாமுவேல்


 தஞ்சையைச் சேர்ந்த வேதநாயகம் சாஸ்திரியார், பாளையங்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை, தரங்கம்பாடியை சேர்ந்த என். சாமுவேல் ஆகியோர் தமிழ் கிறிஸ்தவக் கவிஞர்களின் முப்படைகளாக அறியப்பட்டனர்.

தரங்கம்பாடியை சேர்ந்த என். சாமுவேல் கும்பகோணத்தில்(18 செப்டம்பர் 1850 பிறதார். பிரபலமான தமிழ் கிறிஸ்தவ கவிஞர் ஆவார். அத்துடன் பேராசிரியர், தமிழ் சுவிசேஷ லூத்தரன் சர்ச் (T.Eஇசைக்கருவிகலபல புத்தகங்களின் ஆசிரியர் என்ற நிலையிலும் புகழுடன் இருந்தார். இவாஞ்சலிக்கல் லூத்தரன் மிஷன் (L.E.L.M.) கவுன்சிலின் முதல் உறுப்பினராகவும் இருந்தார்
தரங்கம்பாடி, பொறையார் மற்றும் பெங்களூரில் உள்ள இறையியல் கல்லூரிகளில் (ஐக்கிய இறையியல் கல்லூரி) முதல் இந்தியப் பேராசிரியராக இருந்தவர் ஆவார் என் சாமுவேல்.
ரெவ. என். சாமுவேல் லூத்தரன் வரலாறு, இறையியல் மற்றும் நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய பல புத்தகங்களை எழுதினார். குழந்தைகளுக்காகவும் எழுதி உள்ளார். அவர் தமிழ் மற்றும் ஜெர்மன் ஆகிய இரு மொழிகளில் எழுதியுள்ளார், மேலும் பல புத்தகங்களை ஜெர்மன் மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துலள்ளார்.
அவர் எழுதிய நூல்களில்:
தூப கலசம், தூப தூபம்
திரு திரு விருந்தாடி,
பாக்கெட் கம்யூனியன் புத்தகம்
உள்ளத்து நாற்பது புஷ்பா கோதை
ஊர் சாமியாருக்கு துணை
ஜீகன்பால்கின் வாழ்க்கை
டிரான்க்யூபார் மிஷன் வரலாறு
கிராம பிரசங்கங்கள் தொகுதி I
சுவிசேஷ வாக்கிய பிரசங்க புத்தகம்,
சுவிசேஷங்கள் பற்றிய பிரசங்க வேலைகள்
கிராமப் பிரசங்கங்கள் தொகுதி II நிருபா வாக்கிய பிரசங்க புத்தகம்,
நிருபங்கள் பற்றிய பிரசங்கப் பணிகள்
ஒரு எளிய கிறிஸ்தவரின் எளிய பேச்சு
பாக்கெட் பிரார்த்தனை புத்தகம்
மார்ட்டின் லூதர் சாஸ்திரியார்
விவிய சரித்திர சுருக்கம்
எருசலேம் நகர் அழிவு
Yezhu Siru Vaarthaigal
கிறிஸ்தவ பழமொழிகள் மற்றும் மாக்சிம்கள்--
நறு மலர்கொத்து
தரங்கை மிஷன் சரித்திரம் (பெங்கரின் டிரான்க்யூபார் மிஷன் வரலாற்றின் பாணியில்)
ஒரு சந்தி தியானம்,
40 தியானங்களுடன் தவக்காலத்துக்கான தியானங்கள்
உள்ளத்து சொல்வனே
இறையியல் மாணவர்களுக்காக, அவர் எழுதினார்:
சமயோசித வேத வாக்கிய குறிப்பு,
இணக்கம் சத்திய வேதபாயிரம்,
பைபிளுக்கு ஒரு அறிமுகம்
திருச்சபை வருஷ விவரம்,
திருச்சபை வரலாற்றின் அவுட்லைன்ஸ்
குழந்தைகளுக்காக அவர் எழுதினார்:
குழந்தைகளுக்கான கதை நூல்,
பாலர் பூச்சரம்
ஒழுக்கக் கதைகள்,
கதை மலர் கூடை,
பூக்களின் கூடை
குழந்தைகள் பிரார்த்தனை புத்தகம்
பெற்றோருக்கு, அவர் எழுதினார்:
பெற்றோர் ஒழுக்கம்
அவரது மொழிபெயர்ப்புகள்:
மெய் மானஸ்தபாம் கண்ணீர், ஹென்ரிச் முல்லரின் மனந்திரும்புதலின் கண்ணீர் மொழிபெயர்ப்பு,
புனித ஒற்றுமையில் பங்கேற்பதற்கு ஒரு நல்ல தயாரிப்பாகும்.
புதிய ஏற்பாட்டின் திருத்தப்பட்ட பதிப்பின் மொழிபெயர்ப்புக்கு பொறுப்பானவர்களில் இவரும் ஒருவர்.
.
அவரது பாடல் வரிகளில் மிகவும் பிரபலமானவை,
• En Meetpar Vuyirodirukayilay (என் மீட்பர் உயிரோடிருக்கயிலே)
• Senaigalin Kartharey (சேனைகளின் கர்த்தரே)
• Seerthiru Yegavasthey(சீர்திரி ஏகவச்தே நமோ நமோ) மற்றும்
• Gunapadu Paavi (குணப்படு பாவி)
ஆகஸ்ட் ஹெர்மன் ஃபிராங்கே (1663-1727) மற்றும் பிலிப் ஜேக்கப் ஸ்பெனர் (1635-1705) போன்றவை ஆகும்.
16 ஆம் நூற்றாண்டில் ஹாலில் இறையியலாளர்களால் நடத்தப்பட்ட சீர்திருத்தத்திற்குப் பிந்தைய லூதரனிசத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவமான லூத்தரன் இறையியலில் வேரூன்றி இருந்துள்ளார். மார்ட்டின் லூதரின் வாழ்க்கை, படைப்புகள் மற்றும் போதனைகளை நன்கு அறிந்திருந்தார்.
ஸ்பர்ஜனின் படைப்புகளை மிகவும் விரும்பி படித்தார் அவரது பல புத்தகங்களை அவரது நூலகத்தில் வைத்திருந்தார். சாமுவேல் தமிழ் ஸ்பர்ஜன் என்று அழைக்கப்பட்டார், ஜேர்மன் மிஷனரிகளீன் லூதரனிசத்தின் கருத்துகளை ஆழ்ந்து அறிந்திருந்தார்.
இந்தியாவை ஜேர்மன் மிஷனரிகள் வெளியேற வேண்டிய நேரம் வந்தபோது, தலைமையை ஆங்கிலிக்கன் சர்ச் முறையை பின்பற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. இது பைபிள் மாதிரியின்படி இல்லை என்று ரெவ. என். சாமுவேல் உணர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதை அவர் உணர்ந்தபோது, 1921 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அவர் தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய T.E.L.C ஐ விட்டுவிட்டு, மிசோரி மிஷனில் சேர்ந்தார். ஆனால் 1927 இல் அவர் இறப்பதற்கு சற்று முன்பு அவர் T.E.L.C-க்கு திரும்பினார்.
சென்னையில் உள்ள குருகுல லூத்தரன் இறையியல் கல்லூரியில் வகுப்பில் கற்பித்து கொண்டு இருக்கும் போது இறந்தார்
இவருடைய சங்கீத அமைப்பு இந்திய பாரம்பரிய இசையோடு கலந்து இருந்தது. தற்போது கிறிஸ்தவத்தில் பின்பற்றி வரும் இசை ஆங்கிலிக்கன், அமெரிக்கன் உள்ளூர் சினிமா குத்து பாடல் ரகத்திற்கு மாறி வந்துள்ளது ஒரு அவலமே.
தற்கால கிறிஸ்தவ தலைமுறை பாரம்பரிய இசை நடனம் சார்ந்து பயணிக்க சங்கீத ஞானம் பெற சாமுவேல் அவர்களின் இசைக் கோர்வை நிச்சயமாக வழி வகுக்கும்.
தற்போது தமிழக கிறிஸ்தவம் இந்திய பாரம்பரிய இசைக்கும் தங்களுக்கும் பொருத்தம் இல்லாதது போல் ஒரு அறிவின்மையில் மூழ்கி உள்ளனர்.
இந்திய இசை இசைக்கருவிகள் கிறிஸ்தவ பாடல்கள் வழியாக மீளூருவம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
மேலும் சாமுவேல் பாடல்கள் இன்னும் முழுதாக தொகுக்கப்படவில்லை. ஐரொப்பிய மிஷினரிகள் வாழ்க்கை வரலாறு போன்று நமது உள்ளூர் ஊழியர்கள் /மிஷினரிகள் பற்றி காத்திரமான தகவல்களும் இல்லை என்பதும் பெறும் குறையாக உள்ளது.