பிரஞ்சு நாட்டின் ஆளுமையில் இருந்த பாண்டிச்சேரி, இந்திய சுதந்திரம் அடைந்ததை தொடர்ந்து 1954 ல் தான் சில வரையறுக்கப்பட்ட திட்டத்துடன் இந்தியாவுடன் இணைந்தது. 1979ஆம் ஆண்டு, பாண்டிச்சேரியை இந்திய மாநிலங்களுடன் இணைக்கும் திட்டத்துடன் அன்றைய பாரத பிரதமர் மொராஜ் தேசாய் பேச, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் எழுந்த மக்கள் போராட்டம் அதை தொடர்ந்து நிகழ்ந்த கலவரம் பின்பு அது அரசியலாகி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையை பற்றி விலாவரியான விளக்கத்துடன் தொகுக்கப்பட்ட புத்தகம் ஆகும் இது.

1947ல் இந்தியா ஆங்கிலேயரின் ஆளுகையில் இருந்து சுதந்திரம் பெற்றிருந்தாலும் 1954 நவம்பர் 1 ஆம் தியதி தான் பிரஞ்சு ஆளுகையில் இருந்து இந்தியா நாட்டுடன் யூனியன் பிரதேசமாக இணைகின்றது. புதுச்சேரியின் தனிதன்மை காக்கப்படும் மக்கள் விரும்பினால் ஒழிய தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கலுடன் புதுச்சேரியை இணைக்க போவதில்லை என நேரு தலைமையிலுள்ள இந்திய அரசாங்கம் கொடுத்த உறுதி மொழிக்கு மொராஜி தேசாய் சவால் விடுகின்றார். அவர் விருப்பத்திற்கு அன்றைய தமிழ முதல்வர் உதவதும் இக்கலவரத்திற்கு பின்புலமாக அமைகின்றது.

கலவரத்தில் கொல்லப்பட்ட பாண்டுரஙன் ஒரு மின் தொழிலாளி ஆவார். எந்த அரசியலும் தெரியாத அவர் மனைவி பின்பு அரசு கொடுத்த பணியின் துணையால் தன் குடும்பத்தை வறுமையுடன் நடத்தி செல்வதையும் பதிந்துள்ளார் ஆசிரியர். அதே போன்று அக்கலவரத்தில் இறந்த இளைஞர் குடும்பம் எந்த உதவியும் பெறவில்லை. போலிஸ் தோட்டக்களும் கலவரத்திலும் பங்கு கொண்ட சாதாரண எளிய மக்களையை குறி பார்த்து செல்கின்றது.
செஞ்சி நாயக்கர்களில் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது புதுச்சேரி. 1512ல் போர்துக்கீசியர் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர். பின்பு டென்மார்க் நாட்டினரின் வணிக இடமாக உருமாறுகின்றது. 16ஆம் நூற்றாண்டு மத்திய வேளையில் அகபாத் நிசாமின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. வியாபாரம் செய்து வந்த பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி,. ஆளுகை புரிபவர்களுக்கு பணம் கடம் கொடுக்கின்றது. பணத்தை திருப்பித் தர இயலாத சூழலில் புதுச்சேரியின் சுங்கவரியை வசூலிக்கும் உரிமையை பிரஞ்சு பெற்று கொள்கின்றது. பின்பு 1677 ல் மராட்டிய மன்னன் சிவாஜியின் ஆளுகைக்கு புதுச்சேரி வருகின்றது. பணத்தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியை ஆளுனரான ராஜாராம் விற்க முற்படும் போது புதுச்சேரியை டச்சுகாரர்கள் வாங்கி கொள்கின்றனர் . 1697ல் டச்சுகாரர்களீடம் இருந்து புதுச்சேரியை பிரஞ்சுகாரர்கள் மீண்டும் வாங்கினர். 1761ல் ஆங்கிலேயர் வசம் புதுசேரி வருகின்றது. பின்னர் கி. பி 1763 ல் மேற்கொண்ட பாரீஸ் உடன்படிக்கை ஊடாக இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடங்களை மீட்டு கொள்கின்றது. பின்பு 1793 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகள் ஆங்கிலேயர்கள் வசம் செல்கின்றது. 1816ல் ஆங்கிலேயர்கள் சில பகுதிகளை பிரஞ்சுகாரர்களிடமே திருப்பி கொடுத்து விட்டனர். [விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய பாரதியார் அரவிந்தர் மற்றும் வ வெ.அய்யர் போன்றோருக்கு அடைக்கலம் கிடைக்க உதவியதும் இவ்வகையாக அரசியல் கட்டுப்பாடுகளாகும்]
புகழ் பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன், முன்னுரை தந்துள்ளார். ஜூனியர் விகடன் ஆசிரியர் ப திருமாவேலனின் அணிந்துரை அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் ஆவணப்பட இயக்குனர் வெ பாலன் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
0 Comments:
Post a Comment