சமீபத்தில்
பெங்ளூரை சேர்ந்த இளைஞர் அவர் மனைவியின் குற்றச்சாட்டால் 377 சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது ஓரின
சேர்க்கை ஆர்வலர்களின் கோபத்தை எழுப்பி விட்டது. இந்திய தண்டனைக்கோவை 377 ஆவது பிரிவின்படி ஓரின சேரக்கையானது ஆயுள்கால சிறைத் தண்டனை வரை விதிக்கப்படக்கூடிய குற்றமாக உள்ளது.
ஒரு
நபர் ஏன் ஓரின பாலின ஆர்வம் கொள்கிறார் என்பது இயற்கையானதா அல்லது மரபணு சார்ந்த குரொமசோம் குறைபாடா அல்லது சில செயற்கையான
பழக்க வழக்கங்களின் தொடர்ச்சியா என இன்னும் ஆதாரபூர்வமான ஆராய்ச்சி முடிவுகளுக்கு எட்டவில்லை. 50% ஓரினசேர்க்கையாளர்கள் உள்ளடங்கிய அமெரிக்காவில் கூட ஆராய்ச்சி விடையாமாகவே இருந்து வருகின்றது. அரசியலற்ற ஒரு முடிவை அவர்களாலும் எடுக்க இயலவில்லை.
பழைய
தலைமுறையில் பருவ வயது வரும் அல்லது வரும் முன்னே திருமணம் அரங்கேறுவதால் அவர்கள் பாலின
வேட்கைக்கு வடிகால் தேட வீட்டிற்குள்ளே அருகிலே வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போதோ அனைவருக்கும் கல்வி அதுவும் பல வருடங்களாக கல்வி கற்க வேண்டும், வேலையில் சேர வேண்டும் வேலையில்
சேர்ந்தாலும் நிறைய சம்பாதித்த பின்பு திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழலில் ஓரின சேர்க்கை என்பது பாலின வேட்கையின் வடிகாலாக மாறுகின்றது.இதே போன்று தான் இராணுவத்தில் பல நாட்கள் மனைவியை பிரிந்திருப்போர் ஜெயிலில் உள்ளோரும் இப்பழக்கத்திற்கு தள்ளப்படுகின்றனர். மேலும் இருவரும் வேலைக்கு போகும் சூழலில் பல பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளை விடுதியில் தங்க வைக்க தயங்குவதில்லை. வெறும் 12-14 வய்தில் விடுதி வாழ்க்கையில் சிக்குறும் பல குழந்தைகள் சூழல் அச்சுறுத்தலில் தனிமையில் சில உறவில் பணிந்து பின்பு அதை பழக்கமாகவும் மாக மாற்றி கொள்கின்றனர்.
அதே
போன்று பழம் கால மனிதன் ஒரு சமூக பிராணி என்பதால் ஒரு கூட்டு சமூகத்திற்குள்ளே உழறான். பாலின
தேவை என்பது கட்டுப்படுத்தப்பட்டிருந்து புரிதல் இருந்தது. தற்போதைய சமூக சூழலில் மனிதன்
குடும்பம் குடும்பமாக பிரிக்கப்பட்டு பின்பு அந்த குடும்பங்களும் பிரிந்து தனி நபர்
சமூகமாக மாறி விட்டது. ஒருவன் தன் குடும்பத்தை அமைத்து கொள்ள சம்பாதிக்க சில காலம் வேண்டி வருகின்றது. இதில் சில பெற்றோர்கள் உழைப்பாளியான மகன்
என்றால் திருமணத்தை தள்ளி போட்டு கொண்டே போகின்றனர். இதனால் ஆண் பெண்கள் இருவருமே நெடிய நாள் தன் பருவ வயதை கடந்த பின்பு திருமண அல்லது பாலிய
உறவுக்கு என காத்திருக்க வேண்டி வருகின்றது. இந்த இடைப்பட்ட காலயளவில் தன்னுடன் நெருங்கி
பழகும் தங்கியிருக்கும் தன் பாலினத்தவருடன் நெருங்கிய மன உறவு பேணுவது போல் உடல் சார்ந்த பாலின உறவும் பேண
உந்தப்படுகின்றனர். இதை இயற்கை என கூறியும் வருகின்றனர்.
ஓரின
சேக்கையில் பல வசதிகள் உண்டு. தன் பால் இனத்தவரை கிடைப்பது அவர்களுடன் செலவழிப்பது என்பது மிகவும் எளிது. சமூக கலாச்சார பண்பாட்டு சட்டவரைகள் பின் தொடர்வது இல்லை. தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு தாங்கள் குழந்தை பெற்று கொள்ள
வேண்டும் அவர்களை வளர்க்க வேண்டும் போன்ற பொறுப்புகள் கழுத்தை நெருக்குவதும் இல்லை. ஒரு நபரில்
இருந்து இன்னொரு நபருகளிடம் தாவுவதிலும் எளிதாக இருக்கின்றது. ஓரினசேர்க்கையை ஒரு குற்றமாக கருதுவதை விட அறியாமையாக எடுத்துகொள்ளலாம். இந்தியாவில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர் இருப்பதாகவும் அவர்களில் 1.75 லட்சம் பேர் (7 சதவீதம்) எச்.ஐ.வி. தொற்றுடையவர்கள் எனவும் இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சமூக
சூழல் மாற வேண்டும்.சரியான
வயதில் பாலின உறவு ஏற்படுத்துவதை உற்சாகப்படுத்த வேண்டும். பருவ வயதிலிருந்து 10 வருடத்திற்குள்ளாக
திருமண உறவை ஏற்படுத்த தகுந்த சூழலை உருவாக்க வேண்டும். எதிர் பாலினத்தாரை மதிக்கவும்
நட்புறவோடு பழகவும் தகுந்த சூழல் இருக்க வேண்டும்.
அரசியல் காரணங்களுக்காக ஓரின சேக்கைக்கு சட்டஒப்புதல் அளித்த அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள்
நிலை பற்றியும், சமூக தாக்கம் என்ன என்பதை பற்றியும் அறிய வேண்டி உள்ளது. இது போன்ற பழக்க வழக்கங்களால் குடும்பம் என்ற அமைப்புக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.
மூன்றாம் பாலினத்தாருக்கு கொடுக்கும் அங்கீகாரம் சமரசம் ஓரின சேர்க்கையாளர்களும் தேவையா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இன்னும் தெரிய வேண்டிய செய்தி ஓரின சேர்க்கை என்பது பெங்ளூரு ர் மற்றும் அமெரிக்கா போன்ற தொழிநுட்ப இடங்களில் மட்டுமல்ல பட்டி தொட்டிகளிலும் இப்பழக்கம் உள்ளது. ஆற்வ கோளாறு துணைவர்களின் அனுசரிப்பற்ற வாழ்க்கை, தகாத உறவுகள், சரியான புரிதல் இல்லா திருமண உறவு, தன்னலமான வாழ்க்கை நெறி என பல காரணங்கள்
இதன் பின்னில் உண்டு. சமீபத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் தன் மனைவியை
எதிர் விட்டு பெண்ணிடன் உறவு பேண வைத்து அப்பெண்ணிடம் பல ஆயிரங்கள் விலையாக பெற்ற நம்
தமிழக கணவன் மனநிலையும் காண வேண்டும்.
தமிழகத்தை
பொறுத்த மட்டில் பிள்ளை பெற்று கொள்ள மட்டுமே சில தம்பதிகள் உடல் உறவை பேணுவதையும்
பின்பு பாலியல் உறவே குற்ற செயல் போல் கருதும் பெண்கள் ஒரீன
உறவுகளில் சிக்குவதையும் காணலாம். இது போன்ற பிரச்சினைகளை காரண காரியத்துடன் அணுகி விழிப்புணர்வு கொடுத்தால் வரும் தலைமுறையாவது நல்ல ஆளுமையில் வழி நடத்தி கொண்டு வரலாம். விழிப்புணர்வு என்பது இதே நிலையில் வாழ்ந்து தற்போது வாழ்க்கையில் புதிய வழியை தேடியவர்களை ஆலோசகர்களாக நியமித்து விழிப்புணர்வு கொடுத்து வந்தால் தீர்வை எட்டலாம். தமிழகம் பொறுத்தவரை குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் ஆதீத ஆசையில் பெண் குழந்தையை ஆணாக பாவிப்பதும் ஆண் குழந்தையை பெண்ணாக நினைப்பதும் அவர்கள் பிறந்த போது இதே தாக்கத்தில் வளர்ப்பதும் சில காரணங்களே.
