நாடு வளம்பெற மக்களுக்கு தொழில் வாய்ப்பு பெருகும் என ஒரு கூற்றுண்டு. ஆனால் போல் சமீப காலமாக தமிழகத்தில் எங்கு நோக்கினும் உழவர் சந்தை என்பது போல் வேலை வாய்ப்பு சந்தை என ஒன்று நடத்துகின்றனர். அரசியல்வாதிகள் வேறு வந்து, வேலை தருவதை சும்மா த்ர்மத்திற்க்கு பிச்சை போடுவது போல் பேசி செல்கின்றனர். ஆனால் இதன் உண்மை நிலைவரம் கண்டால் பரிதாபமே. எங்கள் பகுதியில் ஒரு துப்புரவு தொழிலாளிக்கு ஒரு கழிவறைஐ சுத்தம் செய்ய 300 ரூபாய் தர வேண்டும். அதே போல் தோட்டம் சுத்தப்படுத்த 250 ரூபாய், ஒரு கொத்தனாருக்கு 300-500 ரூபாய், ஒரு வீட்டு பணிபெண்ணுக்கு ஒரு வாளி துணி துவக்க 50 ரூபாய், ஆனால் ஒரு பட்டதாரி ஒரு மாதத்திற்க்கு 3-4 ஆயிரம் ரூபாய்க்கு அடிமையாக எளிதாக கிடைப்பான். அவனை வைத்து மேலாளருக்கு காப்பி வாழ்கி வர வைக்கலாம்; முதலாளி அம்மா துணி இஸ்திரி கொடுத்ததை கூட வாங்கி வர வைக்கலாம். ஆறு மாதம் முன்பு நடந்த வேலை வாய்ப்பு சந்தையின் மறு நாள் தொடங்கி இளம் பெண்கள் 3- 4 பேராக திருநெல்வேலி கார்ப்பரேஷன் எல்லையோரமுள்ள எங்கள் பகுதிக்கும் படயெடுத்தனர் பம்பு செட்டு, மின் துடைப்பம் போன்றவை விற்பதற்க்காக. வீணாபோன வெயிலில் பேசக்கூட திராணியற்று மேடம்,மேடம் என கூவி அழைத்து நிற்பதை பார்க்க எங்கள் ஊர் கீரக்கார அக்காவை விட பரிதாபமாக இருந்தது.
முதுகலை பட்டம் பெற்ற என்னுடைய நண்பர்கள் 4 ஆயிரம் ரூபாய்க்கு 2 வருடமாக ஊடகத்துறையில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் கூறுவது என்னவெற்றால் நாங்கள் படித்த படிப்புற்க்கும் வேலைக்கும் சம்பந்தமேயில்லை. எங்களை மனிதர்களாக கூட மதிப்பதில்லை ஊதியம் பெறும் அடிமைகளாகவே பார்க்கின்றனர் என்பதே. ஒரு முறை எங்கள் பல்கலைகழகத்திற்க்கு வேலை தருவதாக வந்தவர்கள் ஒரே வேலைக்கு சென்னை என்றால் ஒரு ஊதியமாம், திருநெல்வேலியென்றால் அதன் அரைப்பகுதி ஊதியமாம். உண்மையில் சென்னையை விட பொருட்கள் இங்கு விலை அதிகமாகவே உள்ளது. இங்குள்ள ஆசிரியர்களுக்காகவே விலைஐ அதிகமாக வசூலிக்குகின்றனர். மேலும் தமிழகத்திற்க்குள்ளே சென்னை தமிழர்களுக்கு ஒரு நியாயம் மற்ற தமிழர்களுக்கு ஒரு நியாயம் என்றால் என்ன சொல்ல? எனது கணவர் 3 வருடம் முன்பு ஒரு கனேடிய கணக்கு நிறுவனத்தில் தணிக்கையாளராக (internal auditor)பணிபுரிந்தார். இங்குள்ள அலுவலகமும் கனடாவிலுள்ள அலுவலகவும் இணைந்து வேலை செய்யும். அங்குள்ள ஒரு நபருக்கும் தரும் 2000 டாளர் வைத்து இங்கு 10 பேருக்கு ஊதியம் தந்தனர். தென் தமிழக முதலூர் என்ற கிராமத்தை சேர்ந்த முதலாளி ஒவ்வொரு முறை வரும் போதும் ஊதியம் உயரலாம் என எதிர்பார்த்திருப்பார்கள். அந்த முதலாளியோ வாய்க்கு கனடா நாட்டு மிட்டாய் , தலைக்கு போட தொப்பி, போட்டு தூங்க டீ ஷர்ட் கொண்டு கொடுப்பார். போவதற்க்கு முன்பு ஊழியர்களை அழைத்து ஒரு உயர்ரக உணவகத்தில் உணவு வாங்கி தருவார். பின்பு விடைபெரும் வேளையில் தற்போது உலகளவில் நிதிநிலை மோசமாக உள்ளது. கடவுள் அனுமதித்தால் அடுத்த முறை ஊதியம் உயர்த்தபடும் என கூறி செல்வார்.அவ்வாறே மூன்று வருடம் ஓடியது. வேலை நேரவும் மாலை 5 தொடங்கி காலை 2 வரை, பின்பு காலை 9 முதல் மதியம் 2 வரை. போதாதற்க்கு கண்காணிக்கும் காமரா, உளவு சொல்வதற்க்கு என்றே முதுகெலும்பில்லா சில அலுவலர்கள் மேல்ப் படியாக முதலாளியின் இந்திய உறவு கண்காணிகள் என பட்டயை தீட்டுவார். இந்தியா உறவின- முதலாளிகளின் கொட்டகம் தாங்காது. அவர்கள் வீட்டு கைப்பிள்ளை கூட உதவி இயக்குனர், நிறுவன அதிகாரி என பதவி பெற்றிருக்கும். இங்குள்ள விடுமுறை கிடையாது, பஞ்சபடி,போனசு என கேட்பதே பெரும் குற்றம்!. அதற்க்கு எங்கள் ஏழை!! இந்திய முதலாளிகள் எவ்வளவோ மேல் தாத்தா, பாட்டி செத்தால் விடுமுறையுண்டு, காதுகுத்து,கோயில் கொடைக்கெல்லாம் அனுமதியுடன் செல்லலாம், தீவாளிக்கு கொஞ்சம் பணவும் தருவர். சில இரக்க குணமுள்ளோர் குழந்தைகள் கல்வி கட்டனத்தைக்கூட ஏற்று கொள்வர்.(எல்லோருக்கும் பொருந்தாது,உயர் நிலை அலுவலகர்களுக்கு மட்டும், முதலாளி விருப்பினாலும் இந்த விசுவாசமான அதிகாரிகள் கீழ் நிலை வேலையாட்களுக்கு தர அனுமதிக்க மாட்டார்கள்) தற்போது இந்திய பத்திரிக்கையை எடுத்தால் தனியார் ஊழியர்கள் கோடிகள் வாங்குவது போலவும் கலாச்சாரத்தை அளிப்பது போலவும் நம்ம ஊர் கலக்டரை விட ஊதியம் வாங்குவதாகவும் கதை எழுதுகின்றனர். சென்னையில் கூட தனியார் நிறுவனங்களில் 30 ஆயிரம் என எழுதிகொடுக்க பட்டிருக்கும் ஆனால் பெறுவதோ 15 ஆயிரம் மட்டுமே. பெரும் சம்பளம் பெறுவது மிக சொற்ப்ப தமிழர்களே. தமிழ் பேச தெரியாதா மலையாளம்,வட மாநிலத்தவர்க்கே மவுசு. சென்னையில் கூட வணிகத்தில் பட்டம் பெற்ற பெண்கள் 3 ஆயிரம் ரூபாய்க்கே வேலை செய்கின்றனர். காற்றோட்டம் அற்ற குளிரூற்ற பட்டஅறைகளில் வேலை செய்து ஆரோக்கியமான வாழ்வை இழப்பது மட்டுமே மிச்சம்!!.