4 Apr 2020

Trance! சமாதி நிலை ! மலையாளத் திரைப்படம்



கதை வரி பேச்சாற்றல் திறனை வைத்து  மதம்’ என்ற மயக்க மருந்தை மக்களுக்கு புகட்டி   எளிதாக   பணம் ஈட்டலாம் என்ற கருத்தாக்கத்தை மையக்கருத்தாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். பிப்வரி மூன்றாம் வாரம் 2020ல் வெளி வந்த படமிது. கொரோனாவால் இரண்டு வாரம் மட்டுமே தியேட்டரில் ஓட இயன்றது. 

முதல் காட்சி ஏரியல் ஷாட்; அப்படியே கன்யாகுமரி கடல் விவேகானந்தப்பாறை வரை காட்சிகள் விரிகிறது. கடற்கரையில் ஒரு வீட்டில் விஜு பிரசாத் என்ற வாலிபன் தனது ஒரே தம்பியுடம் வசித்து வருகிறார். ஒரு பன்னாட்டு  ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்துக்கொண்டு பகுதி நேர ஆளுமை பயிற்சியாளராக தனது கஷ்ட ஜீவனததை நடத்தி வருகிறார்.

மின்சாரக் கட்டணபபணத்தை,அண்ணா மன்னித்துக் கொள், பிரியாணி சாப்பிட்டு விட்டேன்” என்று குழந்தைத்தனமாக சொல்லும்  மனநோயாளியான தம்பி, மருந்துகள் எடுத்தும்  மனஅழுத்த நோயில் இருந்து மீண்டு வர இயலாத  தம்பியை ஒரு தாயைப்போல் கருதலாக நோக்கும்  அண்ணன். தற்கொலை செய்து கொண்ட  தாய்.  இது தான் விஜுவின் குடும்ப சூழல்.

விஜு பிரசாத்,  தன்முனைப்புடன்,  தன்னுடைய மனப்பிளர்வை துறந்து, தன்னுடைய இயலாமையை படிகளாக மாற்றி  ஒரு  சாற்றிதழ் படிப்புடன் தனது வாழ்க்கையை நகத்தும்  நிலையில், ஒருநாள் ஒரே தம்பியும் தற்கொலை செய்து கொள்கிறான். அதன் பின் விஜுவால் தன்னுடைய  மன அழுத்தத்தில் இருந்து விடுபடாத நிலையில் தமிழகத்தை விட்டு மும்பை நோக்கி பயணம் ஆரம்பிக்கிறான்.

ஒரு விளம்பர ஏஜன்சி பெண்ணிடம் தனக்கு நல்ல வேலை பெற உதவி கேட்கிறார்
அங்கிருந்து கதை ஆரம்பமாகிறது. அந்த நேரம் இரு நபர்கள் தங்களுடைய மத நிறுவனத்திற்கு பேச்சாற்றல் கொண்ட ஒரு ஆள்தேடும் படலத்தில் விஜுவை சந்திக்கிறனர்.  விஜுவின் பின்புலத்தை அறிந்து, தேர்ந்து எடுக்கின்றனர்.

இந்த நபர்கள் மிகவும் மோசமான நிலையில்  இருந்து முன்னுக்கு வந்தப் புதுப்பணக்காரர்கள். கல்வி, அறிவு என எந்த தகுதியும் அற்று, வெறும் பேச்சாற்றலை  மூலதனமாக  கொண்டு கோடிகள் சம்பாதிக்கும் மத நிறுவன வியாபாரத்தை ஆரம்பிக்க திட்டமிடுகின்றனர்.

பக்கத்து ஆலையங்களில் இருந்து காலை காற்றுடன் வரும் ஜெப ஆராதனைகளை தன்னுடைய வேலைக்கிடையில்  கேட்கும் வழக்கம் உள்ளவன் விஜு. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் இந்நிலையில் தன்னால் கடவுளை பற்றி பறைசாற்ற இயலுமா என் சந்தேகிக்கிறான்.

விஜுவிற்கு வகுப்பு ஆரம்பமாகிறது. பைபிள் என்பது 60 புத்தகங்கள் சேர்ந்த ஒரு பெரும் வரலாற்று படைப்பு. வாழ்க்கை, வரலாறு, சட்டங்கள், மன்னர்கள்நீதிவசனங்கள், கதைகள் உள்ளடங்கிய பரந்து விரிந்த பைபிளில் இருந்து குறிப்பிட்ட பேய், நோய், அற்புதங்கள்,காணிக்கை சார்ந்த  சில பகுதிகளை மட்டும் எடுத்து போதிப்பதில்   இருந்து பாஸ்டர் அங்க உடை, நடை கூட பயிற்சி தரப்படுகிறது. தாய் பாசம் கூட விற்பனைக்கு என்ற நிலையில் ஊழியம்  செழித்து வளர்கிறதுமத விளம்பரம்ஜெப எண்ணை விற்பனைமக்களை சந்திப்பதுநேர்முகம் , உரையாடல்கள்பாடல்கள் பாடுதல்ஆடப்படும் நடனம்பணியாளர்கள்உடை என எல்லாமே கட்டமைக்கப்பட்ட  ஒரு நிறுவன அமைப்பிற்குள்  இயங்குகிறது.

தகுந்த பயிற்சி கொடுக்கப்பட்டு பேச்சாளராக மாற்றி மத வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டதுபாஸ்டர் பெயரில் வியாபாரம் கொடிகட்டி பறந்தாலும்  கட்டமைக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தில்  பாஸ்டரும் ஒரு அடிமை தான் என ஒரு கட்டத்தில் புரிந்து கொள்ளுகிறான். பாஸ்டருக்கும் தன்னுடைய முன்னுள்ள ஆயிரம், பதினாயிரம் லட்சம் பக்தர்கள் கூட்டம் பாஸ்டருக்கு  ஒரு போதை!  மனச்சாட்சிக்கும் எப்படியும் முன்னேற வேண்டும் என்ற ஆசைக்கும்  இடையில் தத்தளிக்கிறார்.

 குழுவில் போதகராகவோ  அல்லது பக்தராக மாறின பின்பு விடுதலை பெறா வண்ணம் ஒரு தனி நபர், பக்தி என்ற மாயவலைக்குள் எப்படி மாட்டப்படுகின்றனர்,  தங்களுடைய சுய விருப்பத்தை பேண நினைக்கும்  போது தாக்கப்படவும் நிறுவனங்கள்  கொலைகாரர்களாகவும் மாறத் தயங்குவதில்லை என காட்சிகளூடாக  காண்கிறோம்......

பணத்தை மக்களில் இருந்து ஈடாக்க நவீன தொழில்நுட்பங்களை பயண்படுத்தும் ஊழியக்கூட்டங்களில் அதி நவீன மனிதர்கள் வீழ்ந்து கிடக்கும் அவலம் என இரு முனைகளையும் காணலாம். அரசு ’மதமாற்றம்’ செய்யும் நிறுவனங்களாக வகைப்படுத்தி பல சட்டதிட்டங்கள் வகுக்குகையில் பணம் ஈட்டும் கார்ப்பரேட்டுளாக வளர்ந்த இவைமேல் எந்த அதிகாரவும் செலுத்த இயலாது தன் போக்கில் வளர விட்டுள்ளனர். அரசிற்கும் தனி நபர்கள் மாட்டுப்பட்டு சிக்குண்டு தவிப்பதை நோக்கவோ, சட்டங்களால் தடுக்கவோ , தண்டிக்கவோ வலுவற்றே உள்ளனர்.

மத நிறுவங்களின் அடிப்படையே மனிதனின் முரண் கொண்ட சூழல்களும் அவலங்களும் குழப்பங்களுமே. இதனாலே மனிதர்கள் இதுபோன்ற மத நிறுவனங்களால் வேட்டையாடப்படுகின்றர். இது போன்ற கூட்டங்கள் வளர்ச்சிக்கு சொல்லப்படும் பரிசுத்தம், நெறி, பாவம் மன்னிப்பு, ரட்சிப்பு, என சொல்லிக்கொண்டு  மயக்கு மருந்து, பெண்கள் என எல்லா கெட்ட வழிகளையும் ஏவி விட்டு மனிதர்களை அழிக்கும் அவலத்தையும் சொல்லிய படம் இது.

உண்மையான ஆன்மீக வழிகள், சட்டங்கள், அரசு, எதனாலும்  கட்டுப்படுத்த இயலாத சூழலில் இவர்கள் முன்   மீடியாவும் தன்னுடைய  பணம் ஆசையால்  பின் வாங்கி  போகிறது.

இவர்களால் பாதிப்படைந்த,  தன் ஒரே மகளை இழந்த ஒரு எளிய மனிதன், இரு  நபர்களையும் வெட்டி கொல்வதுடன்  நிறுவனம மூடப்படும். அந்த மனிதன் வைத்திருக்கும் கொடுவாள் தென் இந்தியா கோயிலுகளின் சாமியாடுபவர்கள் பயண்படுத்தும், தெய்யம் என்ற கலை நிகழ்வுகளில் கலைஞர்கள் பயண்படுத்தும்  மிகவும் பழைமையான ஆயுதம்  ஆகும். புது வரவுகளான கார்ப்பரேட் மதவாதத்தை  அழிப்பது   அல்லது மக்களை மீட்டெடுப்பது  நமது கலாச்சாரம்பண்பாட்டோடு இணைந்த நம்பிக்கைகள், கலைகள் பாரம்பரியமான சிந்தனை வளங்களை மெருகேற்றுவது   வழியாக மட்டுமே  சாத்தியம் எனப் புரிந்து கொள்ளலாம்.

இந்த திரைப்படம் உளவியலாக மென்மையான வலுவற்ற மனிதர்களை மனப்பிளர்வால் பாதித்த மனிதர்களை வைத்து மதம் என்ற பெயரில் எப்படியாக பணம் ஈட்டுகின்றனர் என்பதை விருவிருப்பான திரைக்கதை, இசை, நடிப்பால்,  எடுத்திருப்பதே இப்படத்தின் சிறப்பு.

ரசூல் பூக்க்குட்டியின் இசை இந்த  படத்திற்கு உயிரூட்டியுள்ளது. அவ்வளவு தத்துவரூபமாக படக்கதையுடன் இணைந்த இசைக்கோர்வை. கதைத்தளம் கிறிஸ்தவமாக இருந்தாலும்  பெரும்வாரியான கலைஞர்கள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள்.  இதே உண்மையுடன் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் பற்றியும் ஒரு  படம் வந்தால் சிறப்பாக இருக்கும்.

உலகாமயமாக்குதல் நாடுகளை கிராமங்களாக தங்களுக்குள் ஸ்வீகரித்து கொண்ட போது மதங்களும் உலகமயப்படுத்தப்பட்டு கார்ப்பரேட்டுகளாக உருமாறியது.  ஆறுதல் தருகிறேன் என  மெதுவாக புகுந்த மதங்கள் மனிதர்களின் இயல்பை  கெடுத்து,  மக்கள் துயர்களையும் கண்ணீரையும் தங்களின் தளமாக  அமைத்து  வளர்ந்துள்ள கொள்கையற்ற அல்லேலூயா கிறிஸ்தவ அடிப்படவாதத்தின் தோலை உரித்த சிறந்த படம். நமது காலாச்சாரம், பண்பாடு மேல் தொடுக்கும்  தளங்களை தோலுரித்து காட்டும் இது போன்ற திரைப்படங்களை மதம் கடந்து எல்லாரும் பாராட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

 இது போன்ற படம் தமிழில் வர வேண்டும் என நினைப்பது பேராசை தான். ஆனால் வருவது மிகவும் கடினம். இதே படத்தை அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்யலாம். இதில் நடித்திருக்கும் நடிகர்கள் தமிழர்களுக்கு அன்னியர்கள் அல்ல. கேரளாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினரல்ல, இருந்தாலும் இதுபோன்ற படங்களின் உண்மைத்தன்மையை ஏற்று கொள்ள தயங்க மாட்டார்கள்.

பகத் பாஃசில் அங்கீகரிக்கப்பட வேண்டிய மிகவும் தனித்துவமான  நடிகர்பகத் நடிப்பிற்கு ஒரு ஆஸ்கார் விருது கிடைத்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லைஅவ்வளவு கச்சிதமான நடிப்பு எந்த மிகைப்படுத்தலும் இல்லாது கதாப்பாத்திரத்தை அப்படியே உள்வாங்கி தனது உடல்மொழியால் அப்படியே வெளிப்படுத்தியிருப்பார்.  பாசமான அண்ணன், வாழ்க்கையில் போராடும் இளைஞன், பாஸ்டர், காதலன் என அந்தந்த கதாப்பாத்திரமாக உருமாறி கொண்டுருப்பார்.

கவுதம் வாசு மேனோன்,செம்பன் போத்தன் மத கார்ப்பரேட்களாக  நடித்திருப்பார்கள்.   பாஸ்டரின் பயிற்சியாளராக வரும் டிலீஷ் போத்தன், விநாயகன், பத்திரிக்கையாளராக நடித்திருக்கும் சௌபின் சாகிர்,  எஸ்தர் கதாப்பாத்திரம்  நஸ்ரியா(பகத் பாஃசில் மனைவி), ஒவ்வொருவரும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர்

முதல்ப்பகுதி திரைக்கதை இயக்குனர் அன்வர் எழுத்தில் தேவையான வேகம் விருவருப்புடன் செல்கிறது. இரண்டாம் பகுதி வின்சன்று வடக்கன் எழுத்தில் கொஞ்சம் தொய்வு தட்டுவதை மறுக்க இயலாது.  அமல் நீரட்ன் ஒளிப்பதிவு அருமை.  BGM சுஷின் ஷ்யாம் மற்றும் ஜாக்சன் விஜயனும் சேர்ந்து செய்துள்ளனர்.

அல்லேலூயா கூட்டங்களில் வேகமான இசை, தேர்ந்தெடுத்த குத்துப்பாட்டு, இசை, நடனம் கைதட்டுதல் ஊடாக ஒரு மின்சாரப்பாய்ச்சலை  நாம் உணருவோம். அதே மின்சார அதிர்வை இந்த படவும் தந்துள்ளது.  

இந்தியாவில் உள்ள பிராதன சில கார்ப்பரேட் சாமியார்களின் இந்திய பணமதிப்பில் வருமாகக் கணக்கு கொடுத்துள்ளேன். அப்போது இப்படத்தின் நோக்கம், தாக்கம் தேவை நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.

Paul Dhinakaran Baba 5000 crore,  Mata Amritanandamayi  -1500 crore, Baba Ramdev  -1500 crore,Sri Sri Ravishankar  - 1000 crore, Asaram Bapu  -350 crore,Gurmeet Ram Rahim Singh Insaan  300 crore, Acharya Balkrishna  - 94.84 crore, Avdhoot Baba Shivanandji Maharaj -40 crore, Satguru Jaggi Vasudev  16 crore


இந்த திரைப்படத்திற்கு Trance என்ற பெயர் எதனால் வைத்திருக்கிறார்கள் என சிந்தித்திருப்பீர்களே. அதன் பொருள் சமாதி நிலை. அல்லது தன் நினைவிழந்த நிலை. சரியான பெயரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர் படக்குழுவினர். 

3 Apr 2020

திரைப்படம்: கும்பளங்கி நைட்ஸ்.Malayalam Movie!

ஒரு அழகான காயல் கிராமம். அந்த கிராமத்தில் ஒதுக்கு மூலையில் ஒரு இடிந்து- உடைந்த வீட்டில் நான்கு சகோதரர்கள் வசிப்பார்கள். சகோதரர்கள் தங்களுக்குள் சண்டை போட்டு , குடித்து கொண்டு , உழைக்காது ஏதோ ஒரு வாழ்க்கை நடத்தி கொண்டு இருப்பார்கள். அந்த வீட்டிலுள்ள இளைய சகோதரன் மட்டும் கல்லூரியில் சேர்ந்து படித்து கொண்டு இருப்பான். அவனுக்கு மட்டும் தான் தன் வீட்டு நிலையை நினைத்து வருத்தம்.

பானை நிறைய கோழிக்குழம்பு செய்து வைத்து தன் சகோதர்களுக்காக காத்திருப்பான். ஒருவன் தின்பான் இன்னொருத்தன் பேசி பேசி சண்டையிட்டு மல்லிட்டு கொண்டு இருப்பார்கள். பொங்கி வைத்தவன் மனம் நொந்து அந்த ஊர் சின்ன குழந்தைகளுடன் விளையாட போய் கொண்டிருப்பான்.

அவர்களை இணைக்க ஒரு வீடு என்ற ஒரு கட்டிடம் இருந்தாலும் மனதால் இணையாது ஆளாளுக்கு தங்களுக்கான மனநிலையில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.அந்த வீட்டு இரண்டாவது பையன் திருமணம் என்ற நீடிய பந்தத்திற்குள் செல்லும் மனநிலையில்லாது அப்போதைய உடல் தேவைக்கு ஒரு பெண் கிடைத்தாள் என நினைத்து கொண்டு ஒரு உறவிற்குள் விழ எத்தனிப்பான்.. ஆனால் அப்பெண்ணோ "நாம் ஏன் திருமணம் செய்து வாழக்கூடாது" என சிந்திக்கவைப்பாள். திருமணம் என்றதும் ஒரு நிரந்தர வேலை வேண்டும், ஒரு நல்ல குடும்பம் என்ற அடையாளம் வேண்டும், தங்களை வழி நடத்த பெற்றோர் வேண்டும் என தெரிய வரும்.

இப்படி கதை நகருகையில் அந்த வீட்டிலுள்ள மூத்த சகோதரனுக்கு ஒரு தமிழன் நண்பன் கிடைப்பான். தமிழ் நண்பன் காதல் திருமணம் செய்து வந்து கேரளாவில் வாழ்க்கை நடத்தும் பொறுப்பான மனிதன். அவன் உழைப்பில் இவனும் காலத்தையும் ஓட்டிக் கொண்டு இருப்பான். எதிர்பாராத ஒரு சம்பவத்தில் தமிழ் நண்பன் இறந்து விடுவான். கொலைப்பழி இவன் மேல் விழும். அந்த கேஸில் இருந்து விடுதலையாகி நண்பனின் மனைவியிடம் மன்னிப்பு கேட்க போயிருப்பான். மனைவிக்கு பிரசவ நாள் நெருங்கிய வேளையில் கணவரும் இறந்த நிலையில் நண்பனின் மனைவிக்கு உதவ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவான்.

குழந்தை பிறந்ததும் தன்னுடைய வீட்டுக்கு கொண்டு வரவேண்டிய கட்டாயம். ஊர்க்காரர்கள் நண்பன் மனைவியை பற்றி அவள் ஒழுக்கத்தை சொல்லி பழிப்பார்கள். ஒரு பாழடைந்த வீட்டில் மனித மனங்கள் ஒட்டாத வீட்டில் ஒரு தாயும் குழந்தையும் வந்து சேர்வது, அந்த வீட்டில் உடைந்த இதயங்களை ஒட்ட வைக்க உதவும். குழந்தை வளர வளர அச்சகோதர்கள் மனவும் சேர்ந்து மகிழ ஆரம்பிப்பார்கள்.

தங்களது தாய் தங்களுடன் இருந்தால் நல்லது என்ற எண்ணத்தில், தாயை சந்தித்து தங்களுடன் வந்து 10 நாளாவது தங்குங்கள் என கெஞ்சுவார்கள். தாய் அல்லேலூயா குழுவில் சேர்ந்ததால் தன்னால் இனி குடும்பத்தில் இணைய இயலாது, உங்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்று மறுத்து விடுவார்.

காதலித்த பெண் வீட்டில் அக்கா புருஷன் ஒருத்தன் இருப்பான். அவர் ஒரு சைக்கோ பேர்வழி. அவனுக்கு தன் கொளுந்தியாள் விரும்பிகிறவன் தகுதியை பற்றி நிறைய குறைகள் இருக்கும். சைக்கோ, தகப்பன் இல்லா அவ்வீட்டில் பெண்ணையும் கட்டி, அங்கைய அப்பா ஸ்தானத்தை பிடித்து அராஜக ஆட்சி செய்து கொண்டிருப்பதை திறம்பட காட்சி மொழியாக விரிந்திருக்கும்.

ஆண்கள் வசித்து வந்த கதவு சண்ணல் இல்லாத வீடு அன்பான கருதலான பெண்கள் வருகையில் எப்படியாக மாறுகிறது என அழகாக கதை சொல்லியிருப்பார்கள். தமிழ் பெண்ணை எதற்கு கொண்டு வந்தாய் என்று கேட்ட இடத்தில் இருந்து 'அண்ணி' என அவர்கள் எற்று கொள்ளும் இடம் அருமை. 

படத்தின் ஒளிபதிவின் அழகை பற்றி சொல்லவே தேவையில்லை. மலையாளப்படத்தில் பல படங்களில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பகத் பாசில் இப்படத்தில் அக்கா கணவர் என்ற எதிர்மறை கதாப்பாத்திரமாக நடித்திருப்பார்.


வாழ்வியலின் ஆழத்தை , மனித உறவுகளின் அடிநாதமான அன்பின் அதி அழகான பாவங்களை, காதலுக்குள் இருக்கும் பொறுப்பை சொல்லிய அழகான படம். மனித உறவில் நிகழும் ஆண் பெண் உறவின் தேவையும் அதன் தாக்கவும் அதன் வழி நடத்துதலையும் சரியாக எடுத்து காட்டிய படம்.

எல்லா நடிகர்களும் தங்கள் பாத்திரங்களை அறிந்து கூடவும் குறையவும் இல்லாது சிறப்பாக அதன் தன்மையுடன் நடித்திருந்தனர். கல்யாணம் தாலி கட்டினா தானா? காதலில் காமமா அன்பா என விவாதிப்பவர்களுக்கு அனுபவமாக கிடைக்கும் படம் நல்ல உணர்வைத்தரும் படம். உறவோ, நட்போ, காதலோ , உறவுகள் மனிதனை மேம்படுத்துவதை கதையில் காணலாம்.

இந்த அல்லேலூயா கிறிஸ்தவம், பல பெண்களை தங்கள் தாய் , மனைவி என்ற கடமையை மறுதலித்து ஜெபத்தில் தங்களை ஈடுபடுத்தி குடும்ப வாழ்க்கையில் இருந்து தப்பித்து கொள்வதையும் குறிப்பிட்டுள்ளனர்.

அய்யப்பனும் கோசியும்.-Malayalam Movie



இந்த திரைப்படத்தில் இரு கதாப்பாத்திரங்களை சுற்றி கதை நகர்கிறது.

கோஷி ஒரு முன்னாள் ராணுவவீரர். கோஷி கட்டப்பனையில் இருந்தும் அங்கமாலிக்கு நண்பர்களை சந்திக்க செல்கிறான். பயணித்த வாகனத்தில் சாராயம் இருந்தது என்று கைதுச் செய்யப்படுகிறார்.
பல பெரும் புள்ளிகளுடன் தொடர்பு இருப்பதை கண்ட போலிஸ் பிற்பாடு சில வசதிகளை செய்து கொடுக்கிறது. பத்து நாள் ஜெயிலில் இருந்தே ஆக வேண்டிய சூழல்.

வன்மம் கொண்ட கோஷி, இன்ஸபக்டரான ஐய்யப்பனிடம் வன்மம் தீர்கக ஆரம்பிக்கிறான்.அப்புறம் எவ்வொரு நிகழ்வாக தொடருகிறது. கோஷிக்கு தான் செய்தது தவறு எனத்தெரிந்தாலும் பணத்திமிர் தன்னுடைய தவறை ஏற்க மறுக்கிறது. மேன்மேலும் அங்கு சிக்கலை உருவாக்குகிறது. பணத்திமிருடன் ஒரு ரவுடி தகப்பன் வேற. அத்துடன் ஒரு பயந்தாம் கொள்ளி மனைவியும்.


இந்த பக்கம் பார்த்தால் ஐய்யப்பன் ஏதோ அமானுஷிக சக்தி இருப்பவன் போல மாடன்! பாண்டிகளை அழித்தவன் என்ற புனைவு வேறு. அந்தாளுக்கு ரிட்டய்டு ஆக இன்னும் ஓரிரு வருடங்கள் தான் உள்ளதாம். குற்றவாளி தெளிவா கைபேசியால் படம் புடிப்பதை கவனிக்காது இருந்தாராம். ஒரு ஆதிவாசிப்பெண்ணை திருமணம் முடித்து 2 வயது குழந்தை. சரி எத்தனை வயதிலும் கல்யாணம் பண்ணி போடட்டும். ஒரு போலிஸ்காரன் அளவிற்கு மீறி நல்லவனும் அப்புறம் கெட்டவனாகுவது தான் லாஜிக்கை இடிக்கிறது.

திரைக்கதை , ஒளிப்பதிவு , பாடல்கள் , இசை , நடிப்பு எல்லாம் நன்கு தான். இந்த இருவரும் கொழுப்பெடுத்து போய் சண்டை போடுவதை பார்க்கவா நாம் மூன்று மணிநேரம் செலவழிக்கிறோம். பேசும் போதும் ஒழுங்கா பேசி தெரிந்து கொள்ளமாட்டானுகள். சப்போர்ட்டு கதாப்பாத்திரங்கள் தான் விவரித்து கொண்டு இருக்கும்.
போலிஸ் துறையே ஒருவனுக்கு எதிர். அப்பன் கிழவன் அட்டகாசம் அதிலும் சல்லித்தனம். அந்த கிழவனை பிடித்து ஜெயிலில் போட்டிருந்தாலே பல நிகழ்வுகள் நடக்காது படம் இன்னும் சுவாரசியமாக நகந்திருக்கும்.
ஆர்மிக்காரனுக்கு ஒரு மோடேர்ன மனைவி இருப்பா. எப்போதும் பயம் தான். இந்த காலத்தில இப்படி ஒரு மனுஷியா கட்டபப்னையில் இருந்து? சிலை தான் வைக்கனும்.

'பாண்டி' கான்சபட் கதைகளை இன்னும் விடவில்லையா இந்த மலையாளத்து திரையுலகம். இப்போதும் பாண்டிகள் அவர்களிடம் அடி வாங்கி ஓடுவது மாதிரி ஒரு நினைப்பு போலும்.
அவன் பணக்காரன்னு போலிஸ்காரங்களை எடோ போடோன்று அழைப்பது , தனக்க தகப்பன் வயதுடைய கார் ஓட்டுனரை எடா குமாரான்னு அழைப்பது, போலிஸ் நிலையத்திற்கு உள்ளே கையெழுத்து போட வரும் கிரிமினலை தொப்பியை கழற்றி மரியாதை தருவது. மொத்தத்தில் ஜமிந்தார் காலத்தில் எடுப்பது போலய மொக்கப்படம்.
இந்த காலத்தில் ஈகோவாம் ....பகையாம். உரையாடல்கள் அருமை. மற்றபடி இந்த மாதிரி படங்கள் கார் வைத்து கொண்டு, கழுத்து- கையுலை நகை போட்டுக்கொண்டு அடாவடித்தனம் செய்யும் ரவுடி மனநிலையை வளர்க்கும்.
பழங்குடி மக்களை வேற ஒரு சீனில். எனக்கு இந்த படம் பிடிக்கவில்லை. சும்மா வெற்று வேட்டு..சாரமற்ற கதைக்கரு. வன்மத்தை எவ்வளவு நேரம் தான் பார்த்து கொண்டு இருப்பது. நல்ல நடிகர்கள் உழைப்பை பாழ்படுத்தி விட்டனர்.