header-photo

முதல் புத்தகம்- நான் தேடும் வெளிச்சங்கள்!

வலைப்பதிவராக வந்தது என் மதிபிற்குரிய பேராசிரியர் கோபால ரவிந்திரன்http://blogs.widescreenjournal.org/?author=5 அவர்கள் கொடுத்த செயலாக்க- தேற்வின் பகுதியாகவே இருந்தது. என் எழுத்துக்கு முதல்ச்சுழி இட்ட என் பேராசிரியருக்கு என் முதல் வணக்கங்கள். எழுத்தை ஆக்கபூர்வமாக தொடர வேண்டும் என்று பணிந்தவர். முதலில் ஆங்கில மொழியில் வலைப்பதிவு எழுதி வந்தேன். என் ஆங்கில பதிவை ஒருவர் ஆய்வில் மாதிரியாக பயண்படுத்தினார் என்று கேள்விப்பட்டது சிரிப்பாகவும்  ஏன் பெருமையாகவும் இருந்தது. பின்பு ஈழவலைப்பதிவுகள் என் ஆய்வின் பகுதியான போது எனக்கும் என் கேரளத் தமிழிலும் எழுத ஆற்வம் வந்தது. அவ்வகையில் துவங்கப்பட்டதே "ஜோஸபின் கதைக்கிறேன்" என்ற என்னுடைய வலைப்பதிவு.

முதன் முதலில் என் வலைப்பதிவை புத்தகமாக வெளியிட சஞ்சயன் அண்ணன் உற்சாகப்படுத்தினார். இடைப்பட்ட காலத்தில் கிடைத்த கல்லூரி விரிவுரையாளர் வேலையில் லயித்து விட்டதால்  புத்தக வேலைக்கு தேவையான நேரவும் கிடைக்கவில்லை.  பின்பு ஸ்ரீ அண்ணா (கங்கைமகன்) ஒரு கண்டிப்பான ஆசிரியர் போல் புத்தகத்திற்க்கு தலைப்பும் தந்து  இவ்வருடம் தன்னுடைய  புத்தகம் வெளியிடும் போது  என்னுடைய சிறுகதை தொகுப்பும் வர வேண்டும் என கண்டிப்புடன் கட்டளை இட்டார். முதலில் இது என்னால் முடியுமா என்ற கேள்வி எழுந்த போதும் ஸ்ரீ அண்ணாவின் தொடர் வழிகாட்டுதலில், உற்சாகப்படுத்துதலில்; கட்டுரை எழுதுவதில் ஆற்வம் கொண்ட நான் சிறுகதை பக்கம் என் பார்வையை திருப்பினேன்.கதைகள் எழுத ஆரம்பித்த போது தான் கட்டுரையில் கிடைக்காத சில சுதந்திரம் சிறுகதையில் கண்டு கொண்டேன், அதுவும்  பிடித்து போனது. என் நீண்ட கால மௌனத்தின் திறப்பாக இச்சிறுகதை தொகுப்பு வரவுள்ளது. நான் சமூகத்தில் கண்ட சில கதாபாத்திரங்களை சமூக அக்கறையுடன் அப்படியே பிரதிபலிக்க வைக்க துணிந்துள்ளேன். தேடுதலில் விரும்பமுள்ள நான், இப்புத்தகம் வழியாக ஒரு தேடுதலையும் அதன் விடைகளையையும் வாசகர்களிடமே இட்டு சென்றுள்ளேன். ஒரு சிறுபிள்ளையின் முதல் அடி போல் தத்தி தத்தி வந்தாலும்  மலையாளவும் தமிழும் கூடி இரண்டர கலந்த என் கலாச்சார-சமூக பார்வையின் கலவையான இந்த நூல்  சில சுவாரசியங்கள், சில நெருடல்கள், சில மகிழ்ச்சிகள் தந்து செல்லும் என்பதில் மறுசிந்தனை இல்லை!

எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள், பேராசிரியர்களை எண்ணி பார்க்கின்றேன். கல்வி கற்க வயது தடயல்ல என்று உற்சாகப்படுத்தி என் ஆய்விலும் வழி நடத்திய எங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொடர்பியல் துறை தலைவர் பேரா. பெ. கோவிந்த ராஜ் அவர்களுக்கு என்  நன்றி வணக்கங்கள் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.  உங்கள் பேச்சை விட உங்கள் எழுத்து சிறப்பு என்று எப்போதும் உற்சாகப்படுத்துபவர்.என் வலைப்பதிவை பற்றி எப்போதும் விசாரிப்பவர்.

பேராசிரியர் வைத்தி நடராஜன் அவர்கள் தற்போது பெரியார் பல்கலைகழக தொடர்பியல் துறை தலைவராக மாற்றம் ஆகி சென்றாலும் எனக்கு 3 வருடம் கல்வி கற்பித்தவர். அவருடைய வகுப்புக்கள் ஏட்டு சுரைக்கா என்பதையும் கடந்து நடைமுறை வாழ்கையில் பிரச்சனைகளை  துணிவுடன் நாம் எப்படி எதிர்கொள்வது என்பதாவே இருந்தது. பேராசிரியர் ஐயாவுக்கும் என் நன்றி வணக்கங்கள்.

என்னை நேசமுடன் நடத்திய  நண்பர்களான பேராசிரியர்கள் பேரா. ராதா அம்மையார், பேரா. பாலா சுப்ரமணியன் அவர்கள், என் படிப்பு எழுத்தை தன் ஆக்கபூர்வமான கருத்துக்களால் உற்சாகப்படுத்தும் ரேடியோ தகவல்கள் பற்றி அக்குவேர் ஆணிவேராக தெரிந்து கற்றுத் தரும் பேரா.ஜெய் சக்திவேல்  அவர்கள், எஸ். ஆர் எம் ஊடகத்துறை தலைவர் பேராசிரியர் பொன்னம்பலம் அவர்கள், இன்னும் பெயர் சொல்லாவிடிலும் என் இதயத்தில் வீற்றிருக்கும் எனது அனைத்து பேராசிரியர்கள்,  என் பட்டப்படிப்பு பேராசிரியை அருட் சகோதரி குவின்ஸ்லி, என்னுடன் கல்வி பயின்ற என் வகுப்பு தோழர்கள் இப்படியாக என் வெற்றிக்கு வழித்தடம் இட்டவர்கள் பலர். அவர்கள் யாவரையும் நன்றியுடன் வணங்குகின்றேன்.

அடுத்து நான் வேலை செய்த பாளையம் கோட்டை தூய சவேரியார் கல்லூரி நிர்வாகம் மற்றும் துறைத்தலைவர் அருட் தந்தை சேவியர் ஆண்டணி, உடன் வேலை பார்த்த பேராசிரியர்கள்,  சக தோழர்கள் அனைவரும் என் மனம் நிறைந்த நன்றிகள்.  22 புத்தகங்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுள்ள துறைத்தலைவர் அருட் தந்தை சேவியர் ஆண்டணி என்றுமே எனக்கு தூண்டுதலாக இருந்துள்ளவர். அவருக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள் தெரிவிக்கின்றேன்.

என் எழுத்தை வளப்படுத்த நிறைய வாசிக்க பணிந்த அறிவின் சிகரம் தொட்ட பேராசிரியர் பெர்னாட் சந்திரா போன்றவர்களை நினைக்கும் போது உள்ளம் மகிழ்கின்றது

என்னுடைய 30 களில் மறுபடியும் தபால் வழியாகவாது படிக்க வேண்டும் என ஆவலுடன் இருந்த என்னை  தன் குழந்தையை போல் கூட்டி சென்று கல்லூரி வகுப்பறையில் இருத்தியவர், ஒரு போதும் என்னை குற்றம் சுமத்தாது என்னை நானாக அணைத்து சுமந்து செல்லும் என் அன்பு கணவருக்கு அன்பு கலந்த நன்றிகள். . 

என் பெற்றோர்கள் என்னவர் பெற்றோர்கள் என் தம்பி தங்கை குடும்பத்தார், எனக்கு உற்றுகோலாக இருந்த என் சுற்றும் மற்றும்  உறவுகள் யாவரையும் அன்புடன் நினைவு கூறுகின்றேன்.

 எனக்காக தங்கள் பல அருமையான நேரங்களை விட்டு தந்து எனக்கு ஆக்கவும் ஊக்கவுமாக இருக்கும் என் அன்பு பாசமிகு குழந்தைகள் சாம் ஜோயேல் ஜெரோம், ஆபேலை  நினைத்து பார்க்கின்றேன்.

இனி எழவே இயலாது என்று நான் வீழ்ந்து துவண்ட போது  என்னை தூக்கி விட்டு ஆறுதலாகவும் வழிகாட்டுதலுமாக இருந்த என் நட்புகள் என் வாழ்கையில் கிடைத்த பாக்கியமே . இன்று என் எழுத்தை புத்தகமாக காண போகின்றேன் என்றால் ஆக்கபூர்வமான கருத்துக்களால் உற்சாக மூட்டியவர்கள் என் பாசமிகு நண்பர்களே. தற்மசங்கடமான நிலையில் நான் நின்ற போது எக்காரணம் கொண்டும் என் பெயர் வெளியில் தெரியக்கூடாது என கட்டளை இட்டு புத்தக வெளியீட்டுக்கு ஆகும் செலவை தாயுள்ளத்துடன் ஏற்ற வெளிநாட்டில் வசிக்கும் தோழியும் அவருடைய அன்பு கணவருக்கும் என் நன்றி வணக்கங்கள்.  உங்கள் எழுத்தை புத்தகமாக காண்பது "ஒரு தாய் தான் பிரசிவிக்கும்  குழந்தையை காண்பது போல் ஜோஸ்பின்", என கூறி இன்றும் வழி நடத்தும் முகம் காணாத நட்பு, பாச உறவுகள் உண்டு எனில் அதுவே உண்மை!

 அணிந்துரை தந்தருளிய இடதுமுன்னணி சிந்தகரும் சிந்தனையாளருமான அண்ணன் குமரகுருபரன் அவர்களுக்கு என் பணிவான  மகிழ்ச்சி நன்றிகள்.  எழுத்து வாசிப்பு வழியாக நட்பாகி எல்லா பதிவுகளையும் ஆழமாக வாசித்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் தருபவர் அண்ணன் குமரகுருபரன். கதைகள் யாவையும் ஒரு நண்பராக மட்டுமல்லாது விமர்சகரின் மனம் கொண்டு பகுந்தாய்ந்து தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்..

பதிப்பாசியர் அணிந்துரை என் எழுத்துக்கு இன்னும் வலு சேர்க்கின்றது. என் எழுத்தை புத்தகமாக வெளியிட தேர்ந்து எடுத்ததுடன் முதல் புத்தகம் என்பதால் தேவைக்கதிகமான மனகலக்கத்துடன் அணுகிய போதும் பொறுமையாக வழிநடத்திய பதிப்பாசிரியர் மற்றும் பதிப்பகம்  தகிதா,  கவித்துவமான அட்டைப்படம் தயாரித்து தந்த  கலைஞர் அனந்த பத்மநாபன், மற்றும் இந்த புத்தக வெளியீட்டு வேலை அணியறையில் நிற்ப்பவர்கள் யாவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள் !

நான்தேடும் வெளிச்சங்கள்' - பதிப்புரை

'ஜோஸபின் கதைக்கிறேன்' என்னும் வலைப்பூவின் மூலம் உலகத்தமிழர்களோடு நல்ல கருத்துக்களை உரையாடி தமிழோடு உறவாடிவரும் அருமை படைப்பாளர் ஜோஸபின் பாபா அவர்களின் 'நான் தேடும் வெளிச்சங்கள்' என்னும் சிறுகதைத் தொகுப்பினை வெளியிடுவதில் தகிதா பெருமையடைகிறது.என் தோழமைகளின் தோழமையாக இருந்து எம்மோடும் தோழமைக் கொண்ட ஜோஸபின் அவர்களின் கிடைத்தற்கரிய அனுபவங்களை அவர்களின் இணையப்பக்கங்களிலிருந்து உங்களின் இதயப்பக்கங்களுக்கு கொண்டுவருவதற்காகவே பக்கம் பக்கமாக இத்தொகுப்பை வெளியிட்டு உங்களின் பக்கம் கொண்டுவந்திருக்கிறோம்.

'தமஸோமா ஜோதிர் கமயா' என்று வேதம் சொல்வதற்கேற்ப, ஒளிரும் எழுத்தின் துணைகொண்டு தன் நெடுவழிப் பயணங்களுக்கான வெளிச்சங்களை தானே மிளிரவிட்டிருக்கிறார்.இவர் கொளுத்திப் போட்டிருக்கும் வெளிச்சங்கள் படிக்கும் வாசகர்களான உங்களின் மனங்களிலும் விடியல்களை உருவாக்கும்.'நல்ல சொல் இருட்டை வெளிச்சப்படுத்தும்' என்று புவியரசு சொன்னது நிதர்சனமானது என்பதை இதைப் படிக்கும்போதெல்லாம் உணர்வீர்கள்.

நிசங்களைக் கொண்டு கதையாடுவதும் புனைவுகளைக் கொண்டு கதையாடுவதும் படைப்பிலக்கியத்தில் நிகழும் ஒன்றுதான். என்றாலும் நிசம் எது? புனைவு எது? என்று பிரித்தறியாத அளவிற்கு கதை செய்திருப்பது இவரின் படைப்பாற்றலுக்கும், சமூக அக்கறைக்கும், மனத் துணிவிற்கும், எழுத்து தர்மத்திற்கும் சாட்சியங்களாக விளங்குகின்றன .ஆனந்தத்தின் கண்ணீரையும் அழுகையின் கண்ணீரையும் ஒரு நல்ல படைப்பாளி தன் எழுத்தில் வழியவிடுகிறான் என்பதற்கு ஜோஸபின் அவர்களின் கதைகள் கொண்டு உணரமுடிகிறது.நேற்றின் காயங்களுக்கும் இன்றின் வலிகளுக்கும் தன் எழுத்துகளைக் கொண்டு மருத்துவம் பார்க்கும் மகத்துவம் ஜோஸபின் அவர்களுடையது.

கடந்து போனவர்களை ,காயம் செய்தவர்களை, கண்ணீர் தந்தவர்களை, மனதில் நிற்பவர்களை, அன்பு கூர்ந்தவர்களை என்று இப்படி பலரையும் இந்தக் கதைகளுக்குள் இயல்பாய் உலவவிட்டிருக்கிறார். ஒரு மனிதனுக்கு கற்றுக்கொடுக்கும் நல்ல ஆசிரியராக காலம் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.காலத்தின் கதைகளாக 'நான் தேடும் வெளிச்சங்கள்' இங்கு உதயமாகி இருக்கின்றன. இப்படியும், அப்படியும், ஏன் எப்படியுமாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை இவரின் கதைகள் வெளிச்சமிட்டு காட்டுகின்றன.

கதைகள் பெரும்பாலும் கதை சொல்லும். இவரது கதைகளோ வாழ்க்கையைச் சொல்லுகின்றன.பல மொழிகளின் பல பிரதேசங்களின் கலவை மனுசியாக திகழும் ஜோஸபின் அவர்களின் படைப்பின் ஊடே தென் திராவிட மொழிகளின் அனைத்து கூறுகளையும் அழகாய் தரிசிக்க முடிகிறது. இவரின் அரிதாரம் பூசாத எதார்த்தத்தின் கதைகள் உங்களுக்கு நிச்சயம் நெருக்கமானவைகலாக இருக்கும் .

முள்ளும் மலருமாய் முகிழ்த்துக் கிடக்கின்ற அனுபவங்கள் கதைகளாகும் போது வாசிப்பில் ஒரு பரவசம் இருக்கும். அந்த பரவசத்தைத் இத்தொகுப்பில் உணரலாம் .இவைகள் வலிகளா ? இல்லை வசந்தங்களா? எவை என்று நீங்களே இந்த வெளிச்சங்களில் நீராடி சொல்லுங்கள்.அனுபவங்களால் கறை படித்தவர்கள் இவரின் வெளிச்சங்களில் குளித்தால் நிச்சயம் புனிதப்படுவீர்கள்.ஜோஸபின் அவர்களின் படைப்பின் தேடல்களோடு நமது வாசிப்பின் தேடல்களையும் தொடருவோம்.

அருமை ஜோஸபின், நீங்கள் இன்னும் நிறைய கதைக்க வேண்டும். நீங்கள் நிறைய கதைப்பதற்கான கதையும் தமிழும் உங்களிடம் நிரம்பவே இருக்கின்றன.உங்கள் வெளிச்சங்களின் அலை நீளம் பெரிது.கதைவிளக்கு ஏந்தும் காரிகையாய் வலம் வாருங்கள்.வாழ்க வளமுடன் .வெல்க தமிழுடன்.

 
புத்தக வெளியீட்டுக்கு மலேஷியாவில் இருந்து வரவிருக்கும் அன்பு தோழி புனிதா வெள்ளைச்சாமி, என் வளர்ச்சியில் அக்கறை கொண்டு விசாரிக்கும் அன்பு தோழர்கள் பத்திரிக்கையாளர் குமரேசன் ஆசாக் ஐயா, Dr. பழனிச்சாமி அவர்கள், பண்பான நண்பர்கள் கவிஞர் மயூர ரத்தினசாமி,  பாட்ரிக், ராஜேஷ் தீனா, அண்ணன் ஜான் துரை, சுபி அக்காள், தோழி ஜமுனாநதி, கிருஷ்னம்மா கிருஷ், பத்மன் அண்ணா, எழுத்தாளர் தாமிரா அவர்களே, நெல்லை நண்பர் முனீஷ் குமார், என் வெற்றியில் மகிழும்  ராம்ஜி யாகூ, என் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அருமையான பல புத்த்கங்கள் அனுப்பி தந்து வாசிக்க பணிந்து "என் பாச மகள்" என அழைக்கும் அன்பு அப்பா ரத்னவேல் ஐயா, கவிஞர் யாழி கிரீதர், எழுத்தாளர் நேசமித்தரன், தோழி ஹன்சா காஷ்ய, மதுரைவாசி பிரகாஷ், சீனா ஐயா, நண்பர் "அவர்கள் உண்மைகள்", இலங்கை தம்பி சிவசுதன் மற்றும் வலைப்பதிவர் நண்பர்கள் யாவரையும் அன்புடன் நன்றியுடன் நினைத்து பார்க்கின்றேன்.  என்னை நானாக உருவாக்க உதவிய என் நண்பர்கள் இடம் பற்றாக்குறையால் பெயர்கள் எழுதிவிடவில்லை என்றாலும் என் நெஞ்சத்தில் அச்சாக பதிக்கப்பட்டுள்ளீர். நன்றி நன்றி மகிழ்ச்சிகள்.


பின் அட்டைக்கு என அணிந்துரை தந்து உற்சாகப்படுத்திய  என் சகோரர் சங்ககால எழுத்தில் பிரசித்தவும் 6 புத்தகங்கள் வெளியிட்டுள்ளவரும் உலக மொழிகளில் சிறந்து விளங்கும்  உடன்பிறவா சகோதரரும் தோழருமான கங்கைமகனுக்கு என் நன்றி வணக்கங்கள்!Srikandarajah கங்கைமகன்
நிலைக்கண்ணாடி!

நாம் வாழும் சமூகம் பலவற்றைச் சந்தித்திருக்கிறது. சிலவற்றைச் சிந்தித்திருக்கிறது. ஆனால் உண்மைகளை இருளுக்குள் தள்ளித் தன்னை மேம்படுத்திக் கொண்டதும் இந்தச் சமூகம்தான். உலகத்தின் பார்வையில் எல்லோருமே ஒவ்வொரு எழுத்தாசிரியர்கள்தான். ஆனால் ஒரு சிலரே தங்களை முழுமையாக இணைத்து வெற்றியும் காண்கின்றார்கள். அந்த வகையில் இந்தக் கதாசிரியரின் கன்னி முயற்சி போற்றுதற்குரியது. தான் எழுத்தாளராக இருப்பதைவிட உலக நூல்நிலையத்தின் மாணவியாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்பதை அடிக்கடி சொல்லித் தன்னை மேம்படுத்திக் கொள்வார் . இருளும் வெளிச்சமும் நாணயத்தின் இரு பக்கபங்கள் போன்றவை. வெளிச்சத்தில் அவர் நடந்துவநத பாதைகளை இருளுக்குள் மூட மனமின்றித் தேடிப் பார்த்தபோது தோன்றிய உண்மைச் சம்பவங்களைத் தனது "நான் தேடும் வெளிச்சங்கள் என்ற தொகுப்பு நூலின் கருப்பொருளாக அமைந்துள்ளார். தன்னைச் சமூகம் எப்படிப் பார்க்கின்றது என்பதைவிட தான் சமூகத்தை எவ்வாறு நோக்கினார் என்பதையும் தனது பல அனுபவங்களையும் தன் ஆழுமைக்கு எட்டியவரை இலவகுவாக வாசகர்களுக்கு விளங்ககக்கூடிய வகையில் பதிவு செய்திருக்கின்றார் இந்தநூல் அவரது முதலாவது படைப்பு என்பதால் தான் வாசகர்களிடம் இருந்து கற்கவேண்டிய பாடங்களே நிறைய இருக்கும் என்று கருதுவதாக அடிக்கடி கூறுவார். அதனால் அனனத்து வாசகர்களின் வரவுகளையும் ஒரு அரண்மனைப் பிரவேசமாகவே நான் எதிர்பார்க்கிறேன். அவரது எழுத்துக்களைக் கூர்மையாக்கும் பொறுப்புக்களை ஆசிரியரின் வாசகர்களிடமே பணிவாக ஒப்படைக்கின்றேன்.
மேலும் பல அரிய நூல்களை இவ்வுலகிற்கு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி விடைபெறுகிறேன் .

அன்புடன்
கங்கைமகன்
சுவிற்சர்லாந்து.
 

எழுத்திலும் மருத்துவத்திலும் திறம்பட விளங்கும் இலங்கை சிறந்த வலைப்பதிவரான சகோதரர் டொக்டர் முருகானந்தம் தன்னுடைய வேலைமத்தியிலும் எனக்கென நேரம் தந்து அணிந்துரை எழுதி தந்தைமைக்கு  என் நன்றி மகிழ்ச்சிகள் சமர்ப்பிக்கின்றேன்.

Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
 • ஹாய் நலமா?
  இணையம் கூடாக அறிமுகமான அன்புச் சகோதரி ஜோசப்பின் பாபா அவர்கள், சிறுகதைத் தொகுதி ஒன்றையும் வெளியிட இருக்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

  அவரது சிறுகதைகளை மட்டுமின்றி பல கட்டுரைகளையும் அனுபவக் குறிப்புகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன், இரசித்து மகிழ்கிறேன், பயன் பெறுகிறேன். அவரது படைப்புகளில் அடிநாதமாக எப்பொழுதும் இழையோடிக் கொண்டிருக்கும் சத்திய உணர்வுதான் என் ஈடுபாட்டிற்குக் காரணமாகும். தனக்குச் சரியானது என்பவற்றை துணிவோடு, தெளிவாக, பூசி மழுப்பலின்றிச் சொல்ல அவர் ஒருபோதும் தயங்குவதில்லை.

  தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை கூர்ந்து நோக்கி அங்குதான் பெற்ற அனுபவங்களை அழகாகச் சொல்வது அவரது சிறப்பு. போலி அலங்காரங்களால் வாசகனை மருள வைக்காத எளிய நடை, யதார்த்தமான சம்பவங்கள், அதற்குள் இழையோடும் மனித நேயம் ஆகியவை எப்பொழுதும் என்னைக் கவர்ந்திருக்கின்றன.

  தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், அபலைப் பெண்கள் போன்றோர் மீதான பரிவும் அக்கறையும் படைப்புகளுக்கு சமூக வலுச் சேர்க்கின்றன. இலங்கைத் தமிழர்கள் அவலங்கள் நீங்கி இயல்பான வாழ்வு வாழ வேண்டும் என்பதில் உள்ள உண்மையான அக்கறை நெகிழ வைக்கிறது.

  துணைப் பேராசிரியர், படைப்பாளி என்பவற்றிக்கு அப்பால் புகைப்படக் கலை, வீட்டுத் தோட்டம், சங்கீதம், சினிமா எனச் சகோதரியின் பல்துறை ஈடுபாடுகளும் புலமையும் ஆச்சரியப்பட வைக்கின்றன.

  இணையமும் முகப்புத்தகமும் போதையைப் போன்றவை என்பார்கள். ஆனால் சகோதரி ஜோசப்பின் பாபா போன்ற இனிய உறுவுகளைத் தந்ததும் அதுதான் என்பதால் அவற்றிற்கு நன்றி சொல்ல வேண்டியுள்ளது.

  இனிய இல்லறப் பயணம் வாய்த்தது போல இனிய செழுமையான இலக்கியப் பயணமும் தொடர வாழ்த்துகிறேன்.

  எம்.கே.முருகானந்தன்
  குடும்ப மருத்துவர்
  கொழும்பு.
  21.08.2012.


பட்டாம் பூச்சிக் கூண்டு போன்ற என் மௌனத்தை உடைத்து அதைப் புத்தகமாக வெளியிட ஊன்று கோலாக இருந்து உற்சாகப் படுத்திய என் தோழர் என் உடன்பிறவாச் சகோதரர் பாசமிகு சிறி அண்ணாவிற்கும்;  என் தாய் வழி பாட்டி மரியாகம்மா அவர்களுக்கும்,  மேலும் இப்புத்தகம் வெளியிட ஊக்கவும் ஆ
க்கவுமாக இருந்து உற்சாகப்படுத்திய  லண்டனில் வசி
க்கும் தாயுள்ளம் கொண்ட சகோதரிக்
கும் அவர்களுடைய கணவருக்கும்,  இப்புத்தகம்  சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.ம்.  

19 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

congrats...

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்புச் சகோதரிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !

நடா சிவா தமிழ்க்கிறுக்கன் said...

வாழ்த்துக்கள்! தங்களின் முதல் நூல் வெளியீட்டில், என் சார்பாக என் உளம் நிறைந்த வாழ்த்துக்களுடன் சின்னச் சின்ன தூறல்களை அனுப்பி வைக்கின்றேன்....

Srikandarajah கங்கைமகன் · Jaffna uni, colobmo uni, annaamalai uni said...


உங்கள் உணவில் மட்டும் அறுசுவை அல்ல உஙகள் உணர்விலும் அறுசுவை கண்டு மகிழ்நந்தேன். தங்ககள் புத்தக வெளியீட்டில் நானும் பங்கு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி பாபா.

Punitha Vellasamy · Top Commenter · Petaling Jaya, Malaysia said...


உண்மை, புதுமை, வளமை, அருமை யாவும் கொண்ட கலவைதான் "நான் தேடும் வெளிச்சங்கள்". தங்கள் திறமான படைப்புக்கு வாழ்த்துக்கள், பாபா.

Kumaraguruparan Ramakrishnan · Works at Bank of Maharashtra said...


ஜோசபினுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் பல படைப்புகள் கண்டு சிறந்த கதைசொல்லியாக வாழ்த்துக்கள் :)

Suthan Sivasuthan · Works at GIZ said...


****************
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பபா அக்கா.....
உங்கள் எளிமையான எழுத்துக்களுக்கு.
நான் எப்போதும் பரம ரசிகன்......
தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணங்கள்.....
வாழ்க வளமுடன்.........
குறிப்பு : பபா அக்கா! , உங்கள் புத்தகத்தை எவ்வாறு.
பெற்றுக்கொள்ளலாம்.... ஆவலுடன் உள்ளேன் வாசிக்க.............

Seeni said...

vaazhthukkal

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

பேருவகை கொள்கிறேன் தோழி. நீண்டதொரு கட்டுரையாக இருப்பினும் கொஞ்சம் கூட சோர்வே இல்லாமல் வாசகர்களைக் கட்டிப்போடும் ஆற்றல் உங்களின் எழுத்துகளில் உண்டு என்பதை நான் புதிதாகச்சொல்லவில்லை.. அதுவே உண்மை.

Chandravathanaa said...

மிகவும் சந்தோசமான செய்தி ஜோசபின். மனதார்ந்த வாழ்த்துகள்.

Anthoni Raj said...

வாழ்த்துக்கள் சகோதரி

Anthoni Raj said...

வாழ்த்துக்கள் சகோதரி

Bala Murugan · said...


வாழ்த்துகள்

Jamunarathy Nagaratnam said...

மிக்கமகிழ்ச்சி JP! நமக்கும் ஒரு பிரதி கிடைக்குமா?உங்களின் படைப்புக்கு வாழ்த்துக்கள் JP....மென்மேலும் வளர இறையருள் உங்களுடன்....

Srikandarajah said...

கங்கைமகன் உங்கள் உணவில் மட்டும் அறுசுவை அல்ல உஙகள் உணர்விலும் அறுசுவை கண்டு மகிழ்நந்தேன். தங்ககள் புத்தக வெளியீட்டில் நானும் பங்கு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி பாபா.

Syed Shafiullah said...

அன்புத் தோழிக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் ...........ஆவலாய் உள்ளோம் தங்களின் படைப்பினை காண .......இறைவனைப் பிரார்த்திக்கிறோம் தங்களின் எழுத்து பணி தொடர.....

Anonymous said...

வாழ்த்துக்கள் சகோதரி

தங்களின் படைப்பினை காண இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணங்கள்.....
வாழ்க வளமுடன்.........

by KARUNAKARAN, CHENNAI

Anonymous said...

SAGO,

CONGRATS TO NEXT STEP.
I AM EAGER TO READ UR BOOK.

KARUNAKARAN
CHENNAI

Avargal Unmaigal said...

உங்கள் புத்தக வெளியிட்டுவிழா செய்தி கண்டு எனது மனம் மிகவும் மகிழ்ச்சி கொண்டது.காரணம் தரமற்ற புத்தகங்களும் வெளிவரும் இன்னாளில் ஒரு தரமான எழுத்தோட்டத்தையும் சீரிய சிந்தனைகளையும் கொண்ட ஒருவரின் தரமான புத்தகம் வெளிவருகிறது என்பதால்தான்.

நான் உங்களிடம் அடிக்கடி சொல்வது இதுதான் நீங்கள் எல்லோரும் சுட்டிக்காட்ட கூடிய ஒரு பெரிய எழுத்தாளர்களாக வருவீர்கள் என்பதுதான் அதற்கான முதல் படியை தொட்டுவிட்டிர்கள்......நீங்கள் இமயத்தை அடைய நாட்கள் வெகுதூரம் இல்லை...

உங்களின் முயற்சிகள் வெற்றி அடைய எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் என்றென்றும் உங்களுக்கு

உங்களின் வலையுலக நண்பர்களின் லிஸ்டில் எனது பெயரும் இருந்ததில் மிகமிக சந்தோஷம்

Post Comment

Post a Comment