ரஃபேல் ஊழல் மும்முரமாக விவாதித்து கொண்டு
இருந்தனர். ஆட்சிக்கே பங்கம் வந்து விடும் அளவிற்கு உள்கட்சியிலே கலவரம் ஆரம்பித்தது..
அதோ வந்து விட்டது “பெண்கள் சபரிமலைக்கு செல்லும் தீர்ப்பு சட்டம்”. திருமணத்திற்கு
புறம்பான உறவு குற்றமல்ல என்ற ’448 சட்டம் ’ நல்லவர்கள் எல்லோரும் கள்ளக்காதல் பற்றியும், கடவுள்
நம்பிக்கையற்றவர்கள் கூட ஆலய பிரேவசம்னம் பற்றி ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர்.
பெண்கள்
சபரிமலைக்கு போராடி செல்வதில்
என்ன பெரிய விடுதலை வரப்போகிறது. எல்லா மதவும் பெண்களை அடிமைப்படுத்துவதும் துன்புறுத்துவதும்
தான். மதவாதிகளின் கைகளில் சிக்காதிருந்தால் அவ்வளவிற்கு நல்லது. பெண்களுக்கு மலையேற
விருப்பம் எனில் குஜராத் இருந்து துவங்கி கன்யாகுமரி கடலில் வந்து விடும் மேற்குத்தொடர்ச்சி
மலையின் அழகான எந்த பகுதிக்கும் பயணம் செய்யலாம். பெண்கள் வேண்டாம், பெண்கள் இல்லாத
இடம் வேண்டும் என ஆண்கள் செல்லும், அவர்கள் விருப்பத்திற்கும் மதிப்பு கொடுத்தாவது
பெண்களே சபரிமலையை புரக்கணித்திருக்கலாம். ஆண்கள் சபரிமலை பயனம் ஊடாகயாது பெண்கள் இல்லாத சூழலையும்
தெரிந்து பார்க்கட்டுமே.
பெண்கள் எதிர் கொள்ளும் ஏதாவது வழக்கிற்கு
நீதித்துறை பெண் என்ற நிலையில் இருந்து பார்த்து சரியாக நீதி வழங்கியுள்ளதா? நீதிமன்றங்களில்
வழக்காடும் பெண் வக்கீல்கள் நிலையே இரண்டாம் நிலை தான். ஏதாவது மதவாதி பெண்கள் நலனுக்காக பேசியுள்ளார்களா?
அதுவும் இல்லை, வேலைக்கு போகிறவள் வேசி, வேலைக்கு போனாலும் வீட்டு வேலை பிள்ளை வளர்ப்பு,
ஆணின் பெற்றோரை பார்த்து கொள்ளுதல் எல்லாவற்றிலும் சம அந்தஸ்து உள்ளதா? எல்லா பொறுப்பும்
பெண்கள் தலையில் தான் கட்டிவைக்கின்றனர். கடவுள் கதைகளிலாவது பெண்ணுக்கு முன்னிரிமை
உண்டா / அதுவும் இல்லை. பின் எதற்காக ஆலயம் செல்வதை பெண்கள் விடுதலையாக பார்க்கின்றனர்
என தெரியவில்லை.
அடுத்த
ஆயுதம் 497 என்ற சட்ட திருத்தம்
திருமணத்துக்குப் புறம்பான பாலுறவு தண்டனைக்குரிய குற்றம் அல்ல ஆனால் அந்தக் குற்றத்தைக் காரணமாகக் காட்டி திருமண ஒப்பந்தத்தை மீறியமைக்காக விவாகரத்து கேட்கமுடியும் என்றே கூறுகின்றது. https://www.theweek.in/news/india/2018/09/27/adultery-grounds-for-divorce--not-criminal-offense--supreme-cour.htmlஇந்த சட்ட திருத்ததை ஒரு ஆண் தான் கோரியுள்ளார். திருமணத்திற்கு புறம்பான உறவு பெணுவதில் ஆண்கள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றோம், சம உரிமை என்ற அடிப்படை உரிமைப்படி பெண்களுக்கும் தண்டனை கொடுங்கள் என்று வேண்டியுள்ளார் நீதிபதி இது தனிநபர் நெறிசார்ந்தது. இருவருக்கும் இந்த செயல் ’குற்றமல்ல’ ஆனால் இந்த செயலில் ஏற்படுபவர்களை விவாகரத்து செய்து விடும் உரிமை உண்டு எனக்கூறியுள்ளார். சொல்லப்போனால் தனி நபர் உரிமையை மதித்து கொடுத்த அருமையான தீர்ப்பு.
திருமணத்துக்குப் புறம்பான பாலுறவு தண்டனைக்குரிய குற்றம் அல்ல ஆனால் அந்தக் குற்றத்தைக் காரணமாகக் காட்டி திருமண ஒப்பந்தத்தை மீறியமைக்காக விவாகரத்து கேட்கமுடியும் என்றே கூறுகின்றது. https://www.theweek.in/news/india/2018/09/27/adultery-grounds-for-divorce--not-criminal-offense--supreme-cour.htmlஇந்த சட்ட திருத்ததை ஒரு ஆண் தான் கோரியுள்ளார். திருமணத்திற்கு புறம்பான உறவு பெணுவதில் ஆண்கள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றோம், சம உரிமை என்ற அடிப்படை உரிமைப்படி பெண்களுக்கும் தண்டனை கொடுங்கள் என்று வேண்டியுள்ளார் நீதிபதி இது தனிநபர் நெறிசார்ந்தது. இருவருக்கும் இந்த செயல் ’குற்றமல்ல’ ஆனால் இந்த செயலில் ஏற்படுபவர்களை விவாகரத்து செய்து விடும் உரிமை உண்டு எனக்கூறியுள்ளார். சொல்லப்போனால் தனி நபர் உரிமையை மதித்து கொடுத்த அருமையான தீர்ப்பு.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், நமது
கலாச்சாரத்தின் அடிவேர், மதம், ஜாதியுடன் கலந்தது. ஆனால் இரு-மனம் சேராது கள்ள
தொடர்பு வைத்து கொண்டு வாழும் திருமணம் திருமணம் அல்ல. நேர்மையா ஒப்பந்தத்தை மதித்து
வாழுங்கள், இருவரில் ஒருவர் மீறினாலும் இருவரே மீறினாலும் விவாகரத்து வாங்கி விட்டு
ஒப்பந்ததில் இருந்து விலகி விடலாம். கள்ள தொடர்பு வைத்து கொள்ள கொடுக்கு லைசன்ஸ்
அல்ல, தம்பதிகளுக்கு கொடுக்கும் அச்சுறுத்தல். கள்ள தொடர்பில் ஏற்பட்டால் விவாகம் இரத்து செய்ய உரிமை உண்டு.
இதிலும் கள்ள தொடர்பு பேணும் தம்பதிகள் தான்
பயப்பட வேண்டும் அச்சம் கொள்ள வேண்டும்.. இந்த முட்டாள் ஊடகவும் மக்கள் மனநிலைக்கு
ஒத்தது போல் செய்தியாகவும் சம்பவங்களாகவும்
சட்டத்தை திரித்து கூறுகின்றது.
எல்லோருக்கும், மேற்குலகு, நாகரிக வாழ்க்கை
வேண்டும்,. பயண்படுத்த பொருட்கள் வேண்டும். ஆனால் சட்டம் மட்டும் காலா காலத்திற்கு மாற்றம் பெறாத
காலசூழலுக்கு ஒவ்வாத காட்டுமிராண்டி சட்டம் வேண்டும்.
இது ஒரு வழியில் போய் கொண்டிருக்கிறது என்றால்
மைனாடிட்டி என்ற பெயரில்; இந்தியாவின் அரசியல்மைப்பு சட்டத்தை மதிக்காது கூவிக்கொண்டிருக்கும்
மதவாதியை வளர்க்கின்றது இந்த மதவாதி அரசு. நாட்டில், மக்கள் உரிமைக்காக, மனித நலனுக்காக
போராடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்து பல மாதம் சிறைச்சாலையில் போட்டு தண்டிக்கும்
அரசு; அடுத்தவர்களின் மத நம்பிக்கையை உணர்வுகளை
கேலி செய்து கலவரம் உருவாக்கும் கள்ள மதவாதிகளை சட்டத்தால் தண்டிக்காது வேடிக்கை பார்த்து
கொண்டு மக்கள் மத்தியில் பெரும் கலவரம் வர காரணமாக செயல்படுகின்றது.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து
கொண்டு தமிழக கலாச்சார அடையாளமான கும்பகோணம் ஆலயங்களை ’சாத்தான் கூடாரம்’ என பரப்பி
வரும் கள்ள மதவாதியை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் தங்களின் முகநூல் பக்கங்களில்
இருந்து கொண்டு அந்த நபர் கூறிய அத்துமீறல் கருத்துக்கு நிகராக கிறிஸ்தவ மதத்தை பற்றி
கேவலமாக கருத்து பகிர்ந்து கொண்டு; உண்மையான பன்முகத்தனமை கொண்ட கிறிஸ்தவர்களை மன வேதனைக்கு
உள்ளாக்குகின்றனர். நாலுமாவடி கிறிஸ்தவம் அது ஒரு தனி நபர் கிறிஸ்தவம். கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கோ,கிறிஸ்தவ தலைமைக்கோ கீழ்படிந்தது அல்ல. எந்த வேலையும் அற்று. வீடு வீடாக காணிக்கை வாங்கி
திரிந்த மனிதன் கோடிபதியாக மாறுகிறான் என்றால் இந்த ஊரில் உள்ள கிறிஸ்தவனின் அறிவீனம்
தான். அங்கு சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் கிறிஸ்தவ மக்களிடம் இருந்து காணிக்கையாக
வாங்கினது தான். ஆனால் அரசு கூறுவது ’வெளிநாட்டு பணம்’ என்று. கிறிஸ்தவர்கள் மதமாற்றுகின்றனர்
என குற்றம் கூறி கொண்டே இது போன்ற தனிநபர் மதம் பரப்புவர்களை அரசியல்வாதிகள் சந்தித்து
ரகசியம் ஒப்பந்தம் வைத்து அரசியல் நடத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. மதம் என்று ’மக்கள் இயக்கம்’ அல்லாது கார்ப்பரேட் ஆக மாறினதோ அன்று முதலே அரசுடன் இணைந்து ஊழல்
செய்யும் அரசின் பங்காளிகளாகவும் மாறி விட்டது.
மத உணர்வுகளை தூண்டி விட்டதற்காக ஒரு பொதுநல வழக்கு பதிந்தாகக்கூட தெரியவில்லை. இவ்வகையில் பேசும் நபர் அப்படி முட்டாளும் கிடையாது.
அந்த நபரின் பங்காளி தான் ”அடுத்தும் மோடியே பிரதமர்” ஆகுவார் என அருள்வாக்கு கூறியதுடன்
மோடியை சந்தித்து ஆசிர்வாதவும் வாங்கி, வழங்கி சென்றதும். இந்த நாலுமாவடி நபரும் அரசியல் குறிவாக்கு சொல்வதில்
சளைத்தவர் அல்ல. அடுத்த முதல்வரை தேவன் தேர்ந்து எடுக்க போகின்றார் என சோசியம் சொல்லி
உள்ளார். https://www.facebook.com/suttavadai2/videos/1212345555596987/ யார் அந்த தேவ குமாரன் என்று தான்
நோக்க வேண்டியுள்ளது. இது போன்ற பொறுபற்ற பேச்சுக்கள் அரசின் அனுமதியுடன், அரசுடன்
இணைந்தே, மக்கள் கவனத்தை திருப்பும் நோக்குடன் வைரல் காணொளிகளை வெளியிடுகின்றனர் என்றே
நான் சந்தேகிக்கின்றேன்.
பொறுப்பற்ற பேச்சால் சமூகத்தில்
கலவரம் வெடிக்க வாய்ப்பு உண்டு. கிறிஸ்தவத்தில் பல நூறு பிரிவுகள் உண்டு. இதில் எந்த
பிரிவு இது போன்ற முட்டாள் பேச்சு பேசினாலும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஆபத்து தான். சொந்த
தொழில் புரிந்து வரும் உழைக்கும் ஏழை எளிய கிறிஸ்தவ மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்..
அரசின் சூழ்ச்சியாகவே இதைக்கருதி, மதம் கடந்து, மத பாகுபாடுகள் களைந்து சமூக நீதிக்கு புறம்பாக, மனித நலனுக்கு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவர்களை
அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்..
கிறிஸ்தவத்திற்குள் நடக்கும் ஜாதி, சபைச்சண்டைகளுக்கு
கணக்கே இல்லை. இதில் கேரளா, தமிழக ஆலயங்களை ’சாத்தான்’ என கூவிக் கொண்டு கலவரம் உருவாக்குபவர்கள்
சட்டத்தால் கண்காணிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். அரசு இது போன்ற புல்லுருவிகளை
பயண்படுத்தி கலவரம் கிளப்பி விடாது ஆரம்பத்திலே சட்டத்தால் தண்டிப்பது இந்திய இறையாமைக்கு
நல்லது ஆகும்.