28 Nov 2012

என் முதல் புத்தகத்தை பற்றிய சுபி அக்காவின் கருத்துரை!

நான் தேடும் வெளிச்சங்கள்.'ஜோ உங்கள்  எழுத்து மனசை தொடுகிறது. உங்கள் முதல் புத்தகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு லாவகமாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் இலகுத் தமிழ் நடையும் கதைகள் சொல்லும் விதமும் பக்கத்தில் இருந்து கதை சொல்லுவது போன்ற உணர்வைத் தருகிறது.உங்களை வாழ்வில் உயர்த்திய வழிகாட்டியவர்களுக்கு...

27 Nov 2012

சில்லறை வர்த்தகம்- அந்நிய முதலீடு

இன்று பரவலாக விவாதிக்கும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தேவையா இல்லையா என்பதை பற்றி அனைவரும் மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம் ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் உண்டு எனிலும் நம் சமூக சூழலை கணக்கிலெடுக்காது அரசு மேற்கொள்ளும் இந்நிலை மக்கள் நலம் சார்ந்தது அல்ல!...

26 Nov 2012

சொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி?

 கடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு கதைகள், நிகழ்வுகளா என ஆச்சரியம் கொள்ள செய்தது. சில சம்பவங்கள் கண்ட போது கண் ஈரமாகின ஆனால் பல நிகழ்வுகள் சிரிப்பை தான் வர வைத்தது.  தமிழக சீரியல் கதாநாயகிகளை விட...

17 Nov 2012

சபரிமலை ஐய்யப்பன் கோயில் தாலாட்டு பாடல் வரலாறாக மாறிய போது!

பக்தி பாடல்கள் கேட்பது பக்தி பரவசத்தில் நம்மை ஆழ்த்துவது மட்டுமல்ல மனதிற்கு எப்போதும் அமைதி தருவது.  சில பாடல்கள் அதிலும்  சாகவரம் பெற்று என்றும் கேட்க கேட்க இனிமையாக இருக்கும். அவ்வகையில் நான் பிறந்த தேசத்தில் இருந்து உருவான ஒரு பாடலை பற்றி கதைக்க இன்று முற்பட்டுள்ளேன். பாட்டின்...

12 Nov 2012

தீபாவளி பரிசுடன் கண்டன் பூனை!

றிக்கி போன பின்பு வீட்டிற்க்கு களை இழந்து விட்டது. எங்களை வழி அனுப்புவதும் நாங்கள் வீட்டிற்க்கு வரும் போதும் எங்களை வரவேற்கும் ஒரே ஜீவன் அவன் தான். துள்ளி துள்ளி ஓடி வந்து வரவேற்பதே ஒரு தனி அழகு தான். எங்களை ஆவலுடன் காத்திருப்பவன் அவனாக தான் இருந்தான். நாங்கள் நாலுபேரையும் நன்றாக புரிந்து வைத்திருந்தான்....

6 Nov 2012

ஸ்ரீகங்கைமகன்-விமர்சனம்

எனது வாசிப்பில் - நான் தேடும் வெளிச்சங்கள். கி.பி 1250 ஆம் ஆண்டுகளில் கிரேக்கத்தில் ஒரு மனிதன் வாழ்ந்தான். அவனது சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சமூக எண்ணங்களில் இருந்து வேறுபட்டன. பிற்பட்ட காலத்தில் அவனது சிந்தனைகள் எண்ணங்கள் யாவும் கிரேக்கத் தத்துவங்களாக உருப்பெற்றன. காலையில் எழுந்து இரவுவரை...