தமிழக அரசால் சிரம்பட திட்டமிடபட்டு மக்கள் துயரில் வியாபரம் பண்ணும் இடமே டாஸ்மாக் என செல்லமாக அழைக்கப் படும் மதுபானக்கடைகள். கடந்த தீபாவளி அன்று மட்டுமே 150 கோடி விற்க்கப் படவேண்டுமென்று அரசால் திட்டமிடப் பட்டு 200 கோடி ரூபாய்க்கு விற்பனை நடத்தி பெரும் சாதனை படைத்துள்ளனர் நவீன வள்ளுவர் முதல்வர் தலைமை தாங்கும் தமிழக அரசு!
மதுவகைகள், தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் வேறுபட்டிருந்தாலும் பல வகை பெயர்களில் பண்டை காலம் துவங்கியே மனிதர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை வரலாறு, இலக்கியம் வழியே நாம் தெரிந்து கொள்ள இயலும்.
தமிழகத்தில் 6740 மதுபான கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 500 கடைகள் உள்ளது என கணக்கிடபட்டுள்ளது. பள்ளிகள் தனியாரிடம் ஒப்படைத்த போதும் மதுக்கடைகள் அரசு வசம் வைத்து பெரும் லாபம் தரும் தொழிலாக அதாவது வருடம் 10 ஆயிரம் கோடி அல்லது தினம் 45 முதல் 60 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பெரும் தொழிலாக வளர்க்கபட்டுள்ளது. பல கிராம மக்களின் வருமான மார்கமாயிருந்த பனை மரத்தில் இருந்து எடுக்கும் கள்ளைக் கூட தடை செய்து அமோகமாக வெற்றி நடை போட்டு கொண்டிருக்கின்றது அரசின் டாஸ்மாக் !
மதுபானங்களை அதன் உற்பத்தியை பொறுத்து பீர், வைன், பிராந்தி(ஸ்பிரிட்) என வகைப்படுத்தியுள்ளனர். பார்லி, கோதுமை, சோளம் போன்றவையுடன் சர்க்கரை சேர்த்து பீர் தயாரிக்கபடும் போது; திராட்சை, செரி, ஆப்பிள், பிளம் போன்ற பழங்களில் இருந்து வைன் தயாரிக்குகின்றனர். ஆல்கஹோல் அல்லது 20% ஸ்பிரிட் கலவையுடன் பிராந்தி தயாரிக்கபடுகின்றது.
100 க்கு மேற்பட்ட நாடுகளில் இதன் பயன்பாடு பல சட்ட திட்டங்களால் வகையறுக்கபட்டு வருகின்றது. 16 அல்லது 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கே மதுபானம் விற்கலாம் பயன்படுத்தலாம் என சட்டம் உள்ளது. பொது இடங்களில் பயன்படுத்துவதை தடை செய்தும் பல நாடுகளில் சட்டம் உள்ளது. மதுபானங்களின் பயன்பாட்டை தடைசெய்ய பல நாடுகள் சிறப்பாக நார்வே, பின்லான்று போன்ற ஐரோப்பிய நாடுகள் கூட ஆக்கபூர்வமான செயலில் உள்ள போது கலாசாரம் பண்பாடு வள்ளுவர், பெரியார் வழிதோன்றல்கள் என பீற்றி கொள்ளும் தமிழக மக்கள் பயன்பாட்டை அதிகப்படுத்தும் திட்டத்த விட குறைத்து கொள்ள அல்லது முற்றிலும் ஒழிக்க என ஒரு ஆக்கபூர்வமான செயலிலும் இறங்க மனம் வராது உள்ளது தமிழக அரசு.
எம்.டி ராமாராவின் ஆட்சியில் ஆந்திராவில் மதுபானத்தை முற்றிலுமாக ஒழித்தாலும் அவரின் ஆட்சிக்கு பின்பு அது தோல்வியில் தான் முடிந்தது. 1996-98 காலயளவில் ஹரியான மாநிலத்தில் தடை நிலவில் இருந்தது. தற்போது மிஸோராம், மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டுமே தடை பூர்ணமாக பின் பற்றபடுகின்றது. மோடியை இதற்க்கு என்பதற்க்காவது நம் நாட்டில் பிரதம மந்திரியாக பரிந்துரைக்கலாம்.
குடும்பத்திற்க்கு, குழந்தைகளுக்கு என துணியாகவும் உணவாகவும் வாங்கி கொடுக்க வேண்டிய பணம்; ஆண்கள் உயிரை குடிக்கும் மேலும் குடும்பங்களை அழிக்கும் சூழலுக்கு தள்ளப்படுவது பரிதாபத்திற்க்குரியதே. பல வாகன விபத்துக்கும் கொலை கொள்ளை கற்ப்பழிப்பு போன்ற இளிவு செயல்களுக்கும் மதுபானம் காரணம் என்றால் மறுக்க இயலாது. பத்திரிக்கையில் விமான ஓட்டிகள் கூட மதுபானம் அருந்தி விமானம் ஓட்டுவதை கண்டு பிடிக்க பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது.
இதில் பள்ளி மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகி வருவதும், கல்லூரி மாணவர்கள் அவர்கள் பேராசிரியர்களுடன் 'சியேர்ஸ்' கூறி மது அருந்துவதும், பல கணவர்கள் தங்கள் மனைவிகளையும் மது பழக்கத்துக்கு அடிமையாக்குவதும் வெளிச்சத்திற்க்கு வருகின்றது. பொது இடத்தில் குடிப்பது இந்தியாவில் சட்டத்தால் குற்றம் என்றாலும் பேருந்து நிலையங்களில் மதுபான கடைகளை வைப்பது வழி மக்களை மதுவுக்கு அடிமையாக்குகின்றர் என்பது தான் உண்மை. தென்காசி பேருந்தில் நெல்லை புதிய பேருந்து நிலையம் வரும் போது பல குடிமகன்கள் குடி போதையில் தங்கள் மகள் போன்ற கல்லூரி மாணவிகளை சில்மிஷம் செய்வதை கண்டுள்ளோம். மனைவியை பக்கத்தில் வைத்து கொண்டே கை, கால் நீட்டி பெண்களை உரசி இன்பம் காணும் குடிமகன்களும் உண்டு தான்.
கடும் குளிர் பிரேதச மக்கள் குளிரில் இருந்து தப்பிக்கவும், கடும் உழைப்பால் வந்த உடல் வலியை மறந்து தூங்கவும் பயன்படுத்தி வந்த மதுபானங்கள் இன்று விருந்து வைபங்களிலும் ஆண்மையின் அடையாளமாகவும் மாற்ற பட்டது துரதிஷ்டமே. பல பெண்கள் கூட அடிமையாகின்றனர் என்பதும் குடித்து விட்டு வீட்டிற்க்கு வரும் கணவர்கள் ஒரு பங்கு மதுபானம் மனைவிக்கும் வாங்கி கொடுத்து சரி கட்டுகின்றனர் என்பது திரைமறைவில் கசியும் உண்மை.
என் அப்பாவுக்கு அறிமுகமுள்ள குடும்பம், தெற்கு தமிழகம் ஒரு குக்கிராமத்தில் இருந்து கேரளாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், வசதி வாய்ப்புடன் 5 குழந்தைகளுடம் நல்ல நிலையில் வாழ்ந்து வந்தனர். அக்குடும்ப தலைவர் கடை, வியாபாரம் என பொறுப்பாக இருந்தவர் இரவானால் ஒரு குப்பியுடன் வீட்டு படியை மிதிக்க ஆராம்பித்தார். தினம் கால் குப்பி மது அருந்தி தூங்க கூடியவர், போக போக தன் மனைவிக்கு ஒரு குண்டு வாங்கி கொடுக்க ஆரம்பித்தார். அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்த பெண் தன் 18 வது வயதில் பெற்றோர் குடித்துவிட்டு ஆட்டம் போடுவதை கண்ட மன உளச்சலில் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அத்தாயும் மனம் உடைந்து ஒரு வருடத்திற்க்குள் இறந்து விட்டார். மற்றும் ஒரு பெண் அம்மா, அக்காவின் முடிவை உள் வாங்க இயலாது மன நோயாளி ஆகி விட்டார். பேச்சும் சிரிப்புமாக இருந்த வீடு இன்று சுடு காடு போல் ஆகி விட்டது.
நாங்கள் இரண்டாம் வகுப்பு படித்த போது ரஷீதா, ரகுமத் என்ற இரு சகோதரிகள் எங்களுடன் படித்தனர். அவர் அப்பா குடிகாரர் என்பதால் அவர் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரும் சண்டையாக இருந்தது. பல வேளைகளில் அவர்கள் அப்பா குடி போதையிலே பள்ளியில் வந்து அவர்களுக்கு தின் பண்டம் வாங்கி கொடுத்து ஆசையாக கட்டியணைத்து முத்தம் கொடுத்து செல்வார். அவர்கள் அப்பா குடிகாரர் என்றிருந்தாலும் கூட அத்தா, அத்தா என்று தன் அப்பாவை பற்றி ஆயிரம் கதைகள் எங்களிடம் கதைப்பார்கள். ஒரு நாள் அவர்கள் அப்பா, பள்ளி பக்கத்திலுள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஷீதாவால் தன் அப்பாவின் பிரிவை தாங்கி கொள்ள இயலாது திடீர் திடீர் என மயக்கம் போட்டு விழும் நோயால் பீடிக்க பட்டார் அதன் பின்!
அதே போல் எங்களுக்கு 5,6,7 வகுப்புகளில் அறிவியல் பாடம் நடத்தும் 'மத்தாய்' என்ற ஆசிரியர் இருந்தார். அவரின் அழகான மனைவியும் மூன்று குழந்தைகளும் கண்ணீரும் கதம்பலுமாக தங்கள் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தனர். பள்ளி மணியடித்தவுடன் நாங்கள் புத்தக பையை கொண்டு ஓடி வீடு வருவதற்குள் மத்தாயி சார் மதுபான கடைக்கு வந்து விடுவார். பின்பு கல்வி அதிகாரியின் கூறி அவரின் சம்பள கவர் நேராக அவர் மனைவி கைக்கு சென்றது, பிள்ளைகளை நல்ல படிப்பு, வசதி வாய்ப்புடன் வளர்த்தார் அவர் மனைவி. பின்பு தங்கள் மாணவர்களிடமே 10, 20 ரூபாய் என கையேந்த ஆரம்பித்தார் மத்தாயி சார்! அவர் மனைவியோ வேலைக்கு போகாத அரசு அதிகாரியாகி 'ஹீரோயின்' ஆகி கொண்டிருந்தபோது மத்தாய் சார் 'சீரோ' ஆகிகொண்டே இருந்தார். எங்கள் ஊர் கம்னிஸ்ட் கட்சிகாரர்கள் அவர் மனைவியை அணுகி "சேச்சி எங்க பார்ட்டிக்கு வந்து சமூக சேவைசெய்க" என அழைப்பு விடுத்தனர். அவரும் கட்சி உறுப்பினர் ஆகி சிந்தாபாத் முழக்கியே தலைவியாகிய பின்பு மத்தாய் சாருக்கு சோறு வைத்து கொடுப்பதே ஒரு பெரும் வேலையாகி விட்டது. அவர் மனைவியும் நேதாக்களிடம் சொல்லி அவரை தண்ணியில்லா காட்டுக்கு மாற்றம் வாங்கி கொடுத்து விட்டார். மத்தாய் சாருக்கு மதுவினால் சம்பள கவர் மட்டுமல்ல தனக்கு இருந்த ஒரே ஒரு மாதுவையும் கட்சிக்கு தாரை வார்த்து விட்டு புலம்பி அலைவதாக கேள்வி பட்டோம்.
மாலட்டு தன்மை, சிறுநீரக கோளாறு, மூச்சு திணறல் போன்ற நோய்க்களுக்கு குடி ஒரு காரணம் என அறிந்தும் குடியை விட பல ஆண்கள் தயங்குகின்றனர் என்பது தான் புரியாத புதிராக உள்ளது!
அளவாக மது அருந்துவதை கிறிஸ்தவ(கத்தோலிக்க), ஹிந்து, புத்த மதங்கள் போன்றவை கூட ஆதரிக்கின்றது. 'அளவு' என்பது தான் இங்கு பெரும் பிரச்சனையே. மேல் நாடுகளில் ஒரு குவளை, இரண்டு குவளை என பயன்படுத்தும்போது நம்மவர்கள் கால் குப்பி அரை குப்பி, முக்கால் குப்பி என மது பானத்தை தண்ணீர் போன்று மொந்தி தள்ளுகின்றனர். பல வீட்டில் குடிக்கும் அப்பாக்களை பிள்ளைகள், அவர்கள் பெற்றோர் ஏன் கட்டின மனைவி கூட மதிக்காது ஒரு சிலரை கல்லைபோட்டும் கட்டிவைத்தும் அடித்து கொல்லுகின்றனர்.
அளவாக மது அருந்துவதை கிறிஸ்தவ(கத்தோலிக்க), ஹிந்து, புத்த மதங்கள் போன்றவை கூட ஆதரிக்கின்றது. 'அளவு' என்பது தான் இங்கு பெரும் பிரச்சனையே. மேல் நாடுகளில் ஒரு குவளை, இரண்டு குவளை என பயன்படுத்தும்போது நம்மவர்கள் கால் குப்பி அரை குப்பி, முக்கால் குப்பி என மது பானத்தை தண்ணீர் போன்று மொந்தி தள்ளுகின்றனர். பல வீட்டில் குடிக்கும் அப்பாக்களை பிள்ளைகள், அவர்கள் பெற்றோர் ஏன் கட்டின மனைவி கூட மதிக்காது ஒரு சிலரை கல்லைபோட்டும் கட்டிவைத்தும் அடித்து கொல்லுகின்றனர்.
கிறுஸ்துமஸ் நாட்களில் கிறிஸ்தவர்கள் வீட்டில் விருந்துடன் வைன் பங்கிடுவது உண்டு. அதற்கென சிறு பீங்கான் கோப்பையில் சாப்பாடுக்கு பின்பு கேக்குடம் அருந்தும் வைன் சுவையானது தான்! கேரளாவில் பல வீடுகளில் வீட்டு அம்மாக்களை 45 நாட்களுக்கு முன்பே ஒரு கூஜாவில் வைன்(திராட்சை,நெல்லி) செய்வார்கள். எங்களுக்கு ஆலயத்திலும் சிறு அளவு பிராசாதம் போன்று வைன் கிடைக்கும். திராட்சை வைன் அளவான அளவு அருந்துவது இதயத்திற்க்கு நல்லது என சொல்ல படுகின்றது. அளவுக்கு மீறி குடித்த பல மனிதர்களை பற்றியும் அவர்கள் நேர் கொண்ட பல துயர் பற்றியும் பைபிளில் கதைகள் உண்டு.
பிராந்தி வகை சேர்ந்த முக்கால் குப்பி மதுபானத்திற்க்கு 230 ரூபாய் துவங்கி 520 ரூபாய் வரை கொடுக்க வேண்டியுள்ளது. வைனுக்கு 235 ரூபாயும், விஸ்கி போன்றவை 1030-1760 வரை விற்க படுகின்றது. பீர் 60 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை செலவாகின்றது.
அரசு மக்களை கேள்வி கேட்காத சமூகமாக மாற்ற, ஒரு விதமான மயக்க சூழலிலே தள்ள, சிறப்பாக வருமானம் ஈட்ட மதுபான கடைகள் அவர்களுக்கு உரிய வழிமுறை தான். இதில் அரசு அதிகாரிகள் கைகூலி(லஞ்சம்) பணத்தில் மற்றும் இனாமாக கிடைக்கும் பணத்தில் குடிக்கும் போது ஏழைகள் தங்கள் உழைப்பின் பெருமொரு பகுதியை மதுபானத்திற்க்கு என செலவிடுகின்றனர். போன மாதம் மழையால் தொழிலாளர்கள் வேலையில்லாது இருந்ததால் மதுபானக் கடை வியாபாரவும் மந்தமாக இருந்தது என தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் டாஸ்மாக் அதிகாரிகள். கலவரம், சமூக பிரச்சைனை எதுவாகட்டும் பாதிக்கபடும் ஏழைகளை மது அடிமைக்கும் பலியாக்கபடுகின்றனர் என்பது தான் மறுக்க முடியாத துயர்.
மதுவினைக் குடிக்காமல் ஒருவன் எத்துணை நாள் வாழலாம்.... எத்தனை நாள் வேண்டுமானாலும் வாழலாம். ஒன்றும் சாக மாட்டான்.... ஆனால் தண்ணீர் குடிக்காமல் எத்தனை நாள் வாழ் முடியும் 10 நாள் மேல் வாழ் இயலாது. அரசு அந்த தண்ணீரை தடை செய்து விட்டு, இந்த தண்ணீருக்கு ஒழுங்கு செயதல் அவசியம்.
ReplyDeleteTrue..our Tamil society was ruined by alcoholism in many countries!
ReplyDeleteஅற்புதமான பார்வை . வடிவம் . கருத்துக்கள் . மூளையோடு மட்டும் அல்லாமல் மனதோடும் பேசுகிற ஓர் அழகிய பெண்மையை உங்கள் எழுத்துக்களில் பார்த்து வியக்கிறேன் . ஒன்று தெரியுமா ஜோஸ்? இன்று தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது . காரணம் தமிழகத்தில் பெருகி வரும் குடிப்பழக்கச் சாவுகள் .
ReplyDeleteஅளவுக்கு மீறிக் குடிக்கிற தமிழனுக்கு மதுவை ஆளத் தெரியவில்லை என்பது உண்மை .
சென்னையில் ஒரு பகுதியில் ஒரு துவக்கப் பள்ளி அருகில் மதுக்கடை திறக்கப் பட கல்விக்கு தொந்தரவாக இருக்கிறது என்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய . போலீஸ் வந்து அப்புறப் படுத்தியது ..... பள்ளிக் கூடத்தை அங்கு இருந்து .
இது தான் நம் நாட்டின் அவலம்!!! பேருந்தில் பயணிக்கும் போதும் பேருந்து நிலையங்களிலும் குடிகாரர்களின் தொல்லைகள் எண்ணில் அடங்காத்து.
ReplyDelete