சமீப
நாட்களாக வந்த தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த
படத்தை பார்த்த ஒரு திருப்தி தந்த படம் "வழக்கு எண் 18/9". சினிமா என்பது ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். அப்பணியை இப்படம் சிறப்பாக செய்துள்ளது. இந்த
படம் வழியாக தற்கால சூழல்களை மிகத் தெளிவாக ஆணித்தரமாக விளக்கியுளார். தற்போது தமிழக மக்கள் ரியல் எஸ்டேட் மற்றும் கல்வி வியாபாரம் என்ற சுழியில் சிக்கி உள்ளதை சினிமா என்ற ஊடகம் வழியாக அழுத்தமாக பதிவு செய்யப்படுள்ளதும் போற்றப்பட வேண்டியது. ஏழைகள் வாழ்வு, பணக்காரர்களின் சுகம், தேவைக்கு என
அல்லல்ப்படுவதை இயக்குனர் பாலாஜி சக்தி வேல் ஒரு சினிமா போன்று அல்லாது ஒரு சரித்திர உண்மை போன்றே எடுத்துள்ளார்.
முன் பின் தெரியாதவனுடன் தன் பெற்றோர்
அறிவுறுத்தலும் மீறி பழகும் இளம் பெண் கொடியவனிடம் மாட்டுவதும் இதனால் அவள் வீட்டு வேலை உதவி செய்யும் ஏழைப்பெண் பாதிக்கப்படுவதுமே கதை! மற்றும் தொலை பேசி என்ற மாபெரும் கண்டுபிடிப்பை இளம்
தலை முறை எவ்வளவு கேவலமாக பயன்படுத்துகின்றது என்று பார்வையாளர்கள் கேள்வி கேட்காத
அளவிற்க்கு நேர்மையாக படமாக்கியுள்ளார். பெற்றவர்கள் வேலை, பிரோமோஷன் என்று குழந்தைகள் கவனிப்பை
வேலையாட்களிடமும் தனிமையிலும் தள்ளி விடுவது வழியாக விளக்கின் ஒளியின் விழும் விட்டில் பூச்சுகளாக மாற்றுவதை அழகாக படம் பிடித்து
காண்பிக்கபட்டுள்ளது. மேலும் நிதானமாக தீர்வு
காண வேண்டிய இடத்தில் பெற்றோரின் அதி கோபம் மகளைகளிடம் கொடியவனையும் நல்லவனாக அடையாளப்படுத்துவதையும்
காணலாம்.
ஏழைகள்
கொள்ளும் தூய காதலும், நட்பும்; தங்கள் நலன் பேணாமல் தான் நேசிப்பவர்களின்
நலம் மட்டுமே காணும் இயல்பான அவர்கள் குணத்தை எடுத்து காட்டியுள்ளனர் இப்படம் ஊடாக. கேடுகெட்ட பணக்கார
மாணவன் கூட ஒழுக்க இன்மையான ஒரு தாயின் நீட்சியான குணமாகவே காட்டப்பட்டுள்ளது. இது இன்றைய சமூகத்தில் ஒரு உண்மையான அவல நிலையும் கூட. பணம்
சேர்க்க என்று கீழ்த்தரமான வாழ்கை நடத்தி கொண்டு இருக்கும் பெற்றவர்களை கண்டு வளரும்
குழந்தைகள் எவ்வாறு சமூகத்தின் குற்றங்களின் ஆணிவேராக மாறுகின்றனர் என்று கண்கூடா காண்கின்றோம் பல வேளைகளில்.
நீதியின் காவலர்களான காவல்த்துறை பணக்காரர்களின் சேவகர்களாக மாறுவதும் உண்மையை பொய்யாகவும்; ஒரு மனிதனுடைய ஏழ்மையை பயன்படுத்தி குற்றவாளியாக மாற்றுகின்றதும் துயரான உண்மைகள்.
படம்
முடியும் போது காவலர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டது எண்ணி மனம் ஆறுதல் கொண்டாலும் உண்மையில்
இப்படி ஒன்றும் நடக்காது! பல நிரபராதிகள் ஜெயில் கம்பிக்குள் வாழ்கை முடக்கப்படுவதும்
நிஜ குற்றவாளிகள் சமூகத்தை ஆளுமை செய்யும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளுமாக மாறுவதுமே
நிஜத்தில் உள்ளது.
சமூக
சிந்தனை தரும் கதை, திரைக்கதை, வசனம் என்று விருவிருப்பாக நகத்தியுள்ளார் இயக்குனர். பின்னணி
இசை தான் பல இடங்களில் இடம் பொருள் அற்று ஒலிக்க செய்வதாக காண முடிகின்றது. இப்படம்
பெரியவர்கள் என்பதை விட விடலைப்பருவ மாணவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இன்றைய
திரைப்பட ரசனையில் மூழ்கியிருக்கும் மாணவர்கள் இந்த படத்தை கண்டிருப்பார்களா என்பது
சந்தேகமாகவே உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இப்படத்தை காண உற்சாகப்படுத்த
வேண்டும் என்பது காலச் சிறந்தது.
இப்படத்தில் நடித்துளவர்களும் உயிரோட்டமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். காவலர் அதிகாரியாக நடித்தவர் நடிப்பை புகழ்ந்த அளவு இதில் கதாநாயகனாக நடித்த இளைஞன் அவன் நண்பனாக வரும் சிறுவனின் நடிப்பு பாராட்டப்பட்டதா என்பதில் நிச்சயமில்லை.
போலிஸ்
துறை இப்படத்திற்க்கு கண்டனம் தெரிவிக்க ஏன் முன் வரவில்லை! இந்த படத்தின் கதை தங்களின் தற்போதைய நிலவரவும் ஒன்று தான் என்று ஏற்று கொண்டுள்ளனரா?
ஏழைகள் என்றால் தமிழன் முகவும் பணக்காரகளுக்கு தமிழன் அடையாளம் அற்று வேற்று மாநில சாயல்கொண்ட நடிகர்களை ஏன் இயக்குனர் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது மட்டுமே மனதில் எழும் நெருடலான ஒரு கேள்வி!
ஏழைகள் என்றால் தமிழன் முகவும் பணக்காரகளுக்கு தமிழன் அடையாளம் அற்று வேற்று மாநில சாயல்கொண்ட நடிகர்களை ஏன் இயக்குனர் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது மட்டுமே மனதில் எழும் நெருடலான ஒரு கேள்வி!
இந்த படம் எங்க ஊர் தியட்டரில் வந்த வேகம் தெரியாது, காண்மல் போய்விட்டது. அதுவும் ஒரே ஒரு தியட்டரில் மட்டுமே காட்டப்பட்டது. வரவேற்ப்பு அவ்வளவாக இல்லை போலிருக்கு. இனி சீடியில் வந்தால்தான் உண்டு. பார்க்க ஆவல்தான்..
ReplyDeleteவிமர்சன்ம நன்றாக உள்ளது , படம் பார்க்க ஆவல் , விரைவில் பார்ப்பேன்// ஏழைகள் என்றால் தமிழன் முகவும் பணக்காரகளுக்கு தமிழன் அடையாளம் அற்று வேற்று மாநில சாயல்கொண்ட நடிகர்களை ஏன் இயக்குனர் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது மட்டுமே மனதில் எழும் நெருடலான ஒரு கேள்வி// இது பல படத்திற்கும் கேட்கப்பட வேண்டிய கேள்வி..
ReplyDeleteVimal Leo · Subscribe · Jenneys Acadamey of Hotel Managment
ReplyDeleteNICE REVIEW
தோழி ஸ்ரீவிஜி பார்க்க வேண்டிய படம். நம் தமிழகத்தில் சினிமா என்ற ஊடகம் வெறும் ஒரு பொழுது போக்கு கருவியாக மட்டும் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கின்றது.
ReplyDelete