18 Dec 2011

கப்பை கிழங்கு மீன் கறி விருந்து!


திருநெல்வேலியில் இந்த வாரம் பழக்கடை, காய்கறி கடையில் கப்பை மலிவாக காணப்பட்டது! கேரளாவில் கப்பை என்று அழைக்கும் ருசியான இக்கிழங்கு வகை மரச்சீனி என்று தமிழில் அழைக்கின்றனர்.    கப்பையும் மீனும் சேர்த்து உண்டால் அதன் ருசியே அலாதி தான். ஒவ்வொருவர் விருப்பம் தகுந்தும் கப்பையை பலவகையில் சமைத்தாலும் அதன் ருசிக்கும் ஈடு இணை ஏதும் இல்லை.

                                                                                                              ஏழைகளின் உணவாக இருந்த இதன் விலையும் தற்காலம் கிலோ 40 ரூபாய் என ஏறி விட்டது. நான் வளர்ந்த ஊரில் 6 மாதம் தொடர் மழை என்பதால் வேலை அற்ற பல ஏழைகளுக்கு போஷாக்கான உணவு வகைகளில் ஒன்றாக இருந்தது இது.  இதை மலையாளிகள் வறுத்து சிப்ஸாகவும் வேகவைத்து- காயவைத்து வருடம் முழுதும் உணவாக பயன்படுத்துவர். கப்பைகாலன் என்று மலையாளியை திட்டும் தமிழன் கூட கப்பையை ருசித்து சாப்பிடுவர். மலையாளிகளின் வீட்டு தோட்டத்தில், முற்றத்தில் கப்பை செடி அலங்காரமாக நிற்பதை காணலாம். அனைவரும் விரும்பி உண்ணும் கப்பையை என் பாணியில் சமையல் செய்து தருகின்றேன்.

 தேவையான பொருட்கள்

ப்பை – 1கிலோ

தேங்காய்- 1 கப்
தேங்காய் எண்ணைய் அல்லது சமையல் எண்ணைய்- 1 கரண்டி
ஜீரகம் – சிறு அளவு
வெள்ளைப்பூண்டு- 4 - 5 பல்
இஞ்சி- சிறியதுண்டு
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
குழையும் அல்லது மசியும் அளவுக்கு நன்றாக கப்பையை வேக வைத்து வடித்து வைத்து விடவும்.
இனி தேங்காய் துருவலுடன்  ஜீரகம், சின்னவெங்காயம் 3, தேங்காய் துருவல் ஜீரகம், வெள்ளைப்பூண்டு (4-5 பல்), சிறியதுண்டு இஞ்சி, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மைப்போல் அரைத்து வைத்து கொள்ளவும்.
இனி வாய் அகன்ற ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து சூடான பின்பு, சிறிது எண்ணை விட்டு; காய்ந்ததும் கடுகு இட்டு தாளிக்கவும்.
கடுகு பொரிய துவங்கியதும் 3-4 சின்ன வெங்காயம் நறுக்கிய துண்டுகள் இட்டு வதக்கிய பின்பு கருவேப்பிலை சேர்க்கவும். இவையுடன் அரைத்த விழுதுவையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இத்துடன் மசிந்த கப்பையும் சேர்த்து நன்றாக கிளறி பாத்திரத்தில் எடுத்து பருமாறி விடவும். மீன் குழம்பும் சேர்த்து ஒரு பிடி பிடித்தால் இன்று கொண்டாட்டம் தாங்கோ!!!

6 comments:

  1. நான் விரும்பி சாப்பிடும் ஆகாரங்களில் கப்பையும் உண்டு, இங்கே பஹ்ரைனில் ஹோட்டல்களில் காப்பியுடன் பீஃப் கலந்து செய்வார்கள் நல்ல ருசியாக இருக்கும் என்ன, பித்தம் உண்டாக்கும் சிலருக்கு...!!!

    ReplyDelete
  2. பார்த்தேன், உடன் படித்தேன், பிறகு சமைத்தேன் என்று சொல்ல நினைத்தேன் ஆனால் உங்கள் கை பக்குவத்தால் செய்ததை
    சுவைத்தேன் என்று சொல்வதற்கு தங்கள் இல்லம் வரவுள்ளேன்..... வரலாமா பாபா?

    ReplyDelete
  3. பார்த்தேன், உடன் படித்தேன், பிறகு சமைத்தேன் என்று சொல்ல நினைத்தேன் ஆனால் உங்கள் கை பக்குவத்தால் செய்ததை
    சுவைத்தேன் என்று சொல்வதற்கு தங்கள் இல்லம் வரவுள்ளேன்.... வரலாமா பாபா?

    ReplyDelete
  4. பார்க்கும் போதே நாவு ஊறுகிறதே...

    ReplyDelete
  5. நாங்கள் இதை மரவள்ளி கிழங்கு என்று சொல்லுவோம். மீனும் மரவள்ளி கிழங்கும் சேர்த்து சமைத்து உண்டால் அதன் ருசியே அலாதி தான்

    ReplyDelete
  6. எனக்கு பிடித்த உணவு அப்ப அப்ப நீங்க சொன்ன பக்குவத்தில் செய்து சாப்பிடுவதுண்டு என்ன மீன் குழம்புதான் மிஸ்ஸீங்க்

    ReplyDelete