8 Feb 2013

திரைப்படம் 'கடலும்'-தமிழக கிருஸ்தவர்களும்!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் திறமைவாய்ந்த ஒலிப்பதிவாளர் ராஜீவ் மீனோ மேனன் ஒளிப்பதிவு ,  அர்ஜுன், அரவிந்த் சாமி போன்ற அழகான நடிகர்கள் நடித்தும்,  நல்ல இசை , புதுமுகமாக  அறிமுகப்படுத்தின ராதா மகள், கார்த்திக் மகன் ,  தமிழகத்தின்  அழகான கடற்கரையில் படம் பிடிப்பு என் எல்லாம் நல்லா இருக்க  ஜெயமோகனின்  தட்டையான திரைக்கதை  வக்கிரமான திரைஉரையாடல்கள்  மூலமாக, மோசமான கற்பனை பொய் புரட்டால்  முத்தெடுக்க முயன்று மூழ்கிப்போனது தான்  கடல் திரைப்படம் .  

திரைப்படங்கள்  என்பது கற்பனை,  கதை, சார்ந்தது  என்றாலும் நெருடல் இல்லாத சம்பவங்களளுடன், சில யதார்த்தங்களுடன் மக்களின் அடிப்படை சிந்தனையை லாஜிக்கை உதைக்காது இருந்தால்  மட்டுமே  மக்கள் மனதை சென்றடையும். அவ்வகையில் இப்படம் பெரும் தோல்வியை தான் சந்தித்துள்ளது

கிருஸ்துவின் நேரடி சீடர் தாமஸ் கேரளா வழியாக வந்தது முதல்  இந்திய தமிழக கிருஸ்தவ பாரம்பரியம் 2000 ஆண்டுகளை  கடந்தது.  போர்த்துகீஸ் நாட்டினர் இந்திய கடற்கரையில் கால் வைத்தது  கிருஸ்தவம் தமிழக மக்கள் மத்தியில் சிறப்பாக கடற்கரை மக்கள்  ஆக்கபூர்வமாக ஊடுருவி வளருவதற்கு காரணமானது .  

இந்திய பாதிரியார்கள் வெளிநாட்டு பாதிரிகளின் நீட்சியாக வந்தவர்கள் தான். கிருஸ்தவர்கள் மட்டுமல்ல எல்லா சமூகத்தினரும் ஒரே போல் மதிக்கும் சமூகத்தினரே பாதிரியார்கள். படத்தில்எலே, எலே” என்று விளிப்பது வழியாக பாதிரியாரை அவமதிப்பது, அதீத கற்பனையும் உண்மையும் கடந்த காழ்ப்புணர்ச்சியின் தொடராகவே  தெரிகிறது.

16ஆம் நூற்றாண்டு பழக்கமான  பிரமாண்ட ஆலயங்கள் கொண்ட  கிறிஸ்தவ கடற்கரை ஊரின், அம்மக்களின்  வாழ்வியல் படம் பிடித்துள்ளதில் திரைக்கதையிலும் திரை உரையாடல்களிலும் மிகவும் கவனமாக இருந்திருக்க  வேண்டும், ஆனால் இனங்களை முரண்பட வைக்கக்கூடிய கேலிக்குரிய காட்சி தகவலாகவே  உள்ளது. தொழில் சார்ந்து பார்க்க கரடு முரடாக இருந்தாலும், கடற்கரை  பழக இனிமையானவர்கள் உண்மையானவர்கள் என்றே மீனவ சமூகத்தை கண்டுள்ளோம். வழி கேட்கும் நபரிடம் ஒரு போதும் படத்தில் காட்டியது போன்று  கீழ்த்தரமான பதிலை சொல்லியிருக்க மாட்டார்கள்
மேலும் இந்திய பாதிரியார்களின் சமூகப்பணிகளமதப்பணிகளை  வளைத்து ஒடித்து தவறாக சொல்லப்பட்டுள்ளது.  ஒரு படம் ஏதோ வகையில் சமூகத்திற்கு பயண்பட வேண்டும் என்றிருந்தால் மீனவர்களின் சமூக வாழ்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், துணிந்து போராடும் குணம், அவர்கள் குடியிருப்பை சுற்றியுள்ள சுகாதார கேடான வாழ்கை சூழல் போன்றவை திரைப் படத்தின் கருத்தாக இருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும். கிருஸ்த மக்களின் வாழ்க்கையின் நல்லது-கெட்டதில் தாக்கம் ஏற்படுத்தும் சபையின் பிரதிநிதிகளான பாதிரியார்களின் பங்கை பற்றியாவது வலியுறுத்தியிருக்கலாம்

கிருஸ்தவ கத்தோலிக்க பாதிரியார்களின் உதவியாளரை   'மெலுஞ்சி' அல்லது உபதேசியார் என்று தான் அழைப்பார்கள். கோவில்குட்டி என்று அழைப்பது சீர் திருத்த கிருஸ்தவர்கள் தான். இப்படியாக மீனவ வாழ்கையை பற்றியே படிக்காதே, புரிந்து கொள்ளாது  ஒரு மீனவ படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை கண்டு கிருஸ்தவர்களை விட மீனவர்கள் உணர்வு தான் சீண்டப்பட்டிருக்க  வேண்டும்கடலும், தலை சீவாத சில மனிதர்களையும், ஒரு அங்கி போட்ட பாதிரியாரையும் காட்டினால் அது கிருஸ்தவ மக்கள் வாழ்கை சித்திரிகரிக்கும் படமல்ல, கிருஸ்தவ வாழ்கையில் கடவுளுக்கு அடுத்த படியாக மதிக்கும் பாதிரியார்களை இன்னும் நுட்பமாக கவனித்து படம் இயக்கியிருக்கலாம்

கூடங்குளம் பிரச்சனையில் மீனவர்கள்;பாதிரியார்கள் மற்றும் சமூக ஆவலர்கள் துணை கொண்டு போராடி வருவதை கண்ட அரசின் சதியோ தெரியவில்லை, அல்லது இந்துத்துவா அஜெண்டாவா? என்று  தோன்ற வைக்கின்றது கதையும் காட்சி அமைப்புகளும் வசனக்களும்.
 விஷ்வரூபம் என்ற திரைப்படம் பற்றி குறிப்பிட்ட போது கொஞ்சம் உலக அறிவு இருந்தால் மட்டுமே படம் கண்டால் புரியும் என்றனர்; ஆனால்  கடல் திரைப் படம் காண அறிவு, புத்தியே இருக்கக்கூடாது.

விவாதமாக மாறி விடாதா? கொஞ்சம் நாள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று விரும்பிய ஊடக-மத அரசியல் தந்திரங்களுக்கு பதில் கொடுக்காது கிருஸ்தவ தலைமைகள் அமைதி காத்து கொண்டது நல்லதே. தேவையில்லாத விளம்பரம் திரைப்படத்திற்கு கிடைக்காதிருக்க கிருஸ்தவர்கள் கொண்ட யுக்தி நல்லது தான். 

படைப்பை எதிர்த்து கலைஞர்களை பகப்பதும், படைபாளியின் படைப்பை காண துடிக்கும் ரசிகர்களை கோபம் செய்யாது இருந்து கடற்கரை சமூகம் தன்  அறிவு நிலையை வெளிப்படுத்தியுள்ளது. விவாதிக்க தினதந்தி தொலைகாட்சிக்கு வந்த கிருஸ்தவ பிரதிநிதியும் தகுந்த  காரணங்களுடன் தரவுகளை முன் தெரியவில்லை. அவர் ஊழியக்காரர்களை புகழ் பாடுவதிலே இருந்தார். செல்வமணி போன்ற திரையுலகு கலைஞசர்களும் திரைப்படம் நோக்காதே விவாதம் செய்ய வந்தது  நகைப்புக்குறியதாகவே இருந்தது. வாசந்தி என்ற பெண்மணி ஒரு ஊடகத்தில் பேசுகின்றோம் என்ற புரிதலுடன் சரியான விவாத கருத்துக்கள் முன் வைக்கவில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளரரை பற்றி சொல்லவே வேண்டாம். சும்மா கூலிக்கு மாரடிப்பதாக விவாதம் நமத்து போனது தான் மிச்சம்.

இருந்தாலும் கிருஸ்தவர்கள் இப்போதாவது விழித்து கொண்டால் நல்லது. தங்களை பற்றியுள்ள பொய் பிம்பங்களை உடைக்கவும் தங்களுக்குள்,  தங்கள் சமூகத்தினுள்ளில் நிலவும், வளரும் ஊழலை களையவும் முன் வர வேண்டும். 

முழுக்க முழுக்க இப்படத்தின் தோல்வியை இக்கதையின் மேலும் திரை உரையாடல்கள் என்ற பெயரில் உருவாக்கிய ஜெயமோகனையே சேரும். ஸ்தொத்திரம் எனக்கூறுவது துவங்கி, கத்தோலிக்கர்கள் வழக்கமல்லாத சாத்தான் யேசுவின் பிள்ளை , சோத்து மதம் என்ற வார்ததைகள் எல்லாம் வன்மத்தின் உச்சம். 
படைப்பாளர்களால் மனித நன்மையை மனித குலத்தின் அன்பையும் ஒற்றுமையையும் மனதில் வைக்காது எப்படி இவ்வளவு வன்மமாக எழுத முடிந்தது எனத்தெரியவில்லை. அதும் ஜெயமோகன்! தூத்துக்குடி கடற்க்கரை பேச்சையும் நாகர்கோயில் கடற்கரை மொழியையும் கூட்டி கலத்தி புதுசான  பொதுவாக ஜெயமோகன் கதைக்கும் மொழிக்குள் கொண்டு வந்துள்ளார். என் ஆச்சரியம் ஒரு எழுத்தாளனால் இவ்வளவு கேவலமாக இவ்வளவு அருவருப்பாக இன்னொரு இனத்தை, மதம் சார்ந்த மக்களை அவர்கள் வாழ்வியலை பார்க்க எப்படி முடிந்தது என்று தான். இந்த கதைப்படி இந்த ஊர் மக்கள் அமசோன் காட்டில் வாழும் இல்லது இந்தோனேஷியா போன்ற பழங்குடியல்ல. தமிழகத்தின் மூத்தகுடி. ஜெயமோ ன் ஒரு வாரம் மணப்பாடில்  தங்கி இருந்து இக்கதையை எழுதியிருந்தால் இந்த அளவு பிழை வந்திருக்காது. மனிதனனின் கற்பனையில் இவ்வளவு அசிங்கங்களா? இது போன்ற கலைப்படைப்புகள் காலத்தின் அவலம். 

12 comments:

  1. சரியாய் சொன்னீர்கள் ஜோஸபின்!

    ReplyDelete
  2. நல்ல பதிவு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டத்திற்கு அன்பும் நன்றியும்!

      Delete
    2. தங்கள் பின்னூட்டத்திற்கு அன்பும் நன்றியும்!

      Delete
  3. திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் பிரிவினை எனும் விஷ விதையை தூவி கோடிகளை கையகபடுத்த ஒரு சிலர் முயற்சி செய்வது வருத்தமளிக்க கூடிய விஷயம் தான் இரண்டரை மணிநேர காட்சிகளில் இரண்டுமணி நேரம் முழுக்க வன்முறை, காமம் ,பிற சமூகத்தாரை குற்றவாளிகளாக காட்டி இறுதியில் பத்து நிமிடத்தில் சமூக அக்கறை உள்ளது போல் வசனங்கள் காட்டி அதன் மூலம் வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்துவது கேவலம்தான்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டத்திற்கு அன்பும் நன்றியும்!

      Delete
  4. Pena Manoharan · Deputy Supdt. of Police at MaduraiFebruary 11, 2013 8:05 am

    தமிழ்த்திரைப்படங்கள் முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட சூழலில் அவைகளைக் கடந்த ப்த்தாண்டுகளாகப் பார்ப்பதைத் தவிர்த்து வந்திருக்கிறேன்.விஸ்வ்ரூபம்,கடல் விவாதங்களும் மறுபடியும் என்னைத் திரையரங்களுக்குத் துரத்துகின்றன.கூடவே தங்களின் வாசகமான மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் எச்சரிக்கையும் என் மனசாட்சியை உலுப்பி இருக்கின்றன.வாழ்த்துக்கள் சகோதரி வைகைக் கரையிலிருந்து.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டத்திற்கு அன்பும் நன்றியும்!

      Delete
  5. George SingarajahFebruary 11, 2013 8:06 am


    arumaiyaana pathivu

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டத்திற்கு அன்பும் நன்றியும்!

      Delete
  6. மிகச் சரியான புரிதலுடன், சிறந்த விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டத்திற்கு அன்பும் நன்றியும்!

      Delete