27 Sept 2015

போட்டி மனோபாவம் தோல்வியே

வெற்றி என்பது மகிழ்ச்சி, தன்ன்னம்பிக்கை கொடுப்பதை விடுத்து ஒரு மனிதனை தற் பெருமை, "தான்" என்ற அகம்பாவம் கொள்ளவைப்பது  அல்லது  "தான் மட்டுமே" சிறந்தவர் என்ற மனநிலைக்கு ஆட்படுத்தினால்  அது ஒரு மாபெரும் தோல்வி நிலை ஆகும்.

ஒரு மனித பிறப்பின் அடிப்படை கொள்கை , நோக்கம் என்பது அகத்தை தேடி அறத்தை எட்டுவதாகும்., இன்றைய பல போட்டிகள் மனிதர்களை வெற்றி களிப்பில் அறத்தை மறப்பவர்களாகவும்,  வெற்றி என்பதை மற்றவர்களை கேலிக்குள்ளாக்கும் செயலுக்கு ஆக்கமாக அமைக்கின்றனர்.  ஒரு ஆசிரியர் வகுப்பில் முதல் இடத்தை பிடிக்கும் மாணவனை புகழும் போது,  அவன் சராசரி மாணவர்கள் உலகில் இருந்து தனித்து பயணித்து மற்று மாணவர்களை கீழ்த்தரமாக நோக்கும் மனநிலையை அடைகின்றான். வெற்றியை தவற விட்டவனும் தனித்துவமான தன்னை எவ்வகையிலும் தன்னுடன் ஒப்பிட்டு பார்க்க இயலாத இன்னொருவனுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்து தாழ்வு மனநிலைக்கு  எட்டுகின்றான்.


வெற்றி என்பது தோல்வியை மூடி மறைக்கும் முயற்சி என்று ஓர் அறிஞர் கூறுகின்றார். வெற்றி என்பதை சாற்றோர்களால் தன்னை தானே அழித்து கொள்ளும் ஓர் நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இன்று பல பரீட்சை, விளையாட்டு,கலை போட்டிகளில் வெற்றி களிப்பில் திளைத்தைவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் தோல்வியை தழுவியவர்களாகவும், மனநிலை பிளர்வு கொண்டவர்களாகவும் சில பொழுது தற்கொலை ஊடாக தன்னை மாய்த்து கொண்டவர்களாகவும்  இருக்கின்றார்கள். 

ஆனால் மற்று சிலரோ  இந்த வெற்றி-மாய உலகில் தன்னை விடுதல் ஆக்கி கொள்ளவே தனிமையை தேடும் மனநிலையையும் அடைகின்றனர்.  வெற்றிக்கான போட்டி பல மனிதர்களை அழிவுக்கு கொண்டு சென்றுள்ளது. பைபிள் கதை வழியாக  நாம் அறிவது  கடவுளிடம் போட்டி போட முதல் மனிதர்களாம் ஆதம் ஏவாள் துணிந்த போது பெரும் துயரை-தோல்வியை சந்தித்தனர்.  முதல் சகோதரன் காயேன் தன் சகோதரனிடம் போட்டி கொண்ட போது அவனை கொலை  செய்யவும் தயங்கவில்லை. ஜேக்கப் என்ற சகோதரன் ஏசா என்ற சகோதரனிடம் மோசமான வழியூடாக போட்டி போட்டு வெற்ற் கொள்ள முயன்ற போது பல  வருடங்கள்  அடிமையாக  தன் மாமனார் வீட்டில் அகப்படுகின்றான். 

 மகாபாரத கதையை எடுத்து கொண்டாலும் தன் சகோதர்களான பாண்டவர்களிடம் போட்டி இட்ட கவுரவர்கள் ஒரு போதும் நிம்மதியாக வாழவில்லை. போட்டி அழிவை எட்டுகின்றனர்.மற்றவர்களையும் அழிக்கின்றது.

Image result for trophy images ஒவ்வொரு ஆசிரியனும் தங்கள் மாணவர்களை போட்டியாளர்களாக உருவாக்குவதை விட வெற்றியாளர்களாக உருவாக்கவேண்டும். வெற்றி என்பது நிறைய பணம் ஈட்டுவது, அதிகாரம் பெறுவது என்ற உலக செல்வங்கள் என்பதை  விட அழியாத உள-உள்ள நலனுடன் மனத்தூய்மை கொண்டு  அமைதியுடன் வாழ்வதாகும் என்று உணர வைக்க வேண்டும். வாழ்க்கையின் க்‌ஷணத்தில் வாழாது பிற்கால- முற்காலத்தை எண்ணி எண்ணி வதைப்படாது வாழ  புதிய தலைமுறைக்கு கற்று கொடுக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில் நான் கண்ட சில காட்சிகள் என்னை இந்த புதிய தலைமுறையை பற்றி எண்ணி துண்புற செய்தது. இரண்டாம் இடத்தில் வரும் குழு தன்னால் முதல் இடத்தில் வர இயலவில்லை என்ற துயரில் தன் இரண்டாம் நிலையை எண்ணி மகிழ்ச்சி அடையாது நிராசையாக திரும்பியது.  மூன்றாம் நிலையை அடைந்தவர்களோ தீர்ப்பை மாற்றி எழுது என்ற பிடிவாதத்தில் தன்னை முழுதுமாக புரக்கணித்து  வெறுப்பு, கவலை,எதிர்ப்பு மனநிலையில் பிரிந்தனர். இந்த மூன்று நிலையிலும் எட்டாதவர்கள் தான் பங்கு பெற்றோம் தன்னால் இயன்ற அளவு போராடினோம் என்ற மனநிலையில் நிம்மதியாக  மகிழ்ச்சியாக  இருந்தனர்.

இந்த வாழ்க்கையை ஆழமாக நோக்கினால் எது வெற்றி எது தோல்வி? மகிழ்ச்சியாக நாம் இருப்பதே வெற்றி. வெற்றிக்காக சரியான வழியில் பயணித்து அந்த வெற்றியை சூடிக்கொள்வது தான் மாபெரும் வெற்றி. அசோக சக்கரவர்த்தி எதை வெற்றியாக கண்டான் தான் வெற்றி என நினைத்து பல மக்களை கொன்று அழித்து கைபற்றிய நாட்டை துறந்ததையே வெற்றியாக கண்டான். 

நம் புதிய தலைமுறையின் மனோபாவத்தை கெடுப்பதில் அவர்கள் கற்கும் கல்வி சூழல், பெற்றோர் வளர்ப்பு முறை இந்த சமூக நிலைபாடுகள் பெரிதும் காரணமாகின்றது. இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக கற்று வர அனுப்பதில்லை எல்லோரையும் மிஞ்சி முதல் இடத்தில் வரவேண்டும் என்ற வெறியையே ஊட்டி வளர்க்கின்றனர். ஒரு நிலையில் இந்த தலைமுறை தான் நினைத்தை அந்த இடத்தை எட்ட இயலாது வரும் போது பெரும் கட்டிடங்களின் முகப்பில் இருந்தும், ஓடும் இரயில் முன் பாய்ந்தும் தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கின்றது. ஒரு தாய் பெருமிதத்துடன் கூறினார் "என் மக நினைத்ததை வெறியாக பின்தொடர்ந்து கண்டடைந்து விடுவாள்" என்று. ஆனால் மகள் பின் பற்றும் வழியை பற்றி தாய் பேதையாகவே இருந்தார். 

இன்றைய தலைமுறையின் சமூக வாழ்க்கை தனிநபர் வாழ்க்கை போட்டி என்ற மனநிலையின் பிடியில் சிக்குண்டு நிலைதடுமாறுகின்றது. வாழ்க்கை தன் நிலையில் தன் போக்கில் நிர்ணயிக்காது தான் வாழும் அடுத்தவர்  தரும் அளவுகோலில் அளந்து அதன் பிடியில் உழலுகின்றனர். 

தூய உள்ளத்தின் நிலையே படைப்பாற்றல்!   இன்றைய நிலையில் படைப்பாற்றல் பெரிதும் குறைந்து வருவதின் காரணமும் இது போன்ற  மனநிலை தான். 'தான் வெற்றி வாகை சூடவில்லை', என்றால் என்னை சுற்றியுள்ள மனிதர்கள் என்னை ஏமாற்றி விட்டனர், இந்த இயக்கமே சரி இல்லை என்ற மனநிலையை விடுத்து; தான் எவ்வாறு அடுத்த நிலைக்கு எட்ட இயலும் என்ற நேர்மறை எண்ணத்தை விடுத்து ;தன்னை ஒடுக்கும் தன்னை அழிக்கும் மனநிலைக்கு எட்டுகின்றனர். இவர்களது இது போன்ற மனநிலைக்கு சில மனபிளர்வு கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலம்விரும்பிகள் காரணமாகின்றனர். தன்னை அறிந்து தன்னை சுயபரிசோதனை செய்து தானாக முடிவெடுக்கும் நிலையை எட்டும் வரை இன்றைய இளம் தலைமுறை அடிமைகள் தான். 


3 comments: