14 Feb 2019

ஆதலால் தம்பதிகளே காதல் செய்வீர்.


வாலன்டியன் நாள் கொண்டாட்டம்- திண்டாட்டம் இன்றே ஆரம்பித்து விட்டது. முகநூல் எங்கும் காதல் வரிகள்.
 சரி இந்த  வாலன்டையன் யார்? என தெரிந்து கொள்வோம். 

நாலாம் நூற்றாண்டில் ரோம் தேசத்தில்  வாழ்ந்த ஒரு  கிறிஸ்தவ துறவியார் ஆவார் அவர்.  அந்நேரம் ரோம் ஆண்ட கொடும்கோல் பேரரசன், படைவீரர்கள் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதை தடை செய்திருந்தார்.

 மக்கள் அன்பிலும் காதலிலும் வாழவேண்டிய தேவையை உணர்ந்த வாலண்டியன் மிகவும் ரகசியமாக ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்து கொண்டிருந்தார். எல்லா நல்லவர்களுக்கும் நடப்பது போல், சில பொல்லாதவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு அரசனால் கொல்லப்பட்டார். நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்துலாலும் 14 ஆம் நூற்றாண்டு முதலே இவருடைய நினைவு தினம் பெப். 14 காதல் தினமாக கொண்டாடப்பட்டது.  சில நாடுகளில் ’ஜூலை 6’யும் காதல் தினமாக கொண்டாடி  வருகின்றனர்.

இந்த கொண்டாட்டம் இந்தியாவில் 1990  யிருத்து  உலக மயமாக்கலுக்கு பின், மக்களின் நுன் உணர்வுகளை வியார யுக்தியுடன் கலந்து   ஊடக துணையுடன் பல உருவங்களில் பல பல நோக்குடன்  கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக சொல்லப்போனால்  கல்யாணம் செய்து கொள்ளாத இரு நபர்களின் ’காதல் தினமாக’வே அறியப்பட்டு  வருகின்றது. ஆனால் உண்மையில் இது தம்பதிகள் கொண்டாப்பட வேண்டிய தினம்.


திருமண உறவில் மட்டும் தான்  நேசவும், அன்பும், காதலும் ஒருங்கே சேர்ந்த  உறவு நிலை நின்று வருகிறது.  தற்காலைய சூழலில் இக்கொண்டாட்டம் தம்பதிகள் கொண்டாட வேண்டிய அவசியம் மிகவும் தேவையாக உள்ளது.

1990 குழந்தைகள் இந்த நூற்றாண்டில் மிகவும் பாதிப்படைந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் என்றே கூறவேண்டும். 

உலகலாவியல் குடும்பத்தை உடைத்து தனி நபர்களாக மனிதர்களை பிரித்த காலமிது. 
வேலை பணம் ஈட்டுதல் என தம்பதிகள் பிரிந்திருக்கும் கால சூழல் இது.  
50 % திருமணங்களும் தோல்வியில் தழுவும் மிகவும் ஆபத்தான காலவும் இதுவே.
காதலிலும் பரிவிலும் வாழ வேண்டிய பல தம்பதிகள், தினம் ஒருமுறை கூட தங்களை தழுவி கொள்ளவோ அணைத்து கொள்ளவோ நேரம் அற்று ஓடி ஓடி வேலை செய்யும் பொல்லாத காலவும்  இதுவே.

சேர்ந்து  வாழும் தம்பதிகளில் கூட வாழத்தெரியாதவர்களாக வாழ்ந்து கொண்டு இருப்பது இந்த காலசூழலில் தான். 

பல தம்பதிகள் வேலை விடையங்களுக்கு என பல காலம் தனித்தும் வாழ்க்கை நடத்த தயங்குவது தற்போது இல்லை.

பொறுப்பாக வாழ்ந்து காதலிலும் அன்பிலும் மலர வேண்டிய பல தம்பதிகளுக்கு எப்படி காதலிப்பது என்றே தெரியாது வாழ்க்கையை முடித்து கொண்டு இருக்கின்றனர்

அதனால் தான் இத்தினத்தை  சின்ன சின்ன அரவணைப்பு, சிறு பயணம், ஒருமித்து இருந்து கதைப்பது என வாழ்க்கையை அனுபவித்து காதலுடன் வாழ நினைவுப்படுத்தும் தினமாக கொண்டாடவேண்டியது காலத்தின் அவசியமாக மாறுகின்றது..

ஆனால் இந்தியாவில் மிகவும் எதிர்ப்பை சந்திக்கும் விழாவும் இதுவே. ஏன் என்றால் கொண்டாடுபவர்கள் யார் என்ற கேள்வி பண்பாட்டு காவலர்களை துன்புறுத்தி கொண்டிருப்பது தான். வேலை, உழைப்பு தன்சார்பு  என… தன்னை நிலைநிறுத்தாத பல சின்னம் சிறுசுகள் ’காதல்’ என்ற பெயரில் களியாட்டங்களில் ஏற்படுவதால் காலாச்சார காவலர்கள் பெரிய தண்டத்தை எடுத்து கொண்டு விரட்டி கொண்டு வருகின்றனர்.

காதல் என்பது காமத்தில் அல்லாது பொறுப்பிலும், நம்பிக்கையிலும் புரிதலிலும் விட்டு கொடுப்பதிலும் வர வேண்டியது என உணர வைக்க வேண்டிய கொண்டாட்டம் இது.

விடுபட்ட காதலை மறுபடியும் மலரச்செய்ய தம்பதிகள் கொண்டாடவேண்டிய  தினம் இது   காதல் எப்போது புனிதமாகிறது என்றால்  என்றால் காதல் செய்யும் நபர்களை பொறுத்தது எனலாம். காதல் உண்மையானதாக இருக்க வேண்டும். சீசன் மாறுவது போல் வசதிக்கு ஏற்ப மாறுவது காதல் ஆகாது. காதல்….. பழிக்காது எதிர்பார்க்காது, இரு நபர்களின் நலனை இருவரும் போட்டி போட்டு நோக்கி வாழும் உன்னத நிலை இது. ஆதலால் தம்பதிகளே காதல் செய்வீர்.

யாராவது காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை இது ஒரு உடலில் நிகழும் ஒரு ரசாய மாற்றம் என்ற சொல்ல வந்தால் அந்த ரசாய மாற்றத்தை பொறுப்பாக மதியுங்கள் என்பேன்.


0 Comments:

Post a Comment