27 May 2020

அன்னையர் தினம்

இன்று அன்னையர் தினம் என்றதும் பல ஆண்கள் அனாதை ஆசிரமத்தில் தாய்மார்களை சேர்த்து விட்டதை பற்றி கண்ணீர் கவிதை எழுதுவார்கள் .
தாயை கடைசி காலம் வரை கண் கலங்காது கவுரவமாக பார்த்து கொள்வதில் மகனின் கடமை நிறையவே உள்ளது.
தென்னகத்தில் அம்மாவை பார்த்து கொள்ளும் பாரிய கடமை, அடுத்த வீட்டில் இருந்து தன்னுடன் வாழ வந்த பெண்ணிற்கு என தப்பு கணக்கு வைத்துள்ளனர்.
தாயை அனாதையாக விடும் மனக்குத்தையும் மனைவி மேல் சுமத்தி விடுவார்கள்.
தாய்மார்களும் தங்களை பார்த்துக்கொள்ளும், தங்களை நேசிக்கும் மனநிலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.50 வயது ஆவதற்கு முன்னே பல தாய்மார்கள்; தாங்கள் நோயாளிகள், தங்களை யாராவது தாங்க வேண்டும் என்ற குழந்தைமைக்குள் புகுந்து விடுகின்றனர்.
தாய்மை அதிகாரவும் அல்ல , உரிமையுமல்ல. அது மனித வாழ்க்கையில் கடந்து சென்ற அழகான நிலை. அந்த நிலையை எண்ண எண்ண மகிழ்ச்சி கொள்ளலாம் இருமாப்பு கொள்ள ஒன்றுமில்லை.
இந்தியாவில் பெற்ற குழந்தைகளை மட்டுமே வளர்க்கும் சமூக சூழல் உள்ளது. தான் பெற்ற குழந்தைகளுடன் பெற்றோரற்ற ஒரு குழந்தைக்காவது தாயாக வளர்ப்பதை தாய்மைகள் நினைத்து பார்க்க வேண்டும்..
தன் குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது, அதை செத்த பிறகு தருகிறேன் என ஆசை காட்டுவது , நான் வளர்த்தேன் நீ என்னை கடைசி காலம் வரை பார்த்தே தீர வேண்டும் என்ற உணர்ச்சிப் பிடியில் வைக்க தேவையில்லை. அது உண்மையான தாய்மையும் அல்ல.
தாய்மை ஒரு மன நிலை. அந்த மனநிலையில் பொறாமை, போட்டி, இல்லாது அன்பு நிரம்பி வழிவதால் போற்றுகிறோம். அந்த மனநிலை பெற்ற பிள்ளையிடம் மட்டுமல்ல எல்லா உயிர் இனங்களிடவும், பரிவுடன் பரவி விரவிக் கிடப்பதால் பூமி அன்பாக காட்சியளிக்கிறது.

தாமிரபரணி நாகரீகம்


தாமிரபரணி நாகரீகம் 10,000 ஆண்டுக்கு முந்தையது. உலக நாகரிகத்தின் தொட்டில். உலக நாகரீகம் ஆற்றம்கரையில் வளர்ந்தது போல தமிழர் நாகரீகம் வளர்ந்தது தாமிரபரணிக்கரையில் என்கின்றனர்.
இலங்கைக்கும் திருநெல்வேலி தாமிரபரணிக்கும் உறவு இருப்பதாக கதை சொல்கிறது.
குமரி கண்டம் இருந்த போது தமிழ்நாடும் இலங்கையும் ஒன்றாக இருந்துள்ளது. அந்த காலத்தில் இலங்கை வரை அன்றைய தாமிரபருணி ஓடியதாம். அசோகர் காலத்து கல்வெட்டில் இலங்கையை குறிக்கும் வண்ணம் தாமிரபரணி என்ற பெயர் உள்ளதாம். தாமிரபரணி இலங்கையில் ஓடியதாக மார்கண்டேய புராணவும் கூறுகிறது.
மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை இலங்கை தீவு புத்த பிக்குக்களால் தம்பர பன்னி என அழைக்கப்பட்டதாம்.
(அழகான தீவு என்ற அர்த்ததில் லங்கா ஒன்றும் அழைத்துள்ளனர். சங்கு என்பதற்கு மற்றொரு பொருளும் சிலோன் என்கிறார் கால்டுவெல்).
தம்பா பன்னி என்ற பெயரை தாம்ரபரணி என இலங்கையில் குடியேறிய விஜயன் குழுவினர் அழைத்ததாக மகாவம்சத்தில் குறிப்பிட்டு உள்ளதாக சொல்கின்றனர்.
கி.பி80 ல் இலங்கையின் பெயர் தாப்ரோபணி என்கிறார் பெரிப்ளூஸ்.
இந்த குடியிருப்பு சிலோன் மேற்குக் கடற்கரையிலுள்ள புட்லம் என்ற உஊரின் அருகே உள்ளது என்பது தெரிகிறது.
இது எங்க ஊர் முக்கிய ஆறு தாமிரபரணி கூடுதுறைக்கு எதிரே அமைந்துள்ளதாம்.
விஜயன் வீரர்கள் பாண்டியர்களுடன் திருமண உறவு ஏற்படுத்தி இருந்ததாகவும் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள சில இனங்களுக்கு சிங்கள தொடர்பை நினைவுப்படுத்தும் மறபுகளும் பெயர்களும் உண்டு என்கின்றார் கால்டுவெல்.
இவர்களால் தான் இந்த நதிக்கு தாமிரபரணி என்ற பெயர் வந்திருக்க வேண்டும் என்கின்றனர்.
தாலமியில் காலத்தில் இந்த ஆற்றை கிரேக்கர்கர்கள் சோலன் என குறிப்பிட்டுள்ளனர். அதே நேரம் கிரேக்கர்கள் சிலோனை தப்ராபன்னி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கும் முன்னைய மகாபாரதத்தில் தாமிரபரணி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தில் மகாநதி எனக்குறிப்பிட்டுள்ளனர்.
தாமிரபரணியை தமிழ் நூல்கள் பொருநை எனக்கூறுகிறது.
( இந்த சில குறிப்புகள் இப்புத்தகத்திலும் காணலாம்Book The Vijayan Legend and The Aryan Myth - Gunasekaram S.J பக்கம் 26-27, 40 )

பொதிகை மலை


வடநாட்டிற்கு இமயமலை போன்றது தென்னகத்திற்கு பொதிகை மலை. இது மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும்.தாமிரபரணி தோன்றுவதும் பொதிகை மலையில் தான். அகத்தியர் வாழ்ந்ததும் இந்த மலையில் என்கின்றனர். அகத்தியர் மலை, மலையம்,தென்மலை, தொன்மலை, தமிழ்மலை, செம்மலை, சிவன்மலை என பல பெயர்களில் அறியப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிகரம் தொட்டபெட்டாவிற்கு அடுத்தது பொதிகைமலை. அகத்தியருக்கு முருகன் தமிழ் கற்றுக்கொடுத்த மலையும் இதுவே.
இந்த மலையின் ஒரு பகுதி திருநெல்வேலி மாவட்டத்தையும் மற்றொரு பகுதி கேரளா நாட்டையும் சேர்ந்தது. பாண்டிய சேரநாட்டின் எல்கையாகும்.
சித்திர மாதத்தில் மக்கள் இந்த மலையில் பயணம் ஏற்படுகின்றனர்.
பல வகை மூலிகைச்செடிகள்,தேக்கு, கோங்கு , வேங்கை போன்ற மரங்கள், யானை, புலி, கடுவன் , சிங்கவால் குரங்குகள் கரடி போன்ற மிருகங்கள் உண்டு.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6200 அடி உயரத்தில் உள்ள மலை இது.
பழங்குடி மக்களான குறவர்கள், காணிக்காரர்கள், பளியர்களும் இங்கு வாழ்கின்றனர்.
அதே போல் பல சித்தர்கள் வாழ்கின்றனர். கோயில்கள், கோட்டைகள் , அணைகள், நீர் வீழ்ச்சிகள் இங்கு உண்டு. பல நதிகள் இங்கிருந்தே உற்பத்தியாகிறது.
பொதிகை மலையில் ஓராண்டுக்கு 200 மைல் பரப்பளவில் 300 அங்குலம் மழை பெய்வதால் தான் திருநெல்வேலி, துத்துக்குடி பகுதிகள் எப்போதும் வளமையாக உள்ளது.
வருடம் ஒரு முறை, எங்கள் மாணவர்களுடன்; தாமிரபரணி நதிமேல் அக்கறை கொண்ட எழுத்தாளர், ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சியின் கவனத்தை உலக அளவில் திருப்பிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசர் வழி காட்டுதலில் பொதிகை மலையூடாக பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
Agasthiyar Falls, Tirunelveli.
பொதிகை மலை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ளது.
வருடம் முழுதும் விழும் நீர் வீழ்ச்சி அகத்தியர் அருவி இங்கு தான் உள்ளது.
இந்த இடத்தில் தான் அகத்திய முனிவருக்கு முருகன் தமிழ் கற்றுக் கொடுத்துள்ளார். இங்கு அகத்தியர் மற்றும் முருகபெருமானின்கோயிலும் உண்டு.
இந்த மலையை பற்றி வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்ட்டுள்ளது.
இந்த மலை பாண்டிய நாட்டின் மேற்கு எல்லையாகவும் சேரநாட்டின் கிழக்கு எல்லையாகவும் இருந்துள்ளது.
பொதிக மலையை செம்மலை என்று அழைக்கின்றனர். இந்த மலையில் தோன்றும் தாமிரபரணி ஆறு செவ்வாறு என்றும் அழைக்கின்றனர்.

பாண்டியன் கோட்டை- பாபநாசத்தில் உள்ளது மேலணை. இந்த அணை கட்டும் முன் இருந்த நீலகண்டகசத்தை பற்றிய சுவாரசியமான ஆனால் சோகமான ஒரு கதை உண்டு.
பாண்டிய மன்னர் ஒருவர் எதிரிகளிடம் இருந்து தப்பித்து போய் இங்கு கோட்டை அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். அவரின் மந்திரி தான் நீலகண்டன். எதிரிகள் உங்களை சுற்றி கொண்டுள்ளார்கள் என்றுள்ளான் மந்திரி. மன்னர் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க தானே தன் தலையை கொய்து தன் உயிரை மாய்த்து கொண்டாராம். மன்னருக்கு கொடுத்த தகவல் தவறு என பின்னீடு புரிந்து கொண்ட மந்திரி இந்த கசத்தில் விழுந்து உயிர் விட்டுள்ளார். அதனால் இந்த கசத்தை நீலகண்ட கசம் என அழைக்கின்றனர்.

ஒரு சமூகத்தின், இயற்கையின் பாதுகாப்பு இளைஞர்களிடம் எட்டவைப்பதே கல்வியாளர்களின் கடமை.