சமீபத்தில் ஜெ.பி.ஜோஸபின் பாபா அவர்கள் எழுதிய "நான் தேடும் வெளிச்சங்கள்" சிறுகதை தொகுப்பை வாசித்தேன்!
ஆண்டவனைப் பாடுதலைத் தாண்டி, ஆள்பவனைப் பாடுவதைக் கடந்து, தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அழகு பார்த்து வந்த இலக்கியத்தில் இன்று சாமானிய மக்களைக் குறித்து எழுதப்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது!

"நான் தேடும் வெளிச்சங்கள்" முழுவதும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையே
பேசப்படுகிறது! அதுவும் அவர்களின் மொழிநடையிலேயே பேசப்படுகிறது!
வியாபாரப் பண்டிகை எனும் அடைமொழி கொடுக்கப் பட்ட தீபாவளி குறித்த 'தீ வலி" கதை...; சொந்த வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தின் வழியைக் கூறும் "சொந்தவீடு" கதை...என கதைகள் அனைத்தும் சராசரி வாழ்விலிருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது! கதையாசிரியர் ஜோஸபின் பாபா அவர்களின் மொழிநடை அருமையாக இருக்கிறது! கிளைக் கதைகளை அருமையாக வெளிப்படுத்துகிறார்! அதே சமயம் மையக்கதையை இன்னும் வலுவாக அமைத்தால் மேலும் சிறப்பாக அமையும்!! தங்கள் எழுத்துப் பயணத்திற்கு என் இனிய வாழ்த்துக்கள் அக்கா!!

கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியரான வைகறையிடம் வாழ்த்து பெற்றதில் மகிழ்கின்றேன். பெருமை கொள்கின்றேன். நன்றி மகிழ்ச்சிகள் சகோதரா.
0 Comments:
Post a Comment