ஆறு மாதங்களுக்கு பின் இரண்டே நாட்களில் ஒரு புத்தகம் வாசித்து முடிக்கும் மனநிலையை எட்டிவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் இப்பதிவு பகிர முயல்கின்றேன்.
ஆங்கிலம் மற்றும் மலையாள எழுத்தாளர், கவிதாயினி மாதவக்குட்டியின் சுயசரிதையாகும் ‘My Story’.
இயல்பிலே எழுத்து பாரம்பரியம் உள்ள நாலப்பாடு என்ற குடும்பத்தில் 1934 ல் பிறந்தவர் ஆவார் மாதவிக்குட்டி. தந்தை கல்கத்தாவில் பணிபுரிந்ததால் இவர் கல்வி, மற்றும் வாழ்க்கை மலபாரிலும் கல்காத்தாவிலுமாக கடக்கிறது. கான்வெற்றிலும் மற்றும் மேல்தட்டு பள்ளிகள், வீட்டிலும் தனி சிறப்பு ஆசிரியர்களால் சிறப்பான கல்வி கிடைக்கும் சூழலில் வளர்கின்றார்.
மேனோன் என்ற மேல் ஜாதியில் பிறந்த இவர் குடும்ப வழக்கப்படி தன்னை விட 15 வயது மூத்தவரான குடும்ப உறவினரான மாதவதாஸ்க்கு மனைவியாகின்றார்.
இயல்பாகவே விரைவில் வசைப்படும் குணம் உள்ளவராக காணப்படுகின்றார். தன் 12 வயதில் உடன் படிக்கும் 'குறுப்பு' என்ற மாணவரிடம் ஈர்ப்பு ஏற்படுவதாகவும் அவரை திருமணம் செய்ய போகிறேன் என்று தன் பாட்டியிடம் தெரிவித்தாக கூறுகின்றார். இ
அம்மாவும் பிரசித்தி பெற்ற கவிஞராக உள்ளவர். இருப்பினும் இவர் வாழ்க்கையில் பாட்டியை போன்று தாயின் கருதலான அணைப்பில் வளரவில்லை.
ஒரு முறை, கல்கத்தாவில் தன் ஆசிரியையின் மகனைத் தேடி அவர் இருப்பிடம் செல்கின்றார். அந்த நபரோ பத்திரமாக ஒரு டாக்சி பிடித்து மாதவியை அவர் வீட்டில் கொண்டு சேர்க்கின்றார். பின்பு தன் சொந்த ஊருக்கு பயணிக்கும் வேளையில் தன் உறவு பெண்ணின் தூண்டுதலில் ஓரினசேர்க்கையில் உள்படுகின்றார்.
தனதான துடுக்கும் அறிவாற்றலும் கொண்ட கமலா, தன் தந்தையிடம் இத்திருமணத்தில் தனக்கு சம்மதம் இல்லை என ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்குறி எழாது இல்லை. மணப்பந்தலில் இருக்கும் போது, 18 வயதுள்ள ஓர் இளைஞன் மேல் தனக்கு இருந்த காதலை மறக்கவில்லை அந்த காதலனும் சாட்சியாகவே மாதவதாஸுக்கு மனைவியாகின்றார். முதல் புள்ளி முற்று புள்ளி என்பது போல் முதல் இரவு அன்றே தனது கணவரின் பாலியல் வன்முறை அவர் மேல் ஓர் வெறுப்பை உருவாக்குகிறது. பின்வரும் பக்கங்களிலும் தன் வணவர் உருவம், பல், தொழில் அவர் செயல்பாடுகள் எதிலும் இவருடைய எண்ணங்கள் ஒட்டவே இல்லை ஈர்க்கவும் இல்லை. பல முறை நோய் தொற்றால் மருத்துவ மனையில் அவதியுறும் கவிதாயினியால் தன் நண்பர்கள் வந்து கண்டு, முத்தம் கொடுத்து சென்றதையும் நினைவு கூறும் ஆசிரியர், தன் கணவர் வந்ததாக குறிப்பிடவில்லை
தன் பிறந்த நாள் அன்று, தங்கள் அறையில் கணவர்
நண்பருடன் செலவழிக்கும் கணங்களை வெளியில் இருந்து அழுகையும் வெறுப்புமாக காணும் சூழலுக்கு
தள்ளப்படுகின்றார்.
பெரும்
பணக்காரியாக , நிறைய தங்கம் இரத்தினங்கள் அணிந்து மகாராணி போன்று வாழ வேண்டும் என்ற
ஆசை கொண்ட கமலாவால்; ஒரு வங்கி ஊழியர் மனைவியாக, தரித்திரம் பிடித்து, இரண்டு பிள்ளைகளையும்
வளர்த்து கொண்டு, வசதியற்ற வீட்டுகளில் வசிப்பது பெரும் கவலையும் அவமானவுமாகவும் உள்ளது.
தான் இருண்ட நிறம், தனக்கு அழகில்லை, தனக்கு பகிட்டான உடை இல்லை என்ற தாழ்வுணற்சியிலும் ஆழ்து கிடக்கிறார் கமலா.
தன் மனவெளியை புரிந்து கொள்ள யாருமில்லை என்றிருந்த மாதவிக்குட்டிக்கு இத்தாலி நாட்டை சேர்ந்த போளோ கவிஞர் காதல் தீயுடன் வந்து சேருகின்றார். தன் உற்ற நண்பன் மட்டுமல்ல தன் காதலனாகவும் மாற்றி கொள்கின்றார். ”உன் கணவர் குழந்தைகளை விட்டு விட்டு என்னுடன் வா உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன்” என்று இத்தாலி கவிஞர் அழைத்தாலும் தன் குடும்பம் தன் குழந்தைகள், தன் அப்பா குடும்பம், தன் சகோதரர்கள் எண்ணி விவாககரத்து என்ற நிலைக்கு எட்ட வில்லை.
தனக்கான பிடித்த பல நண்பர்கள் இவரை தேடி வருக்கின்றனர் அல்லது இவர் அவர்களுடன் செல்கின்றார். ஒரு இடத்தில் இவர் தொடர்ந்து புத்தகம் வாங்கும் கடை உரிமையாளர் இளைஞர் மேல் ஓர் ஈர்ப்பு வருகின்றது. கடை உரிமையாளர் பின்பு கவிதாயினியுடன் மேற்கொள்ள வேண்டிய உரையாடல்களை மனைவியின் துணையுடனே மேற்கொள்ளுவதை கமலா ஓர் இடத்தில் கேலியாக குறிப்பிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட ஆணுடன் தோன்றிய ஈர்ப்ப்பை இருவரும் உணர இவரை தேடி அந்த நபர்களே எட்டுகின்றனர். இவ்வாறாக ஒரு கணவனின் நிராகரிப்பு, கணவனுக்கு மனைவியின் மேலுள்ள ஈடுபாடின்மை ஒரு பெண்ணை காதலை தேடி தேடி கண்டடைய, தன் நிலைகடந்து பயணிக்க வைக்கின்றது. ஆண்களிடம் தோன்றும் அதே ஈர்ப்பு பெண்களிடமும் பேணுகின்றார். தன் கணவரிடமும் இவைகள் பற்றி கூறுகின்றார். கணவரும் ”நல்லது தான் பெண் மருத்துவர் தானே உன்னை தவறாக பயண்படுத்த மாட்டார்” என்று கூறி அந்த உறவை வளரவே இடம் கொடுக்கின்றார்.
கொல்கத்தா,
பூனா, பாம்பே போன்ற ஊர்களில் கணவரின் மாற்றலுகளுக்கு இணங்க குடியிருக்க வேண்டியிருந்த
மாதவியை தன் வீட்டு நினைவுகள் விட்டு வைக்காது துரத்துகின்றது. சில காலம் தன் சொந்த சொந்தஊரில் சொந்த வீட்டில் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி விவசாயத்தில் ஈடுபடுகின்றார். தன் கணவரையும் வேலையை ராஜினாமா
செய்து விட்டு தன்னுடன் இருக்கும் படி வேண்டுகின்றார். இந்த வேளையில் கேரளாவிலும் புகழ்பெற்ற
கவிதாயினியாக சமூக ஆர்வலராக வலம் வருகின்றார்.
இவருடைய சுய சரிதையின் கதையின் சில பக்கங்கள் மலையாள இதழ்களில் வருவதால், கலாச்சார காவலர்களால் அவமதிக்கு உள்ளாகுகின்றார். மக்கள் மத்தியில் குணம் கெட்ட பெண் என்ற அடையாளவும் நிலைபெறுகின்றது. கணவனின், மற்றும் இளைய மகனின் வேண்டுதலுக்கு இணங்கி மறுபடியும் பூனாவில் சென்று வாழும் சூழலுக்கு தள்ளப்படும் கமலா தன் சொந்த தேசத்தை பற்றியுள்ள ஏக்கத்திலே நாட்களை நகத்துகிறார்.

”என்
மகன்களுக்கு என தன் சிதையில் சாம்பல்கள் மிஞ்சும் என் மகன்கள் துயர் ஆறும். அவர்களுக்கு
நல்ல அறிவான மக்களை மருமக்கள் கொடுப்பார்கள். என் தலைமுறை பெற்று பெருகி இந்த பூமியில் வாழ்வார்கள்” என தன் ஆசையை குறித்து விட்டு தன் கதையை முடித்துள்ளார்.
இந்த நாவல் 1971 ல் வெளிவந்தது. ஒரு திராவிட தென்
இந்திய பெண்ணின் அதீத தைரியம் மற்றும் சுதந்திரமான மனவெளியின் வெளிப்பாடே இக்கதை. கதாசிரியின்
உண்மை தன்மையை தன் வாழ்க்கையை எந்த சமரசவும் அற்று எழுத முன் வந்த துணிவை பாராட்டலாம்.
பல பெண்கள் திருமணம் இவ்வகையில் தான் முடிகின்றது. பிடிக்காத கணவனுக்கு பிள்ளைகளும்
பெற்று கொடுத்து வாழ்ந்து முடிக்கின்றனர். அதன் வேதனையை அதன் பாதகங்களை எழுத்தூடாக
விட்டு சென்றவர் கமலாதாஸ்.
தான்
சந்திக்கும், சல்லபிக்கும், ஆண்களில் கிருஷ்ண பகவானை காண்பதும் தன்னை ராதையாக பாவிப்பதும்
தன் பாட்டி கமலாவிடம் நீ கிருஷ்ணனின் மனைவி ராதை என்று சொல்லி கொடுத்ததின் வினையா அல்லது
நம் கலாச்சார கதைகள் ஊடுருவி சென்றதின் விளைவா என்பது புதிரான கேள்வி தான்.
தன் தேவையை தன் ஆசையை நிராகரிக்கப்பட்டதின் வலிகளை வேதனைகளை காகிதத்தில் வடித்தவர், கணவரிடம் சொல்லவே இல்லையா சொல்லியும் அவர் கண்டு கொள்ளவில்லையா என்பது தெரியாத கேள்விகள்.
இருப்பினும்
கணவன் மனைவி உறவு என்பது; ஜாதகம், ஜாதி கடந்து மனதால் இணைய வேண்டியதின் அவசியத்தையும் இந்த புத்தகம் அறியத்ததருகிறது .
. அன்பு, அன்பு என்று அவர் அல்லோலப்படுவது அதற்கென அவர் உழன்று அழுவது பல இடங்களில் காணலாம். பெண் கவிஞியாக பல விருதுகளை பல நல் மதிப்புக்களை பெற்ற கவிஞிக்கு தன் சொந்த வாழ்க்கையில் எதிர் கொண்ட சவால்களுக்கு அவர் கை கொண்ட முறை அவருக்கு உதவியதா என்றால் பல வேளைகளில் அவர் மன உளச்சலிலே தன் காலத்தை கடத்தியதாகவே காணலாம்.

தன் முதல்
மகனுக்கு உருவான முதல் காதலை வெகுவாக ரசித்து எழுதியுள்ளார் கமலா. பிள்ளைகள் வளர்ப்பில், பெற்றோரை பராமரிப்பதில்,
தன் சகோதரங்களிடம், தன் மாமியார் என உறவுகளை நயமாக பேணுவதில் சிறந்து விளங்கினார். இருப்பினும் சொந்தங்கள்
கொடுக்கும் அச்சுறுத்தலை வெறுக்கின்றார் வெடிக்கின்றார்.
உணர்ச்சி கொந்தளிப்பில் வாழ்ந்த ஓர் பெண்ணின் மனவும் அதை வெறும் உணர்வற்ற மனதுடன் கண்டு, உடன் வாழ்ந்த கணவனின் உறவின் நிலைகளையை காட்டி செல்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது நபருடன் காதல் வருவதும் அவர்கள் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும், அதற்கு காரணமாக அன்பு, காதல்- இன்மை இல்லா வாழ்க்கை என்று கூறுவது அகத்தின் இயலாமையா அல்லது பெண் மனத்தின் இனம் புரியா ஏக்கங்கள் தானா என்று விளங்க வேண்டியுள்ளது. காதல் புனிதம் மட்டுமல்ல காதல் ஒரு வாதை, நோய் என்றும் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது இவருடைய சுயசரிதை வாசிக்கும் போது
.இவர் எழுத்து நடை உண்மையை உண்மையாக சொல்லும் தைரியம், நம்மை அவரை நேசிக்க வைக்கின்றது.

ஆழமாக
சிந்தித்து வாசிக்க வேண்டிய ஆன்ம கதை . ஏன் என்றால் இன்றும் பல பெண்கள் மணப்பந்தலில்
இந்த மனநிலையில் துவங்கி, இருட்டிலே முடித்து, பிள்ளைகளும் பெற்று வளர்த்து வெளிச்சமே
அன்று வாழ்க்கையை முடித்து விட்டனர். மாதவிகுட்டியைள போன்ற எழுத்தாளர்கள் தங்கள் வேதனைகளால் தங்கள் நிராகரிப்பின் வேதனையால் காலாகாலம் மக்கள்
மனதில் எழுத்தாக வாழ்கின்றனர்.
தனது
67 வது வயதில் இதே காதல் தாகத்தால் மதம் மாறி, தன் சுதந்திரத்தையும் இழந்து அடிமையாக்கப்பட்டு
கிருஷ்ணரை முகமதாக மாற்றி காதல் பொய்யானது
என்று நிரூபித்து சென்றவர் கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா!. http://josephinetalks.blogspot.com/2012/04/blog-post_12.html
0 Comments:
Post a Comment