15 Apr 2011

டச்சு கோட்டை-புலியூர்க்குறிச்சி





குழந்தைகளை  பள்ளி அனுப்பி விட்ட பின்பு மாலை வரும் வரை அம்மாக்கள் தனிமையில் துன்புறுவது  போலவே, விடுமுறை கிடைத்த பின்பும்  குழந்தைகளை சமாளிக்கவும் சிரமம் கொள்ள வேண்டி வருகின்றது. 


 
குழந்தைகள் மகிழ்விக்க பயணமே சிறந்த வழியாக பட்டது.  முன்பு பயணம் பெரியதொரு பிரச்சனையாகவே இருந்திருக்கவில்லை.  எப்போது பயணம் என்று ஆசை வருகின்றதோ எங்கள் இருச் சக்கிர வாகனத்திற்க்கு பெட்ரோல் நிரைப்புவது வாகனத்தை பிடித்த திசைக்கு திருப்புவதுமாக இருந்துள்ளது எங்கள் பயணம்.  ஆனால் இன்று குழந்தைகள்  வளர்ந்து விட்ட  நிலையில் வாடகை கார் பிடித்து பயணம் தொடரும் சூழலுக்கு தள்ளப் பட்டோம்.



நாங்கள் அனைவரும்காலை ஏழு மணிக்கு காரில் இடம் பிடித்து விட்டோம் .   என்னவர் ஓட்டுனர் அருகில்,  நான் பின்னால் இருக்கையில் ஜன்னல் ஓரமாக இடம் பிடிக்கலாம் என்றால் இரு வாரிசுகளும்  போட்டி போட்டு கொண்டு சன்னல் பக்கம் இடம் பிடித்து விட்டதால் எனக்கு  நடு பக்கம் இடம் கொடுத்தனர்.  அவர்களுக்குள் சண்டை வரும் போது இரு பக்கமிருந்தும் இடிப்பது, தூக்கம் வரும் வேளையில் மடியில் படுத்து தூங்குவதுமாக எங்கள் ராஜ்ஜியம்;  குஜ்ஜலாலா என்ற பெருமிததுடன் வந்து கொண்டிருந்தனர்.   பேருந்தில் பயணிக்கும் போல் சுவாரசியம் நிரம்பியதாக எனக்கு  தோன்ற வில்லை.  இருசக்கிர வாகனத்தில் கடந்து போகின்றவர்கள் கொஞ்சம் முறைத்து பார்த்து கொண்டு கடந்து சென்றது போல் தோன்றியது.  அதே போன்று பேருந்து பயணிகள்  பள்ளத்தில் பார்ப்பது போன்று கார் பக்கம் தன் பார்வையை  விட்டு  சென்று கொண்டிருந்தனர்.



ஓட்டுனரும் என்னவரும் பேசி அறிமுகமாகி கொண்டிருந்தனர்.  அப்போது  ஓட்டுனருக்கு இன்சுரன்ஸ் முகவரிடமிருந்து அலை பேசியில் அழைப்புவந்தது .   அவரும் சாவகாசமாக  கதைத்து கொண்டிருந்தார்.  நானோ, நமக்கு இன்சுரன்ஸ் கிடைக்க வைத்து விடுவாரோ என்று பயத்துடன் எப்போது அலைபெசியை துண்டிப்பார் என்று நோக்கி கொண்டிருந்தேன். வழியில் இரண்டு வாகனங்கள் விபத்தி சிக்கி கிடந்தது.  அதில் ஒன்று முட்டை லாரி என்பதால் துற் நாற்றம் ½ கி.மீஅளவுக்கு எங்களை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.  பின்பு ஓட்டுனர் ஒரு விபத்தை பற்றி கதைக்க என்னவர் அவர் கண்ட இன்னொரு  விபத்தை பற்றி கதைக்க என எரிச்சல் கொள்ள வைத்து கொண்டே வந்தனர்.  வழியில் ஒரு வேளான்கன்னி மாதாவின் ஆலயத்தில் ஜெபித்து விட்டு பின்பு பயணம் ஆரம்பித்தோம்.


கொஞ்சம் நேரத்தில்  தலைவலியும் ஆரம்பம் ஆகி விட்டது.  ஒரு பெண்  நொங்கு வியாபாரி தன் காலை வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார்.   தண்ணீர் குடமுடன்  போய் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுகாரரை அழைத்து அண்ணா கூட்டம் கூடும்போது நொங்கை கொஞ்சம் கவனித்து தர வேண்டும்.  அவரு தம்பிக்கு பூவைக்க சென்றுள்ளார் என்று நாகர்கோயில் தமிழில் வேண்டிகொண்டார்.  பின்பு தன் கையில் இருக்கும் துண்டை எடுத்து நொங்கின் மேல் படிந்த தூசியை தட்டுவதும் மறு கையில் அலைபேசியில் கடை நிலவரத்தை தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டிருப்பதுமாக பரபரப்பாக  செயல்பட்டு கொண்டிருந்தார்.  நொங்கு ஜூசின்  பணத்தை கொடுத்த போது பய பக்தியாக கண்ணில் ஒத்தி கல்லா பெட்டியில் இட்டு விட்டு  தன் வேலையில் மூழ்குவது தெரிந்தது.   




அதன் பக்கத்தில் ஒரு இந்து ஆலயம் இருந்தது.  காலை நேரம் என்பதால் வேண்டுதலை ஆண்வரிடம் போட்டு விட்டு சென்று கொண்டிருந்தனர் மக்கள்.  எதிர்பக்கம் கல்லில் ஒரு சாமியார் காவி உடையுடன் பூமியை நோக்கி சிந்தையில் ஆழ்ந்திருப்பதும் தெரிந்தது!! நொங்கு குடித்த உற்சாகத்தில் ஓட்டுனரும் தன் பேச்சை அரசியல் பக்கம் திருப்பி வேகமாக கார்யை பிலியூர்க்குறிச்சி உதயகிரி கோட்டை பக்கம் திருப்பினார்.




கொஞ்சம் நேரத்தில் புலியூர்குறிச்சி வந்து சேர்ந்தோம்.http://en.wikipedia.org/wiki/Udayagiri_Fort 1741-44 ல் மார்த்தாண்ட மன்னன் காலத்தில் டச்சு தளபதி டிலை நோயித் த்லைமையில்  கட்டிய கோட்டைக்கு அதன் சுற்றுமுள்ள அடர்ந்த காடுகள் மேலும் அழகு சேர்த்தது.  அதன் மேல் பக்கம் இருக்கும் குகைப் பாதை வழியாக சென்றால் பத்மநாப அரண்மனையை சென்று விடலாம்   என்று எழுதப் பட்டிருந்தது.  காடுகளை விரும்புவர்களுக்கு தகுந்த இடம். வெயில் வரும் முன் சென்று விட்டால் கிளிகளின் ஓசை கேட்டு கொண்டே  வெகு நேரம் நடக்கலாம்.  நாங்கள் முதல் பயணிகள் என்பதால்  மயான அமைதியான சூழலின் கொஞ்சம் பயம் இருந்தால் கூட காட்டின் ராஜாக்கள் போன்று   அடர்ந்த காடுகள்  ஊடாக டச்சு படைவீரர்களின் கல்லறை நோக்கி நடந்து சென்றோம்.  பழம் பெரும் தமிழில் எழுதியிருந்த கல்வெட்டுகள் கல்லறையில் காணப்பட்டது. ஆங்கிலேயர்  காலத்தில் கட்டிய கோட்டை மிடுக்காக காட்சி அளித்து     கொண்டிருந்தது.  அழகாக சுத்தமாக   பராமரிக்கின்றனர். தற்போது வெயில் என்பதால் மான் போன்ற மிருகங்களை காண இயலவில்லை 
குழந்தைகளுக்கு விளையாட என்று மரத்தில் ஆன வீடு, கயற்றால்   மரத்தில் பிணைக்கப்பட்ட ஊஞ்சல், கயிறு பாலம் என பொழுது போக்கு அம்சவும் இருந்தது. 5ரூபாய் செலுத்தி விளையாட பயண்படுத்தலாம். மக்கள் நடந்து தளரும் போது ஓய்வு எடுக்க என சிறு மண்டபங்கள்  உள்ளது. காதலர்கள் தங்கள் காதல் சுவராக பயன்படுத்தி கிறுக்கி வைத்துள்ளர்.


கோட்டைக்குள் செல்ல அனுமதிக் கட்டணம் 5 ரூபாய். கோட்டை வாசலில் வாகனம் நிறுத்த காருக்கு 30 ரூபாய் இரு சக்கிர வாகனத்திற்க்கு 10 ரூபாய் என கட்டண வேட்டை நடைபெறுகின்றது.  பெண்களே அடியாள் போன்று பின் தொடர்ந்து வந்து பணம் கேட்டு  மிரட்டல் விடுக்கின்றனர். வாகனங்களை நிறுத்த என ஒரு ஓலைக் கூரை கூட இல்லை. ஆகாயமே கூரை என குப்பைக்கு மேல் நிறுத்தும் வாகனத்திற்க்கு ஏன் கட்டணம் என்று தான் புரியாது இருந்தது. 
அடுத்து  பத்மநாப அரண்மனையை நோக்கி கார் பாய்ந்தது. என்னவரின் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி நடித்த படத்திலுள்ள பாடல் சிப்பியிருக்குது முத்தும் இருக்குது …பாட்டு ஒலித்து கொண்டிருந்தது.  தந்தன தந்தா என்று என்னவர் தாளம்  இட்ட போது தான் அவரும் பாட்டுடன் தான் பயணிக்கின்றார் என்று நினைத்து கொண்டு சன்னல் வெளியே நோக்கிய போது வழி எங்கும்  பூத்து குலுங்கும் மரங்கள் , சரம் சரமாக காய்த்து கிடக்கும் மாமரம், வேண்டும் என்றால் வேரிலும் காய்ப்பேன் என்று  தொங்கும் பலா மரங்கள் என நாகர்கோயில் செடி கொடிகளின் ராணியாக காட்சியளித்தது.
சரி நாம் இனி பத்மநாப அரண்மனை வளாகத்தில் வைத்து சந்திப்போம். வரட்டுமா!!

14 Apr 2011

விஷு- சித்திரைத் திருவிழா!!!


திருவிழாக்கள் தலைமுறை தலைமுறையாக நம்மால் கடைபிடிக்கப் படுவதும் மதம் இனம் , மொழி சார்ந்து அடையாளங்களை நிலை நாட்டவும்  மனித இனத்தின்  அடையாளமாகவும் திகழ்கின்றது.  நம் வாழ்வில் விழாக்கள் மிகவும் உணர்வு பூர்வமான தருணங்களை  விட்டு செல்கின்றது. அவ்வகையில் விஷு பண்டிகையின் பங்கு மலையாளிகளின் வாழ்க்கையில் இன்றிமையானது ஆகும்.  

கேரள மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் விஷு மிகவும் பிரதானமானதாக உள்ளது.   விஷு என்ற  பண்டிகை மதம் இனம் கடந்து  மலையாளிகளின் மிகவும் விருப்மானதும் உணர்வுபூர்வமாக கொண்டாடுவதும் பல இடங்களில் வசிக்கும் அவர்களை மலையாளிகள் என்ற தனித்துவத்துடன் ஒன்றிணைப்பதுமாக இருந்து வருகின்றது.  விஷு கிரேகரியன் கலண்டர் படி மலையாள  வருடத்தின் முதல் மாதம் "மேடம்" மாதத்தின் முதல் நாள்   ஆகும்.  அவ்வருட  வெற்றி- தோல்விகள் புதுவருடத்தின் துவக்க நாளில் உள்ளடங்கி இருக்கின்றது என்ற நம்பிக்கை உள்ளதால் வருட துவக்கம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் கொண்டாடப்படுகின்றதே விஷு பண்டிகை. சாதாரணமாக ஏப்ரல் 14 ம் நாள் புதுவருட நாட்களாகும்.  ஆனால் இந்த வருடம் 15 தியதியில் தான் விஷு பண்டிகை மலையாளிகளால் கொண்டாடப்படுகின்றது.    முதல் அடி அடுத்த அடிக்கு தளம் என்பதால் வருடத்தில் முதல் நாளில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் (காலை 4 க்கும் 6 க்கும் மத்தியில்)நல்லதை காண்பது வழியாக அந்த வருடத்தின் முழு  ஐசுவரியவும்  தங்கள் வாழ்வில் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகின்றனர் .

விஷு கொண்டாட்டத்தின் உச்சம் என்பது விஷுக் கணி காண்பது தான். கணி என்றால் மலையாள மொழியில் நாளின் முதலில் முதல் முதலாக காண்பதாகும். விஷு அன்று முதலில் காண்பதை விஷுக் கணி என்று அழைக்கின்றனர்.
விஷுவில் முதல் நாள் அன்றே வீட்டிலுள்ள முதிர் பெண் அல்லது இல்லத் தாய் விஷுக் கணிக்கு என ஏற்பாடுகள் செய்கின்றார். மலையாளிகளின்  பாரம்பரிய உருளி என்ற வெங்கல பாத்திரத்தில் நெல், பணம், தங்க நாணயம், மஞ்ச பூக்கள், மஞ்ச வாழைப்பழம்,கேரளா மக்களின் பாரம்பரிய உடை,  உடைத்த இரு முறி தேங்காவில் கப்பு போன்ற பகுதியில் தேங்காய் எண்ணெயில் திரியிட்டு தீபமிட்டு, விஷ்ணுவை பிரதிபலிக்கும் கிருஷ்ணரின் உருவப்படம் அல்லது சிலை அத்துடன் கண்ணாடியும் வைக்கின்றனர்.  விஷுவின் அன்று வீட்டிலுள்ளவர்களை அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் 4-6க்குள் எழுப்பி கண்ணை கையால் மூடி இப்பொருட்களை காணவைப்பதுடன் விஷு கொண்டாட்டம் ஆரம்பம் ஆகின்றது.  பின்பு இப்பொருட்களை ஏழைகளுக்கு கொடுத்து விடவேண்டும் என்பதே சம்பிரதாயமாக பின்பற்ற படுகின்றது 
 

அடுத்தது ‘விஷுக் கைநீட்டம்’ என்பதாகும்.  விஷுவன்று வீட்டிலுள்ள முதியவர்கள் வீட்டிலுள்ள எல்லோருக்கும் சிறப்பாக குழந்தைகளுக்கு கையில் பணம்  கொடுப்பதாகும். தங்கள் வீட்டிலுள்ள ஐசுவரியத்தை தன் இளைய தலைமுறைக்கு கைமாறுகின்றனர் விஷுக் கைநீட்டம் என்ற கொடுக்கல் வழி.

பின்பு பாயசத்துடன் விருந்து( மலையாளத்தில் சஃத்தியா-sadya என்று அழைக்கின்றனர்) பின்பு வெடிக் கெட்டுடன் விஷுவை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.  விஷு அன்று விவசாய வேலை ஆரம்பிக்கவும் செய்கின்றனர்.  

சித்திரை மாதத்தில் பூக்கும் கொன்னா என்ற பூவை இன்று விசேஷமாக பயன்படுத்தும் பூவாக உள்ளது. சூரியனின் நிறம் கொண்ட கொன்னப் பூவின் இடம் விஷுவில் இன்றிமையாயது.  கிருஷ்ணனின் ஆலய தரிசனம் வழி ஆலயவழிபாடும் நடத்துகின்றனர்.  சபரிமலை கோயில் நடையும் அன்று திறப்பது உண்டு.

கேரளாவில் விஷு என்றும் தமிழகத்தில் புத்தாண்டு அல்லது சித்திரை திருவிழா என்றும் ஒரிஸா, பஞ்சாப் ஆந்திரா போன்ற ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் நிலப்பகுதி சார்ந்த பெயருடன் கொண்டாடுகின்றனர்.  தமிழர்கள் கோயிலுக்கு போவது விசேஷமாக மதுரை மீனாச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் கொண்டாடுவது உண்டு.  தமிழகத்தில் 2008ல் சட்டசபையில் எடுத்த  தீர்மானம் படி பொங்கல் நாளை முதல் நாளாக கொண்டாடு மாறு  மக்களுக்கு பணியப்பட்டாலும் ஈழத்து தமிழர்கள், மலேசியா சிங்கப்பூர் , பாண்டிச்சேரி தமிழர்கள் என  உலக தமிழ் இன மக்கள்  சித்திரை திருநாள் அன்றே வருட பிறப்பைக் கொண்டாடுகின்றனர்.  விசேஷமான பிரார்த்தனைக்கு சிறந்த நேரம் என்று எடுத்து கொள்ளப்படுகின்றது.  நாமும் கொண்டாடுவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.



3 Apr 2011

ஜப்பான் சுனாமியும் யேசுவின் பினாமிகள் என்று சொல்பவர்களும்!!!!



ஜப்பானின் ஏற்பட்ட துயர்மிகு சுனாமிக்கு பின் கிருஸ்தவர்கள் மத்தியில் ஒரு கலவரம் ஏற்படுத்தி  “நான் வருட ஆரம்பமே சொன்னேன் சுனாமி வருமென்று  வந்து விட்டது” என்று கூறி  கொண்டு யேசு நாதரின் பினாமிகள்  வர ஆரம்பித்துள்ளர்.  



சுனாமி என்பது ஜப்பான் பொறுத்தவரையில் எப்போதும் நிகழும் நிகழ்ச்சியே.  சுனாமி என்ற வார்த்தை கூட  ஜப்பானிய மொழியில் இருந்து வந்தது தான். ஆனால் இந்த முறை ரிக்டர்  அளவு அதிகமானதால் விளைவும் அதிபயங்கரமாகி போனது; அதிலும் அணுஉலையின் பாதிப்பும் ஒன்று சேர அவர்கள் மிக  கடுமையான கொடும் போராட்ட சூழலில் தள்ளி விட பட்டுள்ளனர்.





குழந்தைகள் தேர்வு நேரம் என்பதால் கேபிள் துண்டித்துள்ளதால் நேரடி ஒலிபரப்பாக காணாவிடிலும் இணையம் வழியாக செய்திகளை அறிந்து கலங்கி தமிழக மக்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்க போகும் கூடன்குளம் அணு உலையை பற்றியே என் சிந்தனை போய் கொண்டிருக்கின்றது.  இதன் மத்தியில் தான் ஆண்டவரின் விசேஷ சேவகர்களான பால் தினகரன் போன்றோரின் அருள் வாக்கு செய்தி வருகின்றது.




ஜப்பானுக்கு இவருடைய குழுவையோ இவருடைய கொள்ளை பணத்தை அனுப்பினாரா என்றும் தெரியவில்லை ஆனால் இவ்விதமான பயத்தை மக்கள் மனதில் விதைத்து பணம் அறுவடை செய்ய தயார் ஆகி விட்டனர் என்பது மட்டும் தெளிவாகின்றது.   நெல்லையில் கிருஸ்துமஸ் துணி எடுக்க என்று சென்ற ஒரு ஆசிரியை விபத்தில் சிக்கி உயிரிழந்தார் அவருடைய கழுத்தில் கிடந்த 9 சவரன் தாலி செயினும் களவு போனது அன்று!   இது தான் இங்கு நடப்பதும்.  ஜப்பான் மக்களுக்கு எவ்விதம் நான் இத்துயர வேளையில் துணை புரிவது என்று இல்லாது இதை சொல்லியே பயம்காட்டி காணிக்கை பெற நினைக்கும் மனிதர்களை என்ன சொல்வது? இனி உலக அழிவு தான் நீங்கள் சொர்கம் போக வேண்டும் என்றால் பணத்தை எங்களிடம் காணிக்கையாக அனுப்பி விடுங்கள். சொர்கத்தில் உங்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய இடம் அமைக்க பட்டிருக்கும்.  இங்கு உள்ளது போலவே பெரிய காம்பவண்டு போட்ட வீடு, எசி அறை வீட்டின் முன்பு பூங்கா உங்கள் பிள்ளைகள் உங்கள் முன்னோருடன் ஆடி பாடி அங்கு கழியலாம்.  யேசு நாதர் என் கனவில் இப்படி சொன்னார், இடையிடை மனம் திரும்புங்கள் இதோ உலகம் அழிய போகிறது எங்கும் கொள்ளை நோய்,யுத்தம் நாடு நாடுக்கு எதிராக மக்கள் மக்களுக்கு எதிராக இப்படி இவர்கள் பிரசங்கம் போய் கொண்டே இருக்கும்.



இவ்வாறாக தீர்க தரிசனம் சொல்வதால் என்ன பலன்.  யேசு நாதர் ஒரு வீட்டிற்க்கு  நேரம் கிடைக்கும் போது செல்வாராம். அவருடைய உபதேசத்தை கேட்க மேரி என்ற சகோதரி அவர் அருகில் இருந்து உற்சாகமாக கேட்பாளாம் இன்னொரு சகோதரி அவருக்கு உண்ண உணவு எடுத்து வருவாராம்.  அவர்கள் சகோதரர் லாசர் ‘யாம் பராபரனே’ என்று  தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருந்து கொள்வாராம்.  ஒரு முறை யேசு நாதர் ஒரு பெரும் பயணம் முடிந்து வந்த போது அவன் மரித்து போனான் என்று அவர்கள்  அழுதவுடன் யேசுவும் அழுது அவனை உயர்ப்பித்தார் என்று ஒரு கதை பைபிளில் உண்டு. யேசு நாதர் இப்படி தான் அழுபவருடன் அழுங்கள் சிரிப்பவருடன் சிரிங்கள் என்று சொல்லியிருப்பார் அல்லாது அழுபவர்களின் துயரில் விண்ணாரம் பேசி கொண்டு இருக்க அவர் விரும்புவர் இல்லை.அவர் உபதேசம் மட்டும் செய்யாது வாழ்ந்தும் காட்டியிருப்பார் அப்படிதான் ஒரு பெண்ணை விபசாரி என்று விதிக்கும் போது உங்கள் விதியால் நீங்கள் விதிக்க படுவீர்கள் என்று எச்சரிப்பார்.


யேசு நாதர் பிறக்கும் காலயளவில் அவருடைய யூத நாடு ரோமர்களின் ஆதிக்கத்தில் இருக்கும். ஒரு பக்கம் ரோம அதிகாரிகளின் ஆதிக்கம் என்றால் மறுபக்கம் யூத தலைவர்கள் மற்றும் மதபோதகர்களால் அதிலும் சோதனை. யூத மக்கள் கடலுக்கு பேய்க்கும் நடுவில் என்பது போல் வாழ்க்கை இருந்தது.அந்த காலயளவில் தான் அவர்கள் மத்தியில் யேசுவின் போதனைகள் இருந்தது.  அவருடைய போதனைகள் மன – ஆத்ம விடுதலை  சார்ந்தே இருந்தது. ஆனால் இன்றுள்ள கிருஸ்தவ பிரசங்கிமார் பிசாசு கட்டு, செய்வனை கட்டு, வறுமைகட்டு  என்று மக்களை பயமுறுத்தி பல வித கட்டுகளில் அவர்கள் மனங்களை கொண்டு அடிமை வாழ்க்கைக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் சில கிருஸ்தவர்கள் நாங்கள் பிறப்பால் கிருஸ்தவர்கள் என்றாலும் எந்த மதத்தையும் பின் பற்றவில்லை என்று ஒதுங்கி இருந்து கொள்கின்றனர்.




ஒரு சாதாரண வங்கி அதிகாரியாக தினகரன் தன் பேச்சாற்றல் வைத்து மரணம் சொர்கம் நரகம் போன்ற கதைகள் சொல்லியே அவர் கோடிபதியாகி விட்டார்.  இவருடைய வளர்ச்சியை கண்ட இன்னும் சில தமிழக பிரசங்கிமார் இன்னும் சில பல கதைகளை கதைத்து பணத்தை மிரட்டியும் பயமுறுத்தியும் பிடுங்கி பெரும் பணக்காரர்கள் ஆகிவிட்டனர்.                                                                                                                                                                                              
கிருஸ்தவ தொழில் அதிபர்களிடம் பணிபுரியும் அலுவலகர்களின் சம்பளம் அடி மாட்டு விலையாகத்தான் இருக்கும்.  மனிதர்களுக்கு பேச்சு சுதந்திரம் என்றல்ல நவீன அடிமைகளாகவே அவர்கள் தொழில் சாலைகளிலும் அலுவலகங்களிலும் நடத்த படுகின்றனர். ஊழியர்கள் சம்பளம் கூட்ட கேட்டால் அது ஆண்வர் சித்தம் ஆகும் போது நடைபெறும்  என்று தலையை உருவி விடுவர். ஆனால் கொள்ளை கொண்ட பணத்தில் ‘தசம பாகம்’ என்று காணிக்கை கொடுத்து ஆண்வரின் பக்கத்து வீட்டுகாரர்கள் ஆகிவிடுவர்.   ஆண்டவர் அவர்களை பொறுத்து கைகூகி வாங்கும் அதிகாரி அல்லது வியாபாரியா?  ஆலயங்கள் ஆத்தும விளைநிலமல்லாது பண  நிறுவனங்களாக்கி வருகின்றனர்.




ஆதிம திருச்சபையில் பணமுள்ளவன் கொண்டு கொடுக்கும் பணத்தை இல்லாதவர்களுக்கு பங்கிட்டு கொடுத்து எல்லோரையும் வறுமை அற்று வாழ செய்வதாகவே கிருஸ்தவ பைபிள் கூறுகின்றது.  காரல்மார்க்ஸ் கூட இதை தான் ‘காப்பிடல் தஸ்’ என்று புத்தகமாக எழுதியிருப்பார். சொல்ல போனால் யேசு நாதர் தான் முதல் கம்னிஸ்டு.  அவர் ஒரு சிறந்த போராளியாகவே இருப்பார்.  இவ்விதம் மக்களை மத சட்டம் என்ற போர்வையில் நடைபெற்ற கொடுமையில் இருந்து மீட்க வந்த யேசுவை கொலை செய்ய கூறியதே இந்த கடவுளின் பினாமிகள் அதாவது ஊழிய காரர்கள் தான்.  இன்று யேசு வந்து கூறினாலும் அவரை மறுபடியும் கொலை செய்ய  தயங்க மாட்டார்கள்.




இந்து சமய கோட்பாடால் பல மக்கள் எப்படி பிச்சைகாரர்கள் ஆகி வருகின்றனரோ  அதே போல் இன்று கொள்ளையடித்து பணத்தை சேர்ப்பதை கண்ட கிருஸ்தவர்கள் கொள்ளைகாரர்களாக மாறி வருகின்றனர்.  (பல தமிழ் படங்களில் கூட ஆண்டனி, ஜான் போன்றோர் கொள்ளையர்களாக காட்டுவதும் இதனால் தானோ)




அரசு அலுவலங்களில் வேலை செய்யும் கிருஸ்தவர் தான் கையூட்டு  வாங்காது இருக்கின்றனரா?  பல அலுவலங்களில் கோளு மூட்டி பதவி வாங்கும் படலத்திற்க்கு  இவர்கள் தான் தலைமை தாங்குவர் மேலும் ஒரு நல்ல வேலை அழகான மனைவியும் இருப்பின்  அவர்கள் நெருங்கிய உறவுகளை கூட கிட்ட நெருங்க அனுமதிப்பது கிடையாது.
கிருஸ்தவம் என்பதின் அடிப்படை அன்பு, சகோதரத்துவம், எளிமை. பொறுமை தான்.  அன்பு என்பதை அறிவுரையில் மட்டும் தான் இருக்கும் சகோதரத்துவம் என்பதற்க்கு ஆண்டவர் பிள்ளை ,புறம் ஜாதிகள் என்று ஒரு பெரிய பாகுபடை உருவாக்கி பிரிவை உருவாக்கி விட்டனர். எளிமை இவர்கள் கொண்டாடும் பண்டிகை நாட்களில் சென்றால் அறியலாம், பொறுமை என்பது பகைவனை எதிர்க்கும் தந்திரம் ஆகி விட்டது இவர்களுக்கு!



யேசுவின் போதனை எப்போதும் ஒரு உபமையுடன் சேர்ந்த கதை யாக எளிமையானதவே இருக்கும் .  ஊழியக்காரர்களின் பேச்சில் வன்மம், ஆணவம் இளக்கராம் சேர்ந்த கூட்டு கலவை தான். ஒரு ஜெபக் கூட்டத்திற்க்கு சென்ற போது ஒரு ஊழிய காரர் அருள்வாக்கு பாலிக்கின்றார், இந்த கூட்டத்தில் ஒரு பெண் உள்ளார் அவர் மனம் திருந்த வேண்டும் கணவர் வேலைக்கு சென்ற உடன் காமுகனை தொலைபேசியில் அழைக்கின்றார்.  இது எந்த அளவு வன்மம் கொண்ட கற்பனை. ஏன் அந்த கூட்டத்தில் காதலியுள்ள ஒரு கணவர் கூடவா இல்லை, பெண் என்ற இளக்காரம்.  



ஆனால் யேசுவின் போதனைகள் ஒரு போதும் மனிதம் இல்லாததாக  இருந்தது இல்லை.   உன்னை போல் அயலானை நேசி, உன் நண்பனை மட்டுமல்ல பகைவனையும் நேசி, அன்பு உண்மையாக இருக்கட்டும், அடுத்தவனை விதிக்காதே, பழிக்காதே, உனக்கு என்ன தான் உண்டு எனிலும் அன்பு இல்லை எனில் நீ ஒன்றும் இல்லை இது தான் அவருடைய போதனை. ஆனால் சில கிருஸ்தவ மனிதர்கள் அன்பு மட்டும் இல்லாது கொள்ளாது என்னவெல்லாமோ கதைத்து யேசுவிடம் உரிமை பாராட்ட முயல்கின்றனர். 

30 Mar 2011

ஏமாற்றும் விண்வெளி அரசியல்!!!!




மனிதனின் விண்வெளிப் பயணம் தொடர்பான கனவுகள் பற்றிய கதைகள் இதிகாச நூல்கள் ராமாயணம், மகாபாரதம் காலம் தொட்டே துவங்கியுள்ளது.  இவையில் விண்கல-பயணம் பற்றிய கற்பனைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.


ஆயிரம் இரவுகள்’ என்ற அரேபிய நூலிலும் விண்கலம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.  10 வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய கதாசிரியர் “மூங்கில் வெட்டி” என்ற நாவலில் விண்வெளி பயணத்தை குறித்து கற்பனையாக எழுதியுள்ளார்.  இதில் இருந்து விண்வெளி மீது மனிதனின் கற்பனைகளும் ஆசையும் எக்காலவும் இருந்துள்ளதை காணலாம்.


முதலில் எலி, நாய் , தவளை போன்ற விலங்குகளையே அனுப்பி ஆராய்ச்சி செய்துள்ளனர்.  விண்வெளிக்கு முதலில் கால் பதித்தவர்கள் ஆம்ச்ட்ராங், ஆல்ரிடின்,  யூரிகிரிகோரி என்ற மனிதர்கள் தான் என்று நமக்கு  சொல்லி தரப்பட்டாலும் உண்மையில் கால்வைத்து நமது முன்னோர் இனமான ஆல்பிரட்-6 என்ற குரங்கு தான்!


தற்போது சீனா, ஜப்பான், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளும் விண்வெளி பயணத்திற்க்கு போட்டி போட்டு கொண்டு தயாராகி கொண்டிருக்கின்றது.  28 மிலியன் கட்டிவிட்டால் ரஷ்யா ஏற்பாடு செய்து தரும் விண்வெளி பயணத்திற்க்கு சில பயிர்ச்சியுடன் பயணம் மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது.                                                                                                             
                                                                                                     விண்வெளி பயணம் மீது, அரசு - விஞ்ஞானிகளின் வார்த்தைகளில் நம்பி  மனிதன் இந்த அளவு பேராவல் கொண்டிருந்தாலும் இப்பயணம் உண்மையில் இனிமையானது அல்ல என்பது தான் நிஜம்!  விண்வெளியில் புவி ஈர்ப்பு சக்தி பூஜியம் என்பதால் மனிதனால் பூமியில் என்பது போல இயங்குவது கடினமே.  காற்றடைத்த பலூணை போன்று மிதக்க தான் முடியும்.  உடல் எடை, விண்வெளியில் குறைவதால் விண்வெளிக்கு ஏற்ப அங்கு வாழ கற்று கொள்ள வேண்டும்.  மேலும் நிம்மதியான குளியலுக்கு கூட வழியற்று பஞ்சு குளியல் தான். கழிவறை பிரச்சனை தான் மிகவும் கொடியது பிரத்யேக தொழில் நுட்பத்துடன் கூடிய கழிவறையே பயண்படுத்த இயலும்!! விண்வெளி பயணிகள் சுகாதார பிரச்சனையால் தான் பெரிதும் துன்புறுகின்றனர் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.


விண்வெளியில் ஆல்பா, காஸ்மிக் போன்ற அதி சக்தி வாய்ந்த கதிர் வீச்சுகளால் புற்று நோய் தாக்க வாய்ப்பு உள்ளது. “அப்பல்லோ” விண்கலத்தில் பயணித்தவர்கள் பளிச்சிடும் ஒளி கண் திரையை ஊடுருவி சென்றதாக குறிப்பிட்டுள்ளனர். விண்வெளிப் பயணம் மற்றும் ஆராய்ச்சியை மெச்சும்படியான  சாதனையாக கருதுவதற்க்கு  இல்லை  என்றே நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் ரிச்சார்டு, ஃபெயின்மேன் போன்றோர் தெரிவித்துள்ளனர்.    
பல விண்வெளிப் பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தது.  இதில் 1986 ல் நடந்த சாலஞ்சர் விண்வெளி பயணத்தின் தோல்வியை  தழுவி “சாலன்ஜர்” என்ற திரைப் படத்தில் விண்வெளி அரசியல் பற்றி கதைத்துள்ளனர்.  7 விண்வெளி வீரர்களுடன் புறப்பட்ட விண்கலம் தொடர்பியல் மற்றும் தொழில்நுட்ப கோளாரால் அட்லாண்டிக் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. இதில் ஒரு பயணியாக பள்ளி ஆசிரியை கிருஸ்டாமாக் ஆலிஃப்  இருந்ததால் நாசா, பள்ளி மாணவர்களுக்கு  என (45%) நேரடி ஒளிபரப்பு தயார் செய்யபட்டிருந்தது.  இதே போல் 2003 ல் இந்திய விண்வெளி பயணி கல்பனா சாவ்லாவின் பயணவும் துயரில் முடிந்தது.


விண்வெளி பயணிகளின் வாழ்க்கை கூட விண்வெளி பயணத்திற்க்கு பின்பு இனிதாக இருந்திருக்க வில்லை.   பலருடைய மரணம் இயற்கை அல்லாது  மர்மமாகவே இருந்துள்ளது.   நாடுகள் கொண்டுள்ள போட்டியில் மனிதர்களின் நிம்மதியை பாழாக்குவதுடன் நாட்டின் வளத்தையும் விண்வெளிப் பயணம் என்ற பெயரில் சுரண்டுகின்றனர் என்பதை தான் கவலை கொள்ள வேண்டிய செய்தி!!!


கொலம்பிய விண்கல விபத்து,  கத்ரீனா பேரழிவு, இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின்பு அமெரிக்க மக்கள்  விண்வெளி ஆராய்ச்சிக்காக செலவழிக்கப்படும் மிகப்பெரிய டாலர்களை பற்றி கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். ரஷ்யா, தாங்கள் தான் விண்வெளிக்கு முதல் விண்கலத்தை அனுப்பியுள்ளோம் என்று தற்பெருமை கொண்டாலும் உலக தெருவோரக் குழந்தைகளின் பெரும் பகுதி ரஷ்யா குழந்தைகள் என்று எண்ணி வெட்கி தலைய் குனியத் தான்  வேண்டியுள்ளது.


நமது இந்தியாவை எடுத்து கொண்டால் உலக நாடுகளின் குப்பை கூடம், உலகநாடுகளால் தடைசெய்யப்பட்ட பூச்சிகொல்லிகளுக்கு அறிமுகம் கொடுப்பவர்கள், ரஷ்யாவில் மூடும் அணு ஆலைகளுக்கு திறப்புவிழா கொண்டாடுபவர்கள் என்று கோமாளி அரசியல் கொண்டது என்பதால் என்னவோ; பணக்கார நாடுகள் கூட விண்வெளியை பற்றி பெரிதாக மதிப்பிடாது இருக்க  துணியும் போது இவர்கள் பள்ளி-கல்லூரி தோறும் அப்துள் கலாம் போற்ற அறிவு ஜீவிகள் வழியே மக்கள் மத்தியில் விண்வெளி ஆசையை விதைத்து வருகின்றனர்.  70% ஏழைகள் கொண்ட இந்தியாவில் விண்வெளி மோகம் அதிகரித்து வருகின்றது என்பதே கவலைக்குரிய செய்தியே.  கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் கூட தர இயலாத சூழலில் விண்வெளி ஆராய்ச்சிக்கு என 6 மில்லியயன் ஒதுக்கியுள்ளது கண்டிக்க தக்கது.  இந்திய விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்க்கு மொத்தம் 12 ஆயிரத்து  400 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. பிரதமரின் நேர் கட்டுபாடில் இருக்கும் இத்துறையின் நிலவரம் சமீபகாலமாக ஊடகம் வழி 4G ஊழல் என்ற பெயரில் வெளிவர ஆரம்பித்துள்ளது. பிரதமரும் "எனக்கு ஒன்றும் தெரியாது தான் எல்லாம் நடைபெறுகின்றது என்று திருவாய் மலந்துள்ளார்.


 1969 ல் இருந்து விண்வெளியை பற்றி ஆராய்ந்து வரும் இந்திய விஞ்ஞானிகளால் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை மக்களுக்கு முன்கூட்டி எடுத்து கூறி உயிர் உடைமைகளை  காப்பாற்ற இயலவில்லயே என்ற மக்களின் எதிர்ப்பு குரலை கேட்டும் கேட்காதது போல் தான் இயங்குகின்றது நம் ராக்ஷச அரசு.


மக்கள் வசிக்க தகுந்த நீர், நில இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கும் பூமியை பேணாது  வாழ்வாதாரமற்ற சந்திர, செவ்வாய் கிரங்கள் மேல்  ஆராய்ச்சி என்ற பெயரில் கொள்ளும் அர்த்தமற்ற பற்றை  விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொள்ளும் அரசியல் அதிகார வர்கத்தில்  பகல் கொள்ளையை என்னவென்று சொல்வது?     

28 Mar 2011

‘வடி கொடுத்து அடி வாங்கிய நான்’


‘வடி கொடுத்து அடி வாங்குவது’ என்று ஒரு மலையாள சொல் உண்டு. வடி என்றால் அடிக்கும் கம்பு.   பள்ளியில் படிக்கும் போது வகுப்பு தலைவி என்பதால் பலபொழுதும் எங்கள் ஆசிரியர்களுக்கு என்னுடன் படிக்கும் மாணவர்களை அடிக்க  கம்பு தயார் செய்து தருவது என் வேலையாக இருந்தது. நல்ல விளைந்த உண்ணி(ஒரு வகை வேலி செடி) கம்பு ஒடித்து  அதன் மேல் பக்கம் உள்ள முள்களை கல்லில் உரசி களைந்து பதமாக  ஆசிரியரிடம் கொண்டு சேர்ப்பது உண்டு.   தீவிர கம்னிஸ்டான ஹரிஹரன் சார் “கூட படிப்பவர்களிடம்  இவளுக்கு இவ்வளவு வன்மமா” என்று  எண்ணி முதல் அடி உனக்கு தான் என்று என்னில் இருந்தே  ஆரம்பிப்பார்.   பின்பு நல்ல மூர்க்கமான கம்பு என்பதில் இருந்து பார்க்க ஆரோக்கியமான கம்பாக இருக்கும் ஆனால் சொங்கி கம்பாக கொண்டு கொடுக்க கற்று கொண்டேன்.   தேயிலை கம்பு மட்டும் ஒடித்து கொடுப்பதே கிடையாது 10-12 அடி அடித்தாலும் ஒடியவே ஒடியாது வளைந்து வளைந்து சிவிங்.. சிவிங்.. என்ற சத்ததுடன் அடி விழுந்து கொண்டே இருக்கும்.  சில ஆசிரியர்கள் தலைவராக இருப்பதற்க்கு தண்டனை என்பது போல் “சூரல்” கம்பு தான் வேண்டும் என்று கட்டளை இடுவர்.  அதுவும் முதல் நாள் வாங்கி தேங்காய் எண்ணை இட்டு அடுத்த நாள் கொண்டு செல்ல வேண்டும்.
எங்கள் வீட்டில் அம்மா எங்களை அடிக்க என ஒவ்வொரு கதவு கட்டளையிலும் சூரல் கம்பு வைத்திருப்பார்கள்.  ஒவ்வொரு நாள் செய்ய வேண்டிய வேலைக்கும் அட்டவனை உண்டு.  அதில் முதல் வேலை காலை 6 மணிக்குள் எழுந்து ஆலயத்திற்க்கு திருப்பலிக்கு செல்ல வேண்டும் என்பது தான்.  மழையோ பனியோ காரணம் எதுவாக இருந்தாலும் எங்களை பாதிக்க கூடாது காலையில் கோயில் சென்று வந்து தான் அந்த நாள் ஆரம்பம்!!!  நான் எப்போதும் தூக்க பிரியை என்பதால்  சூரல் அடிதான்  என்னை எழுப்பி விடும்.  அந்த அடியின் பயம்  கொண்டு எழுந்தது திருமணம் முடிந்தது வரை தொடர்ந்தது.  பின்பு என்னவர் தூங்குபரை ஒரு போதும் தொல்லை செய்ய கூடாது என்ற சபதம் எடுத்துள்ளதால் பயமின்றி நிம்மதியான தூக்கத்துடன்  என் காலங்கள் செல்கின்றது.

சபீபத்தில் கம்பு கொடுத்து அடி வாங்கியதை பற்றி தான் சொல்ல வருகின்றேன்.  ஆர்குட் சமூகத் தளத்தில்  இருந்து அமெரிக்காவில் வசித்து வரும் என்னுடைய சொந்த ஊரை சேர்ந்தவரின்  நட்பு அழைப்பு வந்தது.  எனக்கு ஒரே ஆச்சரியம்; எங்கள் பள்ளியில் படித்தவர் அமெரிக்காவில் ஆசிரியரா?  எங்கள் பள்ளியில் 10 வகுப்பு பாசாகுவதை பெரிய சாதனை.  கொஞ்சம் தெனாவட்ட நடக்கும் பசங்களை அழைத்து “எடா நீ கதி பிடிக்கத்தில்லா”(நீ உருப்பட மாட்டே), நீ தந்தை இல்லாத்த பணியல்லே காட்டியது(நீ ஒரு அப்பனுக்கு பிறக்கவில்லையா என்ற அர்த்தம் கொள்ளுதல்), நீ தீர்ச்சயாயும் 10 கிளாஸில் தோற்று போகும் ஞான் பறயுவா (நீ 10 வகுப்பில் கண்டிப்பா தோற்று போய் விடுவாய்) என்று வாழ்த்தி/சாபம் இட்டு அனுப்புவதிலே ஓர் அளவு படிப்பவனும்  10 வகுப்பில் தோற்று போய் விடுவான்! 

இவர் என்னில் இருந்து 3 வகுப்பு முன்னதாக படித்துள்ளார்.  பள்ளியில் முதல் மாணவனாக ஜெயித்ததாகவும் வாழ்க்கையில் மிகவும் போராடி இவ்விடத்தை வந்தடைந்ததாக  கதைத்தார்.  இவருடைய சகோதரர்கள் என்னவருக்கு தெரிந்தவரென்றும் என் குடும்பத்தை நன்கு அறிந்திருக்கார் என்றும் அறிந்தேன்.   நான் இவரை கண்ட நினைவு இல்லாவிடிலும்   என் ஊர்காரர் என்பதால்  பிரத்தியேக மதிப்பாக இருந்தது.  அதனால் அவரிடம் ஸ்கைப் வழியாக  கதைத்து அவர் குடும்பம் மனைவி எல்லாம் தெரிந்து கொண்டேன்.  என்னவரின் புகைப்படம் தொகுப்பில் இருந்து சமீபத்தில் எடுத்த என் ஊர் புகைப்படங்கள் அனுப்பிய போது அவர் பரவசப்பட்டு  நன்றி நன்றி என்று பலதடவை சொல்லி கொண்டார்.

இந்தியாவில் உள்ள அவரின் மனைவியிடம் நான் பேச வேண்டும் என்று  அவர் மிகவும் கேட்டு கொண்டார்.  மேலும் அவர் மனைவியிடம் நான் நட்பை உருவாக்க வேண்டும் என்றும் இந்தியா வரும் போது சந்திக்கலாம் என்றும் பாசமாக வேண்டு கொள் விடுத்தார்.   இங்குள்ள பெண்களின் மன போங்கு தெரிந்ததால் தயக்கம் இருந்தாலும்  அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பேச சம்மதித்தேன்.  

மத்திய வயதை கடந்த கணவர்களை பற்றி  கதைக்கும் போது கூட எங்க சார்…. சார் என்று  அவரை ஒரு பீடத்தில் தூக்கி வைத்து சராசரி மனிதனில் இருந்து அன்னிய படுத்தி விடுவார்க்ள்.  இங்குள்ள ஆண்களும் அவர்கள் மனைவிகள் பக்கத்தில் உள்ள போது அநியாயத்திற்கு படம் போடுவார்கள்.  மனைவியிடம் மட்டுமே பேசுவது போலவும் மற்று பெண்கள் அன்னிய கிரகவாசிகள் போன்றும் பார்ப்பார்கள். (மனைவி அருகில் உள்ள போது மட்டும் தான், அலுவலகத்தில்/ பள்ளிகளில் இவர்கள் நிறம் வேறு…. )இவையை பற்றி ஏற்கனவே  தெரிந்தால் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும்  சரி நம்ம ஊர்கார் விரும்புகின்றார் அதும் அமெரிக்காவில் உள்ளவர் என்ற தைரியத்தில்   தொலை பேசியில் தொடர்பு கொண்டேன்.

மறுமுனையில் அவர் மனைவி அங்கலாய்த்து கொண்டு ஒரு போலிஸ்  குற்றவாளியிடம் விசாரிப்பது போல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.  நீங்க யார், எங்கு உள்ளீர்கள், உங்களுக்கு எப்படி என் கணவரை தெரியும் அவரை கண்டுள்ளீர்களா, உங்கள் கணவர் யார்?.... ஒரு வழியாக பதில் சொல்லி தப்பித்தேன். நான் மூக்குடைந்ததே காட்டி கொள்ளாது உங்கள் குழந்தைகள் நலமா என்று விசாரித்து கொண்டேன்.   நானாக வலிய உங்க வீடு எங்கு உள்ளது என்று கேட்டதிற்கும் சரியாக முகவரி சொல்ல கூட அவர் விரும்பவில்லை.  இவ்வளவுக்கும் அவர் கல்வி அறிவு அற்றவர் அல்ல; முதுகலைப் பட்டம் முடித்து தற்போது ஆசிரியர் பயிற்சியிலும் உள்ளார்.   ஒரு சராசரி மரியாதைக்கு கூட என் குழந்தைகள் நான் வசிக்கும் இடம் பற்றியோ விசாரிக்க வில்லை.  படிக்க நிறைய உள்ளது என்று கூறி அவசர அவசரமாக அலைபேசியை துண்டித்து கொண்டு விட்டார்.

 இதை பற்றி அவர் கணவரிடம் நான் எதும் சொல்ல வில்லை.  அவர் மனைவியை அவரிடமே குறை சொல்லி தர்மசங்கட நிலமைக்கு கொண்டு வர விரும்பாததால் உங்கள் மனைவியிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்ற ஒரு மின்மடல் அனுப்பி விட்டு கிடைத்த அடிக்கு என்னவரிடம் என் சோக கதையை சொல்லி மருந்து இட்டு ஆறுதல் பட்டு கொண்டேன்.  

நேற்று மறுபடியும் என் ஊர்காரரிடம் இருந்து  வேண்டுகோள் என் மனைவிக்கு தேர்வு, அவள் வெளியில் போக இயலாது அவளுக்கு தேர்வு மாதிரி கேள்வி தாள் வாங்கி தர இயலுமா என்று கெஞ்சுகின்றார்.   எனக்கும் உதவ விருப்பம் தான், ஆனால் புத்தகத்தை கொண்டு வீட்டில் கொண்டு கொடுத்து   மறுபடியும் வடி கொடுத்து அடி வாங்கவா? வலி தாங்க மாட்டேன்பா என்று ஒளிந்து கொண்டேன் வேறு வழி?

தாலி கட்டிவிட்டார் என்று பெண்கள் இப்படி பாச கயிற்றால் கட்டி போட்டு அடிமைப்படுத்தி இவர்களும் அடிமையாக  வாழ பழகி கொள்கின்றார்கள்.  இந்த மாதிரி பெண்களின் நிழல் பட்டால் கூட இந்த பறவை மனம் கருகி விடும்!!!!

27 Mar 2011

வீரபாண்டிய கட்ட பொம்மன் சுதந்திர போராட்ட வீரரா?

பாஞ்சால குறிச்சி கோட்டை காண வேண்டும் என்ற பல நாள் ஆசை இந்த வாரம் நிறைவேறியது.  திருநெல்வேலியிலிருந்து புளியம் பட்டிவழியாக ஓட்டபிடாரம் கடந்து பாஞ்சாலகுறிச்சி வந்தடைந்தோம்.   வரவேற்பறையில், தலைக்கு சிறியவருக்கு 1 ரூ பெரியவருக்கு 2  ரூபாய் வசூல் செலுத்தி உள்ளே அனுமதிக்கின்றனர்.  மேலும் வீரபாண்டியரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ஒரு புத்தகம் 25 ரூபாய்க்கும் தமிழக வரைபடம் ஒன்று 10 ரூபாய்க்கும் பெறலாம்.  “மாதிரி கோட்டை” தூரத்தில் இருந்து கண்ட போது சிவப்பு வண்ணத்தில் அழகாக காட்சி தந்தது. 
  
 கோட்டையின் இடது பக்கம் “உண்மை கோட்டையின்” எச்சம் அரசின் அகவாராய்ச்சியாளர்களால் பாதுகாக்க படுகின்றது.   அரசு ஊழியரான வழிகாட்டி கோட்டையின்  மகிமையை பற்றி கதைக்கின்றார்.  பின்பு மிக  அருகில் வந்து ஏதாவது பார்த்து தாங்க என்று கெஞ்சுகின்றார். 10 ரூபாய் தாளுடன் இடத்தை காலி செய்து அடுத்த பயணிகளை தேடி செல்கின்றார்.   கோட்டையின் மத்தியில் ஒரு வெள்ளை கல் கொண்ட ஒரு மேடையும் அது வீர பூமி எனும் அடையாளப்படுத்துகின்றனர்.   ஒரு  நாள் ராஜாவின் பணியாளர்கள் இந்த வழியாக வேட்டையாடி வந்தார்களாம் .   அந்த குறிப்பிட்ட இடத்தில் ஒரு முயல் தன்னை துரத்திய நாயை வீரமாக எதிர்கொண்டதாம்.    இதனால் கவரப்பட்ட மன்னர் இங்கு ஒரு கோட்டை கட்ட இவ்விடத்தை தேர்வு செய்த்தாகவும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் என்னுடைய கணிப்பு பாளையில் இருந்து நாம் பாஞ்சாலைக்குறிச்சி நோக்கி செல்லும் போது வழியெல்லாம் வரண்ட வெறும் புல் செடியும் கள்ளி செடியுமே சீமை ஒடையுமாகவே  காட்சி தருகின்றது. பாஞ்சாலகுறிச்சி நெருங்கி வருகையில் நீர் ஓட்டம், பச்சை பசேலான பகுதி காண முடிந்தது. எனக்கு என்னவோ மன்னர் இந்த வளமான பூமியை கண்டு தான் இந்த இடத்தை  தன் ஆட்சிக்கு என தேர்வு செய்திருப்பார் என்று தோன்றுகின்றது.
வெள்ளைகாரர்கள் முற்றிலும் கோட்டையை அழித்து மறுபடியும் கோட்டையை கட்டாதிருக்க ஆமணக்கு விதையை நட்டு சென்றதாகவும் தற்போது தமிழக அகவாராய்ட்ச்சி குழுவே மறுபடியும் புதுயுண்ட கோட்டையை தோண்டி கண்டதாகவும் சொல்லபடுகின்றது.   மேலும் கோட்டை ஒரு சிறு அளவு இடத்தில் தான் உள்ளது.   மன்னர் கைவீசி நடந்திருக்க இவ்விடம் இயன்றிருக்குமா எனவும் சந்தேகமாக இருந்தது.   வழிகாட்டி அதற்க்கு காரணமாக பகவர்களிடம் இருந்து தப்பிக்க குறுகலும் நெடுகலுமாக கட்டியிருந்ததாக சொன்னார்.
ஒரு வெள்ளை தரை கொண்ட மேடையில் நடன மங்கைகள் நாட்டியம் ஆடியதாகவும் கதைத்தார்.  பக்கத்தில் மஹாராணி குளித்த குளவும் அவர்கள் தங்கியிருந்த மாளிகையின் அடிப்பகுதியும் காட்டினர்.  ஒரு வேளை அந்த கால அரசிகள் சிறிய இடங்கலில் வாழ பழகி இருக்கலாமோ என்னவோ! நம் அரசியல் வாதிகள் கண்டிப்பாக கண்டு பின்பற்ற வேண்டியது தான்.  மன்னர் ஆட்சியை அழித்து அதிகாரத்தில் வந்த குடியரசு ஆட்சியின் தலைவர்களின் கல்லறைகளுக்கு கூட ஆயிரக்கணக்கில்  ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது இன்று!
மாதிரி கோட்டையாக கட்டியிருக்கும் கட்டிடம் தான் சுத்த அபத்தமாக உள்ளது.  கட்ட பொம்மரை கேலி செய்கின்றார்களா என்றும் தெரியவில்லை.   இக்கோட்டையை 1974 ல் கருணாநிதி திறந்து வைத்ததாக ஒரு கல்லில் கொத்தி வைக்க பட்டிருந்தது. கோட்டைக்குள்  ஒரு அறை நடுவில் கருப்பு கல்லிலான வீரபாண்டிய மன்னனின் சிலையும் அதன் அடியில் அவருடைய பெயரும் அதற்க்கு கீழ் வரிசையில் கருணாநிதியின் பெயரும் பொரிக்க பட்டுள்ளது.   மண்டம் கட்டியதிலும் ஒரு நோக்கம் நிறைவேறி இருப்பதையும் இப்பலகையில் இருந்தே காணலாம்.  சிலையை சுற்றி படங்களால் வரலாறு சொல்லும் சித்திரங்களும் உள்ளது.
 இம் மண்டபத்திற்குள் 100 மக்கள் ஒரே நேரம் கோட்டைக்குள் சென்று வர இயலுமா என்பது சந்தேகமே. 1000 பேர் வந்து வருடம் தோறும் திருவிழா கொண்டாடுவதாக சொல்லபடுகின்றது.    மிகவும் தாழ்ந்த கூரை இடுங்கலான பாதை காற்று புகராத அமைப்பு என கோட்டை  மூச்சடைக்கும் இடமாக தான் உள்ளது.   கட்ட பொம்மனின் தலைக்கு மேல் ஒரு ஒளி கண்ணாடி பதிப்பித்துள்ளதும் அதன் சுற்று பகுதி கீறல் கொண்டு பழுது பட்டும் காணப்படுகின்றது.  
அங்கு இருக்கும் கல் சிறப்பங்களில் பெரிய அளவிலான நத்தை கூடு கட்டி வரிசையாக இடம்பிடித்து  இருக்கின்றது.   கோட்டையை சுற்றி ஒழுங்காக பெருக்கி கூட பல மாதங்கள் ஆகி இருக்கலாம்.  புல் செடி களையுடன் அசுத்தமாக காட்சியளிக்கின்றது.  அங்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் கண்ட இடத்தில் எல்லாம் குழந்தைகளை சிறு நீர் கழிக்க அனுமதிக்கின்றனர்.  கொடுமையிலும் கொடுமையாக வீரபாண்டியரின் உண்மை கோட்டை பற்றி வழிகாட்டி விவரித்து கொண்டு இருக்கும் போது அக்கோட்டக்கு மேல் ஒரு சிறு குழந்தை ஒன்ஸ் அடைக்கின்றது!!!
கோட்டைக்கு வலது புறம் மன்னர் வணங்கிய  ஜக்கம்மா தேவியின் ஆலயம் உள்ளது. பங்குனி உத்திரம் என்பதால் பல மக்கள் சாப்பாடு வைத்து சாமி கும்பிட  வாகனங்களுடன் குவிந்திருந்தனர்.
கோட்டையை விட்டு வெளிப்புறம் வரும் போது கோட்டை வளைவில் ‘கழிப்பறை’ என்று ஒரு பக்கவும் மறுபக்கம் ‘குடி நீர்’ ‘என்று எழுதி வைத்திருந்தனர்.  சுற்றலாத்துறையின் அழகு உணற்ச்சியை எண்ணி நாம் பெருமை பட்டு கொள்ளவேண்டியது தான்!!  மண்டபத்திற்க்குள்ளும் புகைப்படம் எடுக்கல் ஆகாது என்ற கட்டுபாடும் உள்ளது.
ஊமதுரை போன்றோரின் கல்லறை எங்கு என்று தென்படவில்லை.  ஊர் மக்கள் இருந்து கதை அடிப்பதற்க்கு என சிறு சிறு மண்டம் கட்டி வைத்துள்ளனர்.   செல்லும் வழியில் ஊமதுரை ஜக்கமாள், போன்றவர்களின் வளைவு தூண்கள் உள்ளது.   நமது தமிழக சுற்றலா பயணிகள்
கதைத்து கொண்டு, சத்தமிட்டு ஓலமிட்டு கொண்டே மண்டத்தினுள் நடமாடுகின்றனர்.   சேலைகட்டிய பெண்கள் சேலை ஒரு பக்கம், அவர்கள் ஒரு பக்கம் ஒரே கலவரமாக தங்கள் இருக்கும் சூழலை மறந்த நிலையில் நடந்து செல்கின்றனர்.  அவர்களின் குழந்தைகளும் மண்டபத்திற்க்குள் நெடுகையும் குறுகையுமாக ஓடுவதும் கத்துவதுமாக  அங்கு எழுதியிருப்பதை வாசிக்வோ சித்திரங்களை கண்டு  கருத்தை உள்வாங்கவோ அனுமதிக்காத சூழலாக இருக்கின்றது.   மேலும் கொரியன் க்ரோஸ் போன்ற புல் செடியில் மிதிக்காதீர்கள் என்று எழுதி வைத்ததையும் மீறி காலிட்டு அச்செடியை நோண்டி கூட பார்க்கின்றனர்.   பெற்றோரோ சிரித்து உற்சாகப்படுட்த்துகின்றன்ர்.   கேரளா சுற்று பயணம் தான் அப்போது நினைவில் வந்தது. திருவனந்த மிருகை சாலையில் கூட கடைபிடிக்க வேண்டிய அமைதியை கடை பிடித்து    அமைதியாகவே நடந்து கொள்வதை பார்க்கலாம்.  

மேலும் ‘மண்பம் கட்டி விட்டோம்’ என்று போக்கு காட்டும் அரசு, பள்ளி  கல்லூரி, பல்கலைகழகம் அல்லது தொழில் நிறுவனங்கள் என்று சிந்தித்திருந்தால் சுற்று வட்டார மக்களும் பயண்பட்டிருப்பர். கட்டபொம்முவின் வம்சா வழியர் வாழ வீடு கட்டி கொடுத்துள்ளனர். சிலர் குடியிருக்கின்றனர்; பலர் வீடு பயன்படுத்தாது கரயான் பிடித்து கிடக்கின்றது.   சில ஆண்கள் குப்பியும் தண்ணியுமாக மதுவில் கலந்திருந்தனர் உடைந்த வீடுகளின் முன்பு!!.  சுகாதாரமற்ற குடியிருப்பு, களையற்ற மக்கள் என கட்டபொம்மனின் துயரமுடிவும் அவர் வம்சத்தின் தொடர் துயரும் கண்கூடா தெரிகின்றது.
கட்டபொம்மனை இந்திய சுதந்திர தாகத்திற்க்கு வித்திட்டவர் என்ற புகழ் சூடப்பட்டிருக்கும் வீரபாண்டியரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் படிக்கும் போது வரட்டு பிடிவாதத்தாலும் அவருடைய மந்திரி தானாபிள்ளை கண்மூடித்தனமாக நம்பியதால் வஞ்சிக்க பட்ட மன்னாகவே தெரிகின்றார்.   சுதந்திரத்திற்க்கும் இவருக்கும் சம்பந்தம் இருப்பதாகவே தெரியவில்லை. பிரிட்டிஷாரை எதிர்த்த மைசூர் டிப்பு சுல்த்தானே எதிர்த்து போராட உதவிய  புதுகோட்டை தொண்டமானே அவர் உற்ற நண்பராக இருக்கின்றார்.   எட்டப்பன் என்ற தன் இன அரசானாலே அழிக்க பட்டவரும் தொண்டமான் என்ற நண்பனால் காட்டி கொடுக்க பட்டவருமே கட்ட பொம்மு.   தன் நாடு, வீடு நலன் எண்ணாது தன் தாய் மாமன், தம்பி, தாய் ,மனைவி பேச்சை கூட பொருட்ப்படுத்தாது கண்மூடி தனமாக குள்ளை நரி- தன்னலம் பிடித்த மந்திரி பிள்ளைக்கு துணை போனதால் அழிவையே தேடி கொண்டவரே வீரபாண்டிய கட்டபொம்மர்!!!!. சுதந்திர போராட்டதை எதனால் இவருடன் இணைத்தனர் என்பது தான் மர்மமாக உள்ளது?  அன்னிய நாட்டு பிரிடீஷாரை எதிர்த்தார் என்றதால் அவர் சுதந்திர வீரத்திற்க்கு வித்திட்டவரும் தற்கால கொள்ளைகார உள்ளூர் அரசியல் வாதிகளை எதிர்த்தால் இந்திய இறையாமைக்கு எதிராளி ஆகவும் மாற்றிவிடுகின்றது தான் அரசிய வரலாறோ?.


திரும்பி வரும் போது தூத்துகுடி வழியாக நெல்லை வந்து சேர்ந்தோம்.  தூத்துகுடியின் இயர்க்கை க்கு பங்கம் விளைவிக்கும் ஸ்டெர்லயிட்  வழியாக வந்த போது ஒரு கருப்பு புகை அப்பிரதேசம் சுற்றி ஆழ்ந்திருப்பதை காண முடிந்தது.   ஆலை பணியாளர்கள் தங்கள் உடலை மறைக்கும் உடையணிந்து  பயணிக்கின்றனர்.  மிதி வண்டியில் செல்லும் சட்டை அணியாத ஏழைகள் பாடு தான் திண்டாட்டம்.  அதன் வழியே வரும் போது கண்ணுக்கு எரிச்சலும் தொலியில் அரிப்பும் தெரிகின்றது.  குடியிருப்புகள் சாக்கடை மத்தியிலும் அலுவலங்கள், பெரிய தொழில்சாலைகள் அழகாக மிடுக்காக காட்சியளிக்கின்றது.  மனிதனின் விலையை விட தொழில்சாலைகள் விலையேற பெற்றது என்று சொல்லாது சொல்கின்றது நம் தற்போதயை சூழல்.

25 Mar 2011

முகவரி தேடும் தெருவோர குழந்தைகள்!!!

வீதியே வீடு என்று சாலைகளில் கேட்பாரற்று பல்வேறு குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர். தெருவோர குழந்தைகள் என அழைக்க படும் இக்குழந்தைகள் மூன்று வகையை சேருவர். தெருவில் வேலை பார்ப்பவர்கள்,  தெருவில் குடியிருந்து வாழ்க்கை நடத்துபவர்களின் குழந்தைகள், பெற்றோர்களால் மற்றும் உற்றோர்களால் புரக்கணிக்கபட்டு தெருவில் வாழ தள்ளபட்டவர்கள்.


தெருவோர குழந்தைகள் என்ற கருத்தாக்கம் 1993 வரை அரசு நிறுவனங்களால் அங்கிகரிக்க படாது இருந்துள்ளது தான் உண்மை.  அரசு சாரா நிறுவனங்களின் அயராத கூக்குரல் நிமித்தம் 1993 ல் மனித நலத் துறை அமைச்சகத்தால் பல திட்டங்கள் இக்குழந்தைகளுக்கு என உருவாக்க பட்டு செயல்படுத்தி வருகின்றனர்.   
இவர்கள் சார்ந்த கதைகள் மைய கருத்தாக கொண்டு சலாம் பாம்பே, நான் கடவுள், ஸ்லம் டாக் மில்லினர் போன்ற திரைப்படங்களில் வந்துள்ளன.   19 ம் நூற்றாண்டில் ஒலிவர் டிவிஸ்ட்,ஷெலோக் போன்ற மேற்கத்திய எழுத்தாளர்களின் கதைகளிலும் இவர்கள் வாழ்கை கதைய் தளமாக வந்துள்ளது.  ஸ்லம் டோக் மிலினியர் (slum dog Millionaire) என்ற படம் எதிர் கொண்ட விமர்சனம் ‘வளரும் இந்தியாவை தரம்  குறைத்து காட்டுகின்றனர்’ என்பதாகவே இருந்தது.   சண்டே இந்தியாவின் அருந்தம் சவுதரி இப்படத்தை சரிமாரியாக திட்டி தன் கோபத்தை வெளிகாட்டியிருந்தார்.   இப்படியாக கண்ணை மூடி பால் குடிக்கும் பூனை போன்று இந்தியாவின் பணக்கார ஊடகம், அரசியல், சமூகத்தால் புரக்கணிக்கபட்டவர் தான் இவர்கள்!
சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களை பிரதிபலிக்கும் தெருவோர குழந்தைகள் உலக சரித்திரத்தில் என்று இடம் பிடித்தனர் என்பதற்க்கான ஆதாரம் இல்லை.  என்றிருந்தாலும் ரஷ்யாவில் நடந்த 1918-1930 புரட்சிக்கு பின்பே சமூகத்தின் ஒரு பாகமென மிக பெரிய அளவில் தெருவோர குழந்தைகள் உருவாகியுள்ளனர்.



தெருவோர குழந்தைகள் உருவாகுவது புரட்சி,  இனக்கலவரம், போர், இயற்கை பேரழிவு  போன்ற காரணங்கள் மட்டுமல்ல பெற்றோரின் மனமுறிவு, பெற்றோரின் தகாத உறவு மூலம் உண்டாகும் குடும்ப சூழல், வீடுகளில் அனுபவிக்கும் தொடர் தொல்லைகள், பெற்றோரின் இரக்க மற்ற செயல் அனுசரணையற்ற கல்வி சூழல், விடலைப் பருவ கோளாறுகள், வறுமை மற்றும் வேலை வாய்ப்பு தேடி நகரத்தை நோக்கியுள்ள நகருதலும் கூட இச்சிறுவர்கள் உருவாக காரணமாக அமைகின்றது.

ரஷியா, இந்தியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளில் மிக அதிகமான   தெருவோர குழந்தைகள் உள்ளனர்.  உலகளவில் 11 மிலியன் குழந்தைகள் தெருவில் தள்ளபட்டுள்ளதாக கணக்கிடபட்டுள்ளது.  இவர்களில் 4 மில்லியன் குழந்தைகள் இந்தியர்களே என்பது தான் துயர் தரும் வெட்கபடவேண்டிய செய்தி.  கம்னிஸ்டு மாநிலமான கொல்கத்தா நகர் தான் இந்தியாவில் தெருவோர குழந்தைகளில் அதிகம் வசிக்கும் இடம்!

இவர்களின் தொழில் பிச்சை எடுப்பது, குப்பை பொறுக்குவது கார் போன்ற வாகனங்கள் கழுவுதடல், ஓட்டல்களில் வேலை செய்தல் அல்லது பிக் பாக்கெட் போன்ற சமூக விரோத செயல்கள்என ஏதாவது ஒரு தொழில் புரிந்து தங்கள் பசியை நீக்குகின்றனர். தங்கள் பசி கொடுமையை களைவதற்கு என போதை பொருட்களை உட்கொள்ள பழகி கொள்கின்றனர்.    இவர்களின் ஆரோக்கிய நிலை மிகவும் பரிதாபத்திற்க்குரியதாகவே இருந்து வருகின்றது.  காச நோய், குஷ்டம், டைபாய்டு, மலேரியா, சிறுநீரக கோளாறு போன்றவற்றாலும் இவர்கள் மிகவும் அதிகமாக அவதிக்கு உள்ளாகுகின்றனர்.  தற்போது உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் போன்ற நோயின் பிடியில் தள்ளபடுவது மட்டும் அல்லாது  சிறு குற்றங்கள் புரிந்து சட்டத்தின் பிடியில் அகபட்டு  காப்பாற்ற ஆளின்றி  சிறை சாலைகளிலும் வாடுகின்றனர்.

சென்னையில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிப்பது என்னவென்றால் தெருவோர குழந்தைகளில் 87.7 சதவீதம் பேர் ஆண் குழந்தைகளே மேலும் இவர்களில் 71 %பேர் தங்கள் தெருவோர வாழ்வில் காப்பாற்றபடுவார்கள் என்ற கனவில் வாழ்கின்றனர். 63% பேர் தாங்களும் நல்ல சமூக அந்தஸ்தில், தன்மானத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசையுடனே தங்கள் காலத்தை கழிக்கின்றனர்.வயதளவில் கண்டோம் என்றால் இவர்களில்
வயது
சதவீதம்
6-10
33%
11-15
40%
16-18
27%

உள்ளனர்.

மும்பை, கொல்கத்தா, டில்லை போன்ற நகரங்களில் மட்டும் தலா ஒன்றரை லட்சம் தெருவோர குழந்தைகள் உள்லனர். பெங்களூரில் 45 ஆயிரம் குழந்தைகள் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றனர். நமது தமிழகத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நிலையில்  உள்ளனர்.

மற்றவர்களால் தங்கள் முகவரியை  தொலைத்து மீண்டும் தங்கள் அடையாளங்களை தேடும் இக்குழந்தைளுக்கு மறு வாழ்க்கை அமைத்து கொடுப்பதற்க்கு என்று  திருநெல்வேலியில் ஜங்ஷன் பேருந்து  நிலையத்தின் மிக அருகாமையில் சரணாலயம்  என்ற மறுவாழ்வு இல்லம் உள்ளது.  இதில் 2 வயதில் இருந்து 14 வயது வரையிலும் வரையுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்க பட்டுவருகின்றர்.  மழலை மனம் மாறாத அருள் அவனுடைய இரண்டு சகோதர்கள் என 3 ஆண் குழந்தைகளை அனாதர்களாக விட்டு சென்றுள்ளனர் இவர்களின் பெற்றோர்கள்.  இவ்வாறு ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும் மனதை பிழியும் கதைகள் கொண்டதே.  இங்கு அடைக்கலம் புகுந்துள்ள குழந்தைகளை பெற்றோர்கள் மற்றும்  உறவினர்கள் பிச்சை எடுப்பதற்க்கு என வலுக்கட்டாயமாக  அழைத்து செல்லும் அவலவும் உண்டு.

இது ஒரு அரசு சார்ந்த நிறுவனமாக இருப்பினும் இதன் துவக்கம் கத்தோலிக்க திருசபை சார்ந்த நிறுவனத்தில் இருந்து தான் நிகழ்ந்துள்ளது. தற்போது இதன் இயக்குனராக அருட் தந்தை ஜாண்சன் ஜோசப் உள்ளார். இக்குழந்தைகளின் மேம்பாட்டுக்காக திட்டங்கள் பல இருப்பினும் பணபற்றாக்குறை ஒரு  தடங்கலாக உள்ளது  என குறிப்பிடுகின்றார்.   நல்ல குடும்ப சூழல் உள்ள பெற்றோர்கள் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றார்.  மாதம் தோறும் சிறு தொகை இவர்கள் படிப்பு உடை போன்றவைக்கு தருவதால் அல்லது நேரம் கிடைக்கும் போது இக்குழந்தைகளை சந்தித்து பெற்றோர் போன்ற அன்பை பகிர்ந்து கொள்வதால் இக்குழந்தைகளை ஒரு நல்ல நிலையில் கொண்டுவர இயலும் என்று கூறுகின்றார்.

1992 துவங்கி World Vision என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இதை போன்று ஒரு பெண் குழந்தையை ஆதரிக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் மாதவன் கூறுகையில் இது நாம் காட்டும் கருணையோ தயவோ அல்ல, நமது கடமையே மேலும் நமது அனுதாபத்தை விட செயலால் ஆதரிப்பதால் நாம் பெறும் மன மகிழ்சிக்கு ஈடு இணை இல்லை என்று தன் கருத்தை பகிர்கின்றார்.

ஒரு முறை ஒரு கல்லூரி  பேராசிரியையிடம் இக்குழந்தகள் பற்றி கதைத்து கொண்டிருந்தேன். அவர் இது அவர்களுடைய சாபம் எனவும் இக்குழந்தைகளின் மன நிலையை பற்றியும் பிறப்பை பற்றி இரக்கம் அற்று கூறிய கருத்துக்கள் என்னை வேதனையடைய செய்த்து. பல மனிதர்கள் பூமியில் சுகமாக வாழ வாய்ப்பு கிடைப்பதும் இப்படியான விளிம்புநிலை மனிதர்களை இளக்காரமாக பார்க்கும் நம் பார்வையும் மாற்ற வேண்டியுள்ளது.

பல வசதியான பெற்றோர் தங்கள் தலைமுறைக்கு என சொத்து சேர்ப்பதும் அவர்களை பற்றிய கனவுகள் மலை போல் குவிக்கும் போதும் நம் குழந்தைகள் சுகமாக வாழ இவர்களும் நலமாக வாழவேண்டும் என்று எண்ணம் கொள்ள வேண்டும். இஅவ்ர்களை நாம் இளக்காரமாக எண்ணி புரக்கணிக்கும் வழி சீரியல் கொலையாளிகளையும், கொள்ளைகாரர்களையும் நாம் வளர்க்கின்றோம். ஒருவன்  சமூகத்தில் இருந்து பெறுவதை சமூகத்தில் விட்டு செல்கின்றான். நாமும் இக்குழந்தைகளுக்கு நல்லதை கொடுப்போம் அவர்கள் நல்லதே இச்சமூகத்திற்க்கும் திரும்ப தருவார்கள்.

இக்குழந்தைகள் திருநெல்வேலியை சுற்றியுள்ள பல பள்ளிகளில் கல்வி பெறும் இவர்களை நாம் கரிசனையுடன் தாங்குவது வழியாக இவர்களும் சமூகத்தில் ஒரு உயர்ந்த சிந்தனையுள்ள தாழ்வு மனப் பான்மையற்று வாழ வழி செய்ய உதவும். மேலும் இவ்விதம் குழந்தைகள் உருவாக காரணமாகும் பொறுபற்ற தன்னலம் விரும்பி பெற்றோரையும்  சட்டத்தால் தண்டிப்பது வழியாக வரும் தலைமுறையில் இவ்விதமான குழந்தைகள் உருவாகும் சூழலை தடுக்க இயலும். மேலும் அடுத்தவர்களை சுரண்டி பிழக்கும் நம்  சமூகசூழலும் ஒரு காரணம் உணர்ந்து அதை களையவும் நாம் முன் வர வேண்டும்.