20 Dec 2012

ஒரு புத்தகம் கதை!

ஒய்யாரமா மேஜை விளிம்பில் சாய்ந்து நின்று கொண்டு ஒரு விமர்சனம் பெறப்பட்டேன். நான் எழுதிய புத்தத்தில் வார்த்தைகள் கண்ணியமாக பயண்படுத்தவில்லை என்று! எல்லோரையும் புரியவைக்க நான் உலகமகா குரு அல்ல என்றாலும் கூட சும்மா அவல் மென்று   சாப்பிடுவது மாதிரி பேசுவது தான் சிரிப்பாக இருந்தது.                                                                                                                                                இதுவெல்லாம் பொறாமை ஜுவாலை என தள்ளி விட்டாலும் என் புத்தகம் பற்றி சரியான புரிதல் எனக்கு கிடைத்துள்ளது அதை உங்களுடன் பகிரும் போது இன்னும் தன்னம்பிக்கையுடன் கதைப்பேன். நான் ஒரு எழுத்து பின்புலனுள்ள குடும்பத்தில் இருந்து வரவில்லை, என் மூலதனம் என் சிந்தனைகள், எண்ணங்கள், என் சில அனுபவங்கள், அதை பகிரும்  துணிவும், உண்மையின் மேலுள்ள தீராத பற்றும் தான்.  8 வயதில் இருந்தே எழுத்து என்னுடன் தான் உள்ளது ஆனால் அது எல்லாம் தேவையற்றது என எரிக்கப்பட்டது கிழிக்கப்பட்டது தான் உண்மை. பின்பு என் முதுகலை படிப்பு ஊடகம் சார்ந்தது என்றதும் நான் கற்ற உத்தியை கையாளும் முயற்சியில் ஒரு புத்தகம் வந்துள்ளது.  எனக்கு பின்புலமாக விளங்கும் என் கணவர் நான் விரும்பும் போல் சுதந்திரமாக எழுத அனுமதிக்கின்றார், என் நண்பர்கள் உதவுகின்றனர் இதனால் மட்டுமே புத்தக உலகத்தில் என் புத்தகவும் இடம் பிடித்து விட்டது.  நான் கன்னிமார நூலகம் இன்னும் சென்று விடவில்லை என்றாலும்  என் புத்தகம் கன்னிமாரா நூலகத்தில் இடம் பிடித்துள்ளது என்பதே மகிழ்ச்சி தானே.                                                                                         நான் எழுதிய புத்தகம் நான் கண்ட நிகழ்வுகள், சூழல்கள் என இருந்தால் கூட என் வாழ்கை சரிதமல்ல.  சம்பவங்களை இயல்பாக எழுத முற்பட்ட போது என் வாழ்கை சரிதமாக சிலருக்கு படுகிறது என்றால் இவர்கள் இன்னும் வாழ்கை சரிதம் வாசிக்கவில்லை என்பதே பொருள்.  நான் இப்புத்தகம் எழுதிய போது ஒரு காலத்தை சில சாதாரண மனிதர்களை பதியவேண்டும் என்று மட்டுமே எண்ணினேன். என் கதைகளில் சாதாரண மக்கள் கொண்ட போராட்ட வாழ்கையை சித்திரிகரிக்கவே முயன்றேன். பல பெண் தோழிகள் எனக்கு தொலைபேசி ஊடாகவும் மின் அஞ்சல் வழியாகவும் கருத்தை தெரிவித்திருந்தனர்.  ஒரு விமர்சகை  எல்லா கதையிலும் நான் என்ற கதாபாத்திரம் உண்டு என்று வருந்துவதாக சொல்லியிருந்தார். நான் தேடும் வெளிச்சங்கள் என்ற தலைப்பு உள்வாங்கி எழுதிய போது நான் என்ற கதாபாத்திரம் தவிற்க இயலாது ஆகி விட்டது.                                                                         இப்புத்தகத்திற்க்கு ஆக்கபூர்வமான விமர்சனம் பெறும் நோக்குடன் கல்லூரி பேராசிரியர்கள்,ஊடகவியாளர்கள், நண்பர்கள் கைகளில் என் சொந்த செலவில் எட்ட வைத்துள்ளேன். உழைப்புக்கு விலை கிடைக்காத தொழில் எழுத்து என்று தோன்றினாலும் முதல் படி சறுக்காததில் நான் மகிழ்வேன். லண்டனில் 30 புத்தகம், நார்வே 25 புத்தகம் சென்றுள்ளது என்பதும் மகிழ்ச்சியே.  ஒரு புத்தகத்தின் விலையில் மூன்று மடங்கு செலவானது அதை வெளிநாடுகளில் எட்ட செய்ய.  இருப்பினும் நண்பர்கள் அன்பு வேண்டுதலுக்கு இணங்க என்னால் இயன்ற மட்டும் நண்பர்கள் உதவி கொண்டும் விரும்பியவர்கள் கைகளில் சேர வைத்து விட்டேன். சிலர் புத்தகத்தின் செலவை அனுப்பி உற்சாகப்படுத்திய போது  சிலர் புத்தகம் பற்றிய விமர்சனத்துடன் என்னை மெருவேற்றியுள்ளனர்.                                                 எழுதுவதும் ஒரு கலை தான்.  எழுத ஒரு கரு உருவாகுவதும் எழுத்தாளன் உரிமை, விருப்பம் என்பதையும் கடந்து ஒரு படைப்பாளியின் வாழ்கையில் இருந்து பெறப்படும்  அனுபவத்தில் இருந்து  பெறும் உன்றுதல் என்றே சொல்ல இயலும்.  அந்த உற்றுதல் ஒரு சமூக அக்கறை, நலன் சார்ந்து சிறப்பாக அமைகின்றது.                                                                                                                               இது போன்ற வாசகர்களின் விமர்சங்களையே நான்  எடுத்து கொள்கின்றேன் இதுவே எனக்கும் பலமாகவும் அமைகின்றது.  I'm Savithri Mohanaruban. Subi gave me your book (short stories) when I met her in Chennai.I love my mother tongue.I'm a fan of Tamil lanuage but I don't go deep in to it as Subi does. So with some some hesitation -I took the book.
While on the flight back home to Singapore I was looking for something to read and found your book in my handbag.
The rest is history!. I really enjoyed it .It was very interesting,easy to read,we written and very true to life. Infact I couldn't keep the book down. So the end result is I finshed reading the book in one go!.By the end of the flight I was ready to pass on the book to my friends in singapore to read!
You can see I have never wirtten a "Review " on any books in my life!!??. As I've enjoyed reading your book-that too your maiden effort- I thought I should pen few of my thoughts/ feeling (mine is just a drop in the ocean as i'm sure you would have received many acclaims) to encourage you to write books full of more wonderful scenarios in the future.
Wishing you the very best for futre ventures.
Best wishes
Savithri.
உங்கள் இலகுத் தமிழ் நடையும் கதைகள் சொல்லும் விதமும் பக்கத்தில் இருந்து கதை சொல்லுவது போன்ற உணர்வைத் தருகிறது.


வலைப்பதிவர் நண்பர் சுரேஷ்.                                                                                                                                  ஜோஸபின் என்னிடம் நான் தேடும் வெளிச்சங்கள் என்கின்ற தொகுப்பைத் தன் கன்னி முயற்சி என்று அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சோகம், காதல் என எழுதுவார்கள், இல்லை சிகப்புச் சிந்தனையுடையவர்களாக இருப்பின் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று ஒட்டு மொத்த ஆண்களின் சட்டையை பிடித்து உலுக்குவார்கள்…இரண்டும் இல்லையெனில் கடுகுத் துவையல், அரிசிக் கஞ்சி என்று சமையல் புத்தகங்களும்... மென் சோகக் கவிதையும் வடிப்பார்கள்.


இதில் எந்த வகையும் இல்லாமல் தன் மனம் போன பாதையில் ஒரு கதைச் சொல்லும் பாணியில் எந்த விதமான அலங்கார வார்த்தைகளைச் சேர்க்காமலும் பக்கத்து வீட்டு அக்கா மின்சாரமில்லாத பொழுதுகளில் குழந்தைகளுடன் வாசல்ப் படியில் அமர்ந்து ஏதோ ஏதோ சம்பவங்களை, ஏமாற்றங்களைக் கதைப்பதைப் போல் உள்ளது.


ஒரு பார்வை – செல்வி ஷங்கர்

 கதைகளைப் படிக்கின்ற போது சமுதாயம் உணர்ந்தது போலவே நிகழ்வாக்கி எழுத்துகள் செல்வது ஆசிரியரின் ச்முதாய்ப் பார்வையைக் காட்டுகிறது.

 கருத்து நடையும் எழுத்து நடையும் மொழி நடையும் உணர்வோட்டச் சிந்தனையும் சமுதாயக் கருத்தும் இயறகையும் முட்டி மோதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது..
                                                                                              சிவசுதன் -சிலோண்
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ,
1) சொந்த வீடு .
2) என் பூந்தோட்டம் சொல்லும் கதை .
3) என்னைச் சிலுவையில் அறைந்த பைத்தியம் .
4) நினைவுகளின் சக்தி .

இந்தக் கதைகள் அனைத்தும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன . அது தான் உங்கள் எழுத்தில் உள்ள வல்லமை என்பேன் . சலிப்பே வராமல் படித்த ஒரு சில புத்தகங்களில் உங்களுடைய படைப்பும் ஒன்று .அத்துடன் என்னைக் கடந்து சென்ற சொந்தங்கள் மற்றும் நட்புக்களை ஒரு தடவை மீட்டுப் பார்க்கச் செய்துவிட்டீர்கள் . என் குழந்தைப் பருவத்திற்கு ஒரு தடவை என் எண்ணங்கள் சென்று வந்தன . வரும் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள ஒரு தன்னம்பிக்கையும் இனம் தெரியாத இன்பத்தையும் தருகிறது .


கவிஞர் வைகறை வைகறை                                                          
சமீபத்தில் ஜெ.பி.ஜோஸபின் பாபா அவர்கள் எழுதிய "நான் தேடும் வெளிச்சங்கள்" சிறுகதை தொகுப்பை வாசித்தேன்!
ஆண்டவனைப் பாடுதலைத் தாண்டி, ஆள்பவனைப் பாடுவதைக் கடந்து, தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அழகு பார்த்து வந்த இலக்கியத்தில் இன்று சாமானிய மக்களைக் குறித்து எழுதப்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது!

"நான் தேடும் வெளிச்சங்கள்" முழுவதும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையே பேசப்படுகிறது! அதுவும் அவர்களின் மொழிநடையிலேயே பேசப்படுகிறது!
வியாபாரப் பண்டிகை எனும் அடைமொழி கொடுக்கப் பட்ட தீபாவளி குறித்த 'தீ வலி" கதை...; சொந்த வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தின் வழியைக் கூறும் "சொந்தவீடு" கதை...என கதைகள் அனைத்தும் சராசரி வாழ்விலிருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது!  கதையாசிரியர் ஜோஸபின் பாபா அவர்களின் மொழிநடை அருமையாக இருக்கிறது!  கிளைக் கதைகளை அருமையாக வெளிப்படுத்துகிறார்!  அதே சமயம் மையக்கதையை இன்னும் வலுவாக அமைத்தால் மேலும் சிறப்பாக அமையும்!!                                                                                                                                 இரண்டு புத்தகங்களின் ஆசிரியரான எச்.பீர்முஹமத்                                                                  
நான் தேடும் வெளிச்சங்கள்: தமிழின் புதிய சிறுகதை எழுத்தாளரான ஜோஸ்பின் பாபாவின் முதல் சிறுகதை தொகுப்பு இது. இத்தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. எதார்த்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கதைளே பெரும்பாலும் என்றாலும் அதனூடே வாழ்வின் வியசனம் வெளிப்படுகிறது. சக மனிதன் அன்றாட வாழ்வில் கடந்து போகும் நிகழ்வுகள், வினைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் தேர்ந்த கதையாக வடிவம் பெறுகின்றன. அது சி

லசமயங்களில் நினைவின் நதியாக, சுவாரசிய, மெச்சத்தக்க உணர்வுகளை நமக்குள் அதிகம் சாத்தியப்படுத்தும். இதிலுள்ள என்னுயிர் தோழன், வீடு, சேரநாட்டு அரண்மனையில் ஒரு நாள், என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம், நினைவுகளில் சக்தி போன்ற கதைகள் அவற்றைத்தான் வெளிப்படுத்துகின்றன. தமிழில் நவீன, பின்நவீன கதை முயற்சிகள், எழுத்தாக்கங்கள் எல்லாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டன என்றாலும், இன்னும் இதுமாதிரியான எதார்த்த எழுத்துக்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. மேலும் கதை வடிவத்திற்கான புனைவு (Fiction)என்பது இதிலுள்ள குறைபாடு என்றாலும் ஜோஸ்பின் பாபாவின் கதைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த தொகுப்பில் அணிந்துரை என்ற பெயரில் அதிக பக்கங்கள் வீணடிக்கபட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். ஒருவருக்கு முதலாவதாக வரும் தொகுப்பில் இது தவிர்க்க இயலாது என்றாலும் சில சமயங்களில் தவிர்க்க முடிந்ததே. நான் தேடும் வெளிச்சங்கள் அதன் தொடர்ந்த பயணத்தில் இன்னும் அதிக தூரம் பாய்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.

8 Dec 2012

நித்திரைப் பயணங்கள்! கவிஞர் மு.ஆ. பீர்ஒலி

கோயம்பத்தூர் புத்தக வெளியீடு விழாவில் சந்தித்து புத்தகவும் பெற்று கொண்டேன். பெற்ற புத்தகம் ஒரு நண்பர் வாங்கி விட சுபி அக்கா வந்த போது மறுபடியும் ஒரு புத்தகம் கேட்டு வாங்கி  பல முறை வாசித்து விட்டேன்.  இருந்தும்  கருத்து எழுத  தயக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது.  இன்று மறுபடியும் சகோதரை சந்தித்த போது என் பொறுபற்றத்தனத்தை நினைத்து வருந்தி தைரியம் வரவழைத்து கொண்டு என் கருத்தை பகிர்கின்றேன்.

ஒரு நல்ல படைப்பு என்பது படைபாளியின் சிந்தனையில் இருந்து, தான் அடைந்த பாதிப்பு,  அனுபவத்திலிருந்தே  பிறக்கும். அவ்வகையில் கவிஞரின் சிந்தனையின் அடிநாததில் இருந்து புறப்பட்ட இக்கவிதை தொகுப்பு சுவாரசியம் மட்டுமல்ல நமக்கும் சில உணர்வுகளையும் இட்டு செல்கின்றது.  ஒவ்வொரு முறை  புத்தகம் வாசிக்கும் தோறும் பொருட்கள் மேலும் மேலும் விளங்கி கொண்டே இருந்தது.  வார்த்தை கையாடலில் ஒரு கவனம், கவுரவம், பொறுமை, மற்றும்  ஒரு ஸ்ருதி சேர்ந்து கலந்து  இருப்பது வாசிப்பவனின் மனதை தொட்டு செல்கின்றது.

"மலரின் பயணம்" என்ற முதல் கவிதையின் ஊடாக ஒளியை தேடியுள்ள பயணத்தை கவிஞர்   துவங்குகின்றார். ஆனால் வாழ்கையில் கண்டதோ பொய் முகங்கள்! இதனால் மனம் கசந்து விம்மலுகளுடன்  அடுத்த கவிதை ஊடாக உண்மையை தேடி தன்  பயணத்தை தொடர்கின்றார். தன் பல கவிதை வழியாக நம்பிக்கையுடன் பொய் முகமற்றவரை தேடி கொண்டே இருக்கின்றார்.
"நிறமாறிக் கொண்டிருக்கும் 
திரைச் சீலை
பொய்முகம்
விடுபட்ட நிலவு
இன்னமும் தேடுகின்றேன்" 
இதனிடையில் கவிஞருக்கு கவிதையாக ஒரு தேவதை வருகின்றார்.  ஆனால் விதவை பெண் போல் என உவமைப்படுத்தி நடக்காது போன விருப்பத்தை, வாழ்வில் எதிர் கொண்ட  ஏமாற்றத்தை மனத்துயரை கோடிட்டு காட்டுகின்றார் கவிஞர்!



"அல்லி இதழால் அவளுக்கு இசைத்திடடி" என்ற கவிதை ஊடாக காதல் தோல்வியில் தவழும் ஒரு இளம் மனிதனின் மன உளச்சலை  புடம் இட்டு காட்டுகின்றார்.  இதமான வார்த்தைகளுடன் ஆனால் கனத்த ஒரு சூழலை இட்டு செல்கின்றது இக்கவிதை.

தியானங்கள் தொடர்கின்றன என்ற கவிதையினூடாக பெரும் மழைக்கு பின்பு அமைதி ததும்பும் வானத்தை போல்  முற்றும் துறந்த மனநிலையை ஞான நிலையை வெளிப்படுத்துகின்றார்.  ஆனால் அடுத்த இரு கவிதைகளில்  தான் தொலைத்த, அரும்பும் போதே நுள்ளைப்பட்ட காதலை நினைத்து வெந்து உருகி ஒரு குழந்தையின் மனம் கொண்டு ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.
"உன்னை நேசித்த பொழுது 
 ன்னையே நேசித்தேன்".

"என்னையே வெறுத்தேன் 
உன்னை நேசித்ததால்"

"எங்கோ 
தொலைதூரத்தில்
இராப் பிச்சைக்காரனின்
ஈனக் கதறல்கள்"

"மலர்கிறது" என ஒரு கவிதை அழகிய தென்றல் வீசி அருமையான சொல்லாடலுடன் நம்மை அழைத்து செல்கின்றது. இது போன்ற கவிதைகளை விவரித்து சொல்லுவதை கேட்பதை விட வாசித்து அனுபவிக்கும் சுகம் அலாதியானது என்று மட்டுமே சொல்ல இயலும். இக்கவிதை வாசிப்பின் முடிவில் நாமும் நம்மை அறியாது மலர்ந்து சென்றிருப்போம் .

அடுத்து வருவது ஒரு பெரும் துக்கத்தின், ஏமாற்றத்தின், பிரிவின் தாக்கத்தை வெளிப்படுத்தும் கவிதை. இதை வாசிக்கும் போது  ஒரு வித உளைவியல் மனதாக்கங்கள் நம்மையை தாக்குவதை கண்டு உணராது இருக்க இயலவில்லை. நித்திரையில் நாம் கண்ட சில கனவுகளுடன்  பயணிப்பது போன்று தான் உள்ளது. 

எங்கு சென்றிட்டாய்? என்ற கவிதை காதலியின் பிரிவால்-ஏக்கத்தால் மூர்ச்சையாகிப் போன காதலனின் மனநிலையுடன்  82 வரிகளை ஒரே மூச்சில் உருவிட வைத்துள்ளார். அடுத்த கவிதையில் நிதானமான மனநிலையுடன் காதலியை தோழியாக பாவித்து தன் மனதையையும் தோழியேயும் தேற்றும் தாலாட்டாக உள்ளது. 

அழுது புரண்டு வெறி கொண்டு அழுது புரண்ட காதலன்,   உண்மையை கிரகித்தவராக நிஜங்களில் நிம்மதி கொண்டு    மனநிறைவுடன் புது உறவில் லயிப்பதை அடுத்து ஓரிரு கவிதைகளில்  அரங்கேற்றிகயுள்ளதை நாமும் ஆசுவாசமான ரசிக்க இயலும். இனியுள்ள கவிதைகளில் கணவன் மனைவியின் உறவின் பாரம்மியமான நிலையை, உன்னதமான தருணங்களை அழகிய சொல்லாடல்கள் கொண்டு விளக்குகின்றார். அமைதியான நதி போல் வாழ்க்கை  செல்வதை காணலாம்.  காதல் விரகத்தில் இருந்து காதலில் விழும் சூழலை, அதாவது பழம் நழுவி பாலில் விழுவதை காண இயலும்(பக்கம் 43).
சின்னஞ் சிறு மலரின் 
செம்மை வனப்பு கண்டு
செயலற்று.. 
சொக்கி விட்டேன்.
நித்திரை விழிகள் என்ற கவிதை சமூக நிலையை விளிம்பு நிலை மனிதனின்  கதையை சொல்கின்றது. காதல் மனைவி குழந்தை என அழகிய குடும்பத்தில் வறுமையால் உடலை விலைபேச வேண்டி வந்த அபலைப்பெண்ணின் நிலையை கவிதையான வடித்து செல்கின்றார் கவிஞர். இந்த கவிதைகளில் சுயபச்சாதாபம், சுயவருத்தம், என சுயத்தில் உழலும் கவிஞர் சமூகத்தை கரிசனையுடன் உற்று நோக்கும் நிலையை காணலாம்(பக்கம்:48). பிரிவையும் நம்பிக்கையோடு தேடும் மனதுடன் கவிஞர் கவிதை படைத்துள்ளார்(உதயத்தை தேடி...),வயிற்று பசியோடு அலையும் பிச்சைக்காரிகளையும் உணவாக்கும் கேடுகெட்ட சமூகத்தை அருவருப்புடன் நோக்கும் கவிஞர், வறுமையால் ஒரே போல்  துன்பத்தில் உழலும்  தாயும் சேயையும் அறிமுகப்படுத்துகின்றார். வேலியே பலபொழுதும் பயிறை மேயும் நிலையும் உணர்த்தும்  வழியாக தன்னில் இருந்து முழுதுமாக சமூக போராளியாக உருமாறுவதை காணலாம்.

தொடரும் ஜென்மபந்தம் .... என்ற கவிதையில் மறுபடியும் காதலியை தேடியலையும் ஆத்மாவை உணர்த்துகின்றார். 'ஒரு மனிதனின் தேடல்' என்ற கவிதை  தனித்து நிற்கும் பனைமரம் போன்ற தனிமையுடன் மனிதனை ஒப்பிட்டு மறுபடியும் தேடல்களுடன் பயணம் ஆரம்பித்து விட்டார் கவிஞர். கவிஞரின் அடுத்த புத்தகத்தில் நாம் சங்கமிப்பதுடன் கவிஞரின் தேடலில் விடையில் நாமும் சென்றடையுவோம். 

இப்படியாக ஒரு ஆழ்ந்த நித்திரையில் காணும் கனவு போல் பல கவிதைகள் நம்மை இதமாக தாலாட்டி, ஆழமான சிந்தனைக் கனவுகளுடன் பயணிக்க வைக்கின்றது. இந்த உலகத்தின் கபடு பொய்மையை கண்டு கலங்கும் கவிஞர் நம்மையும் கலக்கமடைய செய்து  விடை தேட பணிந்து தேடல்களுடன் விடை தருகின்றார். 

சாலமன் பாப்பையா, பேரா ஞானசம்பந்தன் போன்றோர் முன்னுரை வாழ்த்துரை வழங்கியிருப்பது புத்தகத்திற்கு இன்னும் பலம் சேர்க்கின்றது.
கவிஞரின் உரையும் ஒரு ஓடும் நதி போன்று வாழ்கை தத்துவம், இறை நம்பிக்கை ஊடாக ஒரு இனிமையான கீதமாகத்தான் உள்ளது. அட்டைப்படத்தில் காணும் பச்சை நிறம் கனவுகளில் வனைப்பான பயணங்களை சொல்கின்றதா என வாசிப்பவர்கள் சொல்ல வேண்டும். ஒரு நல்ல கவிதை புத்தகத்தை வாசித்த மகிழ்ச்சியுடன் எளிதில் மறையாத உணர்வுகளுடன் நீங்களும் பயணிப்பீர்கள் என துணிவுடன் கூறலாம்.

எளிமையின் இருப்பிடவும் பண்பின் இலக்கணமும், சகோரத்துவத்தின் பிரதியாம் சகோதரை புத்தக விழாவில் சந்தித்ததும் நான் அவருடைய சொந்த சகோதரியாக  நேசிக்கப்படுவதும்  இறைவனின் கொடைதான் என்ற நிறைவுடன் சகோதரின் புத்தகத்தை என் பார்வையில் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி கூறி இப்பதிவை உங்கள் முன் படைக்கின்றேன். நீங்களும் வாங்கி வாசித்து கவிதையை அனுபவிக்க வேண்டுகின்றேன். 



ரிக்கியின் கடைசி மூச்சும்-கிருஸ்துமஸ் தாத்தா வருகையும்!

 இளைய மகன் தான் நாய் பூனைகளை பராமரிப்பதும் அவையுடன் அன்புடன் கொஞ்சி விளையாடுவதும் என நேரத்தை செலவிடுபவன். அவன் விளையாடுவதை கண்டு ரசிப்பது மட்டுமே என் வேலை. உயிரினங்களிடம் பாசம் உண்டு எனிலும் இனம் புரியாத பய உணர்வு உள்ளதால் இவயை பத்து அடி தள்ளி வைத்து பார்ப்பது தான் என் விருப்பம். 20 நாள் முன்பு வந்த இந்த குட்டி நாய் கூட வீட்டிற்குள் வந்தால் எனக்கு பிடிப்பதில்லை. இதை மிரட்டுவதற்கு என்றே ஒரு சாட்டை போன்ற கம்பு வைத்திருந்தேன். நான் அடிக்கும் போல் அருகில் செல்லும் போது ஓடி வாசல் பக்கம் நின்று கொண்டு என்னை நோக்கி குரைக்கும்.  இதன் தோன்றம் நாலு மாதம் முன்பு காணாமல் போன றிக்கி நாயுடன் ஒத்து இருந்தால் இதையும் ஏற்று கொண்டோம். இதன் பார்வை செயல் கூட பழைய  றிக்கி நாயை போன்றே இருந்தது. அது ஒரு நாள் காணாமல் போனதும் அதை போன்ற நாய்களை வழியில் காணும் போது பெயர் சொல்லி அழைப்பதும் என்றாவது வரும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு நாலு மாதம் கடந்ததால் இனி வராது என்ற எண்ணம் ஆரம்பிக்கும் நேரம் தான் இந்த குட்டி வந்து சேர்ந்தது. றிக்கியின் குட்டியாக கூட இருக்கலாம்.  

இது வருவதற்க்கு ஒரு வாரம் முன்பு பூனைக்குட்டி ஒன்றும் வந்து சேர்ந்தாலும் நாய்  மனிதனிடம் காட்டும் அன்பு பூனையிடம் தெரிவது இல்லை. பெரிய மகனோ பூனை தன்னை முறைப்பதால் பிடிக்கவில்லை என்று கூறி கொண்டிருந்தான். பூனை ஒரு பொறாமை குணம் பிடித்தது என்றும்  நாய் குட்டி பூனையுடன் நட்பாக விரும்பினாலும் தன் கையால் அடித்து, சீறி விரட்டி விடுகின்றது என்றும் குறை கூறி கொண்டிருந்தனர்.

கடந்த 2-3 நாட்களாக சோர்ந்து இருந்தது. சரியாகி விடும் என்று இருந்த எங்களுக்கு இன்று காலை சுருண்டு படுத்து கொண்டு வாலை மட்டும் ஆட்டி தன் அன்பை வெளிப்படுத்தியதும் வருத்தமாக போய் விட்டது.  நாயை எடுத்து கொண்டு மருத்துவரை கண்டு வந்த மகன்கள் மாலை பள்ளி விட்டு வந்து எடுத்து செல்கின்றோம். மருத்துவரிடம் தற்போது மருந்து இல்லை என்று கூறியதால் திரும்பி கொண்டு வந்தனர். 
நேரம் ஆகும் தோறும் அதன் கண் உள்வாங்கி சலனம் நிலைத்து வர ஆரம்பித்து விட்டது.  பின்பு அதன் இடத்தை விட்டு எழுந்து வாசல்ப்படி பக்கம் வந்து படுத்து கொண்டது.  ஒவ்வொரு முறை ரிக்கி என அழைத்த போது சிறு ஒலி எழுப்பி கொண்டே இருந்தது. நேரம் போகப்போக கண் திறக்கவே இல்லை, ஆனால் கையால் கொசுவை விரட்டி கொண்டே இருந்தது. பின்பு கைஅசைவும் நிலைத்து மூச்சு  விடுவது வயிறு அசைவில் மட்டும் தெரிந்தது. 

 யாரை அழைத்து உதவி கேட்பது என்று எண்ணிய போது யாரும் இல்லை என்று உறைத்தது. நகர வாழ்க்கையின் அர்த்தம் இல்லாய்மை வெளிகொணர்ந்தது அந்நேரம். கடிகாரத்தை நோக்கி கொண்டே இருந்தேன் மகன்கள் வர இன்னும் பல மணிநேரம்!  அதன் நிலையை கண்டு கொண்டு இருக்க மனம் தாங்கவில்லை. இரண்டு நாள் முன்பே மருத்துவரை அணுகவில்லையே என்ற குற்ற உணர்வு கண்ணீரை தான் வர வைத்தது. பகல் 11-12 மணியுடன் அதன் கடைசி மூச்சும் நின்று விட்டது.  உடல் அப்படியே கம்பு போன்று மாறி விட்டது.


பள்ளி விட்டு வரும் மகன் தான் சிந்தனையில் வந்தான். அவன் வரும் போது வரவேற்கும் நாய், காலை பள்ளி பேருந்து அருகில் போய் விடை சொல்லி அனுப்பும் நாய்! குழி தோண்டி புதைத்து விடலாம் என உதவிக்கு ஆட்களை தேடினேன். பதிவாக செடிக்கு சாணம் கொண்டு தரும் ஆடு மேய்க்கும்  நபரும்  இன்று  காணவில்லை.  "ரிக்கி எப்படி உள்ளது" என்ற கேள்வியுடன் மகனும் வந்து விட்டான். "வருத்தம் கொள்ளாதே செத்து விட்டது". "புதைக்க வேண்டும் என்றேன்". அவனுக்கு நம்பிக்கை இல்லை, எப்படியம்மா என்று வினவி கொண்டே இருந்தான். அருகில் சென்று பார்த்து விட்டு சமாதானம் ஆகி வந்தான். மண் வெட்டி எடுத்து இருவருமாக குழி தோண்டினோம்.  ரிக்கியை நான் தான் எடுத்து குழியில் வைப்பேன் என்று கூறி எடுத்து வைத்து மண் இட்டு மூடினான். டாக்டர் நாயை பார்க்கவே இல்லை அவசரமாக கிளம்பி போய் விட்டார் அம்மா என்றான் சோர்வாக கல்லில் இருந்து கொண்டு.  இனியும் இதுபோல் ஒரு நாய்குட்டி நம்ம வீட்டிற்கு வரும்.  குளித்து விட்டு வா..  கம்யூட்டர் தருகின்றேன் என்றதும் பின்பு கம்யூட்டர் விளையாட்டில் மூழ்கினான். இன்று கைபந்து விளையாட மைதானத்திற்கும் போகவில்லை.

 6 மணியானதும் பெரியவர் வந்து சேர்ந்தான். ரிக்கி எங்கே என்றான்? பால் வாங்கி வா குழியில் ஊற்றவேண்டும் என்றேன். அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. காலையில் இருந்து உணவு எடுக்காத சோர்வும் எட்டி பார்க்க ஆரம்பித்து விட்டது. வெளியூரில் இருந்த என்னவர் அலைபேசி வழியாக துக்கம் விசாரித்து கொண்டார், மேலும் இனி நாய் வளர்க்க வேண்டாம் பிரிவு வேதனையாக உள்ளது என அறிவுரையும் வழங்கி கொண்டிருந்தார். அடுத்த ஊரில் இருக்கும் தங்கை குடும்பத்துடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டோம் துக்கத்தை. தங்கை வீட்டிற்கு வந்துள்ள அம்மா தான் "கவலை கொள்ளாதீர்கள் நமக்கு வரும் தீங்கு வளர்ப்பு பிராணிக்கு வந்து போய் உள்ளது" என ஆசுவாசப்படுத்தினார். 

பின்பு மகன்கள் கேரம் விளையாடினர், நான் வாசிப்பில் இருந்தேன். மூவருக்கும் மனம் சரியில்லை. போர்டை எடுத்து மூலையில் வைத்தனர் நானும் புத்தகத்தை அலைமாரையில் வைத்து விட்டு பள்ளி வகுப்புக் கதைகளை அவர்கள் சொல்ல, நான் கேட்பதுமாக 9 மணியானதும் தூக்கம் வர துவங்கியது. 

இப்போது வெளியில் பாட்டு சத்தம். ஆலயத்தில் இருந்து கிருஸ்துமஸ்  தாத்தா-பாட்டுடன் வந்து சேர்ந்துள்ளனர். வீட்டில் இன்று எதையும் ஒழுங்குபடுத்தி வைக்கவோ வரும் நபர்களுக்கு இனிப்பு பரிமாறவோ ஆயத்தம் எடுக்கவும் மறந்து விட்டோம். குழந்தைகளும் நல்ல தூக்கம், இனி எழுப்பி தாத்தா ஆடும் ஆட்டத்தை காணும் மனநிலையில் அவர்களும்  இல்லை. வீட்டிற்கு பெல் மாட்டாதது நல்லதாக போய் விட்டது என்று இன்று தான் தோன்றியது. பக்கத்து வீட்டு அழைப்பு ஒலி தான் கேட்டு கொண்டிருந்தது.

 காலை சூழல் தான் நினைவிற்கு வந்தது. ரிக்கி நாய்க்கு உதவிக்கு யாரும் கிடைப்பார்களா என்றால் ஒருவரும் நினைவிலும் வரவில்லை. இந்த குழுவில் உள்ளவர்கள் கூட நம் வீட்டு விலையை வைத்து நம்மை விலையிட்டு சில பிடிக்காத கேள்விகளை இட்டு செல்வார்கள் என்று தெரியும். ஆனால் அவர்கள் போகும் படியாக இல்லை எங்களை எழுப்பியே தீருவோம் என உரக்க பாட்டை ஒலிக்க செய்து கொண்டு நிற்கின்றனர்.

 கிருஸ்தவ வாழ்கையிலும் நாம் அறியாதே இது போன்ற சில  ஆசாரங்களை புகுத்தி விட்டனர். டிசம்பர் முதல் நாள் அன்றே நட்சத்திர விளக்கு மாட்ட வேண்டும், வண்ண விளக்குகளால் வீட்டை அலங்கரிக்க வேண்டும். ஏனோ இதுவெல்லாம்  அன்னியமாக படுகின்றது இன்றைய மனநிலையில். கிருஸ்தவ அன்பை வெளிப்படுத்த  வருவதாக சொல்லி கொண்டு குளிர் இரவில் வந்து காணிக்கை  வாங்கி விட்டு  'ஒரு அனாதை' என்ற  உணர்வையை விட்டு செல்வார்கள். தமிழகம் வந்த பின்பு கிருஸ்தமஸும் மதம் கொண்டு தொடர்புபடுத்தி கொண்டாடுவதும் கிருஸ்த வீட்டில் மட்டும் நட்சத்திரம் மின்னுவதும் அதை அடையாளமாக கொண்டு கிருஸ்தவ வீட்டிற்க்கு மட்டும் கிருஸ்துமஸ் தாத்தா வருவது என்பதும் ஏற்று கொள்ள இயலவில்லை. 

கடந்த ஐந்து வருடமாகவும்  கேட்கும் ஒரே கேள்வி ஐயா எங்கு வேலை பார்க்கிறார்?, நீங்க என்ன செய்கிறீர்கள்?, பெயர் என்ன? என்று கேட்டு எழுதி செல்வது மட்டுமல்ல; இந்த காட்டுக்குள்ள எப்படி பயமில்லாமல் இருப்பீர்கள் என சில முதிய பெண்மணிகளின் கேள்விக்கும் பதில் சொல்லவேண்டி வரும். இன்னும் சிலரோ நம்மை வேற்று கிரகவாசிகள் போன்று அடிமுடி பார்ப்பார்கள். அத்தான் வீட்டிலிருந்தால் அவரை முன் நிறுத்தி நாங்கள் பின்னால் ஒளிந்து கொள்ளலாம். குழந்தைகள் இன்னும் எழவில்லை. அவர்கள் சோர்ந்த மனதை எழுப்பி புண்படுத்தவும் விரும்பவில்லை. ஆனால் நான் விழித்து விட்டேன்.  மறுபடியும் காலை முதலுள்ள ரிக்கி நாய் குட்டியின் கடைசி துளிகள் மனதில் வரத் துவங்கி விட்டது. நேரம் இரவு 12 மணி! கிருஸ்துமஸ் தாத்தா ஆடிபாடும் நேரம் தான் ஆனால் மனது தான் இன்று கனத்து கிடக்கின்றது கதகை திறந்து மகிழ்ச்சியுடன் வரவேற்க மனம் இல்லை!!!  



7 Dec 2012

இணையத்தை பயண்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியது!


தொடர்பியலில் முதுகலைப் பாடத்திட்டத்தில் ‘நவீன ஊடகம்’ ஒரு பாடப்பகுதியாக இருந்தது.  பேராசிரியர் இணையமுகவரி உள்ளவர்களை பற்றி வினவிய போது 14 பேரில் 3 பேருக்கே இருந்தது.  எனக்கும் இருந்தது என்பது ஒரு பெருமையாகத்தான் இருந்தது. ஆனால்  கணவர் உதவியில்லாது தனியாக கையாள தெரிந்திருந்தேனா என்றால்  இல்லை என்பதே உண்மை. பின்பு இணையத்தில் கணக்கு துவங்கி இதனூடாக வலைப்பதிவுகள் உலகில் வந்த பின்பு தான் கணினி பயண்பாடு அதிகரித்தது.  

வலைப்பதிவுகள் தான் என்னை ஈர்த்த ஒரு இணையப்பகுதி. இதனாலே என்னுடைய இளம் ஆராய்ச்சியாளர் பட்டத்திற்க்கு என ஈழ வலைப்பதிவுகளை பற்றிய ஆய்வை தேற்வு செய்திருந்தேன். நம் கருத்துக்களை அச்சுறுத்தல் அற்று வெளியிட தகுந்த தளமாக உள்ளதும்; தான் காணும் கற்று உணரும், நம்மை பாதிக்கும் அச்சுறுத்தும் செய்திகளை தகவல்களாக தர இயல்கின்றது என்பதை சிறப்பாக கண்டேன்.    நம்மை அறிவாளிகள் என்று காட்டி கொள்வதை விட மனதில் தோன்றுவதை இயல்பாக  வெளியிட வலைப்பதிவுகள்  ஒரு தளம் அமைத்து கொடுக்கின்றது என்பது தான் இதன் பயன்பாட்டில் மிகவும் ரசிக்க வைத்தது.

எங்கள் வீட்டுக்கு என தனி இணைய இணைப்பு வந்த போது முதல் என் தொலைகாட்சி காணும் நேரம், வாசிக்கும் நேரம், பேசும், தூங்கும் நேரம் கூட விழுங்கும் பூதமாக இணையம் வந்து சேர்ந்தது.  இணையம் வழி பல அறிய பாட புத்தகங்கள், கட்டுரைகள், கதைகளில் நான் சென்று வந்துள்ளேன். பல  உன்னதமான மனிதர்களுடனான நட்பும் அறிமுகவும் கிடைத்தது. 

தமிழக கலசாரத்தில் பெண்கள், ஆண்களுடன் பேசினாலே கற்பு கலைந்துவிடும் என்று நம்பும் சமூகத்தில், அழகான நட்பை உருவாக்க பெரிதும் பயண்படுகின்றது. யாரிடம் என்ன பேசுகிறோம் என்ற கருதல் இருந்தால் ஆபத்து வருவதற்க்கு வாய்ப்பு இல்லை. இது ஒரு கருத்து பரிமாற்ற, தகவல் பரிமாற்ற தளம் மட்டுமே என்ற புரிதல் மிகவும் அவசியமாகின்றது. இதில் புது உறவுகளை தேடுவதோ, நாடுவதோ தான் ஆபத்தில் கொண்டு போய் விடும். இந்த உறவையும் திறந்த புத்தகமாக பேணும் போது நம் பாதுகாப்பை சொந்தமாக்கி கொள்கின்றோம். முகநூல் போன்ற தளங்களால் கொலை செய்யப்பட்ட பெண்கள் செய்திகள் வரை எட்டுகின்றது.  இங்கு எல்லாம் தொழிநுட்பத்தை குறை சாராமல் பயண்படுத்தும் விதத்தையே நோக்க வேண்டும். 

ஆனால் பெண்கள் குழந்தைகள் இதை பயண்படுத்துவதை முற்றிலும் தடைசெய்யும் படியாக   வெகுசன ஊடகம் வழியாகவும் கருத்து பரவப்படுகின்றது.  இன்றைய வாழ்கையில் முகநூல் போன்ற தளங்கள்  கருத்து பரிமாற்றத்திற்க்கு மிகவும் பயண்படுகின்றது. அரசியல்வாதிகள் கூட இதை பயண்படுத்தவும், பயண்படுத்துபவர்களை கட்டுப்படுத்தவும் விளைவது இதன் பலன் தெரிந்ததாலே. 

படித்தவ்ர்கள் பயண்படுத்தும் இணைய தளங்களில் கூட தேவையற்ற சண்டை அதை தொடர்ந்த கெட்ட வார்த்தைகள் பயண்படுத்துதல் என ஆக்கம் கெட்டு பயண்படுத்துபவர்களும் உண்டு. ஒருவர் பேசுவது விரும்பவில்லை என்றால் தறிகெட்டு பதில் பேசுவதை விடுத்து நட்பு வட்டத்தில் இருந்து விலகுவது, விலக்குவது அல்லது  பதில் தராது மைவுனம் காத்து வீழ்த்துவதே சிறந்தது.

உள்பெட்டி கருத்து பரிமாற்றம் மூலம் தான் பலர் சிக்கல்களை சந்திக்கின்றனர். வெளியாகாத ரகசியங்கள் இல்லை அதிலும் நவீன ஊடகத்தில் எல்லா தகவல்களும் சேகரிக்கப்படுகின்றது என்ற புரிதல் இருக்கும் போது பயண்படுத்தும் ஒவ்வொரு சொல்லிலும் கவனமாக கையாள முன்வருவோம். இதில் பெண்கள் இன்னும் ஜாக்கிரதையாக தகவல்கள் அனுப்ப வேண்டியுள்ளது.  சுவரில் மிகவும் பண்பானவர்கள் அறிவாளிகள் போன்று காட்டி கொள்பவர்கள் கூட உள்பெட்டி வழியாக தகாத தகவல்கள் அனுப்பக்கூடும். உடன் நட்பு வட்டத்தை துண்டிக்காது,  பதில் கொடுத்து அவர்களை பகுந்தாய்ந்து கொண்டு இருப்பது மேலும் சிக்கலையே வரவழைக்கும்.

இதில் ஒரு சில இளைஞர்களுக்கு சில வெற்று எண்ணங்கள் உண்டு. பல மணிநேரம் இணையத்தில் செலவழிக்கும் பெண்களை தாங்கள் நினைத்த படி வளைத்து விடலாம் என்றும் வெட்டியாக கதையளப்பவர்க்ள் என்றும். இந்த தருணங்களில் பெண்கள் இம்மாதிரியான நபர்களை புரக்கணிப்பதே சிறந்த வழியாகும். இவர்களை விட ஆபத்தானவர்கள் முதிர்வயது சில ஆண்கள்!ரொம்ப நல்லவர்களாக பொறுப்பானவர்களாக நமது பாதுகாப்பில் அக்கறையுள்ளவர்களாக  பேசி மடக்க பார்ப்பார்கள். கவிஞர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்... கவிதைகள் வடிவில் செய்திகள் வரும். நாம் புரிந்து கொள்ளவும் இயலாது புரியாது இருக்கவும் இயலாது. நாம் பொருள் கேட்டாலும் நம் மனநிலை புரிந்து மாற்றி பொருள் சொல்வார்கள். நான் இப்படி தான் நினைத்து அனுப்பினேன், நான் உங்களை அப்படி பாவிக்கவில்லை என பல சமாதானங்கள் வந்து சேரும். இவைகளில் மாட்டாது தப்பிப்பது பெண்களிம் புத்தியை பொறுத்தது.

பல பதவியிலுள்ள, படித்த அறிவுள்ள பெண்கள் என நினைப்பவர்கள் கூட மாட்டிகொள்கின்றனர். துவக்கத்தில் விளையாட்டாக எடுத்து அது பின்பு பரிவாக மாறி தங்கள் வாழ்கையை அழித்துகொள்ளும் மட்டும் காத்திருக்கல் ஆகாது. நம்பக தன்மை என்பது இணையத்தில் எதிர்பார்ப்பது மிகவும் அரிதாகும். வார்த்தை ஜாலங்களால் பெண்களை மடக்கும் நபர்கள் இணையத்தில் உண்டு. இவர்களை கயவர்கள், நம்பிக்கை துரோகிகள் என அழைத்து நாம் கோபப்படுவதை விட அவதானமாக கண்டு விலகியிருப்பதே சிறந்தது. 

முகநூல் போன்றவற்றின் மூலம் நட்பாகிறவர்கள் எல்லோரையும் தெரிந்திருக்க கூடும் என்பது இயலாத விடயம். ஆனால் இவர்களை நம் நட்பு வட்டத்தில் சேர்க்க தகுந்த நபரா என்று அவர்கள் நண்பர்கள், அவர்கள் இடும் புகைப்படங்கள் மற்றும் தொகுப்பால் நாம் அவர்களை கண்டு உணர இயலும்; . திருமணம் ஆகாத பெண்கள் என்றால் பெற்றோர் அறிவோடும் திருமணம் ஆனவர்கள் என்றால் கணவர் புரிதலோடும் சமூகத்தளங்களில் பங்கு கொண்டால் தங்கள் பாதுகாப்புக்கும் வாழ்கைக்கும் நலம்.

ஆண்கள் தான் பெண்கள் பாதுகாப்புக்கு களங்கம் விளைவிப்பவர்கள் என்றில்லை. சில பெண்களும் உண்டு. ஒரு நபருக்கு அறியாது அவர் நிலத்தகவல்களை தன் சுவரில் பதிந்து கேலி செய்வது, விவாதத்திற்க்கு உள்ளாக்குவது, அவர்கள் பெயரை கெடுக்க முற்படுவது என எல்லா வில்லத்தனங்கள் செய்பவர்களில் பெண்களும் உண்டு. ஒரே வழி நட்பில் இருந்து விலகுவது, அவர்களை நம் பக்கம் நெருங்காது தடுத்து நிறுத்துவது ஒன்று தான். இதனால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபெறுவது மட்டுமல்ல தெளிவான சிந்தனையுடம் நாம் நம் வேலையை நோக்கலாம்.

என் அனுபவ கதையுடன் பதிவை முடிக்கின்றேன். நெல்லை அக்கா எருவர் மிகவும் நட்பாக பழகி வந்தார். அழைப்பது கூட அம்மா என்றே இருக்கும். ஒரு முறை திடீர் என எனக்கு ஒரு தகவல் அனுப்பியிருந்தார், உங்களை நல்லவர் என எண்ணியிருந்தேன் உங்களுக்கு இன்னார் இன்னாருடன் நட்பு. அவர்கள் மோசமானவர்கள் ஆகையால் உங்களை நட்பில் இருந்து விலக்குகின்றேன் என்று. இதுவும் நல்லதே என்று இருந்த போது சில நாட்கள் கடந்த பின் உங்களை பற்றி புரிந்து கொண்டேன்,பழையதை மறக்கவும் உங்களிடம் நட்பு கரம் நீட்டவும் வந்துள்ளேன் என்றார். நானும் ஏற்று கொண்டேன். இதே நபர் நான் ஒரு புத்தகம் வெளியிட உள்ளேன் என தெரிந்து கொண்டு நான் எழுதும் கதைகளை அவர் சுவரில் இட்டு விவாதிக்க ஆரம்பித்தார், பின்பு நான் பகிரும் சில சம்பவங்களை கூட கேலியாக குறிப்பிட்டார் . நான் இல்லாத இடங்களில் என் பெயரை பயண்படுத்துவதை அறிந்ததும் தடை செய்து(block) வெளிவந்தேன். 


இன்னும் சிலர் உண்டு நாம் பகிரும் படங்கள், மற்றும் எழுத்துக்களை வைத்து நம்மை பற்றி ஒரு கணக்கு வைத்து கொண்டு கதைக்க முன் வருவார்கள். இவர்கள் அனைவரையும் தயாதாட்சண்ணியம் இன்றி விரட்டி அல்லது வெட்டி விடுவது மட்டுமே சுதந்திரமாக மனச்சுமை இல்லாது இணையத்தில் சுற்றி  வர நமக்கு உதவியாக இருக்கும். பெண்களுக்கு சமூக ஆளுமையில் முக்கிய பங்கு உள்ளது போலவே இணையத்திலும் தங்கள் ஆற்றலை உணர்ந்து இணையத்தில் ஆளூமை செலுத்துவோம். மாயயில் சிக்காமலும் அடிமையாக வாழாது இருந்தால் எங்கிருந்தாலும் சொர்கமே! 

  

5 Dec 2012

இணைய உலகத்தில் நான்!!


இன்றும் கணினி பயண்படுத்தாத, பயண்படுத்த தயங்கும்,  இணையம் பக்கம் வர பயப்படும், அனுமதி மறுக்கப்படும்  பெண்கள்; குறிப்பாக மிகவும் படித்த பெண்கள் உண்டு என அறிந்த போது ஆச்சரியவும் கொஞ்சம் அனுதாபவும்  இருந்தது.  கணினியுடனான என்னுடைய அனுபவ அலைகளும் மனதில் கடந்து சென்றதை பகிர விரும்புகின்றேன்.

 கடந்த 4 வருடமாக என் நேரத்தை  இணைய உலகத்தில் சுற்றி வருவதில் கொஞ்சம் அதிகமாகவே செலவிடுகின்றேன். 10 வது வகுப்பு முடிந்து தட்டச்சு வகுப்புக்கு போய் கொண்டிருந்த எல்லா மாணவர்களும் கம்யூட்டர் வகுப்புக்கு மாறி போகத் துவங்கிய காலம் நானும் கம்யூட்டர் வகுப்பில் சேர்ந்தேன். 1999 துவக்கத்தில் எங்கள் பகுதியில் கணினி வகுப்பில்  MS –Dos மட்டுமே   கற்று கொள்ள முடிந்தது. தலையும் காலும் புரியாத மொழியாக இருந்தது.  என்றிருந்தாலும் வாத்தியார் சொல்லியதை நோட்டில் எழுதி மனப்பாடம் செய்து தேர்வு எழுதிய நாட்கள் அது.  கம்யூட்டர் தொட்டு படிக்க அனுமதி கிடையாது.   தூரத்தில் இருக்கும் கணினியை நோக்கி அதன் சிறப்பு, துரிதமான   பணி எல்லாம் கற்று தந்தனர்.  அன்றைய நாட்களில் கம்யூட்டரின் விலை 60 ஆயிரத்திற்க்கு மேல் இருந்தது. இதை பராமரிக்கவும் செலவு செய்தனர்;  குளிர்ரூட்டப்பட்ட அறையில் செருப்பு அணியாது மட்டுமே அதன் அருகின் செல்ல அனுமதித்தனர்.

கல்லூரி படிப்பு நேரம் “கோபாள்” என்ற வணிகம் சார்ந்த ஒரு கம்யூட்டர் வகுப்பு இருந்தது.   கம்யூட்டர் பார்க்காமலே அந்த கணினி பாடம் படித்து எழுதி தேற்வானோம்.   கல்லூரியில் இருந்தது  4 கம்யூட்டர். அதையும் ஒரு கண்ணாடி அறைக்குள் வைத்துருந்தனர்.   பராமரிக்கும் மேலாளருக்கு மட்டும் தான் அதை தொடவோ கிட்ட இருந்து பார்க்கவோ அனுமதி இருந்தது.  
திருமணம் முடிந்த பின்பு  ஸ்வெட்டர் பின்னல்  படிக்கும் நேரத்தை குறைத்து கொண்டு  கம்யூட்டர் கற்க சென்று வந்தேன்.   அப்போது எங்கள் குடியிருப்பு  டவுணில் இருந்து 7 கி.மீ தள்ளி ஒரு வனப்பகுதியில் இருந்தாலும்,   கம்யூட்டர் கொண்ட ஆற்வ மிகுதியால் தினம் கூட்ட நெரிசலில் பயணித்து கற்று தேற்ந்தேன்.    ஒரு கோப்பை தந்து தட்டச்சு செய்து திரையில் கண்ட போது மிகவும்  மகிழ்ச்சியாக இருந்தது.

என்னவர் தனது வேலை நிமித்தமாக கம்யூட்டருடன் அசுர வேகத்தில் பயணத்து கொண்டிருதார்.    ஆனால் எனக்கு 2004 கடைசியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது தான்  கம்யூட்டருடன் மறுபடியும்    நட்பு உருவாக  ஆரம்பித்தது.  முதலில் வணிக கடிதம், பின்பு தரவுகள் பராமரிப்பதற்கு என excel லிலும் வேலை செய்ய வேண்டியிருந்தது. கம்யூட்டர் கல்வி கூடத்தில் கற்றதை விட பல மடங்கு அதிகமாக வேலை வழியாக கற்று கொண்டேன்.   அப்போது தான் எங்கள் நிறுவனத்தில் டாடா கம்பனியின் பிரத்தியேக மென் பொருள் கொண்ட பாக்கேஜ் பயண்படுத்தி தரவுகள் சேகரிப்பது மட்டுமல்ல தேவையான தகவல்களை  நொடி பொழுதில் எடுக்கவும் பயிற்சி தரப்பட்டது.   எங்கள் வீட்டில்  கம்யூட்டர் வாங்கப்பட்ட போது என்னவர் அலுவலக பணி, எங்கள் குழந்தைகள் விளையாட்டுக்கு என கம்யூட்டரை பங்கிட்ட போது எனக்கு கம்யூட்டர் பல பொழுதும் கிடைக்காமலே ஆகியது.  அப்பா, பிள்ளைகள் போட்டி போட்டு ஒன்றாக இருந்து கம்யூட்டர் விளையாட்டு விளையாடிய போது அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது என பிள்ளைகள் கேலி செய்வார்கள்.   அவர்கள் வீட்டில் இல்லாத போது தான் நான் கம்யூட்டரை தொடக்கூட முடிந்தது.   

இணைய பயண்பாடு பெண்களுக்கு நல்லதா தீயதா?...............அடுத்த பதிவில்!

28 Nov 2012

என் முதல் புத்தகத்தை பற்றிய சுபி அக்காவின் கருத்துரை!




நான் தேடும் வெளிச்சங்கள்.'ஜோ உங்கள்  எழுத்து மனசை தொடுகிறது. உங்கள் முதல் புத்தகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு லாவகமாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் இலகுத் தமிழ் நடையும் கதைகள் சொல்லும் விதமும் பக்கத்தில் இருந்து கதை சொல்லுவது போன்ற உணர்வைத் தருகிறது.உங்களை வாழ்வில் உயர்த்திய வழிகாட்டியவர்களுக்கு நீங்கள் நன்றி சொன்ன விதம் அருமை. 





ஒவ்வொரு கதையும் வாழ்க்கையின் அனுபவ பாடங்கள். நோகாமல் நொங்கு உண்டது போல வாசிப்பவர்களுக்கு அனுபவங்களைத் தாமே பெற்றது போன்ற உணர்வைத் தருகிறது. 'ஒற்றை மரம்' மனதை ஆழ ஊடுருவி அந்தச் சிறுவனை தழுவி சோகத்தைப் போக்கவேண்டும் என்ற தவிப்பையும்,'என் தோட்டம் சொல்லும் கதை' நகைச் சுவையாக மனித மனங்களை உணரவும், 'என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம்' நாம் வாழ்வில் சந்திக்கும் சில மனிதர்களின் மன ஓட்டத்தையும் அதன் பயங்கர விளைவையும் உணர்த்துகின்றன.

ப்படி எல்லாக் கதைகளும் ஒரு நல்ல கருத்தை மனதில் பதியவைக்கிறது. நீங்கள் தேடிய வெளிச்சங்கள் அனுபவமாக சிந்திக்க வைக்கிறது. ஜோ உங்களை உறவாக பெற்றதில் பெருமைப் படுகிறேன் முகநூலுக்கு நன்றியும் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் இன்னும் உயர எனது ஆசிகளும் வாழ்த்துகளும். வழமோடு வாழ்க தங்கையே..

அக்காவுடனான நட்பில் துவக்கம் என் பதிவுகளுக்கு அக்கா தரும் பின்னூட்டங்களில் இருந்து துவங்கியதே. படைப்பாளியை தாங்கும் படைபாளியாக அக்கா இருந்து வருகின்றார் என்பதே உண்மை. ஏனோ தானோ என்றில்லாது  வாசித்து  ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்வதே அக்காவின் வழமை. சில வேளை ஒப்புரவு ஆகாத பதிவுக்கு தன் கருத்தையே பகிர்ந்து செல்லவும் தயங்குவது இல்லை. அதே போன்று அக்காவின் பூந்தோட்ட பதிவுகளுடன் எனக்கு தீராத மோகமே இருந்தது. பூக்களில் அரசியான ரோசாபூக்கள் நட்டு வளர்ப்பதில் அக்கா அரசியாகவே திகழ்ந்தார். இந்த பதிவுலகு உறவால் உருவான உறவு பல வருட உறவு போலவே மலர்ந்து மணம் வீசியது எங்கள் வாழ்கையில்.

எங்கள் இருவருக்கும் நேரில் சந்திக்க வேண்டும் என ஆற்வம் இருந்தாலும் எவ்வகையில் சாத்தியம் ஆகும் என சந்தேகங்கள் இருந்ததை ஊண்மையாக்கியவர் சுபி அக்காள். சுபி அக்காவும் தன் அன்பு கணவர் நரேன் அண்ணாவுடன் நெல்லை வர நாங்களும் குடும்பத்துடன் வரவேற்று நெல்லை சுற்றுலா தலங்களை சுற்றி வந்த நாட்கள் வாழ்வில் மறக்க இயலாத நாட்கள். பிரியும் நேரம் மிகவும்  கனத்த மனதுடன் கண்ணில் முட்டி வந்த கண்ணீர் துளிகளுடன் விடைபெறும் கணங்களாக இருந்தாலும் உடன் பிறந்த சகோதரியை கண்டு கொண்ட ஒரு மகிழ்வில் பிரியா விடைபெற்றோம். அடுத்த விடுமுறையில் சந்திக்கும் நாட்களை எண்ணி காத்திருக்கின்றோம். எங்கள் அன்பை புரிந்து சந்திக்க ஒரு வாய்ப்பு உருவாக்கி தந்த நரேன் அண்ணாவுக்கும் என் கணவருக்கும் எங்கள் நன்றியை செலுத்த கடமைப்பட்டுள்ளேன். 

என் புத்தக வேலையில், ஆரம்பம் தொட்டு கடைசி வரையிலும் என்னுடன் இருந்த  அக்காவின் பங்கு அளவிட இயலாதது.  இந்த காலகட்டத்தில் பல சோதனை- வேதனையில் கடந்து செல்லப்பட்டேன்.  தன் வார்த்தைகளால் தேற்றினார் வலுவூட்டினார். புத்தகம் பலர் கையில் சென்று சேர வேண்டும் என முயற்சி எடுத்து தன்னுடைய நண்பர்கள் கையில் கிடைக்க செய்துள்ளார்; தான் வசிக்கும் லண்டனுக்கும் கொண்டு சென்றுள்ளார்.    தன் நண்பர்கள் ஊடாக  நெல்லையில் அறிமுகம் ஆக அக்கா சில தடங்களையும் இட்டு சென்றுள்ளார். 


அக்காவிடம் இருந்து  புத்தகம் பற்றிய கருத்து பெருவதில் பெருமிதம் கொள்கின்றேன் மகிழ்கின்றேன். அக்கா அமைதியில் அரசியாக,  எளிமையின் நிறைகுடமாக பல அறிய குணநலன்களை கற்பித்து சென்றுள்ளார். தன் தனித்துவமான ஆளுமையினால் அன்பினால் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த அக்காவின் அன்பு தங்கையாக  பாக்கியம் பெற்றதில்  நான் உண்மையிலே நெகிழ்கின்றேன். ஆயுசின் கடைசி மட்டும் அக்காவின் அன்பில் அன்பு தங்கையாக வாழ பிரார்த்தித்து கொண்டு அன்புடன் உங்கள் ஜோஸ் .......அக்கா!



27 Nov 2012

சில்லறை வர்த்தகம்- அந்நிய முதலீடு


இன்று பரவலாக விவாதிக்கும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தேவையா இல்லையா என்பதை பற்றி அனைவரும் மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம் ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் உண்டு எனிலும் நம் சமூக சூழலை கணக்கிலெடுக்காது அரசு மேற்கொள்ளும் இந்நிலை மக்கள் நலம் சார்ந்தது அல்ல!  ஒரு வீட்டில் 5 பிள்ளை இருந்தது என்றால் ஒன்றோ இரண்டோ அரசு வேலைக்கு சென்றிருபார்கள்,  சிலர் தங்களுக்கு இருக்கும் விவசாயத்தை கவனித்திருப்பார்கள், இன்னும் சிலரோ தங்கள் கையிலிருக்கும் பணத்தை முதல் முடக்கி வியாபாரம் ஆரம்பிப்பார்கள் அவர்களே சில்லரை  வர்த்தகத்தில் ஏற்பட்டிருந்த முதல் தலைமுறையினர். ஒரு முதல் முடக்கும் இல்லாத சூழலிலும் தங்கள் உழைப்பால் உயர்ந்தவர்களும் பலர் உண்டு. இன்றும் எல்லோருக்கும் அரசு வேலை கொடுக்க தகுதி இல்லாத நிலையில் சவாலை சந்தித்து சுயதொழில் செய்பவர்களை அரசு முடக்குவது சமூக குற்றமாகும்.

ஒரு பொருளை கொள்முதல் செய்து அதை தன் வியாபார நிலையம் வரை சேர்க்கும் மட்டும் இடத்தரகர்கள், சுமடு எடுப்பவர்கள், கடை வேலையாள் என நாலு ஐந்து பேருக்காவது வாழ்வாதாரம் கிடைக்கின்றது. இந்தியா போன்ற ஜனப்பெருக்கம் நிறைந்த நாட்டில், 4 கோடிக்கு மேல் மக்களை  குட்டி முதலாளிகளாக்கும் சில்லறை வர்த்தகத்தின்  நிலை  அவசியம் ஆகின்றது.  எல்லோரும் கூலிக்கு மாறடிக்காது, வேலை நேரம் மட்டும் வேலை செய்து நிம்மதியாக இருக்கும் மனநிலையில் இருந்து விடுபட்டு  ராப்பகல் உழைக்கும் ஒரு வர்க்கம் நிச்சயமாக தேவையும் அவசியவுமே.  இன்றைய கல்வி- தொழில் நுட்ப புரட்சியின் மாற்றத்தால் பெரும் கல்வியறிவு பெற்ற இளைஞர்  வெறும் கூலி ஆட்களாக மாறி விட்ட சூழலில் சுய உழைப்பில் நம்பி இருக்கும் சமூகத்தை அழிப்பது வழியாக சுமூகமான சமூக சுழற்ச்சி பாதிக்கப்பட இருக்கின்றது.

இன்னும் சிலர் அரசு அதிகாரம், பதவி என்ற மாயை கொண்டு சுரண்டி பிழைக்கும் நிலையில் இருக்கும் போது சில்லறை வர்த்தகர்கள் உழைப்பு, போராட்டம் மத்தியில்  தன்னம்பிக்கையை மட்டும் நம்பி சொந்த தொழில் புரிகின்றனர்.  இவர்கள் நல்ல அரசியல் திட்டங்களால் உற்சாகப்படுத்தாது, நெறிப்படுத்தாது  அந்நிய முதலீட்டை புகுத்தி ஒட்டு மொத்த சமூகத்தயும் சோம்பேரியாகவும் அடிமையாகவும் மாற்றுவது பெரும் மோசமான சமூக விளைவையே ஏற்படுத்த உள்ளது. 
விலைக்கூடுதல், மாயம் கலந்த பொருட்கள் என அங்கலாயிக்கும் நபர்கள் அரசின் சட்ட திட்டங்களையும். வர்த்தகர்கள்  நடத்தப்படும் நிலையும் உற்று நோக்க வேண்டும். இன்று ஒரு அரசியல் கட்சிக்கு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் வர்த்த்கரிடமே பணம் பட்டு வாடா செய்யப்படுகின்றது. இவர்கள் வாடிக்கையாளர்களிடம் ஈடு கட்டவே முயல்வார்கள். மேலும் ஒரு கடைக்கான சாற்றிதழ் பெற குறைந்தது 500 ரூபாயில் இருந்து 5000 வரை கட்டாயமாக அரசு அதிகாரிகளால் வசூலிக்கப்படுகின்றனர். 

அந்நிய முதலீடு என்ற அசுரன் பிடியில் சில்லறை வர்த்தகம் மாட்டி கொண்டால் அதன் நிலை மிகவும் மோசமாக தான் இருக்கும். இதனால் சாதாரண மக்களும் பாதிக்கப்படுவார்கள். உழவர் சந்தைக்கு பொருட்கள் வருவது நேராக அன்னிய குடோனுக்கு சென்று விடும் நில வரவுள்ளது. இந்திய ஆப்பிளுக்கு பதில் மெழுகு ஆப்பிள் தின்ன நிர்பந்திக்கப்படுவது போல் அத்தியாவிச பொருட்கள் நிலை சென்று விடும். குடி தண்ணீர் லிட்டறுக்கு 25 ரூபாய்க்கு வாங்கி குடிக்க வேண்டி வந்த சாதாரண மக்கள் நிலையும் சிந்திக்க வேண்டியுள்ளது.  பல்பொருள் அங்காடி வந்ததால் விலையோ, தரமோ மேற்படாது நடைபெறும் வியாபாரம் போல்;  நியாயவிலை அங்காடி பொருட்கள் உள்நாட்டு மக்கள் கைகளுக்கு கிடைக்காது அந்நிய குளிரூட்டும் கிடங்குக்கு போய் விடும் காலவும் வரவுள்ளதை மறுக்க இயலாது.

அரசின் மோசமாக கொள்கையால் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டி விட்டது போல் சில்லறை வர்த்தகர்களும் அபாயநிலைக்கு தள்ளப்படுவதை  இச்சமூகம் காண வேண்டுமா?  மக்களுக்கு நல்ல பொருட்கள் கிடைக்க அந்நிய முதலீட்டை உள்ளே புகுத்தும் அரசு ஏன் தற்கால ஆங்கில பள்ளி படிப்பை வளப்படுத்த வெளிநாட்டு ஆசிரியர்களை கொண்டு வரக்கூடாது, ஏன் வெளிநாட்டு மந்திரிகளை இந்தியாவில் இறக்குமதி செய்து அரசியலை வளப்படுத்தக்கூடாது?

அந்நிய முதலீட்டை புகுத்த அனுமதிப்பது நம் சகோதர்களுக்கு நாம் செய்யும் துரோகம். ஏழ்மை வறுமை பெருகும் போது தற்கொலை மட்டுமல்ல கொலை கொள்ளையும் பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை. 

26 Nov 2012

சொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி?

 கடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு கதைகள், நிகழ்வுகளா என ஆச்சரியம் கொள்ள செய்தது. சில சம்பவங்கள் கண்ட போது கண் ஈரமாகின ஆனால் பல நிகழ்வுகள் சிரிப்பை தான் வர வைத்தது.  தமிழக சீரியல் கதாநாயகிகளை விட கண்ணீர் சிந்தும், ஆக்கரோஷமாக பேசும் பெண்கள், கெட்ட வார்த்தையை காமரா முன் கூசாது பேசும் ஆண்கள், மயக்கம் போட்டு விழும் முதியவர்கள், திடீர் அடி மிதி , நிகழ்ச்சி நடத்துவர்கள் ஓடுவது ...அழுவது... என நிகழ்ச்சி போய் கொண்டிருக்கின்றது.

ஊடகத்தின் பங்கு என்ன; மக்களுக்கு செய்தி சேர்ப்பது, விழிப்படைய செய்வது, அறிவை புகட்டுவது.  ஆனால்   " சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி வழியாக விரட்டுகின்றது, மிரட்டுகின்றது, குற்ற விசாரணை செய்கின்றது, சமூகத்திற்க்கு நீதி உரைப்பதாக நினைத்து இவர்களை சமூகத்தை விட்டு புரக்கணியுங்கள், ஒதுக்குங்கள் என கட்டளைகளையும் சேர்த்து பிறப்பிக்கின்றது.

நான் கண்ட கதைகள் ஒரு புத்தி சுவீதனம் அற்ற மனைவியை கணவர் புரக்கணிப்பது மட்டுமல்லாது அவர் பெற்ற குழந்தைகளே கேலி செய்யும் சமூக சூழல் கண்டு அதிர்ந்தேன். மீடியா வழியாக மனைவியின் பெற்றவரிடம் பணம் கேட்கும் கணவன், எந்த காரணம் கொண்டாலும்  துணை போகும் ஊடகம், சகோதரன் வீட்டில் வைத்து இறைச்சி சாப்பிடுகின்றான் என குற்றம் சாட்ட அதை நிர்மலா அமோதிக்க ஆசாரமான் குடும்பத்தில் இப்படி செய்யலாமா என கேள்வி கேட்கும் நிர்மலா தனி மனித விருப்பங்களில் மூக்கை நுழைக்கும் பெண்ணை ஏன் சாடவில்லை? சில வரட்டு உபதேசங்கள் கொடுக்க என பஞ்சாயத்து முன்னேறுகின்றது!

இன்னும் கவனிக்க வேண்டிய  விடயம் கணவர்-மனைவி சண்டைகள் ஊடக வியாபரத்திற்காக பொது வேதியில் அல்லோலப்படுவது தான்.  மனைவி உள்ள போது கள்ளக்காதலியை கைபிடித்தவனை  சிறையில் தள்ளாமல் மிரட்டி பணியவைக்கின்றனர், தொலைகாட்சி அலுவலகத்திலே சண்டை நடக்கின்றது, கெட்ட வார்த்தையால் மாறிமாறி பேசி கொள்கின்றனர் அடித்து கொள்கின்றனர். தமிழக சமூக அவலமா அல்லது பண்பாட்டை உலகம் அறிய வெளிச்சம் இடுகின்றோமா?

காதலில் விழுந்து கெட்ட  சிறு பெண்கள் கண்ணீர் கதைகள்! சீரியல் நடிகைகள் கூட கிளீசரின் போட்டு இந்த அளவு கண்ணீர் சிந்தியிருப்பார்களா என்று சந்தேகம்.  இவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாத அபலைகளும் அல்ல. பெற்றவர் அறியாது மற்றொரு ஆணவனுடன் அறை எடுத்து தங்குபவள் நிலை கொடியது தான் ஆனால் நிர்மலாவும் சேர்ந்து உருகின்றார். கள்ளக்காதலியை வைத்து கொண்டே ஏமாற்றி திருமணம் முடிப்பவனிடம் நிர்மலா பெரியசாமி நெஞ்சு வலியோடு ஏன் கதைக்கின்றார் என்பது விளங்கவில்லை.  இதய நோயால் விழுந்த பெண்ணை ஆம்புலன்ஸில் எடுத்து செல்லும் காட்சியும் தேவையா அல்லது நிகழ்ச்சி வெளியிடுபவர்கள் தணிக்கை செய்யாது ஏன் ஒளிபரப்புகின்றனர்...இப்படியாக நாடக தன்மையுடன் உண்மை சம்பவங்கள் காட்டப்படுகின்றதுறது. அவல மகனின் கதை!

நீதிபதி நிர்மலா பெரியசாமி.

உங்கள் கண்ணை கண்டால் நீங்கள் பொய் பேசுவது தெரிகிறது, பாவம் அந்த பெண் அழுகின்றார், ஆண்மை இல்லையாம் உங்களுக்கு!, இது  போன்ற தீர்ப்புகள் இவரால் எப்படி உடன் கொடுக்க  இயல்கின்றது?   என் உள் உணர்வு சொல்கின்றது  அதனால் தீர்ப்பிடுகின்றேன் என சொல்லி கொண்டு வெளிவிடும் வார்த்தைகள் இது மனோத்துவ ரீதியாக  பாதிக்கப்படும் குற்றம் சாட்டப்படும் நபரை பாதிக்க தகுந்த வண்ணம் இந்தளவு லாவகமாக கையாளலாமா? மேலும் கிராம மக்கள் என்றால் அவருக்கு தவறான புரிதலே உள்ளது. கிராம மக்கள் ஒன்றும் தெரியாத பாமரர்கள் என்றும் நகர்புறங்களில் வசிப்பவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் எனும் நினைக்கும் நிர்மலாவை நினைத்து தான் ஆச்சரியமாக உள்ளது. கேரளாவில் இதே போன்று அமிர்தா தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்துகின்றது,  ஒரு சட்ட வல்லுனர், சமூக ஆவலர், இப்பிரச்சனை கையாளும் தனித்துவ தகுதி வாய்ந்த நபர் என 4 பேர் கொண்ட குழு தான் அந்த அந்த பிரச்ச்னைக்கு தீர்வு குறிப்பிடும்.  இங்கு சர்வரோக நிவாரணியாக நிர்மலா பெரியசாமி மட்டுமே  உள்ளார்.

கட்டபஞ்சாயத்து -நிர்மலா பெரியசாமி!
சில கயவர்களை, கயவர்களாக அவர் நினைப்பவர்களை மிரட்டி பணியவும் வைக்கின்றார். Z தமிழ் தொலைகாட்சி என்ற ஊடகத்தை லத்தியாக சுழற்றுகின்றார்.  மீடியா செய்ய வேண்டிய பணியை செய்கின்றாரா என்றால் தவறவே விடுகின்றார். சட்டபூர்வமான அறம் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை இல்லாது பரபரப்பு நிகழ்வுகளுடன் கண்ணீர், சண்டையுடம் தமிழ் மசாலா படம் போன்று நடத்தி செல்கின்றார் என்ற உண்மையை தெரிந்து கொள்வாரா. இரண்டு மனைவி


தனி நபர் உரிமை

தனி நபர் உரிமை மீறப்படுகின்றது.  ஊடகத்தில் தங்கள் முகம் தெரிய விரும்பாத நபர்களையும் கட்டாயப்படுத்தி கொண்டு வருகின்றார். அங்குவைத்து மிரட்டப்படுகின்றனர்.  சில சம்பவங்களில் காவல் நிலையங்கள் என்பதில் போல் பிரச்சனையை முதலில் கொண்டு வருபவர்களுக்கு சார்பாக தீர்ப்பு கிடைக்கின்றது. மேலும் தனிப்பட்ட வாழ்கையை செய்தியாளர்களால் சேகரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.  செய்தியாளர்கள் செய்யும் வேலை ஊடக தற்மம் சார்ந்ததா என்றால் இல்லை என்பதை உறக்க கூற இயலும்.  நிர்மலா அவர்களும் தன்னுடைய தனிப்பட்ட கருத்தை திணிக்க பார்க்கின்றார். குணம் சரியில்லை என ஒரு நபர் சொல்வதும் கள்ள தொடர்பா என கேட்பது; நிர்மலா அவர்களில் ஆளுமை குண நலன் மேல் அருவருப்பை தருகின்றது. மேலும் நிகழ்ச்சியில் வரும் பெரும் வாரியான மனிதர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிகரிக்கப்படுவதும் அவர்களை பற்றி திறந்த விளக்கம் கொடுப்பதும் தகுமா எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது. தெருவில் கூடி கதையளக்கும் போல் மீடியா வழியாக சம்பவங்கள் ஆராய்வது தவிற்க்க வேண்டியது.

நிகழ்ச்சியின் தேவை
 இந்நிகழ்ச்சி முற்றிலும் தவிற்க்க வேண்டியது என சொல்ல இயலாது. ஒரு வகையிலும் தீர்வு கிடைக்காத பெண்கள் மீடியா துணையை நாடுகின்றனர். ஆனால் நிகழ்ச்சி நடத்துவர்கள்  சில நிகழ்ச்சிகளை பொது நலம், மனித நேயம் சார்ந்து புரக்கணித்து ஒளிபரப்புவதை தவிற்க்க வேண்டும்.   சட்ட திட்டங்களை புரியவைக்க வேண்டும். பல நிகழ்ச்சிகள் கள்ள தொடர்பு காதல் சார்ந்த பிரச்ச்னை என்பதால் நிகழ்ச்சி நடத்தும் நிர்மலா வெள்ளைச்சாமி ஹிந்து கிருஸ்தவ, இஸ்லாமிய திருமண சட்டங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நிகழ்ச்சியில் சாதாரண நபர்கள் போல் உணர்ச்சி வசப்பட்டு கத்துவது அழுவது, நிகழ்ச்சிக்கு இடையில் அடி தடி சண்டை நடப்பை தடுக்க அல்லது அதை ஒளிபரப்புவதை  தவிற்க வேண்டும்.

17 Nov 2012

சபரிமலை ஐய்யப்பன் கோயில் தாலாட்டு பாடல் வரலாறாக மாறிய போது!

பக்தி பாடல்கள் கேட்பது பக்தி பரவசத்தில் நம்மை ஆழ்த்துவது மட்டுமல்ல மனதிற்கு எப்போதும் அமைதி தருவது.  சில பாடல்கள் அதிலும்  சாகவரம் பெற்று என்றும் கேட்க கேட்க இனிமையாக இருக்கும். அவ்வகையில் நான் பிறந்த தேசத்தில் இருந்து உருவான ஒரு பாடலை பற்றி கதைக்க இன்று முற்பட்டுள்ளேன். பாட்டின் ஓரிரு வரிகள் தவிர பொருள் எனக்கு விளங்காத பாடலாக இருந்தும்  இதயத்தை, மனதை ஊடுருவி செல்லும் ராகத்துடனான ஒரு பக்தி தாலாட்டு பாடல் இது.  சம்ஸ்கிருத மொழியில், மத்தியமாவதி ராகத்திலுள்ள இப்பாடலின் உருவாக்கம் மிகவும் சுவாரசியமானது; மனதை நெருடுவது.  

தலைமை குருவான ஈஸ்வரன் நம்பூதிரியுடன் 1950 ஆம் ஆண்டுல் கேரளா ஆலப்புழாவை சேர்ந்த  வி. ஆர் கோபால மேனோன் என்ற ஒரு பக்தன் 1000 வருடம் பழக்கமுள்ள சபரிமலை ஆலயத்திற்கு   வந்து சென்றுள்ளார்.  இது கொடூர வனமாக திகழும் மேற்கு தொடற்சி மலையில் உட்பகுதியிலுள்ள சாஸ்தா கோயில் ஆகும். இன்று 4 மிலியன் ஜனக்கள் வந்து செல்வதாக கணக்கிருந்தாலும் அன்றைய தினம் இந்த பகுதிக்கு வந்து திரும்பி செல்வது பெரும் சவாலாகும். இன்று போல் பாதைகள் அற்ற மலைப்பாதையில் கல் -முள் நிறைந்த வழியே வனவிலங்கின் ஆபத்தின் மத்தியில் பயணம் செய்து  சென்று வந்துள்ளனர் என்பதே சிறப்பு. இந்த கோயிலில் விசேஷமாக நடக்கும் பூஜை நேரம் நவம்பர் துவங்கி ஜனுவரி வரை கடினமான குளிர் நேரமாகும். கோயில் நடை அடைக்கும் முன் தங்கள் தெய்வத்தை பாடி தூங்க வைத்ததும் முதன்மை குரு விளக்கு எல்லாம் அணைத்து நடை அடைத்து செல்வதே வழக்கமாக இருந்தது.  முதன்மை குருவுடன் வரும் கோபால மேனேன் இத்தாலாட்டு பாட்டை மனதுருகி பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.  பூஜை முடிந்து கோயில் வாசலிலே தூங்குவதையே வழக்கமாக கொண்டிருந்தவரை  காட்டு விலங்குகளும் துன்புறுத்தாது விலகி சென்றுள்ளது.  இவரை 'சபரிமலை குடியிருப்புகாரன்' என்றே உள்ளூர் மக்கள் அழைத்து வந்துள்ளனர்.



இப்படியாக சென்ற இவருடைய வாழ்வில் இடியாக வந்தது கோயில் அறநிலை- தேவசம் குழு!  இந்த கோயில் நிறுவனமாக உருமாறும்  வேளையில் இந்த எளிய மனிதர் கோயில் வாசலில் தூங்கக்கூடாது என கட்டளை விதித்தது.  பின்பு இவர் மனச் சோர்வால் பக்கத்திலுள்ள ஊரான வண்டிப்பெரியாரின்  தெருவில் இறந்து கிடந்துள்ளார். இத்துயர் நிகழ்வை கேள்விப்பட்ட முதன்மை குருவுக்கு இவருடைய மரணம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பாடலை கம்பன்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ஐயரால் எழுதப்பட்டு  சுவாமி விமோசந்திரால் முதன் முதலாக பாடப்பட்டுள்ளது. இவர் நினைவாகவே இவர் பாடிய பாட்டை தினம் நடை அடைக்கும் முன் பாடுவது வழக்கமாக இப்போதும் கொண்டுள்ளனர். பின்பு பலருடைய ரசனைக்கு இணங்க பல  ராகத்தில் இப்பாடல்  வெளிவந்தாலும் யேசு தாஸ் பாடிய ராகம் இப்பாடலுக்கு சாகாவரம் கொடுத்தது என்றால் மிகையாகாது. இப்படியாக உலகம் முழுதும் விரும்பி கேட்கும் இப்பாடல் ஒரு எளிய மனிதனின் இறை பக்தி துயர்மிக்க முடிவில் இருந்து  உருவாகியுள்ளது என்பது ஆச்சரியத்தை தருகின்றது. நீங்களும் பாட்டை கேட்டு விட்டு கருத்தை பகிர்ந்து செல்ல வேண்டுகின்றேன்.



ஹரிவராசனத்தின் முதல் பாடகர்கள் கல்லடைக்குறிச்சியை சேர்ந்தவர்கல் என்கின்றனர். பின்னர் சிவன் கோவிலின் கல்லடைக்குறிச்சியை சேர்ந்த   பஜனை  பக்த பாடகர்கள்- புறக்காட்டு ஆனந்தேஸ்வரம் குழு   கேரளா மாநிலம் எங்கும்  இந்தப் பாடலைப் பாடத்துவங்கியதும் இப்பாடல் பிரபலமடையத் தொடங்கியதாக  சொல்லப்படுகிறது.

பாடலின் சரியான தோற்றம் தெளிவாக இல்லை என்றபோதும் பழமையான கூற்றுகளில் ஒன்று கம்பன்குடி குளத்து ஐயர் இசையமைத்தாக  குறிப்பிடுகின்றனர் . கொன்னகத்து ஜானகி அம்மா தான்  ஐயப்பனுக்குப்  கீர்த்தனையை இயற்றியதாகக்  கூறுகின்றனர்.  தனது தந்தையான சபரிமலை மேல்சாந்தியாக (தலைமை அர்ச்சகர்) இருந்த போது அனந்தகிருஷ்ண ஐயரிடம் இப்பாடலை சமர்ப்பித்தாக  சொல்லப்படுகிறது.

சீனிவாச ஐயர் பாடலை வெளியிட்டதாக அறியப்பட்ட நிலையில், அவர் பாடலை எழுதியாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.  ஹரிவராசனம் 1920 களில் சபரிமலை கோவிலுக்கு வந்ததாகக் கூறப்பட்டாலும், பல ஆதாரங்களின்படி, 1955 ஆம் ஆண்டில் சுவாமி விமோச்சானந்தாவின் குரலில் (திருவாங்கூர் தேவசம் போர்டு படி) பிரபலமடைந்தது. வாரியம் குழப்பத்தை நீக்க ஒரு குறைதீர்ப்பாளரை நியமித்தது. பாடலின் ஆசிரியர் தெரியவில்லை என்பது தான் வாரியத்தின் நிலைப்பாடு.

ஹரிவராசனம் முதலில் 1923 ஆம் ஆண்டு எழுதப்பட்டது என்றும்  2023 ஆம் ஆண்டு இப்பாட்டின் நூற்றாண்டு விழா இந்தியா முழுவதும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தால் நடத்தப்பட்டது . 

இந்தப் பாடலை பின்னணி திரைப்பட  பாடகரான கே.ஜே. யேசுதாஸ் பாடி,  தேவராஜன் மாஸ்டர்  இசையமைத்து, 1975 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற மலையாளத் திரைப்படமான "சுவாமி அய்யப்பன்" இப்பாடல்  இடம் பெற்றது. அது  துவங்கி ​​இந்தப் பாடல் தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது.  
https://www.youtube.com/watch?v=zYXuxap3jzE




12 Nov 2012

தீபாவளி பரிசுடன் கண்டன் பூனை!

றிக்கி போன பின்பு வீட்டிற்க்கு களை இழந்து விட்டது. எங்களை வழி அனுப்புவதும் நாங்கள் வீட்டிற்க்கு வரும் போதும் எங்களை வரவேற்கும் ஒரே ஜீவன் அவன் தான். துள்ளி துள்ளி ஓடி வந்து வரவேற்பதே ஒரு தனி அழகு தான். எங்களை ஆவலுடன் காத்திருப்பவன் அவனாக தான் இருந்தான். நாங்கள் நாலுபேரையும் நன்றாக புரிந்து வைத்திருந்தான். எங்கள் இளைய மகனுடன் தான் அவனுக்கு இன்னும் நிறைய பாசம். ஒரு நாள் நாங்கள் விருந்து வீடு சென்று திரும்பிய போது எங்களை வரவேற்க றிக்கி இல்லை. நாங்கள் வீட்டிலிருக்கும் போது ஊர் சுற்றினாலும் நாங்கள் இல்லாத போது எங்கும் போக மாட்டான். ஒரு வேளை  நாய் பிடிப்பவர்கள் பிடித்து கொண்டு போய் இருப்பார்களோ என்ற சந்தேகவும் வந்தது. சிலர் சொல்லினர் 'சில மருத்துவம்' செய்து நாயை திருப்பி கொண்டு விடுவார்கள் என. ஒரு நம்பிக்கையில் வருவான் வருவான் என காத்திருந்தோம். அவனுக்கான உணவு பல நாட்கள் மிஞ்சின.  ஆனால் ஒரு மாதம்  மேலாகியும் அவன் திரும்பி வரவில்லை. நாங்கள் போகும் பாதையில் கருப்பு நிற நாயை கண்டதும் றிக்கி என்று குரல் கொடுக்க ஆரம்பித்தோம். காலை எழும் போது அவன் வாயில் கதவு பக்கம் தலையை நீட்டி பார்ப்பது தான் பல நாட்கள் நினைவாக இருந்தது.  பக்கத்திலுள்ள குடியிருப்பிலுள்ளவர்கள் 10 க்கும் மேற்பட்ட நாய்களே ஒரே நாள் கொன்றனர் என்று அறிந்ததும் இனி அவன் வருவான் என்ற நம்பிக்கை முற்றிலும் பொய்த்து போய் விட்டது.  


 பின்பு வீட்டில் அவ்வப்போது விருந்தாளியாக வருபவன் கண்டன் பூனை தான். அது காட்டுப்பூனையா வீட்டு பூனையா என்று தெரியாது ஆண் பூனை என்பதால் நாங்கள் கண்டன் பூனை என அழைத்தோம்.  ஒரு சிறு புலியின் பதிப்பான ஒரு பூனை. என்னவர் தான் கூறுவார்  6 கிலோ தேறும் இந்த பூனை என்று. கண்ணு போடாதீங்கோ என நாங்கள் கலாயித்தாலும் இரவு உணவு எடுக்கும் நேரம் அதன் வரவையும் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.  மீன் சாப்பாடு என்றால் முள்ளை தூரப் போடாதீங்க... கண்டனுக்கு வைய்யுங்கள் என கரிசனை கொள்ள ஒவ்வொருவரும் ஆரம்பித்னர்.   கண்டன் பூனையும் "பால் இருக்கா? தாறீகளா? இல்லையா? என அதிகாரமாக கேட்டு கொண்டு நிற்கும் .  பல நாட்களில்   சாப்பாடு...சாப்பாடு... என்னை யாரும் கவனிக்கவில்லையா  இனி பொறுக்க இயலாது உடன் ஏதாவது தாருங்கள் என திட்டுவது போல்  இருக்கும் அதன் கூக்குரல்.  ஆனால் என்னவர் வீட்டில் உண்டு எனில் சின்ன சத்தம் மட்டும் எழுப்பி விட்டு நாங்கள் சாப்பிட்டு முடியும் மட்டும் காத்திருக்கும். இரவு  காப்பி அல்லது சாயா குடித்த பின்பு கண்டனுக்கும் ஒரு கப்பு பால் எடுத்து வைப்பது உண்டு. ஆனால் கல்லை எடுத்தால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம் என்பது போல் இப்போது பல நாட்களாக பால் எடுத்து வைக்கும் போது பூனை வருவதில்லை, பூனை வரும் போது பாலும் இருப்பதில்லை. பெரிய பூனை என்பதால் சிறிய இடைவெளி ஏற்படுத்தி வைத்திருந்தனர்,  நாங்களும் தொடாதீர்கள் நாயை போலவே விஷம் உள்ளது என பயம்காட்டி வைத்திருந்தோம்.





 நேற்று பல நாட்கள் பின்பு கண்டன் பூனை வந்து சேர்ந்தது உடன் ஒரு அழகான வெள்ளை நிற பூனைக்குட்டியும்!. டேய் ...மீன் இருக்குது சாப்பிட்டு விட்டு செல் என்று மகன்கள் சொல்லியும் உடன் அழைத்து வந்த குட்டி பூனையை எங்கள் வீட்டில் விட்டு விட்டு மறைந்து விட்டது. 

நேற்று வந்து குட்டி பூனையை பார்த்து விட்டு சென்று விட்டது. இப்போதோ குட்டி பூனை நேரா நேரம் உணவு எங்கே என கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டது. வீட்டில் நடமாடும் பல்லி, பாச்சா(கரப்பான் பூச்சி) எல்லாம் சோக ஆகி கொண்டிருக்கின்றது.  இளைய மகன் தான் பூனை சொல்லாத கதை எல்லா எங்களிடம் கதைத்து கொண்டிருக்கின்றான். கண்டன் பூனை தீபாவளிக்கு நல்லொதொரு பரிசு பொருள் தான் தந்து சென்றுள்ளது.

6 Nov 2012

ஸ்ரீகங்கைமகன்-விமர்சனம்

எனது வாசிப்பில் - நான் தேடும் வெளிச்சங்கள்.


கி.பி 1250 ஆம் ஆண்டுகளில் கிரேக்கத்தில் ஒரு மனிதன் வாழ்ந்தான். அவனது சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சமூக எண்ணங்களில் இருந்து வேறுபட்டன. பிற்பட்ட காலத்தில் அவனது சிந்தனைகள் எண்ணங்கள் யாவும் கிரேக்கத் தத்துவங்களாக உருப்பெற்றன. காலையில் எழுந்து இரவுவரை பகல் நேரங்களில் ஒரு லாந்தரைக் கொழுத்திப் பிடித்துக்கொண்டு எல்லோரது முகங்களையும் பார்ப்பது அவனது நாளாந்த நடவடிக்கையாக இருந்தது.  ஊர் மக்கள் அவனைத் தள்ளிநின்று வேடிக்கை பார்த்தார்கள். விளக்கை இப்படிப் பகல் நேரங்களில் ஏன் பிடிக்கிறாய் என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன் "நான் மனிதர்களைத் தேடுகிறேன்" என்று பதிலளித்தான். அவனது சிந்தனையின் தலைப்பு "நான் தேடும் மனிதர்கள்" என்ற கட்டுக்குள் அடங்கியிருந்தது.  அந்தக் கிரேக்கத் தத்துவவாதி வெளிச்சத்தில் மனிதர்களைத் தேடினான். ஆனால் இங்கு ஒரு புதுமைப் பெண் எழுத்தாளர்  மனிதருக்குள் வெளிச்சத்தைத் தேடி வெற்றி கண்டுள்ளார். அந்தத் தேடலில் கிடைத்த தெளிவுதான் "நான் தேடும் வெளிச்சங்கள்" என்ற நூலாகும். இதன் ஆசிரியர் ஒரு பேனாபிடித்த சமூகவியல் போராளி என்று குறிப்பிட்டாலும் மிகையாகாது. அவர்தான் ஜெ.பி.ஜோசபின் பாபா என்ற படைப்பாளி. இந்தியப் பலதரப்பட்ட கலாச்சாரங்களில் கொடியாகச் சுற்றி மரமாக வளர்ந்தவர்.

சென்ற ஆண்டு தகிதாவால் வெளியீடு செய்யப்பட்ட எனது நூலான "ஆத்மலயம்"  என்ற புத்தகத்தைத் தனது எழுத்துக்கள் மூலம் தமிழ் உலகத்திற்குக் கொண்டு சென்று எனக்கு ஒரு முகவரியைப் பெற்றுத் தந்தவர்.  அப்பொழுது திருநெல்வேலியில் அவரைக் குடும்பத்தினருடன் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. நல்ல விருந்தோம்பல் அறுசுவை உணவு போன்றவற்றுடன் வரும்போது திருநெல்வேலி அல்வாவும் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். அப்போது அடுத்த ஆண்டு நீங்களும் ஒரு படைப்பாளியாக ஒரு நூலை எழுதி வெளியீடு செய்யுங்கள் என்று கூறியிருந்தேன்.  அதன் வெளிப்பாடாக எழுதப்பட்ட இந்த நூல்; அவரது வெற்றிக்கு மட்டுமல்ல எனது சிந்தனைக்கும் மதிப்பளித்துப் பெருமை சேர்த்திருக்கிறது.  நூல் எழுத வேண்டும் என்றால் என்ன தலைப்பில் எழுதலாம் அண்ணா என்று கேட்டபோது; அவரது வலைத்தள ஆக்கங்களை வாசித்திருந்த எனக்கு ஒரு தலைப்பைக் கொடுப்பது பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. "நான் சொல்வதெல்லாம் உண்மை" என்ற ஒரு தலைப்பை அவருக்காக நான் தெரிவு செய்திருந்தேன். ஆனால் புத்தகம் எழுதி முடிந்ததன் பின்னர்; இதனை வாசித்துவிட்டு வேறு ஒரு தலைப்புத் தாருங்கள் அண்ணா என்று பணிவாகக் கேட்டிருந்தார். புத்தகத்தை வாசித்த போது கிரேக்கத்து 1250 களில்  மனிதரின் முகங்களில் வெளிச்சம் பிடித்துப் பார்த்த தத்துவஞானியின் ஞாபகம் வந்தது.  அந்த எண்ணத்தில்  அமைந்ததுதான்  இந்த "நான் தேடும் வெளிச்சங்கள" என்ற தலைப்பாகும்.
.
இத்தனைக்கும் பிராயச்சித்தமாக அவர் தனது நூலில் "பட்டாம்பூச்சிக் கூண்டு போன்ற என் மௌனத்தை உடைத்து அதைப் புத்தகமாக வெளியிட ஊன்று கோலாக இருந்து உற்சாகப் படுத்திய என் தோழர், உடன் பிறவாச் சகோதரர் பாசமிகு சிறி அண்ணாவிற்கு (கங்கைமகன்)" என்று சமர்ப்பணத்தில் குறிப்பிட்டுப் பெருமை கொண்டுள்ளார்
.
இவரது முதலாவது கதையாகிய ஒற்றை மரத்தை வாசிக்கும்போது இவர் யாழ்ப்பாணத்தில் அதுவும் நெடுந்தீவு என்ற கிராமத்தில் பிறந்தாரா? என்று எண்ணத் தோன்றுகிறது. அந்தக் கிராமத்தில் அவக வாராக(வருதல்) அவக போறாக(போகுதல்) என்று கதைப்பார்கள். அதோபோல் அவரும் "நிற்பாக"  "மாட்டாக" என்ற சொற்களைப் பிரயோகித்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஆடும், மீனும், கோழியும், சாப்பிட்டுப் பாம்பு, பன்றி, புலி, யானை போன்ற மிருகங்களுக்கு இடையில் குலை நடுங்க வாழ்ந்த கதை கூறுவது அருமையாக உள்ளது.
.
என்னுயிர்த் தோழன் என்ற கதையில் படிப்பைவிட வேடிக்கை பார்த்த விடையங்களைக் கெட்டித்தனமாகக் குறியிருப்பது ஒரு அழகு. பாடசாலையில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்ட அவர் வீட்டில் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்தைத் தன் சிறிய வயதிலேயே அடைந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
.
அடுத்து "ராஜமாணிக்கம் மகளும் வாத்தியும்" என்ற பதிவு ஒரு சுவாரஸ்யமானது. பாலச்சந்தரின் படவசனம் போல் அமைந்துள்ளது. முதலில் வரிகள் விளங்கவில்லை. இரண்டாம்தரம் வாசிக்கும்போது விளங்கியது. அந்த வரிகள் இவைதான். "தன் மனைவியின் முதல் பிள்ளை தூக்கவந்த பிள்ளைக்குத் தன்பிள்ளை ஒருவயது ஆகுமுன் ஒருபிள்ளையைக் கொடுத்து". இவ்வாறு பல மணிப்பிரவாள நடை தாண்டிய புதுப்பிரவாளமாகக் கதை செல்கிறது.
.
சூத்திரம் போன சுப்பன்" கதையில் வெள்ளைக்காரன் கட்டிய லயம் என்பது ஒரு குதிரைக்காரன் தங்குவதற்காக அமைக்கப் பட்டது. இது சிறிலங்காவில் பின்னர் தேயிலைத் தோட்டத்திற்கு இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தமிழருக்கு குடும்பத்திற்கு ஒரு வீடாகக் கொடுக்கப்பட்டது. அதே நிலையை இந்தக் கதையில் நான் பார்க்கிறேன். குழந்தைகளைக்கூட வீட்டில் விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் வாழ நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு புருசனையும் விட்டுவிட்டு புதிய காதலனுடன் ஓடிவரும் பெண்களை ஆண்களின் கையாலாகாத் தனத்திற்கு வெளிச்சம் போட்டுள்ளார்.
.
என் மனதைத் தொட்ட; கட்டாயம் அனைவரும் படிக்கவேண்டிய தலைப்புக்கள் "ரெனீட்டா ரொம்ப நல்லவ, வீடு, தீ-வலி, சொந்த வீடு, பூந்தோட்டம் சொல்லும் கதைகள், போன்றவை ஆசிரியரின் புத்திசாலித் தனத்திற்குக் கட்டியிருக்கும் பட்டுக் குஞ்சங்களாகும்.

அடுத்து "சேர நாட்டு அரண்மனை உங்களை வரவேற்கிறது" என்ற பதிவு நான் தேடும் வெளிச்சங்களுக்கு மகுடம் வைத்ததுபோல் அமைந்துள்ளது. எனது இரண்டு புத்தகங்களும் இவரது புத்தகமும் கோவை தகிதாவில் ஒரே மேடையில் வெளியீடு செய்யப்பட்டது. வெளியீடு முடித்து திருநெல்வேலி செல்லும் போது என்னையும்  அவரது கணவர் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து இந்தக் கதை கூறும் களத்திற்கு ஒருநாள் எல்லோரும் சென்றிருந்தோம். அங்கு நான் பார்த்த விடையங்களை மிகவும் துல்லியமாக இங்கு பதிவாக்கியுள்ளார்.
.
திருமதி பாபாவின் முகத்தைப் பார்த்தால் எந்த மொழி பேசுபவர் என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ஆனால் அழகாகத் தமிழ் பேசுவார் என்று கண்டுபிடிப்பது மிகவும் இலகு. நிட்டசமாக நான் தேடும் வெளிச்சங்கள் என்பதன் இரண்டாம் பகுதியை நான் மட்டுமல்ல வாசகர்களும் எதிர்பார்ப்பார்கள் என்பதைக் கூறி ஒரு நல்ல பதிவைத் தந்த ஆசிரியரையும் வாழ்த்தி அவருக்குப் பக்கபலமாக இருந்த அவரது கணவர், பிள்ளைகள், உட்பட ஏனையவர்களையும் வாழ்த்தி விடை பெறுகிறேன்.
ஸ்ரீ அண்ணாவுக்கு என் நன்றி வணக்கங்கள்.