உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளுபவர்கள் அதிகம் வசிக்கும் தேசம் நம் இந்தியாவாகவே உள்ளது. உலக சுகாதார தரவுகள்படி வருடம் ஒரு லட்சம் பெயர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வது தெரிய வருகிறது. இதில் பெரும்வாரியானோர் 19-30 வயதிற்கு உட்பட்ட இளைங்ஞர்கள் ஆவர் என்பது இன்னும் துயர் தரும் உண்மை செய்தி!
40 நிமிடத்திற்கு ஒரு நபர் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடுகின்றனர். India-has-highest-number-of-suicides-in-the-world-WHO/articleshow/41708567.cms மாநிலங்கள் அளவில் எடுத்து கொண்டால் பாண்டிச்சேரி, சிக்கிம், தமிழகம், கேரளம் என்ற வரிசையில் உள்ளனர். மிகவும் குறைவாக தற்கொலை செய்து கொள்பவர்களின் மாநிலமாக பீகாரை காட்டுகின்றது தரவுகள். Indian_states_ranked_by_suicide
40 நிமிடத்திற்கு ஒரு நபர் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடுகின்றனர். India-has-highest-number-of-suicides-in-the-world-WHO/articleshow/41708567.cms மாநிலங்கள் அளவில் எடுத்து கொண்டால் பாண்டிச்சேரி, சிக்கிம், தமிழகம், கேரளம் என்ற வரிசையில் உள்ளனர். மிகவும் குறைவாக தற்கொலை செய்து கொள்பவர்களின் மாநிலமாக பீகாரை காட்டுகின்றது தரவுகள். Indian_states_ranked_by_suicide
பல கேள்விகள் எழுப்பும் ஓர் ஆராய்ச்சி மாணவரின் மரண காரணம் ஒரு தலிது மாணவரின் ஜாதிய ஒதுக்குதலால் உருவான மரணம் என்று சுருக்குவது பல உண்மைகள் வெளி வர தடையாக அமையும். கடந்த நாலு வருடங்களில் 18க்கு மேற்பட்ட தலிது மாணவர்கள் இந்தியாவின் புகழ் பெற்ற எய்ம்ஸ், கான்பூர் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது செய்திகள்.
மரண காரணம் பின் தங்கிய ஜாதிய அடக்குமுறை என்ற ஒன்றை நோக்கில் இல்லாது, இந்தியாவின் உயர் கல்வி பெறும் பல்கலைகழகங்களில் நிலவும் கல்வி நிலையை பற்றி ஆராய வேண்டியுள்ளது. இத்தற்கொலையை அரசியல் கட்சிகள் தாங்கள் ஆதாயங்களுக்காவும் ஜாதிய அமைப்புகள்: தங்களை வாதங்களுக்கு வலு சேர்க்கவும் என்று பாராமுகமாக பயன்படுத்தாது பொதுவாக கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி மாணவர்கள் எதிர் கொள்ளும் பல பிரச்சினைகளை ஆராய வேண்டியுள்ளது.
ஒரு ஆராய்ச்சி மாணவருக்கு ஏழு மாதம் ஊக்கத்தொகையை கொடுக்காது இருந்ததும் பொதுவான பல்கலைகழக வாய்ப்புகளை பயண்படுத்த தடை விதித்ததும் ஆசிரியர் அல்லது குரு நிலையில் இருக்கும் பல்கலைகழகம் மாணவ சமூகத்திடம் இளம் இந்திய பிரஜையிடம் காட்டிய மாபெரும் அநியாயமாகும். இது போன்ற தண்டனையை வகுப்பது பல்கலைகழக எவ்வித சட்டப்பிரிவு என்றும் நோக்க வேண்டியுள்ளது. இந்தியா போன்ற ஓர் ஏழை நாட்டில் தினம் 27 ரூபாய் கூட சம்பாதித்து தன் உணவை மேற்கொள்ள இயலாத சூழலில் தினம் 8-12 மணி நேரம் கூட உழைத்தால் கூட 25 ஆயிரம் மாத ஊதியம் பெறும் நிலை இல்லாத நாட்டில் ஊக்கத்தொகையாக மாதம் 25 ஆயிரம் பெற்று படிக்க வாய்ப்பு பெற்ற மாணவர் "என் மரணத்திற்கு யாரும் காரணம் அல்ல நானே, என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறைய ஏற்ற தாழ்வு இருப்பதாக உணருகிறேன். அது என்னை விகாரப்படுத்தி விட்டது" என்ற எழுதி வைத்ததையும் ஆராயவேண்டியுள்ளது. கல்வி என்பது உயர் கல்வி என்பது மனிதனை விகாரப்படுத்தும் சூழலையா உருவாக்குகின்றது என்ற கேள்வியும் எழாதில்லை? பாரபட்சமான இத்தகைய சூழலை எதிர் கொண்டு வெறுத்து போய் தற்கொலை செய்து கொள்ள நினைத்த மாணவர் எதனால் தன் மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்று குறித்து வைக்க வேண்டும். தன் வாழ்வின் கடைசி நிமிடம் எல்லா நண்பர்களிடமும் எதிராளிகளிடமும் சமரசப்பட்டு கொண்டு மரணிக்க நினைத்தது எவ்வகை சமூக நீதியாகும். ஏதோ தன் மரணத்தின் மூலமாவது பல்கலைகழங்களில் நிகழும் சூழலை வெளிக்கொண்டு வராது மறைத்து வைத்து கொண்டு மரணத்திற்கு தத்துவாத்வமாக சில கட்டமைப்புகளை உதிர்த்து விட்டு தன் உயிரை எடுத்து கொண்ட காரணம் என்ன?
தற்கொலை செய்து கொண்ட மாணவருக்காக வாதாடுபவர்கள் கூட தலிது என்ற ஒரே நேர்கோட்டில் பல்கலைகழக அபத்தங்கங்களை மறைக்க பார்க்கின்றனர். கல்வி நிலையங்களில் மாணவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் நேரடியாக மத்திய அரசுக்கு உண்டா? எதனால் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டது, இதுவே மாணவர்களுக்கான தண்டனையா என்றும் ஆராய வேண்டியுள்ளது. ஆராய்ச்சி படிப்பிற்கு அடி எடுத்து வைத்த மாணவர் இந்திய கல்விய சூழலில் உயரிய படிப்பை எட்டிய மாணவர் தான் நினைத்தது போல் சூழல் நிகழவில்லை என்றதும் தற்கொலை செய்து கொண்டது எவ்விதத்திலும் சரி ஆகாது. அப்பல்கலைகழகத்தில் படிக்கும் மற்று தலிது மாணவர்கள் நிலையும் இத்தருணத்தில் நோக்க வேண்டியுள்ளது.
தற்கொலை என்பது எக்காரணம் கொண்டு எச்சூழலிலும் ஓர் சமூக குற்றமே. இந்நிலையில் உயர் கல்வி கொண்ட மாணவர் எடுத்த முடிவு கல்வி கற்பவர்களின் மனநிலையை சுய பலத்தை உரசி பார்க்கின்றது. இது போன்ற தற்கொலை மரணங்களுக்கு தற்கொலை செய்து கொள்ளுபவர்களின் புகைப்படத்துடன் செய்தி வருவதும் அவர்களை கோழை என்று அல்லாது கதாநாயகன் போன்று செய்திகள் தருவதும் இது போன்ற நிலையில் உழலும் பல இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும். இது போன்ற தற்கொலைகள் விளம்பரமாக அல்லது ஆயுதமாக இளம் மாணவர்கள் எடுத்து கொள்ளும் சூழல் உருவாகும்.
ஆராய்ச்சி மாணவர்களுக்காக பிரச்சினைகள்
பல பொழுதும் ஆராய்ச்சி மாணவர்கள் எதிர்கொள்ளும் தலையான பிரச்சினை அவர்களுக்கு அரசில் இருந்து கிடைக்கப்பெறும் ஊக்கத்தொகை சரியாக கிடைக்காது இருப்பது தடுத்து வைப்பது தேவையான தொகை கிடைக்க பெறாது இருப்பதும் காலதாமதமாக கிடைப்பதும் ஆகும்.
ஆராய்ச்சிக்கு தேவையான வழிகாட்டி பேராசிரியர்கள் கிடைப்பது மாபெரும் பிரச்சினையாக உள்ள போது; சில மாணவர்களுக்கு ஆராய்ச்சி துவங்கிய பின்பு தங்கள் வழி காட்டி பேராசிரியர்களை சரிக்கட்டுவதே பெரிய பிரச்சினையாக உள்ளது. பல ஆராய்ச்சி மாணவர்கள்; தங்கள் வழி காட்டி ஆசிரியர்களின் வீட்டு கழிவு தொட்டியை கழுவது துவங்கி சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வரும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் முனைவர் படிப்பு காலம் என்பது தங்கள் ஆராய்ச்சி படிப்பை விட ஆராய்ச்சி ஆசிரியர்களுக்கு சேவகம் செய்வதிலே கடந்து விடும். தங்கள் இயல்பான ஆர்வம் கொண்ட ஆராய்ச்சிக்கு தடை இட்டு ஆராய்ச்சி வழிகாட்டிகளின் பார்வையில் தடைகள் உருவாகும் சூழலும் உண்டு. பல பொழுதும் முனைவர் பட்டம் பெற ஏழு வருடங்களுக்கும் மேல் ஆகுவதால் எடுத்த தலைப்பே காலகரணப்பட்டு போய் படிப்பை இடையில் நிறுத்தும் சூழலும் ஆராய்ச்சி படிப்பில் ஆர்வம் அற்று போகும் சூழலும் உண்டு. பல ஆராய்ச்சி மாணவர்கள் பல லட்சங்களை புரட்டினாலே ஆராய்ச்சி படிப்பை முடிக்க இயலும். வழி காட்டிகளுக்கான பல சிலவுகள் ஆராய்ச்சி மாணவர்கள் தலையில் தான் பல பொழுதும் விடியும்.
ஆராய்ச்சி மாணவர்கள் பல்கலைகழக பொது கல்வி சூழலில் இருந்து தனிமைப்பட்டு ஆராய்ச்சி தொடரும் சூழலும் நிலவுகின்றது. மேலும் தாங்கள் கல்வி கற்கும் பல்கலைகழக்ங்களுடனும், தங்கள் வழி காட்டி ஆசிரியர்களிடம் சுமுகமல்லாத பூசல் உருவாகும் சூழலும் உருவாகின்றதும் சகஜமாக நிகழ்கின்றது.
,
,
ஆராய்ச்சி படிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட புலனில் சிறப்பு பெற்றவர்கள் தொடரும் படிப்பாகும். தற்போது ஆராய்ச்சி படிப்பிற்கு குறிப்பிட்ட தேர்வுகளில் தேர்வாகுபவர்களுக்கும், ஆராய்ச்சி வழிகாட்டிகளுக்கு பிடித்தமானவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கின்றனர். ஆராய்ச்சி என்பது குறிப்பிட்ட பாடத்தில் புலமை பெற்றவருக்கு அனுபவ அறிவுள்ளோருக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவானால் தரம் உயரும். தற்போது ஆராய்ச்சி படிப்பு என்பது பட்டப்படிப்பு மூன்று வருடம் மேல்பட்டபடிப்பு இரண்டு வருடம், முனைவர் பட்டம் மூன்று வருடம் என்ற வரிசை ஏற்பாட்டில் ஆகி விட்டது. பல்கலைகழக்ங்களில் பெரும் ஊதியத்தில் வேலை கிடைக்கும் என்ற ஆவலில் பலர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளுகின்றனர். புதிய கண்டு பிடிப்பு, ஆராய்ச்சி என்ற சூழலை கடந்து சமூக அந்தஸ்து பணம் அதிகாரம் என்ற ஆசைகளும் மனதில் இருப்பதால் ஆராய்ச்சி படிப்பையும் வியாபாரமாக கையாள ஆரம்பித்து விட்டனர்.
படிக்க வேண்டும் என்பது அறிவு தேடல் என்பதை கடந்து பல காரணங்கள் நிரம்பி விட்டதால் இத்துறையில் பல அநியாங்களையும் சங்கடங்களையும் சேர்த்து கொண்டு வருக்கின்றது. இது இந்தியா போன்ற நாடுகளில் மக்களை கல்வி என்ற பெயரில் பிரிக்கவும் துண்புறுத்தவும் வழி செய்கின்றது. வீட்டிற்கு வீடு பொறியாளர்களை உருவாக்கி வேலை இல்லா திண்டாட்டத்தில் உழைக்க மனமில்லாத 75% இளைஞர்களை உருவாக்குவது போல் முனைவர் பட்டம் என்ற பெயரில் கோழைகளை உருவாக்குவது நாட்டின் நலனுக்கு நல்லது அல்ல. ஒரு மனிதன் தான் பெற்ற பட்டத்தால் மதிக்காது தன் திறமையால், உழைப்பால், சுய நம்பிக்கையால், மதிக்கப்பட வேண்டும். தற்கொலை செய்து கொள்ளும் தலைமுறையை உருவாக்குவது அபத்தமான கல்வி சூழலாகும்.




மழையும் எங்களையும் பிரித்து பார்க்கவே முடியாது. மேற்கு தொடற்சி மலையின் அடிவாரம் தான் எங்கள் குடியிருப்புகள் என்பதால் மழை தான் எங்கள் ஒரே காலநிலை என்று இருந்தது. நாங்கள் ரமணன் வானிலை அறிக்கையாலரர்களின் மொழி எல்லாம் நம்புவதில்லை. வீட்டில் இருந்து கிழம்பும் போதே " கொடைய எடுத்துக்கோடி மழை வரும் மேகமூட்டமா இருக்குது" என்று கட்டளைக்கு படிந்து குடையும் கையுமாகவே நடப்போம். பள்ளிக்கு செல்லும் போது எங்கள் துணிப்பை, சாப்பாட்டுப் பை, குடை என மூன்றும் எங்களிடம் ஒன்று சேர்ந்தே இருக்கும். 
மழை மழை என்று எப்போதும் சினுங்கியும், சிரித்து, கோரமாகவும் பெய்து கொண்டே இருக்கும். இதன் மத்தியில் தான் எங்கள் வாழ்க்கையும் பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து ஓர் மூன்று மாதம் பேய் மழை பெய்ய வழித்தடங்கள் அடைக்க ஆரம்பிக்கும். முதல் அபாயசங்கிலி "கக்கி கவலை" என்ற இடத்தில் ஆரம்பிக்கும். இது பெரியாருக்கும் குமளிக்கும் இடைப்பட்ட . அங்கு ஓர் பெரிய தண்ணீர் வழித்தடம் இருந்தது. மழை நேரம் தண்ணீர் பெரியார் ஆற்றை சென்று சேர என நோக்கத்துடன் இருந்த அந்த ஓடைக்கு அருகில் கூரை கட்டியவர்கள் பின்பு ஓடையை அடைத்து தன் மேல் சிமின்று ஸ்லாப் போட்டும், அடுக்கு மாடி கட்டிடங்களை கெட்டி குடியிருக்க ஆரம்பித்து விட்டனர். கக்கி கவலையில் தண்ணீர் ஏறி விட்டது என்றால் அங்குள்ள வீடுகள் அதன் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரியும் தண்ணீருக்குள் மூழ்கி விடும். இது போன்ற ஒரு வெள்ளப்பெருக்கு நேரம் தான் மாமாவுக்கு கடைக்குட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்திருந்தாள். பிள்ளை வெள்ளைக்காரி போன்ற வெள்ளை நிறம் என்றதும் கறுத்த பொக்கு வாய் தாத்தா கூட பெருமை பேசி கொண்டிருந்தார். நாங்கள் பிள்ளையை பார்க்க தேயிலைச்செடிகளை பிடித்து காடு வழி சென்று வந்தது நியாபகம் உள்ளது.
பூஞ்சடி பாட்டி(பூஞ்சடி விருப்பமாக வளர்ப்பதால் இந்த பெயர். முறுக்கு சுட்டு கொண்டு வரும் பாட்டிக்கு பெயர் முறுக்கு பாட்டி!) வீடு முன் அழகிய ஓர் ரோஜா செடி உண்டு. அந்த செடி மரத்தில் நூறுக்கு மேல் பூக்கள் பூத்து குலுங்கும். அந்த பூவின் மணம் இப்போதும் நாசியை வந்தடைகின்றது. யாட்லி ரோஸுடன் ஒத்த இதமான மணம். பூ இதழ் அதன் அமைப்பு மிக அருமையாக இருக்கும். அங்கு தான் ஜெயராஜ் சித்தப்பா இருப்பார்கள். சின்ன வயதில் நாங்கள் கண்ட கல்லூரி சென்று படித்து திரும்பிய ஒரே ஒரு சித்தப்பா ஜெயராஜ் சித்தப்பா தான். அதனாலே அந்தக் காலயளவில் சித்தப்பாவிடம் இனம் புரியாத ஆராதனை, அன்பு நிலைவியது ! பின்பு அந்த சித்தப்பா எங்கள் பகுதியில் புகழ் பெற்ற தொழிலாளர் வழக்களாராக பணிபுரிந்தார். அந்த பாட்டி பாம்பனார் என்ற சிற்றூருக்கு குடிபெயர்ந்த போது அங்கு இன்னொரு தாத்தா பாட்டி குடும்பம் குடியேறியது. அங்கு தான் ரீட்டா அத்தை, லாரன்ஸ் சித்தப்பா லில்லி அத்தை என்ற ஒரு அன்பு பட்டாளம் குடியிருந்தது. அவர்கள் சாயாக்கடை மற்றும் ஹோட்டல் வைத்திருந்தார்கள். எங்களுக்கு ருசியான டைமன் கேக் தருவார்கள்.