கல்லூரியில் இருந்து முதுகலை பட்டம் மாணவர்களுடன் கன்னியாகுமரி அனுப்பப்பட்டேன். அதற்கான அனுமதிக்கு 3.30 க்கு அருட் திரு புஷ்பராஜ் அவர்களை சந்தித்து கையெழுத்து பெற்றேன். அதே நாள் எனது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயணத்திற்கு முதல்வர் தந்தையிடம் மாலை 6 மணிக்கு கையெழுத்து பெற்றேன். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு பயணம் என ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.
காலை கிளம்பும் போது ஒரு 6 அடி நீளமுள்ள பாம்பை வீட்டு வளாகத்திற்குள் கண்டதும் அபசகுனமாக தான் பட்டது. பயணம் ஆரம்பித்தாச்சு, இளைய மகன் கைபேசி அழைப்பு அதிகாலை 5.30 க்கு வந்திருக்கிறது. மகனிடமும் பயணம் விவரங்கள் இரவே தெரிவித்ததால் போய் கொண்டு இருக்கிறேன் என்று மட்டும் அழைத்து சொன்னேன். மகனோ உங்கள் கால் உடைந்தது போல கனவில் கண்டேன், அதுவே அழைத்தேன் என்றான்.
கைபேசியை வைத்து விட்டு பயணத்தில் ஆழ்ந்து போயிருந்தேன், முதுகலை மாணவர்கள் எண்ணத்திலும் வெறும் 9 பேர் என்பதால் பெரும் சிரமமாக தோன்றவில்லை. இவர்களுடன் பயணித்தாலும் மூன்று நாட்களுக்கு பின் என் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் மேற்கொள்ள வேண்டிய பயணத்தை பற்றி தான் சிந்தனை ஓடிக்கொண்டு இருந்தது. வகுப்பில் 43 மாணவர்கள் இருக்க வெறும் 10 மாணவர்கள் மட்டுமே 300 ரூபாய் தந்து இருந்தனர். பயணத்திற்கு வாகனம் முன்பதிவு செய்ய வேண்டுமா? வேண்டாமா என்ற சிந்தனையில் இருந்தேன்.
முதலில் பேச்சிப்பாறை நீர் தேக்க்ம், பின்பு சிதறால் மலைக்கோயில் அத்துடன் மதிய சாப்பாட்டை முடித்து விட்டு என்னுடைய தோழி அட்டைபெட்டி நிறுவனம் நடத்துகிறார். அங்கு மாணவர்களை அழைத்து சென்றோம். அருகில் உள்ள இன்னொரு நிறுவனமும் கண்டு விட்டு மாணவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கன்னியாகுமரி சூரிய அஸ்தமயம் கண்டு விட்டு வீடு திரும்பினோம். வந்து சேர இரவு 10 மணி ஆகி விட்டது. பயணம் மகிழ்ச்சியானது என்றாலும் மாலை 8 மணிக்கு முன்பு வீடு அணைய இயலவில்லை என்ற ஒரு பதட்டம் இருந்தது. எங்கள் வீட்டு செல்ல நாயை வீட்டுக்கு வெளியே விட்டு விட்டு சென்றிருந்தேன்.வீடு வந்து சேரும் போது பக்கத்து வீட்டு தோழி நித்திரைக்கு போனது மாதிரி இல்லை. வீட்டில் மின் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அதனால் அழைத்து தபாலை தர இயலுமா என்றேன். அவரும் வந்து சுவர் பக்கம் நின்று தந்து விட்டு சென்றார்.
பயணக்களைப்பு. இருப்பினும் கல்லூரி ஆண்டு விழாவும் வரும் வாரத்தில் தான். ஒரு வேளை ஏதாவது விருது எதுமா என்ற சிந்தனையுடன் பிரித்து பார்த்தால் நீங்கள் வேலையை விட்டு ஏப்ரில் 20 ஆம் தேதி 2025 அன்று நின்று விடுங்கள் என்றிருந்தது. மறுபடியும் என் நிர்வாகம் மேல் ஒரு நம்பிக்கை, இது யாராவது என்னை ஏமாற்ற அனுப்பி இருக்க கூடும் என்ற சிந்தனையில் மேஜை மேல் வைத்து விட்டு நித்திரைக்கு போய் விட்டேன்.
திங்கக்கிழமை செயலர் அலுவலகத்தில் சென்று விசாரித்த போது அவர்கள் தான் அனுப்பி உள்ளனர் என கூறினர். கல்லூரி வேலைக்கு சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக அனுப்பிவிட்டு எந்த முன்னறிவிப்பும் இன்றி வீட்டுக்கு அனுப்பின போஸ்டு மாதிரி, நானும் தபால் போஸ்டாக அனுப்புவமா என்று தோன்றியது, ஆனால் நான் என்ன தவறு செய்தேன், எதற்கு கோழையை போன்று இருக்க வேண்டும் என்று கடிதத்தையும் எடுத்துக்கொண்டு செயலர் அருட் திரு புஷ்பராஜிடம்”என்னை வேலையை விட்டு போகச் சொல்லும் காரணம் என்ன என்று அறியலாமா” என்றேன். அதிகார உச்சத்தில் கத்திகுளறி, நீ மாணவர்களிடம் கோபப்பட்டாய் , நீ சரியாக வகுப்பு எடுக்கவில்லை , உன்னை மாணவர்களுக்கு எளிதாக அணுக இயலவில்லை என நாய் கத்துன மாதிரி கத்தினார். அத்துடன் யாரோ முக்கிய நபர்களை வகுப்பில் கிண்டல் அடித்ததாகவும் கூறினார்.
இது என்னடா புதுக்கதையாக உள்ளது, விசாரிக்காமல் தண்டனையும் தந்து விட்டு குற்றங்களை தேடி ஒட்டுகின்றனர் என நினைத்துக் கொண்டு நான் இந்த எந்த தவறும் நான் செய்யவில்லை. ஒரு விசாரணை வைத்தால் என்னால் நிரூபிக்க இயலும் என்று கூறி வெளியேறி விட்டேன்.
மறுபடியும் ஒரு நம்பிக்கை இருந்தது. கல்லூரியில் 11 வருடங்கள் இதுவரை எந்த குற்றம் விசாரணையிலும், ஒழுங்கீனத்திலும் கேள்விக்கு உட்படாதவள். இதுவரை இருந்த முதல்வர்கள், செயலர்கள், அதிபர் தந்தையர்கள் என எவரிடமும் முரண்படவோ, கோபத்திற்கு உள்ளானதோ இல்லை. மிக முக்கியமான தருணங்களில் துறை சார்ந்து பல விடயங்களை நிர்வாகத்திடம் பேசி வளர்ச்சி பாதைக்கு இட்டு சென்றுள்ளேன்.
ஐந்து வருடம் முன்பு கல்லூரி அரசு ஊதியம் பெறுகிறவர்கள் நிர்வாகத்துடன் முரண்பட்டு போராட்டம் என இருந்த போது, சுயநிதி ஆசிரியர்கள் 10 பேரை வைத்து சுயநிதி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நிர்வாகத்துடன் செயல்படும்படி; பேராசிரியர்களை திரட்டவும் என்னை பயன்படுத்தும் அளவிற்கு நிர்வாகத்திற்கு நம்பிக்கையாகத் தான் இருந்தேன். அதில் என்னை எக்சிகுட்டீவ் உறுப்பினராக பயன்படுத்தி உள்ளது நிர்வாகம்.
கல்லூரி நூற்றாண்டு கொண்டாடும் போது என் புத்தகங்களை வெளியிட்டு ’சாதனையாளர் பேராசிரியை’ என்ற விருதை பெற்றுள்ளேன். கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாடிய போது என் தலைமையில் காட்சி ஆவணங்கள் உருவாக்கம் நடந்தது. இதுவரை துறையில் நடந்த மாணவர்கள் சார்ந்த பயணம், பயிற்சி பட்டறை என நூற்றுக்கு மேல் முன் நின்று ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்துள்ளேன். இதுவரை துறை தலைவர்களாக இருந்தது பாதிரியார்கள். அவர்களிடமும் வேலை செய்வேன் என்ற நல்ல பெயர் மட்டுமே எடுத்துள்ளேன். யாருடனும் முரண்பட்டது இல்லை.

கடந்த வருடம் துறைத்தலைவர் ஆக்கி விட்டு, அப்போது இருந்த முதல்வர் அருட் திரு மரியதாஸ் எஸ்ஜெ. கொடுத்த ஏச்சுப்பேச்சுக்கு பயந்து ஒரே வருடத்தில் தலைவர் பதவி வேண்டாம் என நானே கேட்டு ஒதுங்கி இருந்து கொண்டேன். தலைவராக இருப்பதை விட கற்பித்தலில் தான் எனக்கும் ஈடுபாடு இருந்தது. அவர்கள் எதிர் பார்க்கும் போல என்னால் வளைந்து, குனிந்து என் பணிவை எனக்கு வெளிப்படுத்தவும் தெரியவில்லை. நான் தலைவராக இருந்த போது மாணவர்களுக்காக 31 நிகழ்வுகள் நடத்தியுள்ளேன். மிக முக்கியமான கலைஞர்களை கொண்டு வந்து பயிற்சி பட்டறை நடத்திக் கொடுத்துள்ளேன்.
என் பணிமேல் மதிப்புள்ள மற்று நிர்வாக அருட் தந்தையர்கள் ஆதரவு இருந்திருப்பதால் எந்த பிரச்சினையையும் நான் கண்டு கொள்ளவில்லை. ஒரு ஆசிரியையாக மிகவும் உற்சாகமாக மனத்திருப்தியுடன் பணி செய்து வந்தேன்.
தலைமை பதவியில் இருக்கும் போது இன்னொரு துறை தலைவிக்கும் எனக்கும் சில உரசல்கள் வந்தது. அதையும் சுமூகமாக கல்லூரி நிர்வாகத்தின் அதிபர் தந்தையின் உதவியுடன் சமரசத்திற்குள் எட்டினோம். அன்றைய அதிபர் தந்தை ஹென்றி ஜெரோம் மிகவும் பரிவோடு மரியாதையாக நியாயமாக நடத்தி இருந்தார். அப்போதைய முதல்வர் தந்தை எங்கள் துறை நாடக நிகழ்விற்கு அதிபர் தந்தையை அழைத்ததை மனதில் வைத்து உனக்கும் அதிபருக்கும் என்ன நட்பு என்றும் ஒருமுறை கேட்டு இருந்தார். ஆனால் எளிதாக பிரச்சினையை தீர்ப்பவர் என்பதால் அதிபர் தந்தையின் உதவியுடன் ஒரு பேராசிரியர் நாதன் முன்னின்று எனக்கும் கணிணி துறை பேராசிரியைக்குமான பிரச்சினையை ஐ தீர்த்து வைத்தார். எல்லாம் ஓய்ந்து இந்த வருடம் வெறும் துணை பேராசிரியையாக துறை தலைவி பதவியில் இருந்து விலக்கி விடப்பாட்டாலும் மிகவும் அமைதியாக என் பணி சென்று கொண்டு இருந்தது.
முதல்வர் தந்தையிடம் என் பேராசிரியர் அருட் சகோதரி மூலம் என் பக்கத்தை தெரிவித்து விட்டேன். கடைசி நம்பிக்கையாக தற்போதைய அதிபர் தந்தை தான் இருந்தார். அவரை சந்தித்த போது என் பக்க நியாங்களை பொறுமையாக கேட்டாலும், நான் வேண்டி கேட்ட விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை. “கர்த்தர் ஆசிர்வதிப்பார்” எனக்கூறி அனுப்பி விட்டார்.
எனக்கு அதிர்ச்சி தான், இருந்தாலும் 11 வருட பணியை முடித்து கொள்ள நான் தயாராக இருந்தாலும், என்னை பற்றிய புகார்களை நியாயமாக விசாரித்து என் பக்கம் எதிரணி என்ன சொல்கிறார்கள் என்று அறியவும் ஆவல் இருந்தது, இது ஏதோ மர்ம படம் மாதிரி நான் மாணவர்களுக்கு பெரும் எதிரி என கட்டுக்கதை சொல்லி வெளியேற்றியது மட்டுமே என் வலுவை உடைப்பதாக இருந்தது. இதனால் என் மனசாட்சிக்கு எந்த குற்ற உணர்வும் தோன்றவில்லை என்பதால் நான் அமைதியாக இருந்து கொண்டேன்..
என் மாணவர்கள் இச்சம்பவம் அறிந்தது முதல், தினம் அழைத்து ஆறுதல் படுத்தினர். தற்போது படிக்கும் மாணவரக்ளும் அத்தனை கட்டுப்பாட்டையும் கடந்து எனக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்சப் வழியாக தங்கள் ஆதரவை அன்பை தெரிவித்தனர்.
கடந்த ஒரு சில மாதங்களாகவே வேலை கிடைக்காது, வேலையிடத்தில் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் நினைத்து ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்தேன். ஆனால் நானும் அதே பாதிப்பிற்கு உள்ளான போது; என் அம்மா, தங்கை காலை இரவு என என்னை கைபேசியில் அழைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தனர். அவர்களுக்கு ஒரு பயம் வாழ்க்கையில் பெரும் பகுதியை வேலைக்கு என்றே இருப்பவள் ஏதும் செத்து தொலைத்து விடக்கூடாது என பயந்தனர். அப்படி சாக ஒன்றும் நான் கோழை இல்லை. நான் என் மன உறுதியை நினைத்துக் கொண்டேன்.
என் கல்லூரி நண்பிகள், நண்பர்கள் தொடர்ந்து எனக்கு தைரியம் பகிர்ந்தனர். என் மகன்கள் இதுவரை உழைத்தது போதாதா? ஆசிரியை பணியை விட்டு விட்டு வேறு துறையை தேர்ந்து எடுங்கள் என உற்சாகப்படுத்தினர். அமைதியாக நிம்மதியாக பிடித்தபடி பயணம் செய்யுங்கள் என அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர். இனியும் ஓடிக்கொண்டு இருக்க வேண்டாம் என்றனர். இருவரும் அதே வாரத்தில் வந்து என்னுடம் ஒரு வாரம் தங்கி தைரியம் பகிர்ந்தனர்.
நான் சிரித்துக் கொண்டே தான் வெளியேறினேன்.எனக்கு தண்டனை கொடுப்பது மூலம் அத்தனை தனியார் துறை ஆசிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை கொடுக்க தான் அருட் திரு புஷ்பராஜ் விரும்புகிறார் என்பதை அனைவரும் அறிந்து இருந்தனர். என்னை பொறுத்தவரை 10 வருடம் எனக்கு பாடதிட்டம் அமைப்பதில் இருந்து எல்லா பணியிலும் பயிற்சி கிடைத்து இருந்தது. என் குறிப்பிட்ட 11 வருட காலயளவில் அதற்கும் மீறின சேவையை தான் முன் வைத்து உள்ளேன்.
என் பரிந்துரையால் வேலை பெற்று எங்கள் துறையில் இருவர் இருக்க, நான்கு பேரும் சேர்ந்து இருந்து முதுகில் குத்தி வீழ்த்த நினைத்ததை தான் கொஞ்சம் வலியோடு சிரித்துக்கொண்டு கடந்து போகிறேன்.
என் தோழர்கள் என்னை போன்று பயப்படத் தேவையில்லை. எங்கள் ஊரிலே பல கல்லூரிகள் அவர்கள் படிப்பிக்கும் பாடங்கள் உண்டு,. என் பாடத்திற்கு தான் அருகில் கல்லூரி இல்லை. கர்த்தர் சொல்வது போல மனிதன் அப்பத்தால்(ஊதியம்) மட்டும் வாழ்வதில்லை அவர் வார்த்தைகளால்/ நம்பிக்கையால் வாழ்கிறான். அடிமைகளாக இருக்க ஆசிரியர்கள் பணி தேவையில்லை,, அறிவால் விளைந்த கர்வத்தில் அதன் பொருட்டு உருவான ஓர்மத்தில் ஆசிரியர்களாக வாழ்வோம். ஒரு வேலை கொடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக அடிப்படையில் மனிதர்களாக இருக்க மாட்டோம் என்று நினைப்பவர்களை பணிந்து போகும்படி கர்த்தர் சொல்லி உள்ளாரா?
கிறிஸ்தவ கத்தோலிக்க பெண்கள் நீதிக்காக தைரியமாக போராடுகிறவர்கள். நீங்கள் கிறிஸ்தவர்களா? உங்கள் குடும்பங்களை விட்டு , சேவை புரிய என வந்து விட்டு பெண்களை தண்டிப்பதை பொழுது போக்காக கொள்ளலாமா? 11 வருடம் வேலை செய்துள்ளேன் இந்நிறுவனத்திற்காக. நன்றி என்று கூட சொல்வதை எதிர்பார்க்கவில்லை. எவனோ எழுதிகொடுத்த பேப்பரை வைத்துக் கொண்டு என்னை மிரட்ட நினைத்த உங்கள் கோழைத்தனத்தை எண்ணி வருந்துகிறேன்.
எனக்கு வேலை என்பது வளரும் தலைமுறைக்கு இந்த சமூகத்திற்கு செய்யும் சேவைக்கான வாய்ப்பு மட்டுமே. 2014 கில் 16 ஆயிரம் ஊதியம் பெற்றேன். தற்போது 30 ஆயிரம் பெற்றிருந்தேன். பெருவாரி பணத்தை யார் யாருக்கோ உதவினேன், என் மாணவர்களிடம் விசாரித்தாலே அவர்கள் சொல்வார்கள், என் பலம் என் மாணவர்கள் தான். என் மாணவர்கள் வாழ்க்கையில் நன்றாக வர வேண்டும் என சிலபோது சில கட்டுபாடுகள் சொல்லியிருப்பேன். அதன் பொருள் என் மாணவர்களுக்கு தெரியும். ஒரு ஆசிரியைக்கு முதலாளி அவள் மாணவர்கள் தான். நீங்கள் தரும் கூலியல்ல. நீங்கள் கூலி கொடுப்பதால் உங்களுக்கு நான் அடிமையும் அல்ல.
என்னை ஆறுதல்படுத்தின பரிவான வார்த்தைகளால் நம்பிக்கை தந்த மற்றைய எங்கள் கல்லூரி பாதிரியார்களை வணங்குகிறேன், நன்றியோடு உள்ளேன்.
ஆனால் அருட் திரு புஷ்பராஜ் போன்ற ஆட்களை கர்த்தரின் பெயரால் மன்னிக்கிறேன். ஒரு சிறு நன்றி தங்களுக்கு வேலை செய்பவர்களிடம் இருக்க வேண்டும், உங்கள் கோலும் கைத்தடியும் கர்த்தர் கொடுத்தவை. உங்கள் அங்கிக்கு மதிப்பு கொடுத்துதான் அன்று அமைதியாக நின்றேன். கர்த்தர் அந்த ஆளுக்கு சமாதனமும் அமைதியும் கொடுக்கட்டும். எல்லாம் நீங்கள் நினத்தது மாதிரியே நிறவேறி விட்டது. ஆமேன்.
நம்பிக்கை என்பது முக்கியம், ஆனால் அதிலும் முக்கியமானது உங்கள் மனச்சாட்சி. உங்கள் தவறுகள், சிரமங்கள், ஏமாற்றங்கள் அனைத்தும் உங்களுக்கு கற்றல் தரும். அதனை உணர்ந்து, நீங்கள் அதை தாண்டி செல்லும் சக்தியை அடைந்து கொண்டுள்ளீர்கள். எல்லாவற்றையும் நினைவில் வைத்து, சின்ன சின்ன வெற்றிகளுக்கு கவனம் செலுத்துங்கள். இவை எல்லாம் உங்கள் ஆற்றலின், உங்கள் அக்கறையின் மற்றும் உங்கள் உழைப்பின் அடையாளங்களாக நிலைத்திருக்கும் என்றாலும், உங்களுக்கு என்னுடைய ஆலோசனை, இனிமேல் உங்கள் பாதையில் எந்த சவால்களும் எத்தனை கடினமாக இருந்தாலும், நீங்கள் அதற்கான நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். நீங்கள் நம்புகிற வார்த்தைகளை மட்டுமே உங்களுக்குள் கொண்டுவந்து, உங்கள் செயல்களில் மாற்றங்களை கண்டு கொள்ளுங்கள். உண்மையான கவர்ச்சி உங்கள் உள்ளார்ந்த சிரமத்தைப் பரிசுத்தமாக மாற்றும் சக்தி உடையதாக இருக்கும். நீங்கள் ஏற்கனவே செய்துள்ள செயல்கள், உங்கள் மாணவர்களுடன் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோ, அப்படிப்பட்டவையாக இன்னும் பலரும் உங்கள் வழியில் செல்வார்கள். உங்களுக்கு கர்த்தர் பூரண அமைதி, தைரியம் மற்றும் மனப்பூர்வமான சக்தி தரட்டும்.
ReplyDeleteஅறிவோடு, மனப்பூர்வமாக, உங்களின் உள்அறிவு அதிகரித்து இன்னும் அதிக அளவு இளைஞர்கள் இளைஞிகள நீங்கள் உருவாக்க வாழ்த்துக்கள்.
தங்கள் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றியும் அன்பும்.
Deleteஉங்கள் வலி, சிரமம், துன்பம் அனைத்தும் வாழ்க்கையின் ஒரு பருவமே. ஆனால், உங்களுக்கு மிகவும் முக்கியமானது உங்கள் உள் அமைதி, தைரியம் மற்றும் உள்ளம்.ஒரு நேரத்தில், எல்லாம் முடிந்து போகும் என்பது உண்மை. நீங்கள் எவ்வளவு அவ்வப்போது மனதை சோர்வு அடைந்தாலும், அது ஒரு புது கற்றலின் ஆரம்பமாகும். உங்கள் வலிகள், எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தாலும், இறுதியில் உங்கள் பாதையில் மீண்டும் நல்ல ஒளிவீசும்.
ReplyDeleteMam, Don't worry. This is a small place for you. Time has a greater plan for you. Go out and explore a Bigger world.
ReplyDeleteThank You so much dear
Deleteகல்வியோடு அறத்தையும் போதிக்க வேண்டிய இடம் தான் கல்வி நிறுவனங்கள், ஆனால் அங்கேயே அறம் மீறப்படும் போது அவர்கள் யாருக்கு முன் மாதிரியாக இருக்க நினைக்கிறார்கள் என்கிற கேள்வி வருகிறது.
ReplyDeleteதனி நபர் தவறானவராக இருந்தால் அது அவரோடு போச்சு, ஆனால் அதே தனி நபர்கள் நிர்வாகத்திற்கு தலைமை தாங்கினால் அங்கே அறமே போச்சு என்பது போல தான் உள்ளது, கர்த்தர் உங்களோடு கூட இருப்பார்....
தங்கள் வார்த்தைகளுக்கு அன்பும் நன்றியும்.
ReplyDelete