7 Nov 2021

பிடிகொடுக்காத குற்றவாளி குறுப்பு!

ஜனவரி 21, 1984 நள்ளிரவு! ஆலப்புழாவை சேர்ந்த 30 வயதான திரைப்படப் சுருள் பிரதிநிதியான சாக்கோ, கெனி (தி ட்ராப்) என்ற திரைப்படச் சுருளை வழங்குவதற்காக டாக்கீஸில் வந்துள்ளார். கடைசிக் காட்சி சினிமா முடிந்ததும் ஹரி டாக்கீஸ் உரிமையாளரின் மகன் கே.ஸ்ரீகுமாருடன் தேநீர் அருந்துகின்றார்.   
 
சக்கோவை  இரவு  தங்கிவிட்டு காலையில் கிளம்பச் சொல்கிறார் கே.ஸ்ரீகுமார். ஆனால் தனது  ஆறு மாத கர்ப்பிணி மனைவியை மறுநாள் காலை தேவாலய விழாவிற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளாதால் வீடு போய் சேரவேண்டும்  எனக்கூறி விடைபெற்று செல்கிறார். அதன்பின் அவரை யாரும்  கண்டதில்லை.

அன்று இரவு சாக்கோ  பேருந்திற்கு  தனியாக காத்து நிற்கிறார். ஒரு கறுப்பு அம்பாசடர் KLQ 7831 கார்  அவரை இரண்டு முறை கடந்து செல்கிறது.  அந்த காரில் சுகுமார குருப்பின் விசுவாசமான டிரைவர் பொன்னப்பன், அவரது மனைவியின் சகோதரியின் கணவர் மற்றும் அபுதாபியில் உள்ள குறுப்புடன் வேலை செய்யும்  சாபு உள்ளனர்.  KLY 5959 என்ற மற்றொரு காரில் குறுப்பு அவர்கள் பின்னால் பயணிக்கிறனர்.
குறுப்பு அந்த சிற்றூரில் உள்ள புதுபணக்காரர். அன்றே இரண்டு டாக்ஸி கார் வெளிநாட்டில் வேலையில் இருந்தவர். ஆறடி உயரமான குறுப்பு ஊருக்கு வந்தால் கறுப்பு கண்ணாடி, கோட் சூட்டுடன் காரில் தான் உலவுவாராம்.


கடந்த சில மாதங்களாகவே குறுப்பின் உருவ ஒற்றுமை கொண்ட ஒரு மனிதனை தேடி அலைகின்றனர்.  ஆரம்பத்தில் குறுப்பின் தோற்றமளிக்கும் ஒருவரின் உடலை பிணவறையில் இருந்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தார்.  அந்த திட்டம் தோல்வியடைந்ததும், கல்லறைகளை கொள்ளையடிக்க நால்வரும் திட்டமிட்டனர்.. அப்படியும் ஆள் கிடைக்காது அலைந்து  திரிந்தவர்கள் கண்ணீல் தான் அந்த இரவு சாக்கோ கண்ணில் படுகிறார்.


குருப்பு விமானப்படையில்  வேலையில் இருந்த  மனிதன். அந்த ஆளுக்கு விரைவில் பெரும் புள்ளியாக மாற வேண்டும். அரசு வேலையை கைவிட்டு விட்டு சவுதியில் ஒரு வேலை தேடி செல்கிறார். மருத்துவ மனையில் நர்சாக பணிபுரிந்த பெண்ணையும் காதலித்து திருமணம் செய்துள்ளார். அப்பேண்ணும் மும்பையில் பின்பு இரண்டு குழந்தைகள் உடன் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். குறுப்பு அபுதாபியிலிருந்து கேரளாவுக்குச் செல்வதற்கு சற்று முன்பு, 3,01,616 திர்ஹாம்கள் (சுமார் ரூ.30 லட்சம்) மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்துள்ளார். குறுப்புக்கு  தான் வாகன விபத்தில் இறந்ததாக சாற்றிதழ் வழங்கினால் 30 லட்சம் காப்பீட்டுத் தொகையை பெறலாம் என்ற நற்பாசை வருகிறது. அப்படி விபத்தில் சாக வைக்க ஒரு ஆளை தேடும் போது தான் அப்பாவி சாக்கோ மாட்டுகிறார்  


சாக்கோவைப் பார்த்தபோது ஆறடி உயரம், குறுப்பின் தோற்ற ஒற்றுமையும் தெரிகிறது. லிப்டு தரலாம் என்று கூறி காரில் ஏற்றிய பாஸ்கரன் , பொன்னப்பன் மற்றும் சாபுவும் சாக்கோவிற்க்கு விஷம் கலந்த மதுவை வலுக்கட்டாயமாக ஊட்டி, கழுத்தை நெரித்து கொல்கின்றனர். பின்னர் பிள்ளையின் வீட்டில் சென்று சாக்கோவின் ஆடைகள், திருமண மோதிரம் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றைக் கழற்றி விட்டு, குருப்பின் உடையை அவருக்கு அணிவித்து, அவரது முகத்தைக் அடையாளம் தெரியா வண்ணம் கரிக்கின்றனர். பின்னர் உடலை KLY 5959 எண் காரில் ஏற்றி   கொல்லக்கடவு என்ற இயற்கை எழில் கொஞ்சும் கிராம் அச்சன்கோவில் ஆற்றை ஒட்டிய நெல் வயல் அருகே சென்றதும் சாக்கோவின்   உடல் KLQ 7831 eண் காரின் ஓட்டுநர் இருக்கைக்கு மாற்றப்பட்டு 10 லிட்டர் பெட்ரோல் ஊற்றி காரை வயலில் தள்ளி தீ வைத்து எரிக்க விட்ட பின்பு அங்கிருந்து திரும்புகின்றனர். அந்த வயல் இப்போது சாக்கோ பாடம் (சாக்கோ வயல்) என்று அழைக்கப்படுகிறது.

இதனிடையில் பாஸ்கரன் கையில் அணிந்து இருந்த கையுறை , பத்து லிட் பெட்ரோல் கேனை அங்கே விட்டு விட்டு செல்கின்றனர்.  பாஸ்கரன் கையிலும் தீபடுகிறது. காரின் எண் வைத்து அடுத்த நாள் குறுப்பு வீட்டிற்கு செல்கின்றனர். குறுப்பு குறுப்பின் சகலன் பாஸ்கரன் குடும்பம் ஒன்றாக இருந்து கோழிக்கறி வைத்து உணவு அருந்தி கொண்டு இருக்கின்றனர். போலிஸ் மனதில் முதல் சந்தேகத்தை வரவைக்கிறது.
சக்கோவை கடைசியாக சந்தித்த ஸ்ரீகுமார், சாக்கோ தியேட்டருக்கு வராததால், கவலைப்பட்டு அவர் வீட்டுக்குச் சென்று விசாரிக்கிறார்.  சாக்கோவின் குடும்பம் அசாதாரணமான எதையும் உணரவில்லை, ஏனெனில் சாக்கோ தனது வேலை நிமித்தமாக அடிக்கடி பயணம் செய்வதால் வீட்டில் இருந்து விலகி இருப்பவர்.  ஆனாலும் காவல்துறையில் புகார் பதிவு செய்யும்படி உறவினர்களிடம் சொல்லி விட்டு திரும்புகிறார் ஸ்ரீகுமார்.


வயலில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அதற்குள் புதைக்கப்படுது. பிப்ரவரி 1 ஆம் தேதி, இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சூப்பர் இம்போசிஷன் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி (நாட்டில் இதைப் பயன்படுத்திய முதல் நிகழ்வுகளில் ஒன்று) உடல் சாக்கோவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம், ‘சுகுமார குறுப் கொலை வழக்கு’ அதிகாரப்பூர்வமாக ‘சாக்கோ கொலை வழக்கு’ என்று பெயர் மாற்றப்பட்டுகிறது.


அந்தக் குற்றப்பத்திரிகையில் கொலை, குற்றச் சதி, சாட்சியங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முதல் இரண்டாவது குற்றவாளிகளாகப் பாஸ்கரன் பிள்ளை மற்றும் பொன்னப்பன் கைது செய்யப்படுகின்றனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாபூ, போலீஸ் அனுமதியாளராக மாறினார். 


சுகுமாரக் குருப் மற்றும் பாஸ்கரன் பிள்ளையின் மனைவிகள் சகோதரிகள் ஆவர். அவர்களும் இந்த திட்டத்தில் இருப்பதாக போலீசார் நம்பினர், எனவே அவர்களை மூன்றாவது மற்றும் நான்காவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப் பட்டனர்.
செஷன்ஸ் நீதிமன்றத்தால் பாஸ்கரன் பிள்ளை மற்றும் பொன்னப்பன் ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிற்பாடு பொன்னப்பன் தற்கொலை செய்து கொண்டான். பாஸ்கரன் பிள்ளை 12 வருடங்களுக்கு பின்பு விடுதலையாகி வயது மூப்பு காரணமாக இறந்தும் போனார். இதனிடையில் குறுப்புக்கு சாராயத்தில் கலந்து கொடுக்க வேதிப்பொருள் கொடுத்த கல்லூரி பணியாளரான  மது என்ற நபரும் தற்கொலை செய்து      கொண்டார்.  

     
குறுப்பை கேரளா போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். இதனிடையில் தப்பி சென்ற குறுப்பு பீகார், கொல்கத்தா போன்ற இடங்களில் வசித்ததாகவும் மருத்துவமனையில் சிகித்சை பெற்றதாகவும் பின்பு இறந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும், எத்தனை வருடங்கள் கழிந்தாலும் குறுப்பை போலிஸ் கைது செய்யும் என நம்பும் மலையாளிகள் மனதை விட்டு மறையாத குறுப்பை பற்றி ”குறுப்பு“ என்ற பெயரில் நவம் 12 அன்று ஒரு திரைப்படம் வரவுள்ளது. மம்மூட்டியின் மகன் கதாநாயகனாக நடிக்கிறார்.


தந்தை முகம் காணாத சாக்கோவின் 38 வயது மகன் தனது தந்தையின் கொலையாளியை பற்றி படம் என்று எடுப்பதை எண்ணி வருந்தி படக்குழு மேல் ஒரு வழக்கு தொடுத்து இருந்தார். படம் ரிலீஸ் ஆகும் முன் மகனுக்கு படத்தின்  ரிவ்யூ காட்டி ஒப்புதல் வாங்கியுள்ளனர் படக்குழுவினர்.


சாக்கோவின் கொலைக்கு காரணமான சுகுமாரக் குறுப்பு அந்நேரம் ஊரே மெச்சும் படி ஒரு வீடு கட்ட ஆரம்பித்து இருந்தார். அந்த வீட்டை கட்டி முடிக்க பணம் பற்றக்குறை என்பதால் சாக்கோவை கொன்று காப்புறுதி பணத்தை எடுக்க இருந்ததாக செய்திகள் வெளியானது.
அந்த வீடு இதுவரை முடிக்கப்படாது பேய் வீடு மாதிரி கிடக்கிறது. சாக்கோவின் மரணத்தில் பங்கு பெற்றோர் அனைவரும் ஏதோ ஒரு வகையில் மரித்து போயினர். சுகுமார் குறுப்பை கண்டு பிடிக்க போலிஸ் ஏழு வருடம் குறுப்பு வீட்டு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து அவதானித்து வந்திருந்தது. சுகுமார் குருப்பை பிடிக்காது போனது கேரளா காவல்த்துறைக்கு பெரும் அவமானமாக இருந்தது.கொலையாளிகளில் ஒரு ஆளான பாஸ்கரன் பிள்ளை சாக்கோவின் மனைவியை கடந்து நான்கு வருடங்களுக்கு முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார். 


திரைப்படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என பார்க்கலாம். மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரம் வெளியாகும் படம் என அறியலாம். திரைக்கு வரும் முன்னே விவாதங்களில் சிக்கின இப்படத்தை  திரையில் காண இன்னும் ஒருவாரம் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

0 Comments:

Post a Comment