31 May 2024

நெல்லையின் பெருமை !

 















தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள  திருநெல்வேலி, சென்னைக்கு தெற்கே 602 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 'திருநெல்வேலி' என்ற வார்த்தையின் பொருள் புனித நெல் வேலி என்பதாகும். பாண்டியர் தலைநகராக மதுரை இருந்ததால், இரண்டாம் பாண்டிய தலைநகரமாக விளங்கிய திருநெல்வேலி , தென்காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது. நாயக்கர்கள் காலத்திலும் அவர்களின் தென் தலைநகராக திருநெல்வேலி விளங்கியது. ஆற்காடு நவாப்பினால் 1801 ஆம் ஆண்டு திருநெல்வேலி கையகப்படுத்தப்பட்ட போது" திருநெல்வேலிச் சீமை" என்று பெயர்பெற்றது. அதன் பிறகு வந்த ஆங்கிலேயர்கள் தின்னவெல்லி என்று பெயரிட்டனர். மாணிக்கவாசகரால் தென் பாண்டிய நாடு என்று அழைக்கப்பட்ட, திருநெல்வேலி தேவார மூவர்களால் பாடப்பட்ட பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவஸ்தலங்களில் ஒன்றாகும் .

 

முதலில் நெல்லின் ஊர் என்ற அர்த்தத்தில் சாலியூர் என அழைக்கப்பட்டது. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் திருநெல்வேலியை "தென்பொருணை புனைநாடு" என்று குறிப்பிடுகிறார். மனோன்மணியம் நாடகத்தில் சுந்தரம்பிள்ளை திருநெல்வேலியை "பீடுயர் நெல்லை" என்று குறிப்பிட்டு உள்ளார்.  திருநெல்வேலியைக் குறிக்கும் மற்ற சுருக்கமான பெயர்கள் நெல்லை, நெல்லையம்பதி மற்றும் நெல்லையம்பலம் போன்றவை ஆகும். திருநெல்வேலியின் முந்தைய பெயர் "வேணுவனம்" என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர் ’ நின்ற சீர்நெடுமாறன் வேணுவனநாதர் கோயிலை  கட்டினான் என்பது வரலாறு. களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவார் இவர். அவரை தொடர்ந்து அவனி சூளாமணி (கி.பி.600 முதல் - 625 வரை) அதன் பின்  அவனி சூளாமணியின் மகனான செழியன்சேந்தன் (620 முதல் 642 வரை) அதன் பின் அவருடைய மகன் அரிகேசரிமரவர்மன் (641 முதல் 670 வரை) பாண்டிய மன்னராக ஆட்சி செய்தனர். இவர் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்ற பட்டயங்களிலும், 640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பெயரிலும் அறியப்பட்டவர்.. அரிகேசரி ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி வந்திருந்தாலும் திருஞானசம்பந்தரால் சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.

பொதுவாக  தென் இந்திய கோயில்கள் கடல், மலை மற்றும் காடுகள் அருகில் இருப்பதாகவே காண்கிறோம்.  மனிதர்கள் மரங்களில் கடவுள் இருப்பதாக எண்ணி உயரமான மரங்களை வணங்கி வந்த வழக்கம் இருந்து வந்துள்ளது.   அதன் நீட்சியாக உயரமான கோயில்கள், மற்றும் கோயில் கோபுரங்கள்  உருவாக்கி வைத்து இருந்தனர்.  பிற்காலம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரம் என  ஸ்தலவிருக்‌ஷங்கள்   நிலைநாட்டினர். அவ்வகையில் மூங்கில் செடி கோயிலில் ஸ்தலவிருக்‌ஷமாக உள்ள, தாமிரபரணி நதிக்கரையில் வீற்று இருக்கும் மிக முக்கிய கோயில்  மட்டுமல்ல, மதுரை விஸ்வநாத நாயக்கர் (1529 – 1564) காலத்தில் தென் மாகாணத்தின் தலைமையகம் திருநெல்வேலி ஆனது. மதுரா கையெழுத்துப் பிரதிப்படி மதுரை விஸ்வநாத நாயக்கரின் தளவாய் ஆக இருந்த அரியநாதமுதலியார் தான் திருநெல்வேலி சீமை(நகரம்) உருவாவதற்கு காரணமாக இருந்தவர். ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801 இல் ஆங்கிலேயர்கள் கையகப்படுத்தினர். மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நெல்லையப்பர், மற்றும் காந்திமதி அம்மன் கோயிலைச் சுற்றி திருநெல்வேலி வளர்ந்து வந்துள்ளது.

 

இக்கோயிலை சுற்றியே சமூககட்டமைப்பு வளர்ந்து உள்ளது.

நெல்லையப்பர் ஆலயம் கட்டின காலம்  பற்றி ஒரு திடமான தகவல் இல்லை என்றாலும்  இலக்கியம் மற்றும் பக்தி புத்தகங்களில் உள்ள தகவல் மற்றும்  கட்டிட கலையின் அமைப்பை வைத்தும் ;  இக்கோயிலின் கற்பகிரகத்திலுள்ள சிறு விக்கிரகம்  மற்றும் அரைமண்டபம் , ஏழாம் நூற்றாண்டில் சேந்தன் மாறன் உருவாக்கியுள்ள ’மலையாண்டி குறிச்சி’ கோயில் மாதிரி இருக்கிறது என்பதால் இதன் கட்டுமானம்  ஏழாம் நூற்றாண்டில் எனக்  கணக்கில் கொள்கின்றனர்.  ஏழாம் நூற்றாண்டில்  மூல மகாலிங்கத்தை  இக்கோயிலின் மூர்த்தியாக  வணங்கி வந்துள்ளனர். 13 ஆம் நூற்றாண்டில்,  மூங்கில் காட்டுக்கு  இடையில்  இருந்து வந்ததால் வெய்முத்தார் அல்லது வேணு வனநாதர் என்றும் அழைக்கப்பட்டு உள்ளார். திருவிளையாடல் மற்றும் ரெட்டை புலவர் வெண்பாவில், இக்கோயிலின் மூல மூர்த்தி; மூங்கில்களின் முத்து  என்ற பொருளில் வெய்முத்தார் என்றே குறிக்கப்பட்டு  உள்ளது.  இக்கோயில் மூர்த்திக்கு அரிகேசரி பராக்கிரம பாண்டியன் ஒரு தங்க கிண்ணம் கொடுத்தாக  குறிப்பு உள்ளது . 17 வது நூற்றாண்டில் எழுதப்பாட்ட ’கிளை வீடு தோது’ என்ற குறிப்பிலும் வெய்முத்தார் என்றே குறிப்பிட்டு இருந்தனர்.

 இன்று அழைக்கும்  நெல்லையப்பர் என்ற பெயர் ஒன்றவது  சுந்தர பாண்டிய  குறிப்பில்  உள்ளது. மற்றைய பல குறிப்புகளில் இம்மூர்த்தியை  திருநெல்வேலி தேவர், திருநெல்வேலியுடைய தம்புரான், திருநெல்வேலியுடைய நாயனார், வேணுவனனேஸ்வரர், வ்ரிகிவரிஸ்வரர், மற்றும்    திருகம்மகொட்டடு ஆளுடைய நாச்சி என்றும் அழைத்துள்ளனர்.


நெல்லையப்பர் கோயில் சுவர்களில் பிற்காலச் சோழர்கள் மற்றும், பிற்காலப் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன.  நெல்லையப்பர் கோயிலில் உள்ள சிறிய சன்னதியின் மேற்குச் சுவர் மற்றும் மூலமஹாலிங்கர் சன்னதியின் மேற்குச் சுவரில் காணப்பட்டும் வீரபாண்டியரின் (கி.பி.961) கல்வெட்டு திருநெல்வேலியை கீழ்வேம்புநாடு என்று குறிப்பிடுகிறது.  பாண்டிய நாடு சோழர்களின் கீழ் ஆட்சிக்கு வந்த போது 991 முதல் ராஜராஜ வளநாடு என அறியப்பட்டது.  1012 இல் ராஜராஜ மண்டலமாக பெயர் மாற்றப்பட்டது. 1022 முதல் ராஜராஜபாண்டியநாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.   17 வது நூற்றாண்டில் ஆட்சி செய்த மாறவர்’’மன் பொன்னின் பெருமாள்’ என்றும்  அழைத்துள்ளார்.  மாறவர்மன்  சுந்தர பாண்டியன் குறிப்பில் ’பூசம் பிரண்ட திருனெல்வேலி பெருமாள் ’என்று அழைத்துள்ளனர். அவ்வகையில் நெல்லையப்பர் காந்திமதி என்ற  பெயர்கள் பிற்பாடு வந்தது என்றே முடிவாகுகிறது.

 அதே போல கோவிலில் கட்டிட அமைப்பை அவதானிக்கையில் அரமணிமண்டபம் வரை ’நிற சீர் நெடுமாறன்’ கட்டியிருக்க வேண்டும் என்கின்றனர். மணிமண்ட இசை தூண்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தையது .  1484 முதல்  1503 வரை வேணாட்டை ஆட்சி செய்த ரவிவர்மன் திருநெல்வேலியில் சதுர்வேதிமங்கலத்தை நிறுவி உள்ளார். நெல்லையப்பர் கோயிலில் பூஜைகள் செய்யும் விதம் , அக்ரஹாரம் நிறுவி பிராமணர்களை குடியமர்த்தி இருந்துள்ளார்.

பாண்டிய காலம்  ஒரு சிறு மூர்த்தியுடன்  ஆரம்பிக்கப்பட் கோயில் நாயகக்க காலத்தில் நிறைவு பெற்றுள்ள நெல்லையப்பர்  கோவிலின் முழு சுற்றளவு  850 நீளம் 756 அகலம் ஆகும்.  காந்தியம்மை மற்றும் சிவனுக்கும் என  சமமாக பிரிக்கப்பட்ட இரட்டை கோயில் உள்ள தலமாகும்.  

ஆலய கட்டிட அமைப்பு என்பது, மக்களின் கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணிகளும்   மற்றும் நிகழ்த்தப்படும்  சடங்குகளும் உள்ளடங்கும். இந்தியாவின் கோயில்களின் கட்டிடக்கலைப்  நாகரா, வேசரா மற்றும்தமிழ் கட்டிடக்கலை என மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது. ந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது போல தென் பகுதிகளில் தமிழ்ப் பாணி கட்டிடக்கலை  பின்பற்றப்பட்டது.  தமிழ் கட்டிடக்கலை, வேத காலத்துக்கு முந்தையது என நம்பப்படுகிறது. தமிழ் கோயில் கட்டிடக் கலைகளின் சிறப்பம்சம் ஆக கருதப்படுவது  கருவறையுடன் கட்டப்படும் கோயில்கள்,  அதன் செறிவான வளையங்கள் கொண்ட சுற்றுப் பாதைகள் மற்றும், நீண்டு செல்லும் தாழ்வாரங்கள்,  கோவில் குளம்(தெப்பக்குளம்), திறந்த வெளிகள் (நந்தவனம்) போன்றவை ஆகும்.

கோவிலின் முழு சுற்றளவு 850 அடிக்கு 756 அடி கொண்டது. கோவிலின் பிரதான நுழைவாயில் ராஜகோபுரத்துடன், கிழக்குப் பக்கமாக உள்ளது. கோவிலை அணுகும் நான்கு  திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன.

நெல்லையப்பர் கோவில் தெற்கு மாடவீதியில், கொடிமர  மேடு, கொட்டகை மற்றும் களஞ்சிய அறைகள் அமைந்துள்ளன. இந்த நடைபாதையில் உள்ள தூண்கள் அழகாக செதுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளவை. நடைபாதையின் தென்மேற்கில் வடமலையப்பபிள்ளை காலம் வரையுள்ள நாயக்கர் ஆட்சியாளர்கள் உருவங்கள்  உள்ளன.

கிழக்கு தாழ்வாரத்தில் உள்ள நந்தி, கி.பி 1155 இல் கட்டப்பட்டது. நந்திமண்டபத்திற்கு அருகில் நந்தியும், கொடிமரமும் மற்றும் சூரியதேவர் பவளக்கொடி, அல்லி, மன்மதன், என மிகவும் கவர்ச்சிகரமான உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.




















நந்திமண்டபத்திற்கு அடுத்தபடியாக வேணுவனநாதர் கோவிலின் தெற்கு மாடவீதியில்; நான்கு சைவ  சிற்பங்களின் திருவுருவங்கள் உள்ளன. சந்தனாச்சாரியார், சப்தமாதாக்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள், பொல்லாப்பிள்ளையாரும், கைலாசபர்வதத்தை கையிலேந்திய படி  ராவணனும் உள்ளனர்

ராஜராஜ பள்ளிகொண்ட பெருமாள் சுயம்புலிங்கம் தெற்கு திசையில் சாய்ந்த நிலையில் கட்டப்பட்டு உள்ளது.  இதன் வாயிலில் வலம்புரிப்பிள்ளையார், சந்திரசேகரர் மற்றும் தட்சிணாமூர்த்தி, பிக்ஷாந்தர் வேடத்தில் சிவபெருமான், சண்டேஸ்வரர் ஆகியோரின் உருவங்களும் காணப்படுகின்றன. மேலும் தொடர்ந்தால்,  இந்த கோவிலின் மூலவிக்கிரகம் என்று கூறப்படும் பிட்லிங்கம் அல்லது திருமூல  நாதர் உருவங்களை காணலாம்.

ஊஞ்சல் விழா. 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்ட திருகல்யாணமண்டபம் அல்லது திருமண மண்டபம்  இந்த அம்பாள் கோயிலின் மற்றொரு அழகிய அமைப்பு ஆகும்.   ஐப்பசி மாதத்தில் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளின் திருக்கல்யாணத்திற்குப் பிறகு கொண்டாடப்படுவது  ஊஞ்சல் விழா.  எனவே இந்த மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபம் தீவிர பக்தரான சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையின் அன்பளிப்பாகும். 

ஊஞ்சல் மண்டபத்திற்கு வடக்கே புனிதமான தொட்டி, அதன் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன. இக்கோயிலில் கருமன் குளம் என்ற மற்றொரு குளம் உள்ளது. பெரும்பாலான திராவிடக் கோவில்கள் போன்றே நெல்லையப்பர் கோயிலிலும் இரண்டு கோவில் குளங்கள் (தெப்பக்குளம்) உள்ளன. இவை தேவையான சடங்குகளுக்கு பயன்படுத்துகின்றனர்.  முக்கியமாக  காற்றின் திசையில் உள்ள  தெப்பக்குளம், லேசான காற்றை உருவாக்கி உள்ளூர் காலநிலையை மிதப்படுத்தி  மேம்படுத்தி வைத்துள்ளது. கோயில் தெப்பக்குளங்கள் வற்றாதவை மட்டுமல்ல  பல்வேறு தாவரங்களுக்கு  அடைக்கலம் கொடுக்கும் படி உள்ளது.  மேலும் மழைநீர் சேகரிப்புக்கும் பயன்படுகிறது.

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இசைத் தூண்கள் மணிமண்டபத்தில் உள்ளன. ஒற்றைக்கல் ஒத்ததிர்வு அமைப்பில் செதுக்கப்பட்ட இசைத் தூண்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இந்த இடத்தை நடனம் ஆடுவதற்கு நடனக் கலைஞர் அல்லது தேவதாசிகள் பயன்படுத்தி உள்ளனர். மணிமண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள நாற்பத்தெட்டு தூண்களின் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நடனம் ஆடும் தேவதாசியின் உருவம் உண்டு. இந்த மண்டபம் திறந்த வெளி நடன அரங்கத்துடன் அமைந்துள்ளனர்.

இருவரும் இணைபிரியா தம்பதிகள் என்றாலும்  சுதந்திரமானவர்கள்        என்பதற்கு இணங்க நெல்லையப்பர் மற்றும் அம்மனுக்கு வெவ்வேறு சன்னதி வளாகத்தில்   உள்ளன.   இவையை சங்கிலி மண்டபம் இணைக்கிறது. திருமலைநாயக்கர் காலத்தில் 1647ல் திருநெல்வேலியின் ஆளுநரும் சிறந்த சிவபக்தருமான வடமலையப்பப்பிள்ளை இந்த மண்டபத்தை கட்டினார்.  சங்கிலி மண்டபம் தூண்களின் மீது யாழிகளின் உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.  பச்சை வடிவேல் காசிவிஸ்வநாதர், அனுமன், அர்ஜுனன் மற்றும் பீமன் வைத்துள்ளனர். 
குமரன் கோயில் சங்கிலி மண்டபத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

 

நவராத்திரி மற்றும் கார்த்திகை மாதங்களில் சோம வார திருவிழா கொண்டாடப்படுகிறது. கல்லாலால் ஆன பீம்களும்  ரதி, குறவன் மற்றும் குறத்தி பிரதிகள் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் மேற்கே வன்னியடிசத்தனாரின் உருவங்கள் மற்றும் பைரவரும், மற்றும் யாகம் செய்யும் திருத்தலமும் காணப்படுகின்றன. வீரபத்திரன், அர்ஜுனன், கர்ணன், விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரின் சிற்பங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் தோற்றத்தை உருவாக்குகின.


தமிழ் கட்டிடக்கலைப்படி,  வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் முக்கிய பங்கு கொள்கிறது. நெல்லையப்பர் கோயிலின் மற்றொரு சிறப்பு, ஒளி வரும் சாளரங்களின் அமைப்பாகும்.  தேவைப்படும் இடங்களில்  தெளிவான சாளரங்கள் வழங்கப்பட்டுள்ளன. திறந்த நடைபாதைகள், உட்புற இடைவெளிகளில் ஒளி ஊடுருவ அனுமதிக்கிறது.  கோவிலின் மையப்பகுதியான  கற்பகிரகத்தின் அமைப்பு  சூரிய கதிர்வீச்சின் தீவிரத்தை வடிகட்டி குறைந்த ஒளியை மட்டுமே  நுழைய அனுமதிக்கும் முறையில்  உள்ளது.

ஒரு பக்கத்தில் தோட்ட இடைவெளிகளில் திறக்கும் ஜன்னல்கள் மற்றும் மறுபுறம் கோவில் குளங்கள். கருவறையைச் சுற்றிலும் நிரம்பிய நடைபாதைகள், நடன அரங்கம் (தாமிரசபை) என கலைப்படைப்பின் உச்சமாகும் நெல்லையப்பர் கோயில்.

கோயில் வளாகம் மொத்த பரப்பளவில் 72% கட்டப்பட்ட இடங்கள் ஆகவும் பொது இடங்கள்  28% திறந்தவெளிகள் கொண்டவை ஆகும்.த்கொண்ட திறந்தவெளிகள் ஆகும்.  திறந்தவெளிகள் தோட்ட இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில் சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மலர்கள் இந்தத் தோட்டத்தின் மண்டபத்தின் மறுபுறம் நன்கு பராமரிக்கப்பட்ட இன்பத் தோட்டத்தில் இருந்து பெறுகின்றனர்.  இந்தத் தோட்டத்தை வடிவமைத்தவர் திருவேங்கட கிருஷ்ண முதலியார். 

1756 இல் நூறு தூண்களுடன் கூடிய சதுர வசந்தமண்டபம் இதன் நடுவில் கட்டப்படுகிறது. இந்த வசந்த மண்டபத்தில் நீர் சொட்டும் சிவபெருமானின் திருவுருவங்கள், அகஸ்திய முனிவர் மற்றைய முனிவர்கள் உள்ளது சிறந்து விளங்கும்  கட்டிடக் கலைஞரின் பணித் திறனின்  எடுத்துக்காட்டுகள் ஆகும். கோவில் யானை  வடக்கு மாடவீதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

நெல்லைக்கு அழகு மட்டுமல்ல, நெல்லையின் அடையாளமாக பாரம்பரியமான நெல்லையப்பர் கோயிலை சுத்தம் சுகாதாரமாக பண்பாட்டு தளமாக பாதுக்காக்க வேண்டியது  நமது கடமை ஆகும்.

 

 

3 Jan 2024

எழுத்தாளர் புதிய மகாதேவியின் எழுத்துக்கள்-ரசூலின் மனைவியாகிய நான், மக்ஃபி, ஐவருமாய் - சிறுகதைகள்

”ரசூலின் மனைவியாகிய நான்" என்ற 88 பக்கம் நூல் நமக்கு தரும் அதிர்வு பெரியது. காவ்யா பதிப்பகம் ஊடாக இப்புத்தகம் வெளி வந்துள்ளது.

1993 ல் மும்பை குண்டு வெடிப்பு
மரணம் 459 காயப்பட்டோர் 1400
2008 நடந்த குண்டு வெடிப்பில் மரணம் 164, காயமடைந்தவர்கள் 308

இது போன்ற ஒரு குண்டு வெடிப்பு விபத்தில் சிக்கிய இஸ்லாமியரான ரசூல், ரசூலின் காதல் மனைவி கவுரி, குண்டு வெடிப்புகளில் இறந்த நபரின் மனைவி புஷ்பா, அவர் மகள் தன்வி , கவுரியின் இழந்த வாழ்க்கையை எண்ணி கவலையில் மறைந்த கவுரியின் தகப்பனார், பாட்டி தற்போது மரணத்தோடு மல்லிடும் கவுரியின் தாய். இப்படியாக சர்வதேச தீவிரவாதத்தின் பாதிப்பு எவ்விதம் சாதாரண எளிய மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என விறுவிறுப்பான நடையில் எழுதப் பட்ட புத்தகம் இது.
தேவையற்ற விவரிப்பு இல்லை, விண்ணாரம் இல்லை, தேவையற்ற ஒரு பக்கம் கூட, ஒரு வார்த்தை கூட கண்டு பிடிக்க இயலாது. அத்தனை நுணுக்கமான நுட்பமான எழுத்து. கதாபாத்திரங்களை ஒரு காட்சி சட்டகமாக நகத்தும் நல்லதொரு உக்தியை கையாண்டுள்ளார். வாசகர்களை கதையை சொல்வதை கடந்து சம்வங்கள் ஊடாக அந்த களத்தில் , அந்த அந்த உணர்வில் கொண்டு சேர்க்க இயல்கிறது. கதையை வாசகர்கள் மனக் கண்ணில் காட்சிகளாக கொண்டு வந்துள்ளார்.
மனித உணர்வுகள், உணர்விற்குக்கும் உடலுக்குமான போராட்டம், நேசித்தவர்களை வாழ்க்கையின் இடைவழியில் இழக்கவியலாத மனப் போராட்டம் இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் காத்திரமாக நகர்கிறது.
ஒரு பக்கம் உடல் இயக்கம் அற்று கிடக்கும் காதல் கணவன் ரசூல், அவனுடன் இருந்த காதல் அன்பை கடந்து செல்ல இயலாத கவுரி, அவளை போன்றே அதே துயரில் வாழும் ராமசந்திர புச்சுடன் உருவான ஒரு நேசம் , அதன் முடிவு, அதே போல் ரசூல் பெயரை ஒத்த ராகுல் உடன் ஆன ஒரு சந்திப்பு. பெண்களின் மன வெளி, ஏற்கனவே போராட்டங்கள் வழி கடந்து செல்லும் பெண்களை எதிர் நோக்கி இருக்கும் பள்ளங்களையும் அவதானிக்க சொல்லி எழுதப்பட்ட புத்தகம்.


ரயில் கூட்ட நெரிசலில் பயணம் செய்து போகும் கவுரி என்ற கதாப்பாத்திரம் மனதில் இருந்து அத்தனை எளிதாக கடந்து போகக் கூடியவர் அல்ல. உடல் இயக்கம் அற்று மருத்துவமனையில் இருக்கும் ரசூலும் வாசகர்களில் தங்கி விடுகிறார்.
வெடிகுண்டு தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு ஆணித்தரமான எழுத்து புதியமாதவியிடையது.

பெண் எழுத்தாளர் என்ற வகையில் இன்னும் அங்கீகாரமும் பெயரும் கிடைக்க வேண்டிய ஆளுமை ஆகும் எழுத்தாளர் புதியமாதவி. புதியமாதவி மகாராட்டிர மாநிலத் தலைநகர் மும்பையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழ் சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் சமகால அரசியல், பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.

மக்ஃபி

இருவாச்சி பதிப்பகம் வழியாக நவம்பர் 2023 ல் வெளியான புத்தகம் மக்ஃபி.,பக்கம் 88,விலை ரூ 100, அலைபேசி 9444640986
சைபுன்னிஷா என்ற மக்ஃபி ஒரு சூபிஃ கவிஞர். 1639-1702 காலம் வாழ்ந்து மறைந்தவர். இந்திய அரசியலில் ஸ்தரபதி சிவாஜிக்கு ஆன அதே இடம் மக்ஃபியின் கனவுகளுக்கும் உண்டு என்று கதையாசிரியர் குறிப்பிட்டு உள்ளார்.
தனது தந்தையின் அதிகார செயல்பாடுகளுக்கு எதிராக போராடி 20 வருடம் அரண்மனை சிறையில் இருந்தவள்.
இவருடைய கவிதைகள் இவரின் மரணத்திற்கு பின் சூபி கவிதைகளாக, கடவுளை நினைத்து உருகுவதாக அர்த்தம் கொண்டு பிரசுரிக்கபட்டுள்ளது .
எழுத்தாளர் புதிய மகாதேவி, மக்ஃபியின் ஆன்மாவாக மாறி எழுதிய classic எழுத்து வகை இது . 64 வயது வரை திருமணம் செய்யாது வாழ்ந்தார் என்றாலும் பல காதலர்கள் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. சத்ரபதி சிவாஜியை மனதார காதலித்து வந்தவள் என்ற வரலாறும் உண்டு.
மாக்ஃபி என்றால் ரகசியம்.
இந்த புத்தகம் வெறுமனே கதையாக சொல்ல கூடியது அல்ல, வாசித்து உணரக் கூடியது. ஒரு வித்தியாசமான உணர்வை மனச்சலனத்தை மனவெளி ஊடாக எல்லையற்று பயணிக்க செய்கிறது. வார்த்தைகள் ஜாலம் செய்கின்றன
*******
"ஓ மாக்ஃபி
காதல் பாதையில்
நீ தனித்தே தான்
பயணித்தாக வேண்டும்
உனக்கு பொருத்தமானவர்கள்
யாருமில்லை
அது கடவுளாக இருந்தாலும்."
***********
"உன் வசந்தம் எப்போதும் இங்கே இருக்கும். இந்த வெறுமை, இந்த சூனியம் இந்த பூஜியம் எல்லாம் நீயே வரைந்து கொண்ட கற்பனை உலகம். அது நிஜமல்ல. நிஜத்தில் உன் பாவா உனக்காக காத்திருக்கிறார் சைபூன்"
*********
எதெற்காகவெல்லாம் கொண்டாடி தீர்த்தாரோ, அதுவே அவருக்கு எதிராக மெல்ல மெல்ல விசுவரூபம் எடுத்து விட்டதை பாதுஷா கவனிக்க தவறவில்லை.
************
மொகலாய சக்ரவர்த்தி அவுரங்கசீப்பின் மூத்த மகள். போர் செய்து ஓய்ந்து போய் விட்டார் அவுரங்கசீப் .தனது முதல் மகள் தன்னிடம் இருந்து பிரிந்து இருப்பதை எண்ணி கவலை கொள்கிறார். ஜீனத் என்ற மகளை அனுப்பி விட்டு தன்னிடம் அழைத்து வர முயல்கிறார். ஆனால் தானே சிறை படுத்திக் கொண்ட மகள், சிறையில் இருந்து வெளிவர மறுக்கிறாள்.
ஒரே நேரம் மக்களிடம் பரிவும், இளவரசியாக இருப்பதும் இயலாத விடயம் என தங்கை ஜீனத் புரியவைக்க முயல்கிறார்.

மாக்ஃபி தனது தந்தையின் இறப்பிற்கு 5 வருடம் முன் இறந்து, பாசமான தந்தைக்கு தண்டனையும் கொடுத்தார் என்பது நியதி ஆனது. மக்ஃபி கதை 17 ஆம் நூற்றாண்டின் காலவெளியை சொல்லியது. அத்துடன் இந்த நூற்றாண்டு தற்கால அரசியல் கொலை கதையையும் பின்னி கதையை முடித்த விதம் அருமை.

தகப்பன் மகனை கொன்றது, மகள் தகப்பனை தண்டித்தது என வரலாற்றில் கடந்து போன போது தற்கால அரசியலில் கணவனே மனைவியை கொலை செய்து விட்டு வெற்றிகரமாக அரசியல் செய்யும் இந்திய அரசியல் தளத்தையும் வெளிப்படுத்தும் விதம் அருமை!.
எப்படி மக்ஃபி தந்தையின் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நின்றதால் கொல்லப்பட்டாரோ அதே போல் அரசியல்வாதியான கணவனுக்கு எதிராக நிலைகொண்ட பேராசிரியர் மனைவி கொல்லப்படுகிறாள். மக்ஃபி கதையை மொழியாக்கம் செய்தது கொலைக்கான காரணமாகிறது. தற்கால தகவல் காலமும் கொல்லப்பட்ட விதம், கொலை ஒரு சான்று இல்லாதே நடைபெறுகிறது.
--------+++++++++---------
மக்ஃபி கவிதைகள் சூஃபிக் கவிதைகளாக இருப்பதால் யாருக்கும் பிரச்சினை இல்லை. மக்ஃபி கவிதைகளில் இருக்கும் காதலும், ஏக்கமும், வலியும், வேதனையும் தத்துவ உலகில் பிறவிக்பெருங்கடலை நீந்திக் கரையேறத் துடிக்கும் ஆத்மாவின் வலியாகவும் வேதனையாகவும் தாகமாகவும் தவிப்பாகவும் இருப்பதாக இலக்கிய உலகம் கொண்டாடியது.
''''********""""""""""****""**
ஆனால் ஆலம்கீரின் மகளாக இருப்பதோ அவுரங்கசீப் வாழ்ந்த காலத்தின் மனசாட்சியாக மக்ஃபி இருந்ததையோ கொண்டாடவில்லை. அப்படி வரலாற்று நெடுக கேள்வி கேட்கும் சிந்திக்கும் பெண்களை விட துயருற்று இருக்கும் பெண்களை வரலாற்றுக்கும் பிடித்து போயுள்ளது என்பது முரண் தான்.
அன்று மக்ஃபி
நேற்று கவிதா
இன்று அபி என மக்ஃபி மரிப்பது இல்லை என முடித்து உள்ளார் ஆசிரியை.
Power depends upon ceremony and state, as much as upon abilities and strength of mind.
I was born as a prince, said he, and I know not how to act the part of a slave!
Daughter of aurangzeb saw from behind a curtain the behaviour of Shivaji. She was struck with the handsomeness of his person and she admired his pride and haughty deportment. எல்லா கதாப் பாத்திரங்களையும் மனதிற்கு இதமாக படைத்து இருக்கிறார். எல்லா கதாப் பாத்திரங்களும் அத்தனை எளிதாக மனதை விட்டு போகாது இருப்பது இக்கñதைபின்னலின் சிறப்பு ஆகும்.



ஐவருமாய் - சிறுகதைகள்



பதிப்பகம் அன்னை ராஜேஸ்வரி , சென்னை, தொடர்புக்கு 9444640986
பக்கங்கள் 168, செப் 2023 ல் வெளியான இப்புத்தகம் 190 ரூபாய் விலையில் பெறலாம். bookudaya@gmail.com
குடிகார தந்தைக்கு பிறந்த மகள்கள் தனக்கு ஒரு துணையை தேடும் போது அதே போன்ற குடிகாரங்களை தேர்ந்து எடுத்து தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்வார்கள். அதே போன்று கணவன் காதலன் நண்பன் என ஏதோ ஒரு காரணம் கொண்டு பிடித்து போகும். எவனில் எதை விரும்பவில்லையோ அடுத்து தங்கள் வாழ்க்கையில் தேர்ந்து எடுக்கும் நபர்களும் அதே பலவீனம் கொண்டவர்களாக தேர்ந்து எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்.
ஆண் பெண் உறவின் சிக்கல்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பெருகுவதும் கொலையிலும் தற்கொலையில் முடிவதிலும் நேர்மையற்ற உறவு சிக்கல்களே ஆணி வேராக உள்ளது.
ஒரு ஆணால் எத்தனை வயது ஆனாலும் தன் பேச்சால் பெண்களை தன் வசப்படுத்துவதும் , தன் தேவைக்கு தீனி போட வைத்து கொள்வதும் அடுத்த நகர்வில் அந்த புறக்கணிப்பு ஆண்களுக்கு தங்கள் ஆண்மையின் மேன்மையாகவும், அதே நேரம் பாதிக்கப்படும் பெண்களை குற்ற உணர்ச்சிக்கு கொண்டு வந்து, அவர்களை தாழ்வு மனப்பான்மைகுள் வைத்து, மறுபடியும் தனக்கு சாதகமாக இரையாக்கும் போக்கு இணைய கருவிகள் வேகத்தை கூட்டுகிறது.
யாரும் யார் அனுபவத்திலும் கற்றுக் கொள்ள போவது இல்லை. இது ஒரு உணர்வு போராட்டம் என்ற நிலையில் நேர்மையான துணிவான ஆட்கள், தண்டிக்கப் படுவதும் தாழ்வு மனப் பான்மை கொண்ட நேர்மையற்ற ஆண்கள் தங்களை மேலும் மேலும் நிறுவி கொள்ள இந்த சமூக கட்டமைப்பும் சாதகமாக உள்ளது. ஆண்களால் பெண்களை வேசி, தரங்கெட்டவள் என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் உணர்வு நிலையில் தங்களை மேம்படுத்தி வைத்து கொள்வதும் பெண்கள் நொறுங்கி இல்லாதாகி போகும் அவலம் கொண்ட சமூகம் இது.
அந்த நுண் உணர்வு, உறவு சிக்கல்களை இப்புத்தகம் தெளிவாக புரிய வைக்கிறது.
எளிய பெண்கள் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க மட்டுமல்ல, உறவு என்ற ரீதியில் புதைக் குழியின் ஆழத்தை விளக்கும் புத்தகம்.

பரசாற்றலோ நல்வழிப்படுத்தல் என்ற பாங்கில் இல்லாது போகிற போக்கில் வாழ்க்கை இவ்வளவு தான் பெண்களை சுற்றி பல பல பெயர்களில் ஈக்கள் போல வரும் ஆண்களை கையாளும் ஒரு உக்தி , ஆறுதல் தரும் எல்லாம் இயல்பு என்ற புரிதல் தரும் புத்தகம்.
எளிதாக. வாசித்து கடந்து போகலாம். ஒவ்வொரு வார்த்தையிலும் பொதிந்த ஆழமான கருத்துக்கள் பிற்பாடு அசை போடவைக்கும் புத்தகம் இது. பெண்கள் தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளவும் துணை செய்கிறது.
டாக்டர் ,இது என்ன ஊசி?
இந்த ஊசிப் போட்டா எனக்கு தூக்கம் வந்திடுமா... தூங்கிடுவேனா
நான் தூங்கும் போது போன் வந்துச்சுனா
"கூப்பிடுறேன்.....கூப்பிடுறேன் டா"
மெல்ல மெல்ல
அவள் கண்கள் மூடின அந்த நள்ளிரவில் அவள் போனிலிருந்து
வைப்ரீஷன்ன்ன்ன்
கூப்பிடுறேன்.....கூப்பிடுதேம்மா......
அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.......



5 Dec 2023

என் ஜோசப் தாத்தா வீடு!

 தாத்தா வீட்டில் ஒரு வேட்டை தோக்கு இருந்தது. அது சுவரில் மாட்டிக் கிடக்கும். தாத்தா ஓர் ஜீப்பும் வைத்து இருந்தார். தாத்தா பொரையார் நாடார் காலம் மூணார் வந்து,  அங்கு இருந்து பீர்மேடு சென்றவர். 

அதனால் எங்கள் தோட்டத்தில் பழங்கள். வைத்து சாராயம் காச்சும் வித்தையும் அறிந்து வைத்து இருந்தார். என் தாத்தாவின் அண்ணன் ஆசிரியராக இருந்தும், தாத்தா நான்கு வயது இருக்கையில் பெற்றோர் இறந்த நிலையில் சகோதரர்கள் பராமரிப்பில் வளர்க்கப் பட்டவர். ஒரு சகோதரி மட்டும் இருந்தார் என கேள்வி பட்டுள்ளேன். 

ஆங்கிக்கன் சபையை சேர்ந்த தாத்தாவால் குடும்பக் கட்டுப்பாட்டில் ஒதுங்கி இருக்க இயலவில்லை. அவருக்கான ஒரு உலகம் எஸ்டேட் தோட்டங்களில் இருந்தது. 

எ.வி.டி எஸ்டேட்   குமஸ்தாவாக இருந்த  இடையன் குடியை சேர்ந்த A.V தாமஸ் எஸ்டேட் முதலாளியாக  உருவாகி வரும் காலம் . தாத்தா பக்க பலமாக இருந்ததால் எஸ்டேட்டில் தாத்தாவிற்கு 25 ஏக்கர் நிலம் எஸ்டேட் வீடுகளுடன் சேர்ந்து ஒரு வரிசையான வீடும் கிடைத்ததது. 


அந்த வீட்டில் பிறந்த மகன் வழி முதல் பேத்தி ( பெரியப்பா காதல் திருமணம் என்பதால் பெரியப்பா பிள்ளைகள் அந்த வீட்டில் பிறக்க வில்லை.) என்பதால் எனக்கு ஒரு தனி இடம் இருந்தது. 


என் தம்பி பிறந்த போது மறுபடியும் அந்த வீட்டில் விடப்பட்டேன் . அப்போதே சாந்தா சித்தி எனக்கு பால் சேர்க்காத டீ தந்தார் என்று ஆட்சி செய்யும் அளவிற்கு குட்டி அதிகாரம் எனக்குள்  இருந்தது.

எங்கள் குடும்பத்தில் ரசல் சித்தப்பா மனிதர்களோடு இயங்கி, உதவிகள் செய்து  பழகுபவராக இருந்தார். அதனால் சித்தபாப்பவை சுற்றி ஒரு பெரும்  ஆண் பெண் பட்டாளம் இருந்தது.

என் அப்பா தன் கதையை மட்டும் பார்த்து அப்போதே வேலையில் காத்திரமாக இருந்தார். சொத்துக்கள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 

ரசல் சித்தப்பா அறையில் இருக்கும் கட்டிலில் நான் உறங்கிய நினைவு உண்டு. காலை விழித்து சன்னல் வழி பார்த்தால் வாழை மரம் குலைத்து நிற்பது காணலாம். பக்கத்தில் ஒரு எட்வட்  ரோஜா செடியும் உண்டு. சித்தப்பாவை தேடி ஆண் பெண்கள் காலையில் வந்து விடுவார்கள். மாட்டு பண்ணை வைத்து இருந்ததால் காலையில் மாட்டில் பால் எடுக்கும். வேலையில் மும்முரமாக பணியாட்களும் இரண்டு சித்தப்பாவும் கிளம்பி விடுவார்கள். 

சித்தப்பாக்கள் அந்த பாலை கேன்களில் நிறைத்து டவுனுக்கு கொண்டு போய் கொடுத்து வருவார்கள்.   அப்போது என் சித்தியுடன் தோட்டத்தில் இருந்து பப்பா பழம் தின்று கொண்டு இருப்பேன். 


எல்லா பண்டிகைகளுக்கும் பெரியப்பா சித்தப்பா அத்தை சில போது மாமி பிள்ளைகளுடன் தாத்தா வீட்டில் தான் கொண்டாடினோம். குழந்தைகள் எங்களை சுதந்திரமாக. விளையாட பேச அனுமதித்தவர். என் அப்பாவிடம் கிடைக்காதே துரைகள் என்ற விளியுடன் உள்ள நேசத்தை  தாத்தாவால் பெற்று வளர்ந்தேன். என் அப்பாவிடம் பேசாத கதைகள் ரசல் சித்தப்பாவுடன் பேச இயன்றது. 


தாத்தா மதியம் டவுனில் இருந்து வரும் போது எனக்கு பிடித்த போண்டா வாங்கி கொண்டு வருவார். தாத்தா ,பாட்டி கதை பேசிக்கொண்டு இருக்க நான் அருகில் இருந்து விளையாடிக் கொண்டு தின்றுக் கொண்டு இருப்பேன். 

என் பாட்டி நெய்யூரை சேர்ந்த ஒரு ஆங்கிலிக்கன்  சபை  பாஸ்டர் மகள் அவருக்கு உலகம் வெத்தலை செல்லம் . அவர் பேசும் மொழி வெற்றிலை இடிக்கும் இசை தான். பொதுவாக யாருடனும் பேசாது இருப்பவர். அவர் வெளியே கிளம்பும் போது சுருக்கு பை போன்ற ஒரு பையை கையில் தொங்க போட்டு மெதுவாக நடந்து செல்வார் , மெதுவாக பேசுவார். வயதான பின்பு கொஞ்சம் கழுத்து ஆடும் படி இருந்தது. 

என்னமோ என் குழந்தை பருவத்தில் என்னை கவர்ந்தது ரசல் சித்தப்பாவும் தாத்தாவும் தான். . தாத்தா தனது 90 வயதில் இறக்கும் வரை என்னிடம் அன்பு பாராட்டி கொண்டு இருந்தவர். எனக்காக காட்டு இறச்சிகள், கின்னி கோழி முட்டைகள் சமைத்து தந்துள்ளார்.  வீட்டில் உதவி செய்ய பணி பெண்கள் இருந்தனர்.  பாட்டி பொதுவாக மந்தமாக எந்த வேலையும் செய்யாது வெற்றிலை செல்லம் மற்றும் பைபிள் உடன் கழித்தவர். அவரை நோக்க ஊரில் இருந்து வரும் அவர் சகோதரி பிள்ளைகளை கண்டால் வழக்கத்திற்கு மீறி கொஞ்சம் முகத்தில் மகிழ்ச்சியை காட்டுவார். பாட்டியின் இளைய தம்பியும் தனது அக்காளை பார்க்க வந்து கொண்டு இருந்தவர். அன்பாக துரைகளே என்று அழைத்துக் கொண்டு எனக்கு காட்டு இறச்சிகளை சிறிய பாத்திரத்தில் எடுத்து வருவதை வழக்கமாக வைத்து இருந்தார். நான் ஒரு ஆஸ்துமா நோயாளி என்பதால் கரிமந்தி இறச்சியை,  தாத்தா பிரத்தியேகமாக எடுத்து வருவார். 

கடைசியில் தாத்தா ஒரு பக்க வாதத்தால் சரியும் வரை என்னிடம் அன்பு பாராட்டினவர். என் திருமணம் நிச்சயமான சில மாதங்களில் இறந்தார் என் கணவர் குடும்பம் கன்னம்குளம் என்பது அழங்கம்பாறையை சேர்ந்த தாத்தாவிற்கு உவப்பாக இருக்கவில்லை. தன் கருத்தை என் அப்பாவிடம் சொல்லவும் தயங்கவில்லை. 

கிழக்கு உதிக்கும் ஒற்றை நச்சத்தரத்தை தாத்தாவாக கண்டு.வைத்து   இருந்தேன். பின்பு பெரியப்பா சித்தப்பா, அப்பா, அத்தான்  என வானில் நிறைய நட்சித்திரங்கள் உதிக்க துவங்கிய பின் நான் நச்சத்திரங்களை பார்ப்பதையே நிறுத்திக் கொண்டேன்.