அந்த ஆலயத்தின் உறுப்பினர்கள் என்பவர்கள் தோட்ட தொழிலாளர்கள் வியாபாரிகள், கொஞ்சம் மலையாள சகோதரர்கள். மலையாள மக்கள் லாட்டின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் வருவதை பெரிய பெருமையாக கருதுவதில்லை. அவர்கள் இன சிறப்பை, பரம்பரையை எடுத்து சொல்லும் ஆலயங்கள் நிச்சயமாக அது சிரியன் கத்தோலிக்க தேவாலயமோ அல்லது யாக்கபட் ஆலயமாகத்தான் இருக்க இயலும். வாரம் ஒரு ஞாயிறு தமிழ் திருப்பலி விழாக்களின் தமிழ் பாதிரியார்களின் செப வழிபாடு என்ற ஒரு சிறு சலுகைகளுடன் இந்த ஆலயத்தின் கீழ் தமிழர்களும் கலந்து வந்தனர். அதிகாரத்தின் படிகளில் தமிழர்கள் வர முயல்வதில்லை. அப்படி வரும் ஒரு சில தமிழர்களும் ஜாதியின் பெயரால் வசதி வாய்ப்பின் பெயரால் தனித்து தனி தனி துருவமாகவே நிற்க கூடும்.
ரோட்டை வீதி கூட்ட வேண்டும் என்று முடிவெடுத்ததும் முதன் முதலாக எடுத்த முடிவு கடைகளை அப்புறப்படுத்துவது ஆகும். அப்படி கடைகளை அப்புறப்படுத்தினால் தேயிலத்தோட்ட தொழிலாளர்களை போன்றே பல மூன்று தலைமுறைகளாக குடியிருந்த தமிழ் வியாபாரிகளும் தங்கள் இடத்தை விட்டு நகர நிர்பந்திக்கப்படுவர். ஊர் உலக வாயை மூடும் நிகழ்வே குருசடியை இடிப்பது ஆகும். இந்த குரிசடியை இடித்தால் கொஞ்சம் பின்னால் தள்ளி இன்னொரு குருசடி கட்டுவது ஆலயத்திற்கு பெரிய பிரச்சினை ஆகாது. ஆனால் கடைகள் இடிக்கப்படும் போது கடை வியாபாரிகள் அங்கிருந்து குடிபெயர வேண்டும் தங்கள் வாழ்வாதாரத்தையை இழந்துள்ளனர்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது மக்களை புறம் தள்ளி ரோட்டை விரிவடைய வைப்பதிலா உள்ளது. கடந்த 30-40 வருடமாக அரசியல் நடத்திய கட்சிகள் எங்கள் ஊருக்கு என்ன செய்துள்ளது. வண்டிப்பெரியார் மக்கள் உதவியுடன் சட்டமன்ற உறுப்பினாராக ஒருவர் 3 தடவை ஜெயித்து அதிகாரத்தில் இருந்துள்ளார். இன்னொரு கல்லூரி பேராசிரியரோ தமிழர்களின் ஓட்டு உதவியுடன் பார்லிமென்றின் சபாநாயகராக அலங்கரித்து வருகின்றார். வண்டிப்பெரியாரை சுற்றி சுற்றி வந்து அரசியல் நடத்தி இன்று கேரளா அரசியல் உச்ச வட்டத்தில் இடம் பிடித்து இருக்கும் மந்திரியும் உண்டு.

ஆனால் எங்கள் ஊரில் இன்னும் உருப்படியான ஒரு கல்லூரி இல்லை. ஒரு கல்லூரி வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கு ஏக்கர் வைத்திருக்கும் எஸ்டேட் அதிபர்களிடம் கேட்காது, பொது மக்களிடம் இடம் தாருங்கள் கல்லூரி தருகின்றோம் என்பர். கோட்டயம் போன்ற பகுதியில் கூட தமிழர்கள் ஓட்டை குறி வைத்து தமிழர்கள் நலம் பற்றி பேசிகிறவர்கள் தமிழர்களை மக்களாக கொண்ட ஊரைப்பற்றி வாய் திறக்க மாட்டார்கள். இலங்கையுள்ள மலையக தமிழர்களுக்கு உலக அளவில் ஓர் அடையாளம் உண்டு. ஆனால் தமிழ் கேரளா மலை தேசத்தவர் அடையாளமே அற்று அழிந்து கொண்டு இருக்கும் சூழலில் தான் உள்ளனர். மதம், அரசியல், பணம், இனம் சேர்ந்து ஒரு பக்கவும் வாழும் உரிமையே மோசம் போகும் மக்கள் இன்னொரு புறவுமாக எங்கள் ஊர் தலை விதி எழுதப்பட்டுள்ளது. 

கேரளத் தமிழனின் உள்ளத்தின் வலி உங்கள் பதிவில் இழையோடுகிறது. இன்னும் இதுபோன்ற பதிவுகளை எதிர்ப்பார்க்கிறோம்
ReplyDelete