ஆண்களின் பலவகையான பசிகளும் அதனால் காயப்படும் பெண்களும், தான் கொண்ட அன்பை மரணம் வரை தூக்கி எறிய விரும்பாத பெண் மனநிலையும், ஒவ்வொரு பெண்ணுக்கும் இன்னொரு பெண் கரிசனையாக இருப்பதும் பசிப்படத்தில் காணலாம்.
பல பிற்போக்குத்தனங்களை தாங்கி படம் நகரும் போதும் அதன் பின்னால் இருக்கும் பெண்களின் உளவியலும்,
தாய்மையுடன் உலகை நோக்கும் பரிவும் பகுந்தாய்ந்து 'பசி' என்ற திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த கதைக்கருவெல்லாம் இன்னும் சில வருடங்களில் மண் மறைந்து போய் விடும்.
ஆண்களுக்கு பெண்கள் நிகர் என்றளவில் ;இன்றைய பெண்கள் எடுக்கும் முடிவுகளும் எதிர் வினையாற்றும் பாங்கும் இன்றைய இயல்பாகி விட்ட நிலையில்; என்னால் இன்னொரு பெண் பாதிக்கப்படக்கூடாது , என் உடன் பிறந்தவர்களை நான் தான் கவனிக்கனும், நான் அவசரத்தில் செய்த தப்புக்காக பிறக்க போகும் குழந்தையை எப்படி அழிப்பது இந்த வகை பெண் சிந்தனைகள் காலவெள்ளத்தில் அடித்து போன கருத்தாக்கமாக இருந்தாலும் அதன் அடிநாதமாக ஒழுகும் அன்பு கருணை எங்கு போய் ஒளிந்து கொள்ளும்?
வளரும் ஒரு கதையாசிரியரின் சாதனின் சிறு கதை வாசித்தேன். தன்னை காம இச்சையோடு நோக்கினவனை ஒரு பெண் என்ன என்ன பாடுகள் படுத்தி விளையாண்டு அவமதிக்கிறாள் என்று கொஞ்சம் அச்ச உணர்வோடு நடுக்கத்தோடு வாசித்து முடித்தேன்.
கதையாசிரியரின் கற்பனையல்ல இன்றைய நிஜம் கூட அதுவே.
என்னால் அந்த கதையூடாக அவ்வளவு எளிதாக கடந்து செல்ல இயலவில்லை. மனித உறவுகளின் அடிநாதமாக ஒழுகும் அன்பு , கரிசனை அங்கு இல்லையே என அங்கலாய்த்து கதையாசிரியரிடம் கேட்டேன்.
கதையாசிரியரின் பதில் இன்றைய நிலவரம் விளையாட்டு காட்டி துன்புறுத்தி கடந்து போவது தான் நிஜம் என்றார்..
ஆற அமர சிந்தித்து பார்த்தால் கதாசிரியர் இரு தலைமுறையை மிகவும் அவதானித்து தான் எழுதி உள்ளார் என்பதை என்னால் மறுக்க இயலாது.
கால ஓட்டத்தில் காமம், காதல், நேயம் , பாசம் என பல பல உருவகங்களில் வரும் அந்த ஒரே அன்பு கூட தோய்ந்து போய் விட்டதே?
இதை போன்ற பழைய படங்கள் கடந்து வந்த கற்று கொண்ட கலாச்சார வழியை ஏக்கத்துடன் நோக்கவும் தற்போதைய சமூக சூழலுகளை பொதிந்த கதைகளின் ஓட்டம் இன்றைய அன்பின் பரிமாணங்களை நினைவுப்படுத்துகிறது.
இரு தலைமுறை மாற்றங்களில் எது சரி, எது நல்லது என்பதை விட எது காலத்திற்கு பொருந்துவது என்ற நிலையில் நமது பூட்டன் , பெற்றோர் கொண்டாடிய பழைய தலைமுறைக்கும் நமது பிள்ளைகள் வாழப்போகும்( வாழ வேண்டிய) புதிய தலைமுறைக்கும் இடையில் சிக்குண்டு நசுங்கி போனது போல் உள்ளது.
.
(அதில் நடித்திருந்த பிரவீணா, ஷோபா போன்ற நடிகைகள் தற்போது உயிரோடு இல்லை)
நவீன எழுத்தாளர் சாதனா