header-photo

தீபாவளி வெடி........................?
மூன்று நாட்களாக ஒரே வெடி சத்தம்!   நேற்று உச்சஸ்தாயில் ….. நிம்மதியா தூங்க இயலவில்லை, ஏன்…. வீட்டு கதவு, ஜன்னல் கூட திறந்து வைக்க  பயமாக இருந்தது.  காது கேள்வி திறன்  இழந்திருப்போமா என்று 2 நாள் கழிந்து தான் தெரியும்இந்த வகையான கொண்டாட்டங்கள் காணும் போது  தமிழர்களின் வன்முறையான வாழ்க்கை முறையை பற்றியே சிந்திக்க தோன்றுகின்றது.   தீபம் ஏற்றி உறவினர்களுடன் விருந்துக்கள் பரிமாறி வடக்கத்தியர்கள் கொண்டாடும் இத்திருநாள், யார் வீட்டில் அதிகமாக வெடி வெடிக்கின்றனர் என்பதில்  போட்டி போட்டு காற்று, தண்ணீர், நிலம் என சகல வித ஒலி- ஒளி மாசுபடுதலுக்கும் காரணமாகி கொண்டாடப்படுவது வருத்தப்பட வேண்டியதே.

தமிழகத்திற்க்கு வந்த புதிதில் ஆச்சரியம் அடைந்து விட்டேன்.  உயிரை கையில் பிடித்து கொண்டு தான் தெருவில் பயணிக்க இயலும்.   எங்கு வெடி வைத்திருக்கின்றார்கள் என்று வெடித்தால் தான் தெரியும்!   அடுத்த நாள் தெருவில் நடந்தால்  வெடியை பொதிந்த காகிதமே குப்பையாக குமிந்து கிடப்பதை காணலாம்எங்கள்  இளைய மகன் கைக்குழந்தையாக இருந்த போது ஒவ்வொரு வெடி சத்ததிற்க்கும் அழுது கொண்டே இருந்தான்.  அவனை நெஞ்சோடு சேர்த்து அழாது வைக்க பெரும் பாடு பட்டோம்.  இப்போதும் அவனும் பிஜிலி வெடி வாங்கி தாங்க, ஹிட்லர் வெடி வாங்கி தாங்கன்னு சண்டை பிடித்து கொண்டிருக்கின்றான்.

ஒரு முறை தீபாவளி அன்று மதுரையில் இருந்து தூத்துகுடி வரை வான-வேடிக்கை பார்த்து கொண்டே முழு இரவும் பயணித்தோம்.  பணத்தை இப்படி கரியாக்க எப்படி மனம் வருகின்றது என்று எண்ணி பார்க்கும் போது மனிதனின் மனநிலை தான் விளங்கவில்லை!  கடந்த வருடம் 300 ரூபாய்க்கு வாங்கின வெடி இந்த வருடம் 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நெல்லையில் நல்ல மழையும் பெய்து கொண்டிருப்பதால் ஓரளவு கொடிய நெடியுடன் கூடிய புகையில் இருந்து தப்பிக்க இயன்றது.   இருந்தும் வெடி இடும் சுற்றுபகுதி புகை மூட்டமாகவே போர் களத்தில் நிற்பது போல்  தான் காட்சி தருகின்றது.   இந்த வருடம் இன்னும் ஒலி கட்டுக்கு அடங்காது  இருப்பது போன்றே தெரிகின்றது.  அரசு மாசு கட்டுபாடு வாரியம்  கூறி வருவது போல் மாசு மற்றும் காற்று கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகின்றதா என்று அறிய கழிய வில்லை.

சீனர்களால்  2000 ஆயிரம் வருடம் முன்பு வெடி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  பொதுவாக எல்லா கொண்டாட்டங்களும் திருமணம் தொடங்கி வெடியுடன் கொண்டாடும் கலாச்சாரம் பரவி வரும் வேளையில் ஆங்கிலயர்கள் வரும் முன் இந்தியர்கள் வெடி வெடித்து கொண்டாடிய தகவல்கள் இருப்பதாக இல்லை.  உலகில் புதுவருடம் மற்றும் தீபாவளி காலயளவிலே அதிகமாக வெடி வெடிப்பதாக செய்தியுள்ளது.

பல நாடுகளும் வெடி பயன்படுத்துவதற்க்கு சில நடைமுறை திட்டங்கள் வகுத்துள்ளனர்.  அதே போல் இந்தியாவிலும் செப், 2001 வந்த உச்சிநீதிமற்ற உத்தரவின் படி சில நெறிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளதுஅதில்  சிலவை ;
  • வெடி வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு உள்ளாக 125 டெசிபெல்க்கு உள்ளாக  மட்டுமே  ஒலி எழுப்ப அனுமதி உண்டு.
  • மருத்துவமனைகள், பாடசாலைகள்,  நீதிமற்றம், வழிபாட்டு தலங்கள் சமீபத்தில் 100மீட்டருக்குள் வெடிவெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
  • இயற்கை மற்றும் வன இலாகவின் படி 125 டெசிபெல்லுக்கு மேல் ஒலி எழுப்பும் வெடி மருந்து பொருட்கள் விற்பதோ பயண்படுத்துவதோ தடை செய்யப்பட்டுள்ளது.
  • காவல் துறை 20 வகை வெடிகள் வெடிக்க செய்வதை தடை செய்துள்ளனர். மக்கள் சட்டத்தை மதித்து நடப்பதை உறுதி செய்ய வேண்டியதும் காவல் துறையின் கடமையே!
  • மேலும் மாலை 6 முதல் இரவு 10 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்கலாம்.  ஆனால் இந்த சட்டத்தையும் எந்நேரவும் வெடி வெடித்து புரக்கணித்துள்ளனர்  மக்கள்.
  • இயற்கைக்கு மனிதனுக்கும் மாசுவிளைவிக்கும் ஒரு சில பொருட்களான  காட்மியம், லெட், மாங்கனீஸ், சிங், சோடியம், நைட்றேட், சல்பேட், கார்பன் மோனோக்சைட் போன்றவை பயன்படுத்துவதற்க்கும் தடை விதித்துள்ளது. ஆனால் வியாபார லாபத்தை மனதில் கொண்டு பல நிறங்களிலான ஒளி, மிரட்டும் ஒலிக்கு என தடைசெய்யப்பட்ட மூலபொருட்களை அளவுக்கு மீறி சேர்த்தே தயாரிக்கின்றனர்.
வெடிவெடித்த பகுதியை நோக்கினால் ஒரு கருப்பு மேகமூட்டத்துடனே பல மணி நேரங்களாக காட்சி அளிக்கின்றது.  தொண்டை, இதயம் சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கவும் இது காரணமாகின்றது .   இதில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள்,  ஆஸ்துமா, இதய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.   பொதுவாக மனிதனால் கேட்கும் திறன் என்ற 60 டெசிமெல் ஒலி என்பது வெடிச் சத்ததால் 120உம் 140க்கு மேலும் கேட்பது சிலவேளைகளில் நம் கேள்வி திறனையை பதம் பார்ப்பதாகவும் அமைந்து விடும். மேலும் மனகலக்கம், தேவையற்ற கோபம், மன அழுத்தம்சோர்வு போன்றவற்றால் நாம் பாதிப்படையவும்  இதுவே காரணமாகின்றது.

 மக்களை வழிநடத்த வேண்டிய அரசு  மற்றும் அரசுசார நிறுவனங்கள், மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்தின் செயலாக்கம் வெறும் வெத்து பேச்சோடு நிறுத்தி கொள்வதுடன் செயலாக்கத்தில் கொண்டு வருவதில்லை என்பதும் பரிதாபத்துற்க்குரியதே.  உலக வெப்பமயவதால் சுற்றுசூழல் சீர்கேடு உள்ளிட்ட காரணங்களை முன்நிறுத்தி பட்டாசு வெடிப்பதை தவிற்க மக்களும் முன்வரவேண்டும்.  மத்திய மாநில அரசுக்களும் சமூக சுற்றுசூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைக்க முன்வரவேண்டும். லைசன்ஸ் என்ற பெயரில் அரசு அதிகாரிகள் வியாபாரிகளிடம் பயமுறுத்தி கையூட்டு பெறுவதற்கான விழாவாகவே தீபாவளியை காண்கின்றனர்.  கடைகள் இட அங்கிகார சாற்றிதழ்  தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முந்திய தினமே கொடுக்கப்பட்டுள்ளது. அவசர-கடைகள் முக்கிலும் மூலையிலும்  இட்டு தவிற்க வேண்டிய விபத்துக்களுக்கும் காரணமாவது மட்டுமல்லாது மேலும் தன் கையிலிருந்து தவறவிட்ட பணத்தை மக்களிடமே வியாபாரிகள் அநிநியாய விலை வழியாக பறிக்கும் சூழலும் உருவாகின்றது.

மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதில் ஊடகத்தின் பங்கும் பெரிதாக உள்ளது. ஆனால் ஊடகம் விளம்பரத்தின் ஊடாக பணம் ஈட்ட முயல்வதை தவிர்த்து ஆக்கபூர்வமான செய்திகளோ தகவல்களோ மக்களுக்கு கொடுக்க முன் வருவதில்லை.  அதற்கு பதிலாக அதன் சில நிகழ்ச்சிகளே வெடிப்பதை உற்சாகப்படுத்தும் படியாகவே உள்ளது.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசு நிறுவனங்களிடம் அனுமதி பெற்றே வெடி நிகழ்ச்சி நடத்த இயலும்.  கானடாவில் 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் மட்டுமே வெடிகள் வாங்க அனுமதி உண்டு. சீனா தாய்லாந்து போன்ற நாடுகளில் கிராமப்புறங்களில் வெடிப்பதை சாதாரணமாக கொண்டிருந்தாலும் நகர்புறங்களில் வெடிக்க தடை உண்டு.  ஹோங் ஹோங் போன்ற நாடுகளில் அரசு பிரத்தியேக இடங்களில் வெடி வெடிக்கும் நிகழ்ச்சியை ஒரு பொது நிகழ்வாகவே நடத்துகின்றனர். தனிநபர்கள் பயன்படுத்துவதை சட்டத்தால் தடை செய்துள்ளனர்.  அமெரிக்காவில் ஒரே இடத்தில் குழுமி காவல் மற்றும் தீயணப்பு படையின் துணையுடன் வெடி வெடிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

இந்தியாவின் மொத்த தேவைக்கு 90 சதவீதம் வெடி, குட்டி ஜப்பான் என்று அறியப்படும் தென் தமிழக ஊரான சிவகாசியில் தான் உற்பத்தியாகின்றது என்பது அனைவரும் தெரிந்ததே.  குடிசை, சிறு மற்றும் பெரிய   என 8 ஆயிரத்திற்க்கு மேல் தொழில்ச்சாலைகள்
 இங்கு உண்டு என கணக்கிடப்பட்டுள்ளது.   தயாரிப்பில் இருந்தே பயன்படுத்தும் பொருட்கள், ஒலி போன்றவற்றில் எந்த சட்டத்தின் பரிந்துரையும் பின்பற்றுவதில்லை. வியாபார நோக்கத்துடன் சட்டத்தை  காற்றில்   பறக்க விடும் நிகழ்வே நடக்கின்றது.  ஆய்வாளர்களின் கணக்குப்படி  10 ரூபாய் தினக்கூலிக்கு என 4முதல் 12 வயதுக்குள் குழந்தைகளை வேலைக்காக பயன்படுத்துகின்றனர் என்பதும் விவாத்திற்குரிய விடையமாகும்.http://www.maniyosai.com/cms/politics/news/Forty-thousand-child-labors-in-sivakasi-cracker-units  உலகமே அவர்கள் தயாரித்த வெடி பொருட்களை வெடித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடிய போது; ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வாழ்க்கை போராட்டத்தில் தவிக்கும் 3000 மக்களுடன் இந்த வருடம் வெடி விபத்தில் உயிர் இழந்த 26 குடும்பங்கள் கண்ணீரில் ஆழ்ந்து இருந்தது. மக்களுக்கு வருமானம்  தரும் தொழில் என பலர் வெடிகளை வாங்குவதை பெருமையாக எண்ணினாலும் 50 ஆயிரம் மக்கள் தொழிலாக கொண்ட இவ்வூரில் வெடிவிபத்தில் காயத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு தகுந்த சிகித்சை அளிக்ககூடிய மருத்துவ மனைகள் இல்லை என்பதும்;  70 கி.மீ தள்ளி இருக்கும் மதுரையை தேடி செல்லும் பரிதாப நிலையிலே மக்கள் வாழ்கின்றனர் என்பதும் மிகவும் மோசமான சூழலில் வாழும்  தொழிலாளர்களின் நிலையை காட்டுகின்றது. 


http://www.hindu.com/2009/10/19/stories/2009101959560400.htm இத்தருணத்தில் தங்கள் கிராமத்திற்க்கு நாடோடியாக வரும் பறவைகளுக்கு  பாதிப்பு ஏற்ப்பட கூடாது என வெடி இல்லாதும் தீபாவளி கொண்டாடலாம் என்று நெல்லையின் பக்கத்திலுள்ள கூந்தகுளம் கிராமத்திலுள்ள மக்களும் குழந்தைகளும் உலகிற்க்கு கற்று கொடுத்துள்ளனர்.

எங்கள் வீட்டு றிக்கி நாய் 3 நாட்களுக்கு பின்பு இன்று தான் கண் அசந்து தூங்குகின்றது. அது கொண்ட துன்பம் சொல்லி மாளாது.  பயம் கொண்டு உணவு அருந்தாது உறக்கம் அற்று ஓடி கொண்டே இருந்தது.   இப்படியாக மனிதனின் அற்ப சந்தோஷத்திற்க்கு என தான் வாழும் இயற்கை அன்னை, தன்னுடன் வாழும் மிருக-பறவைகள் அனைத்துக்கும் துன்பம் விளைவிப்பது சரியோ???


7 comments:

VANJOOR said...

Good timely article.

Click the link and read.

///// "Stop Crackers" : இனி,வேண்டாம் பட்டாசு..! /////

.

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ.ஜோசபின்,
மிக அருமையாக ஆக்கம்.
மிக்க நன்றி சகோ.

ஒரு குடிமகனுக்கு சிகரட் புகைத்து சுற்றுப்புறத்தை மாசாக்கி நாசமாக்க முழு உரிமை இருக்கிறது என்றால்... அதே உரிமை,

சிகரட் துர்நாற்றம் விரும்பாத இன்னொரு குடிமகனுக்கு அந்த புகை கலந்து மாசடையாத தூய்மையான காற்றை சுவாசிக்க... அதே அளவுக்கு முழு உரிமை இருக்கிறது, அல்லவா...?

இந்த உரிமையை கேட்பது தவறா..? இரண்டில் எது சரியான - நியாயமான உரிமை என நீதி மன்றமும் அரசும் முடிவு செய்யட்டுமே..!

இதே நீதிதானே பட்டாசு வெடிப்போருக்கும் அதை விரும்பதோருக்கும் இடையிலேயும்..?

"Stop Crackers" : இனி,வேண்டாம் பட்டாசு..!

இந்த எனது பதிவும் இதே விஷயம் பற்றியதுதான் சகோ.ஜோசபின்.

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

சுற்றுச்சூழல் மாசடைதல்பற்றிய விழிப்புணர்வு நம்மவர்களிடம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. சமூக ஆர்வலர்கள் அதிக அக்கறை செலுத்தவேண்டும். நல்லதொரு பதிவு

DrPKandaswamyPhD said...

மிகவும் வருந்தத்தக்க நிலைதான்.

VANJOOR said...

தமிழகம் முழுவதும் மழை காரணமாக கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது பட்டாசு வெடி விபத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.

கடந்த ஆண்டு பட்டாசு வெடி விபத்தால் 191 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைகள் எரிந்தன.

இந்த தீ விபத்தால் 157 பேர் காயம் அடைந்தனர்.

இதில் பெரிய அளவில் காயம் அடைந்தவர்கள் 38 பேர் ஆவார்கள்.

சிறிய காயம் அடைந்தவர்கள் 119 பேர். ஆனால் கடந்த ஆண்டு உயிர்சேதம் எதுவும் இல்லை.

இந்த ஆண்டை பொறுத்தமட்டில் தமிழகம் முழுவதும் தீபாவளி தீ விபத்து 43 இடங்களில் மட்டுமே நடந்ததாக தீயணைப்புத்துறை இயக்குனர் தெரிவித்தார். இதிலும் காயம் அடைந்தவர்கள் யாரும் இல்லை.

சென்னையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு 43 தீ விபத்துக்கள் நடந்ததாகவும், இந்த ஆண்டு மழை காரணமாக 23 தீ விபத்து சம்பவங்களே நிகழ்ந்தன என்றும்,

அதில் 11 இடங்களில் மட்டும் ராக்கெட் வெடிகளால் குடிசைகள் பற்றி எரிந்தன என்றும் தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=683697&disdate=10/28/2011


ராக்கெட் பட்டாசு வெடித்து விழுந்ததில் தீ.


சென்னை பூக்கடை பகுதியில்
பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ: 3 மாடி கட்டிடம் எரிந்து நாசம் தீயணைப்பு வீரர்கள் 20 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்

சென்னை, அக்.28-

சென்னை பூக்கடை பகுதியில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 3 மாடி கட்டிடம் எரிந்து சேதமடைந்தது.


சென்னை பூக்கடை போலீஸ் நிலையம் பின்புறம், தேவராஜ முதலி தெருவில் பிரகாஷ் ஷா என்பவருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம்(தரை தளம் உள்பட) உள்ளது. அந்த கட்டிடத்தில் வியாபாரிகள் பலர் ஜவுளிக்கடை, பேன்சி ஸ்டோர் போன்றவற்றை வைத்து நடத்தி வருகிறார்கள். சுமார் 30 கடைகள் அங்கு உள்ளன.

கட்டிடத்தின் 3-வது தளம் முழுவதையும் அதே தெருவில் மொத்த வியாபாரம் செய்துவரும் சூளை ஜே.வி. ரோடு தபால் நிலையம் தெருவைச் சேர்ந்த ரூபலிங்கம் (வயது 60) என்பவர் ஒப்பந்தத்திற்கு எடுத்து குடோனாக பயன்படுத்தி வருகிறார்.


நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று இரவு சுமார் 8 மணியளவில் அந்த குடோனிலிருந்து புகை வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை இயக்குனர் போலோநாத் மேற்பார்வையில், கோட்ட அதிகாரி வேலாயுதம் நாயர் தலைமையில், உதவி கோட்ட அதிகாரிகள் கார்த்திகேயன், தேவேந்திரன் ஆகியோர் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 10 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்பகுதியில் ரோடுகள் மிகவும் குறுகியதாக இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் எளிதில் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் சிரமப்பட்டு உள்ளே சென்றனர். அதற்குள் குடோன் முழுவதும் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

பாதுகாப்பு கருதி பக்கத்து கட்டிடங்களில் வசித்த ஊழியர்கள் சுமார் 300 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ராட்சத எந்திரத்தின் மூலம் ராட்சத எந்திரத்தில் இருந்தபடியே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

தீயின் தாக்கத்தினால் அங்கிருந்த ஜன்னல்கள் மற்றும் இரும்பு கதவுகள் ஆகியவை எரிந்து தானாக கீழே விழுந்தன. 3-வது மாடி முழுவதும் விரிசல் ஏற்பட்டு நாசமானது. சில இடங்களில் சுவர் வெடித்து சிதறின.
விபரீதத்தை உணர்ந்த தீயணைப்பு வீரர்கள் ராட்சத எந்திரத்தில் இருந்து பக்கத்து கட்டிடத்தில் இறங்கினர். பின்னர் அங்கிருந்து சுவரில் துளையிட்டு தீப்பிடித்த கட்டிடத்தின் உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் தீயின் வேகம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்தது. அவர்கள் அங்கு உயிருடன் இருந்த ஒரு நாயையும் மீட்டனர்.

தொடர்ந்து நேற்று பகல் முழுவதும் தீ எரிந்து கொண்டே இருந்ததால் போலீசார் அப்பகுதியில் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. குறிப்பாக தேவராஜ் முதலி தெரு, வெங்கடேசன் லைன் இரண்டு தெருக்களிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

20 மணி நேர போராட்டம்

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கிய தீ அணைக்கும் போராட்டம் சுமார் 20 மணி நேரத்திற்கு பிறகு நேற்று மாலை 5 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. கட்டிடத்தில் இருந்த அனைத்து கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சேதமடைந்தது. பல லட்ச ரூபாய் நாசமடைந்தது.

இதுகுறித்து கடை உரிமையாளர் ரூபலிங்கம் கூறுகையில், குடோனில் ராக்கெட் பட்டாசு வெடித்து விழுந்ததில் தீ பிடித்துள்ளது. பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமடைந்தன. பல லட்ச ரூபாய் சேதமடைந்துள்ளது என்று கூறினார்.


SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=683723&disdate=10/28/2011

Pathman said...

தீபாவளி தமிழர் தலைவரான ஒரு அசுரனை அழித்த நாள் என்று தெரிந்தும் ஏன் தமிழர் இப்படி மோசமாக நடந்து கொள்கிறார்கள் ...இப்படி வேறு ஏதாவது சமூகம் இருக்குதா என்று சொல்லுங்கள் ஜோசெபின் பாபா அவ்ர்களே.வழ்மைபோல் சிறந்த ஆக்கம்

Post Comment

Post a Comment