டிசம்பர் 16 துவங்கிய ஆற்பாட்டம் அழுகை இன்றைய மரணத்துடன் தொடர்கின்றது. பார்லிமென்றில் விவாதத்திற்க்கு வந்து, பெண் எம்பிகளை கண்ணீர் கடலில் ஆழ்த்திய சம்பவம். பலரை தூக்கு தண்டனை மட்டுமே தீர்வு என சொல்லவைத்த சம்பவம். ஒரு காவல்த்துறை அதிகாரியின் மரணத்திற்க்கு காரணமான சம்பவம். டில்லி என்ன புண்ணிய பூமியா இதற்க்கு முன் கற்பழிப்பு நிகழவே இல்லையா? டில்லியின் உண்மை நிலையை நோக்கினால் அதிரவைக்கும் தகவல் தான் கிடைக்கும்.
டெல்லி சம்பவத்தில் பள்ளிக்கு ஓடும் பெயர்பலகை இல்லாத வாகனத்தில் கல்லூரி மாணவி தானாக ஏறினாரா ஏற்றப்பட்டாரா என சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த நாட்டில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் இந்த ஒரு கற்பழிப்பை ஊடகம் துணை கொண்டு எடுத்து செய்தியாக்குவதும் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் அதே வாரத்தில் திருநெல்வேலி பக்கம் 12 வயது பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் மரணத்தையோ, அல்லது தமிழகத்தில் சிதம்பரத்தில் நடந்த கூட்ட பாலியல் வல்லுறவை பற்றியோ செய்தியாக்காத மற்மவும் காண வேண்டியுள்ளது.
பெண்கள் சார்ந்த மானபங்கம்,கடத்தல் போன்ற குற்றங்களுக்கு முதல் இடத்தில் இருப்பது இந்தியாவில் டெல்லி தான். அதை தொடர்ந்தே மும்பை, போபால், பூனையை, ஜெய்பால், மகாரஷ்டா உள்ளது. நமது நாட்டில் 20நிமிடத்திற்க்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றாளாம். பெண்கள் பலவிதமான அவமானத்திற்கு உள்ளாகுவது 26 நிமிடத்திற்க்கு ஒரு சம்பவம் என தரவு கூறுகின்றது.
கற்பழிப்புக்கு முதல் இடத்தில் நிற்கும் அமெரிக்காவில் 93,934 வழக்குகள் பதிவாகும் போது இந்தியாவில் 18,359 வழக்குகள்
மட்டுமே பதிவாகின்றது என்றதும் நம் நாட்டில் கற்பழிப்பு குறைவு என்பதல்ல. சட்டத்தால் நீதி கிடைக்கும் என நம்புவர்கள், தனக்கு நடந்த அநீதியை எதிர் கொள்ள துணிபவர்கள் இவ்வளவு பேர் மட்டுமே என்று தான் எடுத்து கொள்ளவேண்டும். தெற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் 45 ஆயிரத்திற்க்கு மேல் வழக்கு பதிவாகும் போது ஜெர்மனியில் 8,133உம் தாய்லான்றில் 5060 வழக்குகள் பதிவாகி வரிசை வருகின்றது. சுருங்க சொன்னால் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், படிப்பறிவான நாடுகள் என்ற பாகுபாடில்லாது பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவதில் எல்லா நாடுகள் நிலையும் மோசமாகத் தான் உள்ளது என காண்கின்றோம்.
இந்தியாவை எடுத்து கொண்டாலும் கற்பழிப்பு வழக்குகளில் டெல்லிதான் முதலிடம் என்றால் மத்தியபிரதேசம் அதை பின் தொடர்ந்து கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் வங்காளம், ராஜஸ்தான், என பின் தொடர்கின்றது. கல்வி அறிவில் முதலிடத்தில் இருக்கும் கேரளாவும் 7 வது இடைத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் குடும்ப நலனை கருதி பாதிக்கப்பட்ட நபரின் வாழ்கையை கருதி 80 % வழக்குகள் மறைக்கப்படும் சூழலே உள்ளது.
இந்தியாவில் இந்திய பெண்கள் மட்டுமா கற்பழிப்பு மானபங்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்? வெளிநாட்டு சுற்றுலா பெண்களும் இலக்காகியுள்ளனர்! அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில்
அந்நாட்டு அரசாங்கம் ‘பெண்கள் தனியாக பயணம் செய்ய உகுந்த நாடல்ல இந்தியா’ என தன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. ரஷியா நாட்டிலாகட்டும் இந்திய கடலோர பிரதேசம் பாதுகாப்பற்றது சுற்றுலா பயணம்
மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளது. கோவா, தாஜ்மஹால் போன்ற பிரதான இடங்களில் கூட ஜப்பான், இங்கிலாந்து, ரஷியா வெளிநாட்டு சுற்றுலா பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர்.
கற்பழிப்பு என்றதும் காவல்துறை அதிகாரிகள் கூட பெண்கள் அணியும் உடை, உதட்டு சாயத்தை குறை கூறுகின்றனர். நீதிக்காக போராடும் பெண்கள் உடையையும் தோற்றத்தையும் கேலி பேசும் அரசியல்வாதிகள் குவிந்த நாடு இது. இன்னும் சுவாரசியமான ஆனால் வேதனையான விடையம் தங்கள் ஆசியில் பெண்கள் மானபங்கப்படுத்தும் போது ஊமையாக இருந்த விகே. சிங் போன்ற ராணுவ அதிகாரிகளுக்கு நீதி நியாயம் இப்போது உதிப்பது தான். இந்தியாவில் பெண்கள் பாதிப்படைய காரணமாக இருக்கும் அதிகார வர்கம் அரசியல் வர்கம் முதலை கண்ணீர் வடிப்பதை காண்பது தான் கண்ணீர் வர வைக்கின்றது. பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகுவது எதனால் நடக்கின்றது நடந்தது என ஆழமாக படிக்காது சிந்திக்காது தூக்கு தண்டனை கொடுப்பதால் எல்லாம் தீர்வாகி விடும் என பலர் கருத்திடுவது இன்னும் வருத்தத்தையை வரவைக்கின்றது. இந்தியாவில் ஆட்டோ சங்கர், ரங்காபில்லா, போன்றோர் கடத்தல், கற்பழிப்புக்கு தான் துக்கிலிடப்பட்டுள்ளனர். ஏன் கோயம்பத்தூர் பள்ளி மாணவி சம்பவத்தில் என்கவுண்டரும்
நடந்துள்ளது. இருந்தும் கற்பழிப்பு கொலை மேலும் நடக்காது இல்லை, குறையவும் இல்லை.
இந்த குற்றச்செயலில் காரணம், தாக்கம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் இவ்விவாதம்
செல்லும் பாதை தான் மனிதனை கற்காலம் செல்ல வைக்கும் போல் உள்ளது. சில அரசியல்வாதிகள் குழந்தை-திருமணத்தை வரவேற்றுள்ளனர். இந்தியாவில் இப்போதும் 40% பெண் குழந்தைகள் 16 வயதிற்க்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். மேலும் 8 மாநிலத்தில் சேர்ந்த 50% மேல் குழந்தைகள் 18 வயது ஆகும் முன்னே திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றனர்.
ஹரியானவை சேர்ந்த ஒரு அரசியல்வாதி சாப்பாட்டு முறையே காரணம், பீஸா பர்கர் தான் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு ஆதாரமான வாழ்கை முறை என்று எச்சரிக்கின்றனர். இறைச்சி கோழி விரைவாக வளர யூரியா, போஸ்பரஸ் போட்டு வளர்ப்பதும் மனித குண நலன் மாற காரணமாகின்றது என கூறப்படுகின்றது. விரைவில் முதுமை அடையும் குழந்தைகள் மனநிலையை பற்றியும் நோக்க சொல்லியுள்ளனர்.
கற்பழிப்பு போன்ற குற்றங்கள் காரணம் என்ன எப்படி பெண்கள் தப்பிப்பது என்ற தகவல் அடுத்த பதிவில்.
கற்பழிப்பு போன்ற குற்றங்கள் காரணம் என்ன எப்படி பெண்கள் தப்பிப்பது என்ற தகவல் அடுத்த பதிவில்.