மலையாளப்பட
இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நவம்பர் 1986 ல் வெளிவந்த படம் ‘’ராக்குயிலின் ராஜசதஸில்’’. இப்படத்தில், பழம்பெரும் காமடி மற்றும்
குணச்சித்திர நடிகர் அடூர் பாசியின் மகளாக யதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்த
சுகாசினி நடித்திருப்பார். அடூர் பாசி ஒரு கல்லூரியின் முதல்வரான
தமிழ் வைத்தி இன பிராமணர் ஆவார். அவருக்கு மகளை
நாட்டிய ஸ்ரீ என்ற விருது பெற வைக்க வேண்டும் என்ற ஆசை, இறந்து போன அவர் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியாகும். மம்மூட்டியும் சுஹாசினியும் இசை-நாட்டிய கல்லூரியில் படிக்கின்றனர். துடுக்குத்தனவும் கொஞ்சம் திமிறும் கலந்த தமிழ் பெண்
சுகாசினியிடம், சண்டையிட்டு வந்த மம்மூட்டிக்கு, காதலும் வந்து சேர்கின்றது. மிகவும் போராடி தன் அறிவாற்றலால் சுகாசினியின் மனதில்
இடம் பிடிக்கின்றார். திருமணம் என்ற நிலை வரும்
போது தேவதாசி குல பிராமணன்
என்ற காரணத்தால் இவர்கள் காதலை ஏற்க மறுத்த தந்தையின் விருப்பத்தையும் மீறி காதலரை கைபிடித்து ஒரு குழந்தைக்கும் தாய்
ஆகி விட்ட நிலையின், தன் தகப்பனாரின் வற்புறுத்தலுக்கு
இணைங்கி நடனத்தில் தன் கவனைத்தை திருப்புகின்றார் சுஹாசினி.
கணவருக்கோ
தன் மனைவி தான் கச்சேரி
முடிந்து வரும் போது தன்னை வரவேற்று அன்பாக நடத்த வேண்டும். தன் நிலையில் தன் மனைவி வாழ வேண்டும் தான் மனைவியின் அடையாளம் கொண்டு அல்லாது தன் மனைவி தன் அடையாளத்தில் வாழ வேண்டும் என விருப்பம் கொள்கின்றார் ஆசைக் கணவர். காலையில் எழுந்ததும் மனைவி கையால் காப்பி வாங்கி
குடிக்க வேண்டும் போன்ற சின்ன சின்ன ஆசையில் உள்ளார். தன்னையும் மீறி தன் மனைவியின்
தகப்பனார் கொள்ளும் அதிகாரத்தை ஏற்று கொள்ளும் மனநிலையில் கணவர் இல்லாதும் இருக்கின்றார்.
ஆடி கறக்கு மாட்டை ஆடி கறக்க
வேண்டும், பாடி கறக்கும் மாட்டை பாடி கறக்க வேண்டும் என்ற யுக்தியில் அன்பினால்தன் கைக்குள் கட்டுண்டு வைத்திருந்த மனைவி, தன் அப்பாவின்
பேச்சுக்கு இணங்க கணவரிடம் வாய் சண்டை இடும் சூழலுக்கு தள்ளப்பட்ட போது தன்
1 வயது குழந்தையும் எடுத்து கொண்டு ஊரை விட்டே
ஓடி விடுகின்றார்.
8
வருடம் பிரிந்து வாழ்ந்த நிலையில் மறுபடியும் தான் வாழ்ந்த
ஊருக்கு வருவதும் தன் மகன் வழியாக மனைவியை சந்திப்பதுடன் தான்
வந்த நோக்கமே நாட்டியஸ்ரீ என்ற பட்டம் தன் மனைவி பெறக்கூடாது என்பதே என்று சவால் விடுவதுடன்
கதை முன்னேறுகின்றது. 8 வருட அனுபவத்தால் தனக்கு நாட்டியஸ்ரீ என்ற பட்டத்தை
விட தன் குழந்தை, குடும்பம் கணவர் தான் முக்கியம்
என்று மனைவி உணந்து கணவரிடம் வருவதும்; தன்னை முழு மனதாக ஏற்று கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தில்
கணவர் தவிப்பதும், ஆனால் கணவர் தன்னை ஏற்று
கொள்ள தயங்குகின்றாரே என்று மனைவி மனதில் கலங்குவதுமாக படம் முடிவை நோக்கி வேகமாக
நகருகின்றது.
வாழ்க்கையில்
குறிகோள் லட்சியம் என இருந்த கணவர் திறமையான மனைவி பெற்றும்
வாழ்க்கையில் தோல்வி கண்டு குடிகாரராக மாறுவதும்
வாழ்க்கையில் பிடிப்பு, ஒழுக்கம் இல்லாது
வாழ்ந்த கணவனின் சகோதரன் தன்னை புரிந்த தன்னை தானாக ஏற்று
கொள்ளும் ஒரு சாதாரண அறிவு கொண்ட மனைவி கிடைத்ததும் வாழ்க்கையில் பணம் அந்தஸ்துடன் சிறப்பாக வாழ்வதையும் படத்தில் சில
காட்சிகள் ஊடாக சொல்லியுள்ளனர்.
திரைக்கதை
மிகவும் சிறப்பாக இருந்தது. ஒரு இடத்தில் சுகாசினியின் தோழி சொல்வார்" நீ உன்னுடைய ஈகோவை விட மனம் கொள்ளவில்லை ஆதலால் குழந்தை,
கணவர் உன் வீடு அந்தஸ்து
எல்லாம் இழந்தாய். ஆனால் நான் என் ஈகோவை விட்டு கொடுத்தது வழியாக எல்லா விதத்திலும்
என் கணவரை ஆட்கொண்டு நான் விரும்பியது எல்லாம் என் வாழ்க்கையில் பெற்று கொண்டேன்" என்று பகிர்கின்றார்! அழகான பாடல் காட்சிகள்
படத்திற்க்கு மாற்று கூட்டுகின்றது. சிறந்த கதை அம்சம் கொண்ட இப்படம் பெண்களுக்கு பல வாழ்க்கை சூத்திரங்கள் கற்று
தருகின்றது.
திருமணம்
பின் அப்பா, தன் தாய்மை உணர்வை மதிக்க வில்லை என்று புரியும் போது தான் வளர்ந்த அப்பா வீடு சிறையாக
தெரிகின்றது. அப்பாவின் அன்பு கூட வெறுப்பாக
மாறுகின்றது. கணவர் காலில்
விழுந்து மன்னிப்பு கேட்டு சுஹாசினி கதற, கணவர் தன் நெஞ்சில் அணைத்து மனைவியை
ஏற்று கொள்வதுடன் படம் நிறைவு பெறுகின்றது.http://www.youtube.com/watch?v=6JCY0AnzTIY
மகிழ்ச்சி
என்பதை
தம் மனதே நிர்ணயிக்கின்றது, வாழ்கையோ சூழலோ அல்ல.
திருமண வாழ்க்கையில் கணவன் மனைவியை
திருத்தவோ, மனைவி கணவனை திருத்தவோ துணியாது; ஒவ்வொருவருக்கொருவர் தங்களுக்குள்ள குறையும் நிறையும் அவர்களிடம் உள்ளது போல், விமர்சனம்
வைக்காது முழுமனதாக அதே போல் ஏற்று கொள்வது வழியாக வெற்றியான
வாழ்க்கை காண இயலும் என நம்மை புரிய வைக்கின்றது இப்படம். திருமண வாழ்க்கை
என்பது தம்பதிகள் தங்களுக்குள் மாறி மாறி குற்றம் கண்டு பிடிக்கும் தேர்வு சாலை அல்ல
என்று அடிவரை இட்டு காட்டுகின்றது. திருமணம் முடிந்த பின்பு ஒரு பெண்ணுக்கு
பெற்றோரை விட கணவரை உரிமையானவர், அதே போல் கணவருக்கும் பெற்றோர்
உற்றோர் விட மனைவியே எல்லாம் ஆனவள் என்ற நம்பிக்கை இல்லற மகிழ்ச்சியாக
மாறுகின்றது என்று இப்படம் கற்று தருகின்றது. இப்படம் கண்டு முடியும் போது ஒரு இதமான உணர்வு நம்மை
தொட்டு செல்கின்றது. கேரளா அரச பரம்பரை வாழ்ந்த
நாகர்கோயிலிலுள்ள பத்மநாபா அரண்மனையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் சிறப்பு அம்சம் ஆகும். ஜி. ரவீந்தரனின் இசையில் யேசுதாஸ், எம்.ஜி ஸ்ரீகுமார் குரலில் எல்லா பாடல்கள் இனிமையானவை!http://www.musicplug.in/songs.php?movieid=2556
இப்படத்தில்
8 வருடத்தில் வாழ்க்கையை கற்று கொண்டு கணவருடன் இணைகின்றார் மனைவி, கணவரும் மனைவியை
தேடி வருகின்றார். ஆனால் உண்மை வாழ்க்கையில்
எத்தனை மனைவிக்கு அல்லது கணவருக்கு இம்முடிவை எடுக்க துணிவு வரும் என்பது கேள்வி குறியே.
கணவரை தனிமையாக்கி, துன்பம் கொள்வதை கண்டு வெற்றி களிப்பாக காட்டி கொண்டாலும் தானும்
துன்ம தீயில் வெந்து உருகும் பல மனைவிகளை கண்டுள்ளேன். சில மனைவிகள் இப்படியாக வைராக்கியம்
பிடிப்பதால் கணவர் தனிமையில் தவித்து கெட்ட வழியில் தன் வாழ்க்கையை கொண்டு செல்வது
மட்டுமல்லாது, இந்நிலைகளை கண்டு வளரும் குழந்தைகளும் வாழ்க்கையில் மகிழ்ச்சி அற்று பிடிப்பற்ற வாழ்க்கை வாழ காரணமாகி விடுகின்றனர். சில மனைவிகள் “நான் செத்தாலும்
என் முகத்தில் விழிக்க வேண்டாம் என கூறி கணவரை துக்கத்தில் ஆழ்த்துவது மட்டும் அல்லாது தன் நிழலைக்கூட
அழிக்க தயங்குவது இல்லை!. வாழ்க்கை என்பது
மிகவும் குறுகிய காலம் என்ற உணர்வு பல போதும் தேவை அற்ற பிடிவாதத்தில் இருந்து நம்மை
மீட்கலாம், வாழ வைக்கலாம்!!!
படத்தை நேரில் பார்த்த ஃபீலிங், விமர்சனம் சூப்பர்ப்!!!!
ReplyDeleteவிமர்சனம் அழகாக இருக்கிறது, விமர்சனத்தில் பாதிக் கதையினைத் தந்திருக்கிறீங்க.
ReplyDeleteகொஞ்சம் டுவிட்ஸ் வைத்து விமர்சனம் செய்திருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும்,
இப்போ உங்கள் ப்ளாக் டெம்பிளேட் டிசைனிங் சூப்பர்.
ஒவ்வொருவருக்கொருவர் தங்களுக்குள்ள குறையும் நிறையும் அவர்களிடம் உள்ளது போல், விமர்சனம் வைக்காது முழுமனதாக அதே போல் ஏற்று கொள்வது வழியாக வெற்றியான வாழ்க்கை காண இயலும் என நம்மை புரிய வைக்கின்றது இப்படம்.
ReplyDeleteஅருமையான விமர்சனம். நல்ல கதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html
அருமையான விமர்சனம்
ReplyDelete
ReplyDeleteநல்ல விமர்சனம், ஜோசபின் வாழ்த்துகள்.