header-photo

மே- தினம்!

நாளை உலக தொழிலாளர்களால் மே-தினம் கொண்டாடப்படுகின்றது. உலக தலைவர்கள், பாட்டாளி, கம்யூனிஸ்டு தலைவர்கள், அரசியல் கட்சிகள் என வாழ்த்து மழையாக தான் இருக்கும்!. ஆனால் உண்மையில் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது கவனிக்கதக்கது.


ரஷியாவில் சார் மன்னர்களில் கொடுமைக்கு விடிவாக தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராடி விடுதலையான நாளை, மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அதை உழைப்பாளிகள் உள்ள எல்லா நாட்டு மக்களின் விடுதலையாக எண்ணி கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் 80% தொழிலாளர்களும் அமைப்பு சாரா தொழிலாளர்களாகவே உள்ளனர். தொழிலாளிகளுக்கு என குரல் கொடுப்பவர்களும் இந்த 20% தொழிலாளர்களை மட்டுமே தொழிலாளர்களாக எண்ணி போராடி வருகின்றனர்.

1957 ல்  தொழிலாளர் நல அமைச்சரகம், இந்தியாவில் மேற்கொள்ளும் 45 தொழில்களை மட்டும் அட்டவணைப்படுத்தி ஒரு ஊதியம் நிர்ணயித்தது .  ஒரு மனிதன் உயிர் வாழ தேவையான 2700 கலோரி உணவு, உடுத்த 72 கஜம் துணி, வசிக்கும் வீட்டிற்கான வாடகை செலவை உட்ப்படுத்தி ஒரு மனிதனுக்கான  தினம் கூலியாக  நிர்ணயம் செய்தது. 1997 ல்  குழந்தைகள் கல்வி கட்டணம், மருத்துவ செலவையும் சேர்த்து 35 ரூபா ஆகவும், 2011 ல்  115ரூ-222.35 ரூபாய் என உயர்த்தியது. இவை அனைத்தும் நிரந்தர அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரித்தானது மட்டுமே. ஆனால் இந்த அமைப்பில் இல்லாத நிரந்தரமற்ற வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் நிலை யாரும்  கணக்கில் கொள்ளாத  தள்ளப்பட்டுள்ளது.


அரசியல் அமைப்பு சட்டம் 14, 19, 21, 23, 24 (பாகம் 111) கொடுக்கப்பட்டுள்ள எந்த சட்ட பாதுகாப்பும் பெறாது பெரும்வாரியான தொழிலாளிகள் உள்ளனர். ஒரே வேலைக்கு ஒரே ஊதியம், தரமான வாழ்க்கை, வலுக்கட்டாயமாக வேலை வாங்காதிருப்பல், என எல்லா சட்டவும் சட்ட புத்தகத்தின் பக்கங்கள் தவிற உழைப்பவர்கள் வாழ்க்கையை தொட்டு பார்க்காத வெத்து சட்டங்கள் ஆகவே நிலை கொள்கின்றது. 


தமிழகத்திலுள்ள 1685 நூல் தொழில்சாலைகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை எடுத்து கொண்டால் 80% பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவர்.  இவர்கள் வேலையில் சேர தரகர்களுகு 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளது. இவர்களுக்கு என உருவாக்கப்பட்ட சுமங்கலி திட்டங்களிலும் பெண்கள் நலனை விட ஊழலை மலிந்து கிடக்கின்றது என்று நாம் அறிந்ததே. 

வரும் வைப்பு கால நிதி, பணி நிரந்தரம், தொழிலாளர் கூட்டுறவு சங்கம் பாதுகாப்பு என எந்த தொழிலாளி நல திட்டங்களும் இவர்களுக்கு வாய்ப்பதில்லை. தொழில் இடங்களில் சுகாதாரமான குடி தண்ணீர், உணவு, கழிவறை வசதி அற்று தினம் 12 மணிநேரத்திற்க்கு மேல் வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

குழந்தைகள் நிலை இன்னும் பரிதாபத்திற்க்குறியது. 11.28 மிலியன் குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர். வேலை இடத்தில் 21 % பேர் பாலியலாக துன்புறுகின்றனர், 50 % பேர் வாரத்தில் 7 நாட்களும் வேலை செய்ய தள்ளபடுகின்றனர் என கணக்குகள் தெளிவாக்குகின்றது.

ஊர்விட்டு ஊர்  வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் பல வித அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். சமூக விரோதிகளால் மனைவி குழந்தைகளை இழக்கின்றனர். குறைந்த பட்சம் மனிதராக கூட மதிக்காது அவர்கள் வாழ்க்கை மிகவும் வருந்த தக்க நிலையில் உள்ளது.

நிரந்தர தொழிலாளர்களும் தங்கள் நலனில் அக்கறை எடுத்து கொள்வது போல் தங்கள் சமூகமான ஒப்பந்த தொழிலாளர்களை பற்றி அக்கரை எடுத்து கொள்வதில்லை. தொழில்சாலை உணவகங்களில் கூட நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைக்கும் குறைந்த விலை உணவு கிடைக்காது பட்டிணியாகவே வேலை செய்கின்றனர் ஒப்பந்த தொழிலாளர்கள்.
தொழிலாளர்கள் பிரட்சனை என்ற உடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களை பற்றி வரிந்து கட்டி எழுதும் ஊடகவும் பெட்ரோல் பங்கில், கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களே வசதியாக மறந்து விடுகின்றனர். கொத்தனரார் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் சுமடு தூக்கும் தொழிலாளரகள் என இவர்கள் துயரை அடுக்கி கொண்டே போகலாம் ஆனால் விடை காணாது இன்றும்  மோசமான நிலையிலே உள்ளனர் என்பதே கசக்கும் உணமை.

இவர்கள் கல்வியறிவு அற்றிருப்பதாலே இவ்வகையான வாழ்க்கை சூழலில் மாட்டி கொண்டார்கள் என்றால் படித்த மனிதர்களும் உலகபொருளாதார சந்தையில் வெள்ளை காலர் அணிந்த ஏமாற்றப்படும் தொழிலாளர் சமூகமாகவே வளர்ந்து வருகின்றது. பன்னாட்டு நிறுவனங்களில் ஒப்பந்த பணியாளர்களாகவே பணியில் அமர்ந்த்துகின்றனர்.  வேலை நிரந்தரம் அல்ல என்று மட்டுமல்ல  உற்பத்தி பொருளாகவே மட்டும் கண் நோக்கி மனிதர்கள் என்ற அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகின்றது. நூல் ஆலை பெண்களுக்கு என்பது போல் இளம் பெண்கள் மட்டுமே வேலையில் அமர்த்தப்படுகின்றனர்.  கிடைக்கும் ஊதியத்திற்க்கும் ஒப்பந்தம் ஆகும் தொகைக்கும் வேற்பட்டதாகவே உள்ளது.
 

 நிலை இப்படியாக,  தங்கள் உரிமையை கூட எண்ண நேரமில்லாது மனிதன் எதையோ தேடி விரட்டப்பட்டு கொண்டிருக்கின்றான். ஆனால் இவர்கள் பெயரை சொல்லி சில கட்சிகள், இயக்கங்கள் பிழைத்து கொண்டும் இருக்கின்றது. இப்படியாக மே தினம் என்பது பெருமையாக நினைத்து பார்க்க இல்லாத, மக்களாட்சியில் ஒரு சடங்காக மாறி கொண்டிருக்கின்றது.

7 comments:

சம்பத்குமார் said...

நெற்றிப் பொட்டில் சுடுகிற நிஜம்

///நூல் ஆலை பெண்களுக்கு என்பது போல் இளம் பெண்கள் மட்டுமே வேலையில் அமர்த்தப்படுகின்றனர். கிடைக்கும் ஊதியத்திற்க்கும் ஒப்பந்தம் ஆகும் தொகைக்கும் வேற்பட்டதாகவே உள்ளது.///

எங்களது ஊரில் இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தும் போதே 3 வருட ஒப்பந்தம் போடப்பட்டு முன்தொகை அதிகம் தரப்பட்டுவிடுகிறது.

குடும்ப வறுமையால் பஞ்சாலைகளில் தாங்கள் படும் பாட்டினை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சகித்துக் கொண்டு வாழ்க்கை சக்கரத்தினை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.

அந்த சகோதரிகளின் வாழ்வில் இந்த வருடமாவது நல் ஒளி பிறக்கட்டும்.

Avargal Unmaigal said...

உங்களின் பதிவு நன்றாக உள்ளது. உங்களூக்கும் இந்த பதிவை படிக்க வரும் மற்றவர்களின் தகவல்களுக்காக கீழ்கண்ட செய்தி
Labor Day in United States

Labor Day is a federal holiday in the United States. It gives workers a day of rest and it celebrates their contribution to the American economy.
Labor Day is annually held on the

"first Monday of September".

It was originally organized to celebrate various labor associations' strengths of and contributions to the United States economy. It is largely a day of rest in modern times. Many people mark Labor Day as the end of the summer season and a last chance to make trips or hold outdoor event

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

nagu said...

நல்லம் நீண்ட மடல்

சிவ மேனகை said...

வியர்வை சிந்தி உழைக்கும் கரங்களின் உணர்வுகளை ,முதலாளி வர்க்கமும் அரசியல் வாதிகளும் உணர்ந்ததாய் வரலாறு இல்லை ,,அதை உங்கள் தீர்க்க தரிசனமான பார்வையிலும் அறிந்து கொண்டேன் ,,,,,,நன்றியுடன் உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் ,,,தொடருங்கள் ,,,,
,,,

Kumaraguruparan Ramakrishnan said...

Works at Bank of Maharashtra
1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் எட்டுமணி நேரம் மட்டுமே பணி நேரம் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற தொழிலாளர்ஆர்ப்பாட்டத்தின் மீது போலீசார் கண்மூடித் தாக்குதல் நடத்தி பலரைக் கொன்றனர்.பலருக்குத் தூக்குத் தண்டனை. ஒவ்வொரு ஆண்டும் இதை நினைவு கூரும் முகமாக மேதினம் பல நாடுகளிலும் கடைப் பிடிக்கப் படுகின்றது. கம்யுனிஸ்டுகள் குறிப்பாக இதை கொண்டாடி வருகின்றனர். எந்த எந்த தினத்தை எல்லாம் கொண்டாட்டமாக அறிவிக்கும் அமெரிக்கா இத்தினத்தைக் கண்டு கடுமையாக அஞ்சுகிறது.அந்த நாளில் அமெரிக்காவில் விடுமுறை கிடையாது. "மே டே"என்ற தலைப்பில் நாம் தகவலைத் திரட்ட முடியாத அளவுக்கு இந்தத் தினம் புறக்கணிக்கப் படுகிறது முதலாளித்துவ அரசுகளால். சர்வதேசத் தொழிலாளர் தினம் என்று தேடினால்தான் மேதினம் பற்றிய தகவல் கிடைக்கும்! ஆனால் கம்யுனிஸ்டுகள் உழைப்பாளிகள் இதைத் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.இந்தியாவில் மேதினம் முதன் முதலாக 1923 ஆம் ஆண்டு சென்னையில்தான் கொண்டாடப் பட்டது. இதைக் கொண்டாடியதற்குமுழு முயற்சியும் எடுத்தவர் மீனவக் குடும்பத்தில் பிறந்த சிங்காரவேலர் என்ற கம்யுனிஸ்ட் தலைவர். சி ஐ டி யு , ஏ ஐ டி யு சி உள்ளிட்ட கம்யுனிஸ்ட்-சார்பு தொழிற்சங்கங்கள் பிருமாண்ட அளவில் பேரணிகளை நடத்துகின்றன. இதர கட்சிகள் நினைத்தால் மட்டும் அவ்வப்போது தங்கள் தலைவர்/தலைவி துதி பாட பேரணிகளை நடத்துவதும் உண்டு! பொதுவாக இடதுசாரித் தொழிற்சங்கங்கள் அணி திரட்டப்பட்டவர்களைத் தாண்டியும் முறைசாராத் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்துப் போராட அறைகூவல் விடுக்கின்றன. ஆனால் இதர அரசியல் இயக்கங்கள் வேண்டுமென்றே பிரித்தாளும் சூழ்ச்சி செய்து இருவரையும் ஓரணியில் திரளாமல்பார்த்துக் கொள்கின்றனர். இது கொடுமையான விஷயம். தொழிலாளர்கள் அனைவரும் கட்சி அரசியலை மறந்து மேதினத்தைக் கொண்டாடுவதுஅவசியம். தங்களுக்குப் பிடித்தமான தொழிற்சங்கக் கொடியைக் கூட ஏற்ற முடியாத சூழல் இந்தியாவில் நிலவி வருவதற்குக் காரணம் உலகமயமாக்கல் என்ற கொள்கைதான். இதையும் தாண்டி காங்கிரஸ் சார்பு ஐ என் டி யு சி, பா ஜ க சார்பு பி எம் எஸ் உள்ளிட்ட அனைத்துத்தொழிற்சங்கங்கள் சார்பில் பிப்ரவரி28,2012 இல்நடைபெற்ற வேலைநிறுத்தம் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இந்தஆண்டு நடைபெற்றது 127 ஆவது மேதினம்.

Subi Narendran · Good Shepherd Convent Kotehena said...

தொழிலாளர் தினத்துக்கேற்ற பகிர்வு. பல நல்ல தகவல்களைக் கொண்டது. தொழிலாளர் விடுதலையை கொண்டாடும் மே தினம். உண்மையில் எங்கள் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் அப்படி இல்லை என்பதை உதாரணங்களோடு சொல்லி இருக்கிறீர்கள். மே தினத்தைப் பற்றி நாம் பெருமை கொள்ளும் நாள் விரைவில் வர வேண்டுகிறேன். நன்றிகளும் வாழ்த்துக்களும் Jos.

Post Comment

Post a Comment