2 Sept 2025

ராபர்ட் கால்ட்வெல் - மதம் பரப்ப வந்த அன்னிய நாட்டு ஏஜன்று.

#போர்துகீஸ் நாட்டினர் கடலோடிகளுக்கு உதவுவது மாதிரி நமது நிலப்பரப்பை கையடக்கினர். அதை தக்க வைக்க பின்னால் பாதிரிகளை அனுப்பி மதம் மாற்றமும் செய்தனர்.

#ஆங்கிலேயன் East Indian நிறுவனம் ஊடாக நமது நாட்டில் வியாபாரம் என்ற பெயரில் நுழைந்து பின்பு அரசியல் அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டதுடன் தங்கள் திட்டம் தெரியாமல் இருக்க முற்போக்கு மதம் என்று நிரூபிக்க கால்டுவெல் போன்றோரை அனுப்பினர்.
இதில் எவனும் #போரிட்டு வரவில்லை.
மதம் பரப்ப வந்த கால்டு வெல் எதற்காக இனங்களின் குணம் தன்மைகளை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்?

கால்டுவெல் வாழ்ந்த காலத்திலே அருமைநாயகம் சத்தம்பிள்ளை நாடார் பதில் கொடுத்து விட்டார். சொல்லப்போனால் கால்டுவெல்லால் சாகும் வரை நெல்லையில் கால் வைக்க இயலவில்லை. கால்டுவெல்லின் பணம் கையாடல் பற்றி கால்டுவெல் காலமே புத்தகங்கள் வந்து விட்டது. கால்டுவெல் எத்தகையா பொறாமைக்காரர் என்பது நாசரேத் தந்தை என அறியப்படும் #மார்காசிஸ் ஐயர் வாழ்க்கையை வாசித்தால் விளங்கும்.
நெல்லையில் மதமாற்றம் செய்ய என்ன வித்தைகள் எல்லாம் கையாண்டனர் என்பதை #டோனாவூர் கார்மைக்கேல் அம்மையார் புத்தகங்களில் இருந்து அறியலாம்.


நாடார் பெண்கள் சுவாரசியமான கதை கேட்க விரும்புகிறவர்கள். வெள்ளைகாரிகள் வந்ததும் கதை கேட்பது அவர்கள் வழக்கம். அதே நேரம் மற்றைய இனப் பெண்கள் முக்கியமாக பிராமண பெண்கள் தங்கள் குடியிருப்புக்குள் விடவே இல்லை.
எளிய நாடார் ஆண்களுக்கு வேலை தருகிறோம் பெண்களுக்கு கல்வி தருகிறோம் எனக் கூறி மதம் மாற்றினர். அதன் தாக்கம் ஆசிரியை பணியில் இருக்கும் பெண்கள் மற்றும் அரசு பணிகளில் வர முடிந்த ஆண்கள் எண்ணம் வைத்து கணக்கில் கொள்ளலாம்.
முக்கியமாக கன்யாகுமாரி பகுதியில் வேணாட்டு மன்னர்கள் ஆட்சியின் கீழ் சமூுக ஒடுக்குதலில் இருந்த பனையேறிகள் மற்றும் மதுரை நாய்க்கர்கள் கொடுமையால் தேரிக்காட்டில் பஞ்சம் பிழைக்கும் சூழலில் தள்ளப் பட்ட திருநெல்வேலி ,தூுத்துக்குடி , திருச்செந்தூர் பகுதி சாணார் என்று விளிக்கப்பட்ட நாடார்கள் மதம் மாற்றத்திற்கு உந்தபட்டனர்.
#சிவகாசி விருது நகர் , நாடார்களில் இது போன்ற மத மாற்றம் நடை பெற வில்லை.
அதாவது 14 ஆம் நூற்றாண்டு முன்புள்ள நாடார் சமூுக நிலையை ஆராய்ச்சி செய்யாது கால்டுவெல் சொன்ன நாடார் வரலாறு கதையை இன்றைய அரசியல் தேவைக்காக நிறுவ பார்க்கின்றனர்.
மதம் மாற்ற அன்னிய சக்திகள் #நமது பண்பாட்டை, #பின்பற்றியிருந்த மதத்தை, இனமக்களின் குணநலங்களை பற்றிய மிகவும் கீழ்மையாக புகுத்தி ஒரு தாழ்வு நிலையை புகுத்தி மதம் மாற்றினார்.
மதம் மாற்றத்திற்கு இன அடையாளம் மிகவும் தடையாக இருக்கிறது என்றதும் கிறிஸ்தவர்களுக்கு ஜாதி இல்லை என்றனர்.
மத மாற்றத்தால் நாடார் இனத்தின் வியாபாரத் தொழில் நலிந்தது. ஒற்றுமை இல்லாமல் போனது, குடும்ப உறவுகள் குடும்ப கட்டமைப்பு இல்லாமல் போனது.
பத்திரகாளி அம்மனையும் சிவனையும் தெய்வமாக வழி பட்டவர்களுக்குள் கிருபை, சாத்தான் போன்ற பெயரில் பிரிவினை உருவானது..
#நாடார்கள் பொதுவாக ஒரு கூட்டுக் குடும்பமாக தொழில்களை நடத்துக்கிறவர்கள். அவர்கள் வேதக்காரர்கள், பெண் கொடுக்க மாட்டோம் பெண் எடுக்க மாட்டோம் என்று சொல்லி பிரியும் அளவிற்கு பிரிவினையை உருவாக்கினர்.
நாடார்கள் பொதுவாக #ஆண்கள் உழைப்பில் பெண்கள் வீட்டிலிருந்து குடும்பத்தையும் கவனித்து வியாபாரத்திற்கு முதுகு எலும்பாக இருக்கும் தன்மை கொண்டவர்கள்.
பிற்பாடு பெண்கள் வேலைக்கு போய் நாடார் ஆண்கள் இருசக்கிற வாகனத்தில் பெயருக்கு ரியல் எஸ்டேட் செய்கிறோம் என்ற நிலை வரை வந்து விட்டது. இன்று புது தலைமுறை ஆண்களுக்கு உழைப்பு என்பது எட்டாகனியாகி உள்ளது.
@தமிழகத்தில் உள்ள #ஊழியக்காரர்கள் என்ன இனம் என விசாரித்து பாருங்கள். உழைப்பு சவுடால் பேச்சில் முடிந்த அவலம் காணலாம்.
#வைகுண்ட சாமிகள் மட்டும் கன்யாகுமரியில் இல்லாமல் போயிந்தால் மொத்தமும் இன்று கிறிஸ்தவர்கள் ஆகி இருப்பார்கள்.
இன்று கன்னியாகுமாரி மலைகள் கேள்வியே அற்று காணாமல் போக மதமாற்ற மனநிலையும் ஒரு காரணம் தான். #கிறிஸ்தவர்களுக்கு உலக வாழ்க்கை என்பது கர்த்தரை துதித்து ஆடம்பரமான வாழ்க்கைக்கு மட்டும் தான். அவர்கள் நிரந்தர வாழ்க்கை பரலோகம் தான்.
மதம் என்பதை வெறும் கடவுளோடு மட்டும் இணைத்து பார்க்க இயலாது. நமது பண்பாடு வாழ்வியல் எல்லாம் மாற்றி விடும்.
இன்றைய கிறிஸ்தவ கல்யாண வீடுகள் கண்டால் தெரியும். அவர்களுக்கு மாமன் மச்சான், பங்காளி குடும்பம் எவரும் தேவையில்லை. பணம் இருந்தால் #பாதிரிகள் வந்து கல்யாணத்தை முடித்துப் கொடுப்பார்கள்.
#ஒரு இளைஞர் நாடார் இனம் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்து கட்டுரை வெளியிட்டுள்ளார் . நாடார்கள் வாழ்வியல் பண்பாடு எல்லாவற்றுக்கும் #கால்டுவெல் குறிப்பிட்ட மேற்கோளை குறிப்பிடுகிறார்.

கால்டுவெல் கோட்பாடு மத மாற்றம் சார்ந்தது அடிமை மன நிலை உருவாக்குவது.
திருநெல்வேலியில் மற்றைய இனங்கள் முக்கியமாக #சைவப் பிள்ளைகள், தேவர் இனம், மற்றைய மண்ணின் இனம் பற்றி எதனால் ஆராய்ச்சி செய்து கதை விடவில்லை.
வெள்ளைகாரர்களுக்கு தேவையான நெளிவு சுழிவு உழைக்கும் #அடிமைகள் நாடார் இனம் தான் என கண்டு கொண்டது தான். தேயிலை தோட்ட அதிகாரிகள் ஆக பெருவாரி நாடார்களை கன்யகுமரி பக்கம் இருந்து பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் ஆங்கிலேயர்களின் டாம் , சாலைகள் போன்ற கட்டுமானப் பணிக்கும் நாடார்களை இடம் பெயர்த்தி உள்ளனர்.
ஆனால் கால்டுவெல் சொல்லிய நாடார் வரையறையை அன்றே உடைத்து எழுதியதில் முக்கியமானவர் #அருமைனாயகம் சட்டாம் பிள்ளை என்பதை இன்றைய தலைமுறை மறக்க கூடாது.
ராபர்ட் கால்ட்வெல்லின் நாடார்கள் பற்றிய விளக்கம்:
அவர்கள் #உழைப்பாளிகள், எளிய மனம் கொண்டவர்கள், ஆனால் #நாகரிகத்தில் குறைந்தவர்கள், #திறமையற்றவர்கள், உடம்பிலும் பழக்கவழக்கங்களிலும் கொஞ்சம் கடினமானவர்கள். இருந்தாலும் அவர்கள் #புத்திசாலித்தன மற்றவர்களாகவும், அன்பை உணராதவர்களாகவும் இல்லை. #பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள். பொதுவாக அவர்கள் ஏழைகள் தான்; ஆனால் அந்த ஏழ்மை அளவுக்கு அதிகமில்லை. அவர்களில் சிலர் நல்ல பொருளாதார நிலையில் உள்ளவர்களும் ஆவர். அந்தக் குடியின் ஒரு பிரிவினரிலிருந்து ஒருவர் சமீந்தாராகவும் உள்ளார்.
எனது பார்வையில், சாணார்கள் அவர்கள் பங்கு கிடைத்த #மணற்பாலைவன நிலங்களை வைத்து விரக்தியடையாமல், மாறாக அவற்றை பயனுள்ள பனைமரங்களாலும் அழகும் பயனும் கொண்ட வாழைமரங்களாலும் நிரப்பியதற்காகப் பெரிதும் பாராட்டத்தக்கவர்கள்.”

கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை. @#########🙊🥹

#பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி, திருவிதாங்கூர் இராச்சியத்திலும் #மதராஸ் பிரெசிடென்சியிலும் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவசபை வளர வழி செய்தது.

இவை, சர்ச் மிஷனரி CMS சொசைட்டி மற்றும் லண்டன் மிஷனரி சொசைட்டி (LMS) ஆகிய மிஷனரிகளின் பணிகளின் மூலம் வளர்க்கப்பட்டன.
கிறிஸ்தவத்தில்
1.ரோமன் கத்தோலிக்க தேவாலயம் (லத்தீன் சடங்கு),
2. தென்னிந்திய சபை (Church of South India),
3.லண்டன் மிஷன் காங்கிரகேஷனல் தேவாலயங்கள் (L.M.S.),
4.இந்திய அசெம்பிளிஸ் ஆப் காட்,
5.இந்திய பெந்தெக்கொஸ்து தேவாலயம்,
6.தி பெந்தெக் கொஸ்தல் மிஷன்,
7.தி சால்வேஷன் ஆர்மி தேவாலயம்,
8.சீரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம்,
9.யாக்கோபைட்
10.சிரியன் கிறிஸ்தவ சபை,
11.சீரோ-மலங்கர கத்தோலிக்க தேவாலயம்,
12.மலங்கர என பல பிரிவுகள் உள்ளன.
1818 ஆம் ஆண்டில், சுமார் 3,000 நாடார் சமூகத்தினர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள், மொத்த மக்கள் தொகையில் சுமார் 6% ஆக சிறுபான்மை சமூகமாக இருக்கின்றனர் என்கிறது தரவு.
ஆனால் கத்தோலிக்கர் மட்டுமே 6 சதவீதம் உள்ளனர் . மற்றைய பிரிவுகள் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் அல்லேலூயா கிறிஸ்தவர்களையும் கணக்கில் சேர்த்தால் 12 சதவீதத்திற்கு மேல் வரும் என்கின்றனர். கிரிப்டோ கிறிஸ்வர்களையும் சேர்த்தால் இன்னும் சதவீதம் உயர வாய்ப்பு உண்டு.
கேரளாவுக்குப் அடுத்தபடியாக இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
2011-ஆம் ஆண்டு கணக்குப்படி, தமிழ்நாட்டில் 44 லட்சம் கிறிஸ்தவர்கள், (கேரளாவில் 61 லட்சம் கிறிஸ்தவர்கள்) உள்ளனர் என்கிறது தரவு.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் வசித்து வருகின்றனர் .
2011 சென்சஸ் படி கிறிசஸ்தவ மக்கள் தொகையின்
கன்னியாகுமரி 47.7%,,
தூத்துக்குடி 19%, மற்றும்
திருநெல்வேலி 15% கிறிஸ்தவர்கள் உள்ளனர் .
உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய பிரிவு தென்னிந்திய சபை (CSI) ஆகும்.
இதில் 10 சதவீதம் நாடார் இன மக்கள் கிறிஸ்தவத்தை தழுவியவர்கள் ஆவர்.
மூன்றாவது இடத்தில் பெந்தெக்கொஸ்து பிரிவினர்கள் உள்ளனர்.இவர்கள் தரவுகள் கிடைப்பது அத்தனை எளிது அல்ல. அமீபா மாதிரி ஒவ்வொரு தலைமையின் கீழ் பெருகிக் கொண்டே போகும்.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில், நாடார் மற்றும் பறையர் சமூகங்களில் பெரிய அளவில் மதமாற்றங்கள் நடைபெற்றன.
எதனால் நாடார்கள் இனம் மதம் மாறினது என்பதர்கான பதில் வேலை, கல்வி என்பன ஆகும்.ஆனால் அது மட்டுமல்ல. நாடார் இனமும் எளிய நாடார்களான பனை தொழில்களை நடத்திய விதமும் உள்ளடங்கும்.
அத்துடன் மத வியாபாரிகளும் திட்டமிட்டு
நாடார்களுடன் பனையை பொருத்தி தாழ்வு மன நிலையை உருவாக்கிய கால்டுவெல் போன்ற மிஷனரிகள் நாடார்கள் மதம் மாறுவதிலும் காரணமாக இருந்ததுடன் நாடார் என்ற அடையாளம் பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். நாடார் மக்களை அடிமை நிலையில் வைத்திருந்தார் என அருமைனாயகம் சட்டாம்பிள்ளை நாடார் கால்டுவெல் மேல் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்ததும் இல்லாமல் பிரிந்து போய் புது கிறிஸ்தவ சபையை உருவாக்கினார்.
#நாடார்கள் ஆண்ட பரம்பரை என்பதில் வரலாறு பூர்வமாக சான்றுகள் மிகவும் குறைவு. அதை சொல்லி வெற்று பேச்சில் இருமாப்பு கொள்வதில் அர்த்தமும் இல்லை. ஆனால் சிறுநாடுகளின் தலைவராக இருந்து இருக்கலாம்.
தொழில் அதிபர்களாக வியாபாரத்தில் தனித்துவம் மிக்கவர்களாக உழைப்பை மட்டுமே நம்பி பிழைத்த குடி. வில் வித்தை கற்றுக் கொடுத்த ஆசான்கள் , கடல் கடந்து பயணம் செய்து சொத்துகள் ஈட்டினவர்கள் என்பதற்கு நிறையவே சான்றுகள் உள்ளன. நாடார் இனத்திலுள்ள எளிய மக்கள் பனத்தொழிலில் இருந்தனர். அதே போல சாராய தொழிலில் அப்காரிகளாக இருந்து ஆங்கிலேயர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த #பொறையார் நாடாரும் இருந்துள்ளனர்.
இத்தனை இருந்தும் நாடார்களை பற்றி கால்டுவெல் எழுதி வைத்துள்ளவை நாடார் குடியை ஏதோ நலிந்த குடியாகவே அடையாளப்படுத்தி வைத்துள்ளது..
தமிழகம் போன்றே
கேரளாவில் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பல வகை ஜாதி பிரிவுகள் உண்டு. ரோமன் லாட்டின்,சிரியன்,
கினாயா,
சீரோ மலபார், யாகோபா கிறிஸ்தவர்கள், இதில் ரோமன் லாட்டின் கிறிஸ்தவர்கள் வரிசையில் அடிமட்ட கத்தோலிக்கர்கள் ஆவர்.
இவர்களுக்குள் கலப்பு திருமணங்களுக்கு வரவேற்பு இல்லை. முக்கியமான கினாயாகாரர்கள் மற்றைய பிரிவுடன் உள்ள திருமண பந்தங்களை கடுமையான சட்டங்கள் ஊடாக தடுத்து வைத்துள்ளனர்.
அரசில் சிறப்பு சலுகை கிடைக்கும் என்ற ஆசையை காட்டி, நாடார் கிறிஸ்தவர்களை லாட்டின் கிறிஸ்தவர்கள் என குறிப்பிட பாதிரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். சில கிறிஸ்தவ நாடார்கள் பணிந்தும் விட்டனர்.
தமிழ்நாட்டில்
சீர் திருத்த கிறிஸ்தவத்தில் நாடார்கள் எண்ணிக்கை முதல் இடத்தில் என்றாலும் கத்தோலிக்கத்தில் எண்ணத்தில் பறவர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
பொதுவாக எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் நாடார் இனம் பின் தள்ளபட்டு விட்டது. அதிகாரத்தில் இருந்து பிய்த்து எறியப்பட்டுள்ளனர்.
இதில் பெருவாரியாக உள்ள தலித் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவத்தை தழுவி இத்தனை வருடமாகியும் சமூுக நீதி மற்றும் மனித நேயம் பேசும் பாதிரி கும்பலால் நல்லது செய்ய இயலவில்லை. அரசிடம் தலித் என்ற பெயரில் கிடைக்க வேண்டிய சிறப்பு உரிமை மைனாடிட்டி என்ற பெயரில் பறி போனது ஒரு புறம் இருக்க, அரசு கிறிஸ்தவ மக்கள் உரிமைக்கு என கொடுத்த மைனாரிட்டி உரிமைகளையும் தங்கள் சபை நிறுவன வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டு தனிநபர் கிறிஸ்தவ வாழ்க்கையை அடிமைகள் போன்று தான் நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவ பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்விக்கு இடம் கொடுக்க சொல்லி அரசு , சபை நிறுவனத் தலைமைகளை பரிந்துரைத்து வருகிறது , சட்டம் ஊடாக கட்டாயப்படுத்துகிறது. 50 சதவீதம் மைனாரிட்டிகளுக்கு கல்வி கொடுக்கும் நிலையில் இல்லை என்கின்றனர் மத தலைமைகள்.
கிறிஸ்தவ மக்கள் உரிமையும் மைனாரிட்டி உரிமைக்குள் இருக்க இலவச கல்வியோ, சலுகை கல்வியோ கிடைக்க இயலாத சூழலில் தான் கிறிஸ்தவர்கள் உள்ளனர். கிருஸ்த பள்ளிகளில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி சலுகைகளோ கட்டண சலுகைகளோ கிடைப்பது இல்லை.
இதில் தலித் கிறிஸ்தவர்கள் அரசிடம் இருந்து பெறக் கூடிய சலுகைகளும் கிடைக்க இல்லாது போக இவர்களின் கிறிஸ்தவ மதமாற்றம் ஒரு காரணமாக உள்ளது. தந்திர சாலிகள் ஆன பாதிரிகள் தங்கள் கடமையை உதறிக் கொண்டு ,மதம் மாறின தலித்துகள் மற்றும் பழக்குடியினரை உதவ தற்போது அரசை கேட்டு வருகின்றனர். அதுவும் மக்களுக்கான கேள்வி அல்ல, மக்கள் கிறிஸ்தவ மதத்தை விட்டு போனால் மைனாடிட்டி அதிகாரங்களை வைத்துக் கொண்டு மிரட்டி பிழைக்க இயலாது.
கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்தவ பாதிரிகள் சொல்கிறவர்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கும் வரை கிறிஸ்தவ தலைமைக்கு கொண்டாட்டம் தான்.
16 ஆம் நூற்றாண்டு முதல் மதம் மாற்றம் என்ற ஆயுதத்தை வைத்து ஆதிக்கம் செலுத்தி
300 வருடங்களாக ஆங்கிலேய அரசின் உதவியுடனும் மதம் மாற்ற வைத்தும் தற்போதும் நிழல் அரசாங்கம் நடத்தி வரும் கிறிஸ்தவம் யாருக்கானது என்ற கேள்வி உண்டு.
பலர் பதில் கிடைக்காது அல்லேலூுயா கும்பலில் சேர்ந்து விட்டனர். அங்கு இங்கைய வாழ்க்கையை பற்றி கவலை கொள்ள இடம் இல்லை. பரலோகத்தில் கர்த்தருடன் ஆடிப் பாடி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் பேயை விரட்டிக் கொண்டு வேறு உலகத்தில் வாழ்கின்றனர்.
ஆனால் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை கூடுவதன் காரணம் ரொட்டி ஜாதீய அடுக்குகள் தீண்டாமை என்பன மட்டுமல்ல.
இந்திய அரசு மக்களின் வாழ்வியல் மனித உரிமை நலன் சார்ந்து இயங்க துவங்கினால் மதமாற்றம் இனியாவது தொடராது, உயராது .
ஆனால் அரசும் கிறிஸ்தவ மக்கள் பற்றி சரியான தகவல்கள் திரட்டவோ அம்மக்கள் வாழ்வியல் பற்றி படிக்கவோ அக்கறை இல்லாமலே இருப்பதால் மதமாற்றம் அதை தொடந்த நிழல் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆக்கம் கூடுகிறது.
கிறிஸ்தவத்தின் நிழல் அரசை பற்றி அடுத்து பார்ப்போம்.

28 Aug 2025

போர்த்துகீசியர்கள் இந்தியாவில்

போர்த்துகீசியர்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கி, தெற்கே முனை (Cape of Good Hope) வழியாக இந்தியா வந்தடைந்தனர் . 


இந்தச் செயற்பாடு 1415 ஆம் ஆண்டில் மொராக்கோவின் செட்டா நகரை கைப்பற்றியதன் மூலம் தொடங்கியது. 1420-களிலும் 1430-களிலும் போர்த்துகீசியர்கள் மடெய்ரா மற்றும் அசோர் தீவுகளில் குடியேற்றம் செய்ய ஆரம்பித்தனர். 1434-இல் ஆபத்தான கேப் போஜடார் முனையைச் சுற்றிப் பயணம்  சென்றனர்.  1480-களில் முன்னேற்றம் அடைந்து, 1488-இல் பார்தலோமியு டயாஸ் முனையைச் சுற்றிச் சென்று கொண்டு இருந்தனர்.  அதன் பின் சிறிது காலம் அமைதியாக இருந்தனர். 


பின்னர் வாஸ்கோ ட காமா தனது மூன்று சிறிய கப்பல்களுடன் 1497 ஜூலையில் லிஸ்பனில் இருந்து புறப்பட்டார். அப்படியாக ஒருவருடம் பயணம் செய்து    1498 மே 20-ஆம் தேதி காலிக்கட்டுக்கு அருகில் வந்து சேர்ந்தது இந்தியாவின் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது.  இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையோரத்தில் அக்டோபர் 1498 வரை தங்கியிருந்த அவர்கள், 1499 ஆகஸ்டில் போர்த்துகலுக்குத் திரும்பினர். அவருடைய இந்த சாதனை இயல்பாகவே போர்ட்டுகல் அரசர் டி. மனுவேல் (1495–1521)லால்  மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது.


அரசர் உடனடியாக வாணிபத்தையும் எதிர்கால கடற்பயணங்களையும் ஊக்குவிப்பதற்காக லிஸ்பனில் பெருமளவிலான பொது நிர்வாகப் பணிகளை ஆரம்பித்தார். இரண்டாவது கடற்பயணத்திற்கான பயணம் கப்ரால் தலைமையில்  வேகப்படுத்தப்பட்டன; அவர் 1500 மார்ச் மாதத்தில் 13 பெரிய கப்பல்கள் மற்றும்  1200 பேருடன் புறப்பட்டார்.


லிஸ்பனின் புறநகரப் பகுதியில், இந்தியாவிற்குச் செல்லும் கப்பல்கள் புறப்பட்ட டாகஸ் நதிக்கரையில் 1499 இறுதியில் மிகப்பெரிய ஜெரோனிமோஸ் மடாலய கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்த மடாலயம் பூரணமாக முடிவடைய 50 ஆண்டுகள் எடுத்தது என்பது பயணத்திn நம்பிக்கையும் ஆனந்தமும் தெளிவாகக் தெருவிக்கின்றன  . அந்த மடாலயம் எழுப்பப்பட்ட பகுதி பெலெம் (பெத்லகேம்) என அழைக்கப்பட வேண்டிம் என அறிவிக்கப்பட்டது. அங்கேயே போர்த்துகீசிய பேரரசு பிறந்ததாகக் கருதப்பட்டது.


வரலாற்றாசிரியர்கள் நீண்ட காலமாகவே இந்தக் கடற்பயணங்களின் காரணங்களைப் பற்றி விவாதித்து வருகின்றனர். மேற்கிந்திய ஆப்பிரிக்கக் கரையை அடைய போர்த்துகீசியர்கள் கிட்டத்தட்ட நூற்றாண்டுக்காலம் செலவிட்டுள்ளனர்.  மேலும் இந்தப் பயணத்தை வேறு எந்த ஐரோப்பிய சக்தியும் அல்லாமல் போர்த்துகீசியர்கள்தான் மேற்கொண்டுள்ளார்கள். 

இதற்கு பதில் என ஒரு சம்பவத்தை குறிப்பிடுகின்றனர்.  காலிக்கட்டில் வாஸ்கோ ட காமாவின் குழுவில் ஒருவரிடம் 

"உங்களை இங்கு கொண்டு வந்தது என்ன?" என்று கேட்கப்பட்டபோது 

அவர் அளித்த பதில் 

“நாங்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் மசாலாவைத் தேடிவந்தோம்.” 

போர்த்துகீசிய அரசர்கள் செய்த பெரும்பாலான செயல்களையும் “இறைவனைச் சேவிப்பதற்கும் தமக்கே லாபம் சம்பாதிப்பதற்குமானதாகவே இருக்கிறது என  விளக்கி உள்ளனர்.

போர்த்துகலின் மிகப்பெரிய கவிஞரான லூயிஸ் டி காமோயிஸ் தனது தேசியக் காவியமான லூசியாட்ஸ் படைப்பில் இதையே கூறுகிறார்: "முன்பு எவரும் கடந்து செல்லாத பெருங்கடலை நாம் கடந்தோம், இந்தஸைத் தேடுவதற்காக. எங்கள் நோக்கம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதே." (வில்லியம் சி. அட்கின்சன் மொழிபெயர்ப்பு, The Lusiads, பெங்குவின், 1952, பக்.166).

வரலாற்று எழுதுதல் எப்போதும் அந்நேரத்தின் தேவைகளையும் மனோபாவத்தையும் பிரதிபலிக்கிறது. அதனால் தான் 1955 முதல் 1985 வரை போர்த்துகீசிய கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் பொருளாதார நோக்கங்களால் நடத்தப்பட்டதாகவே விளக்கப்பட்டன.


எனினும் சில அம்சங்கள் தெளிவாகத் தெரிகின்றன. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசிய விரிவாக்கத்தின் முக்கிய காரணம் உணவுத் தேடலாகும், ஏனெனில் போர்த்துகல் எப்போதும் தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை கொண்ட நாடாக இருந்தது. இதனால் அசோர் Portugal Azores  மற்றும் மடெய்ரா தீவுகளில் Madeira Island   குடியேறினர்.  அங்கு தானியமும் சர்க்கரையும் மிக விரைவாகப் விவசாயம் செய்யப்பட்டது. அதேபோல் வட ஆப்பிரிக்காவில் போர்த்துகீசியக் குடியிருப்புகளில் பெருமளவில் தானிய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.  மேலும் புதிய மீன்பிடித் தளங்களைத் தேடுதல் என்பதிலும் வெற்றி கண்டனர்.  இது அவர்கள் உணவு தேவையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை; கடற்படை பயிற்சிக்கும் பெரிதும் உதவியது. அரசியல் கட்டாயங்களும் இருந்தன. 



போர்த்துகலிலும் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் நிலப்பிரபுக்களின் வருவாய் குறைந்து கொண்டிருந்தது. “ஃபீயூடலிசத்தின் நெருக்கடியிலிருந்து” வெளியேறும் ஒரு வழியாகக் அதிகாரத்தில் குறைவாகப் பிறந்தவர்கள், இளைய மகன்கள், உரிமையிழந்த அரசுவாசிகள் போன்றோருக்கு அட்லாண்டிக் தீவுகளில் நிலம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு அங்கு சாம்ராஜ்ய மகிமை, வீர பட்டங்கள் போன்றவற்றைப் பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

வணிகம் வளர வளர  தங்கத்தின் தேவையும் உருவானது.  1450-களிலிருந்து மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து பெருமளவில் தங்கம் கொண்டு வந்தனர்.  சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியபோது தொழிலாளர்களின்  தேவையும் அதிகரித்தது.   மேற்கு ஆப்பிரிக்கா அடிமைகளின் முக்கிய ஆதாரமாக மாறியது. 1443-க்குப் பிறகு இவர்கள் அட்லாண்டிக் தீவுகளுக்கும் போர்த்துகலுக்கும்கூட பெருமளவில் கொண்டு வரப்பட்டனர்.

16ஆம் நூற்றாண்டு போர்த்துகீசிய பேரரசின் முக்கிய அடையாளமாக தேவையாக மசாலா மாறியது. 1470-களுக்கு முன் ஆசிய மசாலாவைத் தேடிப் பயணிக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை, ஏனெனில் அக்கால ஐரோப்பா பாரம்பரிய வழியான சிவப்பு கடல் வழியே அலெக்சாண்ட்ரியா, அங்கிருந்து வெனிஸ் வரையிலான வணிகப் பாதை மிகவும் சுலபமாக திற்ந்து விடப்பட்டு இருந்தது.


15ஆம் நூற்றாண்டில் போர்த்துகல் சிறியதும் வறியதுமான நாடாக இருந்தது. ஆனால் மக்கள் தொகை ஒரு மில்லியனுக்கும் குறைவாக இருந்ததால், கிராமப்புற மக்கள் எளிதாக நகரங்களில் குடியேறினர். இந்த நகர இடம்பெயர்வு நிலத்தில் இருந்த அரசவாசிகளின் (nobles) அதிகாரத்தை மேலும் பலவீனப்படுத்தியது. 


வேலைக்காரர்களின் பற்றாக்குறையே அல்லாமல், போர்த்துகலை 1385 முதல் 1580 வரை ஆட்சி செய்த அவிஸ் order-of-avis அரச குடும்பத்துடன் ஒப்பிடுகையில் உண்மையில், அரசவாசிகள் பின்தங்கிய நிலையிலும் சிக்கிக் கொண்டனர்.


1385 ஆண்டில் போர்த்துகீசிய மன்னன், கஸ்டீலியர்களின் தாக்குதலை வெற்றி கொண்டார், இதன்மூலம் புதிய வம்சத்தை நிறுவினார். பெரும்பாலான அரசவாசிகள் வெளிநாட்டவர்களின் பக்கம் நின்றதால், அவர்கள் தங்களின் தவறான தேர்வுக்காகத் தூக்கிலிடப்பட்டனர்  அல்லது துரத்தப்பட்டனர். இதனால் போர்த்துகீசிய அரசவாசிகள் அரசருக்கு கீழ்ப்படிய வேண்டிய தவிர்க்க முடியாத சூழலிலும் நெருக்கடியை எதிர்கொண்டனர். இந்த அடக்குமுறையை 1484 இல் அவர்கள் வலுவாக உணர்ந்தனர்; அப்போது மிகப் பெரிய அரசவாசியான
பிரகன்சா டியூக், துரோக குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார். எனவே விரிவாக்கமும், புதிய நிலங்களும், புதிய மகிமைப் பாதைகளும் இயற்கையாகவே அவர்களுக்கு ஈர்ப்பாக இருந்தன.



டி. ஜோவான் I (1385–1433) என்பவரின் இளைய மகனான “நாவிகேட்டர்” இளவரசர் ஹென்றி என்ற உருவம் நீண்ட காலமாகவே ஆதிக்கம் செலுத்தி வந்தது. செவுட்டாவில் வீரப் பட்டம் பெற்றார். தனது வாழ்நாளை முழுவதும் முஸ்லீம்களை ஒடுக்கும் 
“சிலுவைப் போர்” என்பதை  கண்டுபிடிப்பதற்கு செலவிட்டார் என்று கூறப்படுகிறது. நாட்டின் தென்மேற்குத் தூரமான சாக்ரெசில், அவர் ஒரு கடற்படை மற்றும் வழிகாட்டுநர் பள்ளியை நிறுவி, மேற்கிந்திய ஆப்பிரிக்கக் கரைக்கு மீண்டும் மீண்டும் பயணங்களுக்கு அனுப்பினார். அவர்களின் படகுகளின் பறக்கும் திரைகளில் சிலுவையின் சின்னம் கண்ணுக்குத் தெரியாமல் மறையும் வரை அவர் கவனித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.


ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் அந்த இளவரசர் பெரிதாகக் கற்றவர் அல்ல; மேலும் அவர் வழிகாட்டிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் “பள்ளி” ஒன்றைத் தொடங்கவில்லை என்பதையும்  குறிப்பிடு கின்றனர்.. எனினும் அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்களைப் போலவே அவருக்கும் போர்த்துகலில் பெரிய நிலங்களும் பொருளாதார நலன்களும் இருந்தன சோப்புத் தயாரிப்பில் அவர் ஒரே உரிமையைப் பெற்றிருந்தார் பயணங்களுக்கு அவர் அளித்த ஆதரவின் பின்னணியில் மத அல்லது ஆன்மீகக் கூறுகள் இருந்திருக்கலாம்; ஆனால் தங்கம், அடிமைகள் போன்றவற்றின் இறக்குமதியிலிருந்து அவர் மிகுந்த லாபம் பெற்றார். இங்கேயும், பொருளாதார நோக்க ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

எதுவாக இருந்தாலும், இளவரசர் ஹென்றியின் நடவடிக்கைகள் ம்ற்றும் கண்டுபிடிப்புகளில் அரசின் மையப் பங்கு uண்டு என்ற  உண்மையை வெளிப்படுத்துகின்றன: . போர்த்துகீசியர்கள்  வணிகர்கள்  போன்றோர்களுக்கு பணமும் கப்பல்களையும் வழங்கியிருந்தாலும், வழிநடத்தல் மற்றும் உந்துதல் பெரும்பாலும் அரசிலிருந்துதான் வந்துள்ளது. இந்த உந்துதல், 1460 இல் இளவரசர் ஹென்றி இறந்தபிறகு, மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அந்த நேரத்தில் போர்த்துகீசியர்கள் தங்கள் நிலையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கக்கூடியதாக இருந்தது. அட்லாண்டிக் தீவுகள் விளைச்சல்களை வழங்கிக் கொண்டிருந்தன; ஆப்பிரிக்க வர்த்தகம் செழித்து வந்தது. 


ஆப்பிரிக்காவின் தென்புற முனை இன்னும் எட்டாக்கனியாகவே இருந்தது. புதிய அரசரான ஜோவான் II (1481–95)  ஊக்கப்படுத்துதல்  தெற்குத் திசையில் மேலும் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது.

1469 ஆம் ஆண்டு துவங்கியே வணிகர்களுக்கு  பரந்த அளவிலான சலுகை வழங்கப்பட்டு வந்துள்ளது.  தங்கம் மற்றும் அடிமை வர்த்தகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கான தனியுரிமைக்குப் பதிலாக, மேற்கிந்திய ம்ற்றும் ஆப்பிரிக்கக் கரையை ஆராய்ந்து கண்டுபிடிக்க ஆண்டுக்கு 100 லீக்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வணிகரின் லாபத் தேடலும், அரசின் விரிவாக்கத் திட்டங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இருந்தன. போர்த்துகீசிய கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்தையும் வெற்றியையும் விளக்குவதற்காக வரலாற்றாசிரியர்கள் பல துணை காரணிகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


ஐரோப்பாவின் தென்மேற்குத் தூரத்தில் போர்த்துகல் அமைந்திருப்பதால் சிறிய அளவில் மட்டுமே முன்னுரிமை கிடைத்திருக்கலாம். போர்த்துகல் கிட்டத்தட்ட 15ஆம் நூற்றாண்டு வரை  அமைதியாக இருந்தது;  அதன் சக்திகளை விரிவாக்கத்திற்குச் செலுத்த முடிந்தது. ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் போலவே, கண்டுபிடிப்பு, வெளிநாடு பயணம் ஆகிய எண்ணங்கள் பொதுவாகப் பரவலாக செலுத்த பட்டன; சில போர்த்துகீசியர்களுக்கு கடலோடிகளாக இருந்த பாரம்பரியமும் இருந்தது; அது கடற்கரை மீன்பிடி மற்றும் வட அட்லாண்டிக்கிலும் கூட மிகுந்த தூரம் செல்லும் கடலோட்ட அனுபவத்திலிருந்து வந்தது.

ஆனால் கடலோடிகளின் இனமாகக் கருத இயலாது  பெரும்பாலான போர்த்துகீசியர்கள் கடலைப் பற்றிய எந்த அறிவும் இல்லாத விவசாயிகளே.  1415 ஆம் ஆண்டு செஉட்டாவைப் பிடிக்கச் சென்ற போர்த்துகீசியக் கப்பற்படைக்கு, ஜிப்ரால்டர் நீரிணையை கடப்பதிலேயே பெரிய சிரமம் ஏற்பட்டது. அதுவே அப்போது அவர்களுடைய கடல் வழிகாட்டும் திறமையின் நிலையைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. ஆனால் விரைவில் அது மாறியது. போர்த்துகீசியர்கள் கப்பல்களிலும் வழிகாட்டும் நுட்பங்களிலும் சோதனைகள் செய்து, அவற்றை மேம்படுத்தி, அறியாத கடல்களில் தெற்கே ஆழமாகச் செல்லக்கூடியதாக மாற்றினர்.

15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை போர்த்துகீசியர்கள் சிறிய, சதுரப்பறக்கை கொண்ட, மத்தியதரைக் கடலின் வணிகக் கப்பல்களுக்கு ஒத்த கப்பல்களையே பயன்படுத்தினர். இவை காற்றோட்டத்தோடு செல்ல ஏற்றதாக இருந்தாலும், எதிர்மறை காற்றைச் சந்தித்து போர்த்துகலுக்கு திரும்புவதில் சிரமப்பட்டன. 


1440ஆம் ஆண்டு காலத்தில்
கரவேல் (Caravel) எனப்படும் கப்பலின் முழுமையான வடிவமைப்பே மிக முக்கியமான முன்னேற்றமாக இருந்தது. இக்கப்பல்களில் பொருத்தப்பட்டிருந்த முக்கோண (lateen) பறக்கைகள் அரபு முறையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை. இதன் நன்மை என்னவென்றால், கப்பல்கள் காற்றைச் சந்தித்தே முன்னேற முடிந்தது; காற்றின் திசையுடன் பயணிக்கவும் முடிந்தது. உண்மையில், 15ஆம் நூற்றாண்டில் மேற்கிந்திய ஆப்பிரிக்கக் கடற்கரை அருகிலும், 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்குக் கரையோரத்திலும், கப்பல்கள் முதலில் சதுரப்பறக்கைகளுடன் (favourable wind-க்கு) பயணித்துள்ளனர், பின்னர் எதிர் காற்றைச் சந்திக்கும்போது lateen அல்லது இரண்டையும் இணைத்த வடிவில் மாற்றிப் பயன்படுத்தப்பட்டன.


வழிகாட்டும் திறமைகளிலும் போர்த்துகீசியர்கள் முன்னேற்றம் கண்டனர்; இது அவர்களுக்கு நிலத்தைத் விட்டு  தொலைவில் கடலோடச் செய்ய முடிந்தது. 1456-இல் அவர்கள்
குவாட்ரன்ட் (quadrant) எனப்படும் கருவியைப் பயன்படுத்தி நட்சத்திர உயரத்தை அளந்து, அதன்படி அகலாங்கை கணக்கிடத் தொடங்கினர். 1480-களில் சூரியக் கணக்கீடுகளும் மேம்பட்ட அட்டவணைகளும் அவர்கள் அகலாங்கை கணக்கிடும் திறனை மேலும் மேம்படுத்தின. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய வழிகாட்டுதல் பல சமயங்களில் முற்றிலும் வெற்றி—தோல்வி அடிப்படையில் இருந்தது. பல அனுபவமிக்க பழைய கடலோடிகள் புதிய கருவிகளைப் புறக்கணித்து, காற்றின் தன்மை, அலைகள், கடலோட்டத்தின் இயல்பு ஆகிய தங்களின் அனுபவங்களை மட்டுமே நம்பி வழி கண்டறிந்தனர்.

உண்மையில், “மதமே காரணமாகக் கூறப்பட்டாலும், தங்கமே உண்மையான நோக்கம்” என்பதுதானா? அல்லது “செல்வத் தேடலே கண்டுபிடிப்பை உருவாக்கியது. அதன் வெளிப்படையாக அது ஆன்மாக்களுக்கான ஒரு சிலுவைப் போராகக் கூறப்பட்டது; ஆனால் போர்த்துகீசியர்கள் தேவாலயங்களை அமைக்கவில்லை; அதற்குப் பதிலாக...” அவர்கள் பாரக்கூன்களில் (அடிமைகளை அடைத்து வைக்கும் கூடங்களில்) அடிமைகளை வைக்காமல், ஆன்மாவுகளை அடிமையாக்காமல் மதமாற்றம் செய்திருந்தால், அவர்கள் உண்மையாக மதபரப்புதலில்  இருந்தார்கள் என்று நம்பப்பட்டிருக்கலாம். ஆனால், மிஷனரி வேலை அடிமை கடத்தலுக்கு அரை நூற்றாண்டுக்குப் பிறகே வந்தது.


இன்னொரு பார்வையில் கண்டால் 15ஆம் நூற்றாண்டின் மக்களுக்கு மதம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து பார்க்கும் வழக்கமில்லை  போர்த்துகீசிய அரசர்களுக்கு “இறைவனைச் சேவித்தல்” மற்றும் “தமக்கே லாபம் சம்பாதித்தல்” ஒன்றோடொன்று முரணானவை என்று இருக்கவில்லை.


1565 ஆம் ஆண்டு,
மன்னர் டி. செபாஸ்டியன், கோவாவில் இருந்த வைஸ்ராயை இந்தோனேஷியாவின் அம்போன் தீவில் கிறிஸ்தவத்தை ஊக்குவிக்கும்படி அறிவுறுத்தினார். ஏனெனில், “இது அந்த நாட்டை பாதுகாப்பதற்கான முக்கியமான வழியாகவும், அங்கிருந்து கிடைக்கும் லாபங்களை அதிகரிக்கக் காரணமாகவும் இருக்கும்” என்று நம்பினார் எனவே, பொருளாதார நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது கூட, இந்தக் கடிதத்தில் வெளிப்பட்டிருக்கும் இறைவன் (God), அரசாட்சி (Caesar), செல்வம் (Mammon) ஆகிய மூன்றின் சிக்கலான இணைப்பை கண்டு உணரலாம் .

போர்த்துகீசியக் கண்டுபிடிப்புகளைப் பற்றி ஆடம் ஸ்மித்தின் கூற்றுப்படி “அமெரிக்காவின் கண்டுபிடிப்பும், தொடுப்பு முனை (Cape of Good Hope) மற்றும்  கிழக்கு இந்தியாவிற்கு சென்ற பாதையின் கண்டுபிடிப்பும், மனித குலத்தின் வரலாற்றில் பதிவான மிகப்பெரிய, மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகள் ஆகும். என்கிறார்.  

1487–1500 காலப்பகுதியில் நடந்த போர்த்துகீசியர்களின் கடல்சார் சாதனைகளுக்கு மரியாதை செலுத்த வேண்டி உள்ளது. வாஸ்கோ ட காமா தனது இரண்டு வருட 1497–99 கடற்பயணத்தில் இரண்டு முறை தொடர்ந்து 90 நாட்கள் நிலம் தெரியாமல் கடலில் பயணித்து உள்ளார். 1500 இல் கப்ரால், ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு பிரேசிலை கண்டுபிடித்தார், பின்னர் ஆப்பிரிக்காவையும் கடந்து ஆசியாவிற்குச் சென்றார்.

இந்தப் பயணங்களை முற்றிலும் புதிதானவையாகவும், தனித்துவமிக்கவையாகவும் பார்க்கக் இயலாது. ஏனெனில், போர்த்துகீசியர்களும் மற்ற ஐரோப்பியர்களும் பல நூற்றாண்டுகளாகவே வணிகம் செய்தும், ஆராய்ச்சிப் பயணங்களையும், நீண்ட கடல்பயணங்களையும் மேற்கொண்டு வந்தனர்.  அதற்கு முன் ரோமப் பேரரசின் உச்சகட்டத்தில் அதன் வணிகர்கள் அரேபியக் கடலில் பரவலாக வணிகம் செய்தனர். பின்னர் மார்கோ போலோ போன்ற ஐரோப்பியர்கள் நிலம் வழியாகவும் கடல் வழியாகவும் மிக நீண்ட தூரங்கள் பயணித்தனர். நோர்ஸ்மென் மற்றும் வைகிங்குகள் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வட அமெரிக்காவில்கூட குடியேற்றம் செய்தனர்.