அரசு அதிகாரி, சிறந்த கவிஞர், ஆங்கிலம், தமிழ் என இரு மொழியும் சிறப்பாக கையாளும் எழுத்தாளர், இரு புத்தக ஆசிரியர் என பல அடையாளங்கள் உண்டு அன்புச் சகோதரர் பீரொளி அவர்களுக்கு. இவை எல்லாம் கடந்து சிறந்த மனித நேயர், மற்றும் சிறந்த பண்பாளரை நேரில் காணவும் என் புத்தகத்தை கொடுக்கவும் இயன்றது என் பாக்கியமே.
புத்தகத்தை வாசித்து தன் கருத்தையும் பகிர்ந்துள் நண்பருக்கு என் இதயம் நிறைந்த நன்றி வணக்கங்கள். ஒரு படைப்பாளி என்ன தான் ஒரு கலையை படைத்தாலும் ரசிக்க ரசிகர் இல்லை எனில் அதின் சிறப்பு ஒன்றும் இல்லை. அவ்வகையில் என் முதல் புத்தகத்திற்க்கு முதல் கருத்து விமர்சனம் சகோதரர் கவிஞர் பேரொளி அவர்களிடம் பெற்றதில் மகிழ்கின்றேன்.
புத்தக விமர்சனம் எழுத்தால் அருளிய சகோதருக்கும் வாய் மொழி விமர்சனம் அருளிய சகோதரர் மனைவி அவர்களுக்கு என் பணிவான நேசமான வணக்கத்தை செலுத்துவதில் பெருமிதம் கொள்கின்றேன் கடமைப்பட்டுள்ளேன்.
ஒரே சம்பவங்கள் பல வீடுகளில் வேறு வேறு கதாபாத்திரங்கள் ஊடாக நடப்பது என்பது உண்மையாக இருப்பதால் கண்டு உணர்ந்ததை எழுதிய போது அது என் சொந்த உணர்வாக/கதையாக பரிணமித்தாகவே எண்ணுகின்றேன்.
ஒவ்வொரு படைப்பாளனும் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு
செய்தியை விட்டுத்தான் செல்கிறான். எந்த ஒரு படைப்பும் எழுத்துக்களை
மட்டுமே கோர்வைப் படுத்தி வெளிப்படுவதில்லை. சமுக சூழ்
நிலையில்...சந்தித்த..வாழ்ந்து கொண்டிருக்கும்...சமுகத்தின் தேவை என அவன்
உணரும் உணர்வுகள்தாண் அவனுக்குள் பரிணமித்து படைப்பாய் பிரசவிக்கிறது.
திருமதி. ஜோசபின் பாபா அவர்கள் நான் தேடும் வெளிச்சங்கள் என்ற தேடல்களை வாசித்த பொழுது என்னால் துல்லியமாக உணரமுடிந்தது. மேலோட்டமாக ஏதோ அவரது கடந்து வந்த வாழ்க்கைப் பயணங்களின் அத்தியாயங்களை அமைத்திருப்பது போல் தோன்றும். ஆனல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆர்ப்பாட்டமின்றி மெல்லியதாய்..எளிமையாய்...ஒரு செய்தியை பதித்துச் சென்றுள்ளார் இந்த சமுதாயத்தின் பால் கொண்ட அக்கரையினால்.
திருமதி. ஜோசபின் பாபா அவர்கள் நான் தேடும் வெளிச்சங்கள் என்ற தேடல்களை வாசித்த பொழுது என்னால் துல்லியமாக உணரமுடிந்தது. மேலோட்டமாக ஏதோ அவரது கடந்து வந்த வாழ்க்கைப் பயணங்களின் அத்தியாயங்களை அமைத்திருப்பது போல் தோன்றும். ஆனல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆர்ப்பாட்டமின்றி மெல்லியதாய்..எளிமையாய்...ஒரு செய்தியை பதித்துச் சென்றுள்ளார் இந்த சமுதாயத்தின் பால் கொண்ட அக்கரையினால்.
எதிர் வரும் கருத்தரங்கில் ஒரு அமைதியான சுழலில் படைப்பாளர்களை சிநேகத்துடன் சந்தித்து உரையாடும் பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி .
எனக்கும் அந்த சந்தர்ப்பம்...பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
"நான் தேடும் வெளிச்சங்கள்" வாசித்து கருத்து பகிர்ந்த அன்புச் சகோதரருக்கு Mohamed Adam Peeroli நன்றி மகிழ்ச்ச்சிகள்.
ReplyDeleteHappy and felt the sincere words in your comments...My wife too conveyed her greetings and wishes for your success sister J P Josephine Baba...