11 Sept 2011

பூவே பொலி பூவே பொலி பூவே..........ஓணம்!!!




நம் பக்கத்து மாநிலம் கேரளா சகோதர்கள்  நேற்று ஓணம் கொண்டாடி முடித்துள்ளனர்.  20-22 வருட முன்புள்ள என் ஓணம் நினைவுகளும் இன்று என்ற போல் என் இதயத்தில்   உள்ளது.  ஓணம் என்பது எங்களுக்கு காலாண்டு விடுமுறை நாட்களாக  இருப்பதே கூடுதல் மகிழ்ச்சி.  ஓணத்தை சிறப்பாக எல்லா கேரளத்தவர்களும் இந்து, கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என் பாகு பாடு இல்லாது கொண்டாடுவதில் காத்திரமான முனைப்பில் இருப்பார்கள்.  எங்கள் வண்டிபெரியார்  பஞ்சாயத்தில் கைபந்து, நாட்டுப் புற பாடல்கள் பேச்சு போட்டி என  பல கலை-விளையாட்டு போட்டிகள்கள் நடைபெறுவது உண்டு.  அதில் சாப்பாட்டு போட்டி தான் மறக்க இயலாதது.

 http://www.youtube.com/watch?v=37JH7aAp6csஎங்கள் கொண்டாட்டங்கள் நாங்கள் செல்லும் ஆலயத்தை தழுவியே இருந்துள்ளது.   எங்கள் ஆலய பாதிரியார் ஒரு ஆங்கில இந்தியரான ஜோசப் டி அல்மெய்டா குழைந்தைகளின் விளையாட்டை உற்சாகப்படுத்துபவராக இருந்தார்.  ஆலயத்தில் பாடல் குழு இளைஞர்களே விழாவை நடத்தி செல்வர்.  எங்களை கவர்ந்த உயரமான ஊஞ்சலில் ஆடுவதற்க்கே ஓணம் வருகைக்காக காத்திருப்போம்.  எங்கள் மடம் கன்னியாஸ்திரிகள் வருவது வரை  நியாயமான மகிழ்ச்சியுடன் ஓணம் கொண்டாடினோம்.  பின்பு கன்னியாஸ்திரிகள் கொண்டு வந்த மலையாளம்- தமிழ் பாகு பாடு ஓணம் மகிழ்ச்சியை கெடுத்தது என்பது மட்டுமல்ல விழாக்கள் மேல் ஈடுபாடு அற்றதாக்கியது.  

ஓணம் நாள் திருவாதிரக்களி http://www.youtube.com/watch?v=hQJaePC5w0I&feature=related என்ற கேரளா நடன போட்டி வைப்பது உண்டு.  நாங்களே பாட்டு அமைத்து நடனம் ஆடும் நிகழ்வுகள் சுவாரசியமானது.   யாரும் பயன்படுத்தாத பாடல் வேண்டுமென்று மலையாள கதை புத்தகங்களிலுள்ள  வரிகள்  சேர்த்து கலவை-மறுகலவை பாடல்களுடன் நடனத்தில் பங்கு பெற்றால் மார்க்கு இடுபவர்கள் ஆள் பார்த்து மார்க்கு போட்டனர் என்று பெரிய சண்டையும் நிகழ்வது உண்டு.   ஒரு முறை என் தம்பியார் மகாபலியாக நடித்த நிகழ்வுகள் மனதில் மறையாது உள்ளது. 

இனி ஓணம் கதைக்குள் சென்று விடுவோம்……ஓணம் சார்ந்து ஒரு அழகான சுவாரசியமான கதை உண்டு. 10 ஆயிரம் வருடம் முன்பு பிரக்லாதனின் பேரன் மஹாபலி என்ற ஒரு திராவிட(அசுரன்)அரசர் கேரளா நாட்டை ஆட்சி செய்துள்ளார்.  அவர் நல்லாட்சியில் மக்களுக்கு துன்பம் இல்லை, துக்கம் இல்லை நோய்-தரித்திரம் இல்லாது; மக்கள் பணக்காரன் ஏழை என்ற  இல்லாது ஜாதி மதம் பேதமில்லாது எல்லோரும் சுகமாக வாழ்ந்துள்ளனர். http://www.youtube.com/watch?v=QzR3DfNvA24&feature=related சுகமாய் வாழும் மக்கள் தம்மை நினைப்பது இல்லையே என்று தேவர்களின் தலைவர் இந்திரனுக்கும் அவர் கைப்படிகளுக்கும் பொறாமை வந்து விட்டது .  ஒரு முடிவுடன் மேலுலகத்தில் சென்று விஷ்ணுவை சந்தித்தனர்.  நீங்கல் தான் தீர்வு தர வேண்டும் மகாபலி எங்களுக்கு நிகராக வர்ந்து விட்டதால் மக்கள் எங்களை மதிப்பதில்லை என்று கதறினர். 

மனம் உருகிய விஷ்ணு குள்ளையான பிராமணன் (வாமனன்) வேடம் தரித்து பூமிக்கு வருகை புரிந்துள்ளார் .  மகாபலியை கண்டு  3 மிதியடி மண் வேண்டும் என்று கேட்க மகாபலியும் சூழ்ச்சி புரியாது எடுத்து கொள்ள அனுமதிப்பார்.  வாமனன் ஆகாயம் முட்டும் வளர்ந்து ஒரே மிதியால்  பூமியும் அடுத்த மிதியில் வானவும் கைய்யகப்படுத்தி விட்டு மூன்றாவது கால் மிதிப்பது எங்கே என்று கேட்பார் மகாபலியும் மனமுகர்ந்து பணிவுடன் தன் தலையை காட்டுவார்.  விஷ்ணுவும் மூன்றாவது மிதியில் மஹாபலியில் தலையில் கால் வைத்து பூமிக்கு அடியில் தள்ளி விடுவார். மகாபலி தன் கடைசி ஆசையாக உங்கள் திருவுருவம் காட்ட வேண்டும் என்று கேட்க வாமன்னும் தன் அருமை பக்தனுக்கு  தான் விஷ்ணு என்பதை வெளிப்படுத்துவார்.   மகாபலி தான் தன் மண்ணையும் மக்களையும்  நாட்டையும் விட்டு போகும் சூழலுக்கு தள்ளப்பட்டாலும் விஷ்ணுவை பழிக்காது தன் மக்களை சந்திக்க ஒரு நாள்  அனுமதி கேட்பார்.  பாதாகவாடத்தின்  காவல்காரனாக பதவி பெற்ற மகாபலி தன் மக்களை சந்திக்க வரும் நாளே ந்த பொன்னாளான ஓணம் திருநாள்.  பலவித உணவு, விளையாட்டுகளுடன் கேரளா மக்கள் ங்கள் மன்னரே வரவேற்ப்பதாகும் ஓணம் பண்டிகை! 

ஓணம் 10 நாட்களாக கொண்டாடுகின்றனர்.  கற்கடகம் முடிந்து செழிப்பான சிங்ம்(ஆடி , ஆவணி) மாதத்தில் வரும் திருவிழா என்பதால் விளைவெடுப்பின் நாளாகவும் கொண்டாடுகின்றனர்.  ஓணம் நாட்கள் பூக்களின் காலம் ஆகும் என்பதும் மற்றொரு சிறப்பே.

 அத்தப்பூவால்  (நம்ம ஊர் கோலம் அல்லது ரங்கோலிக்கு பல வித வர்ணங்களில் பொடி பயன்படுத்துவதற்க்கு பதில் பல வண்ணம் பூக்களால்)  வீட்டின் முற்றத்தை அலங்கரிப்பதுடன் தங்கள் அன்பான மன்னரை வரவேற்க்க மக்கள் தயாராகிவிடுகின்றனர்.  வீட்டின் முன்பு விஷ்ணு-மாவேலியின் உருவ பொம்மையை( திருக்காரயப்பான் ) வைக்கின்றனர்.   அத்தப்பூவில் முதல் நாள் மஞ்சள் வர்ண பூக்கள் மட்டுமே பயண்படுத்துகின்றனர்.  இரண்டாவது நாள் சித்திரை அன்று தான் மன்னர் வருகின்றார். அன்று வீடு சுத்தப்படுத்தி மன்னரை வரவேற்க்க காத்திருக்கின்றனர், ஆலய தரிசனவும் செய்கின்றனர் இன்னும் 2 வர்ணங்களிலுள்ள  பூக்களும் சேர்த்து கொள்கின்னர்.   மூன்றாவது நாள் சோதி அன்று 4-5 வர்ணங்களில் பூக்கள் இடுவதுடன் அத்தப்பூ பெரிதாகி கொண்டே போகின்றது.  அன்று சந்தைக்கு சென்று புது பொருடகள் வாங்குவதில் மகிழ்ச்சி காண்கின்றனர். 4 வது நாள் விசாகம் அன்று தங்கள் விளை பொருட்களை சந்தைய்ப்படுத்துகின்னர்.  http://www.youtube.com/watch?v=rj9ftDKxUU0&feature=relmfu 5 வது நாளில் வள்ளம் களி என்ற படகு போட்டி நடைபெறுகின்றது. 6 வது நாள் தங்கள் வீடு விட்டு வெளிநாடுகளில் மற்றும் வசிப்பவர்களும் தங்கள் சொந்த வீடு வந்து சேர்கின்னர்.   

7-வது மற்றும் 9-வது நாள் ஓண சத்யா என்றழைக்கப்படும் விருந்து கொடுக்கப்படுகின்து அன்று புலிக்களி/கடுவாகளி விளையாட்டும் நடைபெறுகின்து.  ஓணம் அன்று கொடுக்கப்படும் விருந்து அலாதி ருசியான சைவ சாப்பாடு ஆகும். மலையாளிகளிடையில் ஒரு பழமொழி உண்டு காணம் விற்றும் ஓணம் உண்ணனம்அதாவது நிலைத்தை விற்றாவது ஓணம் அன்று சாப்பிட வேண்டியது அவசியம் என்பதே.  அந்தளவு ஓணம் விருந்துக்கு பிரதம இடம் கொடுக்கின்றனர்.  ஓணம் சாப்பாட்டிற்க்கு கேரளா அரிசி சாப்பாடு என்பது மாறின போது ஆந்திராவில் இருந்துள்ள பொன்னி அரிசியும் சாப்பாட்டிற்க்கு சேர்க்க ஆரம்பித்து  விட்டனர்.  முதல் சுற்றில் சாம்பார், ருப்பு கூட்டு, நெய்யுடன் பப்படவும்(அப்பளம்) சேர்த்து விருந்து ஆரம்பமாகின்றது.  கேரளா சாம்பார் தேங்காய் சேர்த்து நிறைய காய்கறிகள் பயன்படுத்தி செய்வதாகும்.  அத்துடன் எல்லா காய்கறிகளும் சேர்த்த அவியல், அதற்க்கு துணை சேர்ப்பது போல் கூட்டு கறி இதில் பயறு வகைகள் சேர்த்திருப்பார்கள்.  அத்துடன் புடலங்கா போன்ற காய்கறியில் செய்யும் ஓலன்,   புளிக்காத தைரும் தடியங்காயும்(கும்பளங்க) சேர்த்து வைக்கும் காலன், கடைசியாக ரசம் வந்து சேருகின்றது. அருகில் கூட்டாக 4 உப்பேரி வகைகள் நேந்திராக்காயில் செய்வது அத்துடன் நாட்டு  வாழைக்காயால் செய்யும் வெல்லம் சேர்த்த இனிப்பு  சிப்ஸ்,  இஞ்சி புளி தீயல், ஊறுகாயுடன் கேரள மண்ணின் தனி தன்மையுடன் ருசியான  விருந்து படைக்கின்றனர். புதுகோடியுடன் வாழை இலையில் உண்ண வேண்டும் என்பதே ஆசாரம்!

 8வது நாள் ஓணத்தப்பன் என்ற சிலையை அத்தப்பூவில் நடுவில் நிறுவுகின்னர்.  9 வது நாள் தான் படு ஆற்ப்பாட்டமாக ஓணம் விருந்துடன் பண்டிகை ஆசரிக்கப்படுகின்து.  10 வது நாள் அதாவது இரண்டாம் ஓணம் அன்று  வாமனன் உருவத்தில் வந்த விஷ்ணு மகாபலியை பூமிக்கடியில் தாழ்த்திய நாள். அன்றே மகாபலி மக்களிடம் விடை பெற்று செல்கின்றார். அன்று ஆலயங்களில் வழிப்பாடு நடைபெறுகின்து.  கேரளாவில் கொச்சின் பக்கம் ஒரு ஆலயவும், வாமன்மூர்த்திக்கு என தமிழகத்தில் கன்னியாகுமாரி சுசீந்தரத்தில் மற்றொரு ஆலயவும் உண்டு.  சென்னையில் மஹாபலிபுரவும் மாவேலி என்ற இம்மன்னம் பேர் கொண்டே உள்ளது என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.   4வது ஓணம் அன்று இன்று மகாபலியின் உருவ பொம்மையை சமீப நீர் நிலைகளில் கரைக்கின்றனர்.  இன்றே புலி வேடத்தில் ஆடும் நடனம் சிரப்புற நடை பெறுகின்றது.  ஓணம் நாட்களில் கலாச்சார நிகழ்வுகள்  திருவாதிரைக்களி, மோகினியாட்டம், கதைகளி போன்ற கேரளா நடனங்களும், விளையாட்டுகள் முழு வீச்சில் நடை பெறும் காலமாகும்.

(நேற்றைய முன் தினம் ஓணம் நாள் பதிவிட திட்டமிட்டிருந்த பதிவு சில மென்பொருள் பிரச்சனையால் பதிய இயலவில்லை.  இன்று நார்வேயிலுள்ள பத்மன் அண்ணாவின் உதவி கொண்டு பதிவை பதிய இயன்றதில் மகிழ்கின்றேன். அண்ணனுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்!)

8 comments:

  1. அன்புத் தோழி தங்களின் தொகுப்பு நன்றாக உள்ளது,இருப்பினும் அதிகமாக எழுதி வருகிறீர்கள் என்பதால் எளிமையான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தலாம்.
    எ.கா வருடம்-ஆண்டு,பண்டிகை -திருவிழா,பூஜை-வழிபாடு, பஞ்சாயத்து -ஊராட்சி,வர்ணம்-வண்ணம்,பாதிரியார் -அருட்தந்தை,கன்னியாஸ்திரி-அருட்சகோதரி,சுகம்-நலம், வாசி-வாழ்,மிக்ஸ்-கலவை,ரீமிக்ஸ் -மறுகலவை இப்படி வாழ்வியலுடன் தொடர்புடைய சொற்களைப் பயன்படுத்தி எழுதினால் மிக சிறப்பாக இருக்கும்,தமிழை வளப்படுத்துவது எழுத்தாளரின் கடமை.நன்றி...

    ReplyDelete
  2. ஓணம் சாப்பாடு இருந்தால் கொஞ்சம் அனுப்புங்கள் ..வாசிக்கவே வாயூறுகிறது...அல்லது உங்கள் எழுத்தா வாயூற வைக்கிறது...

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மதிபிற்க்குறிய (ரத்னவேல்)அப்பா, பத்மன் அண்ணா உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கின்றது!நன்றி வணக்கங்கள்.

    ReplyDelete
  5. நண்பர் கல்வி விடியல் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இனி எழுதும் போது உங்கள் வார்த்தைகளை மனதில் வைத்திருப்பேன். நன்றி வணக்கம்!

    ReplyDelete
  6. வணக்கம் அக்காச்சி,

    ஓணம் பண்டிகை பற்றிய பல புதிய தகவல்களை அறிந்து கொள்ள உங்களின் இப் பதிவு உதவியிருக்கிறது.
    அதிலும் மத வேறுபாடின்றி ஒட்டு மொத்தக் கேரள உறவுகளும் ஓணம் பண்டிகையோடு ஐக்கியமாக இருப்பது இன்னும் சிறப்பினைத் தருகின்றது.

    ReplyDelete
  7. மிக நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. ஓணம் என்றாலே நினைவுக்கு வருவது சாப்பாடுதான். ஒணம் பற்றிய விரிவான பயனுள்ள தகவலை தந்தற்கு நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete