பக்தி பாடல்கள் கேட்பது பக்தி பரவசத்தில் நம்மை ஆழ்த்துவது மட்டுமல்ல மனதிற்கு எப்போதும் அமைதி தருவது. சில பாடல்கள் அதிலும் சாகவரம் பெற்று என்றும் கேட்க கேட்க இனிமையாக இருக்கும். அவ்வகையில் நான் பிறந்த தேசத்தில் இருந்து உருவான ஒரு பாடலை பற்றி கதைக்க இன்று முற்பட்டுள்ளேன். பாட்டின் ஓரிரு வரிகள் தவிர பொருள் எனக்கு விளங்காத பாடலாக இருந்தும் இதயத்தை, மனதை ஊடுருவி செல்லும் ராகத்துடனான ஒரு பக்தி தாலாட்டு பாடல் இது. சம்ஸ்கிருத மொழியில், மத்தியமாவதி ராகத்திலுள்ள இப்பாடலின் உருவாக்கம் மிகவும் சுவாரசியமானது; மனதை நெருடுவது.
தலைமை குருவான ஈஸ்வரன் நம்பூதிரியுடன் 1950 ஆம் ஆண்டுல் கேரளா ஆலப்புழாவை சேர்ந்த வி. ஆர் கோபால மேனோன் என்ற ஒரு பக்தன் 1000 வருடம் பழக்கமுள்ள சபரிமலை ஆலயத்திற்கு வந்து சென்றுள்ளார். இது கொடூர வனமாக திகழும் மேற்கு தொடற்சி மலையில் உட்பகுதியிலுள்ள சாஸ்தா கோயில் ஆகும். இன்று 4 மிலியன் ஜனக்கள் வந்து செல்வதாக கணக்கிருந்தாலும் அன்றைய தினம் இந்த பகுதிக்கு வந்து திரும்பி செல்வது பெரும் சவாலாகும். இன்று போல் பாதைகள் அற்ற மலைப்பாதையில் கல் -முள் நிறைந்த வழியே வனவிலங்கின் ஆபத்தின் மத்தியில் பயணம் செய்து சென்று வந்துள்ளனர் என்பதே சிறப்பு. இந்த கோயிலில் விசேஷமாக நடக்கும் பூஜை நேரம் நவம்பர் துவங்கி ஜனுவரி வரை கடினமான குளிர் நேரமாகும். கோயில் நடை அடைக்கும் முன் தங்கள் தெய்வத்தை பாடி தூங்க வைத்ததும் முதன்மை குரு விளக்கு எல்லாம் அணைத்து நடை அடைத்து செல்வதே வழக்கமாக இருந்தது. முதன்மை குருவுடன் வரும் கோபால மேனேன் இத்தாலாட்டு பாட்டை மனதுருகி பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பூஜை முடிந்து கோயில் வாசலிலே தூங்குவதையே வழக்கமாக கொண்டிருந்தவரை காட்டு விலங்குகளும் துன்புறுத்தாது விலகி சென்றுள்ளது. இவரை 'சபரிமலை குடியிருப்புகாரன்' என்றே உள்ளூர் மக்கள் அழைத்து வந்துள்ளனர்.
இப்படியாக சென்ற இவருடைய வாழ்வில் இடியாக வந்தது கோயில் அறநிலை- தேவசம் குழு! இந்த கோயில் நிறுவனமாக உருமாறும் வேளையில் இந்த எளிய மனிதர் கோயில் வாசலில் தூங்கக்கூடாது என கட்டளை விதித்தது. பின்பு இவர் மனச் சோர்வால் பக்கத்திலுள்ள ஊரான வண்டிப்பெரியாரின் தெருவில் இறந்து கிடந்துள்ளார்.
இத்துயர் நிகழ்வை கேள்விப்பட்ட முதன்மை குருவுக்கு இவருடைய மரணம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலை கம்பன்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ஐயரால் எழுதப்பட்டு சுவாமி விமோசந்திரால் முதன் முதலாக பாடப்பட்டுள்ளது. இவர் நினைவாகவே இவர் பாடிய பாட்டை தினம் நடை அடைக்கும் முன் பாடுவது வழக்கமாக இப்போதும் கொண்டுள்ளனர். பின்பு பலருடைய ரசனைக்கு இணங்க பல ராகத்தில் இப்பாடல் வெளிவந்தாலும் யேசு தாஸ் பாடிய ராகம் இப்பாடலுக்கு சாகாவரம் கொடுத்தது என்றால் மிகையாகாது. இப்படியாக உலகம் முழுதும் விரும்பி கேட்கும் இப்பாடல் ஒரு எளிய மனிதனின் இறை பக்தி துயர்மிக்க முடிவில் இருந்து உருவாகியுள்ளது என்பது ஆச்சரியத்தை தருகின்றது. நீங்களும் பாட்டை கேட்டு விட்டு கருத்தை பகிர்ந்து செல்ல வேண்டுகின்றேன்.
சபரிமலை வரலாறு
சபரிமலை வரலாறு
எங்கள் அருமை மகள் J P Josephine Baba அவர்களின் அருமையான பதிவு = சபரிமலை பற்றி, அருமையான பாட்டுடன். படித்துப் பாருங்கள், கேட்டுப் பாருங்கள். எழுத்தாற்றலை வாழ்த்துகிறேன் அருமை மகளே.
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteஅந்த பாடலுக்கு நிகரே இல்லை
ReplyDelete