கேரளா அரசியல் தளத்தை சமீப நாட்களாக ஆட்டம் கொள்ள வைக்கும் பிரச்சனையே என்டோன் சல்ஃபோன் பூச்சி கொல்லி மருந்து!! இது பூச்சிகளை மட்டும் அல்ல மனிதர்களையும் கொல்கின்றது என்பதே இப்போதுள்ள பிரச்சனை.
வேளாண்மை அமைச்சர் ரமேஷ் தன் பங்கு கருத்தை இப்படியாக கூறியுள்ளார் இதை அரசியல் பண்ணாதீர்கள், மனித துயரமே இது என!. ஆனால் இத்துயரம் அரசியல் லாப முதலைகளால் மக்கள் தலையில் நிர்பந்தமாக கட்டி வைக்கபட்டதே என்று மறுக்க இயலுமா?

இந்தியா இதன் மிக பெரிய வாடிக்கையாளராகும். 4500 டண் உள் நாட்டு பயண்பாட்டுக்கும் 4000 டண் ஏற்றுமதி செய்யவும் தயாரிக்க படுவதாக கணக்கிடபட்டுள்ளது. சிறப்பாக கேரளாவில் பின் தங்கிய பகுதியான காஸர்கோடு என்ற பகுதியில் 1976 துவங்கி 4700 ஏக்கர் முந்திரி பருப்பு தோட்டத்திற்க்கு ஹெலிகாப்டர் வழி பயண்படுத்தியுள்ளனர்.
இதுவரை 12 கிராமத்தை சேர்ந்த 9000 மக்கள் நேரடியாக பாதிப்படைந்துள்ளனர். 486 மக்கள் நோயால் பாதிப்பைடைந்தனர், 1000 க்கு மேற்பட்ட மக்கள் மரணமடைதனர். பாதிக்க பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட
ஈடாக 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க உத்தரவு ஆகியுள்ளது. இதிலும் கிடைக்க வேண்டியவர்கள் கிடைக்காமலும் ஏமாற்ற பட்டதும் தெரிய வந்துள்ளது. அங்குள்ள நீர் நிலைகள் பாதிப்படைந்ததாகவும் சிறப்பாக ஆண்களில் பருவ முதிற்சி அடைவது பாதிப்படைந்தாகவும், குழந்தைகளுக்கு அசாதாரணமான நோய்களால் தாக்க பட்டதாகவும், பெண்கள் மாற்பக புற்று நோயால்
பாதிப்பு அடைந்ததும் கண்டு பிடிக்கபட்டுள்ளது.
பாதிப்பு அடைந்ததும் கண்டு பிடிக்கபட்டுள்ளது.



நல்ல அருமையான பதிவு.
ReplyDeleteகோவை அருகே அட்டப்பாடி( தமிழக கேரள எல்லை) என்ற இடத்தில் என்டோசா சல்ஃபான் கொடுமையை நேரடியாக பார்த்திருக்கறேன்.
கேரள மக்கள் இதை முழுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் விவசாயத்திற்காக தமிழர்கள் தான் இதை ஆதரிக்கிறார்கள். தமிழகத்தில் இதற்கு தடைகொண்டுவர போராடி வருகிறோம். இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுவர வேண்டும்.
இந்த பதிவை மனதார பாராட்டுகிறேன். நன்றி.
பணக்கார நாடுகள் பயன்படுத்தக் கூடாது எனத்தடை செய்ததை இந்தியா போன்ற நாடுகளில் ஆய்வு செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற சமூகப்பொறுப்புள்ள பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநம்ப அரசியல் வாதிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை. இந்த நேரத்தில், என்டோசுல்போன் தயாரிக்கும் கம்பனியிடம் பேசி அதாவது மிரட்டி மாத வசூலை பல கோடி உயர்த்தி ஜரூராக வேட்டை நடத்தி கொண்டு இருப்பார்கள். நீங்களும் நானும் மடப்பசங்கள்
ReplyDeleteவிழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete