மன்னர் பாண்டிய நாட்டிற்கு வர மறுத்து விட்டாலும் விருந்தினர் நாட்டில் இருக்க மனம் இல்லாத மூத்த மகனான குலசேகரன் பாண்டிய நாட்டின் பகுதியான கூடலூற்றில் வசித்து வருகின்றார். அந்நேரம் சேர நாட்டு மன்னர் பூஞ்சார் (பூனையார்) பகுதியை விற்க போவதாக தகவல் கிடைக்கின்றது. பூஞ்சார் என்பது கூடலூருக்கு எதிரையுள்ள நிலப்பரப்பான கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட தமிழக பகுதிகள் தற்போது கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதியான தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ஆகும். தன்னிடமிருந்த பொன் மற்றும் மதிப்புமிக்க கற்களை விலையாக கொடுத்து பூஞ்சார் பகுதியை வாங்குகின்றார். கூடலூருக்கு அருகில் உள்ள குமுளி சேரர்களின் தலைநகரமாக சங்க காலத்தில் இருந்துள்ளது.அது குழுமூர் என்று அழைக்கப்பட்டது .

1756-ம் ஆண்டு வேணாடு அரசன் பல சிறு அரசுகளை ஒன்று சேர்த்து திருவிதாங்கூர் அரசினை உருவாக்குகிறான். அதன்பிறகு 1866ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு 2000 மூட்டைகள் நெல்லினை தொடர்ந்து நிரந்தரமாக ஆண்டுதோறும் பூஞ்சார் அரசுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி தனது ஆளுகைக்குட் பட்டிருந்த ஏலமலைகள் என்று அறியப்பட்ட பகுதியை திருவிதாங்கூர் அரசிற்கு கொடுத்துவிட்டது..இக்காலத்தில்தான், திருவிதாங்கூர் அரசில் வழக்குரைஞராக பணியாற்றிய ஜான் டேனியல் மன்றோ என்பவன் பூஞ்சார் நிலப்பரப்பினை பார்வையிட்டு, அவை தேயிலைதோட்டங்கள் அமைக்க வாய்ப்பான இடம் என்று தெரிந்து கொண்டு பூஞ்சார் அரசுடன் 1877ல்ஒரு ஒப்பந்தம் செய்து ரூ. 5000ஃ- மறுபயனாக கொடுத்தும் ஆண்டு குத்தகைத் தொகை ரூ. 3000 கொடுக்க சம்மதித்தும் அஞ்சுநாடு என்று அறியப்பட்ட பகுதியை குத்தகைக்குப் பெறுகிறான். ஆங்கிலேய அதிகாரி குத்தகைக்கு பெற்ற நிலத்தில் தோட்டங்களை அமைப்பதற்கு பூஞ்சார் அரசுக்கு கட்டுப்பட்ட அஞ்சுநாட்டின் பழங்குடி தமிழ் குறுநில மன்னன் கண்ணன்தேவர் உதவிகின்றார். தங்களுக்கு தோட்டங்கள் அமைக்க உதவிய அந்த குறுநில மன்னனை நினைவு கூர்ந்து அவனது பெயரினை தங்களது நிறுவனத்திற்கு சூட்டியுள்ளனர்.மேற்சொன்ன நிலத்தினை ஜேம்ஸ் பின்லே கம்பெனி லிட் என்ற நிறுவனம் விலைக்கு வாங்குகிறது 1983 முதல் டாடா நிறுவனம் பின்லே நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வாங்கி டாடா தேயிலை நிறுவனம் என்ற பெயரில் அத்தேயிலைத் தோட்டங்களை நடத்தி வருகிறது.
இங்கு பளியர், புலையர், மன்னன், முத்துவான், ஊராளி, மலை அரையன்,
உள்ளாடன் முத்துவான்(பூஞ்சார் மன்னருடன் மதுரையை விட்டு வெளியேறும் போது மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் சிலைகளை தூக்கி சுமந்தவர்கள்)என்ற பழங்குடி மக்கள் தொன்மை காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் பாண்டியர் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மன்னர் என்ற பழங்குடியினர், இன்றும் தங்களுக்குள் ஒரு மன்னரை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர்.
அடுத்து, கம்பம், உத்தமபாளையம் மற்றும் போடி வட்டங்கள் மற்றும் அவற்றைச்சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சென்று அப்பகுதியில் குடியேற்றங்கள் அமைத்து வாழ்ந்து வரும் தமிழர்கள் மற்றொரு பிரிவினர் உண்டு. அவர்கள்தான் அங்கு ஏலம், மிளகு போன்ற பயிர்களை சாகுபடி செய்வதற்கான தோட்டங்களை உருவாக்கியவர்கள்.
அடுத்தபிரிவினர் ஆங்கிலேய தேயிலை நிறுவனங்கள் தேயிலைத் தோட்டங்களைஅமைப்பதற்குதிருநெல்வேலி, செங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட தேயிலைத் தோட்டத் தமிழர்கள் ஆவர். இவர்களுடன் வியாபார காரணங்கள் மற்றும் தேயிலை தோட்ட அதிகாரிகள் கட்டிட பணியாளர்கள் என்ற தமிழக மக்களும் சேர்ந்துள்ளனர்.
திருவிதாங்கூர் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழர் பெரும்பான்மையினராக வாழ்ந்த 9 வட்டங்களில் தோவாலை, அகஸ்திஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை தென்பகுதி, நெடுவங்காடு கீழ்பகுதி, செங்கோட்டை, உள்ளிட்ட வட்டங்களுடன் பூஞ்சார் அரசின் பகுதியாக இருந்த தேவிகுளம், பீர்மேடு ஆகிய இரு வட்டங்களும் அடங்கும்.
http://keetru.com/index.php/component/content/article?id=18048..http://en.wikipedia.org/wiki/Poonjar#cite_note-2




வண்டிப்பெரியார் என்ற ஊர் கரைபுரண்டோடும் ஒரு நதியின் இரு கரையும் இணைக்கும் சிற்றூர் ஆகும். இக்கரை தமிழக மக்களும் அக்கரை பக்கம் மலையாள தேசவும் வியாபார தொடர்பாடல் பேணும் ஒரு வியாபார தலமாக இருந்திருக்க வேண்டும். இக்கரை அடையும் வண்டியிலுள்ள பொருளை ஒரு தோணியில் ஏற்றி பெரியார் நதியின் ஊடாக கரை கடந்தால் அந்த பொருட்கள் எளிதாக கேரளா தேசம் நோக்கி செல்ல இயலும். ஆதலால் வண்டிப்பெரியார் கரை ஓரம் எங்கும் தமிழ் வியாபாரிகளையை நீங்கள் இன்றும் காண இயலும். இந்த நதியில் எப்படி ஒரு பாலம் வந்தது என்றால் அது ஆங்கிலேயரின் திறமைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்து காட்டாகும். முல்லைப்பெரியார் டாம் கட்டின காலயளவில் உருவாகினது தான் இந்த பாலவும். புனலூர் பாலம் போன்றே கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் பாலம். ஆங்கிலேயர்களின் உழைப்பை எடுத்து காட்டும் வண்ணம் 100 வருடம் கடந்த பின்பும் கனரக வாகனம் கடந்து போகும் போது ஏற்படும் ஒரு சிறு நடக்கத்துடன் நிலைகொள்கின்றது. இந்த பாலம் ஒரு குருவிக்கு எப்படி மரமோ அது போன்றே பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க அமரும் இடமாக இருந்தது . எந்த கஞ்சனும் பிச்சைக்காரர்களை ஏமாற்றி தப்பிக்க இயலாது. தேனம்மா அங்கு கண்டுள்ளேன். இரு கால்களும் முடமான ஒரு பெண் அங்கு இருப்பார். காளை கிறுக்கன் ஓயாது நடக்கும் வழியும் இதுவே. ஏன் என்றால் வண்டிப்பெரியாற்றில் ஒரு முறை நடப்பது என்றால் பாலத்தை கடந்து நடப்பது ஆகும். 
ரோட்டை வீதி கூட்ட வேண்டும் என்று முடிவெடுத்ததும் முதன் முதலாக எடுத்த முடிவு கடைகளை அப்புறப்படுத்துவது ஆகும். அப்படி கடைகளை அப்புறப்படுத்தினால் தேயிலத்தோட்ட தொழிலாளர்களை போன்றே பல மூன்று தலைமுறைகளாக குடியிருந்த தமிழ் வியாபாரிகளும் தங்கள் இடத்தை விட்டு நகர நிர்பந்திக்கப்படுவர். ஊர் உலக வாயை மூடும் நிகழ்வே குருசடியை இடிப்பது ஆகும். இந்த குரிசடியை இடித்தால் கொஞ்சம் பின்னால் தள்ளி இன்னொரு குருசடி கட்டுவது ஆலயத்திற்கு பெரிய பிரச்சினை ஆகாது. ஆனால் கடைகள் இடிக்கப்படும் போது கடை வியாபாரிகள் அங்கிருந்து குடிபெயர வேண்டும் தங்கள் வாழ்வாதாரத்தையை இழந்துள்ளனர்.
