ஒரு வங்கி வாசலில் நின்று கொண்டிருந்தேன்.அங்குள்ள படிகளில் இருந்து விளையாடிக் கொண்டிருக்கும் அம்மா-மகள்
கண்ணில் பட்டார்கள். அம்மாவுக்கு 27லிருந்து 35 வயதுக்குள் இருக்கும். மகளோ 10
வயது குட்டி பெண்!
அம்மாவின் நான்கு விரல்களை தனது நான்கு விரல்களுக்கு உள்ளாக பின்னி கொள்கின்றாள். பின்பு பெருவிரலை இருபக்கவும் அசத்து கொண்டு சில வார்த்தைகளை பாட்டு போன்று உருவிடுகின்றாள். பாட்டின் முடிவில் இவள் விரல்களை விடிவிக்க முயல்கின்றாள்! அம்மா சிறை பிடிக்க முயற்சிக்கின்றார். அம்மா முதலில் தோற்று கொண்டிருந்தாலும் சில பொழுது சிறை பிடித்து விட்டு நான் ஜெயித்து விட்டேன் என சிரிக்கின்றார். மகள் ஜெயிக்கும் போது அம்மாவிடம் நான் ஜெயித்து விட்டேன் என்று ஆற்பரிக்கின்றாள். இப்படி விளையாட்டு போய் கொண்டிருக்கின்றது. அம்மா சிரித்து கொண்டு ஒரு குழந்தையாகவே மாறி விட்டார். அம்மாவும் குழந்தையும் தோழிகளாக தன் சுற்றும் முற்றும் மறந்து விளையாடி கொண்டிருந்தது பார்க்கவே இன்பமாக இருந்தது.
பின்பு தன் கை முட்டால் தன் அம்மாவின் உள்ளம் கையை நீட்ட சொல்லி பலம் கொண்டு இடிக்கின்றாள். அம்மா கையை பின்னால் இழுத்து கொண்டதும் இந்த விளையாட்டில் அம்மா ஜெயித்து விடுவார் . இப்படியாக விளையாட்டு சலிக்காது போய் கொண்டே இருந்தது. மகளின் கெக்கல் விட்ட சிரிப்புக்கும் அம்மாவின் வெட்கம் கொண்ட புன்முறுவல் சிரிப்பும் ரசிக்கும் படியாகவும் சிந்திக்கப் படியாகவும் இருந்தது. இந்த விளையாட்டு ஊடாக அம்மா மகள் உறவு இன்னும் பலப்படுகின்றது. வாழ்கையில்
தோல்வியும் ஜெயவும் ஒரே போல் எடுத்து கொள்ள பழக்கப்படுகின்றாள். தொடர்ந்து ஜெயிக்க
போராடுகின்றாள் மகள்.
குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடி மகிழும் எங்கள் அத்தை நினைவிற்க்கு வந்தார். தேயிலை தோட்டத்தில் அதிகாரியாக இருந்த மாமா இடும் டவுசருடன் அத்தை நரியாகவும் நாங்கள் கோழியெனவும் விளையாடுவோம். மாமா வந்ததும் வீட்டில் அமைதி நிலவி விடும். அவர்கள் வசித்திருந்த வீடு எஸ்டேட் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டிருந்தால் மலை உச்சியில் நடுகாட்டில் 7-8 அறைகள் கொண்ட விசாலமான வீடாக இருந்தது . இரவில் விதவிதமான வண்டு கத்துவது, நரி ஊளையிடுவதை கேட்கலாம். அந்த வீட்டில் ஒரு பேய் அறை கூட உண்டு. பேய் போன்று முகத்தை வைத்து கொண்டு பேய் கதை சொல்வார் அத்தை. அத்தைக்கு இரண்டு மகள்கள். ஒருவள் படித்து கொண்டே இருப்பாள் இன்னொருவள் கொறித்து கொண்டே இருபாள். எங்கள் வீடு பட்டணத்தில் என்பதால் ரோட்டில் வண்டிகள் போகும் சத்தம் மட்டுமே கேட்டு வளர்ந்த எங்களுக்கு வித்தியாசமாக இருந்தது அத்தை வீடு. திங்கள்கிழமை வீட்டுப் பாடம் செய்யாது பள்ளிக்கு செல்வதற்கு அம்மாவிடம் வெளக்குமார், செருப்பு அடி வாங்கும் வரை விடுமுறை நாட்கள் கொண்டாட்ட நாட்களாக தான் இருந்தது.
இன்று நகர் புற அம்மாக்கள் லிப்ஸ்டிக் இட்ட சிவந்த உதடுகள் , அசத்தலான மாடன் உடை அணிகலங்கள், அரைகுறை ஆங்கில பேச்சு , சிரிப்பை மறந்த முகம் என ஒரு நாடகத்தனம் அடையாளமாகி விட்ட நிலையில் தங்கள் பெற்ற குழந்தைகளிடமும் இயல்பாக இருக்க தவறுகின்றனர்.
அம்மாக்கள் அளந்து பேச குழந்தைகள் தங்கள் குழந்தைப்பருவத்தை அவர்கள் அவர்களாக வளரும் நாட்களை இழந்து கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் தனி உலகை புரிந்து கொள்ளாத பெற்றோர்கள், குழந்தைகளை வசதியாக வளர்க்கின்றோம் என்று தனி அறைகள் அமைத்து கொடுத்து தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்குமான இடைவெளியை பெரிதாக்கி கொண்டிருக்கின்றனர். இதில் படிப்பறிவற்ற பெற்றோர்களை விட படித்த பெரிய வேலையில் இருக்கும் பெற்றோர்களாலே குழந்தைகளின் ஆளுமை அடிபட்டு போகின்றது. தங்களை முன் நிறுத்தி, தங்கள் பெருமை பிரஸ்தாபங்களை காட்டி, பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிறுமைப்படுத்தி விடுகின்றனர். பெற்றோர்-குழந்தைகளுக்கான அருமையான பல தருணங்களை தொலைகாட்சியும் அபகரித்து விடுகின்றது.
பக்கத்து வீட்டிலுள்ள சின்ன பெண்ணை கவனிக்கின்றேன். அவளிடம் பேச தொலைகாட்சியில் மூழ்கி இருக்கும் அம்மாவுக்கும் நேரமில்லை, அவள் ஆச்சிக்கும் நேரமில்லை. அந்த நேரம் அவள் கவனிப்பாரற்று தெருவில் விளையாடுகின்றாள். அவளும் விடியும் முன் ஒவ்வொரு வீடாக ஓடி கொண்டிருக்கின்றாள். அவளை அதே மகிழ்ச்சியான மனநிலையில் வீட்டில் இருப்பவர்களால் வைத்து கொள்ள தெரியவில்லை. தங்கள் தொலைகாட்சி நேரம் முடிந்ததும் தங்கள் சுயநலத்தை மறந்து அக்குழந்தையை குற்றம் சுமர்த்தி அடித்து இழுத்து செல்கின்றனர்.
ஒரு குழந்தை தன் பள்ளி விடுமுறை நாட்களில் சொன்னாள், வீடு போரடிக்கின்றது.... ஏன்? என்றேன். வீட்டில் விளையாட யாருமில்லை என்றாள். ஆச்சியுடன் விளையாட வேண்டியது தானே என்றேன்,
ஆச்சியால் வேகமாக நடக்க இயலாது என்றாள் வருத்ததுடன்.
பள்ளி அடுத்த வாரம் திறக்குமே பள்ளிக்கு சென்றாள் போரடிக்காது என்றேன்.
அவளோ இல்லை இல்லை அங்கு படி படி என்று தனக்கு தலை வலி வருவதாக சொன்னாள்.
இன்னும் சில அம்மாக்கள் வீட்டில் ஆசிரியைகளாக மாறி அக்குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மனிதாபிமான அடிப்படை உரிமைகளை கூட பறிக்கின்றனர். என் தோழி சொல்கின்றார் அவள் 2ஆம் வகுப்பு மகளை காலை 5 மணிக்கு எழுப்பி படிப்பிக்கிறாராம். இரவு 11 மணி வரை படிப்புக்கின்றாராம். இதுவெல்லாம் என் தோழிக்கு தன் மாமியாருடன் சமையல் கட்டில் வேலை செய்யாதிருக்க உதவலாம் பிள்ளை மன வளர்ச்சிக்கு உதவாது.

தமிழகத்தில் பல வீடுகளில் ஆண் குழந்தைகளுக்கு தனி கவனிப்பும் பெண் குழந்தைகளுக்கு இன்னொரு கவனிப்பும் உண்டு. இன்னும் சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு செல்லம் என்ற பெயரில் அவர்களின் ஆளுமை குணம் சாந்த வளர்ச்சியை பற்றி கண்டு கொள்வதில்லை. பல வீடுகளில் தங்கள் குழந்தைகளை அடுத்தவர்கள் வீட்டில் நண்பர்கள் வீட்டில் தங்க அனுமதிக்கின்றனர்.
பேருந்தில் கல்லூரிகளில் மற்றும் தங்களை கவனிகின்றரா என்ற போதையில் பல பெண் குழந்தைகள் நடந்து கொள்கின்றனர். இது இவர்கள் வீட்டில் கிடைக்காத கவனிப்புகளை சமூகத்தில் தேடி சென்று இன்னும் பல பிரச்சனையில் விழ மட்டுமே உதவும். இன்னும் அன்பாக, தோழமையாக, கவனமாக நம் பெண் குழந்தைகளை வளர்க்க கடமைப்பட்டுள்ளோம். அப்படி வளர்க்கப்படும் ஒரு குழந்தையால் தன் பெற்றோரை ஏமாற்றவோ இந்த உலகத்தால் ஏமாற்றப்படவோ இயலாது.

பொறாமைக்கு ஈடும் அவர்களை தவிற வேறுயாராலும் இயலாது. 