14 Aug 2019

மத்திய அரசின் புதிய கல்வி திட்டம்-2019


மனிதமேம்பாட்டு துறையின் மேற்பார்வையில் முனைவர் கெ.கஸ்தூரி ரங்கன் அவர்களால் 2017 ல் பணியப்பட்டு 2019 ல் முடிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் கல்வியில் ஸ்திரதன்மை, சமதர்மம், நியாயமான  கட்டணம், தரம், பொறுப்பு தன்மை ஆகியவை உருவாக்குவது ஆகும்.

தேசிய வருமானத்தில் 6% கல்விக்காக செலவிட வேண்டும் என 1964 ல் கல்வி திட்டம் கொண்டு வந்த கோத்தாரி குழு கூறியுள்ளது. 2019 லும் கஸ்தூரி ரங்கன் குழுவும் அதே 6% பணம் கல்விக்காக செல்விட பணிந்துள்ளது.

தற்போது கல்விக்கு என 3.8 % செல்விடுகின்றனர். அது உலகாலாவிய சராசரி அளவு 4.7% விட குறைவு தான். நம்  நாட்டின்  பாதுகாப்பு-ராணுவ பணிக்குக்கு என 6.4% நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்விக்காக செலவிடுதல் என்பது இலவச கல்வி கூடம், இலவச புத்தகம், லாபுகள், தொழில்நுட்பம், விளையாட்டு அரங்கம், கலை பண்பாட்டு வளர்ச்சி என்பவையாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் 4 வது, 5, 6,7 வது பரிந்துரை என அரசு, கல்வி ஆசிரியர்கள் ஊதியம் உயர்ந்ததை தவிர கல்விக்கான வாய்ப்புகள் உயரவில்லை. 25% மாணவர்கள் மட்டுமே 12 ஆம் வகுப்பு முடிந்து கல்லூரி படிப்பை நோக்கி வருகின்றனர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மீதம் 75 % பேர் 12 ஆம் வகுப்புக்கு உள்ளாகவே கல்வி சூழலில் இருந்து பின் வாங்கி விடுகின்றனர் என்பதே நிஜம்.

The Right to Education Act, 2009 (RTE Act): Currently, the RTE Act provides for free and compulsory education to all children from the age of six to 14 years.
The draft Policy recommends extending the ambit of the RTE Act to include early childhood education and secondary school education. This would extend the coverage of the Act to all children between the ages of three to 18 years.
6-14 வயது குழந்தைக்ளுக்கு முற்றிலும் இலவசமாக கல்வி கொடுக்க வேண்டிய தேவையை சட்டம் பரிந்துரைத்துள்ளது. 70 வருடம்  ஆகியும் நடைமுறைப்படுத்த இயலாத அரசு; வயது 3 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கல்வி திட்டம் வகுத்துள்ளது.  கல்வி பெறுவது இலவசமாக   என்பதல்ல, பதிலாக பள்ளிகளின் கூட்டமைப்பு என் குறிப்பிட்டுள்ளது..

கல்வி திட்ட்டத்த 5-3-3-4 எனப்பிரித்துள்ளது. முதல் ஐந்து வருடம் அதாவது 3 வயது முதல், ¼,1/2  , ¾, ஒன்றாம் வகுப்பு , இரண்டாம் வகுப்பு பிரீ பைமரி என, அடுத்து3-5 வகுப்புகள், அடுத்த நிலை 6 முதல் 8, கடை நிலையாக 9 ஆம் வகுப்பு முதல் +2.Curriculum framework  5 -3-3-4 கல்வி திட்டம் - five years of foundational stage (three years of pre-primary school and classes one and two), (ii) three years of preparatory stage (classes three to five), (iii) three years of middle stage (classes six to eight), and (iv) four years of secondary stage (classes nine to 12).

எல்கெஜி , யுகெஜி பள்ளிகளை தேவையற்றது. இதில் மழலை பள்ளியை 3 வருடம். 3 வயது குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு, பெற்றவர்களின் அன்பு தான் தேவை.
குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் கற்க போகும் பாடசாலையில் பரப்பளவு, விளையாட்டு மைதானம், கட்டிட அமைப்பு மாண்டிசோரி கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மழலை மருத்துவர், இவயை பற்றி எதுவும் கருத்துரைக்கவில்லை. வெறுமெனே சில கற்பனையான கற்பிதங்களை விளம்புகிறது கல்வி திட்ட வரை.
இன்றுவரை முதலாம் வகுப்பு சேர்க்க மழலையர் பள்ளி சாற்றிதழ் தேவை இல்லை . இனி தேவைப்படலாம். மூன்று வயது குழந்தையை பள்ளிக்கு விட பெற்றோர்கள் விரும்பாவிடிலும் விட்டே தீர வேண்டும் என நிர்பந்தம் செலுத்தலாம்.  இனி மத்திய அரசின் ஆதரவுடன்  தனியார்கள் கல்வி வியாபாரத்தில் இரண்டு வருடம் என்பதை மூன்று வருடமாக சம்பாதிக்கலாம்.

ஆசிரியர்களின் தரத்தை பற்றி அங்கலாய்க்கும் மத்திய அரசு அங்கன்வாடி என்பதை பற்றி குறிப்பிடுகின்றனர். 3 வருட கல்வி வழங்க போகும் அங்கன்வாடி ஆசிரியர்களின் அடிப்படை கல்வி தகுதி +2 அல்லது 10 ஆம் வகுப்பு என கொடுக்கப்பட்டுள்ளது.  வயது தகுதி 18 முதல் 40 என அரசு இணையத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதை விட குழந்தைகள் வளர்ச்சி மோசமாகும் சூழல் தான் வரப்பொகிறது. கற்பிப்பதிலில் பிரத்தியேகம் பயிற்சி எடுத்திருக்கும் மாண்டிசரி, டிடிசி அல்லது பிஎட் என்ற கல்வி தகுதியை கேட்கவில்லை.
இப்படியாக அடிப்படை தேவை, தற்போதைய சமூக நிலை, கடந்த கல்வி திட்டங்களில் நிறைவேற்றாத வாக்குறுதிகளை எதுவும் நினைத்து பார்க்காது புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்கள்.

மோடியின் கல்வி திடத்தின் பல கூறுகள் கோத்தாரி திட்ட அறிக்கையில் இருந்து எடுத்தவை தான். கோத்தாரி திட்டக்குழு பரிந்துரைத்துள்ள அடிப்படை வசதிகளை நடைமுறைப்படுத்தி விட்டு புது கல்வி கொள்கையை நடப்பாக்க முன் வந்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும்.
கோத்தாரி திட்டக்குழு பரிந்துரைகள் என்னவென்று பார்த்தால்

(i)
அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 % ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது 
(ii)
வயது வரை கட்டாயக் கல்வி
(iii)
ஆசிரியர் கல்வி மற்றும் மதிப்பூதியம்
(iv)
மொழிகள் கற்றலில் தாய்மொழியுடன் கூடிய மும்மொழிக் கொள்கை
(v)
சமமான கல்வி வாய்ப்பு
(vi)
சமூகத் தொண்டுடன் பணி அனுபவம்
(vii)
பகுதிநேர கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி
(viii)
இடைநிலைக் கல்வியை தொழிற்சார்புடையதாக்குதல்
(ix)
பெண்களுக்கான இடைநிலைக் கல்வி
(x)
அறிவியல் அடிப்படையிலும், வகுப்பறைச் செயல்முறையிலும் சீர்திருத்தம்.
 (xii)
தறிப் பயிற்சி, தோட்டக் கலை, குடிமைப் பயிற்சி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. 
(xiii)
விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் 
(xiv)
ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச் சாலைகளைக் கட்டமைப்பது ஆகியவை இக்குழுவின் சிறப்பம்சமாகும்.
இதை எதையும் நடைமுறைக்கு கொண்டுவராது கோத்தாரி திட்ட அறிக்கையில் இருப்பவையுடன் மோடியின் கல்வி திட்டவும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளவை.

புதிதான சில பரிதுரைகள் பலர் அச்சுத்துடன் பார்க்கும் பரிந்துரைகள் இவை தான்
1.பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு ஆகியவற்றிலிருந்து உயர்கல்வி தொழிற்கல்வி ஆகிய அனைத்திற்கும் இனி அனைத்திந்திய நுழைவுத் தேர்வு உண்டு, அதற்கு தேசிய தேர்வு முகமை (national Testing Agency-NTA) உருவாக்கப்படும். 
2.
மாநில கல்வி ஆணையத்திற்கு தனித்து முடிவெடுக்கும் அதிகாரம் எதுவுமில்லை . (18.4.2)
3.
கல்வி, பல்கலைக் கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்க, பொதுக் கல்விக் குழு (General Educational Council) என்ற ஒன்று நிறுவப்படும்.(இப்போது யுஜிசி உண்டு)
4.
மேல் ஆராய்ச்சி படிப்புகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அமைப்பாக தேசிய ஆய்வு நிறுவனம் அமைக்கப்படும். இனி நிறைஞர் படிப்பு (M.Phil) கிடையாது, மேல் ஆராய்ச்சி படிப்பு (Post Doctoral Fellow) மட்டுமே உண்டு, இதற்கு மாணவர்களை தேர்வு செய்வது தேசிய ஆய்வு நிறுவனத்தின் பணி.
5.
தனியார் கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளையும் சமமாக அணுகுதல் போன்ற பரிந்துரைகளை வரைவு அறிக்கை முன்வைத்துள்ளது..


இந்தியாவில் இதுவரை இருந்துள்ள  கல்வி திட்டங்கள்


Indian Education Policies


மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை 2019

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக் கொள்கை, பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது. யஷ்பால் குழு போன்ற பழைய கல்வி கொள்கைகளுக்கு தொடர்ச்சியாக அறிவித்து இருக்க  வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. 

இதன் முக்கிய அம்சங்கள்
1.        கல்வியில் முன்பிருந்த தரம் போய்விட்டது என்று சொல்லும் புதிய கல்விக் கொள்கை, இதைச் சரிசெய்ய இரண்டு வழிகளை முன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடி மத்தியப் பட்டியலுக்குக் கல்வி வரவேண்டும் என்கிறது. ஆனால், இது மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.
2.      அடுத்து, நான்காம் வகுப்பின் முடிவிலிருந்தே தேர்ச்சி / தோல்வி என மாணவர்களைச் சலித்தெடுக்க வேண்டும் என்கிறது. இது பழையபடி பள்ளியிலிருந்து பல மாணவர்கள் வெளியேறுவதற்குத்தான் வழிவகுக்கும்.
3.      திறன்களை, குறிப்பாக வேலைவாய்ப்புத் திறன்களை வளர்க்க நமது கல்வி தவறிவிட்டது; வேலைக்குத் தகுதியற்ற படித்தவர்களை உருவாக்கி வீணடித்துவிட்டது என்று சொல்லும் புதிய கொள்கை, இதைச் சரிசெய்ய திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்து, பள்ளிக்கூடங்களில் தொழில்துறை தேவைகளை மனதில் வைத்து, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க வேண்டும் என்கிறது.

மேலும், கல்வி முழுமை பெறும் முன்னமே வேலைத் தகுதிச் சான்றிதழ் மூலம் (மாணவர்கள் விரும்பினால்) ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்கிறது. இது குலக் கல்விமுறையை நினைவுபடுத்துவதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
4.      இந்திய அளவிலான கல்வியின் தரத்தை மேம்படுத்த, தரமேம்பாட்டுக் குழு போல ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும். தேசிய அளவிலான பள்ளிக் கல்வி தரச்சான்று ஆணையம் என அது அழைக்கப்படும் என்கிறது இந்த அறிக்கை. இது அரசுப் பள்ளிகளை முற்றிலும் முடங்கச் செய்துவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
5
ஆசிரியர்களின் தரம் ஆசிரியர்கள் திறன் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் வண்ணம் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தரச்சான்றுத் தேர்வுகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறது.
6.      மதிய உணவுத் திட்டத்திலிருந்து ஆசிரியர்களை விடுவிக்கிறது இந்தப் புதிய கொள்கை. அதேசமயம், பள்ளிகளுக்கு அரசு நேரடியாக உணவு தராது. அதற்குப் பதிலாக அவற்றைத் தனியார் ஒப்படைத்துவிடும். அரசின் நலத்திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி இது.
7.  கோத்தாரிக் குழு இந்தியாவைச் சமூகம் என்று அழைத்தது. இந்த ஆவணமோ இந்தியப் பொருளாதாரம் என்றே அழைக்கிறது.
8

கோத்தாரிக் குழு கல்வியை சேவை என்று அழைத்தது. மோடியின் புதிய கல்விக் கொள்கை ஆவணமோ கல்வியை முதலீடு என்கிறது.
o     மூன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழி ஒன்றை விருப்பப் பாடமாக எடுப்பதும், ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றாம் மொழி ஒன்றை கட்டாயமாகக் கற்பதுவும் திருத்தப்பட்ட வரைவிலும் (4.5.9) வலியுறுத்தியுள்ளது.
o    முன்மழலை (Pre KG) வகுப்பிலிருந்து பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக் கல்வி, உயராய்வு நிறுவனங்கள் ஆகிய அனைத்தையும் தேசிய கல்வி ஆணையம் (National Education Commission)- இராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் (Rashtriya Shiksha Aayoung) என்ற அதிகார கட்டமைப்பின் கீழ் இந்தக் கல்விக் கொள்கை கொண்டு செல்கிறது. (2.3.1) ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில முதலமைச்சர் தலைமையில் மாநிலக் கல்வி ஆணையம் என்ற அமைப்பு இருந்தாலும், அது தேசிய கல்வி ஆணையத்தின் முகவாண்மை அமைப்பாக மட்டுமே செயல்படும். (8.1.3.).
o    பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு ஆகியவற்றிலிருந்து உயர்கல்வி தொழிற்கல்வி ஆகிய அனைத்திற்கும் இனி அனைத்திந்திய நுழைவுத் தேர்வு உண்டு, அதற்கு தேசிய தேர்வு முகமை (national Testing Agency-NTA) உருவாக்கப்படும்.
o    இந்திய அரசின் அதிகாரத்தை கல்லூரி-பல்கலைக்கழகக் கல்வியில் நிலை நிறுத்துவதற்காக தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம் (National Higher Educational Regulatory Authority-NHERA) என்ற ஒன்றை இந்தக் கல்விக் கொள்கை முன்வைக்கிறது. (பத்தி 18.1.2)
o    மாநில கல்வி ஆணையத்திற்கு தனித்து முடிவெடுக்கும் அதிகாரம் எதுவுமில்லை . (18.4.2)
o    கல்வி, பல்கலைக் கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்க, பொதுக் கல்விக் குழு (General Educational Council) என்ற ஒன்று நிறுவப்படுமாம். இந்தக் குழு கல்லூரி மட்டுமின்றி, பள்ளியின் பாடத் திட்டத்தையும் முடிவு செய்யும்(18.3.2).
o    மேல் ஆராய்ச்சி படிப்புகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அமைப்பாக தேசிய ஆய்வு நிறுவனம் அமைக்கப்படும். இனி நிறைஞர் படிப்பு (M.Phil) கிடையாது, மேல் ஆராய்ச்சி படிப்பு (Post Doctoral Fellow) மட்டுமே உண்டு, இதற்கு மாணவர்களை தேர்வு செய்வது தேசிய ஆய்வு நிறுவனத்தின் பணி.
o    தனியார் கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளையும் சமமாக அணுகுதல் போன்ற பரிந்துரைகளை வரைவு அறிக்கை முன்வைத்துள்ளது..

நமது கேள்வி எந்த் திட்டங்களையும் செம்மையாக நடைபடுத்த முயற்சி எடுக்காது புதிய கருத்தாக்கங்களுடன் அதே தேவைகள் இன்றும் இருக்க புதிய கல்வி கொள்கையை மோடி அரசு அவசர அவசரமாக ஏன் கொண்டு வர வேண்டும். பல பரிந்துரைகள் சிறப்பாகவே உள்ளது, ஆனால் போதிய அரசு பள்ளிகள் இல்லை,வசதிகள் மேம்படுத்தி கொடுக்கவில்லை. ஒரே திட்ட த்தில் கல்வி பெறும் சூழல் கூட இல்லை. புதிய திட்டம் அடிப்டை இல்லாது மேலோட்டமாக புகுத்தும் கொள்கை போல் உள்ளது.


source




 [J

0 Comments:

Post a Comment