30 Jul 2011

பெண்களுக்கு மன அழுத்தம்!


உலகில் மன அழுத்தத்தால்  அதிகம் துண்புறும் பெண்கள் கொண்ட நாடு இந்தியா என்பது சற்று வருத்தம் தரும் தகவலாகவே உள்ளது.   பெருவாரியான பெண்கள்; வேலைக்கு செல்லும் நாடான அமெரிக்காவில்,   53% பெண்கள் மனழுத்த நோயால் பாதிக்கப்படும் போது;   பெண்ணை தேவி என்றும்,  தாயென்றும்  பூஜிக்கும் இந்தியாவில் 87% பெண்கள் மன அழுத்த நோயால் துன்புறுகின்றனர்.     பெண்ணை  ஜனாதிபதியாகவும், பிரதமராகவும்,  மாநிலங்களில் முதல்வர்களாகவும்   கொண்ட இந்தியாவில்,  ஆணாதிக்க சமூக சூழல், அரசியல், வீட்டு சூழல் என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பாதிக்கப் படும் பெண்களின் மனநிலையும்  இந்நிலைக்கு ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க இயலாத உண்மை.

சுற்றார் விருப்பத்தோடு,   தங்கள் விருப்பங்களை பேணவும் பெண்கள் முன் வரவேண்டும்.  உலகத்திற்காக வாழும்  தியாக பாத்திரமாக வெளிக்காட்டி கொண்டு மனதில் கலங்கி தவிக்கும் பெண்கள் பலர் உண்டு.   தன்னை ஒரு  தனி  நபராக,  ஏர்மையாக  வெளிப்படுத்தவும், முகமூடியற்று   தன்னை அடையாளப்படுத்தி கொள்ளவும் முன் வர வேண்டும்.

பல பொழுது, ஒரு பெண்ணை இன்னொரு பெண் அடிமைப்படுத்துவதில் சுகம் காணும் வக்கிர மனோபாவம் தான்    காணப்படுகின்றது.   ஒரு தோழி தன் அனுபவத்தை வருத்ததுடன் குறிப்பிட்டார்; அவர் சிரித்து  கணவரிடம் பேசுவது கூட மகளுக்கு பிடிக்காதாம்.  இன்னும் சில வீடுகளில்   அம்மா தன்னை போல் பொலிவாக உடை, நகை அணிவதை மகள்கள் ஏற்று கொள்வது இல்லை.  அம்மாக்களும் பாசம் அன்பு என்ற பெயரில் மனதில் பாரத்தை சுமந்து இந்த சூழலுக்கு அடிமையாக வாழவே துணிவார்கள்! 

இதனால்  தலைவலி போன்ற விட்டு மாறாத நோய் நிலையில் பெண்கள் உழலும் காரணவும் இது ஆகின்றது. படிக்காத பெண்களை விட படித்த பெண்களை இந்நிலைக்கு எளிதில் தள்ளப்படுகின்றனர்.


எந்த பெண்ணின் வாழ்விலும்  ஒரு வெற்றிடம் ஒரு காலையளவில் பிடிகூடுவது தவிற்க இயலாததாக உள்ளது.  வீட்டில் செல்ல மகளாக, எல்லா கவனமும் பெற்று வளர்க்கப்பட்ட பெண், திருமண வாழ்க்கையில் பிரவேசிக்கையில்; வீடு, நிலம், வாகனம் போன்று  இன்னொரு பொருளாக கருதக் கூடும்  சூழல்கள்  ஒரு சில வீடுகளில் உண்டுதான்.   ஆசையாய் கொஞ்சி மகிழ்ந்து வளர்த்த  குழந்தை கூட  கண்டு கொள்ளாத நாட்களும் எழும். காதலில் உருகி நேசித்த கணவர் கூட கண்டு கொள்ளாது  புரக்கணிக்கும் நிலையும் சந்திக்கலாம்.   இவ்வேளைகளில் பெண்கள் சண்டைக் கோழி களாக மாறி,  மேலும் மனக் குழப்பத்திற்குள் விழாது தன் மனதிற்கு  பிடித்த, ஆக்க பூர்வமான செயலில் மனதை செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.  

 அந்ஒட்த ஆக்கபூர்வமான செயல்மாற்றம் என்பது   படிப்பாக இருக்கலாம் அல்லது புத்தக வாசிப்பாக இருக்கலாம், கலை சார்ந்த  செயலாக இருக்கலாம், அல்லது பூந்தோட்டம்  பராமரித்து இல்லை எனில் சமூக சேவையில் மனதை செலுத்தலாம்.  ஆனால் பலபோதும், பெண்கள் தங்கள்   சோம்பலால் ஆக்கபூர்வமான செயலை விடுத்து சீரியல் கண்டு கற்பனையில் இருப்பதும் அதில் வரும் பெண் கதா பாத்திரம் போல் கோபப்படுவது, அழுவது என தங்களை மேலும் மனச் சிதைவுக்கு ஆளாகி விடுகின்றனர்.  

பெண்கள் மூளை,  ஆண்களை விட பதின் மடங்கு சிந்தனை செயலாக்கத்தில் பன்முகத்தன்மை கொண்டது . சோம்பலில் இருந்து, ஒரு போதும் அதை ஒரு குட்டி சாத்தானின் பண்டக சாலையாக மாற்றி விடக்கூடாது!  


அடுத்தவர்களை ஒப்பிட்டு பார்த்து எப்போதும் கவலையாக இருக்கும் பெண்களின் எண்ணம் கொடியது.  சில பெண்களுக்கு,  தன் கணவர், தன் வீட்டாரை தவிர்த்து மற்று எல்லோரும் நல்லவர்களாக தெரிவார்கள் !  அடுத்தவர்கள் உடுத்தும் நகை, உடை, ஆடம்பரம் கண்டு தனக்கு இல்லை என்று நிராசையில் தவிப்பது; நேற்றைய பொழிந்த நாட்களை நினைத்து கொண்டு  இன்றைய  மகிழ்ச்சியில் வாழத்தெரியாதும் நாளைய கனவுகளுடன் வாழ்வது வழியாக மனநோய்க்கு ஆளாகின்றனர்

 மன நிறைவு நாம் வெளியில் இருந்து பெறுவது  இயலாது. அதை  நம்முள்ளில் இருந்து வெளிக்கொண்டு வர வேண்டும்.  சிலர் அடுத்தவர்களை குறைக்கூறி கொண்டே தங்கள் நிலையை மறைந்து வாழ்ந்து வருகின்றனர்.சில பெண்கள் தங்கள் குடும்பத்தை நடத்தி செல்ல வலுவற்றவர்களாக இருப்பர்.  ஆனால்  அடுத்தவர்களை நோக்கி கொண்டே தன் நிலையை மறந்து  எப்போதும்  குறை கூறும் கண்ணுடன்,   எள்ளாலுடனே தங்கள் வாழ்க்கையை நகத்தி செல்கின்றனர். 


  பெண்களுக்கான பிரத்தியேக ஒரு நோய் என்பது,  தன்னை சேர்ந்தவர்களை ஆள நினைப்பது தான்.  கணவர்,  குழந்தைகள் , அவ்வீட்டு பெரியவர்கள் என தன்னை சார்ந்த உறவுகளை அதீதமாக  ஆளுமை செய்வதில் குறியாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர்களுடன்  வாழ்வதே சலிப்பாக உணரும் போது     எழும் பிரச்சனையால் பாதிக்கப்படுவது இவர்களுடன் வாழும் மனிதர்கள் மட்டுமல்ல  இப்பெண்களும் மனச் சோர்வுக்கு உள்ளாகின்றனர்

   

பல பெண்கள் திருமண வாழ்க்கையை தங்கள் பிடிவாத செயல்பாடால்    தடவறையாக மாற்றி விடுகின்றனர்.    கணவரை தோழராக கருதாது , காவலாளி வேலை பார்த்தே ஓய்ந்து விடுகின்றனர். திருமண வாழ்க்கையில் சுவாரசியங்களை கெடுத்து விரைவில் முதுமையின் நிழல்களை தன்னகதாக்கி கொள்கின்றனர்.

பெண்மையின் இலக்கான மெல்லிய நுன்னுணர்வுகளை பேணாது இருப்பதும் மன உளச்சலையே கொடுக்கும்.   சிரிப்பது, எளிமையாக பேசுவது, இயல்புடன் வாழ்வது என  தன்னையும் கடந்த ஒரு உலகத்தையும் உள் வாங்க தெரிந்திருப்பது மிகவும்  அவசியம்.  சில வரட்டுத்தனமான  பெண்கள் பேசுவது கேட்டு கொண்டிருந்தால் நம் காதில் இரத்தம் வர வைத்து விடுவார்கள்.   

சில பெண்களுக்கு புறம் கூறுவது என்பது திண்பண்டம் சாப்பிடுவது மாதிரி.  தன் பார்வையிலே அவர்கள் சுற்றியுள்ள உலகை அவதானித்து கொண்டிருப்பார்கள்.  இதில் பொறுபற்ற பெண்களை விட எல்லா விடயங்களிலும் தாங்கள் பொறுப்பானவர்கள், கன்னியமானவர்கள் என்று நம்பும் பெண்கள் மிகவும் சிக்கலான மனநோயில் வாழ்கின்றனர்.

தன்  வேலைகளை நிதானமாக பகிர்ந்து செய்யவும் முன் வர வேண்டும்.  சில பெண்கள் காலை விடிந்ததில் இருந்து இரவு படுக்க போகும் மட்டும் வேலை செய்து கொண்டே இருப்பார்கள்.  வேலை செய்யும் சோர்வில்  கணவருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் அர்ச்சனை விழுந்து கொண்டே இருக்கும். இந்த உலகமே இவர்கள் தலையில் தூக்கி சுமப்பது போல் ஒரு நினைப்பில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.  மனதை சாதாரணமாக வைத்து கொண்டாலே பல பிரட்சனைகளை  களைந்து விடலாம். இயல்பாக வாழ்ந்து வேட்டையாடப்படாதும், வேட்டையாடாதும் நம் வாழ்வை மகிழ்ச்சியாக சுகமாக சோர்வற்று வாழ்ந்து தீர்ப்பது ஒவ்வொரு பெண்ணின் லச்சியமாக  இருக்க வேண்டும்.  வாழ்க்கை அழகானது. பெண்கள் வாழ்க்கை இன்னும் மேன்மையானது. அர்த்தச்செறிவானது.  பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பது அவர்கள் வீடுகளுக்கு மட்டுமல்ல வளர்ந்து வரும் தலைமுறைக்கும் மிகவும் அவசியமாகும்.

15 comments:

 1. நல்ல கட்டுரை...Josephine ...நீங்களும் அந்த புள்ளி விவரத்திலுண்டா...-:)

  ReplyDelete
 2. சோம்பலால் ஆக்கபூர்வமான செயலை விடுத்து சீரியல் கண்டு கற்பனையில் இருப்பதும் அதில் வரும் பெண்கள் கதா பாத்திரம் போல் கோபப்படுவது, அழுவது என தங்கள் சிந்தனை எண்ணங்களை கெடுத்து மேலும் மனச் சிதைவுக்கு ஆளாகி விடுகின்றனர்.

  அருமையான பதிவு.
  தொடர்ந்து நன்கு எழுதுங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. படித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete
 4. நல்ல கட்டுரை, பெண்களைச் சாடி விட்டீர்கள், ஆண பெண் இருவரும் வாரம் ஒருமுறையாவது குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கி குடும்ப கல்ந்துரையாடல் (மற்றவ்ர் தலையீடின்றி) நடந்தால் சிறப்பாக இருக்கும் ..வாய் விட்டுக் கதைத்தால் நோய்விட்டுப் போய்விடும் என்பதைச் சில பெண்கள் தவறாக விளங்கி மற்றவர்களுக்கு ஒரே அருச்சனை .. இருவரும் வெளிப்படையாகக் கதைத்தால், பாலியல் தேவை உட்பட, மூட் இல்லாட்டில் குளிசை வேண்டி வாருங்கள் என்று வெளிப்படையாகக் கதைப்பத்ற்கு நிலமை வந்தால்.. மன அழுத்தம் தன் பாட்டில் போய்விடும் .. இதில் சைக்கோபாத் (Psychopath)ஆனவர்களை ஒன்றும் செய்ய முடியாது .அவர்கள் அழுத்தத்தில் வாழ்ந்து மற்றவர்களுக்கும் அழுத்தம் கொடுப்பார்கள்...பல நியங்களைத் தொகுத்து இருக்கிறீர்கள் ..பெண்களின் பங்கு குடும்ப மகிழ்ச்சிக்கு அதிகம் என்றாலும் ஆண்களின் பங்கையும் கணக்கில் எடுக்க வேண்டும்..

  ReplyDelete
 5. ஆக்கபூர்வமான நல்ல கட்டுரை.ஆண்களும், பெண்களம் படிக்க வேண்டியவற்றை அழகாக அனுபவபூர்வமாக கொடுத்துள்ளீர்கள்.

  ReplyDelete
 6. படித்து உணர வேண்டிய கட்டுரை .

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. Your ability to observe the society with care and concern is amazing!

  ReplyDelete
 8. நீங்களும் அந்த புள்ளி விவரத்திலுண்டா...-:)//// நண்பா நானும் சாதாரண மனிதை தானே.... தேவதையா? இருப்பினும் இந்நிலைகளை புரிந்து, கடந்து, பூமியில் வாழும் நாட்கள் மிகவும் சிறிது என்பதால் யாருக்கும் இயன்ற அளவு துன்பம் கொடுக்க கூடாது என்று விரும்பி வாழ துணிகின்றேன்.

  ReplyDelete
 9. நல்ல பதிவு... அணைத்து பெண்களும் படிக்க கூடிய ஒன்று..!

  ReplyDelete
 10. Dear sister, sorry for typing in english because I Don't know the tamil typing. pathivu nanraga irunthathu
  Balu chennai

  ReplyDelete
 11. சரி சரி நீங்களும் உளவியல் மருத்துவரா மாறிட்டிங்க.பீஸ் எவ்வளவு அதை முதல்ல சொல்லுங்க.

  ReplyDelete
 12. மன அழுத்தம் வராமல் தடுக்க... Avoid Stress
  http://tamilpadaipugal.blogspot.com/2011/08/avoid-stress.html

  ReplyDelete
 13. வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.html

  ReplyDelete
 14. அருமையான பகிர்வு
  ஆரோக்கியமான நிறைவை தருகிறது

  ReplyDelete