ஆசிரியை கொலைச் செய்தி மிகவும் துயர் தருவதும்
அதிற்ச்சியூட்டுவதுமாக இருந்தது.
கொலை செய்யப்பட்ட ஆசிரியை நினைத்து கவலைப்படுவதா அல்லது கொலை குற்றவாளியான மாணவ
குழந்தையை நினைத்து வருந்துவதா?
பெற்றோர் வளர்ப்பு சரியில்லை
கல்வி திட்டம் சரியில்லை, ஊடக தாக்கம், இன்றைய குழந்தைகள் இப்படி தான்..... என பல காரணங்கள் சொல்லி விட்டு போவதை விட ஆசிரியர்கள்
உலகம் தன்னை சரி படுத்தி கொள்ள வேண்டிய, தன் நிலையை உணர வேண்டிய நாட்கள் இது என்றே எனக்கு விளங்கியது.
ஒரு
9 வகுப்பு சிறுவன் 2 நாட்களாக தன் பையில் கத்தியுடன் திரிவதின் உளவியல் தாக்கம், வாய்ப்பு கிடைத்த போது "சதக் சதக்" என்று குத்தி கொலை செய்ததின் பின்னணியை ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அவன் ஒரு
கல்லூரி மாணவனாக இருந்திருந்தால் நம் சிந்தனை வேறு விதமாக இருந்திருக்கும். வெறும்
14 வயதே ஆன குழந்தையை கொடூர கொலை குற்றவாளியாக மாற்றிய மர்மம் தான் என்ன?. அவனுடைய தவறின் தாக்கம் விளங்கும் போது இளமைக் காலம்
மறைந்து அவனுடைய சாதாரண வாழ்கையை இழந்திருப்பான்.
இன்றைய சூழலில்
மாணவர்களை சரியாக புரிந்து கொள்ள
மறுக்கின்றோம் அல்லது குழந்தைகள் சமூக வாழ்வியல் மாற்றத்தில் சிக்கி தவிப்பதை காண தவறுகின்றோம் என்றே தோன்றுகின்றது. பெற்றோர் வேலைக்கு செல்லும் சூழலில் குழந்தைகள் தன் தாத்தா பாட்டி, உற்றோர் உறவினர்களிடம், இருந்து வெகுதூரம்
பயணப்பட்டு தனிமையில் புதிய இடங்களில்
வசிக்க தங்களை தயார்ப்படுத்தி கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்களின்
தேவையை பிரட்சனைகளை புரிந்து
கொள்ளவோ அவர்களை அவர்களாக எண்ணி பார்க்கவோ நேரம் இல்லாது ஓடும் பெற்றோர் ஒரு பக்கம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்ற போர்வையில் கைகொள்ளும் வன்முறைகள் இன்னொரு புறம்!
பெரியவர்கள் தங்கள் சூழலின் நெருக்கத்திற்க்கு தகுந்து வாழ பழக்கப்பட்டு கொள்ளும் போது குழந்தைகளால் சமூக சூழலை புரிந்து தங்களை மாற்ற இயலாது கொள்ளும் ஒரு வித பயம் குழப்பம், உச்சகட்ட மன அழுத்த நிலையை இவ்வித கொலைக்கு இட்டு செல்கின்றது.
பெரியவர்கள் தங்கள் சூழலின் நெருக்கத்திற்க்கு தகுந்து வாழ பழக்கப்பட்டு கொள்ளும் போது குழந்தைகளால் சமூக சூழலை புரிந்து தங்களை மாற்ற இயலாது கொள்ளும் ஒரு வித பயம் குழப்பம், உச்சகட்ட மன அழுத்த நிலையை இவ்வித கொலைக்கு இட்டு செல்கின்றது.
மனம் பேதலித்து
அதன் நிலையை விட்டு நகழும் போதும்
மாபெறும் சிதைவுகள் அவர்கள் மனதிற்க்கு மட்டுமல்ல செயலிலும் வந்து வெடிக்கின்றது.
ஆசிரியை இறந்ததால் அவரை ஐயோ ..... என்று பரிதபிக்கும் நாம் அறியா பருவத்தில் 14 வயது சிறுவன் கொலை, போலிஸ், ஜெயில் என்று கொண்டு செல்ல காரணமாக இருந்தது யார்? என்றும் கேட்க வேண்டியுள்ளது.
ஆசிரியர்களின் மனநிலை காலத்தின் போக்குக்கு தகந்தது போல் மாறியுள்ளதா என்றால் எதிர்மறையாகவே மாறி உள்ளது என்றே கூற இயலும். பிரம்பால் அடிக்க கூடாது என்று சட்டம் வந்த போது நாவால், செயலால் மாணவர்களை வதைக்கும் ஆசிரியர்களை காண்கின்றோம். பெற்றோர் தரம் சார்ந்து மாணவர்களை பிரித்து பார்ப்பது, தேற்வு மதிப்பெண் என்ற ஆயுதத்தை வைத்து மிரட்டுவது, தனக்கு ஒவ்வாத மாணவர்களை பிரித்து மட்டம் தட்டி வைப்பது, திட்டுவதில் பெருமை கொள்வது என அவர்கள் நிலைபாடு மெச்சும் படியாக இல்லை என்பதே உண்மை.
என் பள்ளி ஆசிரியர் ஒருவர் நினைவுக்கு
வருகின்றார். நாங்கள் பள்ளி செல்ல 1 மைல் தூரம் நடந்தே செல்ல வேண்டும். எங்கள்
ஆசிரியரும் கூட சில நாட்கள் நடந்து தான் வருவார். பள்ளி முதல் மணி அடித்தது
என்றால் இரண்டாவது மணிக்குள்ளாக ஓடி செல்லும் மாணவர்களை தாமதமாக நடந்து வரும்
ஆசிரியர் கண்டு வைத்து பள்ளி வந்ததும் வகுப்பறையில் தேடி வந்து அடிப்பார்.
மாணவர்களை வாய் உபதேசத்தால் திருத்தி விடலாம் என்று பல ஆசிரியர்கள்
நினைக்கின்றனர். மாணவர்களுக்கு சரியான உபதேசம் நம் உண்மையான செயலாகவே இருக்க கூடும். மாணவர்களை ஆசிரியர்களை கூர்ந்து கவனிக்கின்றனர். நம் பாராட்டுதல்
உற்சாகப்படுத்துதல் வழிகாட்டுதலை பெரிதும் விரும்புகின்றனர். தன் பாடத்தை சரியாக எடுக்காது சமூக அக்கறையை
பற்றி பேசும் ஆசிரியரின் மொழி கடல் மணலில் எழுதும் எழுத்தாகவே மாறும்.
தேற்வு நாள் அன்று, தான் பயணித்த பேருந்து
விபத்துக்கு உள்ளாகி 15 நிமிடம் தாமதித்து வந்த மாண்வனிடம் தன் ஞான உபதேசத்தை நல்குவதை
விடுத்து, குடிக்க ஒரு மடக்கு தண்ணீர் கொடுத்து தேற்வு எழுத வைப்பதே ஆசிரியையின்
பணியாகும். மலையாளத்தில் ஒரு பொன் மொழி உண்டு “ குளிப்பித்து குளிப்பத்து
குஞ்ஞினை(குழந்தையை) இல்லாதாக்கி” என்று அதே போல் தான் பல ஆசிரியர்கள் சிறுவர்களை
நல் வழிப்படுத்துகின்றேன் என்று தங்கள் கருணையற்ற கண்டிப்பால் மனித நிலையில்
இருந்தும் முரடர்களாக மாற்றுகின்றனர்.
சமீபத்தில் நான் கண்ட ஒரு இளைஞன் கூறினார் அவர் கல்லூரி வகுப்பில் ஆசிரியையை அழவைப்பாராம். பள்ளி வகுப்ப்புகளில் தன்னிடம் கருணை அற்று நடந்து கொண்ட ஆசிரியைகளிடம் பதில் கொடுப்பதாக தெரிவதால் மகிழ்ச்சி கொண்டாராம். இன்றும் மனம் எதிலும் பிடிப்பற்று வாழ பள்ளிப்பருவத்தில் தான் எதிர் கொண்ட சில நிகழ்ச்சிகளே என்று கூறினார். சில பெற்றோருக்கு ஆசிரியர்கள் சொல்வதெல்லாம் ஞான வாக்கியம் ஆகுவது உண்டு. ஆசிரிய்ர்களின் பேச்சுக்கு இணைங்க வீடுகளிலும் தன் பெற்ற பிள்ளைகளை கொடுமையாக நடத்துவது உண்டு.
ஒரு சிறுவன் சிறு தவறு செய்தால் அதை ஆகாயம் முட்டும் வண்ணம் பெரிதாக்கி அவன் ஆளுமையை சிதைக்கும் எத்தனையோ பள்ளிகள்- ஆசிரியர்கள் உண்டு. பள்ளிகளால் ஒடுக்கப்பட்ட விரட்டப்பட்ட பல சிறுவர்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றியை கண்டார்கள் என்ற புரிதலே ஆசிரியர்களின் அச்சுறுத்தலில் இருந்து மீட்க ஒரே வழி.
நான் பயணிக்கும் பேருந்தில் ஆசிரியைகளின் செயலை
கண்டு வருந்தியது உண்டு. ஒரு ஏழை தாய் தன் அழும் கைகுழந்தையுடன் நின்று கொண்டே
பயணிக்க்ன்றார். ஆசிரியைகள் இடம் கொடுக்க முன் வரவில்லை. எழுந்து இடம்
கொடுக்கலாம் தானே? என்று ஆசிரியைகளிடம் கேட்டு கொள்ளவும் யாராலும் இயலவும் இல்லை. ஆனால்
எல்லோர் கண்களும் ஆசிரியைகள் பக்கம் திரும்பிய போது மனம் இல்லாது எழுந்து இருக்கை
கொடுத்தார். ஆசிரியர்கள் ஒரு வித மனபிரஞ்யான நிலையில் இருந்து உண்மையான- காத்திரமாக
நிலைக்கு இறங்கி வர வேண்டும். மீன் வாங்கும் சந்தயில் இருந்து வணங்கும்
ஆலயம், பயணிக்கும் பேருந்து என உடை நடையால் மட்டுமல்ல தன்
செயலாலும் தங்களை பற்றி, ஏதோ கதைத்து கொண்டு வருகின்றனர். எளிமை பொறுமை ஆட்சி செய்ய வேண்டிய
இடத்தில் பொறாமை காழ்ப்புணர்ச்சி ஆணவம் தாண்டம் ஆடுகின்றது. நாடகதன்மையான உலகை காண துவங்காத குழந்தைகளுக்கு மன நெருக்கடியை கொடுக்க மட்டுமே இது இடம்
கொடுக்கின்றது.
எப்போதும் செயற்க்கைத்தனத்துடன் குற்றம் கண்ட
கண்ணுடன் ஈரம் அற்ற இதயத்துடனே அவர்கள் வாழ்கை செல்கின்றது. நிறைந்த மனதுடன் மாணவர்களை
பாராட்டி சிரிப்பது, பெரிய மனது கொண்டு மாணவர்களை மன்னிப்பது என்பது ஆசிரியர்கள்
அகராதியில் இல்லை என்று ஆகி விட்டது. தன் மகன் வயதுள்ள தன் மாணவனை அடக்க துடிக்கும் ஆசிரியை தன் மகன் தன்னுடன் எப்படி நடந்து கொள்கின்றான் என்று சுத்த இதயத்தோடு சிந்தித்தால் பல கேள்விக்கு இடம் கிடைக்கும்.
3ஆம் வகுப்பு ஆசிரியை பள்ளிக்கு வராத மாணவர்களிடம் மறுநாள் கேட்பாராம்
“ஏன் பள்ளிக்கு நேற்று வரவில்லை நான் செத்தேனா? இருக்கேனா? என்று பார்க்கவா
வந்தாய்“ என்று:- ஒரு குறும்புக்கார மாணவன் ஆசிரியை வராது அடுத்த நாள் வந்த போது
கேட்டானாம் "நீங்க நாங்க செத்தோமா இல்லையான்னு பார்க்கவா வந்தீங்க" என்று....இப்போது 4 வகுப்பு படிக்கும் என் மகன் தன்
தலையை காட்டி என்னிடம் கேட்கின்றான் “அம்மா தலையில் எங்கு எழுத்தியிருக்கும், என் மிஸ் சொல்கின்றார் என்
கையெழுத்து தலை எழுத்து போல் உள்ளதாம் என்று. ஆசிரியைகளை கேள்வி கேட்பது என்பது நம் குழந்தையின் பள்ளி வாழ்கைக்கு குழி தோண்டுவதற்க்கு சமம் என்பதால் பல பெற்றோர்கள் அடங்கி ஒதுங்கி செல்ல காரணமாகின்றனர்.
இதே சிறுவன் பெற்றோர் ஒரு வேளை மாணவனின் கோபத்தின் காரணவும் அதை தீர்க்கும் வழியும் தேடியிருந்தால், இரண்டு உயிர் துயர் கொள்ள நேர்ந்திருக்காது. இன்று அப்பெற்றோரின் துயர் காண யாரும் முன் வருவதில்லை. வாழ்க்கையில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணி சுமக்க இயலாத கட்டணம் செலுத்தி பள்ளிக்கு அனுப்பிய குழந்தை ஜெயில் கம்பி எண்ண செல்வதை பெற்றோரால் எவ்வாறு தாங்க இயலும்.
இதே சிறுவன் பெற்றோர் ஒரு வேளை மாணவனின் கோபத்தின் காரணவும் அதை தீர்க்கும் வழியும் தேடியிருந்தால், இரண்டு உயிர் துயர் கொள்ள நேர்ந்திருக்காது. இன்று அப்பெற்றோரின் துயர் காண யாரும் முன் வருவதில்லை. வாழ்க்கையில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணி சுமக்க இயலாத கட்டணம் செலுத்தி பள்ளிக்கு அனுப்பிய குழந்தை ஜெயில் கம்பி எண்ண செல்வதை பெற்றோரால் எவ்வாறு தாங்க இயலும்.
என் பெரிய மகன் ஆசிரியர் கூட அவனுடன் மேல் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பெட்டியில் அலைபேசி மற்றும் சிடிகள் வைத்திருக்கின்றார்களா என்று உடன் படிக்கும் மாணவர்களை கொண்டு தேட கட்டளை இடுகின்றார்களாம். இதனால் மாணவர்களுக்குள் பகமை தேவையற்ற சண்டை சச்சரவு வெடிக்கும் என்று பாவம் ஆசிரியர்களுக்கு தான் தெரியாதா?
கண்ணாடி போன்ற மாணவர்களின் மனதை ஆசிரியர்களால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும். தன் சுயவிருப்பம் சார்ந்து மாணவனை காண முயலும் போது அபாயங்கள் காத்திருக்கின்றது. ஒவ்வொரு மாணவனின் பலம் பலவீனம் கண்டு வழி நடத்துவதே சிறந்தாக இருக்கும்.பள்ளியில் இருந்து விரட்டப்பட்ட பில்கேட்ஸ் என்ற மாணவனிடம், ஆசிரியர்களின் வழி காட்டுதலில் திறம்பட படித்து முன் வந்த பல மாணவர்கள் பணியாளர்களாக பின்னாளில் பணிபுரிந்தனர் என்பதும் நாம் கண்டதே.
கண்ணாடி போன்ற மாணவர்களின் மனதை ஆசிரியர்களால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும். தன் சுயவிருப்பம் சார்ந்து மாணவனை காண முயலும் போது அபாயங்கள் காத்திருக்கின்றது. ஒவ்வொரு மாணவனின் பலம் பலவீனம் கண்டு வழி நடத்துவதே சிறந்தாக இருக்கும்.பள்ளியில் இருந்து விரட்டப்பட்ட பில்கேட்ஸ் என்ற மாணவனிடம், ஆசிரியர்களின் வழி காட்டுதலில் திறம்பட படித்து முன் வந்த பல மாணவர்கள் பணியாளர்களாக பின்னாளில் பணிபுரிந்தனர் என்பதும் நாம் கண்டதே.
ஆசிரியர் பணியின் மகிமையை தெரியாத வரை இதே போன்ற கொலைகளும் தொடரத் தான் போகின்றது. ஆசிரியர்கள் வாயில் இருந்து வரும்
வார்த்தை கூட விஷம் அல்லாத அமிர்தமாக மாற வேண்டும் என்று வாழ்த்துவது மட்டுமே நம்மால்
இயலும்!
நல்லதொரு பதிவு. ஆசியர்களுக்கு தாம் கற்பிக்கும்பாடம் மட்டுமன்றி, உளவியலும் தெரிந்திருக்க வேண்டும். ஆசிரிய தொழிலிற்கு வரவிரும்புபவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் உளவியலையும் ஒரு கட்டாய பாடமாக சேர்க்கவேண்டும்.
ReplyDeleteஉங்கள் பதிவு சிந்திக்க வைக்கிறது.
ReplyDeleteSrikandarajah கங்கைமகன் · Jaffna uni, colobmo uni, annaamalai uni
ReplyDeleteஆசிரியர்கள் என்பதன் பொருள் (ஆசு-தூய்மை) தூய்மையானவர்கள் என்பது தான். ஆசிரியர்கள் பாடசாலைகளில் ஒரு பெற்றோரைப்போல் இயங்கவேண்டம். நானும ஒரு ஆசிரியைவீட்டுக்கு நண்பர்களுடன் சேர்ந்து கல் எறிந்திருக்கிறேன். அப்போது எனக்கு 16 வயது. பிற்காலத்தில் அந்த ஆசிரியை பட்டதாரிப் படிப்பிற்கான எனது வகுப்பில் என்னிடம் பொருளியல் படித்தவர். ஏதோ ஒரு வகையில் மணவர்களின் மனங்களில் சில தாக்கங்களை ஆசிரியர்கள் உருவாக்குகின்றார்கள். உங்கள் பதிவு பலரை பலவிடையங்களைச் சிந்திக்க வைக்கும். நன்றி.
சிந்திக்கவைக்கும் கருத்துகள். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஒளியாகவும் இருக்கணும். இருள் சூழ ஆரம்பித்தால் இப்படியெல்லாம் விபரீதங்கள் நடைபெறுவது வருந்ததக்கது. அருமையான பகிர்வு.
ReplyDeleteஅம்மா முதல் ஆசிரியர்.
ReplyDeleteஆசிரியர் இரண்டாம் தாய் என சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதை ஆசிரிய பெருமக்களும் மாணவமணிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
வணக்கம் அக்கா,
ReplyDeleteநல்லதோர் உளவியல் கருத்தாளம் மிக்க பதிவினை கொடுத்திருக்கிறீங்க.
வாழ்த்துக்களும் நன்றிகளும்!
கண்டிப்பால் இக் கால மாணவர்களைச் சீர்படுத்த முடியாது. அனபால் சீர்படுத்த முடியும் என்பது தான் உண்மை, அதனை நம் ஆசிரியர்கள் அனைவருமே உணர்ந்து கொண்டால் சந்தோசமே!
மாணவர்களை அஃறிணையில் விளிப்பது, அடிமாடுகள் போல நடாத்துவது தான் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைச் சூழலை மாற்றிப் போடுகின்றது. அவர்களை கல்வியினை வெறுக்கும் வண்ணம் மாற்றிப் போடுகின்றது.
மீண்டும் நல்ல பதிவினை கொடுத்தமைக்காக நன்றிகள்.
உங்க வலைக்கு வருவேனுங்க.
ReplyDeleteபடிப்பேன்.
ஆனால் கமெண்ட் போட டைம்மிருக்காது! எஸ் ஆகிடுவேன்!
மன்னிச்சுக் கொள்ளுங்க.
மிகவும் சிந்திக்க வைக்கிறது உங்களது இந்தப் பதிவு.சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் புரிந்துகொள்ள நிறையவே இருக்கிறது சகோதரி !
ReplyDeleteSothi Sellathurai
ReplyDeleteஆசிரியர்கள் ஏணிபோன்றவர்ள். தோணிபோன்றவர்கள். கல்வியின் துணைகொண்டு வாழ்க்கையின் உயர்வுக்குச்செல்ல உதவுபவர்கள். கல்விப்பெருங் கடலைக் கடக்க உதவுபவர்களும் ஆசிரியர்களே. இவர்கள் தமது தொழில் தர்மங்களில் தடுமாறும்போது ஒட்டுமொத்த சமுதாயமுமே நிலைமாறிப் போகின்றது. ஆசிரியர்களும் இந்தத்தடுமாற்ற நிலைவருவதற்கு அவர்களின் சொந்தக்குணாதிசயம், அவர்கள் வாழும் வீட்டிலுள்ள பிரச்சனைகள், சமுதாயப் பின்னணி, மனவிரக்தி எனப் பல காரணங்களுண்டு. உங்கள் ஆக்கத்தின் ஏக்கம் புரிகின்றது. நீங்கள் மாணவியாய் இருந்தகால உங்கள் அனுபவமும் ஆக்கத்தில் இழையோடுகின்றது. இதைச் சீர்செய்ய யார் வருவார்களோ?.
அக்கா, நான் இரண்டு பின்னூட்டங்களை இங்கே எழுதினேனே! காணலையே
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteபெற்றோர்களுக்கும் பிள்ளைகள் மீது கவனம் வேண்டும். இருவரும் சம்பாதிப்பவர்களாக இருந்தால் பிள்ளைகளுக்கு கேட்கும் பணத்தையும், வசதிகளையும் செய்து விட்டு ஒதுங்கி விடுகிறார்கள். பிள்ளைகளின் தனிமை ஒரு காரணம்.
அழகான பதிவு தோழி..................... எந்த தொழிலுக்கும் இல்லாத வசதிகள் இந்த ஆசிரியர் தொழிலுக்கு வழங்க படுகிறது அதிக விடுமுறைகள் இவை எல்லாம் அவர்கள் மன நிலை நன்றாக இருக்கவேண்டும் என்பதுக்காகவே.... முன்பெல்லாம் பிள்ளைகள் கல்வியில் குறைவாக இருந்தால் பெற்றோர்கள் ஆசிரியரிடம் சொல்ல்வார்கள் இப்போதெல்லாம் ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் சொல்கிறார்கள் பிள்ளை படிப்பது இல்லை கவனித்துகொள்ளுங்கள் என்று.............. வியாபாரமாகி போனது கல்வி. கொடுக்கப்படும் விடுமுறைகளை விசேட வகுப்புக்கள் கொடுத்து பணம் சம்பாதிப்பதுக்கு பயன் படுத்துகிறார்கள். இவர்கள் மனம் எப்படி அமைதியாக இருக்கும் ???
ReplyDeleteஅழகான பதிவு தோழி..................... எந்த தொழிலுக்கும் இல்லாத வசதிகள் இந்த ஆசிரியர் தொழிலுக்கு வழங்க படுகிறது அதிக விடுமுறைகள் இவை எல்லாம் அவர்கள் மன நிலை நன்றாக இருக்கவேண்டும் என்பதுக்காகவே.... முன்பெல்லாம் பிள்ளைகள் கல்வியில் குறைவாக இருந்தால் பெற்றோர்கள் ஆசிரியரிடம் சொல்ல்வார்கள் இப்போதெல்லாம் ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் சொல்கிறார்கள் பிள்ளை படிப்பது இல்லை கவனித்துகொள்ளுங்கள் என்று.............. வியாபாரமாகி போனது கல்வி. கொடுக்கப்படும் விடுமுறைகளை விசேட வகுப்புக்கள் கொடுத்து பணம் சம்பாதிப்பதுக்கு பயன் படுத்துகிறார்கள். இவர்கள் மனம் எப்படி அமைதியாக இருக்கும் ???
ReplyDeleteKumaresan Asak · · Chief Reporter at Theekkathir · 2,154 subscribers
ReplyDeleteநிச்சயமாக ஆசிரியர்களின் அணுகுமுறைகளிலும் புரிதல்களிலும் மிகப்பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. வேலை நேரம், ஊதிய அடிப்படை, விடுமுறை போன்றவற்றை மட்டுமே சிந்திக்கிற ஆசிரிய சமூகத்தில் மிகச் சிலர்தான் அறிவியல் கண்ணோட்டத்துடனும் சமூக அக்கறையுடனும் தங்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இயல்பாகவே அவர்கள் அன்புமயமானவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களோ, சமச்சீர் கல்வி, செயல்வழிக் கற்றல் என இன்றைய சூழலில் கொஞ்சமாவது குழந்தைகளுக்கு இணக்கமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால் அதைத் தங்கள் மீது ஏற்றப்படும் பணிச்சுமையாகக் கருதி கூப்பாடு போடுகிறவர்களாகவே இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இதில் ஆசிரியர்களை மட்டும் ஒரு தரப்பாகக் குற்றம் சாட்டிவிட முடியாது. கல்வியை அப்பட்டமான வியாபாரச் சரக்காக மாற்றிவிட்ட அரசின் கொள்கையை விமர்சிக்காமல், வெறும் போட்டிக்குதிரைகளாக மாணவர்களை உருவாக்கும் மேய்ச்சல்காரர்களாக ஆசிரியர்களை மாற்றிவிட்ட கல்வி வணிக ஏற்பாடுகளைச் சாடாமல் இத்தகைய விவாதங்கள் சரியான இலக்கை நோக்கிச் செல்ல இயலாது. ஆசிரியை உமா மகேஸ்வரி ஒரு மாணவனின் கொலைவெறிக்கு மட்டும் பலியானவர் அல்ல, ஆசிரியர்களின் திறமையைப் பெற்றோரிடமிருந்து பணம் பறிப்பதற்கான கருவியாக்கிவிட்ட தற்போதைய கல்வி வணிகக் கொள்கைக்கும் பலியானவர்தான்.
இப்படிப்பட்ட விவாதங்கள் இன்னும் வெளிப்படையாகப் பொதுமக்களிடையே நடைபெற வேண்டும். உண்மையான அக்கறையோடு கல்வி முறையில் சரியான மாற்றங்களுக்குப் போராடுகிறவர்களோடு தோள் சேர வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அப்படிப்பட்ட போராட்டங்களில் பல சிந்தனையாளர்கள் பங்கேற்பதில்லையே... அந்த நிலை மாற வேண்டாமா?
Thankappan Arumugaperumal
ReplyDeleteபார்த்தேன் .உங்கள் உள்ளத்துடிப்பை கண்டு என் மனமும் செய்வதறியாது தவித்தது .
முன்பெல்லாம் மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி இருந்தது.இன்று கல்வி நிறுவனங்களிடையே
வியாபார முன்னிலையில் யார் பெரியவர் என்ற போட்டி. கல்விக் கூடங்களில் தரமான தலைவர் கிடைப்பது
வரும் காலங்களில் அரிதாகவே இருக்கும் .
John Durai Asir Chelliah
ReplyDeleteமிகவும் அருமை...!காலத்திற்கேற்ற கட்டாயமான தேவை ஜோஸ் .!
Anthoni Raj
ReplyDeleteகல்வி என்பது வியாபாரமாகி போனதால் ஏற்பட்ட சூழல் அதே போல நம் மாணவர்களின் தனி திறனை வளர்காமல் மனபாட கல்வியும் இது போன்ற சூழலுக்கு காரணம் ஏழை மாணவன் தற்கொலை செய்து கொள்வதும் வசதியான பிள்ளைகள் பழிவாங்குவதிலும் முடிகிறது
Ponnambalam Kalidoss Ashok
ReplyDeleteஎனக்கு, தெரிந்த ஒரு பெண் குழந்தை இரண்டாம் வகுப்பு படிக்கின்றார். மாத தேர்வு முடிந்த பின், மதிப்பெண்கள் அளித்த பின் அனைத்து தேர்வுகளையும் மீண்டும் நான்கு முறை வீட்டு பாடமாக எழுத வேண்டும். மற்ற பாடங்களையும் படிக்க வேண்டும் . மின் தடை வேறு ? எப்படி மாலை பொழுதில் விளையாடும் ? கற்பனை எப்படி ஊற்று எடுக்கும் ? வாழ்கையை எப்படி ரசிக்கும் ? இதில், கடும் மின் தடை வேறு..சமயங்களில், பாடம் முடிக்கா விட்டால் , உடல் நிலை சரி இல்லை என்று பொய் காரணம் கூறி விடுப்பு ..மேலும் பெற்றோர்கள் , கடும் வீட்டு பாடம் கொடுக்கும் பள்ளிகளைதான் பெருமையாக நினைகின்றனர் . பள்ளிகளில் போடும் கணக்குகள் அனைத்தும் உதாரணத்தில் உள்ள எளிமையான கணக்குகள் மட்டுமே . பெரிய கணக்குகள் வீட்டு பாடங்கள்..இது அனைத்தும் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு மட்டும்..மேலே செல்ல செல்ல இன்னும் கடுமை ..மாணவன் உள்ள நிலை ? சிந்திப்போமா?
Osai Chella ·
ReplyDelete· I am a Web Media Strategist , Logo Designer & a White Hat SEO Consultant at Zenvalley.com · 686 subscribers
அருமையான பதிவு!
Ponnambalam Kalidoss Ashok · Sourashtra college,madurai. Dr.Ambdekar's govt law college,chennai
ReplyDeleteபிள்ளைகள், பொதுவாக, பெற்றோரர்களைவிட ஆசிரியர்களை அதிகம் மதிகின்றனர். இது, இளம் வயதில். வயது அதிகம் ஆகும் பொழுது அவர்களுக்கு சூழல் சுழல என மாறுகின்றது. எதிர்காலம், மற்றவர்களை வைத்து தங்கள் ஒப்பிடப்பட்டு சரியாக செல்ல முடியுமா? என்ற சந்தேகம்..இதை, தொடர்ந்து செய்வது பெற்றோர்,உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள்.அடுத்து, திரைப்படங்கள். கதாநாயகன், வெகு எளிதாக கொலை செய்தல். பின்னர் , அவனே வீரன் என போற்றப்டுதல். கொலை போன்ற செய்திகள், பத்திரிகைகளில் தலைப்பு செய்திகளாக வருதல். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் நண்பனாக மாறாது வாழ்தல்.பெரும் வியாபாரமாக மாறி விட்ட கல்வி, எனவே , இது , ஒட்டு மொத்த சமுக அமைப்புமே மாற வேண்டிய சூழல்.
Sankar Mani Iyer · Manager Administration at ENAM ASSET MANAGEMENT CO. PVT. LTD.
ReplyDeleteபிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்களை மதிப்பதா. நாமெல்லாம் ஒரு காலத்தில்பிள்ளைகள் தானே ஆசிரியர்களை மதிக்க கற்றுக்கொடுத்தது அன்னையும் தந்தையும் தமக்கைகளும் தமயனும்தானே. அதிகம் படிக்காத என் அன்னைதானே ஆசிர்யன் தெய்வத்துக்கு சமம் என சொன்னது? ஆசிரியந்தானே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என சொன்னது? பொன்னம்பலத்தார் என்ன சொல்ல வருகிறார். கல்வி என்பது பட்டம் என என்னும் சூழ்நிலை ஏன்? அன்பு என்பது முதற் கல்வி அது இல்லாமல் எந்த எம் பி ஏயும் ஏற்றம் கொண்டதல்ல.Ponnambalam Kalidoss Ashok avarkale
Thankappan Arumugaperumal · தெ.தி.இந்துக்கல்லூரியில் P.U.C.Mathematics group
ReplyDeleteசமூக அவலங்களைக் காணும்போதெல்லாம் நம் நெஞ்சம் பதை பதைக்கிறது. நாளை அது நின்று விடும் அவலம் இனியொரு நாளும் வரும்.................இன்று கல்விக் கூடங்கள் நிலை?அரசு பள்ளிகள் வெறிச்சோடி மாணவரகள் இல்லாமல் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நகரங்களில் விளையாட்டு மைதானம் இல்லாமல் வானுயர்ந்த கட்டிடங்கள் பள்ளிகளாய் இருக்கின்றன. உள்ளே ஜல்லிக்கட்டுக்கு தயாராக மாடுகளை உசுப்பேற்றுவது போல மாணவர்களை வரப்போகும் தேர்வுக்கு அதிக மதிப்பெண் வாங்க தயாராக்கும் பணிதான் நடைபெறுகிறது. முன்னால் எல்லாம் படிப்பில் ஆர்வமுள்ளவனுடன் விளையாட்டில் ஆர்வமுள்ளவனும் படிப்பான். இப்பொழுதெல்லாம் விளையாட மைதானமே இல்லை என்ற நிலை. Moral Education -க்கு ஒரு ஆசிரியர் உண்டு. அதுவும் இல்லை. தனியர் பள்ளிக்கூடங்களில் வரும் மாணவன் இரு சக்கர வாகனங்களில் வரும் போதெல்லாம் சாலையில் செல்வோர் பயந்து ஒதுங்குகின்றனர். பள்ளி நிர்வாகமும், போலீஸும் கூட கண்டு கொள்வதில்லை. செல் போண் இல்லா மாணவன் மாணவனே அல்ல என்ற கலாச்சாரம் , 95000 ருபாய்க்கு குறைந்த பைக்கு வைத்திருந்தால் அவன் மாணவனே இல்லை.அதுவும் புக் கையில் வெளிப்படையாக இருந்தால் நிச்சயம் அவனும் மாணவனல்ல. சமுகத்தின் பால் அக்கறையுள்ள ஒருவன் அரசியலில் வரவேண்டும் அவன் நாட்டை ஆள வேண்டும்.தனி மனித ஒழுக்கம் வளர வேண்டும். கல்வியின் விலை குறையணும்.சட்டத்தை மதிக்கும் பெற்றோர், திறம்பட போதிக்கும் குரு,அறிவுக்கு மாத்திரமே கற்கும் மாணவர்கள், கண்டும் காணாமல் போகும் மனப்பாங்கு இல்லா அதிகாரிகளும் வெணும் நமக்கு..............
ந. பத்மநாதன் · Subscribed · Norwegian University of Science and Technology · 2,289 subscribers
ReplyDeleteஜோசெபின் பாபா மிகவும் அருமையான கட்டுரை எழுதுயுள்ளீர்கள்.அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.
நான் எனது அனுபவத்தில் கூறுகிறேன் , நட்புடனும் அன்புடனும் மாணவர்களுடன் பழகும் ஆசிரியர்களை விட கண்டிப்பாகவும் , பெரிய மனிதத் தோரணையுடன் பழகும் ஆசிரியர்களையே எமது சமூகம், பெற்றோர்கள் மதிக்கிறார்கள்.
இது ஒரு சமூகக் குறை பாடு. எனக்குக் கூட தமிழ் பெற்றோர்கள் சொல்கிறார்கள் பிள்ளைக்கு அடிக்கிலும் அடிக்கட்டாம் (நோர்வேயில்). ஆனால் நல்ல பெற்றொர்கள் நல்ல ஆசிரியர்களத் தேடுகிறார்கள்.
ஐரோப்பியாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது , இலங்கையிலும் இப்பொழுது கடந்த் 15 வருடத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது , இந்தியாவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆனால் போதாது.. பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்கள் , தனித்துவமான , மாணவ்ர் ஆசிரியர் பெற்றோர் சந்திப்புக்களை அடிக்கடி நடாத்தியிருந்தால் இப்படியான மாணவர்களைக் காப்பாற்றலாம்.
அந்த மாணவன் உடனே கோபத்தை வெளிக்காட்டி விட்டான். என்னும் கோபம் வெளிக் காட்டாத மாணவர்கள் பல்ர் வாழ்கிறார்கள்..அவர்கள் எங்கு எப்பொழுது தமது கோபத்தை வெளிக்காட்டுவார்கள் என்று யாருக்கும் தெரியாது , ஏன அந்த பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கே தெரியாது.
மிகச் சிறந்த பதிவு. மாறுபட்ட சிந்தனையில் நீங்கள் சொல்லிய விதம் மிக அருமை.
ReplyDeleteஇன்று "தோனி" not out என்று ஒரு படம் பார்த்தேன் , "நண்பன்" என்ற திரைப்படத்தை விட மிக மிக அழுத்தமாக எமது கல்வி முறையயும் , தமிழ்ப் பெற்றோரின் விருப்பத்தையும் கூறும் படம். ஒவ்வொரு தமிழ்ப் பெற்றோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் . நடிப்பு அபாரம் , பிரகாஷ்ராஜ் , நாசர் கூட்டு என்றால் சொல்லவும் வேண்டுமா ..அந்தச் சிறுவனும் பிரகாஷ்ராஜும் முழுத்திரையையும், கதையையும் ஆக்கிரமித்து விட்டார்கள் .. எல்லோரது நடிப்பும் , புதிய வில்லனும் super....இது உங்கள் கட்டுரைக்கு பல்த்தையும் அதே போல் உங்கள் கட்டுரை இந்தப் படத்துக்குப் பலத்தையும் கொடுக்கும்.
ReplyDelete