3 Dec 2010

Kudankulam-மரண கோட்டையின் மேல் தவழும் திருநெல்வேலி!!!!!

title தமிழகத்தின் வீர மண், புராதன கோயில்கள், கிருஸ்தவ ஆலயங்களின் இருப்பிடம், அறிவு ஜீவிகள், அறிஞர்கள் வீர புதல்வர்கள் பிறந்து, வாழ்ந்த மண் என பல சிறப்புகள் நெல்லைக்கு உண்டு.   தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் அபகரிப்பு என  தாமிரபரணி நதிக் கரையை கூவமாக்கும் அரசு, கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டாம் என முடிவெடுத்து; முழுவதுமாக அழிக்கும் நோக்குடன் கூடன்குளம் அணுமின் நிலையம் நிறுவி உள்ளது. இந்த நிலை திருநெல்வேலியை மரண பூமியாக உருவாக்கவே உதவும்.      

இந்தியாவில் இது போன்ற அணுமின் நிலையங்கள்  தாராப்பூர், ராஜஸ்தான், உத்தரபிரதேஷ், குஜராத், கன்னடா, தமிழகத்தில் சென்னை கல்பாக்கம் , மற்றும் கூடன்குளம்  என 8 இடங்களில் நிறுவியுள்ளனர்.  170 - 500 MW மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துடன் மற்று நிலையங்கள் நிறுவியுள்ளபோது,  1000 MW கொண்ட 6 ரியாக்டர்கள் அதாவது 6000 MW மின்சாரம் தயாரிக்கும் நோக்குடன் தமிழகம் கூடன்குளத்தில் நிறுவி தமிழக மக்களில் உயிரில் விலையை உலக அரங்குக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர் நமது மத்திய மாநிலை தலைமைகள். இந்த மின்சாரம் தமிழக தேவைக்கு தானா என்றால்; அது தான் இல்லை!  இது வெறும் லாப இச்சைகொண்டு விற்று சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிறுவியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை.யுராணியம் என்ற மூலப்பொருள் கொண்டு அணுவை வெடிக்க செய்யும் ஆற்றல் கொண்டு கடல் நீரை வெப்பமாக்கும் சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதே இதன் திட்டம். 1986 ல் ரஷியாவின் பகுதியான உக்ரைன் நாட்டில் சென்நோபில் என்ற இடத்தில் நடந்த மாபெரும் விபத்தால் பல ஆயிரம் மக்கள் உயிர் வாங்கியது.  80 ஆயிரம் மக்கள் இழப்பீட்டு பெற்றனர்.  ராஜிவ் காந்தி ஆட்சியில் ரஷீய அதிபருடன் கொண்ட ஒப்பந்தம் ஊடாக இத்திட்டம் நமது இந்தியாவில் தமிழகத்தில் துவங்கப்பட்டது. கேரளா போன்ற மாநிலங்கள் 'இயற்கைக்கு ஆபத்து' என விலக்கி தள்ளிய இத்திட்டம் நமது தன்னலம் கொண்ட அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்துடன் தமிழகத்தில் துவங்கப்பட்டது.பல சமூக ஆவலர்கள், அறிவு ஜீவிகள் எதிர்த்த இத்திட்டம்  குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்ற பல்லவியுடன் சில மக்கள் மதத்தலைவர்கள் ஆதரவுடன் துவங்கப்பட்டது. திடீர் என விபத்து ஏற்பட்டால் இப்பிரேதசங்கள் எவ்வாறு பாதிக்கப்படும், எப்படி தற்காத்து கொள்வது அல்லது இழப்பீட்டு மறுவாழ்வு என்பது பற்றி ஒன்றும் விளக்காது அரசின் இரும்புக்கரம் கொண்ட திட்டத்தை நடத்த இருப்பதும் மாபெரும் துயராகும்.கூடன்குளம் ஒரு கடலோர பிரதேசமாகும். பின் தங்கிய வாழ்கை சூழலுள்ள, 40 ஆயிரம் ஜனத்தொகை  கொண்ட மக்களை வேலை வாய்ப்பு, தொழில் என ஆசை வார்த்தை கூறி அவர்கள் நிலங்களை கையகப்படுத்தி கூடன்குளம் அணுமின் நிலையம் நிறுவியுள்ளனர். இயற்கை விஞ்ஞானிகள், மற்றும் மக்களின் எதிர்ப்பையும் வகை வைக்காது 1988 ல் அற்றைய பிரதமர் ராஜிவ் காந்தியும் சோவியத் ரஷியாவின் அதிபர் மிக்கேல் கோர்பசேவ்வும் கையெழுத்திட்டு 2001ல் பணி துவங்க வேண்டும் என்ற நோக்குடன் 13 ஆயிரம் கோடி செலவில் துவங்கபட்டதுதான் கூடன்குளம் அணுமின் நிலையம்.  போபாலில் மக்கள் எதிர்ப்பை மறிகடந்து  இந்திரா காந்தியால் துவங்கப்பட்டு 4 லட்சதிற்க்கு மேலான மக்களின் வாழ்க்கையில் விளையாடியது போல் தான் தென் தமிழக மக்களின் வாழ்க்கையை பற்றி சிறிதும் எண்ணாது ராஜிவ் காந்தியால் 2 ரியாக்டருடன் துவங்கபட்ட ஆலை, மன்மோகன் சிங் அரசால் மேலும் 4 ரியாக்டருடன்  நிறுவப்பட்டுவருகின்றது.பெரும் அளவிலான இதன் உபகரணங்கள் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யபட்டதே. போபால் ஆபத்துக்கு முன்பு அப்பிரதேச மக்கள், கல்வியாளர்கள், ஊடகவியாளர்கள் 'நாங்கள் ஆபத்து என்ற குன்றின் மேல் வசிக்கின்றோம் என கூக்குரலிட்டனர். ஆனால் விபத்தை நேர் கொண்ட மக்கள் குடும்பம் குடும்பமாக தெருவிலும் வீதிகளிலும் செத்து மடிந்தது ஒன்று தான் நடந்தேறியது. அந்நேரம் அவ்வழி சென்ற ரெயில்  ஜன்னல்களையும் வாசல்களையும் தட்டி தங்களை காப்பாற்ற கூறிய மக்களின் சத்தத்தை பொருட்படுத்தாது விரைந்து சென்றது. மக்கள் ஓடியும் நடந்தும் மூச்சு விட இயலாமல் தெருவில்  செத்து மடிந்தனர். நஷ்டயீடுக்காகவும் , நியாத்திற்க்காக போராடும் மக்களை மாக்கள் என்பதை போன்று விரட்டியடிக்கும் காவல் துறையை நாம் ஊடகம் வழி கண்டு வருகின்றோம்.         
   title
போபாலில் நடந்தது அழிவு என்றால், அணு ஆலையால் நடைபெற போவது பேரழிவு!! மனிதர்கள் தீயிலிடும் பிளாஸ்டிக் பைகள் போன்று உருக்கி கொல்லப்பட காத்திருக்கின்றனர். அரசு தரும் நஷ்டயீடு பெற மக்கள் உயிருடன் இருக்க போவதில்லை.  திரைப்படத் துறையினருக்கு வேண்டுமானால்  திரைப்படம் எடுக்க உதவப்படலாம்!
title


அணு ஆலை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் போது இயற்கையை மாசுபடுத்தும் கார்பன் டயோக்சைடு மிகவும் குறைவாக வெளியிடுகின்றது , மேலும் குறைந்த நேரம் கொண்டும் நிறைய மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது. அணு பயன்பாட்டை யுத்ததிற்கு அல்லாது சமாதானமாக பயன்படுத்தபடுகின்றது என்ற கருத்தும் எடுத்துரைக்கபடுகின்றது. ஆனால் கார்பன் டயோக்சைடுக்கு பதிலாக வெளியாகும் ரேடியோ கதிர் வீச்சுகளால் உயிர் கொல்லி நோயான கான்சரில் பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற இயலாது என்பதை வசதியாக மறைக்கின்றனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை என்ன செய்வது என்பதை இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை.  மேலும் மிக ஒரு பெரிய மூலதனம் கொண்டு உருவாக்கபடும் இவ்வகை ஆலைகளுக்கு தேவையான மைய பொருள் யுராணியம் மிகவும் அரிதான பொருளாகும். அவை 30 வருடத்திற்க்குள்ளாக கிடைக்காத சூழலுக்கு தள்ள படலாம். மேலும் விஞ்ஞானிகளின் கருத்துப்படியும் இதன் பாதுகாப்பு என்பது முழுவதுமாக வரையறுக்கப்பட்டதல்ல. மனிதனையும் இயற்கையும் ஒன்று சேர அழிக்கும் என்பதே மிகவும் கொடியதான செய்தி. சமூக விரோதிகள், மற்றும் தீவிர வாதிகளால் இலகுவாக தாக்கப்படும் இலக்காக மாறும் அபாயமும் உள்ளது.titleஇதுவரை உலகில் 99 அணுஆலை விபத்துக்கள் நடந்துள்ளது. அதில் 1986ல் ஏப்ரல் 26 அன்று உக்ரைன் நாட்டில் நடந்த விபத்தை மிகவும் கொடியதாக கருத்தில் கொள்ளபட்டுள்ளது. செர்னோவில்(Chernobyl) என்ற இடத்தில் பிரியாட்(Pripyat) என்ற நதிக்கரையில் இவ்வாலை நிறுவபட்டிருந்தது. விபத்துக்கு பின்பு ஆலைக்கு 4 கி.மீ சுற்றளவு பகுதியிலுள்ள பைன் மர காடுகள் முற்றிலுமாக அழிந்தது.  6 கி.மீ சுற்றளவு பிரதேசமுள்ள மாடுகள், குதிரைகள் தைராய்டு சுரப்பியல் ஏற்பட்ட ரேடியோ கதிர்வீச்சால் பழுதாகி மரணத்தை தழுவியது.  அங்கு வேலை பார்த்த 20 நபர்களும் இறந்தனர் என்றும் மட்டுமல்ல அவர்களுக்கு சிகிச்சைகள் அளித்த மருத்துவர்கள், அவர்களின் உதவியாளர்களும் செத்து மடிந்தனர். அப்பகுதியை சுற்றியுள்ள 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் புற்று நோய் தாக்கி இறந்தனர். ரஷிய அரசு விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு 'ரஷியாவின் வீர புதல்வர்கள்' என்ற விருதை வழங்கி தன்னை ஆசுவாசபடுத்தியதுடன், இவ் விபத்தை மிகவும் ரகசியமாக கையாண்டது. இருப்பினும் திறமை மிக்க பத்திரிக்கையாளர்களால் பல செய்திகள் பின்பு வெளிகொணரப்பட்டது.                                                                                                                                                                                                                அபாயம் நிகழ்ந்த பணியிடத்தில் இருந்த ஒரு ஊழியர் தன் 6 மாதம் கர்ப்பிணியான மனைவியிடம் "ஜன்னல் கதவுகளை பூட்டி இருந்து கொள், நம் குழந்தையை காப்பாற்ற வேண்டும்" என கூறி சென்றுள்ளார். மிகவும் ஆரோக்கியமாக காணப்பட்டவரை, பின்பு அவருடைய மனைவி பெரும் போராட்டத்திர்கு பின் மாஸ்கோவிலுள்ள மருத்துவமனையில்  சென்று சந்தித்துள்ளார். இவருக்கும் பாதுகாப்பு கவசம் அணிவித்து கணவரை தொட்டு பேசக் கூடாது என்ற அறிவுறுத்தலுடன் அருகில் செல்ல அனுமதித்துள்ளனர். நண்பர்களுடன் சீட்டு விளையாடி கொண்டு மகிழ்சியாக மருத்துவ மனையில் காணபட்ட அவருடைய கணவர் நேரம் செல்லும் தோறும் கண்கள் நீல நிறமாக மாறி உடல் வீங்கி வெடித்து 14 வது நாளில் அவரின் எலும்புக்கள் தெரியும் வண்ணம் உரு மாறி உலகை விட்டு மறைந்து விட்டார். பின்பு இவருக்கு  பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. விபத்துக்கு பின்பு படிபடியாக பணியை நிறுத்தி 1991ல் முழுவதுமாக மூடி விட்டனர்.                                                                                                                                               ஆனால் நமது அரசியல் அரக்கர்கள் துணைகொண்டு நமது மண்ணில் கூடன்குளம் அணுமின் நிலையம் என்ற பெயரில் திறப்பு விழா நடத்தி விட்டது ரஷியா அரசு!                                                                                                    

கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 4 கி.மீ சுற்றளவுக்குள் 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர் என்றால்  40 கி.மீக்கு உட்பட்ட பகுதியில் 40 லட்சம் மக்களும் வசிக்கின்றனர் என்பதே மிகவும் கொடியதான உண்மை!   ஒரே ஒரு ஆறுதல் 6000 MW உற்பத்தி என்பதால் கதிர்வீச்சின் அளவும் பன் மடங்காக இருப்பதால் உக்ரைன் நாட்டவரை போல் 14 நாட்கள் என்பது 14 விநாடியில் நமது அழிவு நம்மை வந்தடையும்நமது எலும்புக்களை ஆராய்ச்சி கூட பண்ண இயலாது ஆழமான குழிகளில்   மண்ணுக்குள் புதைத்து விடுவார்கள்!!!! எழுத்தாளர் சுஜாதாவின் கருத்துக்கள்! ஜப்பான் விபத்து http://josephinetalks.blogspot.com/2011/09/tirunelveli-kudankulam.html 


27 comments:

 1. உங்கள் கருத்து ஆதங்கம் சரியே. திட்டம் தொடங்கும் முன்னரே இந்த கருத்துக்கள், பலமுறை தெரியப் படுத்தியும் எந்த பயனும் ஏற்பட வில்லை. இப்போது மின் நிலையம் செயல் படத் தொடங்கி விட்டது.

  எனவே நானும் நீங்களும் செய்ய வேண்டியது, விபத்து ஏதும் ஏற்படும் பொழுது என்னவெல்லாம் பாதுகாப்பு முறைகள் கையாள வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய வேலைதான்.

  பெருமளவு சினிமா விமர்சனங்களே நிறைந்து இருக்கும் இன்றைய பதிவுலகில், சமூக அக்கறை கொண்ட உங்கள் பதிவு பாராட்டுதலுக்கு உரியது. நன்றிகள் பல.

  ReplyDelete
 2. மிக்க நன்றி ராம்ஜி யாஹூ அவர்களே. ஆனால் அணு விபத்தை பொறுத்தவரை பாதுகாப்பு,தற்காப்பு என்பது சாத்தியமானதா?

  ReplyDelete
 3. அணு அறிவியலில் எனக்கு போதுமான அறிவு கிடையாது. இருந்தாலும், அணு உலை விபத்து ஏற்படும் பொழுது கடை பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் என்று ஏதாவது இருக்கும் என நினைக்கிறேன்.

  நீங்கள் சொல்ல வருவதும் புரிகிறது, அணு உலை வெடித்தால் அந்த நொடியே எல்லாருக்கும் மரணம் ஏற்படும், பாதுகாப்பு முறைகள் குறித்து எல்லாம் எண்ணுவதற்கு நேரம் இருக்காது.

  நீங்களே இது குறித்து (பாதுகாப்பு முறைகள்) இன்னும் விரிவாக பகிரலாம்.

  நம்மால் அணுஉலை செயல்பாட்டை இப்போது முடக்க முடியாது, எனவே பாதுகாப்பு/தப்பித்தல் வழி குறித்து தான் ஆராய வேண்டும். நமது சிந்தனையை செலுத்த வேண்டும்.

  ReplyDelete
 4. அன்பின் ஜோசப்பின் ,

  நண்பரொஉவர் மூலம் கடந்த வருடம் கூடங்குளம் முழுதும் சுற்றி பார்த்தேன்..

  முழு பாதுகாப்பும் உள்ளது..

  எனினும் உங்கள் கருத்தும் மனதில் கொள்ளவேண்டியவையே..

  நல்ல பதிவு...

  நானும் தின்னேலி தான்.:)

  ReplyDelete
 5. உங்கள் மறுஇடுகைக்கு!மிக்க நன்றி

  ReplyDelete
 6. உங்க பதிவு நன்றாக இருந்தது. இதை கட்டாயம் வெளி உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும். கம்புயுனிசுடுகள் எங்கே போனார்கள். அவர்கள் சீனா,ரச்யா பின்னால் ஒளிந்து இருப்பார்கள்.

  ReplyDelete
 7. அவர்கள் 'அமெரிக்க' என்று கேட்டால் தான் வருவார்கள்!!

  ReplyDelete
 8. REMEMBER CHERNOBYL...NOW WARNINGS ABOUT SELLAFIELD IN UK, UNION CARBIDE IN BOBAL...MANY RICH COUNTRIES DUMB THEIR CHEMICAL,ATOMIC WASTE IN POOR CS!....THIS ARTICLE IS A WAKE UP CALL FOR INDIAN MEDIA,POLITICIANS,SOCIAL ACTIVIST...WHY ARE YOU SLEEPING FOR...! IN SL...NORAICHOLAI COAL POWER PT,SAMPUR PP ARE VERY ENVT BOMBS..IT STARTED BY CONFISCATING POOR TAMILS LANDS..THEY ARE STILL LIVING IN IDP-CAMPS! GOI,GOSL,GOC SHD ANSWER FOR THIS!

  ReplyDelete
 9. இயற்கையையின் சமிக்ஞ்ஞைகளை உதாசீனம் செய்வது மனிதவர்க்கத்துக்கே ஆபத்தாக முடியலாம். நிலத்தடி நீர் கீழே போகப் போக நாம் மேலே போகத் தொடங்குகிறோம் எனவும் கொள்ளலாம். சமூகத்தின் மீதான உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது. தொடருங்கள்.

  ReplyDelete
 10. அணு மின் உலைகள் பற்றிய நல்ல விபரங்களைத் தந்ததற்கு நன்றி

  ReplyDelete
 11. unarvupoorvamaana karuthukkal!!...precautions can be done through evacuating people from there already from now.i think that will be the only way they can survive if any thing happens..

  ReplyDelete
 12. இது ஒரு விதமான காலத்தின் கட்டாயம் என்று தோன்றுகிறது... இந்தப் பூமிப்பந்தை வாழத்தகுதியற்ற கிரகமாக மனிதன் ஆக்கிக் கொண்டு இருக்கிறான்.. அடுத்த தலைமுறையை சிந்திக்காத அரசியல்வியாதிகள் நிறைந்த நம் நாட்டில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்..? இயற்கையின் கருணையினால் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதுதானே மெய்..

  ReplyDelete
 13. ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்து சூழலில் என் மனம் தமிழகம் கல்பாக்கம், கூடன்குளம் அனு உலையை நினைத்து கலங்குகின்றது.

  ReplyDelete
 14. அறிவியல் என்பது இயற்கையின் ரகசியஙுகளைப் புரிந்துகொள்வது. தொழில் நுட்பம் என்பது அவ்வாறு புரிந்துகொண்டதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது. ஆனால், அறிவியலும் தொழில்நுட்பமும் இயற்கை ரகசியங்களைத் தெரிந்துகொண்டு இயற்கையை ஆளுமை செலுத்தவே பயன்படுத்தப்படுகின்றன. சுரண்டல்வாதிகளின் இந்தக் குற்றத்திற்கு இரையாகிறவர்களோ எளிய மக்கள்.

  ReplyDelete
 15. ஏதாவது பத்திரிகையில் பணியாற்ற முயலுங்களேன் . நல்ல கட்டுரைகள் உங்களுடையவை . தொகுக்கும் விதமும் அழகு

  ReplyDelete
 16. உங்களின் கருத்துகளும் , எண்ணங்களும் வரவேர்க்கவேண்டிய ஒன்று, ஆனால் எந்த அரசியல் நாயும் இதனை மட்டும் கண்டு கொள்ளவே மாட்டார்கள் எப்பொழுதும் !!!! அவர்களுக்கு வேண்டியது பதவி அதனால் வரும் பணம் அவளவுதான்

  ReplyDelete
 17. உங்க பதிவு நன்றாக இருந்தது.

  ReplyDelete
 18. உங்க பதிவு நன்றாக இருந்தது.

  ReplyDelete
 19. அருமையான பதிவு.
  இந்த மாதிரி நல்ல பதிவுகள் நிறைய நண்பர்களால் படிக்கப்பட வேண்டும்.
  தமிழ்மணம் போன்ற நிறைய திரட்டிகளில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பதிவு எழுதினவுடனும் பதிய வேண்டும் என நினைக்கிறேன். விபரம் வேண்டும் என்றால் சிபி போன்ற நண்பர்களிடம் மின்னஞ்சல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ தெரிந்து கொள்ளுங்கள். எங்களது பதிவுக்கு அவரை நாளை தொடர்பு கொள்கிறோம்.
  உங்களது நல்ல முயற்சிக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. கூடங்குளம் மட்டுமல்ல,கல்பாக்கத்திலும் இதே கதிதான்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வரும் பாதிப்பையும் அரசு கண்டுகொள்வதில்லை.நாமல்லாம் இந்தியனாய் பிறந்தது தான் பெரும் பாவம் போல.உங்களைப்போன்றவர்கள் பதியும் இதைப்போன்ற பதிவுகளை படித்தாவது உண்மை நிலை உணர்ந்து பாதுகாப்பு நிலையை நமக்கு நாமே ஏற்ப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.சிறப்பான பதிவு வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. திடீர் என ஒரு விபத்து ஏற்பட்டால் எந்த அளவு இப்பிரதேசம் பாதிக்கபடும் அதிலுள்ள மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ளதான் அவர்களுக்கு எதும் முன் கருதல் வழிமுறைகள் சொல்லி கொடுக்கபட்டுள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும்.//

  அணு உலைக்கு ஆதரவாக பேசுகிறவர்களுக்கு சாட்டையடியா கேட்டுருக்கீங்க நன்றி ஜோசபின்...!!!

  ReplyDelete
 22. எங்களுக்காக தங்கள் வலைப்பதிவில் அணு உலையை பற்றி எழுதியதற்க்கு மிக்க நன்றி நண்பரே.

  4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

  ReplyDelete
 23. அன்பு நண்பர் அவர்களே ... தங்கள் பதிவை படித்தேன். சமூக அக்கறை கொண்டது. ஆனால் எனக்கு தெரிந்த சில தகவல்களை சொல்லுகிறேன்.

  "இந்த மின்சாரம் தமிழக மக்களின் தேவை என்பதை விட மற்று நாடுகளுக்கு விற்று பணம் ஈட்டும் நோக்குடன் நிறுவியுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கதே!"

  தங்களுடைய இந்த கருத்துகள் உண்மைக்கு புறம்பானவைகள். நமது நாட்டின் மின் தேவை 2020 ம் ஆண்டில் 100000 MWe என்று தீர்மானிக்கப்பட்டுளது. நமக்கே நம் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் நாம் மற்ற நாடுகளுக்கு எப்படி மின்சாரம் கொடுப்போம்?

  போபால் ஆலை எந்த விதத்திலும் அணு உலைகளின் பாதுகாப்போடு ஒப்பிட முடியாதது. அணு உலைகள் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டவை. அவை இந்திய மற்றும் சர்வதேச அணு சக்தி அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டவை

  கதிர் வீச்சை குறித்து எழுதினீர்கள். மிக்க நன்றி. கதிர் வீச்சு என்றால் என்ன என்பதயும் எழுதுங்கள். உலகம் முழுவதும் உள்ள ஜனங்கள் 80 சதவீத கதீர்வீசை இயற்கையில் இருந்து பெறுகிறார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியம் தானே. சூரியனில் இருந்து வெளிவரும் காஸ்மிக் கதிர்கள் , கட்டிடங்கள் , மணல் , பாறைகள் இவற்றில் இருந்து கதிர் வீச்சு வெளிப்படுகிறது என்பது உண்மை. நாம் மருத்துவத்திற்காக 14 சதவீத கதிர்வீச்சை பயன்படுத்துகிறோம். XRAY மற்றும் ஸ்கேன் , HEMO THERAPHY மற்றும் pala

  இதை குறித்து விளக்கமாக நான் சொல்ல பக்கங்கள் போதாது. சர்வதேச அணு சக்தி ஆணையம் சொல்லுகிறது அணு மின் நிலையங்களினால் 1 சதவீத கதிர்வீச்சு தான் வெளிப்படும் என்று.

  நீங்கள் ராம்ஜியிடம் கேட்டது போல அணு சக்தி பாதுகாப்பிற்கு உட்பட்டது தான். நாம் கொஞ்சம் அதன் அருமையை அறிந்து கொண்டால் பலன் கொடுக்கும். மக்களை கொன்று மின்சாரம் எடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ளுவீர்கள் என்று நினைக்கிறேன்.

  நீங்கள் குறிப்பிட்டது போல 1998 ல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. 1988 ல் இந்த திட்டம் கையொப்பம் வைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த எல்லா அரசுகளாலும் ( காங்கிரஸ் , பிஜேபி , குஜ்ரால் ) இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டது . காரணம் இதனால் தேசத்திற்கு உண்டாகபோகிற நன்மைகள்.


  சிறந்த முறையில் எழுதினீர்கள் . பாராட்டுகள்

  ReplyDelete
 24. முகம் பெயர் தெரியாத நண்பரே உங்களுக்கு என் வணக்கங்கள். உங்கள் பின்னூட்டம் பல தகவல்கள் உள்ளடங்கியது. மிக்க நன்றி. இருப்பினும் உங்கள் பெயருடன் நீங்கள் உங்கள் கருத்தை வெளியிட்டிருக்கலாமே என்று ஆவல் கொள்கின்றேன். நீங்கள் சொல்வது ஒருவகையில் நியாயமாக இருக்கலாம். ஜப்பானிலும் பாதுகாப்புக்கு குறை இல்லை என்று தானே சர்வதேச அணு சக்தி ஆணையம் சொல்லியிருக்கும்? நீங்கள் சொல்வது விபத்து நடக்காவிடில் ஆனால் பாதுகாப்பு என்பதை 100% உறுதி செய்யாத நிலையில் ஒருவேளை ஒரு விபத்து நடந்தால் என்ன ஆகும் மக்கள்/ இயற்க்கை நிலை? ரஷியாவில் உள்ள செர்நோவில் இன்றும் அப்பகுதியில் விமானங்கள் செல்லும் போது தாக்கம் தெரிகின்றது என்றே கூறப்படுகின்றது. மனிதன் இயற்க்கையின் சக்தி சூரியவெப்பம், காற்றில் இருந்து மின்சாரம் த்யாரிக்கலாம், வீட்டுக்கு வீடு சூரிய ஒளி மின்சாரம் கொடுக்கு உபகரணங்களை கேரளாவில் என்றது போல் கொடுக்கலாம். இது எல்லாம் தவிர்த்து அணு உலை என்பது மட்டும் தான் தீர்வா? நீங்கள் சொல்வது எல்லாம் ஏற்று கூடியதாக இருந்தாலும் தோறியம் தங்கு தடை இல்லாது கிடைக்கபோகின்றதா வரும் பல வருடங்களுக்கு? மின்சாரம் தேவை தயாரிப்போம் என்று கதைக்கும் அரசு ஏன் அங்கு சமீப பிரதேசங்களில் வாழும் மக்களின் கூக்குரலுக்கு செவி கொடுப்பது இல்லை? இந்த உலையை மக்கள் வசிக்கும் பகுதியில் தான் நிறுவி இருக்க வேண்டுமா? மக்கள் வசிக்காத தீபகண்டங்கள் ஏன் தேர்வு செய்திருக்க கூடாது? இதில் ஒரு தேவை சார்ந்த நோக்கம் போல் ஏன் மனித நலம் சார்ந்த அக்கறை கொள்வது இல்லை?அணூலைகளில் வரும் கழிவுகளை என்ன செய்வது என்று விஞ்ஞானிகளுக்கு தான் தெரியுமா? கேரளாவில் என்றோசல்fபான் என்ற பூச்சி கொல்லி மருந்து பாதுகாப்பு ஆனது என்றே அரசு சொல்லி கொண்டு உள்ளது ஆனால் அங்குள்ள மக்கள் வாழும் சூழல் என்ன என்று அரசு கண்டு கொள்வது உண்டா? ஜெர்மனி போற்ற சிறந்த தொழில் நுட்ப நாடுகளே இதன் பயன்பட்ட நிறுத்த துணியும் போது இந்தியா போன்ற ஒழுக்கம் அற்ற ஊழல் நாடுகள் மறுப்பது ஏன்? தூத்துகுடி ஸ்டெரெலயிட் நிறுவனம் தூத்துகுடி மக்களுக்கு நன்மை விளைவிக்க போவதாக தான் சொன்னார் என்ன கிடைத்தது பணம் உள்ளவன் கொழுத்தான் அவனுக்கு மினரல் தண்ணி ஒரு பிரட்ச்சனையும் இல்லை ஆனால் ஏழைக்கு குடிக்க குளிக்க இன்று குட்டைகள் மட்டுமே உள்ளது!!!!!!!!!!!!!!உங்கள் கருத்துரையாடலை விரும்புகின்றேன். உங்கள் காத்திரமான கருத்துக்களை தங்கு தடை இல்லாது பகிருங்கள். வலைப்பதிவுகளின் நோக்கமே அது தானே. நன்றி வணக்கம் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. அருமையான பதில் விளக்கம்

   Delete
 25. சமூக அக்கறை கொண்ட சகோதரிக்கு முதலில் என் வாழ்த்துக்கள் .நீங்கள் இந்த பதிவை வெளியிட்ட காலம் dec 2010. என்று நினைக்கின்றேன்.கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் நடந்த கோர அணு உலை விபத்தை இன்று உலகம் பார்க்கிறது..தொடர்ந்து எழுதுங்கள் ....மேலும் உங்களது கருத்தை முகநூலில் "stop koodankulam atomic power plant " இணைப்பில் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன் .

  ReplyDelete
 26. கூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு அறிவியல் தொகுப்பு

  http://naanoruindian.blogspot.in/2012/02/blog-post_02.html

  ReplyDelete