அமெரிக்கன் ஜெர்கின் இன ஒரு ஜோடி வாத்து 6 மாதம் முன்பு வந்து சேர்ந்தது. சில பக்கத்து வீட்டு குழந்தைகள் வந்து, எங்க வீட்டில் வாத்தை வளர்க்க இயலவில்லை, நாய் விரட்டுகிறது. ஜோடி 600 ரூபாய் வைத்து கொள்ளுங்கள் என கொண்டு விட்டு சென்றனர், அழகான அன்னம். அதன் ஜோடி சேர்ந்த நடை அதன் வெண்மை நிறம் எல்லாம் அழகாக இருந்தது. அதன் கண் மணிகள் உருட்டுவது கூட அழகு,
தண்ணீர் காணும் பக்கம் போய் காலைவைத்து அடித்து விளையாடி கொண்டு இருக்கும். அழுக்கு பிடித்த மண்ணில் இருந்து கரையேறும் வாத்தின் அடுத்த பணி குளிப்பதாகும். தலையை மட்டும் தண்ணீரில் மூழ்கச்செய்து அது தன்னை சுத்தப்படுத்தி வெண்மையாக மாற்றும் அழகே அலாதி. தலையை சரித்து பார்ப்பதும் அன்ன நடை நடந்து ஓடுவதும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பகலில் நீந்தி குளிக்க என்றே ஒரு நீர் தொட்டி அமைத்து கொடுத்திருந்தேன்.
உணவு நேரம் மட்டுமே மனிதனை அணுகும் . அல்லாது ”நீ யாரோ, நான் யாரோ” என்ற பாவத்தில் நடப்பது கொஞ்சம் திமிர் தானோ என்று கூட தோன்ற செய்தது.மிகவும் அமைதியாக கிடந்த எங்கள் வீட்டின் வெளிப்புறம் கிவாக்..... க்வாக்.... என குரல் எழுப்பி கொண்டு நடப்பது காண்பது மட்டுமல்ல கேட்கவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
காலை எழுந்து கதவை திறக்கும் போது ஓடி வரும். வேலை முடிந்து வரும் போது குரல் எழுப்பி கொண்டு வாசலில் நிற்பது வரவேற்க ஆள் நிர்க்கின்றதே என்ற பெருமையும் தான் இருந்தது. முன் அறையில் இருக்கும் போது நம் பார்வை படும் போல முன் வாசலில் படுத்து கிடப்பதும் , அடுக்களை பக்கம் வேலை செய்ய என கிளம்பி விட்ட பின் புறம் ஓடி வருவதும் ஏதோ ஒரு நட்பை மனதில் ஏற்படுத்தி கொண்டே இருந்தது
முதல் நாள் உணவை அதன் தட்டில் வைக்கும் போது இரண்டும் போட்டி போட்டு கொண்டு சாப்பாட்டை தட்டி கீழை சிந்திய போது ’முட்டாள்’ வாத்து என திட்டி கொண்டே வந்து விட்டேன்.. . அடுத்த நாள் காலை ஒன்று மட்டும் தான் நடமாடி கொண்டு இருக்கின்றது, வீட்டின் நானாபக்கம் சென்று பார்த்த போது கழுத்து அறுக்கப்பட்டு செத்து கிடந்தது. கீரிப்பிள்ளையோ எறும்பு தீனி (உடும்போ) பிடித்து தின்றிருக்கும். இரத்தம் மட்டும் உறியப்பட்ட நிலையில் தென்பட்டது.
பின்பு ஜோடிப்பறவை உற்சாகம் இழந்து போனது. இப்போது தட்டில் சாப்பாடு இட்டாலும் போட்டி போட்டு உண்ண ஓடி வராது இணையை கூப்பிட்ட வண்னமே குரல் எழுப்பி கொண்டு நின்றது. பின்பு அதன் நடையும் மதிய நேரம் குளியலையும் நிறுத்தி ஒதுங்கி படுத்தே கிடந்தது. வைத்த சாப்பாடும் தின்ன பாடில்லை. சாப்பாடு அப்படியே கிடந்தது. தினம் ஒரு முட்டை தரும் பறவை முட்டை இடுவதையும் நிறுத்தி விட்டது.
துணைக்கு ஒரு பறவையை கேட்டு வைத்திருந்தோம். மனிதனிடம் அண்டாதிருந்த பறவை இப்போது அருகில் வந்து நாயை போன்று கால் முட்டை மடக்கி கழுத்தை சாய்த்து படுத்து கொண்டு குரல் எழுப்பும். சென்று தடவி விட்டதும் ஆசுவாசமாக நடந்து செல்லும்.. இரண்டு நாள் இவ்விதம் தொடர்ந்தது. இரண்டாம் நாள் அது என்றும் முட்டை இடும் இடத்தில் இருந்து அழுது கொண்டு இருந்தது, அழைத்தும் வரவில்லை. காலை செடி மூட்டில் அப்படியே செத்து கிடக்கின்றது.
மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளையும் தனிமை கொல்லத்தான் செய்கின்றது. அது நீச்சலடித்து குளிக்கும் தொட்டியும் சாப்பாட்டு பாத்திரவும் வெறுமையாக கிடக்கின்றது.

0 Comments:
Post a Comment