சில நாட்கள் இப்படி தான் எந்த வேலையிலும் மனம் ஈடுபடுவதில்லை. ஒரு மலையாளப்படம் கண்டு விடுவோமே என்று ‘திரைக்கதை’(Script) என்ற மலையாளப் படம் பக்கம் வந்து விட்டேன்.
2006-ல் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2008 ல் வெளிவந்தது தான் ”திரைக்கதா” என்ற மலையாளப்படம். தேசிய அளவில் அந்த வருடத்திற்கான மலையாள மொழியில் மிக சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகைக்குள்ள விருது பிரியா மணிக்கும் வாங்கி தந்த படம் இது. மேலும் அனூப் மேனோன் என்ற நடிகருக்கு சிறந்த உதவி குணச்சித்திர நடிகர் என்ற மாநில விருதும் பெற்று தந்தது இப்படம். மலையாளத் திரையுலைகில் ஒரு எடுத்து கொள்ளப்படும் இயக்குனரான ரஞ்சித்தின் இயக்கதில் மூன்று கதாபாத்திரங்களில் ஊன்றி கொண்டு விரசமே இல்லாது கதையை நகர்த்தி சென்றுள்ள பாங்கு தான் இப்படத்தின் சிறப்பு. படம் திரைக்கதை, காட்சிகள் நகர்த்தும் விதம், அர்த்தமான கதை அம்சத்துடன், அழகாக ரசிக்கும் படி எடுத்துள்ள இப்படம் மலையாளி ரசிகர்களால் மிகவும் பாராட்டு பெற்றது. அலட்டாது ஆனால் காண்பவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு கொடுத்து கொண்டே முன் செல்கின்றது இப்படத்தின் கதைசொல்லும் யுக்தி. படம் முடிவு காட்சி ஒரு போதும் நாம் கற்பனைக்கு செய்து கொள்ளாத வண்ணம் அன்பு, கவலை, பாசம், காதல் என எல்லாம் கலந்து முடித்துள்ளது இன்னும் படத்திற்க்கு சிறப்பு சேர்க்கின்றது.
இந்த படம் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை கதை என்றும் சொல்லப்பட்டிருந்தது. இதன் இயக்குனர் ரஞ்சித் இது ஸ்ரீவித்யாவுடைய கதை அல்ல ஒரு நடிகையின் கதை மட்டுமே என்றும் தெளிவுப்படுத்தியிருதாலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு ஈடு கொடுக்க இயலாத சூழலில் ஸ்ரீவித்யாவின் 72-76 களில் கமல்ஹாசனுடன் கொண்ட காதலும் அவருடைய கடைசி மரண நாட்களும் நினைவுப்படுத்திய காட்சிகள் உண்டு என்று வெளிப்படுத்தினார்.
பிரபல கர்னாடக இசை கலைஞைரான M.L வசந்தகுமாரியின் மகளான ஸ்ரீவித்யா தன்னுடைய 13 வயதில் 1969-ல் ‘சட்டம்பிக்கவலா’(தெம்மாடிமுக்கு-தமிழ் பொருள்) என்ற மலையாளம் திரைப்படத்தில் கால் பதித்தது வழியாக திரை உலகில் பிரவேசித்தார். 60 வயது சத்தியனுடன் ஜோடி சேர்ந்து நடித்து தேசிய விருதும் பெற்றார். 1972-76 ல் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் தனது 19 வயதில் ரஜனிகாந்தின் மனைவியாகவும் வயதான பெண்ணிடம் காதல் கொள்ளும் இளைஞன் கமல்ஹாசனின் காதலியாகவும் நடித்து தன் நடிப்பு திறைமையால் முத்திரை பதித்தார் சினிமா உலகில். அப்படத்தில் நடிக்கும் போது தான் இப்பத்தில் சொல்லப்படும் காதல் அவர்களுக்குள் நிகழ்ந்தது என்றும்; இரு குடும்பங்களும் அவர்கள் திருமணம் அனுமதி தந்திருந்த போதும் இருவரும் பிரிந்தனர் என்றும் சொல்லப்படுகின்றது . பின்பு குடும்ப நபர்களின் எதிர்ப்பையும் மிஞ்சி 1978 ல் கெ.வி ஜோர்ஜ் என்ற தொழிலதிபரும் மலையாளப்படம் இயக்குனருமான ஜோர்ஜை கிருஸ்தவ மதம் மாறி திருமணம் செய்து கொண்டு ஸ்ரீவித்யாவும், தன்னை விட முதியவரான வாணி கணபதியை மணம் முடித்து கமல்ஹாசனும் தங்கள் வழிகளை தேடி கொண்டனர்.
ஸ்ரீவித்யா தன் நடிப்பால் திரை உலகில் ஜுவலித்தது போல் தன் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெறாது பல போராட்டங்கள் மத்தியில் வாழ்ந்து வந்தார். தன் தாலிகட்டிய கணவன் ஜோர்ஜால் சென்னையில் குடியிருக்கும் வீட்டை பறிகொடுத்து தன் பணம் எல்லாம் அபகரிக்க பட்ட நிலையில் விரட்டி அடிக்கப் பட்டார். வெறும் 9 வருடம் மட்டுமே ஆன அவருடைய திருமண வாழ்வும் முடிவு பெற்று உச்ச நீதிமற்றம் தீர்ப்பு 90 ல் வந்து சேரும் வரை அவர் போராட்டம் ஓயவே இல்லாது போய் கொண்டிருந்தது. ஜோடி சேர்ந்து நடித்தவகளுடன் அவர்கள் அம்மா, சகோதரி ரோளில் (அபூர்வ சகோதரர்கள், தளபதி) நடித்து கொண்டு இருந்த ஸ்ரீவித்யா தன் பிறந்த ஊரான சென்னையில் இருந்து திருவனந்தபுரத்தில் குடியேறி அமைதியான சூழலில் மலையாளத் தொலைகாட்சி சீரியலுகளில் நடித்து வரும் கலையளவில் தான் கான்சர் உருவத்தில் வந்த காலன் அவர் உயிரை 2006 அக்டொபர் 19 அன்று முற்றும் பறித்து சென்றது. தன் கடைசி நாட்களில் தன்னை யாரும் காண வருவதை விரும்பாத போதும், கொச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசன் கேட்டு கொண்டதிற்க்கு இணங்க தன்னை காண அனுமதித்தாகவும், 30 வினாடி கண்ணீருடன் இருவரின் உணர்ச்சி மிக்க சந்திப்பு நடந்தது என்றும், உலகில் எந்த மூலையில் கொண்டு சென்றும் அவருக்கு மருத்துவ வசதி பெற்று தர விரும்புவதாக கமல்ஹாசன் கூறியதாகவும் ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றது. நாட்டிய பள்ளி துவங்க தன் சொத்துக்கள் யாவும் கேரளா அரசிடம் ஒப்படைத்து விட்டு இந்த உலகை விட்டு சென்றார் ஸ்ரீவித்யா என்ற மாபெரும் நடிகை!
திரைப்பட கதை இப்படியாக துவங்குகின்றது; நண்பர்களுடன் ஒரு உணவு விடுதி நடத்தி வரும் ஒரு இளம் இயக்குனர் அக்கி, அவர் தான் பிரத்வி ராஜ். தன் முதல் படத்தை வெற்றியுடன் இயக்கி பாராட்டு கிட்டிய பின்பு தன் அடுத்த படம் திரைக்கதை கருவை தேடுவதில் மும்முரமாக உள்ளார். இவ்வேளையில் புகழின் உச்சியில் கொடிகட்டி பறக்கும் அஜய சந்திரன் என்ற ஹீரோ நடிகரின்(கமல்ஹாசன்) முதல் காதலியும் முதல் மனைவியும் தென் இந்தியாவில் துளும்பி நின்ற நடிகை மாளவிக(ஸ்ரீவித்யா) எங்கே? என்ற தேடல் அற்புத நோயால் கவனிபாரற்று உற்றார் உறவினர்களை காண விரும்பாது; தான் வகுத்த தனிமையில் சுத்தம் சுகாதரம் அற்ற சூழலில் நாகர்கோயிலில் ஒரு ஆஸுபத்திரியில் கழியும் நடிகை மாளிவிகா பக்கம் கொண்டு விடுகின்றது. இயக்குனர் நடிகையின் சம்மதத்துடன் நண்பர்கள் துணையுடனும் கேரளாவில் மிக அருமையான மருத்துவ மனையில் சேர்த்து கவனித்து கொள்கின்றார் மேலும் மாளவிகாவை அவருடைய காதல் கணவருடன் சேர்க்கின்றார் என்பதே கதை!
தன் புகழின் உச்சியில் ஒரு பட்டத்து பூச்சி போல் பறக்கும் காலையளவில், வில்லன் வேடங்களிலிலும் இன்னும் அங்கிகாரம் கிடைக்காத நிலையில் இருக்கும் நடிகருடன் காதல் கொண்டு திருமணவும் முடித்து கொள்கின்றார் நடிகை மாளவிகா! திருமணத்திற்க்கு பின்பு நடிப்புக்கு முழுக்கிட்டு ஒரு சாதாரண குடும்ப தலைவியாக குழந்தை, கணவர் நலனை மட்டும் பேணி வாழ விரும்பும் சூழலில் தான் ஒரு குழந்தைக்கு தாய் ஆக போகிறேன் என்ற விடயவும் தெரிய வருகின்றது. நடிகரோ குழந்தை தற்போது வேண்டாம் தன் நடிப்பு என்ற லட்சியத்திற்க்கு பாதிப்பு ஆகி விடும் என கூறி குழந்தையை அழித்து விட முடிவு செய்து மருத்துவ மனையிலும் அனுமதிக்கின்றார். நடிகை பல நாட்களுக்கு பின்பு தன் கருவை மட்டுமல்ல ஒரு போதும் குழந்தை பெற்று கொள்ள கூடாது என்ற நோக்கில் தன் கற்ப பாத்திரத்தை இணைக்கும் faloppian tube எடுக்கபட்டுள்ளதை தெரிந்து மனம் நொடிந்து போகின்றார். தன் தாய்மையை மதிக்காது தன்னை ஒரு உடலாக மட்டும் கருதிய கணவரில் இருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்து மது போதைக்கு அடிமையாகின்றார். தன் கணவரில் இருந்து வலுகட்டாயமாக விலகிய நடிகை, வாழ்க்கை போராட்ட்த்தின் மத்தியில் சிறு சிறு வேடங்கள் நடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றார். இந்த காலையளவில் நடிகர் நினையாத உயரத்தை எட்டுகின்றார் அவர் மறுமணவும் புரிந்து வாழ்கை சுகமாக சென்று கொண்டிருக்கின்றது. ஒரு முறை, இருவரும் ஒரே படத்தில் நடிக்கும் சூழலில் தன் பழைய கணவர் அழைப்பை ஏற்க்கும் சூழலை தவிர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளருடன் 2 மணி நேரம் செலவழித்ததை அறிந்த நடிகர் முற்றும் அவரை மறந்து பிரிந்து விடுகின்றார்.
அற்புத நோயில் பிடியில் சிக்குண்டு இன்றோ நாளையோ என்று மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் தான் கணவர் நல்லவர் என்றும் அவர் தனக்கு அற்புதம் பாதித்திருந்ததாலே பெலோப்பி டியூபைய் எடுக்க காரணம் என்று தெரிந்ததும்; தான் துயரைப்பட கூடாது என்று எண்ணியே தன்னிடம் தன் கணவர் மறைத்தார் என்று அறிந்ததும் அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று அவரில் ஏக்கம் கொள்கின்றார். தன் கடைசி ஆசையாக தானும் கணவரும் முதல் முதலில் சந்தித்த வீட்டில் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கின்றார். நடிகரும் தன்னுடன் அழைத்து செல்கின்றார். எனக்கு சாக விருப்பம் இல்லை உங்களுடன் வாழ வேண்டும் என்று கணவரிடம் சொல்லி அழுவதும் கணவர் தோளில் சாய்வதுடன் படம் நிறைவு பெறுகின்றது.
ஆனால் பல கேள்விகள் மனதில் எழாதில்லை! பெண்ணின் பெண்மை, தாய்மை உணர்வு, உறவு எல்லாம் உள்ளடங்கி இருக்கும் இவ்வளவு பிரதானமான சம்பவத்தை நடிகர் ஏன் தன் மனைவியிடம் இருந்து மறைத்தார் என்பதே. ஒரு வேளை மறுபடி சொல்ல மனைவி அனுமத்திகாது இருந்தால் கூட ஒரு கடிதம் வழி, ஒரு தொலைபேசி வழி ,ஏன் ஒரு நட்பு வழியாவது தெரிவித்து தங்கள் பந்தத்தை புதுப்பித்திருக்கலாமே. பேச வேண்டியதை பேசும் நேரத்தில் மௌனம் காத்து ஈகோ என்ற பிரச்சனையால் ஒரு ஜென்மம் முழுதும் வாடி வதங்கி கணவனை புரிந்து கொள்ள இயலாது பிரிந்து சென்ற மனைவி தன் மரணம் நெருங்கும் போது மட்டும் கணவரிடம் மனதுருகும் அன்பு வந்ததால் மனைவி என்ற தன் நிலையை நியாயப் படுத்த இயலுமா? நடிகை, கணவருடன் உள்ள கோபத்தால் ஒரு முழு குடிகாரியாக மாறுகிறாள், ஒரு தாசி போல் அடுத்தவர் படுக்கையறையில் கூட தஞ்சம் அடைய விரும்பும் பெண் மனம் ஏன் கணவர் இதயத்தை தேட மறுக்கின்றது என்ற பல கேள்விகள் நம்மை தேடி வருகின்றது. சேர்ந்து வாழும் போது ஒருவருக்கொருவர் பின்னி இணைந்து பாசப் பிணைப்பால் வாழ்வதும் ஊடல் என்று வந்ததும் கீரியும் பாம்புமாக மாறுவதும், வாழும் ஒரே வாழ்க்கையை நரகமாக்கி சாகும் தருவாயில் உணர்ந்து என்ன தான் பலன்? தினசரி வாழ்க்கையில் தேவையற்ற பிடிவாதம் வைராக்கியத்தால் வாழ்க்கை முழுதும் கண்ணீர் குடித்து பெண்களை கண்டுள்ளோம். அவர்கள் மனமாற்றம் பெற வேண்டும் என்று இயக்குனர் நினைத்தால் நல்லதே. கணவருடன் உள்ள ஊடலால் தனிமையில் தினம் தினம் தீயில் உருகி வாழ்வதுடன் கணவரையும் சுடு கண்ணீரில் தள்ளியிடும் பெண்களுக்கு ஒரு நல்ல பாடமே இப்படம். தன் வாழ் நாளில் கணவரை ஒரு புழு போல் எள்ளி நகையாடி மரண நெருங்கும் போது உங்களுடன் வாழ வேண்டும் என்று அழும் பெண்ணின் புத்தியை பின் புத்தி என்று சாடுவதாகவும் தெரிகின்றது கடைசி காட்சி! தங்களுக்கு கிடைத்த ஒரே ஒரு வாழ்க்கையை நிகழ்வுகள் சம்பவங்கள் வார்த்தைகள் என ஏதோ ஒரு குற்றம் சுமத்தி மன்னிப்பு, கருணையை மறந்து தங்கள் வாழ்க்கையும் பரிதாபத்திற்க்கு உள்ளாக்கி அடுத்தவர்கள் கருணைக்கு உள்ளாகும் மனைவிகளையும் நினைத்து எடுத்த படமாக இருக்கலாம்.
கமல்ஹாசன் என்ற கதாபாத்திரத்தை படம் நடுப்பகுதி வரை அவமானப்படுத்தி விட்டு கடைசி 3 சீனில் ரொம்ப நல்லவராக காட்டுவார்கள். இது எதனால் என்று தான் புரியவில்லை. பொதுவாக மலையாளிகளின் பல படங்களில் தமிழர்கள் பெண் பித்தர்களும், மகளையே கற்பழிப்பவர்களும், பித்தலாட்டம், ரௌடி, அல்லது பிச்சைகாரர்களாகவே இருப்பார்கள். கமல்ஹாசன் என்ற உலக நாயகனை -தமிழ் நடிகனை திட்டமிட்டே பழித்தார்களா என்றும் தெரியவில்லை. அவருடைய ஆங்கில உச்சரிப்பு, ஹோலிவுட் படங்களை பற்றி அவர் விவாதிப்பது, அவருடைய தற்போதைய ஒழுக்கமற்ற மனைவி, பரதேசியாக இருந்தவரை நடிப்பு சொல்லி கொடுத்து வாழ்கை கொடுத்தவர்களும் இவர்களே போன்ற ஒரு பிம்பம் ஜெனிப்பத்துள்ளனர். ஸ்ரீவித்யாவின் முடிவுக்கு முதல் காதல் கணவரான கமலை காட்டியுள்ளவர்கள் ஸ்ரீவித்யா 10 வருடம் வாழ்ந்த அவருக்கு தீராத சோதனைகள் கொடுத்த கெ.ஜி ஜோர்ஜை முற்றிலும் மறைத்து விட்டதின் பின்னணியும் மர்மம் தான்!
மேலும் உண்மை கதைக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை என்றால் ஸ்ரீவித்யாவுக்கு சமர்ப்பிக்கப் பட்ட இப்படத்தில் சில சம்பவங்கள் மட்டும் ஏன் சேர்க்க வேண்டும் என்றும் கேள்வி எழாதில்லை! ஸ்ரீவித்யா மறுமணம் செய்ததைக் கூட இயக்குனர் மறைக்கும் காரணம் தான் என்ன? ஸ்ரீவித்யாவை துக்க கதாபாத்திரமாகவும் எல்லாம் விதி செய்த சதி என்பது போல் கொண்டு வந்துள்ளது சினிமா என்ற ஊடகத்தின் நம்பகத்தன்மையை கேலி செய்கின்றது. ஸ்ரீவித்யா தன் வாழ்க்கை கதையை தொடர்கதையாக எழுதியபோது எல்லா விடயங்களும் உண்மையாகவும் துணிவாகவும் எழுதியிருந்தார். ஆனால் மாபெரும் கலையுணர்வு கொண்டு தன் விருப்பங்களுக்காகவும் வாழ முன் வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை சமகால ஆண் ஆதிக்க மனோபாவத்தில் அவரை உருவகப்படுத்தியிருப்பது ஏற்று கொள்ள இயலவில்லை. ஒரு சம்பவம் தான் நினைவில் வருகின்றது. சிலர் பெண்ணை கட்டி கொடுக்கும் முன் ஆண் வீடு காணல் செல்லும் நிகழ்ச்சியுண்டு. புஞ்சை எவ்வளவு நஞ்சை எவ்வளவு என்றால் கையை நீட்டி அந்த கண் எட்டும் தூரம் வரை நம்முடையது தான் என்பார்களாம் ஆனால் மணப்பெண் வந்த பின்பு தான் தெரியும் காட்டி கொடுத்தது எல்லாம் அடுத்தவன் தோட்டம் என்று. கேட்டால் எங்க சொக்காரனுடையது தான் என்று சொல்வார்கள். அதே போல் கமல்-ஸ்ரீவித்யா ஒரு விற்பனை யுக்தியாக வைத்து சமீப காலத்தில் வாழ்ந்து மறந்த ஒரு பெண் கலைஞரின் வாழ்க்கையை பொய்யால் மெனைந்து படம் எடுத்து திரையிடும் நோக்கம் தான் என்ன?
ஸ்ரீவித்யா ஒரு பிரபல நடிகையாக இருந்தும் தன் கவனைக்குறைவால், நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாது அந்நோயின் கொடிய பிடியில் சிக்கி மாண்டவரே. கான்சர் நோய் வீட்டுக்கு வீடு என்று ஆகி விட்ட சூழலில் கேன்சரை மிகவும் கொடியதாக காட்டி காண்பவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தி வெற்றி காணும் யுக்தி இப்படத்தில் பிரயோகிக்கபட்டுள்ளதையும் நோக்க உள்ளது. ஸ்ரீவித்யா தான் இறக்கும் 2 நாட்களுக்கு முன்பும் தான் உயிர் பிழைப்பேன், தன் வீடு செல்வேன் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்துள்ளார். ஒரு காலத்தின் ஒரு நிகழ்வின், ஒரு சம்பவத்தின் உண்மையை பிரதிபலிக்க வேண்டிய சினிமா என்ற ஊடகம், கற்பனை கதையால் அவருடைய உண்மை வாழ்க்கை கதையை மாற்றி படம் பிடிக்க உரிமை உண்டா?
ஷரத் என்ற இசைஅமைப்பளரின் இசையும் ரfபீக் அகமதுவின் பாட்டின் வரிகளும் அழகானவை. படம் முடியும் போது ஸ்ரீவித்யா ஒரு சோக கானமாக நம்மை விட்டு அகலாது நம்முடன் பயணிக்கின்றார்!!!!
படித்து முடிந்ததும்
ReplyDeleteஎன் இதயத்துள் ஒரு இறுக்கமான கல்லை தூக்கி வைத்துவிட்டது போல இருந்தது.
ஒரே ஒரு பெருமூச்சு மட்டும் வந்து விட்டு போனதை உணர்கிறேன்.
ஒரு நல்ல நடிகை
எப்படி வாழ்ந்தாலும்
கலை தொடர எதையாவது செய்துவிட்டு
தன் உயரிய குணத்தால் மெளனமாக மரித்தவள் என மட்டுமே எழுத முடிகிறது.
வணக்கம் பாபா. உங்கள் கதையை வைத்தே ஒரு படம் எடுக்கலாம் என்று தோன்றுகின்றது. உள்ளதை உள்ளபடிகூறிய உங்கள் துணிவு பாராட்டுதலுக்குரியது. சிறிவித்யா என்ற நடிகை தமிழ் சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் சில உணர்வுகள் வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கும். நான் விரும்பும் சினிமா பாத்திரத்தில் சிறிவித்யாவும் ஒருவர். நன்றி. அன்புடன் கங்கைமகன்.
ReplyDeletea good review...
ReplyDeleteபதிவு நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்
ReplyDeleteநான் சிறு வயதில் படம் பார்ப்பது குறைவு... அப்பொழுது றஜினி ரசிகராகத்தான் நான் இருந்தேன் ...அபூர்வ ராகங்கள் பல்கலைக் கழக வாழ்வில் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது ..அதன் பின்பே கமல் ரசிகனானேன் .....ஸ்ரீவித்யாவின் நடிப்பை நன்றாக் இரசித்தேன் பின்பு அந்தப் பாடல்கள் கேட்கும் பொழுது அவரே முன்நிற்பது போல் இருக்கும் ..மிகவும் கனதியான பதிவுதான் இதுகும் ...வாந்த்துக்கள் ..
ReplyDelete>> ஆனால் பல கேள்விகள் மனதில் எழாதில்லை! பெண்ணின் பெண்மை, தாய்மை உணர்வு, உறவு எல்லாம் உள்ளடங்கி இருக்கும் இவ்வளவு பிரதானமான சம்பவத்தை நடிகர் ஏன் தன் மனைவியிடம் இருந்து மறைத்தார் என்பதே.
ReplyDeleteலாஜிக் எரெர் நல்லா பார்க்கறீங்க , குட்
>>கமல்ஹாசன் என்ற கதாபாத்திரத்தை படம் நடுப்பகுதி வரை அவமானப்படுத்தி விட்டு கடைசி 3 சீனில் ரொம்ப நல்லவராக காட்டுவார்கள். இது எதனால் என்று தான் புரியவில்லை.
ReplyDeleteஹா ஹா .. எல்லாம் எடிட்டிங்க் ஃபால்ட் தான்
very good review, tempted me to watch this movie.
ReplyDeleteஸ்ரீவித்யாவும் ப்ரியாமணியும்!
ReplyDeleteநாம் ஒரு சினிமா பார்க்கிறோம். அதில் நாம் பார்க்கும் ஒரு காட்சி நமது வாழ்க்கையில் நடந்தது போல் இருக்குமானால் ஆச்சரியமடைவோம். அப்படி ஒரு ஆச்சரியம் மலையாளத்தில் வெளியான ”திரக்கதா”படத்தைப்பார்த்தபோது எனக்கு ஏற்பட்டது.
நடிகை ஸ்ரீவித்யாவின் கண்களும், உதடும் எல்லோரையும் ரசிக்க வைக்கும் ஈர்ப்புத்தன்மை கொண்டவை. நிறைய மலையாள தமிழ்ப்படங்களில் நடித்தார். புகழின் உச்சிக்குச்சென்றார். ஆனந்தம் படத்தில் நல்ல ஓர் அம்மாவாக நடித்து எல்லோரையும் கவர்ந்தார். அதன் பின் அவர் என்ன ஆனார் என்றே சில காலம் தெரியவில்லை. அவர் கேன்சர் பாதித்து திருவனந்தபுரத்தில் இருக்கிறார் என்ற தகவல் வரவே அவரை சந்தித்து ஒரு கட்டுரை எழுதலாம் என்ற ஆர்வத்தில் அவர் சிகிட்சை பெற்று வரும் ஸ்ரீ உத்திராடம் திருநாள் ஆஸ்பத்திரிக்கு நானும் போட்டோகிராபர் ரூஸ்வெல்ட்டும் சென்றோம். அங்கே சென்றால் அவர் சிகிட்சை முடிந்து வீட்டுக்குச்சென்று விட்டார் என்ற தகவல். அவர் வசிக்கும் பிடிபி நகரில் வீட்டைத்தேடி கண்டு பிடித்துச்சென்றோம். வீட்டின் முன்புற அழகில் மனது கொள்ளை போனது. அழைப்பு மணியை அழுத்த வேலைக்கார பெண் வந்தார். அவரிடம் வந்த விஷயம் சொன்னோம். உள்ளே சென்ற அவர்,”அம்மா உங்களை சந்திக்க விரும்பவில்லை!” என்றார். அவரது வீட்டு நம்பரை வாங்கி என்னுடைய செல் போனில் அவரிடம் பேசினேன். எடுத்த எடுப்பிலேயே கோபப்பட்டார். “என்னைப்பார்க்கிறதுக்கு சொல்லி கிட்டு வர வேண்டாமா...? நான் ரொம்ப உடம்பு முடியாம இருக்கேன். இப்போது பேட்டி ஒன்னும் கொடுக்கிற மனநிலையில் இல்லை!” என்றார்.”இல்லை மேடம். நீங்க தமிழ்நாட்டுல எல்லாராலயும் விரும்பப்படுற நடிகை. உங்க பேர்ல எல்லோரும் நல்ல மதிப்பும் மரியாதையும் வெச்சிருக்காங்க.. இப்ப உங்க நிலைமையை ரசிகர்கள் தெரிஞ்சுகணும்கிறதுக்காகத்தான் மெனக்கெட்டு இங்கே வந்திருக்கேன். உங்களை ஒரு போட்டோ எடுத்துட்டு சின்னதா ஒருபேட்டி கொடுங்க போதும்!” என்றேன். சற்று சமாதானமானவர்,’’உங்க எண்ணம் புரியுது.. என்னை இப்ப போட்டோ எடுக்க விரும்பவில்லை. நான் டிரீட்மெண்டுல இருக்கேன். உடம்புசரியானதும் கண்டிப்பா பேட்டிதருகிறேன்! இப்ப போயிட்டு வாங்க.. தேங்ஸ்!” என்றபடி போனை வைத்தார். ஏமாற்றமுடன் திரும்பினோம். நாங்கள் திரும்பிய ஒரு மாத காலத்தில் (2006 அக்டோபர் 19) அவர் இறந்த தகவல் கிடைக்க திருவனந்தபுரத்தில் சென்று அவரது மரண செய்தியை கவர் செய்தேன். கடந்த ஆண்டு ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையின் சில பகுதிகளை சொல்லும் வகையில், ஸ்ரீவித்யாவாக ப்ரியாமணி நடித்த “திரக்கதா” மலையாளப்படம் பார்த்தேன். ரஞ்சித் டைரக்ஷன். அதில் ஒரு காட்சி. ப்ருதிவிராஜ், கேன்சர் பாதித்து நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இருக்கும் ப்ரியாமணியைப்பார்க்க வருவார். அவரைப்பார்க்க முதலில் ப்ரியாமணி மறுப்பார்...கோபப்படுவார். இந்தக்காட்சி நான் ஸ்ரீவித்யாவை நேரில் பார்க்கச்சென்றபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் காட்சியாக மாற ஆச்சரியத்தில் உறைந்து போனேன் நான். படம் பார்த்த அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை. நிஜ நிகழ்வுகளை சினிமாவில் பார்க்கும்போது ஆச்சரியம்மேலிடுகிறது.!
(பத்திரிக்கையாளரான என் நண்பர் நாகர் கோவில்- திருவட்டார் சேர்ந்த சிந்துகுமார் தானுமலையான் முகநூல் வழியாக தந்த பின்னூட்டம்)
நல்ல பதிவு...என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteகருத்தளித்த என் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்!
ReplyDeleteuseful post mam!
ReplyDeleteஅருமையான பதிவு. பார்க்க முடியாதே என்ற ஏக்கம்தான்.
ReplyDelete