30 Mar 2011

ஏமாற்றும் விண்வெளி அரசியல்!!!!




மனிதனின் விண்வெளிப் பயணம் தொடர்பான கனவுகள் பற்றிய கதைகள் இதிகாச நூல்கள் ராமாயணம், மகாபாரதம் காலம் தொட்டே துவங்கியுள்ளது.  இவையில் விண்கல-பயணம் பற்றிய கற்பனைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.


ஆயிரம் இரவுகள்’ என்ற அரேபிய நூலிலும் விண்கலம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.  10 வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய கதாசிரியர் “மூங்கில் வெட்டி” என்ற நாவலில் விண்வெளி பயணத்தை குறித்து கற்பனையாக எழுதியுள்ளார்.  இதில் இருந்து விண்வெளி மீது மனிதனின் கற்பனைகளும் ஆசையும் எக்காலவும் இருந்துள்ளதை காணலாம்.


முதலில் எலி, நாய் , தவளை போன்ற விலங்குகளையே அனுப்பி ஆராய்ச்சி செய்துள்ளனர்.  விண்வெளிக்கு முதலில் கால் பதித்தவர்கள் ஆம்ச்ட்ராங், ஆல்ரிடின்,  யூரிகிரிகோரி என்ற மனிதர்கள் தான் என்று நமக்கு  சொல்லி தரப்பட்டாலும் உண்மையில் கால்வைத்து நமது முன்னோர் இனமான ஆல்பிரட்-6 என்ற குரங்கு தான்!


தற்போது சீனா, ஜப்பான், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளும் விண்வெளி பயணத்திற்க்கு போட்டி போட்டு கொண்டு தயாராகி கொண்டிருக்கின்றது.  28 மிலியன் கட்டிவிட்டால் ரஷ்யா ஏற்பாடு செய்து தரும் விண்வெளி பயணத்திற்க்கு சில பயிர்ச்சியுடன் பயணம் மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது.                                                                                                             
                                                                                                     விண்வெளி பயணம் மீது, அரசு - விஞ்ஞானிகளின் வார்த்தைகளில் நம்பி  மனிதன் இந்த அளவு பேராவல் கொண்டிருந்தாலும் இப்பயணம் உண்மையில் இனிமையானது அல்ல என்பது தான் நிஜம்!  விண்வெளியில் புவி ஈர்ப்பு சக்தி பூஜியம் என்பதால் மனிதனால் பூமியில் என்பது போல இயங்குவது கடினமே.  காற்றடைத்த பலூணை போன்று மிதக்க தான் முடியும்.  உடல் எடை, விண்வெளியில் குறைவதால் விண்வெளிக்கு ஏற்ப அங்கு வாழ கற்று கொள்ள வேண்டும்.  மேலும் நிம்மதியான குளியலுக்கு கூட வழியற்று பஞ்சு குளியல் தான். கழிவறை பிரச்சனை தான் மிகவும் கொடியது பிரத்யேக தொழில் நுட்பத்துடன் கூடிய கழிவறையே பயண்படுத்த இயலும்!! விண்வெளி பயணிகள் சுகாதார பிரச்சனையால் தான் பெரிதும் துன்புறுகின்றனர் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.


விண்வெளியில் ஆல்பா, காஸ்மிக் போன்ற அதி சக்தி வாய்ந்த கதிர் வீச்சுகளால் புற்று நோய் தாக்க வாய்ப்பு உள்ளது. “அப்பல்லோ” விண்கலத்தில் பயணித்தவர்கள் பளிச்சிடும் ஒளி கண் திரையை ஊடுருவி சென்றதாக குறிப்பிட்டுள்ளனர். விண்வெளிப் பயணம் மற்றும் ஆராய்ச்சியை மெச்சும்படியான  சாதனையாக கருதுவதற்க்கு  இல்லை  என்றே நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் ரிச்சார்டு, ஃபெயின்மேன் போன்றோர் தெரிவித்துள்ளனர்.    
பல விண்வெளிப் பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தது.  இதில் 1986 ல் நடந்த சாலஞ்சர் விண்வெளி பயணத்தின் தோல்வியை  தழுவி “சாலன்ஜர்” என்ற திரைப் படத்தில் விண்வெளி அரசியல் பற்றி கதைத்துள்ளனர்.  7 விண்வெளி வீரர்களுடன் புறப்பட்ட விண்கலம் தொடர்பியல் மற்றும் தொழில்நுட்ப கோளாரால் அட்லாண்டிக் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. இதில் ஒரு பயணியாக பள்ளி ஆசிரியை கிருஸ்டாமாக் ஆலிஃப்  இருந்ததால் நாசா, பள்ளி மாணவர்களுக்கு  என (45%) நேரடி ஒளிபரப்பு தயார் செய்யபட்டிருந்தது.  இதே போல் 2003 ல் இந்திய விண்வெளி பயணி கல்பனா சாவ்லாவின் பயணவும் துயரில் முடிந்தது.


விண்வெளி பயணிகளின் வாழ்க்கை கூட விண்வெளி பயணத்திற்க்கு பின்பு இனிதாக இருந்திருக்க வில்லை.   பலருடைய மரணம் இயற்கை அல்லாது  மர்மமாகவே இருந்துள்ளது.   நாடுகள் கொண்டுள்ள போட்டியில் மனிதர்களின் நிம்மதியை பாழாக்குவதுடன் நாட்டின் வளத்தையும் விண்வெளிப் பயணம் என்ற பெயரில் சுரண்டுகின்றனர் என்பதை தான் கவலை கொள்ள வேண்டிய செய்தி!!!


கொலம்பிய விண்கல விபத்து,  கத்ரீனா பேரழிவு, இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின்பு அமெரிக்க மக்கள்  விண்வெளி ஆராய்ச்சிக்காக செலவழிக்கப்படும் மிகப்பெரிய டாலர்களை பற்றி கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். ரஷ்யா, தாங்கள் தான் விண்வெளிக்கு முதல் விண்கலத்தை அனுப்பியுள்ளோம் என்று தற்பெருமை கொண்டாலும் உலக தெருவோரக் குழந்தைகளின் பெரும் பகுதி ரஷ்யா குழந்தைகள் என்று எண்ணி வெட்கி தலைய் குனியத் தான்  வேண்டியுள்ளது.


நமது இந்தியாவை எடுத்து கொண்டால் உலக நாடுகளின் குப்பை கூடம், உலகநாடுகளால் தடைசெய்யப்பட்ட பூச்சிகொல்லிகளுக்கு அறிமுகம் கொடுப்பவர்கள், ரஷ்யாவில் மூடும் அணு ஆலைகளுக்கு திறப்புவிழா கொண்டாடுபவர்கள் என்று கோமாளி அரசியல் கொண்டது என்பதால் என்னவோ; பணக்கார நாடுகள் கூட விண்வெளியை பற்றி பெரிதாக மதிப்பிடாது இருக்க  துணியும் போது இவர்கள் பள்ளி-கல்லூரி தோறும் அப்துள் கலாம் போற்ற அறிவு ஜீவிகள் வழியே மக்கள் மத்தியில் விண்வெளி ஆசையை விதைத்து வருகின்றனர்.  70% ஏழைகள் கொண்ட இந்தியாவில் விண்வெளி மோகம் அதிகரித்து வருகின்றது என்பதே கவலைக்குரிய செய்தியே.  கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் கூட தர இயலாத சூழலில் விண்வெளி ஆராய்ச்சிக்கு என 6 மில்லியயன் ஒதுக்கியுள்ளது கண்டிக்க தக்கது.  இந்திய விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்க்கு மொத்தம் 12 ஆயிரத்து  400 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. பிரதமரின் நேர் கட்டுபாடில் இருக்கும் இத்துறையின் நிலவரம் சமீபகாலமாக ஊடகம் வழி 4G ஊழல் என்ற பெயரில் வெளிவர ஆரம்பித்துள்ளது. பிரதமரும் "எனக்கு ஒன்றும் தெரியாது தான் எல்லாம் நடைபெறுகின்றது என்று திருவாய் மலந்துள்ளார்.


 1969 ல் இருந்து விண்வெளியை பற்றி ஆராய்ந்து வரும் இந்திய விஞ்ஞானிகளால் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை மக்களுக்கு முன்கூட்டி எடுத்து கூறி உயிர் உடைமைகளை  காப்பாற்ற இயலவில்லயே என்ற மக்களின் எதிர்ப்பு குரலை கேட்டும் கேட்காதது போல் தான் இயங்குகின்றது நம் ராக்ஷச அரசு.


மக்கள் வசிக்க தகுந்த நீர், நில இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கும் பூமியை பேணாது  வாழ்வாதாரமற்ற சந்திர, செவ்வாய் கிரங்கள் மேல்  ஆராய்ச்சி என்ற பெயரில் கொள்ளும் அர்த்தமற்ற பற்றை  விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொள்ளும் அரசியல் அதிகார வர்கத்தில்  பகல் கொள்ளையை என்னவென்று சொல்வது?     

5 comments:

  1. புவி ஈர்ப்பு சக்தி பூஜியம் என்பதால் மனிதனால் பூமியில் என்பது போல இயங்குவது கடினமே. .//

    சில கோள்களில் புவியீர்ப்பு சக்தி இருப்பதாக தற்போது கண்டு பிடித்திருக்கிறாங்களே.

    ReplyDelete
  2. சகோதரி,
    இது ஏமாற்றும் அரசியல் அல்ல.

    முதல் விடயம்: நாட்டை முன்னேற்ற அரசு பாடுபடனும்.
    மக்கள் நலனினை மேம்படுத்தும் நோக்கில் அரசு திட்டங்களை முன் வைக்கனும்.
    ஏழைகள் இல்லாத நாடாக அனைத்து மக்களும் ஊதியம் பெறும் திட்டங்களை மேலை நாடுகளைப் போன்று அறிமுகப்படுத்த வேண்டும்.

    அதன் பின்னர் சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தனும்.
    அப்புறமா விண்வெளி தொடர்பில் திட்டங்களை முன் வைக்கனும்!

    ஏமாற்று அரசியல் என்று நாம பேசிப் பேசியே காலத்தை ஓட்டுவதை விடுத்து காத்திரமா ஏதாச்சும் செய்ய முயற்சிக்கனும்.

    ReplyDelete
  3. Selvarajah Nirupan

    நிலவிற்கு போவதிலும் அரசியல் இருக்கா?
    நம்பவே முடியலைங்க.
    இப்படியே சிந்தித்து சிந்தித்து தமிழன் தன் வாழ்க்கையை படு குழியினுள் ஓட்டுறான்.

    சூழலை, சூழலில் வாழும் விலங்குகளை பாதுகாக்க கடுமையான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தனும்.

    அது பற்றியும் ஓர் பதிவு எழுதுகின்றேன்.

    ReplyDelete
  4. என் புலம்பலும் இதே தான்

    முதல் முறை வருகிறேன்

    எழுத்து சிறப்பாக உள்ளது

    தொடருங்கள்

    ReplyDelete