ஊடகங்கள் செயலை கண்டு சிலர் காறி துப்புகின்றனர் திட்டுகின்றனர். சமீபத்தில் சென்னையில்
மக்கள் வெள்ளப்பேரிடரால் துயருற்று இருந்த போது காட்சி ஊடகங்களில் செயல்கள் பல
மக்களை அச்சத்தில் உள்ளாக்கியது வெறுப்புறச் செய்தது.
“நாங்கள் பொதிகைச்சானலை பார்த்து கொள்கின்றோம்,
உங்கள் சேவை எங்களுக்கு தேவை இல்லை” என சொல்லும் அளவுக்கு
தொலைக்காட்சிகள் மக்களை துன்புறுத்தினர்.
வெள்ளப்பெருக்கு சமயங்களில் புதிய பல செய்தி சானலுகள்
களத்தில் நின்று பணியாற்றிய போது நாம் காணும் பல பெயர் போன ஊடகவியாளர்களை களத்தில் காண இயலவில்லை. மழையில்
காமிரா பழுதாகி விடுமோ, தாங்கள் வெள்ளத்தில்
அடித்து செல்லப்படுவோமோ என்று பயந்து எங்கோ ஒளிந்து கொண்டனர். வெள்ளத்துயரில்
களத்தில் பணியாற்றிய சித்தார்த், ஆர் ஜெ பாலாஜி போன்றோரின் நிலத்தகவலை மறைத்து, களத்தில் பணியாற்றிய இளைய ராஜா போன்ற நல்லவர்களை பழித்து செய்தி பரப்புவதிலே உன்னிப்பாக இருக்கின்றனர். பல கோடிகள் சம்பாதித்த பல முன்னனி நடிகர்கள் தங்கள் வீட்டு சன்னலில் இருந்து வேடிக்கை பார்த்து
கொண்டிருந்த போதும் பல கோடி கொள்ளயடித்த சில நடிகர்கள் பத்து லட்சம் எறிந்து
விட்டு ஒதுங்கிய போது தன்னுடய இயலாமையும் தாண்டி மக்களை நேரில் சந்தித்ததும் இல்லாது, ஒரு லட்சம் போர்வைகள் கொடுத்து உதவினவர் இசைஞானி இளைய ராஜா. வெள்ளத்தில் உதவின தன்னார்வர்களை பாராட்ட
போனவரை தேவையற்ற கேள்வியால் கோபத்திற்கு உள்ளாக்கியது மட்டுமல்லாது,, செய்தியாளர், அவர் வயதையும் மதிக்காது எரிச்சல் ஊட்டும் கேள்வியுமாக மறுபடியும் மறுபடியும் அவரை எரிச்சல் கொள்ள வைப்பதை நாம் கண்டோம்.
செய்தியாளர்களின் கண்டிக்க தக்க இச்செயலை எந்த ஊடக கல்வியல் புலத்தில் இருந்து கற்று வந்தனர். அடிப்படையாக ஒரு ஊடகவியாளர்
சிறந்த மனித நேயனாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் மனித பண்பு கொண்டவராக
இருக்க வேண்டும்.
எந்த செய்தியை மக்களுக்கு கொடுப்பது என்ற வகை தெரிவு இல்லாது செய்தி கொடுத்து
கொண்டிருக்கின்றனர். பரபரப்பு செய்தி என்பது மட்டுமே தாரகமந்திரமாக இருந்தது. பேரிடரில் இருந்து
தப்பிப்பது தற்காத்து கொள்வது போன்ற தகவல்கள் இல்லாது வெறும் வெற்று தகவல்கள் மக்களை பீதிக்கு உள்ளாக்கும் தகவல்கள் கொடுப்பதில் போட்டி போட்டு கொண்டிருந்தனர்! அங்கு வேடிக்கை பார்க்க வந்த அமைச்சர்களை
காமிராவை வைத்து பூச்சாண்டி காட்டுவது என ஊடகத்தின் எல்லா அசிங்கமாக அராஜகமான
கேவலமான பக்கங்களை காட்டிய ஊடகத்தை விஜயகாந்த் போன்றவர்கள்,
மக்கள் பக்கம் இருந்து துப்பியதாக எடுத்து கொள்ள வேண்டும்.
செய்தித்தாள்களை திறந்தாலும் வெள்ளப்பெருக்கு வேளையில்
ஆபத்தில் இருந்த மக்களுக்கு உருதுணையாக இருந்த தன்னார்வு தொண்டர்களின் செயல்களை வெளிக்கொணராது பத்திரிக்கை நிறுவனங்கள் வழியாக செய்த உதவிகளை
விளம்பரப்படுத்துவதிலே உன்னிப்பாக இருந்தனர். பொதுமக்கள் தன்னாவர்கள் வழி
மக்களுக்கு சேர்த்த பொருட்களை கூட மக்களிடம் கொண்டு சேர்க்காது தடைகள் உருவாக்கின
அரசியல் கட்சிகள் முகத்திரையை கிளிக்காது வெள்ளப்பெருக்கு வேளையில் திறம்பட
செயலாற்றி மக்களுக்கு சேவை புரிந்த சிம்பு போன்ற நடிகர்களை தேவையற்ற ஊடகச்செய்திகள் ஊடாக
அச்சமுறச் செய்யும் பணியையே ஊடகம் செய்து வந்துள்ளது.
ஊடகம் யாரை பிரதிபலிக்க வேண்டியது? சாதாரண மக்களை சமூகத்தின்
அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்களை. ஆனால் இன்றைய ஊடக முதலாளிகள்,
அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என்று ஆகி விட்ட நிலையில் ஊடகத்தின் செயல் பாடுகள்
மேல் மக்கள் சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
சென்னை வெள்ளபேரிடரில் மரணமடைந்த மக்கள் செய்தி முழுதும்
வெளிவரவில்லை. பல பொய்களை பரவ விட்டு உண்மையை மறைக்கும் பணியைத்தான் ஊடகம் செய்து வருகின்றது. ஊடகம் தான்
நினைத்தால், சிலரை நல்லவராகவும் அதிகாரத்தில் கொண்டுவரலாம் என்ற மெத்தனப்போக்கில்
உள்ளது. இதுவரை அரசு பேரிடரில் இருந்து மக்கள் மீட்புக்கு என்ன செய்தது, என்ன செய்ய வேண்டும், என்ன செய்து வருகிறது என்ற செய்திகளை தர இயலவில்லை. அரசுக்கு ஓர் நெருக்கடி கூட ஊடகங்களால் கொடுக்க இயலவில்லை. அரசு என்றதும் ஆளும் கட்சி சார்ந்தவர்கள் மட்டுமல்ல இதுவரையிலும் ஆட்சி செய்தவர்கள் எல்லாரும் இந்த பேரிடருக்கு காரணமாகினர். இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர், அரசியல் கட்சிகள் பார்வைக்கு தான் தெரியவில்லை என்றாலும் ஊடகம் என்ன செய்து கொண்டிருந்தது. தண்ணீரில் மூழ்கி கிடந்த இடங்களிலுள்ள குடியிருப்புகளுக்கு விற்பனை விளம்பர கர்த்தாக்களாக செயல்பட்டு கொண்டிருந்தனர்!
பொதுமக்கள் ஊடகத்தை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை விஜயகாந்து கேட்டு உள்ளார்.
துப்புவதாக செய்கை காட்டினாரா காறிதுப்பினாரா என்று காணொளியை பார்ப்பவர்கள் விளக்கி கொள்ளட்டும். ஊடகம் இருக்கும் நிலையை
உணர்ந்து இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் காறி துப்பும் சூழல்
எழுந்திருக்காது.

இந்த அரசு நிவாரண பணியை எவ்வாறு செய்து கொண்டிருக்கின்றது, தற்போது மக்கள் நிலை என்ன? அவர்கள் மறுவாழ்வுக்கு ஊடகம் எவ்வாறு
உதவலாம், கையகப்படுத்தியுள்ள நீர் நிலைகளை மீட்டு வரும் காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய பேரிடர்களை எவ்வாறு
தடுக்கலாம் என்று இல்லாது; சிம்பு கெட்ட பாட்டு பாடினார்,
விஜயகாந்து துப்பினார், இளைய ராஜா திட்டினார் என்று கூப்பாடு போடும்
ஊடகத்தை
பார்த்தாலே கேவலமாக உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டின் நான்காம் தூணாக விளங்க வேண்டிய
ஊடகம் ஆளும் வர்கத்தின் அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக மாறி வெகு நாளாகி விட்டது
என மக்களும் புரிந்து விட்டனர். ஆதலால் ஊடகம், வரும் காலங்களில் துப்புவதை மட்டுமல்ல பல எதிர்வினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த பேரிடரில் வாட்ஸ் ஆப் முகநூல் போல் சமூகத்தளங்கள் ஆற்றிய பங்கில் ஒரு சதவீதம் கூட ஊடகம் செயலாற்றவில்லை என்று அறிந்தால் நல்லம்!



மழையும் எங்களையும் பிரித்து பார்க்கவே முடியாது. மேற்கு தொடற்சி மலையின் அடிவாரம் தான் எங்கள் குடியிருப்புகள் என்பதால் மழை தான் எங்கள் ஒரே காலநிலை என்று இருந்தது. நாங்கள் ரமணன் வானிலை அறிக்கையாலரர்களின் மொழி எல்லாம் நம்புவதில்லை. வீட்டில் இருந்து கிழம்பும் போதே " கொடைய எடுத்துக்கோடி மழை வரும் மேகமூட்டமா இருக்குது" என்று கட்டளைக்கு படிந்து குடையும் கையுமாகவே நடப்போம். பள்ளிக்கு செல்லும் போது எங்கள் துணிப்பை, சாப்பாட்டுப் பை, குடை என மூன்றும் எங்களிடம் ஒன்று சேர்ந்தே இருக்கும். 
மழை மழை என்று எப்போதும் சினுங்கியும், சிரித்து, கோரமாகவும் பெய்து கொண்டே இருக்கும். இதன் மத்தியில் தான் எங்கள் வாழ்க்கையும் பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து ஓர் மூன்று மாதம் பேய் மழை பெய்ய வழித்தடங்கள் அடைக்க ஆரம்பிக்கும். முதல் அபாயசங்கிலி "கக்கி கவலை" என்ற இடத்தில் ஆரம்பிக்கும். இது பெரியாருக்கும் குமளிக்கும் இடைப்பட்ட . அங்கு ஓர் பெரிய தண்ணீர் வழித்தடம் இருந்தது. மழை நேரம் தண்ணீர் பெரியார் ஆற்றை சென்று சேர என நோக்கத்துடன் இருந்த அந்த ஓடைக்கு அருகில் கூரை கட்டியவர்கள் பின்பு ஓடையை அடைத்து தன் மேல் சிமின்று ஸ்லாப் போட்டும், அடுக்கு மாடி கட்டிடங்களை கெட்டி குடியிருக்க ஆரம்பித்து விட்டனர். கக்கி கவலையில் தண்ணீர் ஏறி விட்டது என்றால் அங்குள்ள வீடுகள் அதன் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரியும் தண்ணீருக்குள் மூழ்கி விடும். இது போன்ற ஒரு வெள்ளப்பெருக்கு நேரம் தான் மாமாவுக்கு கடைக்குட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்திருந்தாள். பிள்ளை வெள்ளைக்காரி போன்ற வெள்ளை நிறம் என்றதும் கறுத்த பொக்கு வாய் தாத்தா கூட பெருமை பேசி கொண்டிருந்தார். நாங்கள் பிள்ளையை பார்க்க தேயிலைச்செடிகளை பிடித்து காடு வழி சென்று வந்தது நியாபகம் உள்ளது.
பூஞ்சடி பாட்டி(பூஞ்சடி விருப்பமாக வளர்ப்பதால் இந்த பெயர். முறுக்கு சுட்டு கொண்டு வரும் பாட்டிக்கு பெயர் முறுக்கு பாட்டி!) வீடு முன் அழகிய ஓர் ரோஜா செடி உண்டு. அந்த செடி மரத்தில் நூறுக்கு மேல் பூக்கள் பூத்து குலுங்கும். அந்த பூவின் மணம் இப்போதும் நாசியை வந்தடைகின்றது. யாட்லி ரோஸுடன் ஒத்த இதமான மணம். பூ இதழ் அதன் அமைப்பு மிக அருமையாக இருக்கும். அங்கு தான் ஜெயராஜ் சித்தப்பா இருப்பார்கள். சின்ன வயதில் நாங்கள் கண்ட கல்லூரி சென்று படித்து திரும்பிய ஒரே ஒரு சித்தப்பா ஜெயராஜ் சித்தப்பா தான். அதனாலே அந்தக் காலயளவில் சித்தப்பாவிடம் இனம் புரியாத ஆராதனை, அன்பு நிலைவியது ! பின்பு அந்த சித்தப்பா எங்கள் பகுதியில் புகழ் பெற்ற தொழிலாளர் வழக்களாராக பணிபுரிந்தார். அந்த பாட்டி பாம்பனார் என்ற சிற்றூருக்கு குடிபெயர்ந்த போது அங்கு இன்னொரு தாத்தா பாட்டி குடும்பம் குடியேறியது. அங்கு தான் ரீட்டா அத்தை, லாரன்ஸ் சித்தப்பா லில்லி அத்தை என்ற ஒரு அன்பு பட்டாளம் குடியிருந்தது. அவர்கள் சாயாக்கடை மற்றும் ஹோட்டல் வைத்திருந்தார்கள். எங்களுக்கு ருசியான டைமன் கேக் தருவார்கள்.